Search This Blog

29.1.11

பார்ப்பனர்களை இழித்துப் பேசலாமா?சட்டப்படி சரியா?


புலியை இடற வேண்டாம்!

கேள்வி:- எல்லோருக்கும் பொதுவானவர் ஒரு மாநில முதலமைச்சர் அவரே பூணூல்,பஞ்சகச்சம்,ஆரியம், திருடன் என்று பிராமணர்களை மோசமாக இழித்துப் பேசலாமா?சட்டப்படி சரியா?


பதில்: முதல்வரின் பல பேச்சுக்கள் இந்தியன் பீனல் கோட் விவரித்துள்ள குற்றங்கள் சிலவற்றின் கீழ்வருபவைதான்

----------(துக்ளக் 26.11.2011 பக்கம் 20)

நமது விளக்கம்:

பிராமணன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொள்வதைவிட பெரிய குற்றம் வேறு எதுவாக இருக்க முடியும்? நீவிர் பிராமணன் என்றால் நாங்கள் யார்? நீ பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்றால் நான் பிர்மாவின் பாதத்தில் பிறந்தவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமே. நான் சூத்திரன் என்றால் உன் மனு தர்மப்படி எங்கள் நிலைப்பாடு என்ன? நாங்கள் விலைக்கு வாங்கப்பட்ட வர்கள், விபச்சாரி மகன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே. (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்னை விபச்சாரி மகன் என்று சொல்லும் பிராமணனாகிய நீ குற்றவாளியா? சுயமரியாதை உணர்வின் அடிப்படையில் அதனை எதிர்க்கும் கலைஞர் குற்றவாளியா? கலைஞர் சொன்னது இந்தியன் பீனல்கோட் விவரித்துள்ள குற்றங்கள் சிலவற்றின் கீழ்வரும் என்று உறுதியாக நீவிர் கருதினால், உமக்குத் துணிவிருந்தால், அறிவு நாணயம் இருந்தால் கலைஞர்மீது வழக்குத் தொடு பார்க்கலாம். அதைத்தானே நாங்களும் எதிர் பார்க்கிறோம். வீதியில் முழங்குவதை நீதிமன்றத்தில் முழங்குவோமே! தோலை உரித்து மஞ்சள் பொடி தடவிக் காயப் போட்டு விடுவோமே!

முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அரசியலில் - ஆட்சியில் இருப்பதால் சிலவற்றைக் கூறிடத் தயக்கம் காட்ட முடியும்.

எங்களுக்கு என்ன வந்தது? எங்களிடம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை.

இனத் தலைவர் தந்தை பெரியார் இடித்துச் சொல்லி விட்டும் போய்விட் டார் - அதுவும் தன் இறுதி உரையிலே - மரண சாசனமாக (19.12.1973).

நண்பர் வீரமணி சொன்னதுபோல, கிறிஸ்தவன், முஸ்லிம், பார்சி தவிர, மற்றவன் எல்லாம் இந்து. நூற்றுக்கு மூன்று பேர் பார்ப்பனர் தவிர பாக்கி 97 பேர் தேவடியாள் மக்கள், பார்ப் பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுதி வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? திருப்பிச் சொல்லாத காரணம், அவர்களைக் கண்டிக்காத காரணம்; பார்ப்பானைக் கண்டால் வாப்பா, தேவடியாள் மகனே, எப்ப வந்த? என்று கேட்க வேண்டும். ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால் நீ எழுதி வைத்ததடா என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே, உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்! அதில் என்ன தப்பு? என்று ஈரோட்டு எரிமலை, தன்மான உணர்வை தமது இறுதி உரையிலே சொல்லி விட்டுச் சென்றுள்ளாரே அடுத்த கட்டம் இதுதான் நடக்கப் போகிறது.

கலைஞரை மிரட்டலாம் என்று நினைக்க வேண்டாம். கருஞ்சட்டைப் பட்டாளத்தை முதலில் சந்தித்து விட்டுத்தான் அவரை அணுக வேண் டும் எச்சரிக்கை!

கடவுள் இல்லை என்று சொல்பவனின் தலையை அறுக்க வேண்டும் என்று உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார் (நாலாயிரப் பிரபந்தம்) கூறுவான். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - எதிர்த்து ஒரு கருத்துக்கூட கூறக் கூடாது. பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களின் கற்பை அழிக்க வர வேண்டும் என்று உங்கள் திருஞான சம்பந்தன் பாடுவான் _ அதனையும் பயபக்தியோடு நாங்கள் பவ்யமாக ஏற்க வேண்டும். இவற்றையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால் இந்தியன் பீனல் கோட் காட்டி அச்சுறுத்துவீர்களா?

இந்திய அரசியல் சட்டம் அசல் மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று அரசியல் நிர்ணய சபை கூடி அதனைத் தயாரித்து வெளியிட்ட நேரத்திலேயே எங்கள் ஆசான் அய்யா அடித்துச் சொல்லி விட்டாரே! சட்டத்தை நானே உருவாக்கியிருந்தாலும், அதைக் கொளுத்துவதிலும் நான்தான் முதல் மனிதனாக இருப்பேன் என்று அண்ணல் அம்பேத்கர் மாநி லங்களவையிலேயே பதிவு செய்தாரே - அதுவும் இந்த அடிப்படையில்தான். 6 பேருக்கு 4 பார்ப்பனர்கள் அரசமைப்புச் சட்டத் தயாரிப்பில் பங்கு கொண்டிருந்தால் அது அசல் மனுதர்ம சாஸ்திரமாகத்தானே இருக் கும்? சமூகப் புரட்சித் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் அதனால்தான் இதில் ஒரே கருத்தில் சுருதிப்பேதம் இல்லாமல் சொல்லியுள்ளனர்.

இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், உரிமையற்றவர்கள் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ள வேதங்களை, (சுருதிகளை), உபநிஷத் துக்களை, மனுதர்ம சாஸ்திரங்களை (ஸ்மிருதிகளை) இதிகாசங்களை, புராணக் குப்பைகளைக் கொளுத்தாமல், அவற்றை உச்சி மோந்து தலையில் தூக்கி வைத்து ஆடும் பார்ப்பனர்கள், சட்டத்தைக் காட்டி மிரட்டுவார்கள் என்றால், அடுத்த கட்டத்தைப் பற்றி பெரும்பான்மையான மக்கள் யோசித்துத்தான் தீர வேண்டும்.

பார்ப்பனர்களின் வக்கீலாக இன்றைய தினம் சோ ராமசாமி களத்தில் நிற்கப் பார்க்கிறார்.

பச்சையாக மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கி எழுதிக் கொண்டும் இருக்கிறார். நம்மைத் தேவடியாள் மக்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறார். மறைக்காமல் உண்மையாக பார்ப்பனர்களின் புத்தியைக் காட்டிக் கொள்வதற்காக ஒரு வகையில் அவரைப் பாராட்டக் கூடச் செய்யலாம்.

இப்பல்லாம் பார்ப்பனர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் எப்பொழுதோ மாறி விட்டனர்? என்று சொல்லக் கூடிய அதி மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் பலரும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அவர்களுக்கு அடையாளம் காட்ட அடையாளப் பூர்வமாக ஒருவரைக் காட்டித் தொலைக்க வேண்டாமா? அதற்கு சோ ராமசாமிதான் பொருத்தமானவர். எனவே அசல் அவாளாக பிராமணராக ஆரியப் புத்திரராக பூணூலை உருவிக் கொண்டு தம் அடையாளத்தைக் காட்டட்டும் _ அதுதான் நம் மக்கள் இனவுணர்வு மழுங்காமல் இருக்கப் பெரிதும் பயன்படும்.

கேள்வி: பிராமணர்கள் ஓட்டு எல்லாம் திமுகவுக்குத்தான் என்று பிராமணர்கள் முடிவெடுத்தால் கருணாநிதி, தனது பிராமண எதிர்ப்புக் கொள்கையையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் மாற்றிக் கொள்வாரா?

பதில்: அதோடு மட்டுமல்ல; இலவச பூணூல் திட்டம்கூட கொண்டு வருவார்.
(துக்ளக் 26.1.2011)

நமது விளக்கம்:

அப்பொழுதுகூட பார்ப்பனர்கள் தங்களின் ஜாதி ஆணவத்தை பிறப்பின் அடிப்படையில் நாங்கள் பிராமணர்கள் தான் எனும் ஆணவத் திமிரை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை அந்த ஆணவத்தைக் குறிக்கும் பூணூலை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர்களின் சாணக்கியரான ஆச்சாரியார் என்ன சொன்னார்?

பிராமணர்களே, பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவில்லையா? அப்பொழுது அண்ணா இலவசமாகப் பூணூல் தருவேன் என்றா தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்?

ஆச்சாரியாரைத் தான் சாணக்கியர் என்று சொல்வார்கள். அந்தச் சாணக்கியரையே சட்னியாக்கி, தேர்தல் வெற்றியை, திருச்சியில் இருந்த தந்தை பெரியாரை நோக்கிச் சென்று காணிக்கையாக ஆக்கினாரே அறிஞர் அண்ணா _ நினைவிருக்கிறதா?

இப்பொழுது எகிறிக் குதிப்பது போலத்தான் 1971 தேர்தலிலும் இதே சோ கும்பல் தினமணி திரிக் கூட்டம் ஆட்டம் போட்டது.

ஆரியர் _ திராவிடர் யுத்தமே நடந்தது. முடிவு என்ன? 1967-இல் 138 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 1971இல் 183 இடங்களை யல்லவா கைப்பற்றியது?

இராமனை செருப்பாலடித்த கட்சிக்கா ஓட்டு என்று பிரச்சாரம் செய்து பார்த்தீர்களே! கோயில் கதவு பெரிசு சுவரொட்டிகளை ஒட்டினீர்களே! துக்ளக் சிறப்பிதழே வெளியிட்டதே! பிள்ளை பிழைத்ததா? விளக்கெண்ணெய்க்குத்தானே கேடாய் முடிந்தது?

இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. நாட்டை விட்டே வெளியேறத் தீர்மானித்து விட்டார்கள் என்று உங்கள் மூதறிஞர் குல்லுகப்பட்டர் ராஜாஜி சரணாகதி அடையவில்லையா? அவரை விடவா நீங்கள்?

புலியை இடறிப் பார்க்க ஆசைப் பட வேண்டாம். எச்சரிக்கை!

-------------------மின்சாரம் அவர்கள் 29-1-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

6 comments:

Hariharan said...

தமிழ் ஒவியா அவர்களே திருஞான சம்பந்தர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லி பாடிய பாடலை சிறிது சொல்ல முடியுமா..

தமிழ் ஓவியா said...

இதோ அந்தப் பாடல்:


மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்

திண்ணகத் திருவால வாயருள்

பெண்ணகத் தெழில் சாக்கிய பேய்மண்

பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே

மேலும் செய்திகளை அறிந்து கொள்ள

http://thamizhoviya.blogspot.com/2010/12/blog-post_576.html

http://thamizhoviya.blogspot.com/2011/01/blog-post_11.html

தமிழ் ஓவியா said...

இராவணலீலா நடத்தி ராமன்,சீதை உருவங்களைக் கொளுத்தி,நீதிமன்றத்தையும் சந்தித்து குற்றமான செய்கையல்ல என்ற தீர்ப்பையும் வாங்கி வைத்திருப்பவர்கள் நாங்கள். இந்தியப் பீனல் கோடு சட்டப்பிரிவுகளைக் காட்டி சோ ராமசாமி மானமிகு கலைஞர் அவர்களை மிரட்டிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்.மிரட்ட ஆசைப்பட்டால் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதைதான். எச்சரிக்கை.

--மின்சாரம் -”விடுதலை” ஞாயிறுமலர் 29-1-2011

கோவி.கண்ணன் said...

ஹரிகரன்,



"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்து திருவாலவாய் அருள்
பெண்ணகத்து எழில் பேயமன் சாக்கியத்
தென்னர்க் கற்பழிக்கத் திருவுளமே"

தேவாரம், மூன்றாம் பதிகம், திருஞானசம்பந்தர், "திருவாலவாய்".

Hariharan said...

நன்றி ஓவியா, மற்றும் கண்ணன் அவர்களே..

கற்பு மணம், களவு மணம் என்பவை சங்க இலக்கியத்தில் கூட உண்டு. ஆனால் அந்த கற்பை அழித்தல் எனபொருள் படும் கற்பழித்தல் எப்பொழுது தோன்றியது அதுவும் இன்று நாம் சொல்லாடலில் சொல்லும் அர்த்ததுடன் என்பது தெளிவில்லை இதை ஆராய்ந்தே ஆகவேண்டும்...

என்னை பொருத்தவரை செளந்தர்ய லஹரி திராவிட சிசு என்று முழு பாடல் அர்த்ததை சொல்லாமல் மூடி விளையாடுவதை போல் தான் இதுவும் இருக்க முடியும்..

இங்கு ஒருவர் சம்பந்தனின் பாடலுக்கு விளக்கம் அளித்துள்ளார்..
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60612289&format=print&edition_id=20061228

கோவி.கண்ணன் said...

// ஹரிஹரன் said...
நன்றி ஓவியா, மற்றும் கண்ணன் அவர்களே..

கற்பு மணம், களவு மணம் என்பவை சங்க இலக்கியத்தில் கூட உண்டு. ஆனால் அந்த கற்பை அழித்தல் எனபொருள் படும் கற்பழித்தல் எப்பொழுது தோன்றியது அதுவும் இன்று நாம் சொல்லாடலில் சொல்லும் அர்த்ததுடன் என்பது தெளிவில்லை இதை ஆராய்ந்தே ஆகவேண்டும்...
//

காலை கழுவிய நீர் தீர்தம் என்று சொல்லப்படுவது போல, கற்பழிப்பு என்ற சொல் பக்திப்பாடலில் வந்தால் இப்படி சூப்பராக விளக்கம் கொடுக்கலாம்.