Search This Blog

12.7.10

பொறுக்குமா பூணூல் கோத்திரத்துக்கு?


அலசல்கள் சில...

கல்கி

கேள்வி: படைப்பதற்கு பிரம்மா; காப்பதற்கு விஷ்ணு; அழிப்பதற்கு சிவபெருமான். அழிக்கின்ற கடவுளை நாம் ஏன் வணங்கவேண்டும்?

பதில்: வெள்ளை நிற பிரம்மா - சாக் பீஸ்; கருப்பு நிற விஷ்ணு - கரும்பலகை; சந்தன நிற சிவன் - டஸ்டர். அழிக் காமல் அடுத்த கணக்கு போட முடியுமா?

பிரம்மாவால் பிறப்பர், விஷ்ணு- புரப்பர், சிவனால் இறப்பர். மூவருமே அந்த வகையில் அழிக்கும் ரப்பர்தான்.

(கல்கி, 11.7.2010, பக்கம் 3)

எதையாவது உதாரணம் சொல்லி ஏய்ப்பது என்பது ஒரு மோசடி.

பிறப்பதற்குப் பிரம்மாதான் காரணம் என்பது நிரூபிக்கப்படவேண்டாமா? இன்றைக்குச் செயற்கையாகவே உயிரை உண்டாக்கி விட்டார்களே, பிரம்மாவின் கதி என்ன?

சிலருக்குக் குழந்தை பிறக்கிறது; சிலருக்குப் பிறப்பதில்லை ஏன்? பிரம்மா என்பவன் ஓரவஞ்சனை உள்ளவனா?

பிறக்கும்போதே உடல் உறுப்புகள் குறைபாட்டுடன் சில குழந்தைகள் பிறப்பதுண்டே இவற்றிற்கு மட்டும் பிரம்மாவைப் பொறுப்பாக்கப் போவதில்லையா?

விஷ்ணு கரும் பலகையாம்; காப்பாற்றுகின்ற கடவுளாம்; எந்த அளவுக்கு மக்களை இவர் காப்பாற்றுகிறார்? உலகில் பசியால் சாகும் மக்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே, நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே வருமானம் பெறும் மக்கள் இந்தியாவில் 77 சதவிகிதமாமே!

எப்படி வாழ்வார்கள்?

ஏழைகள் அன்றாடம் செத்துப் பிழைப்பது கோடீசுவரர்கள் சுகத்தில் புரள்வது _ இதுதான் புரக்கும் காக்கும் கடவுளின் யோக்கியதையா?

கடவுள் பாரபட்சம் உள்ள சராசரி மனித்தன்மைக்கும் கீழானவன் என்று ஒப்புக்கொள்வார்களா?

அழிக்கும் கடவுள் சிவன் கரும் பலகையின் டஸ்டர் போன்றதாம்.

கரும் பலகையில் எழுதப்பட்ட எழுத்துகளை ஒரே தேய்ப்பில் டஸ்டர் அழித்துவிடுமே அதுபோன்றுதான் மனிதர்களை சிவன் அழிக்கின்றானா?

கருவிலும் பிறக்கும்போதே இறந்து வெளியில் வருகிறதே அதற்குச் சிவன் பொறுப்பாக இருக்கமாட்டானா?

பெண் குழந்தை என்றால் கருவிலேயே அழிக்கப்படுகிறதே இதற்குச் சிவன் பொறுப்பில்லை என்று சொல்லப் போகிறார்களா?

30 வயது சராசரி வயது படைத்திருந்த இந்திய மக்கள் இப்பொழுது 60 அய் தாண்டி விட்டார்களே; அப்பொழுது சிவனுக்கு நல்ல புத்தியில்லை. இப்பொழுது நல்ல புத்தி வந்துவிட்டது என்று வியாக்கியானம் செய்யப் போகிறார்களா?

அழுத்திக் கேட்டால் இந்தப் பதில்களை எல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ளவேண்டாம் இது சும்மா பொழுது போக்கு _ அவ்வளவே என்று கூறி வழுக்கிக் கொள்வார்களோ!

துக்ளக்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பட்டிமன்றம் ஒன்றி னுடைய தலைப்பே, இது தமிழ் அல்ல தமாஷ் என்பதைக் காட்டுகிறது. தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத் திரைக்கே, அச்சுத் துறைக்கே! என்பது பட்டிமன்றத் தலைப்பு.

அதாவது பத்திரிகைகள்; டெலிவிஷன் சேனல்கள்; சினிமாக்கள் ஆகிய மூன்றில் ஒன்றுக்குத்தான் தமிழ் மொழியை வளர்க்கிற பொறுப்பு இருக்கிறது என்று மகாநாட்டு அழைப்பாளர்கள் கருதுகிறார்கள்.

தமிழை வளர்ப்பதில் முக்கிய பங்கேற்கவேண்டியது அரசா அல்லது கல்வியாளர்களா? என்ற மாதிரி ஒரு தலைப்பைத் தந்திருக்கக்கூடாதா? தந்திருக்கலாம். ஆனால், அதில் பொழுதுபோக்கு அம்சத்துக்கு இடம் அவ்வளவாக இருந்திருக்காது. அதுதான் விஷயம் இந்த மகாநாட்டிற்கு முக்கியமானது பொழுது போக்கு.

---------------------துக்ளக் தலையங்கம், 7.7.2010

தமிழுக்குச் செம்மொழி என்ற கருத்திலேயே பார்ப்பனர் கூட்டத்துக்கு உடன்பாடு கிடையாது. செம்மொழியானால் வீட்டுக்கு வீடு மூன்று வேளையும் பிரியாணி கிடைக்குமா? என்று எழுதிய கூட்டம்தானே இது.

இவர்களின் கூச்சலை யார் செவிமடுப்பார்கள்? சரி செம்மொழி மாநாடும் நடந்துவிட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் வந்துவிட்டனர். ஆய்வுக் கட்டுரைகளையும் தந்துவிட்டனர். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியப் பார்ப்பனர்களுடையது அல்ல; திராவிடர் நாகரிகமே என்று மட்டை இரண்டு கீற்றாக ஆக்கிக் காட்டிவிட்டார்கள்.

பொறுக்குமா பூணூல் கோத்திரத்துக்கு? எதையாவது கிறுக்கித் தங்கள் ஆற்றாமையைப் போக்கிக் கொள்ளவேண்டாமா? அதன் வெளிப்பாடுதான் இது.

நாட்டு மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் தாக்கத்தை உண்டாக்கக் கூடியவை சின்னத்திரை, சினிமா, ஏடுகள் இதழ்கள். அந்த அடிப்படையில் பட்டிமன்றம் நடத்தினால் அதற்கு குறுக்கு வெட்டு விமர்சனம்! சோ ராமசாமி சொல்லுகிறபடியே அரசா? கல்வியாளர்களா? என்று தலைப்புக் கொடுத்து பட்டிமன்றம் நடத்தியிருந்தால், அதனை இவாள் பாராட்டவா போகிறார்கள்?

அரசும், அறிவாளிகளும் தமிழை வளர்க்க முடியுமா? அன்றாடம் படிக்கும் ஏடுகள், அன்றாடம் பார்க்கும் சின்னத்திரைகள், சினிமாக்கள்தானே முக்கிய பங்கு வகிக்கிறது அதைப்பற்றிச் சிந்தித்திருக்கக் கூடாதா என்று குறுக்குச்சால் ஓட்டுவார்கள்.

அதே தலையங்கத்தில் தன் கோணல் புத்தியையும் காட்டி விடுகிறார்.

ஒரு ஓட்டிற்கு இவ்வளவு என்று பணம் பெறுகிற மக்கள் பேசுகிற மொழி என்ன மரியாதையைப் பெறும்? என்று கொச்சைப்படுத்துகிறார்.

வாக்காளர்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் பேசும் மொழி என்ன செய்யும்? எதை எதோடு முடிச்சுப் போடுகிறார்?

தமிழைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்றால், எதையும் எதோடும் முடிச்சுப் போடும் இந்த முடிச்சவிக்கிக் கூட்டம்.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனச் சிறுவனுக்கு மோட்சம் அளிக்கும் மதத்தையும், கடவுளையும் கட்டிக்கொண்டு அழும் ஒரு கூட்டம் இப்படியெல்லாம் எழுதுவதற்கு எள்ளளவும் கூச்சப்படாது_ படவே படாது!

------------------------ கருஞ்சட்டை 10-7-2010 "விடுதலை” யிலெழுதிய கட்டுரை

0 comments: