Search This Blog

26.7.10

அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்புரிவாயாக!


பக்தி இலக்கியம்

பக்தி இலக்கியங்கள் ஆற்றிய பங்கு சமீப காலங்களில் மறுக்கப்பட்டு, மறைக் கப்பட்டு வருகிறது என்று மூக்கால் அழுதிருக்கிறார் பா.ஜக.வின் முன்னாள் தமிழகத் தலைவர் திருவாளர் இல.கணேசன் அய்யர்வாள்.

முதலில் ஒரு கேள்விக்கு அவர் பதில் சொல்லித் தீர வேண்டும். பக்தி இலக்கி யங்கள் தமிழில் உண்டு என்று பெருமை பேசும் அவர், அந்தப் பக்தி தெய்வத் தமிழ் கோவில் குடமுழுக்குச் செய்யும்போது பயன்படுத்தப் படக்கூடாது என்று சவுண்டிப் பார்ப்பானிலிருந்து சங்கராச்சாரியார் வரை அடம் பிடிக்கிறார்களே அதற்கு என்ன பதில்?

கரூரையடுத்த திருமுக் கூடலில் உள்ள மணி முத்தீசுவரர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்தார்கள் என்ற காரணத்துக்காக தோஷமாகி விட்டது என்ற கோவிலை மூன்று நாள் இழுத்துச் சாத்தி, தீட்டுக் கழிக்கும் சடங்குகளைச் சாங்கோ பாங்கமாகச் செய்த பிறகுதானே மீண்டும் கோவிலைத் திறந்தார்கள்? காஞ்சீபுரம் சங்கராச்சாரி யாரும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாரே! பக்தி வளர்த்த தமிழைப் பற்றி அப்பொழுது இல.கணேசன்கள் திருவாய் மலராதது ஏனோ?

சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடினார் ஓதுவார் ஆறுமுகசாமி என்பதற்காக, அவரை தீட் சிதப் பார்ப்பனர்கள் அடித்து உதைத்தார்களே அப்பொழுது ஏன் சமயம் வளர்த்த தமிழுக்காக வக்காலத்து வாங்கி வஸ்தாத்து செய்ய வில்லை இல.கணேசன்?

சமயம் எனும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

மதத்திலிருந்து தமிழைப் பிரித்துவிட வேண்டும் என்றார் தந்தை பெரியார். ஆனால் பார்ப்பனர்கள் என்ன சொல்லுகிறார்கள்? தமிழில் தான் பக்தி சொட்டு சொட்டு என்று சொட்டுகிறது சமயம்தான் தமிழை வளர்த்தது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே கோவில்களில் வழிபாட்டுக்குரிய மொழியாகத் தமிழ் இருக்கக் கூடாது என்பதிலும் குட முழுக்குகள் தமிழில் நடத்தப்படக்கூடாது என்பதிலும் மிகத் தெளிவாக உறுதியாக இருக்கிறார்களே!

சமயம் தமிழை வளர்த்தது என்பதற்கு ஓர் உதாரணம் ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் ஒன்று போதாதா?

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்

திண்ணகத் திருவால வாயருள் பெண்ணகத்தெழில் சாக்கியர் பேயமண்

பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!

மதுரையில் கோவில் கொண்ட எம்பெருமானே! பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்புரிவாயாக! என்பது தான் பக்தி வளர்த்த தமிழா? எது தமிழுக்கு நோயோ அதையேதான் பெருமையாகக் கூறும் பார்ப்பனர் களின் போக்கிரித்தனத் தைக் கவனிக்கவும்.

-------------------- மயிலாடன் அவர்கள் 25-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

இளையான்குடி முரசு said...

click the links and read

1.
32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?


2.
தந்தையுடைய வைப்பாட்டிகள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக.ஊரார் முன்னிலையில் கற்பழித்தவன்.


3.
பைபிளில் உள்ளவை.: சகோதரியை கற்பழித்து ஒதுக்கியவன்."


4.
தகப்பனை கற்பழித்த புத்திரிகள்.


===============

நம்பி said...
This comment has been removed by the author.
Prof.N.Krishnan said...

தேவாரப் பாடலை தப்பும் தவறுமாக உளறிய மயிலாடரே! ஒரிஜினல் தேவாரம் இதோ:
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத் திரு ஆலவாயாய் அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப்பேய் அமண் -
தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!

'கற்பு' என்ற தமிழ் வார்த்தைக்கு "கல்வி, கற்பனை, நீதிநெறி, மகளிர்நிறை, மதில், முறைமை, விதி, முல்லைக்கொடி" என்னும் பொருள்படும் அர்த்தங்கள் தமிழ் மொழி அகராதியில் (பதிப்பு: நா. கதிரைவேற்பிள்ளை) உண்டு. இவைகளில், அந்தப் பதிகம் எந்தப் பொருள்பற்றிப் பாடப்பட்டதோ, அதற்கேற்ற பொருள்கொள்வதே கற்றோர்க்கு சிறப்பு. ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று கச்சைகட்டிக்கொண்டு வலிந்து பொருள் கூறுவது, ‘அறிவு ஜீவிகள்’ என்று தம்மை அடையாளப்படுத்தவேண்டிச் செய்யும் உம்போன்ற சிலரின் செப்படி வித்தை. தப்பாக சமணர் முறைமை-கற்பிதம்-விதி செய்ததை அழிக்க திருவுள்ளம் கொள்க என வேண்டுவதே இப்பாடல்! இதற்கே இப்படிப் பொருள் எழுதினால், அடுத்த தேவாரப் பாடலுக்கு என்ன மயிலாடுவாரோ? அடுத்த பாடல் இதோ:
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!
நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!

('ஓத்து' என்ற வார்த்தைக்கு 'மறை', 'வேதம்' எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது. மயிலாடனுக்குத் தெரிந்த 'ஓத்து' எதுவோ? புதுக் கட்டுரை எழுத மயிலாடனுக்குக் கரு கொடுத்து விட்டேன்! தாங்கள் நல்ல பகுத்தறிவுப் பகலவனாம் மயிலாடரே! தமிழும் தெரியாமல், அறிவு என்றால் என்ன என்றும் அறியாமல் பகுத்தறிவு பற்றி போதிக்க வந்துவிட்டீர்கள்! கலிகாலம்! உமது தமிழ்ப் போதனையால் தமிழன் விரைவில் காட்டுமிராண்டியாகிவிடுவான். அப்புறம் நீவிர் புதிய தமிழ் அகராதி எழுதி தமிழைக் காப்பீராக! உம்மைப்போன்ற அறிவு ஜீவிகள் தாம் நாட்டுக்கு மிகவும் தேவை.