Search This Blog

2.7.10

கலைஞர் திராவிடர் இயக்கத்தின் கருவூலம்!

கலைஞர்
மாபெரும் மனிதரே!

முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள், பகுத்தறிவு, தன்மான, இனமானக் கருத்துகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தாலும், அண்மைக்காலமாக அதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து, அழுத்தம் கொடுத்துச் சொல்லி வருகிறார்.

தன்னைப் பற்றி ஒரு வரியில் சுயமதிப்பீடு என்று சொல்லும்போது மானமிகு சுயமரியாதைக்காரன்! என்று திட்டவட்டமாகவே தெளிவுபடுத்திவிட்டார்.

டில்லியில் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தி.மு.க. தோழர்களுக்கு வேண்டுகோள் அல்ல கட்டளையாகவே தெரிவித்தார்.

பெரியார் அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு கோவிலுக்குப் போவது, வாஸ்து பார்ப்பதெல்லாம் கூடாது என்றே தெளிவுபடுத்தியும் விட்டார்.

இந்தச் சூழலில் வேலூர் பகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குக் கோவில் எழுப்பி, மூன்று வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது; கண்டிக்கத்தக்கதுமாகும்.

தி.மு.க. தலைவராகவும், 5 ஆம் முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் விளங்கக் கூடிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களை மதிப்பது, பாராட்டுவது, நன்றி காட்டுவது என்பது இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் அல்ல!

அவரைப் பொறுத்தவரை பாராட்ட எத்தனையோ பரிமாணங்கள் உண்டே! 87 ஆண்டுகளில் 75 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர் பன்முகப் பேராற்றல் கொண்டவர். அவர்தம் நூல்களைப் பரப்பலாம்; அவர் முரசொலியில் எழுதி வரும் அறிக்கைகளை அச்சிட்டுப் பொது மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குக் கொடுக்கலாம்.

பகுத்தறிவு சார்ந்த நூல்களில் இடம் பெற்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். கலைஞர் பெயரில் படிப்பகத்தை ஏற்படுத்தி திராவிடர் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம்.தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தலாம். கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்திப் பரிசளிக்கலாம்.

பகுத்தறிவு அடிப்படையில் கலைஞர் அவர்களின் புகழை, சாதனைகளைப் பரப்பி அதன்மூலம் அவரை மதித்திட ஆயிரம் ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தன்மான பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமாக கோயில் எழுப்பி அதில் கலைஞர் அவர்களைக் கடவுளாக ஆக்குவது என்பது நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும்.

ஒருவருடைய கொள்கையை ஒழிக்க வேண்டுமானால், அவரை மகானாகவோ, கடவுளாகவோ ஆக்கினாலே போதும் என்பார்கள்.

கலைஞர் என்பவர் திராவிடர் இயக்கத்தின் கருவூலம்! தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத் தனிப் பெரும் தளகர்த்தர்! இன்றைக்கு நம்மிடையே வாழும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்.

அவர் மனிதர் மாபெரும் மனிதர் மதிக்கத்தக்க போராளி. அவரைக் கடவுளாக்கி, பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம். அது சிலையாக இருக்கட்டும் அதன் கீழ் கலைஞர் அவர்களின் பகுத்தறிவுப் பொன்மொழி கல்வெட்டாகச் செதுக்கப்படட்டும். கோயில் பூஜை என்ற முயற்சியை உடனடியாகக் கைவிடுக!

------------------------- “விடுதலை” தலையங்கம் 2-7-2010

8 comments:

வால்பையன் said...

இதுக்கு பின்னுமா!?

வால்பையன் said...

http://4.bp.blogspot.com/_g5ze0beBfWU/TC2P5uJC1jI/AAAAAAAABZE/mTZrIH9Dzxs/s1600/dmk.bmp

அதுல லிங்க் வரல, அதுனால தனியாவே ஒருதடவை!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//"கலைஞர் திராவிடர் இயக்கத்தின் கருவூலம்!"
//

தலைப்பு நன்று!

இன்னும் இப்படி வச்சா நல்லா எடுக்கும்!

“கலைஞர் குடும்பம் தமிழ் நாட்டின் கருவூலம்”

கருவூலம் -பொன்,பொருள், பணம் வைக்கும் இடம்.

:)))

தலைப்பு கி.வீரமணி ஐயா குடும்பத்துக்குத் தான் ஒத்துவருது!

குழலி / Kuzhali said...

மேலும் ஒரு சாதாரண கவுன்சிலரை கண்டிக்கும் முன் முதலில் கருணாநிதிகுடும்பத்தின் மூடநம்பிக்கையை கண்டியுங்கள்...
சரிசரி இங்கே இந்த வலைதளத்தில் எத்தனை முறை பராசக்தியின் பக்தையான துர்க்கா ஸ்டாலினுக்கு பகுத்தறிவாளர்களுக்கு சங்கடம் தராதீர்கள் என்று பதிவெழுதியுள்ளீர், மஞ்சள்துண்டு (ம் செம்(கனி)மொழி மாநாட்டில் வரவேற்க்க தரப்பட்ட ரோசாப்பூ கூட மஞ்சள் வண்ணம்) என்று மஞ்சள் ராசி பார்க்கும் கருணாநிதிக்கு எத்தனை முறை பகுத்தறிவாளர்களுக்கு சங்கடம் தராதீர்கள் மிஸ்டர் கருணாநிதி என்று எழுதியுள்ளீர்கள், சாயிபாபாவை வீட்டுக்கே கூப்பிட்டு பாதபூசை செய்த மிஸ்ஸஸ் கருணாநிதியை பகுத்தறிவாளர்களுக்கு சங்கடம் தராதீர்கள் என்று எத்தனை முறை எழுதியுள்ளீர்கள்... பதவிக்காகவும் காசுக்காகவும் கருணாநிதியின் கருணைக்காகவும் கோயில் கட்டியவனை கண்டிக்கும் முன் இவர்களை கண்டித்திருந்தால் ஒரு நியாயம் இருக்கும்... தலைவருக்கு மட்டுமில்லை தொண்டர்களுக்கும் கூட பெரிய இடம் எதுவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அடிமட்ட தொண்டன் உங்கள் கொள்கைகளை காப்பாற்றும் வீரனாக இருந்து சாகவேண்டும்... போங்கய்யா நீங்களும் உங்க பகுத்தறிவும்.

http://www.saibabaofindia.com/21jan4thfebimages07/sai_baba_cm_07.jpg

குழலி / Kuzhali said...

இப்படியெல்லாம் செய்தால் கட்சியின் கொள்கைக்கு எதிராக நடந்துகொண்டதாக கூறி முதலில் கட்சியிலிருந்து நீக்கி அவரின் கவுன்சிலர் பதவியை பிடுங்கி கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றால் அவருக்கே அதை செய்ய துணிவு வருமா? உண்மையில் துதிபாடிகளுக்கு தானே வாய்ப்புகள் அளிக்கப்படும் அதனால் இவர்களே அதை ஊக்குவிக்கிறார்கள் கருணாநிதிக்கு மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டின் நாய்க்கு கூட பவர் இருப்பது நக்கி திண்பவர்களுக்கு தெரியாதா என்ன? கோயில் கட்டியதால் அடுத்தடுத்து பெரிய பதவிகளுக்கு போகப்போகிறார் எனவே இன்னும் பல கோயில்கள் நாக்கை அறுத்துக்கொண்டு பூசை என இன்னும் பல திமுக உடன்பிறப்புகளிடமிருந்து எதிர்பார்க்கலாம்

தமிழ் ஓவியா said...

கருவூலம் என்று இக்கட்டுரையில் சுட்டுவது கருத்துக் கருவூலம் என்ற பொருளில்.

ஆனால் அத்தி வெட்டி ஜோதிபாரதி குறிப்பிடுவது

கருவூலம் -பொன்,பொருள், பணம் வைக்கும் இடம்.

(தங்கள் எண்ணம் எப்படியோ அப்படித்தான்)
யார் யாருக்கு எப்படி தோணுதோ அப்படி தோன்றியிருக்கிறது அத்தி வெட்டிக்கும். இதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

தலைப்பு கி.வீரமணி ஐயா குடும்பத்துக்குத் தான் ஒத்துவருதாம் ஜோதி பாரதியின் 21 ஆம் நூற்றாண்டு கண்டுபிடிப்பு.

இந்த கண்டுபிடிப்புக்கு யாராவது வீபிசண ஆழ்வார்கள் பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள் ஜோதி பாரதி.

அடுத்து எனது இணைய தோழர் குழலி,

அவர் என்ன மற்றவர்களுக்கு சளைத்தவரா?

குற்றச் சாட்டை அடுக்கிக் கொண்டே போகிறார்? அந்தக் குற்றச் சாட்டில் எள் மூக்கு அளவுக்காவது பொருள் உண்டா?

கொள்கை ரீதியாக கலைஞருக்கும், தி.க.வுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு அதற்கு விளக்கம் அளித்து பல நூல்கள் வெளிவந்துள்ளது குழ(ப்ப)லி அதையெல்லாம் படித்திருந்தால் பூனை கண்னை மூடிக் கொண்டது போல் இப்படி தத்து பித்தென்று விமர்சிக்க மாட்டீர்கள்

விடுதலை, உண்மை இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்துள்ளது.

கீழே ஒரு சில நூல்களின் பட்டியலை தந்துள்ளேன். இயலுமானல் ஒரு முறை படித்துப் பாருங்கள் உண்மை புரியும்.

1. கி.வீரமணி அவர்கள் எழுதிய கலைஞரின் பதிலும் நமது விளக்கமும்.

2.தி.மு.க.வை தி.க. எதிர்ப்பது ஏன்? -கி.வீரமணி

3.கலி பூங்குன்றன் அவர்கள் எழுதிய கலைஞரும் கழகமும்.

4.கலி பூங்குன்றன் அவர்கள் எழுதிய கலைஞருக்கு பதில்கள்

இதுதவிர ,விடுதலை, உண்மை இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்துள்ளது குழலி

பகுத்தறிவுக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் கண்டிப்போம். அதே போல் பகுத்தறிவுடன் செயல்பட்டால் இன்னார் இனியார் என்று பாராமல் அவர்களை ஆதரிப்போம். இது தான் தி.க. காரனின் நிலைப்பாடு.

தமிழ் ஓவியா said...

கலைஞர் பெயரில் கட்டிய கோயில் இடிக்கப்பட்டு விட்டது.