Search This Blog

20.9.10

நாமத்தின் வெள்ளைக்கோடுகளுக்கு நடுவில் உள்ள சிவப்புக் கோட்டின் தத்துவம் என்ன?


நாமம்!

திருநீறு, சந்தனம், லிங்கக் கட்டி - இவை எல்லாமுமே ஆபாசம், அருவருப்பு, அநாகரிகம், ஒழுக்கக் குறைவு முதலியவற்றின் கூட்டுப் புழுதான். படிக்கவும், காதால் கேட்கவும் கூச்சப்படக் கூடிய நிலைதான்.

ஆனால், இவைதான் இந்து மதத்தின் உச்சக்கட்ட மான சமாச்சாரங்களாகப் போற்றப்படுவதும், புராண, இதிகாசங்களில் ஏற்றப்படுவதும், உபந்நியாசிகள் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்வது மான சமாச்சாரங்கள்.

வைணவர்கள் என்பவர்களில் இரு பிரிவினர் உண்டு; ஒருவர் வடகலைப் பிரிவினர்; இன்னொருவர் தென்கலைப் பிரிவினர்.

வடகலைப் பிரிவினர் இரண்டு வெள்ளைக் கோடுகளையும் இணைக்கப் பர வளைவு (ஞயசயடிடய) ஒன்றினை நெற்றியில் தீட்டிக் கொள்வார்கள். தென்கலையினரோ இரண்டு வெள்ளைக் கோடுகளுக்கும் அடியில் தாங்குகாலை வரைந்து கொள்வார்கள். இன்னும் புரியும் படியாகச் சொல்லவேண்டுமானால், பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இரண்டு வெள்ளைக் கோடுகளுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடும் தீட்டப்படும்.

இதற்கான வியாக்கியானங்கள் என்ன தெரியுமா? திருநீற்றையும், சந்தனப் பொட்டையும் தவிடுப் பொடியாக்கும் ஆபாசக் கிடங்கு.

இந்த இரு பிரிவினரும் ஒருவருக்கொருவர் கலகம் விளைவித்துக் கொள்ளக்கூடிய வர்கள். வடகலைக்காரர்கள், தென்கலைக்காரர்களை நேரில் கண்டு விட்டாலோ, உடனே சுவரில் போய் முட்டிக் கொள்வார்கள். அதற்குப் பெயர் கண்டுமுட்டு என்பதாகும். ஒருவரைப்பற்றி இன்னொருவர் கேட்டுவிட்டாலும் சுவரில் போய் முட்டிக் கொள்வார்கள். இதற்குப் பெயர் கேட்டு முட்டு! என்பதாகும்.

அர்த்தமுள்ள இந்து மதத்தில் இவ்வளவுப் பெரிய ஒற்றுமைக் கோட்பாடு.

காஞ்சீபுரத்து யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற வழக்கு லண்டன் பிரிவி கவுன்சில்வரை சென்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரம் வடகலை நாமம், இன்னொரு வாரம் தென்கலை நாமம் போடுமாறு தீர்ப்புக் கூறியதுண்டு. இதுதான் இந்து மதம் - இந்து மதத்துக்குள்ளேயே வளர்க்கும் ஒற்றுமை! இந்த லட்சணத்தில் தான் இந்துக்களே ஒன்று சேர்வீர்! என்று இந்து முன்னணிகள் அறைகூவல் விடுக்கின்றன.

சரி, நாமத்தின் இந்த இரு வெள்ளைக்கோடுகளுக்கும் நடுவில் உள்ள சிவப்புக் கோடுக்கும் கூறப்படும் தத்துவம்(?) தான் என்ன?

நெற்றியில் செங்குத்தாக இருக்கும் இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகாவிஷ்ணுவின் தொடைகள் - நடுவில் இருக்கும் சிவப்புக் கோடு மகாவிஷ்ணுவின் ஆண் குறி. இதற்கு விளக்க உலக்கை என்ன தெரியுமா? இதுதான் சிருஷ்டியின் தத்துவமாம்!

சுற்றிச் சுற்றி எங்கு வந்தாலும் அர்த்தமுள்ள இந்து மதம் இந்தச் சமாச்சாரத்தில் தான் முடிகிறது என்பதைக் கவனிக்கவேண்டும்.

கேவலமாகப் பேசாதீர்கள் - நாங்கள் நெற்றியில் தீட்டியி ருப்பது சாதாரணமானதல்ல - ராமர் பாதம் என்பார்கள் பக்தர்கள் - அப்படியானால் ராமர் நெற்றியில் போட்டிருக்கும் நாமம் யார் பாதம்? என்று கேட்டார் பெரியார் - இதுவரை பதில் இல்லையே!

ஒன்றை ஒன்று மட்டும் எப்படியோ சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அப்படிப்பட்ட சிருஷ்டித் தத்துவத்தை மறைத்து ஆடை உடுத்துவது ஆண்டவன் சிருஷ்டிக்கு விரோதம். எனவே, அனைவரும் சிருஷ்டித் தத்துவத்தை மதிக்கும் வகையில் அம்மணமாக நட மாடவேண்டும் என்று சொல்லாமல், எழுதாமல் விட்டுவிட்டார் களே, அதுவரை க்ஷேமம்தான்!

---------------- மயிலாடன் அவர்கள் 20-9-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

Unknown said...

நாமம், கால்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு பெண்ணின் ஆரம்ப அடையாளம் தான்! திரிசூலமும் அதையே குறிக்கிறது! லிங்கம், இரண்டையும் குறிக்கிறது! ஆபாசம் இல்லை அது! ஆதியின் அடையாளம்!

தள்ளாத வயதில், இளம் பெண்ணை,சேர்த்துக் கொள்வதே , ஆபாசம்! அசிங்கம்!

Thamizhan said...

இளம் பெண்ணை,அவருடைய சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டது சட்டப் பூர்வமாக இயக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள.இன்பத்திற்க்காக என்றால் திருமணம் அவசியமே இல்லை என்பதை அப்போதே சொன்னார் துணிவுடன். காலகளைச் சேர்த்து வைத்துக் கொள், நடுவில் ஏதாவது வைத்துக் கொள்,அதை ஏன் என்று சொன்னால் கோபம் ஏன் வருகிறது.லிங்கத்தைக் குழந்தைகளுக்கு விளக்குவத்ற்குள்ளே போதும்,போதும்.ஒவ்வொரு அவதாரமும் எதற்கான த்ண்டனை என்பதைப் படித்தாலே போதும்,யார் யாரை யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பது உண்மையிலேயே அசிங்கந்தான்.

Unknown said...

மத அடையாளங்களைப் பற்றி,விபரமாகக் கேட்கும், பகுத்தறிவுக் குழந்தைகள், தான் எப்படிப் பிறந்தனர் என்று கேட்பதில்லை போலும்!

இளம் பெண்ணைச் சேர்த்துக் கொண்ட போது, கட்சியில் தலைவர்களுக்கா பஞ்சம்? ஆபாசம் என்று கருதியதால் தானே, தம்பிகள் தனிக் கழகம் கண்டனர்! உங்கள் கூற்றுப்படி,இளம்பெண்ணே விரும்பிச் சேர்ந்தாலும், அறிவுறுத்தி விலக்காமல், தன் சுயநலனுக்காக அவரின் வாழ்க்கையை வீணாடிப்பதும் ஆபாசமே! அசிங்கமே!

நம்பி said...

//நாமம், கால்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு பெண்ணின் ஆரம்ப அடையாளம் தான்! திரிசூலமும் அதையே குறிக்கிறது! லிங்கம், இரண்டையும் குறிக்கிறது! ஆபாசம் இல்லை அது! ஆதியின் அடையாளம்!

தள்ளாத வயதில், இளம் பெண்ணை,சேர்த்துக் கொள்வதே , ஆபாசம்! அசிங்கம்! //

எது அசிங்கம் ஆபாசம்....விருப்பத்துடன் மணந்துகொள்வதா...? ஆணும் ஆணும் திருமணம் புரிந்து கொள்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் புரிந்து கொள்வதையே தவறு இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. மூதாட்டி கூடத்தான் இளைஞரை திருமணம் செய்துகொண்டது. சச்சின் டெண்டுல்கர் மனைவி சச்சினை விட வயது மூத்தவர் தான்.

துறவி என்று சொல்லிக்கொண்டு, தண்டத்தை வைத்துகொண்டு காம லீலையில் ஈடுபட்ட சங்கராச்சாரியார் செய்தது புண்ணியச்செயலா..? அதுவும் விருப்பமில்லாத இன்னொரு பார்ப்பன பெண் எழுத்தாளரையும் துணைக்கு அழைத்து துன்புருத்தினாரே ஊத்தாச்சாரி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி....இந்த எழவுக்கு ஒரு பெண்ணை திருமணம் புரிந்து கொண்டிருக்கலாமே....ஏன்..? இரண்டு பெண்களை கூடத்தான்.....திருட்டுத்தன காமலீலை எதற்கு...?.இன்னொரு அந்த சங்கரமடத்தில் பல கொலைபட்டியல்கள்....கிடப்பில் இருக்கின்றன.

மனுவியாயிருந்தாலும் ஒரு பெண்ணின் விருப்பமில்லாபல் தொடுவது அனைத்துமே குற்றம்.

தர்மம் போதித்துவிட்டு சங்கரராமனை கொலைசெய்த செயலையா...கருணை மிக்க செயலாக எடுத்துக்கொள்ள முடியும்...?

லிங்கம் இருக்கும் கோயில் கருவறையை காம அறையாக மாற்றி அதையும் செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு அணு அணுவாக (மிகக் கடின வேலையான மணியாட்டும் வேலையை செய்யும் பார்ப்பனன்) ரசித்து ரசித்து சுவைத்து பெருமைப்பட்டுகொண்ட பூசாரி பார்ப்பனனின் செயலையா...? நன்செய்ல் என்று கூற முடியும்? இதை கண்ணியமிக்க செயலாக எந்த மனிதனும் கூறமாட்டான் பார்ப்பானைத்தவிர.....இதற்கு காரணம் அவன் உருவாக்கிய லிங்க கடவுளின் ஆபாச புராண்க்கதைகள் தான்...எதற்காக? இந்த காமலீலையை கோயிலில் பயன்படுத்துதற்காகத்தான். அயோக்கிய செயலை ஞாயப்படுத்துவதற்காகத்தான்...

//மத அடையாளங்களைப் பற்றி,விபரமாகக் கேட்கும், பகுத்தறிவுக் குழந்தைகள், தான் எப்படிப் பிறந்தனர் என்று கேட்பதில்லை போலும்!//

இந்த உலகில் பிறக்கின்ற குழந்தைகள் அனைவருமே பகுத்தறிவு வாதிகள் தான்....அதற்கு அந்தந்த சாநிகளின் பெற்றோர்கள் ஊற்றும் நஞ்சுக்கள் தான் இந்த மூடநம்பிக்கைகள்...அதை முதலில் தெரிந்து கொள்ளும். சாமி கண்ணை குத்தும் வடையே எடுக்காதே என்று குழந்தையிடம் சொன்னால்....ஐ போட்டாவில இருக்கிற சாமி எப்படி வந்து கண்ணை குத்தும்?, புருடா விடாதே அம்மா! என்று தான் சொல்லும், சொல்லிக்கொண்டிருக்கிறது... ...இதற்கு பார்ப்பன பெற்றோரும், மூடநம்பிக்கை திராவிடர்களும், இந்த சமூகமும் கதை கட்டி குழந்தையிலேயே திணிக்கும் செயல்கள்தான்...சாதியவெறிகள் மதவெறிகள் எல்லாம்..உம்முடைய பெற்றோரும் அப்படியே.....முதலில் இதை புரிந்து கொள்ளும். உமக்கு வால் நட்சத்திரம் வந்து இதையெல்லாம் போதிக்கவில்லை...போதித்தஅது என்று புளுகினாலும் கவலையில்லை...

உங்க அம்மா அப்பா கட்டிவிட்ட கதைகள் தான் அதை எல்லோரிடமும் வந்து நம்பும்படியாக அவுக்கும் வேலையைத்தான் தடுக்கிறோம்.
தடுத்துக்கொண்டேயிருப்போம் நீர் இன்னும் திருந்தாமல் அவுத்துக்கொண்டேயிரு....