Search This Blog

22.9.10

நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்களுக்கு இந்த அய்தீகம் தெரியுமா?


குங்குமம்

இந்து மதத்தில் அ தொடங்கி ஃ முடிய உள்ள எல்லாச் சமாச்சாரங்களும் ஆண் - பெண் உடற்சேர்க்கை பற்றிதான்! தனிமையில் பாதுகாக்கப்படும் நாகரிகமாகக் கருதியவற்றை நடுவீதியில் அம்மணமாக்கிக் கொண்டாடு வதுதான் இந்து மதத்தின் இழிவும் - ஆபாசமும் நெளியும் தத்துவார்த்த சாக்கடையாகும்.

திருநீறு என்றாலும், சந்தனம் என்றாலும், நாமம் என்றாலும், இத்தியாதி இத் தியாதிதான். பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்கிறார்களே - அதன் சமாச்சாரம்தான் என்ன?

சிவபெருமான் என்ற இந்து மதக் கடவுளின் இடுப்பில் பார்வதியும், தலையில் கங்கையும் மனைவிகளாக உள்ளனர் - தலையில் உள்ள கங்காதேவி மாதவிடாயின்போது கசிந்த ரத்தம் சிவபெருமான் நெற்றியில் வடிவதுதான் இந்தக் குங்குமமாம்.

இந்தச் சிவபெருமான் இருக்கிறானே... அசல் காட்டு மிராண்டி. இதுகுறித்து தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

புலித்தோல் அரைக்கு இசைத்து

வெள்ளருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடி பூசி

கொன்றைப் பூச்சூடி

தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி

எலும்பு வடம் தாங்கி

மான், மழு, ஈட்டி,

சூலம் கைப்பிடித்து

கோவண ஆண்டியாய்

விடை(மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக்கொண்டு

பேயோடு ஆடுகிறவன்

காட்டுமிராண்டியாய் இல்லாமல்

நகரவாசி - நாகரிகக்காரனாக

இருக்க முடியுமா?

(விடுதலை, 18.7.1956)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளதில் ஒரு கால் புள்ளியை மறுக்கத்தான் முடியுமா?

அப்படிப்பட்ட காட்டு மிராண்டிக் காலத்தில் எந்த அளவுக்கு அறிவு இருந்ததோ அந்த அளவுக்குத்தான் இது போன்ற குங்குமக் கதைகளைப் புனைந்திருப்பார்கள்.

புராணப் பிரசங்கிகள் என்ன கூறுகிறார்கள்?

மலட்டு நிலத்தை மாதவிலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின், விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாதவிலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்துவது என்பது உண்மையே! இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளையில் ஏற்படும் இரத்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்னும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக பெண்கள் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.

(செ. கணேசலிங்கம் எழுதிய பெண்ணடிமை தீர... எனும் நூலிலிருந்து)

எப்படி இருக்கிறது இந்து மதத்தின் ரசனையும் - புத்தியும்1

இப்பொழுது நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு இந்த அய்தீகம் தெரியுமா என்றால், தெரியாது தான். உடுத்திக் கொள்ளும் உடை, செருப்பு இவற்றிற்குப் பொருத்தமாக வண்ண வண்ணப் பொட்டுகளை நெற் றியில் வைத்துக் கொள்கின்றனர்.

இதுகுறித்து பிரபல தோல் நோய் வல்லுநர் மருத்துவர் தம்பையா கூறுவதைக் கவனிக்கவேண்டும்.

நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். 15 வருடங்களுக்கு முன் பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சுது. நவீன உலகத்தில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்ஸ் கலக்கப்படுகின்றன - இதனால் தோலில் பிரச்சினைகள் ஏற் படுகின்றன. முதலில் குங்குமம், விபூதி இடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குவேன் என்று பிரபல மருத்துவர் தம் பையா கூறியுள்ளார் (ஜூனியர் விகடன், 26.10.1997).

குங்குமக் கதை எதில் தொடங்கி எதில் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா?

------------ மயிலாடன் அவர்கள் 22-9-2010 “விடுதலை” யி லெழுதிய கட்டுரை

5 comments:

பாலா said...

இந்து பெண்கள் அனைவரும் தம் குங்கும பொட்டுகளை எடுத்து விட வேண்டும் என்று சொல்கிறாரா திரு மயிலாடன் அவர்கள்?

சுதாகர் said...

If you don't mind, why don't you forward this information to our CM's family. Since CM is following Periyar's speech, let us see whether they are following this or not. If they follow, then, we can follow as well.

ஒசை said...

வாங்க, டாஸ்மாக் பங்காளி. உடன்பிறப்பின் சரக்கு அடிச்சா சங்கு தான். அதப்பத்தி கொஞ்சம் விழிப்புணர்வு ஊட்டுங்க. பெரியாரே சொன்னாரு. கொஞ்சமா குடிச்சா தப்புல்லன்னு ஜகா வாங்காதிங்க. குங்குமம் ஜுஜுபி மேட்டரு.

ம.தி.சுதா said...

சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

நம்பி said...

//பாலா said...

இந்து பெண்கள் அனைவரும் தம் குங்கும பொட்டுகளை எடுத்து விட வேண்டும் என்று சொல்கிறாரா திரு மயிலாடன் அவர்கள்?
September 22, 2010 6:09 PM //

திராவிடப் பெண்கள் அனைவரையும்......(இப்போதைக்கு இது நடைபெறட்டும்)