புதிய மனுநீதியோ!
அகில இந்திய அளவில் உள்ள பார்ப்பன ஊடகங்கள் பற்றி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி பேட்டியில் (15.11.2010) தெளிவாகக் கூறினார்.
தி.மு.க. அரசின் சமுதாய சீர்திருத்தக் கொள்கைகள், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பாதையில் செல்லுவதைப் பொறுக்கமாட்டாத பார்ப்பன சக்திகள், ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் மத்திய அமைச்சர் ஆ.இராசாமீது பாணம் தொடுத்துள்ளன.
2 ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் இராசா அவர்கள் புதிதாக எந்த ஒரு கொள்கையையும் வகுத்துச் செயல்படுத்திடவில்லை. ஏற்கெனவேயிருந்த நடைமுறையைத்தான் கடைப்பிடித்திருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் எதிரிக்கட்சியாகி விட்டவர்கள் சற்றும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
இதற்கு முன்பு பிரமோத் மகாஜன், அருண்ஷோரி காலத்தில் ஏற்பட்ட நட்டம் பற்றியும் இந்தியத் தலைமைக் கணக்காயர் அறிக்கையில் கூறியுள்ளதே-அதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கும் நாணயமான பதில் - இராசாவை பதவி நீக்கம் செய்யத் துடித்தோரிடமிருந்து வரவில்லையே!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ, இராசா பதவி விலகியே தீரவேண்டும். ஆடிட்டர் ஜெனரலே கூறிவிட்டார் என்று பூமிக்கும், வானத்திற்கும் தாவிக் குதிக்கிறார்களே-
இவர்களின் கேரள மாநிலக் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராய் விஜயன்மீது சாற்றப்பட்ட குற்றமென்ன?
1981இல் ஈ.கே.நாயனார் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது கனடா நாட்டின் லாவ்லின் நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஒன்று போட்டார். அந்த ஒப்பந்தத்தின் காரணமாக மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் கொஞ்சம்தான்- ஆமாம் ரூ.376 கோடி.
இதனை வெளிப்படுத்தியதும் கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்தான்.
அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி நடந்து கொண்டது? சி.பி.அய் விசாரிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதே (16.1.2007) சி.பி.அய்யும் விசாரணை செய்து ஊழலை உறுதி செய்ததே (21.1.2009)
அப்பொழுது சி.பி.எம். என்ன சொன்னது? அரசியல் தூண்டுதல் காரணமாக உள்நோக்கத்துடன் சி.பி.அய் இப்படிக் குற்றம் சாற்றியுள்ளது என்று கூறவில்லையா?
ம.தி.மு.க.வும் சேர்ந்துகொண்டு அமைச்சர் இராசா பதவி விலக வேண்டும் என்று கூறுகிறதே.
அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சாதாரணமானவையா? ஊழலைவிடக் கொடுமையானதாயிற்றே- மதச்சார்பற்ற தன்மைக்கே மரண குழி வெட்டியவர்கள் ஆயிற்றே.
இத்தகைய குற்றச்சாற்றுக்கு ஆளானவர்கள் அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா என்று நாடாளுமன் றத்தில் கடும் எதிர்ப்புப் புயல் வெடித்தது. அப்பொழுது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எப்படி நடந்துகொண்டார்?
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் பதவி விலகவேண்டும் என்று புரட்சிப்புயலாக வெடித் தெழுந்தாரா?
அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை அவர் வாயாலேயே கேட்போம். திருப்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க நிதியளிப்பு விழாப் பொதுக்கூட்டத்தில் (20.2.2001) இதோ வைகோ பேசுகிறார்:
பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட-அத்வானி பதவி விலக வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் ஒன்பது நாள் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நான் டில்லியில் வீட்டி லிருந்தேன். காலை 9 மணிக்கு வாஜ்பேயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 10 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள் என்று பிரதமர் அழைத்தார். எதிர்க்கட்சிகள் பேசிய பிறகு அரசின் சார்பில் அருண் ஜேட்லி பதிலளிப்பார். அதற்கடுத்து நீங்கள் பதிலளித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிராளிகளின் வியூகத்தை எளிதில் உடைக்கக் கூடியவன் இந்த வைகோ என்ற நம்பிக்கையில் என்னிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்று பேசினாரே!
அமைச்சர் இராசா ஊழல் செய்தார் என்று குறிப்பிடப்படவில்லை - அவர் செயலால் அரசுக்கு நட்டம் ஏற்படும் என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளவர் பதவி விலக வேண்டும். அதே நேரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் மட்டும் பதவி விலகக் கூடாது.இதுதான் வைகோ அவர்களின் புதிய மனுதர்மம்!
அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று வந்துவிட்டால் ஆதிக்கவாதிகளுடன் கைகோத்துக் கொள்வது சரியானதுதானா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!
---------------------”விடுதலை” தலையங்கம் 16-11-2010
15 comments:
ஆமா.. அந்த கனிமொழிக்கும், இந்த வீணாப்போன வீரமணிக்கும் என்ன தொடர்பு?
எனக்கும் ஒரு 100 கோடி கொடுத்தால் ராசா யார் மகன் என்று கூறமாட்டேன்.
இதில் இந்த வீரமணி என்ன சாதி?
அதை ஜெயகாந்தனே சொல்லியுள்ளார்.
ஜிங்குசாங் ஜிங்குசாங் கருணாநிதிக்கு ஜிங்குசாங்
ஜிங்குசாங் ஜிங்குசாங் வீரமணிக்கு ஜிங்குசாங்
ஜிங்குசாங் ஜிங்குசாங் இசுடாலினுக்கு ஜிங்குசாங்
ஜிங்குசாங் ஜிங்குசாங் அழகிரிக்கு ஜிங்குசாங்
ஜிங்குசாங் ஜிங்குசாங் அன்பரசுக்கு ஜிங்குசாங்
yaaraiyaavathu patthi kutram sollanumna atha mattum sollunga...athukku bathilaa raja seithathu thappae illatha mathiri yezhuthaathinga...avar seithathu mannikka mudiyaatha kutram...
எதிர்க்கட்சி என்றால் மேலும் மேலும் எதை யாவது சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். ஒரு விரலை எதிரி முன்னால் காட்டும்போது மற்ற விரல்கள் அவர்களை நோக்கித்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. தலைவிமீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன் றத்தால் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பின்னரும் நான்கு இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு, அவைகள் செல்லாது என்று கூறப்பட்ட பின்னரும் - ஆளுநரை வலியுறுத்தி பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அதுவும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரலாற்றையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று அவர் எண்ணுகிறார் போலும்! கட்சிக் கட்டுப்பாட்டினை யேற்று பதவி விலகிய தம்பி ராசா தன்மீது எந்தத் தவறும் இல்லை என்றும், எல்லாமே சட்டப்படிதான் நடந்துள்ளது என்பதை உரிய முறையில் நிரூபிப்பேன் என்றும் கூறியிருப் பதையும் மறந்துவிடக் கூடாது.
இன்னும் சொல்லவேண்டுமேயானால், அரசுக்குச் சொந்த மான டான்சி நிலத்தை முதலமைச்சராக பதவிப் பொறுப்பில் ஜெயலலிதா இருந்தபோது குறைந்த விலைக்கு வாங்கியது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றம்வரை நடந்து அதிலே நீதிபதி கள் கூறும்போது, பொதுத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு, அவர் முதலமைச்சராக பதவியிலே இருந்த காலத்தில் விற்கப்பட்டுள் ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. டான்சி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அதை விற்பனை செய்வதற்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாகவேண்டும். அதுவரை விற்பனை முழுமை அடைந்ததாகாது. விற்பனை தொடர்புடைய ஆவணங்களில் ஜெயலலிதா தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், அந்த அனுமதியினை அரசு இயந்திரம் உடனடியாக வழங்கியுள்ளது. நீதிமன்ற நடவடிக்கை காரண மாக ஏலத்திற்கு வருகின்ற சொத்துக்களை ஏலம் போடுகின்ற ஒரு சாதாரண அதிகாரியோ, கால்நடைகளை அடைத்து வைத்து அதனைப் பாதுகாக்கும் அதிகாரியோ, ரயில்வே சொத்துக்களைப் பராமரிக்கும் அதிகாரியோ அவர்களுடைய அதிகாரத்திலே உள்ள சொத்துக்களை விலைக்கு வாங்க முடியாது. வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து எங்களின் முடிவு எதுவாக இருந்தபோதிலும், அதிலே ஜெயலலிதாவிற்கு லாபம் இருந்ததா இல்லையா என்பதைவிட, முதலமைச்சரே அரசின் சொத்துக்களை வாங்க எத்தனித்து விட்ட நிலையில், அதிகாரவர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம் காட்டி இந்த விற்பனையை சுமூகமாக முதலமைச்சர் ஜெயா விரும்பும் விலைக்கே முடித்திருக்கிறார்கள் என்பதை எங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிலையிலும், ஜெயலலிதாவின் இந்தச் செயல்கள் நடத்தை விதிகளின் உட்பொருளுக்கு விரோதமானதாகும். நியாயமாக பேச வேண்டுமென்றால், அரசின் சாதாரண அதிகாரிகளுக்காக ஒரு சட்டமும், முதலமைச்சருக்காக ஒரு சட்டமும் இருக்க முடியுமா? இது போன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக்கப்பட வேண்டிய வெறும் ஆடம்பர பொருள் மட்டும்தானா? அது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா? இவைகள்தான் எங்களுடைய மனச்சாட்சி யைத் துன்புறுத்துகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக டான்சி நிலப் பத்திரத்திலே உள்ள, அவருடைய ஆடிட்டரும், அரசு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்ட அவருடைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்.
(Further, criminal law is meant to deal with criminals ordinarily, while code of conduct is observed as gentlemen’s agreement.
Good ethical behaviour on the part of those who are in power is the hallmark of a good administration and people in public life must perform their duties in a spirit of public service rather than by assuming power to indulge in callous cupidity, regardless of self imposed discipline. Irrespective of the fact whether we reach the conclusion that A.1 is guilty of the offences with which she is charged or not, she must atone for the same by answering her conscience in the light of what we have stated not only by returning the property to TANSI unconditionally but also ponder over whether she had done the right thing in breaching the spirit of the Code of Conduct and giving rise to suspicion that rules and procedures were bent to acquire the public property for personal benefit, though trite to say that suspicion however strong cannot take place of legal proof in a criminal case and take steps to expiate herself).
இந்த அளவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ஜெய லலிதா என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டு, ஜெயா தற்போது அறிக்கை விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள்தான் சிந்திக்கவேண்டும் என்று கலைஞர் எழுதியுள்ளார்.
தமிழ் ஒவியரே... உம் சிந்தனை மிக நன்று...
ராசா விதிகளை மீறினார் என்று குற்ற சட்டு இல்லை. 10 வருடத்துக்கு முந்தய .. தொலை தொடர்ப்பு துறை வளராத காலத்தில் இருந்த அலைக்கறை பழய விலைக்கு இன்று விற்றார். அதுவும் TRAI அமைப்பு புதிய விலைக்கு ஏலம் விடும்படி அறிவுறித்தியும்.. கேளாமல்.. ஸ்வான், மற்றும் ஒரு நிறுவனத்துக்கு உடனடியாக் விற்றார். அந்த நிறுவனம்
தன் பங்கு மதிப்பை பல மடங்கு உயர்த்தி தன் பங்குகளை உடனடியாக விற்றது எனபது குற்றசாட்டு....
"அமைச்சர் இராசா ஊழல் செய்தாரா?"
என்றால் இந்த கேள்விக்கு பதிலளிப்பதை விட்டு விட்டு.. பினராய் விஜயன் ஊழல் செய்த்தார்...
ஜெயலலிதா ஊழல் செய்தார். என்கிறிர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்தார் என்று கலைஞரை நீதிமன்றம் கண்டித்தே.. அந்த தீர்ப்பு நலலையும் வலையேற்ற வேண்டியது தானே...
உம் வீடு/ந்லம்.. தங்கம்.. 10 வருடத்துக்கு முன் என்ன விலை விற்றதோ அதே விலைக்கு இப்போது தருவீரா? ஒருவேளை உமது வேலைக்காரன் நீர் அப்பொழுத்து வாங்கி இருந்த விலைபட்டியலை (quotation) காட்டி அந்த விலைக்கு தான் சொந்தகாரனுக்கு விற்றால்.. அப்போதும் அவன் விதிகளின் படி தான் செயல்பட்டன் ஊழல் செய்யவில்லை என சொல்வீர ?
சுதந்திர இந்தியாவின் மிகப்பெறும் ஊழல் .. தம்பி ராசாவுடையது தான்.. இவருக்கு தொழில் குரு..கலைஞ்ர் தான். இது ஊருக்கே தெரியும்.. உமக்கும் தெரியும்.. நீர் வாங்கிய பெட்டிக்கக பதிவு போட்டால் படிப்பவர் அனவரும் முட்டள் அல்ல...
ராசா ஊழல் செய்தாரா என்பது தான் இப்போது பிரச்சன்னை. அதற்க்காக ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை என யாரும் கூறவில்லை. இது குழாயடியில் பெண்களின் சண்டையை போன்று உள்ளது.
நீ மட்டும் யோக்கியமா என்று கேட்டால் என்ன பொருள் ? நான் கொள்ளையடித்ததை நீ கேட்டல் நீ கொள்ளையடித்ததை நான் கேட்பேன் என்பதுதானே? இப்படி அனைவரின் ஊழலால் பாதிக்கபடுவது.. பொதுமக்கள் அதாவது நாம்...
மீண்டும் அமைச்சரவையில் ஆ.ராசா காங்கிரஸ் உறுதி -ராஜினாமாவின் நிஜ பின்னணி
எனக்கென்னவோ கலைஞர் சொல்வதைப் போல ராசா ஒரு தலித் என்பதால் அப்படி குற்றஞ்சாட்டுகிறார் என்பதுதான் சரி.. உடனே உமா சங்கன் என்று கூறுகிறார்கள்... உமா சங்கர் ஒரு அய்யர்.. அவரைப் பற்றி என்ன.. ராசா தலித் அவ்வளவுதான்
அன்பு தமிழ் ஓவியா, உங்கள் சீரிய சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் அன்பு அண்ணன், அதை தவிர அவர் வேறு என்ன தவறு செய்து விட்டார்...? தேவை இல்லாமல் ஆங்கில ஊடகங்கள் 2G அலைக்கற்றை விஷயத்தை பெரிது படுத்துகின்றன. இது ஒரு பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர், அதுவும் ஒரு தமிழன் மத்திய அமைச்சராக மிகவும் சிறப்பான முறையில், தாழ்த்தப் பட்ட மக்களின் உயர்வும் நல்வாழ்வும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இரவு பகல் பாராமல் உழைப்பதை பார்த்து பொறுக்கமாட்டாத சக்திகளின் சூழ்ச்சி.
அடுத்த முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அண்ணன் அவர்களுக்கு எப்படியாவது பிரதமர் பதிவியை பெற்று தந்து விடவேண்டும். இலங்கையில் மட்டுமல்ல இந்த உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழனையும் அழித்தாகிலும் பிரதமர் பதவியை பெற்று விடவேண்டும். அது தான் பெரியாரும், அண்ணாவும் வகுத்து தந்த சமுதாய சீர்திருத்த பாதையில் செல்லும் நமக்கெலாம் மிகப் பெரும் பெருமை.
வாழ்க டாஸ்மாக், வாழ்க இலவசங்கள், வாழ்க தமிழ் மக்கள்.
அன்று அமைச்சர் - இன்று ராஜா!
மானமிகு கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி பூதேவர்களால் தஸ்யூக்கள் இனத்தைச் சேர்ந்த மானமிகு ஆ.இராசா பழிவாங்கப்பட்டுள்ளார்.
நன்மையேயன்றி யாருக்கும் தீது செய்து அறியாத மாவலி சக்ரவர்த்தியின் மீது பொறாமை கொண்டு, மகாவிஷ்ணு என்னும் நயவஞ்சகன் சூழ்ச்சிப் பொறி வைத்து, மாவலியின் தலையில் கால் வைத்து பாதாளம் வரை அழுத்திக் கொன்றதாகப் புராணம் கூறும்.
இளமையும், துடிப்பும், நேர்கொண்ட பார்வையும், செயல்திறனும் கொண்ட தந்தை பெரியாரின் மாணவன், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அன்புத் தம்பி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் கொள்கை உறவாளி - போராளி, ஒடுக்கப்பட்ட சமூக வானில் மின்னும் ஒளிக்கதிர் நவீன பூதேவர்களான பார்ப்பன சக்திகளால், பார்ப்பன ஊடகங்களால் பழிவாங்கப் பட்டார்.
சவப்பெட்டியிலும் ஊழல் செய்த உன்மத்தர்கள், சுடுகாட்டிலும் கூட ஊழல் செய்ய முடியும் என்று சாதனை படைத்த சழக்கர்கள், டான்சி ராணிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிலங்களைப் பறித்து, நெடுமாளிகை கட்டி நித்திரை கொள்ளும் நவீன பூர்ஷ்வாக்கள் நான்கு விரல்களைத் தன் பக்கம் நீட்டிக் கொண்டே மானமிகு இராசாவைப் பார்த்து ஒரு விரலைக் காட்டி நீ குற்றவாளி! என்று நெஞ்சம் நடுங்காமல் - மனச்சாட்சி குத்திக் குடையாமல் குற்றப்பத்திரிகை படிக்கும் குணக்கேடர்களை மக்கள் மன்றம் குமுறும் எரிமலையாகக் கண்காணித்துக் கொண்டுதானிருக்கிறது.
அந்த வெப்பக் கடலின் ஒரு துளியைத்தான் நேற்று மாலை சென்னை விமான நிலையம் - காமராசர் முனையத்தின் வளாகத்தில் காண முடிந்தது.
அடேயப்பா, ஆயிரக்கணக்கான மக்கள் அதற்குள் எப்படித்தான் திரண்டனரோ! எங்குநோக்கினும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளின் கொடிகள்! கொடிகள்!!
அலைகடலுக்கு ஆத்திரம் வந்ததோ எனும் வகையில் வான்முட்டும் ஒலி முழக்கங்கள்!
ஒழிக! ஒழிக!! பார்ப்பன ஆதிக்கம் ஒழிக! ஒழிக!!
ஒழிக! ஒழிக!! பார்ப்பன ஊடகங்கள் ஒழிக! ஒழிக!!
எங்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், புரட்சியாளர் அம்பேத்கரும், தமிழர் தலைவர்கள் கலைஞரும், வீரமணியும் கட்டிக்காத்த இனவுணர்வைத் தொட்டுப் பார்க்க நினைத்திட்டால் தூள், தூள் தூளாவாய்! என்முழக்கங்களை இளைஞர் சேனை கோடை இடியாக இறக்கியது.
அநியாயமாக, அடக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பழி வாங்கப்பட்டார் என்ற ஆத்திரம் மக்கள் மத்தியில் மிகக் கூர்மையாகக் கொதித்து நிற்பதைக் காண முடிந்தது.
----------மின்சாரம் “விடுதலை” 17-11-2010 தொடரும்
மாண்புமிகு போகலாம் - வரலாம் - தட்டிப் பறிக்கப்படலாம் - ஆனால் மானமிகுவைப் பறிக்க முடியுமா என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் (15.11.2010) கந்தகக் கர்ச்சனையை அங்குக் காண முடிந்தது.
அன்புக் கரமேந்தி அரவணைத்து முத்தமிடத் தயார்! தயார்!! என்பதை அந்த மக்கள் கடலில் எழுந்த உணர்ச்சி முத்துக்களின் முறுவலில் காண முடிந்தது.
அடேயப்பா, என்ன பற்று, எத்தகைய வாஞ்சை!
அதே நேரத்தில் அவரைப் பழிவாங்கிய சக்திகள் மீது எத்தகைய எரிச்சல் - அமிலப் புயல்! கோபாக்கினியாக சிவந்த விழிகளாம் வாட்கள்!
இது வீண் போகாது! தமிழின உணர்வைக் காயப்படுத்திய கூட்டம், வாக்குக் கேட்க எங்கள் முன்தானே வந்தாக வேண்டும்? அப்பொழுது வட்டி போட்டு பழி வாங்கிட எங்களுக்குத் தெரியும், ஆம், மிக நன்றாகவே தெரியும் என்ற உணர்ச்சி - குமரி முதல் திருத்தணி வரை செங்குத்தாக எழுந்து நிற்கிறது.
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகச் சரியாக - செறிவாகக் குறிப்பிட்டபடி, 1971 தேர்தல் என்னும் தோசையை 2011 தேர்தலில் திருப்பிப்போட தமிழர்கள் தயாராகி விட்டனர்.
அவர் வெறும் அமைச்சர் - அன்று. இன்றோ அவர் ராஜா! மக்கள் நெஞ்சமென்னும் சிம்மாசனத்தில் மலிவுப் பதிப்பாக செம்மாந்த முறையில் வீற்றிருக்கும் ராஜா.
பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் பின் புத்தி. நனைத்து நனைத்துச் சுமந்து தீர வேண்டிய நாசகால நச்சுக் கூட்டம் அது!
எப்பொழுதெல்லாம் தமிழர்கள் இனவுணர்வு என்னும் புலியின் வால் மிதிக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் தமிழ் மக்கள் இனவுணர்வின் சீற்றத்தை நேர்கோணத்தில் கொட்டித் தீர்ப்பார்கள்.
அற்பர்களின் அற்ப சந்தோஷம் ஆடி அடங்கட்டும்!
ஒருமுறை மானமிகு ராஜா அவர்கள் தமிழ் மண்ணில் வலம் வந்தால் போதும்.
கறுஞ்சிறுத்தைக் கூட்டமும், இனமானத் தமிழ்க் கடலும், கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கமும், சமூக நீதி உணர்வின் வெள்ளமும், மண்ணையும் விண்ணையும் அளந்து மானமிகு ராஜாவின் வடிவில் தந்தை பெரியார் கொளுத்திச் சென்றுள்ள தன்மான - இனமான உணர்வின் உயரம் அகலமும், ஆழமும் எத்தகையது என்பதை - கோடி டிகிரி உச்சத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை நிரூபிப்பார்கள், நிரூபிப்பார்கள் என்பதில் அய்யமில்லை, அய்யமில்லை!
ராஜா அவர்களே வருக! தமிழ் மண்ணை ஒருமுறை வலம் வருக! வருக!! என தமிழின மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.அந்த நாளும் வந்திடுமோ!
திரு. இராசா ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் - அவருக்கு இதுமாதிரியான வரவேற்பு சரியா என்ற செய்தியாளரின் கேள்விக்கு - தொலைத் தொடர்புத் துறையில் புரட்சிகரமான செயலாக்கங்களை செய்துள்ள ஆ.இராசா தாழ்த்தப்பட்ட தோழர் என்ற காரணத்தால் பழி சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரை ஆதரிக்க திராவிடர் கழகம் கடமைப்பட்டுள்ளது. மேலும் இராசா அவர்கள் குற்றவாளி என்று நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லாத நிலையில் அவர் குற்றம் புரிந்தார் என்று சொல்லுவது எந்த வகையில் சரி என்றும் கழகத் தலைவர் வினா எழுப்பினார். (என்.டி.டி.வி. பேட்டி, 16.11.2010)
----------மின்சாரம் “விடுதலை” 17-11-2010
Raja helped Swan, Unitech twice over
Personally Redrafted First Come, First Served Policy To Help Them Jump Spectrum Queue
Shalini Singh | TNN
New Delhi: The CAG report on the 2G spectrum scam has thrown up fresh evidence of how former telecom minister A Raja used his office to manipulate the definition of firstcome, first-served (FCFS) to give Swan and Unitech a greater advantage over even the carefully handpicked new licencees.
Raja pulled off this colossal scam by insisting that he followed policy and procedure established since 2003 to give away licenses on a FCFS basis, when in fact, he did not.
Violating the established FCFS policy is just one of the many violations that helped perpetrate the Rs 1.76 lakh crore scam — but CAG’s report shows that this in particular, is directly attributed to Raja himself. On page 63 of its report, the CAG has attached a copy of a DoT press release on its use of the FCFS policy for award of new licences showing that Raja made changes in the definition of FCFS in his own handwriting.
The FCFS system followed since 2003 gave priority for spectrum allocation based on date of application. According to the CAG, “MOCIT (Raja) personally without any sound and valid reason took away the sanctity of date of application and the date of compliance of LOI conditions became the date of priority, which is not accepted principal of FCFS being followed by DoT till then. It was for the first time in the history of DoT that the date of compliance of LOI was considered a criterion for the issue of UASL licenses”.
Raja used press conferences and press releases to cleverly hide this modification and continues to state, “I am following policy established by my predecessors since 2003”.
The CAG shows how this clever alteration was used to switch companies in the queue, bringing those like Swan and Unitech who had applied much later, right up ahead over Spice and Idea in the priority for spectrum allocation. Essentially, the queue of applicants was illegally formed.
Unsurprisingly, this created the most impact in the Delhi circle where spectrum demand far exceeds supply. In the case of Swan, this change of definition of FCFS allowed Swan to get spectrum as early as 28 August 2008 despite submitting its application just 6 months earlier on 2 March 2007.
No other applicant has been awarded spectrum for Delhi, not even Spice, which had submitted its application in August 2006 — eight months ahead of Swan. This is because Raja knew that there was spectrum for only one operator in Delhi.
Similarly, for Maharashtra, Spice (date of application 31 August 2006) had to wait 2 years for spectrum till May 2009, while Unitech and Datacom (Videocon) who applied a year after Spice in September 2007, got spectrum within a year and eight months ahead of Spice, in September 2008. Idea was awarded spectrum after more than two years, in May 2009, despite an application of June 2006. Unitech became the key beneficiary, jumping ahead of the queue, to receive spectrum in September 2008 or eight months before Idea, despite having applied 14 months after Idea. It is likely the victims kept quiet as they all hoped to eventually gain from the allotment of valuable spectrum in 2008 at 2001 prices.
Raja’s careful manipulation of FCFS helped both Swan and Unitech make a killing within 9 months by selling 45% and 60% of their equity stake to Etisalat and Telenor respectively at 6-7 times their cost — without a single customer or a rupee in revenues.
Clearly, Raja neither followed the FCFS policy that existed since 2003 nor, according to CAG, did he implement TRAI recommendations of 2007.
New Delhi: The CAG report on the 2G spectrum scam has thrown up fresh evidence of how former telecom minister A Raja used his office to manipulate the definition of firstcome, first-served (FCFS) to give Swan and Unitech a greater advantage over even the carefully handpicked new licencees.
Raja pulled off this colossal scam by insisting that he followed policy and procedure established since 2003 to give away licenses on a FCFS basis, when in fact, he did not.
Violating the established FCFS policy is just one of the many violations that helped perpetrate the Rs 1.76 lakh crore scam — but CAG’s report shows that this in particular, is directly attributed to Raja himself. On page 63 of its report, the CAG has attached a copy of a DoT press release on its use of the FCFS policy for award of new licences showing that Raja made changes in the definition of FCFS in his own handwriting.
The FCFS system followed since 2003 gave priority for spectrum allocation based on date of application. According to the CAG, “MOCIT (Raja) personally without any sound and valid reason took away the sanctity of date of application and the date of compliance of LOI conditions became the date of priority, which is not accepted principal of FCFS being followed by DoT till then. It was for the first time in the history of DoT that the date of compliance of LOI was considered a criterion for the issue of UASL licenses”.
Raja used press conferences and press releases to cleverly hide this modification and continues to state, “I am following policy established by my predecessors since 2003”.
The CAG shows how this clever alteration was used to switch companies in the queue, bringing those like Swan and Unitech who had applied much later, right up ahead over Spice and Idea in the priority for spectrum allocation. Essentially, the queue of applicants was illegally formed.
Unsurprisingly, this created the most impact in the Delhi circle where spectrum demand far exceeds supply. In the case of Swan, this change of definition of FCFS allowed Swan to get spectrum as early as 28 August 2008 despite submitting its application just 6 months earlier on 2 March 2007.
No other applicant has been awarded spectrum for Delhi, not even Spice, which had submitted its application in August 2006 — eight months ahead of Swan. This is because Raja knew that there was spectrum for only one operator in Delhi.
Similarly, for Maharashtra, Spice (date of application 31 August 2006) had to wait 2 years for spectrum till May 2009, while Unitech and Datacom (Videocon) who applied a year after Spice in September 2007, got spectrum within a year and eight months ahead of Spice, in September 2008. Idea was awarded spectrum after more than two years, in May 2009, despite an application of June 2006. Unitech became the key beneficiary, jumping ahead of the queue, to receive spectrum in September 2008 or eight months before Idea, despite having applied 14 months after Idea. It is likely the victims kept quiet as they all hoped to eventually gain from the allotment of valuable spectrum in 2008 at 2001 prices.
Raja’s careful manipulation of FCFS helped both Swan and Unitech make a killing within 9 months by selling 45% and 60% of their equity stake to Etisalat and Telenor respectively at 6-7 times their cost — without a single customer or a rupee in revenues.
Clearly, Raja neither followed the FCFS policy that existed since 2003 nor, according to CAG, did he implement TRAI recommendations of 2007.
ஆ.ராசா சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்ற நான்கு மாதங்கள் கழித்து தொடங்கப் பட்டதுதான் க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட். இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் பினாமி ஏ.எம்.சாதிக் பாட்சா, சாதிக்கின் மனைவி ரேஹா பானு ஆகியோர். மே 2004ல் இந்த நிறுவனம் தொடங்கப் பட்ட போது மொத்த முதலீடு ஒரு லட்சம். இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தியாகராய நகர் கனரா வங்கியில் உள்ளது. தொடங்கிய முதல் ஆண்டிலேயே இந்நிறுவனத்தின் மொத்த டர்ன் ஓவர் 755 கோடி. ஒரு லட்சம் ஒரு வருடத்திற்குள் எப்படி வளர்ந்திருக்கிறது பார்த்தீர்களா ?
இது தவிரவும், ஊட்டியில் 300 ஏக்கர் டீ எஸ்டேட் ஆ.ராசா வாங்கியிருப்பதாக தெரிகிறது.
இது மட்டுமல்லாமல் ஆண்டிமுத்து, சின்னப்பிள்ளை அறக்கட்டளை என்ற ஒன்று தொடங்கப் பட்டு, இன்று அந்த ட்ரஸ்டின் சொத்து 200 கோடி ரூபாய்.
பனிமலர் கல்வி அறக்கட்டளை என்ற ஒரு அறக்கட்டளை தொடங்கப் பட்டு, அதிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடு செய்யப் பட்டுள்ளன.
courtesy: www.savukku.net
2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.வி. சிங், ஏ.கே. கங்குலி இந்த வழக்கில் பிரதமரின் பெயரை ஊடகங்கள் தேவையில் லாமல் பெரிதுபடுத்தி விட்டன என்று குறை கூறினார்கள். பத்திரிகை சுதந்திரத்தை நீதிமன்றம் மதிக்கிறது. சமுதாயத் துக்குச் சேவையாற்றுவ தில் பத்திரிகை, மின்னணு ஊடகங்கள் பெரும்பங்கு வகிப்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும், நீதி மன்ற நடவடிக்கைகளில் தவறான தகவல்கள் வெளி யாவது வருத்தமளிக் கிறது என்றனர்.
ஸ்பெக்ட்ரம் வழக் கில் பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளன. சில பத் திரிகைகள் அரசை அறைந்தது உச்சநீதிமன் றம் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள் ளது. அறைந்தது என்பதற்கு என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஊடகங்கள் தண்டிப்பதா?
நீதிமன்ற நடவடிக் கைகளைத் திரித்து ஊட கங்கள் வெளியிட்டது பற்றிய தங்களது அதி ருப்தியைத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி களின் கருத்தை ஒட்டி நேற்று உச்ச நீதிமன் றத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா வின் வழக்கறிஞர், தவறு செய்யாத அப்பா வியான எனது கட்சிக் காரர் ஏற்கெனவே ஊட கங்களால் தண்டிக்கப் பட்டு விட்டார் எனக் கூறினார்.
உயர் தணிக்கை அதி காரியின் அறிக்கையில் இராசா மீது குற்றம் சுமத்தப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே அவர் ஊடகங்களால் தண்டிக்கப்பட்டுவிட்டார். ஆ.இராசாதான் பொறுப்பு என்றோ அல்லது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவர் பணம் பெற்றார் என்றோ கூறும் ஒரே ஒரு பகுதியையாவது தணிக்கை அறிக்கையில் இருப்பதாகக் காட்ட முடியுமா? என்று வாதாடிய வழக்கறிஞர் அந்தியார்ஜுனா, மனுதாரரின் வழக்கு ரைஞர் பிரசாந்த் பூஷ னுக்கு சவால் விட்டார்.
அந்தியார்ஜுனா மேலும் கூறினார்: ரூ 1,76,000 கோடி இழப் புக்கு ஆ.இராசாதான் பொறுப்பாளி என்று கூறும் ஒரே ஒரு வார்த்தை கூட தணிக்கை அறிக்கையில் இல்லை. அவரது தரப்பு வாதத்தைக் கேட்டு அறிந்து கொள்ளாமலேயே அவரைத் தூக்கிலிடாதீர்கள்.
நடைமுறை என்ன?
தொலைத் தொடர் புத் துறைக்காக ஆஜ ரான வழக்குரைஞர் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணி யம் கூறியதாவது: நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் விதி 308 இன் கீழ், இந்தியத் தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை பொதுக் கணக்குக் குழுவுக்கு அனுப்பப்பட வேண் டும் என்றும், அக் குழு அந்த அறிக்கையைப் பரிசீலித்து, அந்த அறிக் கையின் அடிப்படையில் விசாரணை செய்ய சாட்சிகளை அழைப் பது எனும் வழக்கமாகப் பின்பற்றப்படும் நட வடிக்கை ஒன்று உள் ளது என்றார்.
இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? தணிக்கை அறிக்கையில் ஆ.இராசா மீது குறிப் பாக எந்தவிதக் குற்றச் சாற்றும் கூறப்படாத நிலையில், அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்படும் முன்பே, ஊடகங்கள் இராசாமீது வீண் பழி சுத்தி அவரை ஒரு பயங் கரமான ஊழல் புரிந்த வரைப்போல் சித்திரித்து விட்டன.
தணிக்கை அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிற்கு அனுப்பி அதன் மீது அக் குழுதான் நடவடிக்கை எடுக்கும் என்ற சட்டப் படியான நடைமுறை இருக்கும் நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை என்று அடம் பிடித்து எதிர்க்கட்சிகள் நாடா ளுமன்றச் செயல்பாட் டையே காலவரையின்றி முடக்குவது என்ன நியாயம்?
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என் பார்கள். பத்திரிகைக் காரர்களின் புளுகுகள் அதற்குள்ளேயே அம் பலமாகி விட்டன.
//ராவணன் said...
ஆமா.. அந்த கனிமொழிக்கும், இந்த வீணாப்போன வீரமணிக்கும் என்ன தொடர்பு?
எனக்கும் ஒரு 100 கோடி கொடுத்தால் ராசா யார் மகன் என்று கூறமாட்டேன்.
இதில் இந்த வீரமணி என்ன சாதி?
அதை ஜெயகாந்தனே சொல்லியுள்ளார்.
November 16, 2010 7:00 PM //
ரொம்ப சிம்பிள், உனக்கும் உங்க ஆத்தாளுக்கும் உள்ள தொடர்பு தான்.
உன் பொறப்பை பத்தி நீ தெரிஞ்சிக்கறதுக்கு எதுக்கு உனக்கு 100 கோடியை மக்கள் உனக்கு கொடுக்கணும்.
அது என்ன? அவ்வளவு கஷ்டமான காரியமா? இல்லை மத்தவங்களுக்கு இஷ்டமான காரியமா?
Post a Comment