Search This Blog

17.1.15

தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பதில்

தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்?


(தமிழ் மொழி, இலக்கியங்கள் குறித்த தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு திடீர்த் தமிழ்ப் பற்றாளர்களும், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியமும் காட்டும் எதிர்ப்புகளுக்கு அன்றே மிகத் தெளிவாக பதில் அறைந்திருக்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். )

குயில் இதழ்களிலிருந்து புரட்சிக் கவிஞரின் கேட்டலும் கிளத்தலும்..... 

கே: சிலப்பதிகாரம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ஆரியத்தைத் தமிழரிடம் புகுத்தும் நோக்கமுடையது என்று பெரியார் சொல்லலாமா?


கி: கதையமைப்பு நன்று. தமிழர் வாழ்க்கை முறைகள் சில நல்லன. பொருந்தாதவை பகுத்தறிவுக் கொவ்வாதவையாய் இருக்கின்றன. பாடம் சொல்லும் புலவர்கள் இவைகளை மாணவர்கட்கு எடுத்து விளக்குவதில்லை.

அதனால் ஆரியம் தமிழகத்தில் வலியுறுகின்றது. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம், பண்பாடுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. புதியதொரு சிலப்பதிகாரம் எழுதிக் கொள்ளலாமன்றோ!


கே: தொல்காப்பியம் ஒரு தமிழனால் செய்யப்படவில்லை. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம் அதில் மறுக்கப்படுகின்றன என்று கூறலாமா பெரியார்?


கி: ஆயிரம் முறை கூறலாம். வெள்ளை வாரணனாரும் பிறரும், தொல்காப்பியத்தில் பார்ப்பனரைப் பற்றிய செய்யுட்களை இடைச் செருகல் செய்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

இடைச் செருகல்களை நீக்கிப் பதிப்பிக்கலா-மன்றோ புலவர்கள்! செய்யட்டும் செய்த பிறகு பெரியார் அவ்வாறு கூற மாட்டார்.

                        


------------------------------------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (குயில் 16.2.1960) 

* * *

கே: தமிழரசர்கள் முட்டாள்கள்; காட்டுமிராண்டிகள் என்று பெரியார் சொல்லலாமா?

கி: ஏன் சொல்லக் கூடாது? தெருவில் கிடக்கும் நாய் விட்டையில் சிவனைக் கண்டான். கண்டவன் சும்மாவா இருந்தான். கோவில் கட்டி அதில் நிறுவிக் கும்பிடவும் வைத்தான்.இப்படி ஒரு தமிழரசன்.

வடநாட்டினின்று ஆரியப் பார்ப்பனர்களை அழைத்து தமிழர் மேல் ஏறிச் சவாரி செய்யச் சொல்லுகிறான். இப்படி ஒரு தமிழரசன்! இப்படிப்பட்டவர்கள் எல்லாம் பிற்கால மன்னர் தாமே அதற்கு முற்காலத்தில் இருந்தவர்கள் நாகரிகம் உள்ளவர்களல்லவா என்று கூறலாம்.

நாகரிகம் உள்ளவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் ஆகிய இருவகையாரில் கொள்கையில் வெற்றி பெற்றவர்கள் எவர்?

நாகரிகம் இல்லாதவரல்லவா? அவர் கட்டிய கோவில், அவர் காட்டிய நாய் விட்டைகள் தாமே இன்று ஆட்சி நடத்துகின்றன?


தமிழகத்தில் பற்றுள்ள புலவர்கள், நாகரிக-மில்லாதவர் கண்ட கோவில் நாய் விட்டை-களை ஒதுக்கியும், நாகரிகம் கொண்டிருந்த மன்னரின் நாட்டுத் தொண்டைப் போற்றியும் நூற்கள் செய்ததுண்டா? செய்ய வேண்டு-மல்லவா! அவ்வாறு அவர்களைச் செய்யத் தூண்டுவதுதான் பெரியாரின் பேச்சு!


கே: தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்?


கி: இராமாயணத்தையும் பாரதத்தையும் ஆரியரின் காட்டுமிராண்டித்தனத்தைப் பின்பற்றி எழுந்த புராணம் முதலியவற்றையும் நம் இலக்கியம் நம் இலக்கியம் என்று கூறுவதன்றி தமிழர் இலக்கியங்கள் இன்னின்னவை என்று எடுத்துக் காட்டும் வலி இருந்ததா புலவர்களிடம்? அமைச்சர்களிடம்?


தமிழிலக்கியத்தை முன்னுக்குக் கொண்டு வாருங்கள், அவைகளைப் பின்பற்றி இலக்கியத்தைக் குவியுங்கள். சீர்திருத்தக்-காரர்களை எதிர்ப்பதன் மூலம் வயிறு வளர்க்க எண்ணாதீர்கள் என்பதுதான் பெரியார் சொல்வதன் பொருள்.


      ----------------------------------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (குயில் 23.2.1960)

31 comments:

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

மதன்மோகன் மாளவியா காங்கிரஸ்காரராக இருந்து லக்னோ உடன்பாட்டின்படி முஸ்லீம்களுக்குத் தொகுதி ஒதுக்கீட்டையும், கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்பதையும், எதிர்த்தார். 1928இல் சைமன் குழுவுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். பனாரஸ் (காசி) ஹிந்து பல்கலைக் கழகத்தை நிறுவினார். இவருக்கு பாரத ரத்னா விருதாம்.

சிதம்பரத்தில் அண்ணாமலைச் செட்டியாரின் நோக்கம் நிறைவேறுவதற்கு பி.டி. இராசன், பெரியார் ஈ.வெ. இராமசாமி போன்ற பலரும் துணை நின்று அன்றைய ஆங்கிலேயர் ஆளுனரைச்சந்தித்து 1928ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டம் கொண்டுவர வழி வகுத்தார். பெரியார் அவர்களுக்கு யுனஸ்கோ விருது கொடுத்து சிறப்பு செய்தது.
எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page2/%20_94497.html#ixzz3PEHvKycD

தமிழ் ஓவியா said...

சுபகாரியங்கள் நடத்திட அழுக்குப் பிடித்த அய்யரை நாங்கள் அழைப்பதில்லை

பெண் வீட்டாரோ ஆன்மீ கத்தில் ஊறிப் போன குடும்பம். எங்கள் குடும்பமும் (மண மகன்) சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட குடும்ப மாகத்தான் இருந்தது.

எங்கள் அண்ணன் க. இராமநாதன் அவர்கள் வழிகாட்டுதலால் ஆன்மீகம் வெறும் புரட்டு, மோசடி, கற்பனை என்று அறிந்து கொண்டபின் நாங்கள் நிரந்தர நாத்திகர்களாக மாறினோம்.

இந்த நேரத்தில் என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தேன். எங்கள் வீடு கூரை வீடுதான் என்றார்
எங்களுக்கு பொருத்தமான ஒரு இடம் அமைந்தது. மணமகளின் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு, அம்மா எங்கள் வீடு கூரை வீடுதான். நீங்கள் வந்து பாருங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னார்.

உடனே நாங்கள் சென்று அவர்கள் வீட்டைப் பார்த்து விட்டு அய்யா வீடு எப்படி இருந்தால் என்ன, எங்களுக்கு குடும்ப பாரம்பரியம்தான் முக்கியம் என்று கூறி நிச்சயம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தோம். ஆனால் ஒரு கண்டிஷன்.

அய்யர் தலைமை ஏற்று நடத்திட ஏற்க மாட்டோம் என்று கண்டிஷன் போட்டோம். இது என்ன புதுமையாக இருக்கிறதே! எங்கள் வழக்கப்படி அய்யர் தலைமை ஏற்று தானே சுயகாரியங்களை செய்து வருகிறோம் என்றார் பெண்ணின் அப்பா சுபகாரியங்களுக்கு அழுக்கு பிடித்த அய்யரை ஏன் அழைக்க வேண்டும்? என்று நான் கேட்டேன்.

நம்மை கீழ் ஜாதி என்று அவன் பாஷையில் திட்டி விட்டு நம்மிடமே காசு பறிக்கிறான் என்று கூறினேன். அதற்கு அவர் ஆமாங்க நமக்கு தெரியாத மந்திரத்தைக் கூறிவிட்டு ஆயிரம், இரண் டாயிரம் பணம் கேட்கிறான் என்றார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சாமி கும்பிட ஆரம்பித்தேன். திருமணமும் அய்யர் இல்லாமல் தான் நடத்து வீர்களா? என்றார். ஆமாம் என்று சொன்னதோடு விடுதலையில் வந்த காஞ்சி சங்கராச்சாரி எழுதிய (தெய்வத்தின் குரல் பாகம் - 2 பக்கம் 874இல்) இந்து திருமண மந்திரமும் அதன் பொருளும் என்ற செய்தியை ஜெராக்ஸ் எடுத்து அவரிடம் காண்பித்தேன்.

அதை அவர் படித்துவிட்டு நானும் 30 வருஷமாக சாமி கும்பிடாமல் தான் இருந்தேன் நான் செய்து வந்த தொழிலில் எனக்கு நஷ்டம் ஏற்பட்ட பிறகு தொழிலில் மீண்டும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் சாமி கும்பிட ஆரம்பித்தேன் என்று கூறியதோடு அய்யர் நம்மை இவ்வளவு மோசமாக இழிவு படுத்துகிறானா? என்று கூறியதோடு தாங்கள் சுயமரியாதைத் திருமணம் நடத்திட முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்றார்.

எந்த செய்தியாக இருந்தாலும் சொல்வதை ஆதாரத்துடன் எடுத்து கூறினால் அதில் நூற்றுக்கு நூறு வெற்றி பெறலாம். இது உறுதி.

- சி. அம்பிகா, நிரந்த நாத்திகர் கரிக்குளம்

Read more: http://viduthalai.in/page3/94498.html#ixzz3PEIHJHTM

தமிழ் ஓவியா said...

எதை நோக்கி செல்கிறது இந்தியா!

ஊழல், ஊழல், ஊழல் - என்று
ஊதி, ஊதி ஊரைச் சுற்றி வந்தார்கள்!
ஊழலை ஓழிப்போம்!
இந்தியாவை உயர்த்துவோம்! - என்று
ஊரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள்!
ஊரை (நாட்டை) ஆள அதிகாரம் வந்தவுடன்
ஊழல் என்று கூறுவதை ஒழித்தார்கள்!

மக்களை, மனிதத்தை மறந்து
மதம் மதம் மதம் என்று
மந்திரிகள் மார்த்தட்டி கூறுகிறார்கள்!
மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே
நாட்டின் தேசியவாதி என்று
நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள்.

நாளும் ஒரு மதப் பேச்சு
நாட்டிலும், ஏட்டிலும் மனிதம் போச்சு!
அதன் விளைவு
காந்தியைச் சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில்
கோயில், சிலை அமைத்து வழிபட
இந்து மகாசபா ஏற்பாட்டில்...
ஜனவரி 30ஆம் தேதி திறப்பு விழா!
மனிதப் பற்றை மறக்கடித்து!
மதப் பற்றை வளர்க்கிறார்கள்!

எதை நோக்கிச் செல்கிறது? இந்தியா!
வளர்ச்சி வேண்டும் என்று வாக்களித்த
ஏழை -எளிய மக்கள் - என்றென்றும்
ஏழைகளாக வாழ வழி செய்ய
எல்லாம் தனியார் மயம்!
அன்று

ஆங்கிலேயர்கள் வாணிபம் செய்ய வந்து
நம்மை அடிமையாக்கினார்கள்!
இன்று அந்நிய முதலீடு என்ற பெயரில்
நம் அரசே நம்மை அடிமையாக்குகிறது!
அதுதான் புதிய பொருளாதாரக் கொள்கை!
நம் உற்பத்தித் திறனை நாமே இழக்க
வழிவகை செய்யும் கொள்கை!
தாராளமயமாக்கல் உலகமயமாக்கல் என்று
அந்நிய பொருள்களை வாங்கும் கொள்கை!
பிறகு எப்படிப் பெருகும் நாம் நாட்டு உற்பத்தி?

வரிப் பாக்கி செலுத்தாத
அந்நிய தனியார் நிறுவனங்களுக்கு,
வாரி வாரிக் கடன் கொடுக்கும்
நம் நாட்டு வங்கிகள்
வசதி இல்லா ஏழை மாணவனுக்கு
கல்விக் கடன் கொடுக்க
வீட்டை அடமானம் கேட்கிறது!

ஏமாற்று நிறுவனங்களிடம்
வரி வசூலிக்க தெரியாத இந்திய அரசோ!
இந்தியாவை அடமானம் வைத்து
உலக வங்கியில் கடன் வாங்குகிறது!
பிறகு எங்கு நாம் முன்னேறுவது?
உலகமே மனித அறிவுக்கும்
அறிவியலுக்கும் முக்கியத்துவம்
கொடுத்து முன்னேறும்! இக்காலத்தில்
நம் நாடும் நாட்டை ஆளும் அரசும்
மதத்திற்கும் மதம் சார்ந்த செயலுக்கும்
முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது
பிறகு எப்படி பெருகும் அமைதியும் ஒற்றுமையும்?

உலக அரங்கில் நாம் முன்னேற
அறிவும், கல்வியும், அறிவியலும் தேவையா?
அல்லது
மதமும், மதச்சார்ந்த செயல்களும் தேவையா?
சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்களும் மக்களும்!
இன்று நாம் சிந்திக்க மறுத்தால்!
நாளை நம் பிள்ளைகளுக்கு இல்லாமல் போகும்
அமைதியும் அறிவும் நிறைந்த அழகு வாழ்க்கை!

சிந்தியுங்கள் - செயல்படுங்கள் குரல் கொடுங்கள்
மனித அறிவுக்கும் மனித நேயத்துக்கும் எதிராக செயல்படும்
ஆளாக இருந்தாலும் அரசாக இருந்தாலும்
கண்டிப்புடன் கண்டனக் குரல் கொடுங்கள்!
மனிதநேயத்தைக் காப்போம்!
இந்தியாவை மீட்போம்!

- க. பாலன்

Read more: http://viduthalai.in/page3/94499.html#ixzz3PEIOnR8X

தமிழ் ஓவியா said...

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிகின்றதா?

சபரிமலையிலுள்ள பொன்னம்பல மேட்டில் இப்பொழுது மகரஜோதி தெரிகின்றது என்று சொல்வது பொய். பல ஆண்டுகளாக அங்கே மகரஜோதி தெரியவில்லை. மகரஜோதி என்பது அதிசயமான ஒளி அல்ல.

அந்தப் பகுதியில் வாழ்ந்த காட்டுவாசிகள் இரவில் வெளிச்சத்துக்காக ஏற்றிய தீப்பந்தங்களின் ஒளிதான் அது. அதைப் பார்த்த சபரிமலை அய்யப்பன் கோயில் நிர்வாகம், பக்தர்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதற்காக காட்டுவாசிகளை விரட்டிவிட்டு அவர்களே அங்கே தீப் பந்தம் கொளுத்தினார்கள்.

பகுத்தறி வாளர்கள் அங்கே சென்று உண்மையை வெளிக்கொண்டு வர முயன்றதால் அடிதடி நடந்தது. இதற்குப் பிறகு அங்கே மகரஜோதியை ஏற்றுவதில்லை, அதனால் மகரவிளக்கும் தெரிவதில்லை. நான் ஆண்டு தோறும் சபரிமலை சென்று மகரஜோதி தெரிகின்றதா என்று பார்க்கின்றேன். தெரியவே இல்லை.

இப்படிச் சொன்னவர் நாத்திகர் அல்ல. ஏதோ ஓர் ஆற்றல் நம்மை மிஞ்சி இருக்கின்றது என்று நம்பக்கூடிய தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் இவ்வாறு சொன்னார். தஞ்சாவூரிலிருந்து திருநெல்வேலிக்கு வந்துவிட்டு, அங்கிருந்து பயணியர் தொடர்வண்டியில் திருச்செந்தூர் செல்லும்பொழுது அவர் கூறியது இது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தின் வட பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் திருப் பதிக்கும் குருவாயூருக்கும் அடுத்தபடி யாக அதிக வருவாயை ஈட்டும் கோயிலாகும்.

இமயமலையிலுள்ள பத்ரிநாத் - கேதார் நாத்துக்கும் காஷ்மீரில் உள்ள அமர்நாத்துக்கும் சென்றவர்கள், சபரி மலைக்குச் செல்வதை எண்ணி வியப்படைய மாட்டார்கள்.

1920 வரை பொன்னம்பல மேட்டி லுள்ள மகர விளக்கைப் பற்றி எவரும் பேசியதில்லை என்கின்றார் காலஞ் சென்ற பேராசிரியர் ஏ.டி.கோவூர் அவர்கள். 1940 க்குப் பிறகு தான் பொன் னம்பல மேட்டிலுள்ள அந்த ஒளியைப் பற்றிய கதைகள் பரவின. இந்த இடைப் பட்ட காலத்தில்தான் காட்டுவாசிகள் அந்தப் பகுதியில் குடியேறியிருக்க வேண்டும்.

சபரிமலைக்கருகில் இதுவரை மனித பாதச்சுவடே படாத பொன்னம்பல மேடு சபரிமலை பொன்னம்பல மேடு என்ற மலையில்தான் அற்புதமான இந்த விளக்கு தானாகவே எரிகின்றது என்று ஒரு கூட்டத்தினர் பரப்பினார் கள்.

வேறு சிலரோ, பக்தர்களைப் பார்க்க அய்யப்பன் தேவலோகத்திலி ருந்து எழுந்தருளும்பொழுது உண்டா கும் ஒளியே அது என்றார்கள். கேர ளத்திலுள்ள பத்திரிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டு இதைப்பற்றிய கதைகளை பரபரப்பாக எழுதின. வானொலியும் இந்தப் பணியில் சளைக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

1940க்குப் பிறகு பரப்பப்பட்ட மகரவிளக்கின் தெய்வீகக் கதையை முதன்முதலாக உடைத்துக் காட்டியவர் கேரள பகுத்தறிவாளர் சங்கத்தைச் சேர்ந்த எம்.ஆர்.எஸ்.நாதன் என்பவர் தான்.

சபரிமலைக்கு அருகில் குடியிருந்த தாலும் தன் வேலையின் பொருட்டு அடிக்கடி சபரிமலை அய்யப்பன் கோயி லுக்குச் செல்வதாலும் பொன்னம்பல மேட்டிலுள்ள திவ்விய ஜோதிக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை இவரால் அறிய முடிந்தது. 1973 ஜனவரி 14ஆம் நாள் பொன்னம்பல மேட்டில் நடந்த வெடி நிகழ்ச்சியில் எம்.ஆர்.எஸ். நாதனும் கலந்து கொண்டார்.

பொன்னம்பல மேடு எவராலும் செல்ல முடியாத இடம் என்பது உண்மையல்ல. சபரிமலைக் கோயிலுக்கு வடகிழக்கில் உள்ள உப்புப்பாறை, படிஞ்ஞாறு பாறை (மேற்கு பாறை) ஆகிய மலைகளைக் கடந்து பச்சைக் கானகத்தின் உள்ளேயுள்ள பாதையில் சிறிது தூரம் சென்ற பிறகு மேற்கு நோக்கித் திரும்பினால் மேட்டை அடையலாம்.

சபரிமலையிலிருந்து நேராக பயணம் செய்து மேட்டை அடைவது பெரும் சிரமம். சபரிமலைக்கு நேராக உள்ள மேட்டின் பகுதி அவ்வளவுக்குச் செங்குத்தாக உள்ளது. ஆரம்ப காலக் கட்டங்களில் மேட்டின் மீது இரவு நேரங்களில் காணப்பட்ட ஒளிகளுக்கு தெய்வீகத் தொடர்புள்ள விளக்கமோ பின் னணியோ எவராலும் கொடுக்கப்பட வில்லை.

மேட்டில் மலைப்பண் டாரங்கள் வாழ்ந்திருந் தார்கள் என்றும் அவர்கள் தமது தேவைக்காக மாலை வேளைக்குப் பிறகு ஏற்றுகின்ற நெருப்பே சபரிமலையி லிருந்து பார்க்கும்போது காணப்படு கின்றது என்றும் அக்காலத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தது.

1973 ஜனவரி 13ஆம் நாள் பத்தனம் திட் டையிலிருந்து வாங்கிய சில வெடிப் பொருள்களுடன் கொல்லம்-கக்கி (பம்பை) வண்டியில் பம்பை அணைக்குச் சென்றார் எம்.ஆர். எஸ்.நாதன் அன்று அவருடன் பணி யாற்றிய கேரள மின்சார வாரியத் தோழர்களுடன் அவர் பம்பையில் தங்கினார்.

மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு சில தோழர்களுடன் பொன்னம்பல மேட்டுக்குச் சென்றார். அங்கே மின்சார வாரிய ஊழியர்களையும் வனக்காவலர் களையும் தவிர, கடக்கல் ராகவன் பிள்ளையின் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட பக்தர்களும் மேட்டில் இருந்தனர். அங்கே கம்பங் கட்டுக்கு தீ வைத்தது மகரஜோதி மோசடி வேலை தான் என்பதை நிரூபித்தார் நாதன். வானொலியே மலைத்துவிட்டது அன்று!

இதனால் கொந்தளித்த நிலையில் இருந்த கோயில் நிர்வாகம், அடுத்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக காவல்துறையினரையும் அழைத்து வந்திருந்தார்கள். அங்கே சென்ற நாதனையும் பிற பகுத்தறி வாளர்களையும் அடித்து உதைத் தார்கள் காவல் துறையினர். இதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் காவல் துறையின் உதவியுடனேயே மகரவிளக்கு ஏற்ற முடிவெடுத்தனர்.

1989 டிசம்பரில் மகர விளக்கு மோசடியைச் சுட்டிக்காட்டி, இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான சனல் இடமருகின் தலைமையில் பேரணி நடைபெற்றது.

இதற்குப் பிறகும் தேவஸ்வம் போர்டு தலைவர் ராமன் பட்டத்திரிப்பாடு, மகரஜோதி இறை அற்புதம்தான் என்றும் பொன்னம்பல மேட்டுக்கு பகுத்தறிவாளர்கள் சென்றால் காவல் துறையினர் அவர்களைத் தடுப்பார்கள் என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறினார். மகரஜோதி மோசடியை நடத்துகின்ற தேவஸ்வம் அதிகாரி களைக் கைது செய்வது அவசியம் என்ற சனல் இடமருகின் அறிக்கை ஆங்கில நாளேடுகளில் வெளிவந்தது.

இந்த கட்டத்தில் பொன்னம்பல மேட்டில் மகர விளக்கைக் கொளுத்து வது தேவஸ்வம் போர்டுதான் என்று கேரள முதலமைச்சர் ஈ.கே.நாயனார் அறிவித்தார். மேலும், பகுத்தறிவா ளர்கள் பேரணியாக பொன்னம்பல மேட்டுக்குச் செல்லக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பிறகு பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு ஏற்றப்பட வில்லை என்பதே உண்மை.
வந்தவாசியைச் சேர்ந்த போக்குவரத் துக்கழக ஊழியர் ஒருவர் 1994 இல் கூறியதாவது:- அய்ந்து ஆண்டுகளாக நான் மகரவிளக்கு ஏற்றும் நாளில் சபரிமலைக்குச் செல்கின்றேன். ஒரு நாள் கூட நான் மகர ஜோதியைப் பார்த்ததில்லை.

இதை மக்கள் உணர வேண்டும்.

இங்கே முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், சபரிமலையில்தான் காவல்துறையினரைப் பற்றிய அச்ச மின்றி ஹெராயின், கஞ்சா போன்ற போதைப் பொருள்களை எளிதாக விற்கவும் வாங்கவும் முடிகின்றதாம். சபரி மலையில் மக்கள் கூட்டம் அதிகரிப்ப தற்கான காரணம் இதுதானாம். இது அங்கே சென்று வந்த பக்தர்களே தெரிவித்த தகவல்தான்.

- த.அமலா, திருச்செந்தூர்

தமிழ் ஓவியா said...

அர்ச்சகப் பார்ப்பனர்களின் யோக்கியதை

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். அவற்றை நன்கு அறிந்தவர்கள்தான் பூசை செய்யலாம் என்பதுஆகமவிதி. ஆனால், தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களில் பெரும்பாலானோர் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்லர்.

பெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் சாதாரணமாக பக்தர்கள் வேண்டுகோள்களுக்கேற்ப செய்யப்படும் அர்ச்சனை செய்யத் தேவையான 108 நாமாவளிகள் மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். மிகப் பெரிய கோயில்களில்கூட, சிலர் அர்ச்சகர்கள் மட்டுமே ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆகமம் பற்றிய முழுமையான அறிவு பெற்றுள்ளனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயில், வடபழநி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற பெரிய கோயில்களில்கூட, பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத்துப் பூசை முறைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள்.

கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு அஷ்டோத்திரம், குறிப்பாக சில மந்திரங்கள், நாமாவளிகள், மட்டுமே தெரியும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள்.

அவர்களுடைய தந்தையார் செய்யும் பூசை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்தவர்கள் என்று சொல்ல இயலாது

(உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் எழுதிய கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்)

Read more: http://viduthalai.in/page5/94507.html#ixzz3PEJXzidd

தமிழ் ஓவியா said...

ஆத்மாவா?

அம்மி மிதிக்காமல்
அருந்ததி பார்க்காமல்
அய்யர் இன்றி
தலித் தலைமையில்
திருமணம் செய்த அப்பாவுக்கு
காரியம் செய்ய
ஆரியனை அணுகினேன்

எட்டு முழ வேட்டி
என்று ஆரம்பித்து
நாலுமுழ நீளத்திற்கு
லிஸ்ட் கொடுத்தார்
கேரட், பீன்ஸ்
கத்திரிக்காய் உருளைகிழங்கு
பச்சரிசி பத்து கிலோ
புளி, மிளகாய்
பருப்பு வகைகள்

வாழை இலை ஆறு
ஒரு குடும்பத்திற்கு
ஒரு வாரத்திற்குஆகும்போல
சாமி இதெல்லாம் எதற்கு?
அப்பாவியாய்க் கேட்ட

மகனைப் பார்த்து அய்யர் சொன்னார்
அப்பாவின் ஆத்மா
சாந்தி அடைய வேண்டாமா?
எனக்குள் ஒரு கேள்வி
அப்பாவின் ஆத்மாவா
அய்யரின் ஆத்மாவா?

கலவை: வ. தட்சணாமூர்த்தி சென்னை 51

Read more: http://viduthalai.in/page6/94517.html#ixzz3PEKTwyK0

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூறுகிறார்...

போப்பாண்டவர்களை விட, குருமார்களைவிட, பாதிரிகளைவிட, அர்ச்ச கர்களைவிட, ஆண்டவ னின் அடியார்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித் தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந் திருக்கிறான்.

மத ஸ்தாபனங்களைக் காட்டிலும், அதனைத் தோற்றுவித்த மூல கர்த்தாக்களைக் காட்டிலும், சித்தாந்தங்களை சிருஷ்டித்தவர்களைக் காட்டிலும் சாமியார்களைக் காட்டிலும், சாதாரண தீக் குச்சியைக் கண்டுபிடித்தவன் மக்கள் சமூகத்தின் சுக வாழ்விற்கும், சவுகரியத்திற்கும் எவ்வளவோ நன்மை புரிந்தவனாகிறான்.

- கடவுள்கள் - கோயில்கள் நூல்
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page5/94509.html#ixzz3PEKefHeG

தமிழ் ஓவியா said...

இப்படி ஒரு முதலமைச்சர்

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வாஸ்து, ஜோதிடம், பில்லி சூனியம், வவ்வால்... சாரி, ஏவல்... போன்ற மூட நம்பிக்கைகளில் அபார நம்பிக்கை உடையவர் என்பது, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.

தற்போது, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திர சேகர ராவும், வாஸ்து, ஜோதிடத்தின் மீது, கிறுக்கு பிடித்து அலைகிறார். சந்துருவின் ராசி எண், 6 என்பதால், தன் தொடர்புள்ள அனைத்துமே, 6 ஆக இருக்க வேண்டும் என்பதில், ரொம்பவே கெடுபிடியாக உள்ளார்.

சமீபத்தில், அய்தராபாத்தில் தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. 'சரியாக, மாலை, 6 மணி, 6 நிமிடம், 6 விநாடிக்கு அமைச்சரவை கூட்டம் தொடங்கும். அமைச்சர்கள் அனைவரும் குறித்த நேரத்துக்கு வந்து விட வேண்டும். யாராவது, ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் தொலைத்து விடுவேன்' என, தன், கிளி மூக்கை தடவியபடியே எச்சரிக்கை விட்டிருந்தார், சந்திர சேகர ராவ்.

இதனால், அமைச்சர்கள் அனைவரும், கூட்டம் தொடங்குவதற்கு பல மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து, காத்துக் கிடந்தனர். சந்திரசேகர ராவ் கூறிய, 6:00 மணி கடந்தது. அனைவரும், வழி மீது விழி வைத்து காத்திருந்தது தான், மிச்சம்; சந்துரு வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

ஒரு வழியாக, 45 நிமிட தாமதத்துக்கு பின், வந்த அவர், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல், இறுகிய முகத்துடன் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்.அமைச்சர்களோ, 'உலக நடிப்புடா சாமி... 'சாரி' கேட்டால், அவரின் இமேஜ் குறைந்து விடுமாம். அதனால் தான், முகத்தில் எந்த ரியாக் ஷனும் இல்லாமல் இருக்கிறார்' என, முணுமுணுத்தனர்.

Read more: http://viduthalai.in/page7/94521.html#ixzz3PELU78sl

தமிழ் ஓவியா said...

போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஜா விடுதலை

மத்திய புலனாய்வுத் துறை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது

இந்து நாளிதழ் தலையங்கம்

ஷொராபுதீன் ஷெயிக்-கின் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த குஜராத் மாநில முன்னாள் அமைச் சரும், தற்போதைய பா.ஜ.க .யின் அகில இந்திய தலை வருமான அமித் ஷா மும்பை விசேட நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருப்பது பா.ஜ.க.க்கு ஊக்கமளிப்பதாக வும், சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு ஒரு பின்னடைவாக வும் அமைந்துள்ளது.

தனது அரசியல் எஜமானர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதில் ஆர்வம் மிகுந்த அமைப்பு என்று தன் மீது சாட் டப்படும் குற்றச்சாட்டை மத்திய புலனாய்வுத் துறையால் மறுதளிக்க முடியாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா மீது போடப் பட்டுள்ளது என்ற பிரதிவாதி தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுவதாக மத்தியப் புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.பி. கோசாவி கூறியுள்ளதை அடுத்து, நாட் டின் பிரதான புலனாய்வுத் துறை அமைப்புக்கு தனது நம்பகத்தன் மையைத் தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது.

இந்த வழக்கில் விசாரணைக்கு அமித்ஷா உட்படவேண்டிய தேவை இல்லை என்று கருதிய நீதிபதி வழக்கில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்துள் ளதே, மத்திய புலனாய்வுத் துறையால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் தன்மையைப் பற்றி நிறைய கூறுவதாக உள்ளது.

புலனாய்வுத் துறையின் விசா ரணை நடைமுறையில் குறை காண்பது மட்டுமல்லாமல், அதன் செயல்பாடு களுக்கு அரசியல் காரணங்கள் கற்பித்துக் கூறப்படுகின்றன.

எப்படி இருந்தாலும், முன்பு ஆட்சிப் பொறுப் பில் இருந்த காங்கிரஸ் அரசை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக அமித்ஷா மீது பொய் யான குற்றச்சாட்டுகளை புலனாய்வுத் துறை பதிவு செய்திருப்பது உண்மை யானால், தற்போதைய பா.ஜ.க. தலை மையிலான அரசை மகிழ்விப்ப தற்காக ஷா மீது பலமில்லாத வழக்கு ஒன்றை தயாரித்து இருக்கக்கூடும் என்றும் கூறலாம் அல்லவா?

நாட்டில் அதிகாரம் மிகுந்த இரண்டாவது நபராகவும், பிரதமர் நரேந்திர மோடி யின் நெருங்கிய நண்பராகவும் அமித்ஷா விளங்குகிறார் என்பதில் அய்யமேது மில்லை. இந்தக் கேள்வியைத்தான் ஷொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் ஷெய்க்கும் எழுப்பியுள்ளார்.

அண்மைக் காலங்களில் மத்தியப் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகளைப் பார்க் கும்போது, இந்தக் கேள்வியை அவ் வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. அமித்ஷாவின் மீது வழக்கு தொடுக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு அர சியல் நிர்ப்பந்தங்கள் இருந் தன என்பது உண்மையா னால், இந்த வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவிக்க அதே போன்ற அரசியல் நிர்ப்பந்தங்கள் புலனாய்வுத் துறைக்கு அளிக்கப்பட்டி ருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

நீதிபதி கோசாவி தெரி வித்துள்ள கருத்துகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர் களின் செல்வாக்கில் இருந்து மத்திய புலனாய்வுத் துறையை விடுவிக்க வேண் டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.

மத்திய புலனாய்வுத் துறை இயக்குநரின் பதவிக் காலம் ஒரு குறிப்பிட்ட காலவரம்பு கொண்டது, அப்பதவிக்கான நியமனம் ஓர் உயர் நிலைக் குழுவினால் செய்யப்படுகிறது என்ற போதிலும், இந்த அமைப்பு இன்னமும் மத்திய அரசின் இழுப்பு களுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் இடம் அளிப்பதாகவே இருக்கக்கூடும்.

உயர்மட்டங்களில் நிலவும் லஞ்ச ஊழல் பற்றி விசாரிக்க மேற்கொள் ளப்பட்ட சிவில் உரிமை போராட் டத்தின் விளைவாக, 2013 ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதுடன், அரசியல் குறுக்கீட்டி லிருந்து மத்திய புலனாய்வுத் துறையைக் காப்பதற்கான சட்டவிதிகளும் அதில் சேர்க்கப் பட்டுள்ளன.

ஆனால், உயர் மட்டத்தில், அமித்ஷா சம்பந்தப் படுத்தப்பட்ட இந்த வழக்கு போன்ற அரசியல் உணர்வு மிகுந்த வழக்குகளில், உயர்நீதிமன்றங்கள் கடுமையான தொடர்ந்த கண் காணிப்பை மேற் கொள்ளாமல் போனால், புலனாய்வுத் துறையின் விசாரணை பணம் பெருத் தவர்கள், அதிகார பலம் பெற்றவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக் கவும், சரி செய்யப்பட இயன்றதாகவும் இருக்கக் கூடியதுதான்.

இந்த வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஷொராபுதீன் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே வழக்கின் சாட்சியங்கள் மறுபடியும் பரிசீலனைக்கு வரக்கூடும்.

இதில் நிச்சயமான ஏதேனும் ஒன்று இருக்கிறது என்றால், அமித்ஷாவுக்கு எதிரான இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை மேற் கொண்ட விசாரணை பொதுமக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பதுதான் அது.

நன்றி: தி ஹிந்து 01-.01_-2015

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page8/94523.html#ixzz3PEM3vvtB

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இ.சேவை

தங்கரதம் இழுக்க அன்னதானம் வழங்க நேர்த்திக்கடன் கழிக்க இ.சேவை மூலம் முன் கூட்டியே பதிவு செய்யும் முறையை இந்து அற நிலையத் துறை செய்துள் ளதாம். பக்கா பிசினஸ் இன்றைய ஆன்மிகம் என்பதற்கு வேறு என்ன தேவை?

Read more: http://viduthalai.in/e-paper/94574.html#ixzz3PGegLinR

தமிழ் ஓவியா said...

கீதை கூட்டமா? காங்கிரஸ் கூட்டமா?

காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய காரியங்களுக்கு இப்பொழுது ஜனக்கூட்டம் சேர்வதும் கஷ்டமாகிவிட்டதை அறிந்துப் புதிய வழிகளைக் கண்டுபிடித்திருக் கின்றார்கள் என்று தெரிகின்றது.

இன்று திரு. காந்தியவர்கள் தமது ராமராஜ்யப் பேச்சையும், பகவத்கீதைப் பிரபாவத்தையும் விட்டு விடுவாரானால், அவருக்கும் பொதுஜனங்களிடம் உள்ள மதிப்புக் குறைந்து போகும் என்பதில் அய்யமில்லை. பொதுஜனங்கள், தாங்கள் கொண்டிருக்கும் மூடநம்பிக்கை காரணமாக ராமராஜ்யம் பகவத் கீதை முதலிய வார்த்தை களைக் கேட்டே ஏமாறுகிறார்கள் என்பதில் அய்யமில்லை.

சென்ற 14.03.1932ல் கராச்சியில் காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசிசுவாமி கிருஷ்ணானந்தர் என்பவர் ஜவுளிக்கடை வீதியில் காங்கிரசின் பெயரால் கூட்டம் சேர்ப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்.

இரு தெருக்கள் சந்திக்கும் ஒரு சந்தியில் உட்கார்ந்து கொண்டு பகவத்கீதை பாராயணம் பண்ண ஆரம்பித்தார். உடனே அதைக் கேட்க ஜனக்கூட்டம் சேரத் தொடங்கிற்று. பிறகு வழக்கம்போல் போலீசார் வருவதும், கலகஞ் செய்வதும், கைது செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறின.

இவ்வாறு காங்கிரஸ் கூட்டம் கூட்டுவதால் என்ன அர்த்தமிருக்கிறது என்று தான் நாம் கேட்கிறோம். சாதாரண மாக மருந்து விற்கின்றவன் ஒருவன் ஒரு சந்தியில் நின்று கொண்டு தனது மருந்தைப் பற்றியும், அது தீர்க்கும் வியாதிகளைப் பற்றியும் பிரசங்கம் பண்ண ஆரம்பித்தால் அங்கும் வேடிக்கை பார்க்கத் திரளான ஜனங்கள் கூடி விடுகின்றனர்.

கழைக் கூத்தாடி ஒருவன் தனது கழைக்கோலை நட்டு வைத்து விட்டுத் தனது வாத்தியத்தை முழக்கத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடி விடுகின்றனர். செப்பிடுவித்தைக்காரன் ஒருவன் தனது கோணிப்பையை எடுத்து வைத்துக் கொண்டு தண்டு தளவாடங்களுடன் உட்கார்ந்து தனது சங்கதிகளை எடுத்து விடத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடி விடுவார்கள்.

பாம்பாட்டி ஒருவன் தனது பாம்புப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு தன் மகுடியை ஊத ஆரம்பிப்பானாயின் அங்கும் எண் ணிக்கையில்லாத மக்கள் கூடி விடுகின்றார்கள்.

இந்த அற் பமான காரியங்களுக்கே இவ்வளவு ஜனங்கள் கூடுவார் களாயின் சாதாரணமாக, பொது ஜனங்கள் உண்மையானவை யென்றும் கேட்டால், படித்தால் மோட்சமும் சகல சௌகரியமும் உண்டாகு மென்றும் நம்பிக் கொண்டிருக்கும் ராமாயண பாரத பாகவதம் முதலியவை களையும், பகவத்கீதையையும் பாராயணம் பண்ணத் தொடங்கினால், மூட நம்பிக்கை யையுடைய மக்கள் ஏராளமாகக் கூடுவார்கள் என்பதில் என்னதடை?

ஆகையால் மக்கள் மயங்கத் தகுந்த இதுபோன்ற காரியங்களைச் செய்து ஜனக் கூட்டத்தைச் சேர்த்து, அதை அரசியல் கூட்டமென்றும், காங்கிரஸ் கூட்டமென்றும், சொல்லி ஏமாற்றுவதுதான் ஒழுங்கா என்று கேட்கின்றோம். இத்தகைய காரணங்களின் மூலம் பொதுஜனங்கள் காங்கிரசை ஆதரிப்பதாகவும்; அரசாங்கத்தை வெறுப்பதாகவும் விளம்பரம் பண்ணுவதனால் வெள்ளைக்காரர்களோ மற்றவர் களோ ஏமாந்து விடுவார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகையால் தான் பொது ஜனங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால், அவர் களுடைய ஏமாற்றத்திற்குக் காரணமானமூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டு மென்று நாம் கூறி வருகின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.03.1932

Read more: http://viduthalai.in/page1/94478.html#ixzz3PGhKtBQb

தமிழ் ஓவியா said...

இனப்படுகொலையாளனுக்கு ஜனநாயகத் தீர்ப்பு முதல் படியே!


இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தும் கூட, தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்களர்களிடமும் தனக்கு நல்ல பெயர் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மகிந்த ராஜபக்சே, அந்நிலை மேலும் மோசமாவதற்குள் மூன்றாவது முறையாக அதிபராகிவிடலாம் என்று முடிவு செய்தார். இரண்டுமுறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற அரசியல் சட்ட அமைப்பையும், தன் போக்குக்கு வளைத்து, தன்னால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மொகான் பிரீசை வைத்து மூன்றாவது முறையாகப் போட்டியிட அனுமதியும் பெற்றுவிட்டார்.

அவருடைய ஆஸ்தான ஜோதிடரான சுமனதாச அபயகுணவர்த்தனாவும் அமோகமாக வெற்றிபெற்று விடுவீர்கள் என உறுதி வழங்க, திருப்பதி வெங்கியையும் தரிசித்துவிட்டு, தேர்தல் களத்திற்குத் தயாரானார் இராஜபக்சே. ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பத்தின் ஆட்டம் காரணமாக வெறுப்பிலிருந்த மக்கள், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட, மகிந்த ராஜபக்சேவின் முன்னாள் அமைச்சரான மைத்ரி பால சிறீசேனாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிபராக்கி யிருக்கின்றனர். இதில் தமிழர்களின் வாக்குகள் தான் மைத்ரி பாலவுக்கு வெற்றியை உறுதி செய்திருக் கின்றன. தமிழர்கள் விசயத்தில் மைத்ரி பால தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட மாட்டார் என்றாலும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு மக்கள் வழங்கியுள்ள தண்டனை இது. ஆனால், இது முடிவு அல்ல.

அயல்நாடுகளுக்குத் தப்பிச் செல்கிற முகாந்திரம் ராஜபக்சே குடும்பத்திடம் தெரிகிறது. அதைத் தடுத்து, உரிய பன்னாட்டு விசாரணக்கு உட்படுத்தி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தருவது அவசியமாகும். இதை மைத்ரி பால நடத்துவார் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும், உரிய அழுத்தம் தந்து அய்.நா மற்றும் உலக நாடுகள் பன்னாட்டு விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிருந்த சு.சாமி, ஊடகங்கள் உள்ளிட்ட கைக்கூலிகள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொள்வார்கள். என்ன, தனது ஆதரவு பெற்றவரும், தன்னைப் போலவே இனப்படுகொலை, உருட்டல்-மிரட்டல், அதிகாரப் போக்கு, அலங்கார பாவனை என்று அலைந்த ராஜபக்சே தோற்றதில் மோடிக்குத் தான் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கும்!

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வும் அதன் தலைவர்களும் மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்துகின்றனர். இது மோசமான விளைவு-களை ஏற்படுத்தும். இதை உணராமலேயே அவர்கள் தொடர்ந்து மக்களைத் தவறாக வழி நடத்துகின்றனர்.

- அகிலேஷ் யாதவ், உ.பி. முதல் அமைச்சர்

விநாயகனின் தலையில் யானையின் தலையைப் பொருத்தியதன் மூலம் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை தொடங்கிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் வரலாற்றைத் திரிப்பதாகும்.

இவ்வாறு திரிக்கப்படும் வரலாற்று உண்மைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுவது கவலைக்குரியது.

- இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில்

நமது நாட்டில் சட்டங்களுக்கும் நலத் திட்டங்களுக்கும் குறைவில்லை. ஆனால் அவற்றை அரசு இயந்திரம் சரியாக அமல்படுத்துவதில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள், சமூக_பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. நம் நாட்டில் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.

- நீதிபதி டி. முருகேசன், மனித உரிமை ஆணைய உறுப்பினர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது பெண்களின் சுதந்திரம் குறித்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பெண்கள் பல முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்-களாக உள்ளனர். இருந்தும் பெண் குழந்தைகள் இறப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. அய்.நா. அறிக்கையின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

சமூகத்தில் உள்ள அனைத்துத் தளங்களிலும் பெண்களின் பங்கை அதிகப்படுத்த வேண்டும். அதன்மூலம் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

- நீதிபதி ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு நிருவாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. திட்டக் கமிசனுக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்பிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம்தான் நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்தான் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கிவிடும்.

- தருண் கோகாய், அசாம் மாநில முதல் அமைச்சர்.

தற்போது முன்னேறி வருகின்ற இந்தக் காலம் அறிவுக் களஞ்சியங்களைக் கொண்ட உலகம் ஆகும். இந்த அறிவு உலகத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பாடப் புத்தகங்-களையும் தாண்டி மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டியது அவசியம் ஆகும். புத்தக வாசிப்பை சுகமான மற்றும் சுலபமான ஒரு அனுபவமாக மாணவர்கள் கருத வேண்டும்.

- சி.சைலேந்திர பாபு, ஏடிஜிபி தமிழக கடலோரக் காவல்படை

தமிழ் ஓவியா said...

கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே
திரைப்படம் விரைவில்

ஜனவரி 30 வெளியீடாம்

நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட தினமான நவம்பர் 15 அவரது நினைவு நாளாக கடந்த ஆண்டு (2014) மகராஷ்டிரா முழுவதும் கடைப்பிடிக்கப்-பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்-கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித் தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது:

நாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்து தேசத்திற்காகப் பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப் பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று.

இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடி வருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலைப் போற்றிப் பாதுகாத்து வருகிறோம். அதை அகண்ட பாரதமான பிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (காராச்சி,-பாகிஸ்தான்) கரைப்போம். இது எங்கள் சத்தியப் பிரமாணம்.

இதை வரும் தலைமுறைக்கு எடுத்துக்கூறவே இந்த நாளை உங்களுக்கு நினைவுப்-படுத்துகிறோம். வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே (தற்போது தேஷபக்த் கோட்சே என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட இருக்கிறோம்.

உண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். கோட்சேவுக்கு சிலை வைக்க இடங்-களைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறும் இவ்வமைப்பு இப்படியொரு படத்தை வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

குறுஞ்செய்தி


பிரம்மாவின் ஒரு தினத்தில் ஒருமுறை அதாவது நமது புராணம் என்றால் புருடா என்று பொருள்.

860,00,00,000 (860 கோடி) ஆண்டு-களுக்கு ஒரு முறை எந்த நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்குச் சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்தச் செய்தி, பகவத் கீதை உண்மையுருவில் என்று பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்து 1971ஆம் ஆண்டில் வெளியிடப்-பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது.

சத்ய யுகம் 1728000ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 4,32,000 ஆண்டுகள். மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படிச் சரியாகும்?

கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி-விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?! -

- க.அருள்மொழி, குடியாத்தம்

தமிழ் ஓவியா said...

இந்துத்துவா

கோட்சேவுக்கு சிலை

பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டு மதவெறியை எதிர்த்த காரணத்தால் அண்ணல் காந்தியாரை, அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக் கொலை நிரூபிக்கப்பட்டு, கோட்சேவிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், இந்துத்துவக் கொள்கைகளைத் தூக்கிப் பிடித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார்.

இது, நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற் குள்ளாகிக் கொண்டுள்ள நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப்பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையைத் திறக்க முடிவு செய்துள்ளதாம்.

இது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம்.

இதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்குச் சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக்கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது.

நாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலையில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்குச் சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது.

விரைவில் நாடெங்கும் கோட்சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார். கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில்தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில்தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார்.

அவருக்குப் புகலிடமும், திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்-தான். 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தர-விடப்பட்டு, இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம்.

காந்தியைக் கொலைசெய்வதற்கு முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுடப் பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களை முதலில் மறுத்த பா.ஜ.க. இப்போது மெல்ல மெல்ல கோட்சே ஒரு தேசபக்தன்தான் என்று சொல்லத் தொடங்கியுள்ளது. காந்தியைக் கொன்ற கோட்சேவின் இயக்கத் தலைவருக்கு பாரத ரத்னா கொடுத்த அரசு வேறு எப்படியிருக்கும்?

தமிழ்நாட்டில் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஒருவர் வேகமாக சுவரொட்டி அடித்து ஒட்டினார். ஈரோட்டில் அப்படிப் பரபரப்பை ஏற்படுத்திய சுபாஷ் சுவாமிநாதன் யார் தெரியுமா? இதோ நக்கீரன் (2015, ஜன. 03_06) இதழ் சொல்கிறது.
யார் இவர்? எதற்காக இந்தக் கொடிய கோரிக்கை? விசாரணையில் இறங்கினோம்.

100 நாளில் கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என்று திருச்சியில் பல நூறு மக்களிடம் வசூல் செய்து கோடீஸ்வரரான ரவிச்சந்திரனின் பார்ட்னராக இருந்தவர்தான் இந்த சுபாஷ் சுவாமிநாதன். பணமோசடி, முறைகேடுகள் என பல புகார்கள் இவர்மீது உள்ளன. அவற்றிலிருந்து தப்பிப்பதற் காகவே அகில பாரத இந்து மகா சபா கட்சி என்றொரு லெட்டர் பேடு கட்சியை ஆரம்பித்து அதன் இளைஞர் அணி தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர்.

எனக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பஜ்ரங்தள் எல்லாம் ஆதரவு தெரிவித்துள்ளன என்று பலரிடமும் தெரிவித் திருக்கிறார் இந்த சுபாஷ்.
அயோக்கியத்தனத்தின் பிறப்பிடமும் புகலிடமுமாக காவிதானே இருக்கிறது!

தமிழ் ஓவியா said...

-கி.தளபதிராஜ்

சனாதனப் பற்றாளரே
மாளவியா!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவைத் தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும்.



இந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களைத் தூக்கிப்பிடித்த சனாதனவாதி. தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப் பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம்.

அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும், தமிழ்நாட்டிற்கு வந்து பலமுறை மூக்குடைபட்டுத் திரும்பியவர் என்பதையும் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

1929இல் "சாஸ்திரம் அறிந்தவன் நான். நமக்கு ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்" என்று பேசிய மாளவியாவை எதிர்த்து "கிறிஸ்துவனையோ, மகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள்?" என்று கேட்க, அதற்கு "சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று நழுவியவர் மாளவியா.

"உங்கள் இந்து யூனிவர்சிட்டியில் ஈழவர்களைச் சேர்த்துக் கொள்வீர்களா?" என்ற கேள்விக்கு, "நீங்கள் புலையர்களைக் கல்லூரிகளில் சேர்ப்பீர்களா?" என ஆத்திரம் பொங்கக் கேட்டார் மாளவியா.

கூட்டத்தினர் எழுந்து ஏகோபித்த குரலில் "நாங்கள் சேர்த்துக் கொள்வோம். அதில் எங்களுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை" என்று சொல்ல, மாளவியா மூர்ச்சையாகிப் போனதாக அன்றைய குடிஅரசு எழுதியது.

தொடர்ந்து ஜாதியமைப்பை ஆதரித்துப் பேசிவந்த மாளவியாவைக் கண்டித்து மீண்டும் தலையங்கம் எழுதியது குடிஅரசு பத்திரிகை. "இந்து ஜாதிய அமைப்பில், எல்லா ஜாதியினருக்கும் ஒரே மாதிரியான சத்தியம் இருக்க முடியாது.

மற்றொருவன் சமைத்ததைப் பாவம் என்றும், மற்றொருவன் தொட்ட தண்ணீரைக் குடிப்பது தோஷம் என்றும், மற்றொருவன் பார்க்கச் சாப்பிடுவது நரகம் சித்திக்கக் கூடியது என்றும் பண்டித மாளவியா போன்ற 'உத்தம பிராமணர்'களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படி நினைப்பதே ஆணவமென்றும், அறிவீனம் என்றும் அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய, நாடு ஒற்றுமையும், சமத்துவமும் அடையாதென்றும், அதை ஒழிக்க சத்தியாகிரகம் செய்ய வேண்டுமென்றும் உண்மையான சமூகச் சீர்திருத்தக்காரர்களுக்குத் தோன்றலாம்"என்று குறிப்பிட்டிருந்தது.

தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் தொகுதியை மாளவியா எதிர்த்தபோது, பார்ப்பனியத்தைக் காப்பாற்ற மாளவியாவிற்கு எவ்வளவு அக்கறை உண்டோ அதுபோலவே பார்ப்பனியத்தை ஒழித்து மனிதத்தன்மையைப் பெற அம்பேத்கருக்கும், இரட்டைமலை சீனிசாசனுக்கும் உரிமை உண்டு என்று சொன்னார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.

பம்பாய் கல்பதேவியில், 1932ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி-யொன்றில் சமபந்தி போஜனம், கலப்பு மணம் இவற்றைப் பொறுத்தவரையில் ஜாதிக்கட்டுப்-பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது என்று பேசினார் மாளவியா.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் ஜாதி வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால் ஜாதிக்கட்டுப்பாடும், வருணாசிரம தருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்ற நாட்டில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும்.

"ஒவ்வொரு ஜாதிகளும் தமக்கு மேற்பட்ட ஜாதிகளுடனும், கீழ்ப்பட்ட ஜாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். பஞ்சமர் முதல் பார்ப்பனர் வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும் வரை ஜாதிகள் ஒழியாது. தீண்டாமையும் ஒழியாது.

இன்று இக்காரியங்களுக்குத் தடையாக இருப்பது இந்து மதமும், அதில் உள்ள வேத, புராண, இதிகாச, சாஸ்திரங்களும் அதைப் படித்துவிட்டுச் சொந்தப் புத்தியில்லாமல் இருக்கும் மாளவியா போன்ற மண்ணுருண்டை-களுமே ஆகும்" என்று மாளவியாவின் பேச்சிற்கு குடிஅரசு பதிலடி கொடுத்தது. அப்படிப்பட்ட ஒருவருக்குத்தான் தற்போது காவிக் கூட்டம் பாரத ரத்னா வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

தமிழில் திருமணத் திட்டம் உண்டா?

கேட்டல்: சரி, பெரியார் தமிழில் திருமணம் பற்றிய திட்டம் ஒன்றுமில்லை என்று கூறுகிறாரே?

கிளத்தல்: திருமண முறையில் கோடிக்-கணக்கான குப்பைகள், மூடச் செய்கைகள், முட்டாள்-தனமான செலவுகள், நடைமுறைகள், மானக்கேடான செயல்கள் சேர்ந்துள்ளன; இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி ஒதுக்கச் சொல்லுகிறவர் பெரியார் ஒருவர்தாம்! இவர் பேசுகின்ற முறையில் திருமணம் பற்றித் தமிழில் ஒரே இடமாக எங்கே விளக்கப்பட்டிருக்கின்றது.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (14.6.1960)

தமிழ் ஓவியா said...

தை தை தை என்றே பாடுவோம்!


பொங்கலோ பொங்கலுன்னு
பொங்கனும் மானுடம்
பொல்லாப்பு பொய்களெல்லாம்
பொசுங்கனும் மனிதரிடம்
எரியும் அடுப்பிலே
ஏழ்மை கருகட்டும்
கரும்பின் இனிப்பிலே
கசப்புகள் கழியட்டும்
தோரணத் தொங்கலில்
தோழமை மிளிரட்டும்
அழகுக் கோலங்களில்
அறிவு ஒளிரட்டும்
கபடி உறி விளையாட்டில் கள கட்டிடும் ஊரு
கதிரவனும் அரைத்தூக்கத்தில் கை கொட்டிடும் பாரு

கழனியிலே கதிர்மணிகள்
கவிதைகளாய் வெளிப்படும்
விவசாயியின் வியர்வைத் துளிகள்
விதைகளாய்த் துளிர்விடும்
உழுபவனின் விரல் அசைவில்
உழலும் நரிகள் வழிவிடும்
உழைப்பவனின் கைகளை
உலகம் வணங்கி வழிபடும்
இயற்கைக்கு நன்றி சொல்லும் இயல்பான திருவிழா
இதயங்கள் நலம் கொள்ளும் இதமான பெருவிழா

மாட்டு வண்டி ஓட்டத்தில்
மாவிலையும் குதித்தாடும்
சலங்கை ஒலி ஓசையில்
சகலமும் கூத்தாடும்
பறைகளின் கூட்டிசையில்
பனை மரமும் அசைந்தாடும்
குழந்தைகளின் கூக்குரலில்
குருவிகளும் இசைந்தாடும்
மனிதத்தை முன்னிறுத்தும் மகத்தான திருவிழா
மண்ணுக்கு மரியாதை அளித்திடும் பெருவிழா

மடிப்புக் களையா வேட்டிகள்
மங்கையரை நோக்கிடும்
துடிப்புக் கொண்ட தாவணிகள்
துள்ளலாய்த் தாக்கிடும்
இளையோரின் பானைகளில்
இளங்காதல் வழிந்திடும்
இணையதள காலத்தில்
இயற்கையும் மகிழ்ந்திடும்
தை தை தை என்றே பாடுவோம்
தைத் திங்கள் நாளிதைக் கொண்டாடுவோம்

- மணிமாறன் மகிழினி

தமிழ் ஓவியா said...

பத்திரிகையாளர்கள் படுகொலை

பிரச்சினை நிறைந்த இடங்கள், உள்நாட்டுப் போர் நடைபெறும் ஆபத்தான இடங்கள் என துணிச்சலுடன் சென்று செய்திகளைச் சேகரிக்கும்போது பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலைமை உள்ளது. 1993ஆம் ஆண்டி-லிருந்து இதுவரை 1056 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2004ஆம் ஆண்டிற்குப் பின்னர் பத்திரிகையாளர்கள் படுகொலையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1993ஆம் ஆண்டிலிருந்து ஈராக்கில் 166, சிரியாவில் 79, பிலிப்பைன்சில் 75, பாகிஸ்தானில் 56, சோமாலியாவில் 56, இந்தியாவில் 32 பேர் என்ற எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆறாம் இடத்திலிருக்கும் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10, ஆந்திராவில் 7 பேர் கொலை செய்யப்-பட்டுள்ளனர். கொல்லப்படும் பத்திரிகையாள-களில் மூன்றில் இரண்டு பேர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர்.

அல்லது போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் இரு பிரிவினர் இடையிலான மோதல் போன்ற நிலைகளில் செய்திகளைச் சேகரிக்கச் செல்லும்போது உயிரிழக்-கின்றனர். இந்தியாவில் 32 பேர் என இருப்பினும், இன்னும் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்-பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

புரட்சிப் பொங்கல்

பழைமைவாதப்
பஞ்சாங்கப்
படிப்பு வேண்டாம்!

மதவாத
மண்சரிவில்
மடிய வேண்டாம்!

ஜாதியெனும்
சாக்கடையில்
வீழ வேண்டாம்!

மூடமதிக்
குட்டையிலே
மூழ்க வேண்டாம்!

பெண்ணடிமைப்
பெருஞ்சேற்றில்
புதைய வேண்டாம்!

ஆரியத்தின்
கலாச்சார
வாடை வேண்டாம்!

பெரியாரை
ஒரு நாளும்
மறக்க வேண்டாம்!

பொங்கட்டும்
புரட்சிப்
பொங்கல்!

தமிழ் ஓவியா said...

பொங்கல் கவிதை

- கலைஞர்

மானத்திற்கு மறுபிறப்பு

ஞாயிறு போற்றுதும்;
ஞாயிறு போற்றுதும்!
சிலம்பொலி கேட்குது;
சிந்தையில் இனிக்குது!
ஆயிரம் நிலவுகள் ஆயிரம் மாதர்கள்;
ஆயிரம் கதிர்கள் ஆயிரம் ஆடவர்;
ஞாயிறு போற்றினர்!
ஞாயிறு போற்றினர்!
ஆயிரம் கோடியாய் ஆயினர் தமிழர்!
பாயிரம் பலப்பல பாடினர் தமிழர்!
ஞாயிறு போற்றியே கூடினர் பொங்கலில்!
ஞாயிறு போற்றியே ஆடினர் பொங்கலில்!
மாவிலை தோரணம் மஞ்சள் வாழை
கோவிலின் முரசம் கோலம் கண்டனர்!
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலமெனப்
பிரிந்து வாழினும் தமிழர் பண்பைப்
புரிந்து வாழ்ந்தனர்!
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றி மூத்தகுடி எனினும்
காடு கொன்று நாடாக்கக்
குளம் தொட்டு வளம் பெருக்கக் கற்றனர் அன்னார்!
வில் தோன்றும், தோள்களிலே - அது
வீரம் காட்டும்.
நெல் தோன்றும், வயல்களிலே - அது
வேளாண் திறத்தைக் காட்டும்.
சொல் தோன்றும் புதிது புதிதாக - அது
மொழியின் வளத்தைக் காட்டும்.
எழுத்து, சொல், இரண்டேயன்றி
பழுத்த நல் தொல்காப்பியன் - தமிழர்தம்
செழிப்பு மிகு வாழ்வுக்கும்
தொகுத்தளித்தான் இலக்கண நூல்!
கொய்யாக் கனித் தமிழால் - குறள்
நெய்தான் உலகுக்கு வள்ளுவனும்!
பெய்யா மழை பெய்தது போல் மகிழ்ச்சி கொள்வோம் - அவன்
பொய்யாமொழிக் கவி கேட்டு!

***
பல் முளைத்திடா மழலையருடன் பருவக் கிள்ளைகளுடன்
பண்பார் பிள்ளைகளுடன் பொங்கலோ பொங்கலெனப்
பொங்கும் மகிழ்வுடன் ஆடிப்பாடிடும் அழகுத் திருநாள்!
அன்புத் திருநாள்! அமுதத் திருநாள்! ஆம்; அன்றொரு நாள்!
இந்தப் பூமியில் ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை
என்றல்லவா வீரத்திற்கு இலக்கணம் தீட்டப் பட்டிருந்தது!
இன்றோ; இந்தத் தமிழ் நிலத்தில் வீரம், விலை கேட்கும் பொருளாகவும் - தீரம்,
திக்கற்ற குழந்தை போலவுமன்றோ ஆகிவிட்ட அவலம் காண்கிறோம்.
அகழ்வாரைத் தாங்கும் நிலமாய் இருக்கலாம்; அதற்காக; நம்மை, நமது
பண்பாட்டை இகழ்வாரைத் தாங்கும் நிலைப்பாடு இருக்கலாமா?
கொதித்தெழு; பிறரை வதைத்தெழ! என்று கூறமாட்டேன் - நம்மையே நாம்
பலியாக்கிக் கொள்ள நேரிடினும் பரவாயில்லை; நமது பழம் பெருமைக்கு ஊறு
நேரிடுகிறது எனக் காணும்போது, நமது வரலாறு மாய்க்கப்படுகிறது
என்கிறபோது, ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிக் கிடக்காமல் அதற்கென
அமையும் களத்தில் உயிரைச் சாவில் நட்டு உரிமைகளை வாழ வைப்போம்
எனும் வீரம் கொள்வோம் என்றே இப்பொங்கல் நாளில் சூளுரையேற்க
அழைக்கிறேன்!

மறு பிறப்பு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை!
ஆனால்; தமிழினத்தின் மானத்திற்கு - வீரத்திற்கு - மறுபிறப்பு வேண்டுமென
மன்றாடுகிறேன்!
யாரிடம்?
தமிழன்; தமிழனிடம்தான் மன்றாடுகிறேன்!
என் கோரிக்கை நிறைவேறிட;
இந்தப் பொங்கல் இனிதே பொங்குக!
நூல்: கலைஞரின் கவிதை மழை

பொங்கல் விழா கவியரங்கில் கலைஞரின் தலைமைக் கவிதை (14.01.1975).

தமிழ் ஓவியா said...

போதை... கீதை...

சரக்கு போதையில் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று கிருஷ்ண பகவானே கீதையில் சொல்கிறார் கேளுங்கள்.

த்ரைவித்யா மாம் ஸோமாபா: பூத பாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர் கதிம் ப்ரார் தயந்தே தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ர லோகம் அஷ்நந்தி திவ்யாந்திவி தேவபோகான் சுவர்க்க உலகங்களை நாடி, வேதங்களைப் பயின்று 'ஸோம ரச'த்தை அருந்துபவர்களும் என்னையே மறைமுகமாக வழிபடுகின்றனர்.
அவர்கள் இந்திரனின் உலகத்தில் பிறவியெடுத்து தேவர்களின் இன்பங்களைச் சுகிக்கிறார்கள்.

-பகவத்கீதைஅத்யாயம்9.பதம்20

பேச்சு வழக்கில், ''போதை கீதை ஏத்திக்கப் போற.... ஒழுங்கா வந்து சேர்'' என்பார்கள். ஆமாம், போதை, கீதை ரெண்டும் வேண்டாம்.

- க.அருள்மொழி, குடியாத்தம்

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியை விரிவடையச் செய்த பெரியாரின் எழுத்துகள்

என்னை மிகவும் பாதித்த புத்தகங்களை வேறு யார் எழுதியிருப்பார்? பெரியார்தான். பெரியாரின் புத்தகங்கள் புத்தகங்கள் அல்ல, களஞ்சியங்கள்.இயல்பாகவே மகிழ்ச்சிகரமான மனப்போக்கு உள்ளவன் நான். பெரியாரின் எழுத்துகள் எனது மகிழ்ச்சியை இன்னும் விரிவடையச் செய்தன.

அநாவசிய மூடநம்பிக்கைகள் இல்லாமல் இருப்பதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்? நான் எந்த ஓட்டலில் தங்கினாலும் 13ஆம் எண் அறையா என்று பயப்படுவதில்லை. 8ஆம் தேதி படப்பிடிப்பா என்று பதறுவதில்லை. இதெல்லாம் பெரியாரின் எழுத்துகள் எனக்குச் செய்த பேருதவிகள்.

- நடிகர் சத்யராஜ்

தமிழ் ஓவியா said...

முழுமையான திருவிழா


தை! தை! தை திருவிழா
தமிழர்களின் பெருவிழா
பொங்கல் எனும் ஒருவிழா - நாம்
போற்றிப் புகழும் திருவிழா


குடும்பமாக ஒன்று சேர்ந்து
குதூகலிக்கும் ஒருவிழா
குழந்தைகளும் மகிழ்வுடனே
கொண்டாடும் திருவிழா (தை)

இயற்கை தன்னைப் போற்றுகின்ற
இனிமையான ஒருவிழா
இருளை நீக்கி ஒளிவழங்கிடும்
சூரியனின் திருவிழா

உழவருக்கு நன்றிசொல்லி
உழைப்பைப் போற்றும் ஒருவிழா
உழைப்பில் வந்த அரிசி பொங்கி
குலவை கொட்டும் திருவிழா

இதயம் கனிந்த வாழ்த்துச் சொல்லும்
இன்பமான ஒருவிழா
இனிக்கும் பொங்கல் கரும்பு தின்னும்
சுவையான திருவிழா (தை)

தமிழர்களின் பண்பாட்டைப்
பறைசாற்றும் ஒரு விழா
தமிழரெல்லாம் கொண்டாடும்
பகுத்தறிவுத் திருவிழா

ஜாதிமத பேதமின்றி
சகலருக்கும் ஒருவிழா
மூடத்தனம் ஏதுமில்லா
முழுமையான திருவிழா (தை)



- மு.கலைவாணன்

தமிழ் ஓவியா said...

பாடுபடுவான்

இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். - (குடிஅரசு, 3.5.1936)

Read more: http://viduthalai.in/page-2/94634.html#ixzz3PPprWpim

தமிழ் ஓவியா said...

சோதிடத்தின் யோக்கியதை!

இலங்கையில் எதேச்சாதிகாரியாக, அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு ஆஸ்தான சோதிடராக இருந்தவர் சுமணதாச அபய குணவர்த்தனே என்பவர் தான் அந்தச் சோதிடரன்றி அசைய மாட்டாராம் முன்னாள் அதிபர் ராஜபக்சே.

இன்னும் ஈராண்டும் அதிபராக இருக்க வாய்ப்பு இருந்தும் தேர்தலை முன் கூட்டியே நடத்தச் சொன்னதும் இந்தச் சோதிட சிகாமணிதான். அந்த ஆசாமிதான் இப்பொழுது வேறுவிதமாகக் கூறுகிறார்.
தேர்தல்ஆணையாளரையும் காவல் அதிகாரியை யும் புகழ்ந்து அவர்களால் நாடு காப்பாற்றப்பட்டது எனக் கூறியுள்ளார். நான் இல்லாவிட்டால் அவர் களுக்கு பணியாற்ற தேர்தல் ஒன்று வந்திருக்குமா? தேர்தல் 2017ஆம் ஆண்டே நடைபெறவிருந்தது.

முன்னாள் ஜனாதிபதியை தேர்தலை நடத்த நானே இணங்க வைத்தேன். அப்படியில்லை என்றால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017 ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார். இவற்றை நாங்கள் பகிரங்கமாக கூற முடியாது; எவரும் இதனை தமது அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். நாடு பயணிப்பதை பார்த்தபோது முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்தால் எமக்கு நாடு என்று மீதமிருக்காது என்பதை நாம் உணர்ந்தோம். அந்த எண்ணத்திலேயே நாங்கள் இதனைச் செய்தோம். ராஜபக்சே ஆட்சியில் இருந்தால் எமக்கு நல்லதாக இருந்திருக்கும் ஆனால் அது நாட்டுக்கு கெடுதலாக முடிந்திருக்கும்.

யார் என்ன கூறினாலும் எமது வயிற்றைவிட நாங்கள் எமது நாட்டை நேசிக்கின்றோம். உண்மையில் கடந்த 9 ஆண்டுகள் நாட்டை நாங்களே நிர்வகித் தோம்.

இவ்வாறு சோதிடர் சுமணதாச அபயகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்தச் சோதிடர் எவ்வளவுப் பெரிய பித்தலாட்டக்காரர் என்பதை உணர வேண்டும்.

இந்த ஆசாமியின் சோதிடத்தை நம்பி தான் ராஜபக்சே முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத் தினார். சோதிடம் பொய்த்து விட்ட நிலையில், தங்கள் முகமூடி கிழிக்கப்பட்ட நிலையில், ஏதோ நாட்டின் நலன் கருதி ராஜபக்சேயின் ஆட்சிக் கொடுமையி லிருந்து நாட்டைக் காக்கத்தான் அப்படி சோதிடம் சொன்னதாகச் சொல்லுவது அசல் ஏமாற்று வேலை யல்லவா! - பித்தலாட்டம் அல்லவா!

இதன் மூலம் சோதிடத்தின் யோக்கியதை எத்தகை யது என்பது விளங்கவில்லையா? சோதிடத்தை நம்பி ஏமாறும் பொது மக்கள் இதற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா?

ஒருக்கால் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்று இருந்தால், பார் பார் எங்கள் சோதிடம் பலித்தது! என்று மார்தட்டிக் கொள்வார்கள். அதற்குரிய சன்மானத் தையும் பெரிய அளவில் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. சோதிடம் என்பது அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்படாதது. நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் சோதிட நம்பிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

நியாயமாக சோதிடம் என்ற ஏமாற்று வேடத்தை சட்டப்படி தடுக்க வேண்டும் அரசுகள். அதுதான் மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கான அடையாள மாகவும் இருக்க முடியும்.

சில நேரங்களில் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போல சொன்னது நடந்து விட்டால் சோதிடம் என்பது எவ்வளவு பெரிய உண்மை என்று ஊரே அதிரக் குரல் கொடுப்பார்கள்.

சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மிக அழகாகவே சொன்னார்.

உயர்நிலைப் பள்ளியைத் தாண்டிப் படிக்க தனக்கு வாய்ப்பு இல்லை - கல்வியில் மந்தம் என்று சோதிடர் சொன்னது மிகப் பெரிய பொய்யென்று நான் நிரூபித்துள்ளேன். கல்லூரிப் படிப்பையும் முடித்து இப்பொழுது விஞ்ஞானியாக வலம் வருகிறேன் என்று சொல்லவில்லையா?

தேர்தலைப் பற்றியும் பல நேரங்களில் இந்தச் சோதிடர் ஆரூடங்களை அள்ளி விடுவார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடி நடத்ததுண்டா?

உலகக் கோப்பைக் கிரிக்கெட் பற்றிக்கூட சோதிடம் சொல்லுவார்கள்; யாகம் நடத்தியதுண்டு. ஆனால், ஏமாற்றம்தான் மிச்சம்.

இலங்கை ராஜபக்சேயின் சோதிடர் கூறிய இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது. இந்த 9 ஆண்டுகளும் ராஜபக்சே தாங்கள் சொன்னபடிதான் அரசை நடத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியென்றால் இந்த ஒன்பதாண்டுகளில் நடைபெற்றுள்ள அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இந்தச் சோதிடரே பொறுப்பு என்று இலங்கை அரசு இந்தச் சோதிடரைக் கைது செய்து சிறைக்குள் தள்ள வேண்டாமா?

தப்பானவழி காட்டுதலுக்கு சோதிடம் பயன்பட்டு இருக்கிறதே இதற்கு என்ன பதில்?

இந்த யோக்கியதை உள்ள சோதிடத்தைத்தான் தமிழ்ப் பல்கலைக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் சொல்லிக் கொடுக்கின்றனவாம். இதனைவிட வெட்கக் கேடும், தலைக் குனிவும் வேறு ஒன்று இருக்க முடியுமா?

சோதிடத்தைப் பாடத் திட்டத்தில் வைத்துப் பட்டயங்களை வழங்கும் ஒரு நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவார்கள் என்று எதிர்பார்க்கத்தான் முடியுமா? அய்யகோ வெட்கக் கேடு மகா மகா வெட்கக்கேடு!

மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களாக! எதிலும் பகுத்தறிவை, விஞ்ஞான மனப்பான்மையைப் பயன் படுத்துவார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/94640.html#ixzz3PPq2pMWC

தமிழ் ஓவியா said...

விடுதலையின் சிறப்பு

விடுதலைப் பத்திரிகையில் தங்களின் சாமியார்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் இரண்டு நாள் தொடர்ச்சியாகப் படித்தேன். சாமியார்களின் அலங்கோல வாழ்க் கையை திருச்சிக் கூட்டத்தில் எவ்வளவு தெளிவாக பேசியதை படித்தபொழுது இப்படிப்பட்டவர்களை நம்பி நாட்டின் தலைவர்கள் முதல் மக்கள் வரை அவர் களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது என்ற நிலை மாறி புதிய சிந்தனை வளரவேண்டும்.

விடுதலைப் பத்திரிகையின் ஒவ் வொரு அசைவு மனித குலத்தை சிந்திக்க வைக்கும் பொங்கல் மலரில் கவிஞர் கலி.பூங்குன் றனின் கவிதை எவ்வளவு உணர்ச்சி பொங்க வடித்துள்ளார்கள்!

பொங்கல் அன்று காலை எழுந்து விடுதலை பத்திரிகையை வரி விடாமல் படித்தேன். செங்குட்டுவனின் கட்டுரையில் காரல் மார்க்சின், திராவிடர்களை அடுத்தவர் ஆண்டதுதான் தமிழர் வரலாறு என்பதை அழகாக சித்தரித்துள்ளார்கள்.

ஒவ்வொரு கட்டுரையும் அனைவரும் படித்து மக்களிடம் கூற வேண்டிய கருத்துக்கள் விஞ்ஞான உலகம் எவ்வளவு மாறினாலும் பிராமண ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இன்னும் பல்லக்கு சுமக்கும் நிலை. சாதாரண மக்கள் சிந்திக் கின்றார்களா? இன்னும் அவனை ஓர் கடவுளாக ஏற்றுக் கொள்ளும் நிலை மாறவில்லை.

உலகில் முதல் அரசியல் சாணக்கியனைப் பற்றிய கட்டுரையை ஒவ்வொரு மாண வனும் படித்தால் இன்றைய மோடி நிலைமை புரியும்.

விடுதலையின் ஒவ்வொரு கட்டுரையை யும் படிக்கப் படிக்க எவ்வளவு உண்மைகள் தெரிகின்றன. ஒவ்வொரு இளைஞர்கள் பொதுமக்களும் படிக்க வேண்டிய இதழ்.

எவ்வளவு காலம் மூட நம்பிக்கையில் உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது. படித்த வேலை பார்க்கும் மனிதர்கள் கோவிலைக் கண்டவுடன் மண்டையில் குட்டிக் கொள் கின்ற நிலை.

மாறுகின்ற வரை மனிதர்களை சிந்திக்க வைக்கும் முயற்சி தொடர வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பை உறுதியாகச் செய்வேன். தைப்பொங்கலில் எல்லோரும் சபதமேற்று பணியைத் தொடர வேண்டும். - தோழர் இரா.சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல். (75 வயதுள்ள நாளும் கொள்கை பரப்பும் பொது உடைமை - உணர்வாளர் சிந்தனை இது!)

Read more: http://viduthalai.in/page-2/94654.html#ixzz3PPqP7bit

தமிழ் ஓவியா said...

மனிதநேயம்

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பாதிரி யார் ஜி.யு. போப் தன் கல் லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதச் சொன்னார் தமிழ்ப் பற்றின் காரணமாக. அதேபோல் வேளாங்கண்ணி மாதா கோயிலின் பாதிரியார் ஒருவர், தமது கடைசி ஆசையாக எழுதி வைத்தி ருக்கும் வாசகம், மதநல்லி ணக்கத்தின் அடையாளம். அந்த வாசகம் என்ன தெரியுமா?

எனது வாழ்நாளில் பைபிளை முழுமையாகப் படித்து, அதன்படி வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால், குர்ஆனையும் பகவத்கீதையையும் முழு மையாகப் படிக்க முடிய வில்லை. எனவே, நான் இறந்த பிறகு எனது இரண்டு கண்களில் ஒன்றினை ஓர் இஸ்லாமியச் சகோதரருக் கும், இன்னொன்றை ஓர் இந்து சகோதரருக்கும், பொருத்தினால் அவர்கள் மூலமாகவாவது நான் குர் ஆனையும் பகவத் கீதை யையும் படித்தவன் ஆவேன்.
அ. யாழினி, பர்வதம், சென்னை-78
கல்கி 11.11.2015 பக்.48

கிறித்தவர்களா? அவர் கள் கீழ்த்தரமானவர்கள்; முஸ்லிம்களா அவர்கள் மிக மிக மோசம் என்று ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களும் பிஜேபி என்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் குமட்டுகிறார்களே - அவர் களுக்கு இது ஒரு சிறிய காணிக்கை.

எடுத்துச் சொல்லுவது நாமல்ல - அவாளின் கல்கி இதழ்தான்.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு வந்தது கிறித்துவத்தைப் பரப்பத்தான் என்று சொல்லுவதுண்டு. அதே நேரத்தில் அவர்கள் இந்நாட்டு மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தார்கள்; மருத்துவ உதவியை நல்கி னார்கள் என்பதை மறுக்க முடியுமா?

படிக்காதே - நீ கல்வி கற்பதற்கு உரிமையில்லை! என்று இந்நாட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பார்த்து கூறியது இந்து மதம்; - நீ படி என்று கூறி கல்வியைக் கொடுத்தது கிறித்துவம்.

உடல் முழுவதும் மூளை உள்ளவர் என்று அக்கிரகார வாசிகளால் ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பாராட்டப் படும் அந்த ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத் திற்கு முதலமைச்சராக வந்திருந்த போதிலும் (1937இல் ஒரு முறை 1952இல் இன்னொரு முறையும்) அவர் செய்தது என்ன? பள்ளி களை இழுத்து மூடியது தானே? 1937இல் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார் என்றால் 1952இல் 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லையா?

அந்தக் கெட்ட புத்தியே அவருக்கு எதிராக அமைய வில்லையா? தந்தை பெரி யார் உருவில் எழுந்த அந்த எதிர்ப்பு - ஆச்சாரியாரின் பொதுவாழ்வையே அஸ்த மிக்கச் செய்யவில்லையா?

கிருத்தவர் ஒருவர் தமது இரு கண்களில் ஒன்றை இஸ்லாமியருக்கும் மற்றொன்றை ஒரு இந்து வுக்கும் பொருத்தச் சொன் னாரே - அந்த மனிதநேயர் எங்கே! நாத்திகனுக்கு வைத் தியம் பார்க்காதே என்று சொன்ன இந்து மதத் தலை வர் ஜெகத் குரு சங்கராச் சாரியார் எங்கே? (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியின் - தெய்வத்தின் குரல் 3ஆம் பாகம் - பக்கம் 148). அடையாளம் காண்பீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/94655.html#ixzz3PPqdAdzt

விஸ்வேஸ்வரன் said...

~தமிழ் இலக்கியங்களை, சிந்தனைகளை முன்னிறுத்த என்ன செய்கிறோம். வடமொழியில் கீதையைப் பெரிதாக்கி இந்தியத் தத்துவநூல், மிகப் பழமையானது எனப் பலவிதமாகக் கூறி இப்போது வடமொழி ஆதிக்கத்திற்கு சப்பைக் கட்டுகிறார்கள். கீதை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய நூல். இதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. (google search the name " hermann jacobi" for a good discussion on the date gita. journal of oriental philosophy vol 31 )
திருக்குறள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.இந்த நூலை தமிழரின் அடையாளமாக இது வரை முன்னிறுத்த இயலாமல் ஆரிய வாடையுடன் பரிமேலழகர் எழுதிய உரை தடுத்தது. சரி. பரிமேலழகரைத் திருத்திய கட்டுரை என் வலைப் பதிவில் உள்ளது. இம்மை என்றால் இன்னை(க்கு) என்ற நிகழ்காலம், மறுமை என்றால் மறுநாட்கள் என்ற எதிர்காலம் , பழமை என்றால் கடந்த காலம் எனத் திருத்தி உரை கண்டால் பல தவறுகள் மறையும். அதோடு மறுபிறவி,கர்மா, மோட்சம் போன்ற ஆரியக் கருத்துக்களை திருக்குறள் ஏற்கவில்லை என்பதும் என்பதும் என் வலைப் பதிவில் காணலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கீதையின் கருத்துக்கள் திருக்குறளிலிருந்து எடுத்து ஆரிய வேதத்திற்கு ஏற்பத் திரிக்கப் பட்டவையே என்பதும் என் வலைப் பதிவில் காணலாம்
www.philosophyofkuralta.blogspot.in
www.tamilinkural.blogspot.in