Search This Blog

26.7.10

பெரியார் சொத்து யாருக்கு? பெரியார் விளக்கம் - 4பெரியார் சொத்து யாருக்கு

நான் பணம் சம்பாதிக்கின்றேன் தகாத வழிகளில் என்கின்றார்கள். நான் என்ன, இவர்கள் பணம் சம்பாதிப்பது போலவா பிள்ளைகுட்டிகளுக்கு என்று சம்பாதிக்கின்றேன்? இப்படிப்பட்ட விஷமப் பிரச்சாரங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
  
பணம் எல்லாம் கழகத்துக்குத்தானே? 
 
நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் நானா எடுத்துக் கொள்ளுகிறேன்? எல்லாம் கழகத்துக்குத் தானே ஒப்படைத்துப் போட்டு எளிய வாழ்வு வாழ்கின்றேன்? கலியாணம் என்று கூப்பிட்டால் 150 கொடு என்று வாங்குகின்றேன். பொதுக்கூட்டம் என்று கூப்பிட்டால் 100; விருந்துக்குப் பணம் கொடு; கையெழுத்து, போட்டோ இதுகளுக்கும் பணம் கொடு என்று வாங்குகின்றேன். மாநாடு கூட்டினால் 1000, 2000 மிச்சம் வருகின்றாற்போல் செய்கின்றேன். இதுகள் எல்லாம் சேர்ந்தால் எங்கே போய் விடப்போகின்றது? இன்று கழகத்துக்கு உள்ள பணத்தில் பகுதிக்கு மேல் என்னுடைய சொந்தப்பணத்தைத்தான் சேர்த்து இருப்பேன்.  
 
சொத்துக்கள் வாங்கி சேர்க்கப்படுகிறது 
  
தோழர்களே! இந்த வருஷத்தில் திருச்சியில் கழகத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள், கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 50 ஏக்கரா நஞ்சை தஞ்சை மாவட்டத்தில் வாங்கப்பட்டு உள்ளது. மாதம் 1,200 ரூபாய் வாடகை வருகின்றாற்போல திருச்சியில் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடம் சம்பந்தமாக ஆஸ்டல் கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. யார் திருடிக் கொண்டார்கள்? இந்த சுமார் 5, 6 ஆண்டில் மட்டும் கழகத்துக்கு 30, 40 சொத்துக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு உள்ளது!
 
விஷமத்தனமான புகார்கள்!
  
பெண்டாட்டிக்குக் கொடுத்து விடுவேன் என்கின்றனர். எதற்காக கொடுக்கப் போகின்றேன். இந்தக் கழக சொத்து தவிர வேறு எனக்கு சொந்தத்தில் சொத்து கிடையாதா? நான் செத்தாலும் மாதம் ரூ.500, ரூ.1000 வருமானம் வரும்படியான சொத்து அந்த அம்மாளுக்கு இருக்குமே!
 
அடுத்து சம்பத்துக்குக் கொடுத்து விடப் போகின்றேன் என்று சொல்லித் திரிகின்றார்கள். அவன் முட்டாள்தனத்தினால் கேட்பார் பேச்சைக் கேட்டதனால் அவனுக்கு என் சொத்து கிடைக்க வழி இல்லாமற் போயிற்று. இல்லையானால் அவனுக்குத் தானே என் சொத்து சேர்ந்து இருக்கும்? நான் சம்பத்தை தத்து எடுத்துக் கொள்ளுவது என்று குடும்பத்தில் முடிவு செய்து அன்று பத்திரம் முதலியன வாங்கியது யாருக்குத் தெரியாது? இன்னும் அந்தப் பத்திரம் என்னிடத்திலேயே இருக்கின்றதே! தத்து செல்லும்படியாக சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ரிஜிஸ்டிரார் சொன்னதனால் ரிஜிஸ்டர் ஆகவில்லை.
 
 சம்பத் நடவடிக்கையால் டிரஸ்ட் ஏற்படுத்தலானேன்
 
அவனும் சதிகாரர் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நமக்கு விரோதமாக நடக்க ஆரம்பித்ததன் காரணமாக நான் அந்த முயற்சியைக் கைவிட்டு டிரஸ்ட் ஏற்படுத்தி கழகத்துக்குச் சேரும்படி செய்துவிட்டேன்.
 
-----------------------தந்தை பெரியார் அவர்கள் திருநெல்வேலியில் 29.01.1963 அன்றும், பண்ருட்டியில் 13.02.1963 அன்றும் திராவிடர் கழகம் பற்றி, கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆற்றிய தெளிவுரையிலிருந்து ஒரு பகுதி

1 comments:

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம்
பூனைக்குட்டி வெளியில் வந்தது!

24.7.2010 விடுதலையில் பூனைக் குட்டி வெளியில் வந்தது என்ற முன்பக்கக் கட்டுரையில் எதிரி களையும், துரோகிகளையும் சரி யாகவே படம் பிடித்துள்ளார்.

அரசு எடுத்துக் கொண்ட அறக் கட்டளை களின் கதி என்னாயிற்று என்பதையும் கோடிட்டுக் காண் பித்துள்ளார். வெளிப்படையாகக் கூறுவதாயின், பார்ப்பனர் அல்லா தார் நலன் கருதி தொடங்கி வளர்ந்த பச்சையப்பன் அறக்கட் டளை காலப் போக்கில் பார்ப்பன ஊடுருவலுக்கு வழி வகுத்து 1995-97 களில் பச்சையப்பன் கல்லூரி முதல் வராக ஒரு பார்ப்பனரே பொறுப் பேற்றதையும், அதை எதிர்த்து கல்லூரி எதிரிலே மானமுள்ள தமி ழர்கள் மறியல் செய்து கைதான தும் வரலாறு. கைதானவர்களில் நானும் ஒருவன். மு.தெய்வநாயகம், டாக்டர் வி.ராமகிருஷ்ணன் தலை மையில் அறப்போர்.

அரசு என்ன, நீதிமன்றத் தீர்ப்பு களே காற்றில் பறக்கவிடப்படுகின் றன பல அறக்கட்டளைகளில். அதில் ஓர் எடுத்துக்காட்டு. தஞ்சை யில் பார்ப்பனர் அல்லாத மாண வர்கள் (கள்ளர்கள்) படிப்பை முன்னிறுத்தி இலவச உணவுடன் உறைவிடமுமாக தஞ்சை மேல வீதியில் ஒரு பிரம்மாண்ட கட்ட டத்தில் கள்ளர் மகாசங்கம் என்ற பெயரில் இலவச விடுதியை பூண்டி ராவ்பகதூர் அ.வீரையா வாண் டையார் அவர்கள் காலத்தில் தொடங்கி சில பல ஆண்டுகள் நடத்தி வந்தனர். பார்ப்பனர் அல் லாத மாணவர்கள் படித்து கல்லூரி களுக்குச் செல்வதைப் பொறுத்துக் கொள்ள இயலாத தஞ்சை மேல வீதி காங்கிரஸ் பார்ப்பனர் ஒருவர் தூண்டுதலால், அந்த இலவச விடுதி மூடப்பட்டு, அந்த இடத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கத் தொடங் கியது. 1952-56 தமிழக சட்டப் பேரவையில் திராவிட பார்லி மெண்டரிக் கட்சியைத் தொடங்கி தலைவராக இருந்த வழக்குரைஞர் சுயம்பிரகாசமும், திருக்காட்டுப் பள்ளி குட்டைச்சேவு சேதிராயர் போன்றோரும் இலவச விடுதி தொடங்கவேண்டும் என்று சங்கத் துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த னர். வழக்கு முடியும் முன் சுயம் பிரகாசம் அவர்கள் காலமாகிவிட் டார்கள். 18-3-1980 இல் தீர்ப்பளித்த தஞ்சை சபார்டினேட் ஜட்ஜ் தஞ்சை வழக்குரைஞர் ஒருவரை ரிசீவராக நியமித்து மூன்று மாதத் துக்குள் பைலாப்படி புது உறுப் பினர்களை சேர்ப்பித்து சங்கத்தைப் புதுப்பித்து நிருவாகிகள் தேர்தலை நடத்தி அவர்களிடம் சங்கப் பொறுப்பை ஒப்படைக்க 30-7-1980 கால நிர்ணயம் செய்து அது பற்றிய அறிக்கையை 14-8-1980 அன்றோ அதற்கு முன்போ அளிக்கவேண்டு மென தீர்ப்பளித்துள்ளார்.

ஆனால் 30 ஆண்டுகளாக இடைக் கால நிருவாகியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞரின் பொறுப்பிலேயே அக்கட்டடம் உள்ளது. தனியார் பள்ளியும் இயங்குகிறது. அக்கட்ட டத்திற்குரிய கள்ளர் மகாசங்கம் என்ற பெயர்ப்பலகை கூட நுழை வாயிலில் இல்லை. எந்த அறக்கட்ட ளையும் அதனைத் தொடங்கிய வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவ்வழி நடக்க உறுதி கொண்டவர்களால் மட்டுமே சரி வர நிருவகிக்கப்படும். அந்த ஆரம்ப கர்த்தாவின் உணர்வையும், புரித லையும் அறியாதவர் பொறுப்பிலோ அல்லது அரசாகவிருந்தாலும், நீதி மன்றமாகவிருந்தாலும், கொள் கைகள் நீர்த்துப் போய் கடனெழவே என்றுதான் நிருவகிக்கப்படும்.

பார்ப்பனரல்லாத (கள்ளர்) மாண வர்களுக்காக தொடங்கப்பட்ட ராவ் பகதூர் அ. வீரையா வாண்டையார் அவர்கள் காலத்தில் தொடங்கப் பட்டு, அது பார்ப்பனர் சூழ்ச்சியால் மூடப்பட்ட பிறகு திராவிட இன உணர்வுள்ள வழக்குரைஞர் சுயம்பிர காசம் அவர்களால் வழக்கு தொடரப் பட்டும் 35 ஆண்டுகளுக்கு முன் மூடப் பட்ட இலவச விடுதி இன்றளவும் இயங்கவில்லை என்பதே இடைக்கால நிருவாகியாக நியமிக்கப்பட்ட வழக் குரைஞரின் ஏனோதானோ போக்கும், கடனெழவே என இயங்குவதற்கும் எடுத்துக்காட்டு.

அதிலும் தந்தை பெரியார் அவர் களின் குறிக்கோளை முழுதுமாய் எய்துவதற்காக தொடங்கப்பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு உள்ள அக்கறை யோடும் உணர்வோடும் மற்றவர் களால் நிருவகிக்க முடியாது. இப் படியாவது பெரியார் கொள்கைகள் நீர்த்துப் போகட்டும் என்ற அக்ர(ம) காரத்தின் ஆசையில் மண்விழுவது நிச்சயம். கருஞ்சட்டைத் தற்கொலைப் படை பெரியாரின் சொத்துகளை பத்திரமாகப் பாதுகாக்கும், பெருக் கும்; செயல்பாடுகளை விரிவாக்கும் என்பது திண்ணம். இந்திய அரசமைப்புக்கே 31-சி திருத்தம் தந்து இட ஒதுக்கீட்டில் சாதனை படைத்த தமிழர் தலைவரின் சட்ட அறிவு தந்தை பெரியாரின் சொத்துகளை கொள்கைகளை ஆவணங்களைக் காப்பது உறுதி.

அன்பார்ந்த,

நாகூர் தி.சோமசுந்தரத் தேவர்
--”விடுதலை” 31-7-2010