Search This Blog

8.9.10

தமிழர் என்பது மொழிப் பற்று. திராவிடர் என்பது இனப்பற்று.

தமிழன் என்று சொல்லும்போது பெருமைப்படுகிறோம்
திராவிடன் என்று சொல்லும்போது உரிமை பெறுகிறோம்
இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் முழக்கம்

{தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேராசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து குடிஅரசு தொகுப்பு நூல்களை வழங்கினார் (சென்னை- பெரியார் திடல், 7.9.2010).}

தமிழன் என்று சொல்லும் போது பெருமையும், திராவிடன் என்று சொல்லும் போது உரிமை உணர்வும் பெறுகிறோம் என்றார் தமிழக நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். நேற்று (7.9.2010) சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தைத் தொடங்கி வைத்து தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

எனது வாழ்க்கையில் முக்கியமான நாள்

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று உணர்வுபூர்வமாக அழைத்த மரியாதைக் குரிய வீரமணி அவர்களுக்கு எனது உளமார்ந்த மகிழ்ச்சியை, நன்றியைத் தெரிவித்துக் கொள் கின்றேன்.

எனது பொது வாழ்க்கை வரலாற்றில் இதை ஒரு மிக முக்கியமான நாளாக நான் கருதுகின்றேன். நிலைகுலைந்து போன திராவிடத்தை, வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறவேண்டும் மேலும் வலிவூட்ட வேண்டும், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீரமணி அவர்களுடைய வழிகாட்டுதலோடு அவர் புரவலராக இருந்து கொண்டு இந்த திராவிடர் வரலாற்று மய்யம் இன்றைக்குத் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

வீரமணி ஆற்றி வருகின்ற பணி

வீரமணி அவர்கள் ஆற்றிக் கொண்டு வருகின்ற பணி ஆழமான பணி, அழுத்தமான பணி! ஆகவே உள்ளபடியே இதில் கட்டாயம் இடம் பெற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். நிச்சயமாக இந்த அமைப்பு வளரும். நல்ல ஒளிவிடக்கூடிய வகையிலே திகழும்; ஏற்றம் பெறும்.

அந்தக் காலத்திலேயே கேள்வி

தமிழர்கள் என்ற பெயர் இருந்தால் போதாதா? திராவிடர் கழகம் என்ற பெயர் இருக்க வேண்டுமா? என்று அந்தக் காலத்திலேயே சிலர் என்னிடம் கேட்டதுண்டு. பார்ப்பனர்களை விலக்கினால் இருப்பது அவர்கள்தான் திராவிடர்கள் என்று சொன்னேன்.

பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிக்க வேதங்களைப் பரப்பும் கூட்டத்தை ஒழிக்கப் புறப்பட்ட இயக்கம், திராவிடர் இயக்கம்.

தமிழன் என்று சொல்லுவதிலே நாம் பெருமை பெறுகிறோம். திராவிடன் என்று சொல்லுவதிலே நாம் உரிமை பெறுகிறோம்.

பெரியார் ஏற்படுத்திய உணர்வு

தந்தை பெரியார் அவர்கள் ஏற்படுத்திய உணர்வுதான் நீண்ட நெடுங்காலமாக இந்த மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு ஆராய்ச்சி செய்ய வந்த ஜெர்மன்காரர்கள் எல்லாம் பார்த்தது வடமொழியைத்தான். வடமொழிக்கு முன்பே இருந்தது தமிழ் மொழி.

மாக்ஸ் முல்லர் பார்த்தது

பிராமணர்கள் வடமொழியை உயர்ந்த மொழி என்று சொன்னார்கள். தேவ பாஷை என்று சொன்னார்கள். இதைப் பார்த்த மேலை நாட்டு அறிஞர் மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி யைத்தான் பார்த்தார்கள். அதுதான் அவர்களுக்குத் தெரிந்த மொழியாக, அறியக்கூடிய மொழியாக அன்றைக்கு இருந்தது. வடமொழிதான் சிறந்த மொழி என்று சொல்லி மாக்ஸ் முல்லரே வேதத்தை மொழி பெயர்த்தார்.

நீதிமன்றங்களில் சமஸ்கிருதம்

நீதிமன்றங்களில் அன்றைக்கு வாதாடக்கூடிய மொழிகளாக பார்சி மொழி, சமஸ்கிருதம்தான் இருந்தன. பார்சி மொழி முஸ்லிம்களுக்காகவும் சமஸ்கிருத மொழி இந்து மக்களின் எண்ணத்தை, கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லக்கூடிய மொழி யாகவும் அன்றைக்கு நீதிமன்றங்களிலே இருந்தன.

எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் மூலம். இதிலிருந்து தான் தமிழ், தெலுங்கு மலை யாளம் போன்ற மொழிகள் தோன்றின என்று ஒரு கருத்தைப் பிரச்சாரத்தின் மூலம் பரப்பினார்கள்.

பிராமணர்களைத் தவிர மீதி யாரும் மனிதர்கள் இல்லை என்று பிராமணர்களே சொன்னார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய ஆதிக்கம் இருந் தது. பிரம்மா முகத்தில் பிறந்தவன் பிராமணன் என்றால், மற்றவன் தொடையில் பிறந்தவன் என் றால் தொடையையா பார்த்துக் கொண்டிருப் பார்கள்?

சமஸ்கிருத உதவி இல்லை என்றால் தமிழ் மொழி இயங்காது என்று சொன்னார்கள்.

இந்தியா - ஆரிய நாடாம்!

இந்தியா என்றால் அது ஆரிய நாடு என்று சொன்னார்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆராய்ச்சியில் அந்தக் காலத்தில் தமிழ் மொழி இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

தமிழ்மொழி ஒரு தனி மொழி. அது ஒரு தனி குடும்பம். அது திராவிடக் குடும்பம் என்பதை 1858ஆம் ஆண்டிலே கால்டுவெல் சொன்னது ஒப்பியன் மொழி நூல் வாயிலாக நிலை நாட்டப் பட்டிருக்கிறது.

ஜம்சுகிருத மொழி

நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் வடமொழியைப் புறக்கணித்து தமிழ் மொழிக்காகப் பாடுபட்டவர்கள். அவர் பேசுகிற பொழுது வடமொழியைத் தாழ்த்தி - புரியும்படி கேலியாகப் பேசுவார். ஜம்சுகிருத மொழி அது உயர்ந்தவர்களின் மொழி என்று சொல்லப்படுகிறது.

அந்த ஜம்சு கிருத மொழி செத்துப்போன மொழி என்று பேசும்பொழுது சொல்லுவார்.

நானும், நாவலரும் ஒன்றாக படித்த காலத்தில்

நானும், நாவலர் நெடுஞ்செழியனும் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்த காலம். அவர் மன்றத் தலைவராக இருந்தார், நான் செயலாளராக இருந்தேன். நாவலர் சோமசுந்தர பாரதியார் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபொழுது வடமொழி ஜம்சுகிருதம் செத்துப்போன மொழி என்று சொன்னார்.

ஒருவர் திடீரென எழுந்து பேச அனுமதி கேட்டார். நாவலர் சோமசுந்தர பாரதியும் அனுமதி தந்தார். அவர் சொன்னார் -

சமஸ்கிருத மொழி பிறக்கவே இல்லையே, பிறந்தால் தானே செத்துப்போவதற்கு? என்று இப்படி ஒரு பதிலைச் சொன்னார்.

சமஸ்கிருதம்-பிச்சைப் பாத்திரம் போன்றது

சமஸ்கிருத மொழி பாலி மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட மொழி, அது பிச்சைப் பாத்திரம் போன்றது. பார்ப்பனிய ஆதிக்கத்தால் நாட்டை ஆண்டது.

புத்தர், மகாவீரர்கூட தமிழ் வழியிலேதான் வந்தவர்கள்தாம். பிராமணர்கள் மேல் ஜாதிக் காரர்கள் என்பதை புத்தர் ஒத்துக் கொள்ளவில்லை. கடவுளை ஏற்காதவர் புத்தர்.

ஹத்தி தும்பா கல்வெட்டு

ஹத்தி தும்பா என்ற கல்வெட்டு புவனேஸ்வருக்கு அருகில் உள்ளது. கி.மு. 175ஆம் ஆண்டுகளுக்கும் முன்பு எழுதப்பட்ட கல்வெட்டு; தமிழ் மூவேந்தர்களின் கூட்டணியை உடைத்தது. கரவேலா என்ற மன்னன்தான் என்று சொன்னார்.

இவர் சொன்னதை நினைத்துப் பார்த்தேன். மூவேந்தர் கூட்டணியை உடைத் தவன் கரவேலா.

அதற்குப் பிறகுதான் சிலப்பதிகாரம் தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் கனகவிசயன் என்ற பிராமணன் தலையில் கல்லைக் கொண்டு வந்தான் சேரன் செங்குட்டுவன் என்றிருக்கிறது. தனித்தனியே இப்படி பார்ப்பனர்களை பழிவாங்கியிருக்கலாம்.

கூட்டணியை உடைத்தாலும், தனிப்பட்ட முறையிலே வெற்றி பெறுவான் தமிழன் (பலத்த கைதட்டல்).

புத்தரை விட தெளிவானவர் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் சொன்ன கருத்து களைப் பார்த்தால் உலகத்தில் இது வரை யாரும் அந்த மாதிரி, அந்த அளவுக்கு கருத்துச் சொல்லியிருக்க முடியாது. திருவள்ளுவன் ஒரு தமிழன். அவன் ஓட்டு கேட்காதவன். அவன் இந்த ஜாதி என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறள் நூல் தான் தமிழுக்கே உள்ள தனிப் பெருமை.

திருக்குறள் மனித குல மேம்பாட் டிற்கான நூல். மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே எழுதப் பட்ட நூல். இல்லற வாழ்வில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற கருத்து களைச் சொல்லிக் கொடுத்த நூல்.

ஆரியர்கள் எல்லாம் செல்வாக்குப் பெறாத காலத்தில் அவர் இருந்திருக் கிறார். திருக்குறளை எழுதியிருக் கின்றார். ஆரியத்திற்கு எதிரானது திராவிடம். இந்து மதத்தைப் பரப்பு வதுதான் ஆரியத்தின் நிலை.

தந்தை பெரியார் ஆரியத்தை பார்ப்பனர்களை புயலென எதிர்த்தார். எனக்கு சோறு எங்கே என்று கேட்டார்; என்னுடைய பங்கு எங்கே என்று கேட்டார். இல்லை என்றார்கள். பார்த்தார், கடையையே இழுத்து மூடு என்று சொல்லி மக்களுக்காகப் போராட்டம் நடத்தியவர்.

சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதாருக்கு நடந்த கொடுமை! வ.வே.சு. அய்யருக்கு எதிர்ப்பு தெரிவித்தார் பெரியார்.

தமிழர்களை மனித நேயத்தோடு நடத்த வேண்டுமென்பதற்காக தோற்று விக்கப்பட்ட இயக்கம் தான் திராவிடர் இயக்கம்.

தமிழ்ச் செம்மொழி என்பதையும், ஆரிய மொழிகளை விட உயர்ந்த மொழி என்பதையும் நிலைநாட்டியவர் கலைஞர்.

ஃபாதர் ஹீராஸ் வெளிநாட்டுக் காரர். அவரிடம் நாங்கள் கையொப்பம் (ஆட்டோகிராப்) கேட்ட பொழுது அவர் என்ன எழுதிக் கொடுத்தார் என்றால், நான் ஸ்பெயின் நாட்டி லிருந்து வந்த திராவிடன் என்று எழுதிக் கொடுத்தார்.

இந்த அமைப்பு தமிழர்களுக்கு திராவிடர் வரலாற்றை எடுத்துச் சொல்லக்கூடிய அமைப்பாகத் திகழும். நாமெல்லாம் விழிப்போடு இருக்க வேண்டும். கூட்டாக இருந்து தமிழ் மக்களுக்காக திராவிடர் வரலாற்றை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு வீரமணி அவர்கள் நங்கூரமாக இருக்கிறார். நமது தமிழக முதல்வர் கலைஞர் வெற்றிக் கொடியைப் பறக்கவிடுபவராக இருக்கிறார்.

- இவ்வாறு பேராசிரியர் தனது உரையில் குறிப்பிட்டார்.


*************************************************************************************



வரலாற்றுக்கு எதிரான திரிபுவாதங்களுக்கு ஆதாரப்பூர்வ பதிலடி கொடுக்கப்படும்!
தமிழர் தலைவர் பேச்சு

இனி திரா விடர் வரலாற்றுக்கு, இயக்கத்திற்கு எதிரான திரிபுவாதங்களுக்கு ஆதா ரப்பூர்வமான பதிலடி கொடுக்கப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

சென்னை-பெரியார் திடலில் நேற்று 7.9.2010 மாலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

திராவிடர் வரலாற்று ஆய்வு மய் யத்தை நமது நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் தொடங்கி வைக்க இருக் கின்றார். சரியான தகவலை உலகுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். என்பதற் காக இந்த மய்யம் உருவாக்கப்பட் டிருக்கிறது. நீண்ட காலமாக நமக்கு இருந்த குறைபாடு ஓரளவுக்கு தணிந் திருக்கிறது. வரலாற்றைப் பதிவு செய்கிறபொழுது திரிபு வாதங்களுக்கு நாம் தெளிவான பதிலை சொல்லியாக வேண்டும்.

படித்த மக்களிடையே ஊடகங்கள் வாயிலாகவும், இணையதளம் வாயிலா கவும், தவறான செய்திகளைப் பரப்பு கிறார்கள். அதற்கெல்லாம் இந்தத் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் மூலம் நாம் சரியான பதிலைத் தர வேண்டும்.

திராவிடர் வரலாற்றுக் கருத்துகள் எல்லாம் ஆவணமாக வரும். இன் றைக்கு நடைபெறுகின்ற இந்தத் திரா விடர் வரலாற்று ஆய்வு மய்ய நிகழ்ச்சிகள், இங்கே தலைவர்களால் ஆற்றப் படுகின்ற உரைகள் எல்லாம் பெரியார் வலைக்காட்சி மய்யத்தின் மூலமாக உலகம் முழுவதும் பரப்பப்படும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங் கப்பட்டது 1925ஆம் ஆண்டு. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதும் அதே 1925ஆம் ஆண்டு. இரண்டும் முரண்பட்ட இருவேறு இயக்கங்கள். திராவிடத்தை அழிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது-இந்துத்துவா. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழா நடைபெறுகிறது. ஒரு சிறு செய்தி கூட பத்திரிகையில் நாளைக்குப் போடமாட்டார்கள். ஆனால் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் ஒரு 7 பேர் சேர்ந்தால் போதும், அதை பெரிது படுத்தி ஆங்கில பத்திரிகை முதல் தமிழ்ப்பத்திரிகைவரை போடுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் பேசுவது உலகுக்குத் தெரிய வேண்டுமாம். ஆகவே இந்த மய்யம் சரியான தருணத்தில் தொடங்கப்பட்டிருக் கிறது. மதவெறி, ஆர்.எஸ்.எஸ். சக்திகள் எல்லாம் திராவிடர், திராவிடம் என்ற பெயரே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

1944ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம், நீதிகட்சி ஆகிய இரண்டை யும் இணைத்து சேலத்தில் தந்தை பெரியாரால் திராவிடர் கழகம் தோற்று விக்கப்பட்டது. ஒரு திருப்புமுனை யாகும்.

1944இல் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் சண்டே அப்சர்வர் பி.பால சுப்பிரமணியம் அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். அவருடைய உரையை தமி ழாக்கம் செய்தவர் இங்கே அமர்ந் திருக்கின்ற நமது பேராசிரியர் ஆவார்கள். நான் 11வயது சிறுவன். அந்த மாநாட்டிலே கலந்துகொண்டவன். அந்தக் காட்சிகளை எல்லாம் மனதிலே பதிய வைத்துக் கொண்டவன்.

அய்யா அவர்கள் சேலம் மாநாட்டி லேயே இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தக் கூடிய அளவிலே பேசி யிருக்கின்றார். தமிழர் என்பது மொழிப் பற்று. திராவிடர் என்பது இனப்பற்று.

சிந்துவெளி நாகரிகத்தை எழுதுகிறவர்கள். திராவிடர் நாகரிகத்தை மறைக்கிறார்கள். எனவே இதற்கு சரியான நேரத்திலே, சரியான ஆய்வு மூலமாக பதிலடி கொடுப்போம்.

அண்ணல் அம்பேத்கர் சொல்லி யிருக்கின்றார். அசுரர்கள் என்றாலும், தமிழர்கள் என்றாலும், நாகர்கள் என்றாலும், திராவிடர்கள் தான். ஒரு குலத்துக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்று சொல்லுவது ஆரியம். அனை வர்க்கும் அனைத்தும் கிடைக்க வேண் டும் என்று சொல்லுவது திராவிடம். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு கொடுங்கையூர் தங்க. தனலட் சுமி ரூ.10 ஆயிரம் வழங்கியிருக்கிறார்.

இது போன்று பலரும் பொருளு தவி வழங்க வேண்டும் . தக்காரைக் கொண்டு இந்த மய்யம் தொடங்கப் பட்டிருக்கிறது. -இவ்வாறு அவர் பேசினார்.


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் நோக்கங்கள் தமிழர் தலைவர் விளக்கம்

1. திராவிடர் வரலாற்று ஆய்வுக்கு ஊக்கமளிப்பது

2. திராவிடர் வரலாற்று ஆய்வாளர் களுக்குப் பாராட்டு

3. திராவிடர் வரலாறு பற்றிய தவறான கருத்துகளுக்கும், திரிபுவாதங்களுக்கும் மறுப்பு

4. திராவிடர் வரலாறு பற்றிய கருத்தரங்கங்கள்

5. திராவிடர் வரலாறு பற்றிய ஆவணத் தொகுப்பு

6. திராவிடர் வரலாற்றைக் கூற பருவ இதழ் நடத்துதல் (Journal of Dravidian
Historical Research)

7. திராவிடர் வரலாற்றில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ளவர்களை உறுப்பினர் ஆக்குதல் (மய்யத்தின் முடிவுக்குக் கட்டுப் பட்டது).

8. திராவிடர் வரலாறு பற்றிய அரிய நூல்களை மறுபதிப்புச் செய்தல், புதிய ஆய்வு நூல்களை வெளியிடுதல்.

இவைதான் திராவிடர் ஆய்வு மய்யத் தின் முக்கியக் குறிக்கோள் - நோக்கங் களாகும்.

(சென்னை-பெரியார் திடலில் 7.9.2010 அன்று இரவு நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)

-------------------- “விடுதலை” 8-9-2010



1 comments:

Thamizhan said...

திராவிடப் பாரம்பரியத்தைத் திருடியதுமல்லாமல் அதைக் குழி தோண்டிப்
புதைத்து விட்டது ஆரியம்.தமிழே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதானனென்று
தமிழறிஞர்களுக்கே காதில் பூச்சுட்டி விட்டது மட்டுமல்லாமல் அதை
பெருமையாகவும்நினைக்க வைத்து விட்டார்கள்.இன்றளவும் தமிழில் என்ன
இருக்கிறதென்று தெரியாத"மேல் தாவிகள்" கீதையில் சொல்லப்படாததை எழுதி எது
நன்றாக நடக்குமோ அது நன்றாகவே நடக்கும் என்று நான் என் மூளையை அடகு
வைத்துவிட்டேன் என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். மொழிகள் ஆராய்ந்து
அதில் உள்ள் நல்லவற்றை உலகுக்குச் சொல்லட்டும்,அடுத்தவர் பொருளை
திருடிவிட்டு அது என்னுடையதுதான் அவனுக்கு ஒன்றுமே கிடையாது என்று
ஏமாற்றுவது ஒழியட்டும்.
வெறும் அரசியல் பேசி இந்தக் கூற்றுகளில் உள்ள உண்மையை மறைக்க முயலாதீர்கள்.