Search This Blog

7.7.10

விஜயகுமார்... கல்கி பகவான் ஆன கதை!


இதுதான் கல்கி குடும்பம்!

கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் சம்பாதிக்கிறார். பக்தர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி, போதை ஊட்டி காம வக்கிரங்களை அரங்கேற்றுகிறார். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஹவாலா மோசடி செய்து வருகிறார். இப்படிப்பட்ட பகீர் செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் கசிந்தபோதும், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. நான்தான் விஷ்ணுவின் 10 ஆவது அவதாரம் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார் கல்கி பகவான்!!

இந்த நிலையில், முன்பு கல்கி பகவானின் நண்பராக இருந்தவரும், போலி சாமியார்களுக்கு எதிரான அமைப்பின் தலைவருமான விஸ்வநாத் சுவாமி, கன்னட மீடியாக்களிடம் கல்கி பகவான் பற்றிக் காட்டமான சில தகவல்களை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தினார். பெங்களூருவில் இருந்த விஸ்வநாத் சுவாமியை சந்தித்தோம்.

கல்கி பகவான் என்று அழைக்கப்-படும் விஜயகுமார், 1984 இல் என்னோடு ஆந்திர மாநிலம் குப்பத்தில் ஒரு நடு-நிலைப்பள்ளியில் சக ஆசிரியராக இருந்தவர். போதிய வருமானம் இல்லாததால், அதை விட்டுவிட்டு, எல்.அய.சி. ஏஜென்ட் ஆனார். அப்போதே அவருக்குப் பணவெறி... முதலில் நான் சாமியின் வரம் பெற்றவன என்று மக்களிடம் காணிக்கையாகப் பணம் வசூலிக்கத் தொடங்கினார். அப்புறம் நான் விஷ்ணுவின் 10 ஆவது அவதாரமான கல்கி பகவான் என்று கூற ஆரம்பித்தார். யாரும் அதை நம்பவில்லை. அப்போது இவர், ஒரு புது டெக்னிக்கைக் கையாண்டார். அதாவது கிராமங்களில் 10 ம் வகுப்பு முடித்த 125 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மசிய வைத்து, அனைவருக்கும் வெள்ளை உடுப்பு கொடுத்து, அக்கம்பக்கக் கிராமங்களுக்கு அனுப்பி வைத்தார். விஜயகுமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார் என்று பிரசாரம் செயயவைத்தார். மக்கள் காணிக்கை கொடுக்க முன் வந்தனர். நாளடைவில இவரே சிலரை ரெடி பண்ணி, எனக்கு கேன்சர் குணம் ஆகாமல் இருந்தது... பகவான் தொட்டார், சரியாகிவிட்டது என்று மேடைகளில் சொல்ல வைத்தார்.

அதோடு, ஷில்பா ஷெட்டி, மனீஷா கொய்ராலா போன்ற நடிகைகளை, நான் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகுதான் பெரும் வாய்ப்புகள் வாசலுக்கு தேடி வரத் தொடங்கின என்று லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்துப் பேசவைத்து விளம்பரம் தேடினார். இதுதான் விஜயகுமார்... கல்கி பகவான் ஆன கதை! என்று ஒரு முன்னோட்டம் கொடுத்தவர் தொடர்ந்தார்.

இவர், நான் உலகத்தையே தீட்சை அடையச் செய்கிறேன். தீட்சைக்கு மூன்று நிலைகள் உள்ளன என்று கூறி, முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்றாம் நிலைக்கு 21,000 ரூபாய் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிடமும் கறந்துவிடுகிறார். அதுவும் வெளிநாட்டினர் சிக்கிவிட்டால், அவர்களது மொத்தச் சொத்துகளும் அம்போதான்!

கல்கி பகவான் ஆசிரமத்தில் நடக்கும் கஞ்சா, களியாட்டங்கள் பற்றி ஏற்கெனவே உங்கள் ஜூ.வி. உள்பட பல பத்திரிகைகளில் விவரமாகச் செய்திகள் வந்தன. இந்தக் களியாட்டங்களை அரங்கேற்றவே, ஒரு ஸ்பெஷல் ஸ்டூடியோவை உருவாக்கி இருக்கிறார். இதன் உள்ளே 25 வயதுக்கும் குறைவான பெண்களை மட்டும் அழைத்து ஸ்பெஷல் தீட்சை தருவார். ஆந்திர மாநில சேனலில் வெளியான அதிர்ச்சிக் காட்சிகள் மிகக் குறைவுதான். ஆசிரமத்தில் நடப்பவை முழுதாக இன்னும் வெளிவர-வில்லை.

இவருக்கு 90 களில் வெறும் 43,000 ரூபாய் மட்டுமே வருட வருமானம். ஆனால் இன்று 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள்... ஆசிரமங்கள். தனது வீட்டின் நீச்சல் குளத்துக்கு ஸ்பெயினில் இருந்து டைல்ஸ் வாங்கி வந்து பதித்து இருக்கிறார். ஒரு சந்நியாசிக்கு இதெல்லாம் எதற்கு? இவரது மகன் கிருஷ்ணாவுக்கு லாஸ்-ஏஞ்ஜல்ஸில் கம்பெனி... 33 வெளிநாட்டுகார்கள், பெங்களூருவில் ஆயிரம் கோடியில் கட்டுமான பிசினஸ்... இவை எல்லாம் எப்படி வந்தன?

மக்களுடைய நிலங்களையும், பணத்தையும் பறித்துக்கொண்டு பகவான் பெயரில் உலா வருவதால், வரிச் சலுகை பெற்று, மும்பையில் உள்ள தனது ஆட்கள் மூலமாகக் கறுப்பு பணத்தை லாஸ்ஏஞ்ஜலீஸில் இருக்கும் மகனுக்கு அனுப்பி, அதை மாற்றிவிடுகிறார்.

அதோடு, இவரது அந்தரங்க உண்மைகள் எல்லாம் தெரிந்த மேனேஜர்களான பவன், விகாஷ் என்ற இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். அதெல்லாம் விபத்துகள் என்று கூறி போலீஸார் கேஸை முடித்ததும் இவருடைய தாராளம் காரணமாகத்தான்!.

நித்தியானந்தா விவகாரம் குறித்த விசாரணை நடத்துபவர்கள், கல்கி பகவானை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றனர்? இவரை போலீஸ் செமத்தியாக விசாரித்தால் போதும்... ஆயிரம் நித்தியானந்தா கதைகள் வெளிவரும் என்று நிறுத்தியவர், கடைசியாக...

நான் அவருக்கு எதிரான உண்மைகளைச் சொல்வதால், பலமுறை என் மீது கொலை முயற்சிகள் நடந்தன. அவற்றில் இருந்து தப்பி சென்னை உயர் நீதி மன்றத்திலும், சைதாப்பேட்டை கீழ் நீதிமன்றத்திலும் அவர் மீது நில அபகரிப்பு, கொலை முயற்சி, ஹவாலா மோசடி ஆகிய வழக்குகளை நடத்தி வருகிறேன். எந்த நேரத்திலும் என் உயிர் போகலாம். ஆனாலும், கல்கி பகவானுக்குக் கடவுளாவது தண்டனை தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்! என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சித்தூர், வரதபாளையத்தில் உள்ள கல்கி பகவான் தலைமை ஆசிரம செயலாளர் நமன் தாஸாவிடம் விளக்கம் கேட்டோம். கல்கி பகவான் மீது விஸ்வநாத் சுவாமி மூன்று வழக்கு போட்டிருக்கிறார். அதில் ஒரு வழக்கு தள்ளுபடியாகி விட்டது, மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கல்கி பகவான் மீது கூறப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று நாங்கள் சொல்வதைவிட, நீதிமன்றம் அறிவிப்பதே சரியாக இருக்கும்! என்கிறார்.

நன்றி: இரா.வினோத்
(ஜூனியர் விகடன், 7.7.2010)

6 comments:

samuraivel said...

on your blogger you always attacking Hindu ideology,why you didn't attack Christian and Muslim ideology? I think if you attack Hindu ideology means no one will protest against you...but if you attack Christian,Muslim ideology means may be you will not post next issue....i am very sorry to say....but this is true....

chain said...

excellently said samuraivel,
How come these dogs will bark against their master's religion when they are feeding bones to them........
Just happened to reach the blog through a googlesearch
absolute rubbish!!!! they seem a sidekick (eduppu)to ruling party.. how can we expect a unbiased blog from them... Goodbye to all the mongrels inhere... Dare u write a single post against ur so called religion christianity

chain said...

d

நம்பி said...

//samuraivel said...

on your blogger you always attacking Hindu ideology,why you didn't attack Christian and Muslim ideology? I think if you attack Hindu ideology means no one will protest against you...but if you attack Christian,Muslim ideology means may be you will not post next issue....i am very sorry to say....but this is true....
July 7, 2010 11:38 PM //

//Blogger chain said...

excellently said samuraivel,
How come these dogs will bark against their master's religion when they are feeding bones to them........
Just happened to reach the blog through a googlesearch
absolute rubbish!!!! they seem a sidekick (eduppu)to ruling party.. how can we expect a unbiased blog from them... Goodbye to all the mongrels inhere... Dare u write a single post against ur so called religion christianity

July 12, 2010 10:19 AM//


அது என்னய்யா இது...எப்ப பார்த்தாலும் சின்னப்புள்ளைங்க மாதிரி கம்பிளையின்ட் பன்னிட்டிருக்க...என்னை எப்பவுமே திட்டிட்டேயிருக்கே...அவனை திட்டவே மாட்டங்கிறீங்களே என்று சின்னப்பசங்க.... டீச்சர் கிட்டே, பெற்றோர் கிட்டே, அடுத்த குழந்தையை, மாணவரை, சகோதரனை காட்டி சொல்லிக் கொண்டேயிருக்கும்..கம்பிளையின்ட பண்ணிக்கொண்டேயிருக்கும்....நீங்க இன்னும் விரல் சப்புற குழந்தையிலேயிருந்து மாறவேயில்லையா...

இந்துவை திட்டிக்கினே கீர கிருத்துவனை, முகம்மதியரை திட்டவே மாட்டேங்கற...என்று அழுவற...முதல்ல இங்க இருக்கறதை, நீ செஞ்சிகிட்டு வர்றதை தப்பு தப்பு, இவ்வளவு காலம் செஞ்சிகிட்டு வர்ற கொடுமையை தவறு இனி செய்யவேக்கூடாது என்று ஓத்துக்க ராசா...தோப்புக்கரணம் போட்டு ஒத்துக்க...அதை ஒரு இடத்திலேயும் ஓத்துக்க மாட்டேங்கிற...மேல மேல கொடுமையைத்தான் பண்ணுவ என்கிற அளவில தான் உன் புத்திகெட்ட பின்னூட்டமே இருக்கு...

அந்தந்த இடத்திலே, மதத்திலே என்னென்ன எழவு எடுத்த விஷயம் இருக்கோ அதை அப்ப்ப காரி முழிஞ்சிகிட்டே தான் இருப்போம்...எந்தளவுக்கு முட்டாள் தனங்கள் இருக்கோ அதை சுட்டிக்காட்டி கொண்டேயேதான் இருப்போம்...இந்த எழவு ஆரிய பார்ப்பன இந்து மதத்திலே தான் எக்கசக்க பிராடுத்தனங்கள் எல்லாம் இழிவுகளும் உண்டு என்று எல்லா இடத்திலேயும் எழுதி போட்டாச்சு ரொம்ப காலமா சொல்லியாச்சு..பெரியார் எப்பவோ சொல்லிட்டாரு, சொல்லிகிட்டே வந்திருக்காரு..... இன்னும் 1947 க்கு முன்னாடியிலேயிருந்து நீ வெளியே வரவேயில்லையா...? .இன்னும் தேய்ஞ்சு போன ரெக்கார்டு மாதிரி அதையே கூவிக்கினு கீறியே...

இந்த மாதிரி நீ பணி செய்யற இடத்துல பேசினா உன்னை வேலையை விட்டே தூக்கிடுவா தெரியுமில்லே...ஏண்டா இந்த கணக்கை தப்பா எழுதியிருக்க என்று மேல் அலுவலர் கேட்டா அவன் தப்பா எழுதலியா என்றா அலுவலருக்கிட்டே சொல்லுவே..அங்க மட்டும் உஷாரா வாயை மூடிக்கிட்டு போயிடுவே...(ஏன்னா அது பொழைப்பு, காசு பார்க்கணுமே!)...என்னய்யா எழவெடுத்த பின்னூட்ட பதில்...என்னதான் அப்படி படிச்ச பள்ளிக்கூடத்தில...போய் படிச்சதையை இன்னும் 15 வருஷத்துக்கு 1 வதிலேயிருந்து திரும்ப படி...அப்பவாவது புத்தி வருதா என்று பார்க்கலாம்...

என்ன ஐடியாலஜி இதுல இங்கிலிபீஸ்ல வேற எழுதற என்ன எழவு ஐடியாலஜி எல்லாத்தையும் தான் புட்டு புட்டு வைச்சாச்சே...அதுக்கு ஒன்னும் பதில் சொல்லி கழட்ட முடியல...

அவனை பத்தி எழுது இவனை பத்தி எழுது என்று டைரக்ஷன் கொடுக்கறே...உன்னை மாதிரி முட்டாளை எல்லாம் இந்த நாடு வெச்சிகிட்டிருக்கு பாரு இதுவே பெரிய விஷயம்...உனக்கெல்லாம் ஒருத்தன் வேலை வேற கொடுக்கறான்...அவனை ஜோட்டாலேயே அடிக்கணும்.

என்ன சொன்னாலும் எழவெடுத்த மண்டைல உறைக்க மாட்டேங்குதே...

ANGOOR said...

Try to read here this article

visit here too :

http://www.saivaneri.org/eswaramoorthypillai/suyamariyathai-iyakkam.htm

Jai said...

நண்பர்களே,

ஓவியா ஒரு என்று உங்களுக்கு தெரியாதா?
அவருக்கு கேள்விகேட்க மட்டுமே தெரியும். நாம் கேள்வி கேட்டால் பதில் கூற தெரியாது.

இவர் வீரமணி குலைப்பதை, திருப்பி குலைப்பவர் ஓவியா அவர்கள்.

அப்படிதானே ஓவியா!