Search This Blog

6.7.10

கோத்திரம் என்றால் என்ன?யார் அந்த ரிஷிகள்?


ஜாட் மக்களின் கோத்திரம்!

வடநாட்டில் குறிப்பாக ஜாட் சமுதாய மக்கள் வாழும் பகுதிகளில் நடைபெற்றுவரும் காட்டுவிலங்காண்டித்தனமான நடவடிக்கைகள் அண்மைக்காலத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஒரே கோத்திரத்தைச் சார்ந்தவர்களிடையே திருமணம் செய்துகொள்ளக் கூடாதாம். அப்படி செய்துகொண்டவர்களைக் கொலைகூட செய்துள்ளனர் என்பது எத்தகைய காட்டுவிலங்காண்டித்தனம் பிற்போக்குத்தனம்!

இந்து மதம் எத்தகைய வினோதமான பிற்போக்குத்தனமானது என்பதற்கு இத்தகு நிகழ்வுகளே போதுமானவையாகும்.

ஜாதிக்குள் திருமணம் செய்துகொள்ளவேண்டும் அதே நேரத்தில் கோத்திரத்திற்குள் திருமணம் செய்துகொள்ளக்கூடாதாம். இது என்ன விசித்திரம்?

கோத்திரம் என்றால் என்ன? இரு ரிஷிகளைத் தங்கள் சந்ததிக்கு முதல்வர்களாகக் கொண்ட பிரிவாம். யார் அந்த ரிஷிகள்? அவர்களின் பூர்வோத்திரம் என்ன? அவர்கள் எங்கு பிறந்தார்கள்? எப்பொழுது பிறந்தார்கள் என்று கேட்டால், எந்த சங்கராச்சாரியாருக்கும் தெரியாது எந்தப் பாகவதர்களுக்கும், உபநிஷத்து உபந்நியாசிகளுக்கும்கூடத் தெரியாது.

பொதுவாக ரிஷிகள் என்றாலே மனிதர்களுக்குப் பிறந்தது கிடையாது. கலைக்கோட்டு முனி மானுக்கும், ஜம்புகர் நரிக்கும், மாண்டவ்யர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், சவுனகர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும் சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும் பிறந்தார்கள் என்று வெட்கம் இன்றி நாகரிகம் சிறிதும் இன்றி, பகுத்தறிவு சிறிதுமின்றி காட்டுவிலங்காண்டி மனப்பான்மையில் எந்தக் காலத்திலேயோ, எந்த கிறுக்கனாலோ கிறுக்கி வைக்கப்பட்ட புராணக் குப்பைகளை நம்பி, செயற்கை உயிர் உருவாக்கப்படும் இந்த அறிவியல் காலகட்டத்திலும்கூட, கோத்திரத்தைக் காட்டி சக மனிதர்களைக் கொலை செய்கிறார்கள் என்றால், இந்த நாடு சுதந்திர நாடுதானா? இந்நாட்டு மக்கள் மனிதர்களாகத்தான் வாழ்கிறார்களா என்ற கேள்வி எழத்தானே செய்யும்?

எவ்வளவு காலத்திற்குத் தான் படித்தவர்கள் சிந்திப்பவர்கள் பொறுமைக் கழுதையாகக் குனிந்து கிடப்பார்கள்? காஜியாபாத் அருகில் உள்ள சிக்கந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்சிங் என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஷீத்தல் என்ற ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

ஊரார் எதிர்ப்புக்கு அஞ்சி இரண்டாண்டு காலம் ஊரை விட்டு வெளியே சென்ற-வர்கள், இரண்டாண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு வந்த நிலையில், பழையதை மறக்காமல் ஊர் கூட்டம் கூட்டி கிராமத்தைவிட்டு வெளியேற தீர்ப்பு சொன்னார்களாம்.

அந்த இணையரோ அதற்கெல்லாம் அஞ்சாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

காவல் துறையும் பாதுகாப்புக் கொடுப்பதாகக் கூறியுள்ளது. சட்டத்துக்கு விரோதமாக பழைய பத்தாம் பசலித்தனமான பஞ்சாங்கக் குட்டையில் மூழ்கிக் கிடக்கும் மக்களிடத்திலே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சமூக நல அமைப்புகள் ஈடுபடவேண்டும். அரசேகூட செய்தித் துறை சார்பில் சிறு நாடகங்களைத் தயாரித்து அம்மக்கள் மத்தியில் மண்டிக்கிடக்கும் மூடக் களைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

நீதித்துறையும், துணிந்து சில தீர்ப்புகளைக் கூறி, தம் பங்குக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

தந்தை பெரியார் கொள்கைகள் வட நாட்டுக்கு எந்த அளவு தேவை என்பதும், அந்த வகையில் தமிழ்நாடு எந்த அளவுக்கு வளர்ச்சித் திசையில் உள்ளது என்பதும் சிந்தித்து ஒப்புக்கொள்ளப்படவேண்டியதாகும்.

----------------------- ”விடுதலை” 6-7-2010

2 comments:

Shanker Shyam Sundhar said...

See, if u marriage in the same gothra, the probability of having Genetic disorders is more.. this is scientifically proved.. B coz, if two persons have same gothra, then they are siblings. U cant marry ur sister or brother rite?? And for ur kind info, the greatest geneticist Theodosius Dobzhansky said "caste system in India is the grandest and the most successful geneic experiment ever performed on man" and many research institutes including CCMB, Hyderabad has proof for that.. Plz be scientific.. Of course one cannot expect any scientific knowledge from u ppl..

techguru said...

hello do some research on genetics and then tell your comment .. dont blame our indian system .even we are against caste and other blind beliefs.. i dont believe in gotra but if u are so interested in abolishing these beliefs y periyar kalagam or draqvidar kalgam do some research scientifically and prove these are bad practices in india.