Search This Blog

19.9.10

நெற்றியில் சந்தனம் வைத்துக்கொள்வதுபற்றி ....


சந்தனம்

சைவர்கள் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கின்றனர்; வைணவர்கள் நெற்றியில் சந்தனமும், நாமமும் தீட்டிக் கொள்கின்றனர்.

இவற்றிற்கெல்லாம் தத்துவார்த்த முலாம்களைப் பூசுகின்றனர். கூறும் காரணங் களை நோக்கும்போது குமட்டிக் கொண்டுதான் வருகிறது.

நெற்றியில் சந்தனம் வைத்துக்கொள்வதுபற்றி வாசுதேவ உபநிஷத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

கிருஷ்ணன் கோபிகாஸ் திரீகளை தழுவிக் கலந்து புணர்ந்தபோது, அப்பெண் களின் ஸ்தனங்களிலிருந்தும் (மார்பகம்) கிருஷ்ணன் உடலில் ஒட்டிய பின், அவர்கள் கழுவுவதால் வழிந்தோடிய சந்தனமே கோபி சந்தனம் என்று கூறப் படுகிறது.

சுயமரியாதை இயக்கம் நாட்டில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது, வைதிகர்கள் நடுநடுங்கிப் போனார்கள். திருநீறு, சந்தனம், நாமம்பற்றி புராணங்கள் என்னென்ன கூறுகின்றன என்பதை ஆதாரங்களுடன் புட்டுப் புட்டு வைத்தனர்.

நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பணம் போட்டு இதற்காகவென்றே பத்திரிகை ஒன்றையும் தொடங்கினர். அதற்கு சிவநேசன் என்று பெயர்.

அதன் முதலாவது ஆண்டு 14 ஆவது மலர் அனுபந்தத்தில் கோபிசந்தனம் என்ற பெயரில் எழுதப்பட்டதுதான் மேலே கூறப்பட்ட தகவல் ஆகும்.

பகுத்தறிவுவாதிகள், திராவிடர் கழகத்தினர் இட்டுக்கட்டி எழுதிய கைச் சரக்கல்ல.

ஒவ்வொன்றிற்கும் பக்தியில் குளித்து மூழ்கி மஞ்சள் பூசிக் கொண்ட பேர்வழிகளால் எழுதப்பட்ட புராணங்களின் ஆதாரம் உண்டு. இந்து மதப் புராணங்களைத் தொட்ட இடங்களில் இருந்தெல்லாம் காமக்குரூரம்தான் காது கிழிய குமுறி எழுகிறது. பச்சை பச்சையான வக்கிரப் புத்திதான் வட்டமிட்டுச் சுழலுகிறது.

அமெரிக்காவுக்கு விவேகானந்தர் சென்றாரே - அப்பொழுது மாக்ஸ் முல்லருடன் விவாதம் செய்ய நேர்ந்தது.

இந்துக்களின் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்துவிடும் என்று மாக்ஸ் முல்லர் கூறினாராம்.

அமெரிக்காவிலிருந்தபோது விவேகானந்தர் சொன்னதாகக் கூறப்படும் ஒரு கருத்து இன்றளவுக்கும் பலராலும் எடுத்துக்காட்டப்படுகிறது.

ஏ, பிராமணர்களே, சர்ப்பம் கடித்துவிட்டால், மந்திரத்தால் அந்தச் சர்ப்பமே விஷத்தை இழுக்குமாம் - அதுபோல, நீங்கள் நம் தேசமெல்லாம் கெடுக்கும் வைதிக விஷத்தைப் பரப்பி விட்டீர்கள். நீங்களே இந்த விஷத்தை திருப்பி வாங்கிட வேண்டும். உங்கள் வைதிகக் கொடுமையை உங்கள் மதத்தினின்றும் எடுத்து விட்டீர்களே யானால் உங்கள் மதமே உயர்ந்தது என்று அமெரிக்கா விலிருந்து விவேகானந்தர் கூறினார்.

அமெரிக்காவுக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தின் சீலத்தை எடுத்துப் பரப்பினார், சிலம்பம் ஆடினார் என்று கோட்டுவாய் ஒழுகப் பேசும் பார்ப்பனர்கள் விவேகானந்தரின் அறைகூவலை இதுவரை ஏற்றார்கள் இல்லை.

வழிபடுவது என்றால் சிவலிங்கத்தை. சிவலிங்கம் என்றால் என்ன என்று கேட் டால், அதற்கொரு லிங்கபுராணம்.

தாருகாவனத்து ரிஷிப் பத்தினிப் பெண்களை சிவன் கற்பழித்தானாம். ரிஷிகள் சாபமிட்டதால் சிவனின் ஆண்குறி அறுந்து வீழ்ந்ததாம். அதனை தன் குறியால் பார்வதி தாங்கினாராம். அதுதான் சிவலிங்கமாம் - அதைக் குப்புற விழுந்து விழுந்து வணங்க வேண்டுமாம்.

கேட்டால், அதற்கொரு தத்துவார்த்தம் - ஜீவராசிகளின் உற்பத்தித் தத்துவம் அதற்குள் அடங்கிக் கிடக்கிறதாம்.

நுரையீரல் எரிந்து போய் விடும் என்று மாக்ஸ் முல்லர் கூறியது இதனால்தானோ!

---------------------- மயிலாடன் அவர்கள் 16-9-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: