Search This Blog

13.1.15

இதுதான் வால்மீகி இராமாயணம் -50

இதுதான் வால்மீகி இராமாயணம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி



தமிழ் மக்கள் மறந்தும் பிறன்கேடு சூழா மாண்பினர். இன்னா செய்தாரைத் தண்டிக்க அவர் நாண நன்னயஞ் செய்யும் நடையினர். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வதுதான் சாலுமெனக் கொண்டு யாவருக்கும் நலமே புரிவர். ஆதலின் தமிழ் மக்களனைவரும் நமது முன் னோரியல்புணர்ந்து நல்வழிப்படுமாறு வேண்டுகிறோம்.


நிற்க, பரதன் தசரதனுக்குப் பிணக்கிரியைகள் செய்தான். இக்காலத்தில் இவர்கள் பன்னிரண்டு மாதங்களிற் செய்யும் கிரியைகளெல்லாம், அக்காலத்தில் பன்னிரண்டு நாள்களில் முடிந்து விட்டதாகத் தெரிகிறது. பதிமூன்றாம் நாளே சாம்பலும் எலும்பும் அப்புறப்படுத்தப்பெற்றன. இதைப்பற்றி மொழிபெயர்ப்பாளர் சீனிவாசய்யங்கார் எழுதும் குறிப்புகளாவன: (பக்கம் 301) அக்காலத்தில் சகல கிரியைகளும் பன்னிரண்டு நாள்களில் முடிந்துவிட்டன வென்று தெரிய வருகிறது. இப்பொழுது அவை பன்னிரண்டு நாள்களில் முடிந்துவிட்டனவென்று தெரிய வருகிறது. இப்பொழுது அவை பன்னிரண்டு மாதங்களில் ஊன மாகிசம், மாசிகம், சோதகும்பம் என்று கிரமமாக நடந்து வருஷத்தின் முடிவில் ஆப்திக சிரார்த்தத்துடன் பூர்த்தியாகிறது. (பக்கம் 303) மனுஷ்ய தேகம் அநித்ய மானதால், இப்பொழுது சஞ்சயனம் இரண்டாவது நாளிலேயே செய்யப்படுகிறது இக்குறிப்புகள் முன்னுக்குப் பின் முரணாகின்றன.

மனித உடல் நிலையற்றதனால் பதின்மூன்றாம்நாள் நடந்த தீயாற்றுவிழா இக்காலத்தில் இரண்டாம்நாளே நடக்கிற தென்றால், அதன் முன் நடந்த கிரியைகளெல்லாம் அதன் முன்னரேயன்றோ முற்றுப்பெற அறிஞர் விரும்புவர். அவ்வாறின்றி அவை பன்னிரண்டு நாள்களுக்குப் பதிலாகப் பன்னிரண்டு மாதங்களில் நடக்கின்றன என்றால், அது வைதிகர்களின் சூழ்ச்சியேயன்றி வேறன்று. என்னையெனில் பன்னிரண்டு நாள்களிலும் தொடர்ந்து ஒருவன் கிரியைகளைச் செய்வானேல், வைதிகர்களுக்கு வருவாய் அதிகமாயிருக்காது. அவற்றை விட்டு விட்டு முப்பது நாள் தள்ளித் தள்ளி செய்தால் செய்பவர்களுக்குச் சலிப்புத் தோன்றாது, அதனால் வருவாயும் மிகும். இதனால் இவ்வாறு ஆரிய வைதிகர்கள் கிரியைகளை மாற்றி கொண்டதற்குக் காரணம், தம் வருவாயை மிகுதிப்படுத்திக் கொள்ளவேயன்றி வேறன்று.

ஆரியப் புரோகிதர்கள் தம் வருவாயைக் கருதி ஆரியப் பொதுமக்களிடைத் தமக்குப் பிணச்செயல்களைப் புரிவதற்குப் பிள்ளைகளில்லாமல் இறப்பவன் புத் என்னும் நரகத்தை அடைவான் என்றும், புத் என்னும் நரகத்திலிருந்து பெற்றோரை மீட்பவனே புத்திரன் என்றும், ஆதலின் எவ்வாற்றானும் பிள்ளைப்பேறு இன்றியமையாததென்றும் வலியுறுத்தி ஒரு பெரிய அச்சத்தையும் பரப்பினர். இவ்விதம் அச்சம் தோன்றியபின்னரே ஆரியர் நெடு நாள் பிள்ளையில்லாதபோது தம் மனைவியரைப் பிறர்வசம் ஒப்புவித்தாவது பிள்ளைப் பேறடைந்தனர் என்ற வரலாறு காணப்படுகின்றது. இதற்குச் சான்று தசரதன் அசுவமேதம் நடத்தத் தொடங்கிக் கோசலை முதலிய தனது மூன்று மனைவியரையும் யாகம் நடத்தி நான்கு பிள்ளைகளைப் பெற்றதே. பாண்டு, திருதராட்டிரன், விதுரன் முதலியோர் தம் உண்மைத் தந்தை இறந்த பின்னர் வியாச முனிவனுடைய செயற்கையால் பிறந்ததும், குந்தி தன் கணவன் பாண்டு இறக்குந்தவாயிலிருக்கும்போது பிறரைக் கூடி தருமன், பீமன், அருச்சுனன் என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றதும், குந்தியின் தலைவனாகிய பாண்டுவின் இரண்டாம் மனைவியாகிய மத்தரையென்பவள் பிறரைப் புணர்ந்து நகுலன் சகாதேவன் என்ற பிள்ளைகளைப் பெற்றதும் இதனாலேயே.

பிள்ளைப்பேறில்லாமல்  இறப்போர் பிணத்தை மற்றவர் கொளுத்தினால் அது வேகாதுபோலும்! மற்றவர் புதைத்தால் அதை மண் தின்னாது போலும்! ஒரு சாரார் தம் வயிற்றுப் பிழைப்பும் வாழ்வும் கருதிப் புனைந்துரைத்த சூழ்ச்சி யுரைகளுக்குப் பொது ஆரிய மக்கள் மயங்கி ஈடுபட்டனரே! பரிதாபம்! பரிதாபம்! இத்தீய கொள்கைகளும், ஜாதி வேறுபாடுகளும் பிற்காலத்திலேயே தமிழ் மக்களிடை அவ்வாரியரால் பரப்பப்பட்டன.

அக்காலத்திலேயே கபிலர் அகவல் போன்ற அறிவுரை நூல்கள் தோன்றத் தொடங்கின.

ஆதலின் தமிழ் மக்கள் இவ்வுண்மைகளையெல்லாம் தெரிந்துணர்ந்து திதி கொடுத்தல், சாதி வேறுபாடு பாராட்டல் முதலிய அறக்கொடுஞ்செயல்களை இனியேனும் விட் டொழிக்குமாறு வேண்டுகின்றோம். இத்தீய செயல்களால் பொருள் கெடுவதோடு சில சோம்பேறிகளே வயிறு புடைக்க உண்டு வாழ்கின்றனர்.

இக்கொடிய வழக்கங்களாலேயே தமிழ் மக்கள் வறுமை நோயுற்று வருந்துகின்றனர். தமிழ் மக்களே! இனியேனும் ஆரிய மக்களுடைய இக்கேவலமான இழிந்த புரட்டுகளுக்குச் செவிகொடுத்து மயங்காமல் மெய்யறிவு பெற்றுச் செல்வ வாழ்க்கையை யடைந்து நல்வழிப்பட முந்துங்கள், முந்துங்கள்.

                    ----------------- தொடரும்  - "விடுதலை” 06-01-2015

6 comments:

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினரைச் சீண்டும் பா.ஜ.க. அமைச்சர்


போபால், ஜன.13_ முஸ் லீம்களின் தொழுகையும் சூர்ய நமஸ்காரம் தான் என மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாராஸ் ஜெயின் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு கடந்த 2007 ஆம் ஆண் டில் இருந்து சூர்ய நமஸ் கார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில்,முஸ்லீம்களின் தொழு கையும் ஒருவித சூர்ய நமஸ்காரம்தான். சிறு பான்மையினரும் சூர்ய நமஸ்காரம் செய்யவேண் டும். ஆனால் விருப்பம் இல்லாத மாணவர்கள் சூர்ய நமஸ்கார நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளத் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜெயி னின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாநில அரசு சூர்ய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் துள்ளது. அந்த நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் ஜெயின் இவ்வாறு தெரி வித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் ஏதாவது கருத்து தெரி வித்து சர்ச்சையில் சிக் குவது வழக்கமாகிவிட் டது என்பது குறிப்பிடத் தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/94368.html#ixzz3Oi8DDH6w

தமிழ் ஓவியா said...

சிறீரங்கம் பிரச்சினை: நீதிமன்றத்தில் சந்திப்போம்!


சிறீரங்கம் ரெங்கநாதன் கோவிலில் ஒரு அக்கிரமம் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறப்புக்குப் பிறகு வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரை யான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரைக் கோவிலிலிருந்து அவர்களின் வீட்டுக்குப் பல்லக்கில் சுமந்து செல்லவேண்டுமாம் - இதற்குப் பிரம்ம ரத மரியாதை என்று பெயராம். இதற்குப் பிரம்ம ரதம் அல்லது சீமான் தாங்கி என்ற பெயரும் உண்டு.

இதே சிறீரங்கத்தில் 2011 (அக்டோபர் 8) இல் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஓர் எச்சரிக்கை செய்தார். இப்படி மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமைக்கு எதிரான நிகழ்வை அனுமதிக்க முடியாது. மீறி சுமந்தால் திராவிடர் கழகம் மறியல் செய்து முறியடிக்கும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.

அப்பொழுது கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடந்துகொண்டும் இருந்தது. இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு பிரம்ம ரதத்தைத் தடை செய்தனர்.

இந்து அறநிலையத் துறை ஆணையர் செயராமன்தான் அத்தகைய ஆணையைப் பிறப்பித்தார். அதனை எதிர்த்து ரங்கநாதன் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கொன்றைத் தொடர்ந் தனர். நீதிமன்றம் அர்ச்சகப் பார்ப்பனர்களை எச்சரித்த தோடு, வழக்கையும் தள்ளுபடி செய்தது. அதன்படி மூன்று ஆண்டுகளாக பிரம்ம ரதம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், திடீரென்று இவ்வாண்டு மீண்டும் பார்ப்பனரைச் சுமக்கும் பிரம்ம ரதத்தைச் செயல்படுத்த முனைந்தனர். தகவல் அறிந்த திருச்சி மாவட்ட திராவிடர் கழகம், அப்படி தூக்கிச் சென்றால் மறியல் செய்வோம் என்று அறிவித்ததது.

கடந்த 10 ஆம் தேதி காலையில் மறியல் செய்த திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்து, நூற்றுக் கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்போடு பிரம்ம ரதத்தினை அரங்கேற்றியுள்ளனர் (ரெங்கநாதன் சக்திமீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை போலும்! கடவுளை மற, மனிதனை நினை! என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை!).

இது ஓர் அப்பட்டமான நீதிமன்ற உரிமை அவமதிப்பே! (Contempt of Court).

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய ஆணையில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 24.11.2012 அன்று கைசிக ஏகாதசி தினத்தன்று திருவேத வியாச ரெங்கராஜ பட்டர் அவர்கள் கைசிக ஏகாதசி புராணம் வாசித்து, பல்லக்கில் தூக்கிச் செல்வதைத் தவிர இதர மரியாதை களைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை திட்டவட்டமாக ஆணை பிறப்பித்ததற்கு எதிராக அப்பட்டமாக மீறுகிறார்கள் என்றால் எந்தத் தைரியத்தில்?

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்து அறநிலையத் துறை ஆணையரோ, அதிகாரிகளோ நீதிமன்ற ஆணையை மீறுவதற்கு எப்படி துணிந்தனர்?

ஒருக்கால் அமைச்சர்கள் தலையிட்டதால் இந்த அத்துமீறலைச் செய்துள்ளனரா? நீதிமன்ற அவமதிப்பு என்றால், அமைச்சர்கள் யாரும் நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கப் போவதில்லை. தலைமைச் செயலாளரோ அல்லது இந்து அறநிலையத் துறை ஆணையரோதான் கூண்டில் ஏறிப் பதில் சொல்லியாகவேண்டும்.

மாநிலத்தில் உள்ள ஆட்சி - திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இப்படியொரு ஆன்மிகத்தனத்தில் செயல்பட்டு வருகிறது என்று கருதலாமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக கோவில் குளங்கள் என்று சுற்றித் திரிவது, யாகம் நடத்துவது, திராவிடர் இயக்கக் கொள்கைகளுக்கும், அந்தக் கட்சியின் பெயரிலும், கொடியிலும் இடம்பெற்றுள்ள அறிஞர் அண்ணா ஏற்றுக்கொண்ட, வலியுறுத்திய கொள்கை களுக்கு விரோதமானது என்றாலும், அவை சட்டச் சிக்கலுக்குள் வராது.
ஆனால், இப்பொழுது சிறீரங்கத்தில் நடைபெற்று இருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானதாகும். எனவேதான், தமிழர் தலைவர் அறிவித்தார் - நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று.

ஆட்சி அதிகாரம் இருந்தால் எப்படியும் நடந்து கொள்ளலாம்; நீதிமன்ற தீர்ப்புகளையும் தூக்கி எறியலாம் என்ற மனப்பான்மை ஆபத்தானது. இலங்கைத் தீவில் ஆட்டம் போட்ட அதிபரின் கதியை உலகமே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது சிறீரங்கநாதனா வந்து சாட்சி கூறப்போகிறான்? நான் சொல்லித்தான் நடந்தது என்று கூறவா போகிறான்?

தமிழ் ஓவியா said...


இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதன் மனிதனை சுமப்பது கேவலம் என்று நினைக்கவேண்டாமா? அப்படி நினைக்கவில்லை என்றால், அதற்குள்ளிருப்பது ஜாதி இறுமாப்பும், ஆணவமும்தான் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

திருக்குறளில் ஒரு குறள் உண்டு:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனுக்கும், பல்லக்கில் அமர்ந்து செல்கின்றவனுக்கும் இடையே உள்ள நிலை மையைச் சுட்டிக்காட்டி, அறத்தின் பயன் இதுதான் என்று கூறவேண்டாம் என்று எவ்வளவு அழகாக மனிதப் பண்பை, உரிமையைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருவள்ளுவர்.

மதத்தை மய்யப்படுத்தி நடக்கும் எல்லாவித அக்கிரமங் களுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் முடிந்த பரிகாரம் அனைத்து ஜாதியினருக்கும், அர்ச்சகர் உரிமை என்ப தாகும். அதனையும் நிறைவேற்றி முடித்து, ஆதிக்கக் கூட்டத்தின் ஆணிவேரை வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!

Read more: http://viduthalai.in/page-2/94394.html#ixzz3Oi8kead7

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கடவுள்

கடவுள்கள் சிவன், விஷ்ணு, பிர்மா, விநாய கன், சுப்பிரமணியம் முதலியோர்பற்றிக் கதை கதையாக எழுதி வைத் துள்ளார்களே, அவை நடமாட்டம் பற்றி எல் லாம் எழுதித் தள்ளி யுள்ளார்களே- இப்பொ ழுதெல்லாம் இந்தக் கடவுள்களின் நடமாட் டங்களோ, செயல்களோ ஒன்றையும் காணோமே - ஏன்? உயிரோடு இருக் கிறார்களா? செத்துப் போய் விட்டார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/94434.html#ixzz3OnUKTz57

தமிழ் ஓவியா said...

கங்கையைப் புனிதப்படுத்தும் கனவான்கள் பார்வைக்கு...

எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதக்கும் கோரக்காட்சி

பீதியில் உறையும் பொது மக்கள்

காசி, ஜன.14_ புனித கங்கை என்று போற்றப் படும் கங்கையில் இது வரை இல்லாத அளவுக்கு ஏராளமான எண்ணிக்கை யில் மனிதப் பிணங்கள் மிதப்பதால் மக்கள் பீதி யில் உறைந்து கிடக்கின்றனர்.

மோடி வெற்றிபெற்ற நாடாளுமன்றதொகுதியான வாரணாசி மற்றும் அதற்கு மேற்கே உள்ள உன்னாவ் போன்ற பகுதி களில் கடந்த இரண்டு மாதங்களாக 200க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தன. அடையாளம் தெரியாத இந்தப் பிணங் களால் அந்தப்பகுதி மக்களிடம் அச்சம் மிகுந்து காணப்படுகிறது. சில பிணங்கள் நாய் மற் றும் காகங்கள் சிதைத்து விட்டதால் மிகவும் கோரமாக காட்சியளிக் கின்றன.

இதுகுறித்து உன்னாவ் மாஜிஸ்ட்ரேட் கூறியதாவது, எங்களுக்கு சில மீனவர்கள் மூலம் கங்கை நதியில் பிணங்கள் அதிக அளவு மிதந்து வருவதாக தகவல் வந்தது. பொதுவாக ஏழைகள் உடலை எரிக்க போதிய பொருளாதார வசதி யில்லாத காரணத்தால் ஆள் ஆரவாரமற்ற பகுதிகளில் கங்கைக் கரை யில் விட்டுவிடுவார்கள் இப்படி வாரத்திற்கு நான்கு, அய்ந்து பிணங்கள் மிதந்து வருவதுண்டு, ஆனால் திடீரென இவ் வளவுப் பிணங்கள் வருவது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

இது குறித்து வார ணாசி ஹனுமான் காட் பகுதி மீனவர்கள் கூறிய தாவது, கங்கையின் போக்கு அதிகம் இருக்கும் போது பிணங்கள் தானா கவே மிதந்து சென்று விடும், ஆனால் தற்போது நதியின் போக்கு மிகவும் மெதுவாக உள்ளது. இத்தகைய காரணத்தால் பிணங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்து விட்டன.

தற்போது மகர சங்ராந்தி விழா இன்றி லிருந்து துவங்கு கிறது. இந்துக்கள் இந்த நாளில் கங்கையில் குளிப்பதை புனிதமாக கருதுகின்றனர். ஆனால் அலகாபாத், வாரணாசி, உன்னாவ் கங்கைக் கரைகளில் தொடர்ந்து பிணங்கள் ஒதுங்கிக் கொண்டு இருக்கின்றன.

வாரணாசி சுற்றுப் புறப் பாதுகாப்பு ஆர்வலர் ராகேஷ் ஜஸ்வால் கூறியதாவது, கங்கைப் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றை மோடி தொடங்கி வைத்தார், அந்த இயக்கத்தின் தலைவராக ராமாஜி திரிபாடி உள்ளார். மோடி வரும் காலங்களில் மட்டும் கங்கைக் கரையில் மண்வெட்டி கடப்பாரை குப்பை அள்ளும் உபகர ணங்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடு கிறார்கள். மத்திய அரசு கங்கை சுத்தத்திற்கு என்று 20,000 கோடிக்கு பல்வேறு திட் டங்களை வகுத்துள்ளது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசைக் கண்டித்து விட் டது, இவ்வளவு நடந்த பிறகும் அரசு கங்கையைச் சுத்தப்படுத்துவதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பிணங்களை இலவசமாக எரிக்க வாரணாசியில் மட்டும் 5 அமைப்புகள் உள்ளன. பெயருக்குத் தான் இலவசமே தவிர பிணம் எரிப்பவர்கள் முதல் விறகு வாங்கும் வரைக்கும், அய்ந்தாயிரம் வரை பிடுங்கிவிடுகிறார்கள். ரூ.100_க்கே திண்டாடும் ஏழைகள் ஆயிரக்கணக் கில் எங்கே கொடுப் பார்கள்? என்று கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94435.html#ixzz3OnV0uZgp

தமிழ் ஓவியா said...

அறிவு பெற முடியாமல்....


தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகிறான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/94422.html#ixzz3OnVFYdmn