எல்லோரும் கொண்டாடுவோம்
- தந்தை பெரியார்
(சங்கராந்தி என்று திரிக்கப்பட்ட தமிழ்
மரபை மீட்டு, பொங்கலைத் தமிழர் திருநாளாக்கியவர் தந்தை பெரியார். ஏன் இது
நமது திருநாள் என்கிற அவரது பார்வை இங்கே பதிவாகியுள்ளது.)
பொங்கல் பண்டிகை என்பது நாள்,
நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம்
தேதி என்பதாகத் தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.
இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது.
இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள
பண்டிகையாகும். என்றா லும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல
தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.
இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன
வென்றால், விவசாயத்தையும் வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப்
பண்டிகை யென்று சொல்லப்படுவதாகும்.
ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல்
(Harvest Festival) என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான். என்றாலும்,
பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக் குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை
ஆகிய கருத்தையே அடிப் படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும்
அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதார மான நீரை (மழையை)ப்
பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில்
விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய
இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப் பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.
இந்தக் கதையை இவ்வளவோடு விட்டு விடவில்லை.
இம் மாதிரியான இந்திர விழா பற்றி கிருஷ்ணன் பொறா மைப்பட்டுத் தனக்கும்
அந்த விழாவை (பூசையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும்,
மக்கள் அந்தப்படிச் செய்ததாகவும், இந்த இந்திரவிழா கிருஷ்ணமூர்த்தி
விழாவாக மாறியது கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு, இந்த
கிருஷ்ணமூர்த்தி விழா ஈடேறாமல் நடைபெறாமல் போகும் பொருட்டு விழாக்
கொண்டாடுவோர் வெள் ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள் ஆடு, மாடுகள்
அழியும் வண்ணமாகப் பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர்
வெள்ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள், ஆடு மாடுகள் அழியும் வண்ணமாகப்
பெரும் மழையாகப் பெய் யச் செய்துவிட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள்
கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ண மூர்த்தி
மக்களையும் ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை (கோவர்த் தனகிரி) யைத்
தூக்கி அதைத் தனது சுண்டுவிரலால் தாங்கிப்பிடித்து காப் பாற்றினதாகவும்,
இதனால் இந்திரன் வெட்கமடைந்து கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக்
காப்பாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இரங்கி கிருஷ்ணன்,
எனக்கு ஒரு நாள் பண்டிகை;
உனக்கு ஒருநாள் பண்டி கையாக, மக்கள் முதல்
நாள் எனக்காக பொங்கல் பண்டிகையாகவும் பொங் கலுக்கு மறுநாள் மாட்டுப்
பொங்கல் என்று கொண்டாடும்படியும் ராஜி செய்து கொண் டார்கள் என்றும் சிரிப்
பிற்கிடமான ஆபாச முட்டாள்தன மான கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.
இதிலிருந்து தேவர்களுக்கு அரச னான
இந்திரனின் யோக்கியதை எப் படிப்பட்டது மக்களுக்குக் கடவுளான கிருஷ்ணனின்
யோக்கியதை எப்படிப் பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணர வேண்டுமென்று
வேண்டிக் கொள்ளுகிறேன்.
மற்றும், இதில் பொங்கலுக்கு முதல்
நாளைக்கு ஒரு கதையையும், மறு நாளைக்கு ஒரு கதையையும் போகிப்
பாண்டிகையென்றும், சங்கராந்திப் பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்றுநாள்
பண்டிகையாக்கி, அதில் ஏராளமான முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும்
புகுத்திவிட்டார்கள்.
நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம்
எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும் தாங்கள் மனித சமுதாயத்தில்
உயர்ந்த பிறவி மக் களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகஜீவிகளாகவும்
இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமு தாயம் முழுவதுமே அறிவைப் பயன்
படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும்,
காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர் களுடைய பிறவிப்
புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து
வைக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இம் மாதிரியான அட்டூழிய
அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால்
பொங்கல் பண்டிகை என்கின்றதை முதல்நாள் அன்றுமட்டும் நல்ல உயர்வான உணவு
அருந்துவதையும், நல்லுடை உடுத்து வதையும், மனைவி மக்கள் முதலியவர் களுடன்
இன்பமாகக் காலம் கழிப் பதையும் கொண்டு, நம்மால் கூடிய அளவு
மற்றவர்களுக்கும் உதவி அவர் களுடன் குலாவுவதான காரியங் களையும் செய்வதன்
மூலம் விழாக் கொண்டாட வேண்டியது அவசிய மாகும்.
மற்றபடியாக, மதச் சார்பாக உண்
டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும்,
பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக் கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும்
பயன்படத் தக்கதாகவே இருந்துவருவ தால்-பயனளித்து வருவதால் அறிவுள்ள,
மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடா மலிருந்து,
தங்களை மானமும் அறிவு முள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று
கேட்டுக்கொள்ளு கிறேன்.
மானமும் அறிவுமே மனிதற்கழகு.
மானமும் அறிவுமே மனிதற்கழகு.
கிறித்துவர்கள் காலத்தைக் காட்ட கிறித்துவ
ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக் காட்ட இசுலாம் ஆண்டு
(ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக் கிறது? இதற்குத்
தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
மற்றும் இப்படித்தான் தமிழனுக்குக்
கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று
சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா
(பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை
நாம் கற்பிப் பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப்
பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழா வாகக் கொண்டாடலாம் என்று முப்பது
ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா
என்ற கருத்தில் தானே யொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை இந்திர
விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.
35 comments:
சோதிடம் தோல்வி
இலங்கை அதிபர் தேர்தலில் சந்தடி சாக்கில் ஒன்றை மறந்து விடக் கூடாது; மறந்தால் நல்லது; மறக்காவிட்டால் தங்கள் பிழைப்புப் போய் விடுமோ முகத்திரை கிழிந்து தொங்கி விடுமோ என்று கவலைப்படுபவர்கள் வேறு யார்? சோதிடர்கள் தான்.
இலங்கைத் தீவில் தேர்தலை நடத்தும் தேதி யைக்கூட சோதிடர்கள் தான் நிர்ணயித்தார்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
இலங்கையில் முன் னணி சோதிடர்களான சுமனதாச அபேகுணவர் தன மாபலகம விமலரதன மற்றும் சந்திரசிறி பண் டார ஆகியோர் ராஜபக்சேயின் வெற்றி உறுதி என்று அடித்துச் சொன்னார்கள். லக்ன மெல்லாம் சுத்தமாக இருக்கிறது - மீண்டும் அதிபர் ராஜபக்சேதான் என்றனர் அந்த சோதி டர்கள்.
ராஜபக்சேவுக்கு ஜெயபேரிகை கொட்டிய தோடு அந்த சோதிடர்கள் நின்றார்களா? அதையும் தாண்டி ஒன்றைச் சொன் னார்கள். எதிர்த்து நிற்கும் மைத்திரி பாலசிறீசேனா விற்கு அதிபர் பதவிக் கான ராஜயோகம் அறவே கிடையாது என் றும் துணிந்து சொன் னார்கள்.
இரண்டுமே நடக்க வில்லை; இதற்குப் பிற காவது சோதிடம் என்பது எத்தகைய பித்தலாட்டம் என்பதை மக்கள் உணர வேண்டாமா?
சோதிடர்கள் சொல் லுவதைப் பார்த்தால் தேர்தலில் நிற்கக் கூடிய வேட்பாளர்களின் ஜாத கம் மட்டுமல்ல; வாக் களிக்கும் மக்களின் ஜாதகம்கூட ஒன்றாகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தானே குறிப்பிட்ட வேட்பாள ருக்கு வெற்றி வாய்ப்புக் கிட்ட முடியும்?
இதுசாத்தியம்தானா? பிறந்த நேரம்தான் எல் லாவற்றிற்கும் அடிப் படை என்று பொதுவாக சோதிடர்கள் சொல்லு வார்கள்; அவர்களைப் பார்த்து நறுக்கென்று அறிவு ரீதியாக ஒரு கேள்விக் கணையை வீசி னால் அவை விதாண்டா வாதம் என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள்.
ஏனய்யா சோதிட சிகாமணியே! நில நடுக் கத்தில் லட்சக்கணக்கில் மக்கள் ஒரு நொடியில் புதையுண்டு சாகிறார் களே- இரயில் விபத்தால் ஆயிரக்கணக்கில் மடி கிறார்களே - விமான விபத்தில் நூற்றுக்கணக் கில் பலியாகிறார்களே - இவர்கள் அத்தனைப் பேர்களுமே ஒரே நேரத் தில் லக்னத்தில் பிறந்த மானிடர்களா? என்று கேட்டும் பாருங்கள் - முகம் சுருங்கிப் போய் விடும். இதற்கு அண்மை எடுத்துக்காட்டு (லேட் டஸ்ட்) ராஜபக்சே தோல் வியே!
சோதிடத்தை நம்பி தான் தேர்தலில் நிற்கி றேன் என்று அத்வானியை எதிர்த்து நின்றார் ஓய்வு பெற்ற தலைமைத் தேர் தல் ஆணையர் டி.என். சேஷன்; வென்றாரா? கட்டிய பணத்தையோ வது (டெபாசிட்) திரும்பப் பெற முடியவில்லையே!
சோதிடம் ஆருடம் என்பவை அசல் அக்கப் போர்களே!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/94303.html#ixzz3Obb6OZUG
காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலையா? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்
மதுரை, ஜன.11_ காந்தி யாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்பதும், கொலைகாரனை புனிதப் படுத்த நினைப்பதும் அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் கண்டனம் தெரி வித்துள்ளார்.
மதுரை கலைஞர் கருணாநிதி நகர் சோக்கோ அறக்கட்டளையில் நேற்று (10.1.2015) பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வழக் குரைஞர் அணி சார்பில் கண்டன கருத்தரங்கு நடந் தது. இதில் வழக்குரைஞர் ரத்தினம் அறிமுக உரை யாற்றினார். சிறப்பு விருந் தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி து.அரிபரந்தாமன் கலந்து கொண்டு காந்தியடிகளைக் கொன்ற கோட்சேவை புனிதமாக்குவதா? என்ற தலைப்பில் பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-
அரசமைப்புச் சட்டத்தை நம்புகிறவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தயக்கம் இருக்காது. எனவே உண்மையின் அடிப்படை யில் நான் கலந்து கொண்டேன். மதங்களின் மீதோ, கடவுள்களின் மீதோ எனக்கு பற்று கிடையாது. இந்து பெற்றோருக்கு பிறந் தவன். எனது குடும்பத்தின ரும், நண்பர்களில் பலரும் மதநம்பிக்கை கொண்ட வர்கள். அவர்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். வள்ளலார் ஆன்மிகவாதி. அவரை பெரியார் போற் றினார். கோட்சே மதப்பேய் பிடித்தவன்
விவேகானந்தர், திரு.வி.க., நீதிபதி வி.ஆர்.கிருஷ் ணய்யர் போன்றவர்களும் மதநம்பிக்கை கொண்ட வர்கள் தான். மதநம்பிக்கை இருக்கலாம். வள்ளலார் தனது பாடலில், மதமெ னும் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார். மதப்பேய் என்ற மதவாதம் கூடாது. கோட்சே, மதப் பேய் பிடித்தவன். அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப்பட்டவர் காந்தி. அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30_1_1948 அன்று நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக் காக வாதாட எவரும் முன் வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். மகாத்மாவை கொன்றவனையே 18 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்தனர். அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோகம் செய் தார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் கொன்றேன் என் றான். மதப்பேய் பிடித்ததால் தான் அவன் காந்தியை கொலை செய்திருக்கிறான்.
கொலைகாரனை புனிதமாக்குவதா?
கொலைகாரனை புனிதமாக்குவதை எவரும் விரும்பமாட்டார்கள். அவன் பாவியல்லவா? அப்படிப்பட்டவனுக்கு இந்தியா முழுவதும் சிலை வைப்போம் என்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிரானவர்களை புனிதப்படுத்தாதீர்கள். பகவத் கீதையையோ, பைபிளையோ, குர் ஆனையோ பாடப் புத்தக் கத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறுவது மதவாதம். ஆனால் அவற்றில் உள்ள அறநெறிக்கதைகளை பாடமாக்குங்கள் என்றால் அதை அனுமதிக்கலாம். இஸ்லாமியவாதம், கிறிஸ்தவ மதவாதம் என் றெல்லாம் கூறுகிறார்கள். இந்துத்துவாவை மட்டும் இந்து மதவாதம் என கூறாமல், இந்திய தேசிய வாதம் என்கிறார்கள். இதனையெல்லாம் அரசி யலமைப்பு சட்டத்தை நேசிப்பவர்கள் எதிர்க்க வேண்டும். விவேகானந்தர் கடைசிவரை இந்துத்துவா என்ற வார்த்தையை உப யோகிக்கவே இல்லை. ஒரு பொதுக்கூட்டத்தில், பகவத் கீதை தேசிய நூலாக அறி விக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பேசி யுள்ளார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு அர சியல்வாதி பேசலாம். நீதியரசர் பேசலாமா? அவ ருடைய இந்த கருத்தை தனது தீர்ப்பில் கூறியி ருந்தால் கூட நான் இங்கே சொல்லியிருக்க மாட்டேன்.
பொதுக்கூட்டத்தில் பேசியதால் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Read more: http://viduthalai.in/e-paper/94304.html#ixzz3ObbF9jyE
அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஜன.11_ எஸ்.சி\எஸ்.டி பிரிவு களைச் சேர்ந்த வங்கி அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப் படவேண்டும், என்று ஒரு முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ளது. வங்கி உயர்பதவிகளில் பணிபுரியும் அதிகாரி களின் பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட வர்க் கத்தைச் சேர்ந்த அதி காரிகளுக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதற்கான காரணமாக திறமை முன்வைக்கப்பட் டது.
இப்பாரபட்சமான இட ஒதுக்கீட்டின் காரண மாக எஸ்.சி\எஸ்.டி பிரிவு களை சேர்ந்த அதிகாரி களுக்கான பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து பல்வேறு காலகட்டங் களில் வங்கி அதிகாரி களுக்கான எஸ்.சி\எஸ்.டி பிரிவு தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால் வங்கி நிர்வாகம் இவர்களின் கோரிக்கை களைப் புறந்தள்ளிவிட் டது. இதனை அடுத்து எஸ்.சி\எஸ்.டி வங்கி அதி காரிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இவ்விவகாரம் குறித்து பதில் அளிக்க வங்கி களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. இதற்கு பதிலளித்த சென்ட்ரல் வங்கி தன்னுடைய பதில் மனுவில் குறிப்பிட்டதா வது, உயர் பதவிகளில் திறமை மற்றும் மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் மாத்திரமே பதவி உயர்விற்கு பரிசீலிக்கப் படும், இட ஒதுக்கீடு என்பது வங்கியில் பல் வேறு பிரிவுகளில் (கணக் காளர் முதல்) பதவி உயர்விற்குப் பயன்படுத்தப் படுகிறது, ஆனால் குறிப் பிட்ட உயர்பதவிகளில் இட ஒதுக்கீட்டை விட திறமை மற்றும் மூப்பு (சீனியாரிட்டி) முக்கிய மாக எடுத்துக் கொள்ளப் படுகிறது என்று குறிப் பிட்டிருந்தது.
எஸ்.சி\எஸ்.டி வங்கி அதிகாரிகள் மற்றும் வங் கியின் பதில் மனுக்களை விசாரணை செய்த செல மேஸ்வர் மற்றும் ஏகே சிகரி தலைமையினாலான நீதிமன்ற அமர்வு முக்கியத் துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பின் விவரம் வருமாறு இட ஒதுக்கீடு என்பது அனைத் துப் பிரிவு பணிகளுக்கும் பொதுவான ஒன்றாகும், இதற்கு முன்பு வழங்கப் பட்ட பல்வேறு தீர்ப்பு களில் அதிகாரிகளின் பதவி உயர்வின் போது இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டுள்ளது. இதனடிப் படையில் வங்கிகளுக்கும் அந்த தீர்ப்பு பொருந்தும், பதவி உயர்வின் போது பதவி உயர்வுபெற்ற அதி காரிக்கான அனைத்து சலு கைகளும் கிடைக்கவேண் டும். ஊதியவிகிதத்தில் ஒரே மாதிரியான உரி மைகள் கேட்டுப்பெற பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு முழு உரிமை உண்டு. எந்தக் காரணங்களைக் கூறியும் இட ஒதுக்கீடு தொடர் பான விவகாரத்தில் வங்கிகள் தலையிடுதல் கூடாது.
வங்கியில் உள்ள அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கடைப் பிடிக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் பிரிவு ஒன்று முதல் பிரிவு ஆறு வரை மாத்திரமே இட ஒதுக்கீடு கடைப்பிடிப் போம் என்ற வங்கியின் பதிலை ஏற்க முடியாது, பிரிவு ஆறு வரை வங்கி கள் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கும் போது பிரிவு ஏழு மட்ட அதி காரிகளுக்கான பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டை கடைப் பிடிப்பதில் ஏன் சிக்கல் எழுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பதவி உயர்வின் போது அனைத்துப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீட்டை கட்டா யம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறினர்.
மேலும் வங்கியின் தரப்பில் தாக்கல் செய் யப்பட்ட மனுவை தள்ளு படி செய்த நீதிபதிகள் எஸ்.சி\எஸ்.டி பிரிவு வங்கி அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் மூலமே முக்கிய முடிவுகள் எடுக் கப்படவேண்டும் வங்கிகள் நீதிமன்றத்தின் ஆணையை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினர்.
Read more: http://viduthalai.in/e-paper/94305.html#ixzz3ObbUUHKR
யாகசாலையில் இளைஞர்கள் உயிரிழப்பு புரோகிதப் பார்ப்பனர்கள் தலைமறைவு
மதுரா, ஜன. 11- உத்தரப் பிரதேச மாநிலத் தில் உள்ள மதுராவில் பாங்கி பிஹாரி கோவி லுக்கு அருகேயுள்ள யாக சாலையில் சந்தேகத் திற்கிடமான முறையில் மூன்று இளைஞர்கள் இறந்து கிடந்தனர். இறந்தவர்கள் மூவரும் ஆகாஷ், கல்யாண், மனோஜ் என்பது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இறந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில் லையென்றும் மூவரின் உடல்களும் பிணக்கூறு ஆய்விற்கு அனுப்பப்பட் டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்திருந்தது.
கோயில் உதவியாளர் களாக இருந்த மூவரும் யாகசாலையில் தூங்கிய போது மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என கோவிலில் உள்ள புரோகி தர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மூவர் இறந்த வழக்கில் கொலை மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆனந்த் கிஷோர் கோஸ் வாமி மற்றும் ஜீகல் கிஷோர் கோஸ்வாமி என்ற இரண்டு புரோகி தர்கள்மீது பிருந்தாவன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் குடும்பத்துடன் தலை மறைவாகி விட்டனர். அவர்களை காவல்துறை யினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Read more: http://viduthalai.in/e-paper/94309.html#ixzz3ObbblIUi
ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு விடியல் ஏற்படுமா?
இலங்கை அதிபர் ராஜபக்சே தோல்வி!
ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு விடியல் ஏற்படுமா?
தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து
சென்னை, ஜன.11-_ இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவு எதிர்பார்ப்புக் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
இன்னொரு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒருவர் தோல்வியடைவது கண்டு, மகிழ்ச்சி கொள்வது நாம் பின்பற்றி வரும் நாகரிகத்திற்கு ஏற்புடையதல்ல எனினும், நமது தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை மிருகத்தனமாக வேட்டையாடிய ராஜபக்சேவின் தோல்வி நமக்கு ஒருவகை நிறைவையே தரு கிறது என்பதால் வரவேற்கலாம். இந்தத் தோல்வியின் மூலம் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இனப்படுகொலைக்கும், மனித உரிமை மீறல் களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் தக்க தண்டனை தரப்படும்போது தான் இயற்கை நீதி முழுமை பெறும். கடந்த காலங்களில் எல்லா சர்வாதிகாரிகளுக்கும் நேர்ந்த தவிர்த்திட இயலாத முடிவு சரித்திரத்தின் சாகாத படிப்பினையாகப் பதிவாகியிருந்தும், அதைப் புறக்கணித்து, பெரும்பான்மை சிங்கள இன வெறியோடு, ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரச் சேட்டைகளை, தொடர்ந்து நடத்திய ராஜபக்சே அடைந்திருக்கும் தோல்வி அறிந்து சர்வ தேசத் தமிழ்ச் சமூகத்தினரும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
தமிழர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவரின் பெருவாரியான வாக்குகளால் வெற்றி பெற்று, இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் மைத்திரி பால சிறீசேனா, தன்னுடைய வெற்றிக்கான அடிப்படைக் காரணத்தை மறவாமல், பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பாகுபாட்டினை அகற்றி, அனை வரும் குடிமக்களே - சமமானவர்களே என்ற நிலையை ஏற்படுத்திடவும், உண்மையான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு வழி திறக்கவும், சமத்துவம், சமதர்மம், சமாதானச் சகவாழ்வு பேணவும், அரசியல் சட்டத்தின் 13ஆவது திருத்தத்திற்கும் அதிகமாகவே அதிகாரங்களைத் தருவதாக முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும், ஈழத் தமிழர்கள் அனைத்துரிமைகளுடன் கூடிய கண்ணியமான வாழ்க்கை நடத்திடவும், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்து வதுடன் இப்பகுதிகளைச் சூழ்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இராணுவத்தைத் திரும்பப் பெறவும், சிங்கள மயமாக்கலைத்தடுத்து நிறுத்தவும், தமிழர் களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களையும், வீடுகளையும் திரும்ப ஒப்படைக்கவும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மீண்டும் தாயகத்திற்குத் திரும்பி அமைதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கவும், அய்.நா. விசாரணைக் குழுவினை அனுமதித்திடவும், வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பொம்மை அரசாக இல்லாமல் தேவையான அதிகாரங்களைக் கொண்ட பொறுப்புள்ள அரசாக மாற்றியமைத்திடவும், தமிழ் மொழியை சிங்கள மொழிக்கு இணையான ஆட்சி மொழியாக அங்கீகாரம் செய்திடவும், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிப்புக்கு ஆளாகாமல் பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, 1950களிலிருந்து ஈழத் தமிழர்கள் உரிமைகளுக்கும், நல்வாழ்வுக் கும் தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற முறையில் வலியுறுத்துகிறேன். இனியாவது ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு விடியல் வெளிச்சம் ஏற்படத் தொடங்குமென்று நம்புவோமாக!
Read more: http://viduthalai.in/e-paper/94314.html#ixzz3ObbuC4p4
நம் ராமசாமி முன்..
ராமராஜ்ஜியம்
வருகுதாம்
இராவணப் பரம்பரையே
தோள் தட்டு!
இந்து ராஜ்ஜியம்
வருகுதாம்
இந்திர ஜித்தே
வரிந்து கட்டு!
கோட்சே கூட்டம்
வருகுதாம்
கோடை யிடியே
கூர்தீட்டு!
குல தருமம்
வருகுதாம்
கொள்கைக் களிறே
பளிறிடு!
பெரியார் சேனையே
பெயர் கொடு
தற்கொலைப்
பட்டாளத்திற்கே!
சேலத்துச் சங்கை
மீண்டும் எடு!
ஞாலத்தை உலுக்கும்
போர்க்குரல் கொடு!
நம் இராமசாமிமுன்
அந்த ராமன் சாமி
எம்மாத்திரம்!
மீசை முறுக்கு!
பொங்கட்டும் - நம்
விடுதலை மூச்சு
ஓங்கட்டும் - நம்
உரிமையின் வீச்சு!
தை முதல் நாள்
தமிழர் திருநாள்
விதைத்திடுக
வெற்றி முரசை!
பொங்கலோ
பொங்கல்!
கவிஞர் கலி. பூங்குன்றன்
Read more: http://viduthalai.in/page-1/94221.html#ixzz3ObcyTtGr
குயில் இதழில் புரட்சிக் கவிஞர்
போர்! தமிழ்ப் போர்!!
நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது.
தமிழ்மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி.
ஆயினும், தமிழை ஒழிப்பதன் மூல மாகத் தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது.
தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்வி லக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடு நிலை உலகமே சொல்லும்.
தமிழிலக்கியங்கள் தம் வேலையை மன நிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால் குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதிநாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
தமிழ் மொழியில் - தமிழ் இலக்கியங் களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும்.
நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்கும் தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது.
தமிழை ஒழிக்கும் நோக்கமுடைய வர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி, அவர்கள் தமிழரின் அண்டை யிலேயே குடித்தனம் பண்ணுகின் றார்கள். தமிழ்த் தாயை ஒழிக்கச் சொல் லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு.
தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொல்ல நாடோ றும் ஆவன செய்து வரும் ஒரு கூட் டத்தை நம் தமிழரிற் சிலரே நடத்து கிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள்.
எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்த வேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடுஇது. கன்னல் தோறும் கண்டு வரும் இன்னல் இது. என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக!
அந்தத் தீயர்களை வாழ்த்த வேண் டும் அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந் நாள் வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி உணர்ச்சி ஏற்பட்டது.
நல்ல வேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள் அவர்கள் தீமை வளர்க தமிழர்கள் எழுக. உணர்ச்சி பெறுக.
தமிழ்
தமிழிலக்கியங்களில் - _ இன்று உள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித் தமிழில் இல்லையாம். தமிழ்க் கோட்டையிற் புகுந்து கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கைவைத்த கன்னக்கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.
வளர்ந்துவரும் தனித்தமிழையும் கலந்து வரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.
இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.
தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன?
தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவா இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன். தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும்.
தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். விட்டு விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்ப் பற்றுக் காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக் கூடாது எவரும்!
சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும்.
ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று.
இந்த அமைச்சரவை, இந்தக் கட்சி. இந்த ஆள், நல்ல அவை. நல்ல கட்சி. நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடு வது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே.
அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டி யவனா என்பது ஒன்றுதான்.
தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல் லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழ ரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்று தான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதி யினனா? நீ வேறு இனத்தவனா? இரு!
அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு. ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு., தமிழின் நலன் கருதிப் போராடுகின் றவனாயிரு! அந்தப் போரில் தலை போவதாயினும் அஞ்சாதிரு!
நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே!
போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக போர்!
தமிழ்த் தாய் வெல்க!
தமிழர்கள் விடுதலை எய்துக!
குயில் 23.2.1960
Read more: http://viduthalai.in/page3/94223.html#ixzz3ObgU5gIA
சமஸ்கிருதத் துணைவேண்டாத் திராவிடத் தனித்தன்மை
- டாக்டர் கால்டுவெல்
திராவிட மொழிகள் வட இந்திய மொழிகளி லிருந்து பற்பல இயல்பு களில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும், அத் திராவிட மொழிகள், வட இந்திய மொழிகளைப் போலவே, சமற்கிருதத்திலிருந்து பிறந் தனவாகச் சமற்கிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன.
தாங்கள் அறிந்த எப் பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண் டிதர்கள். அவர்கள் கூறும் அம்முடிவை, முதன் முதலில் வந்த அய்ரோப்பிய அறி ஞர்களும் அவ்வாறே ஏற்றுக் கொண் டனர்.
தங்கள் கருத்தை ஈர்த்த ஒவ் வொரு திராவிட மொழியும் சமற்கிருதச் சொற்களை ஓரளவு பெற்றிருப்பதை அவர்கள் காணாதிருக்க முடியாது. அவற்றுள் சில இவை எம்மொழிச் சொற்கள் என்பதை அரும்பாடுபட்டே அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் பெரிதும் சிதைவுண்டிருக்கும்.
எனினும் சில சிறிதும் சிதைந்து மாறுபாடுற்றிரா என்பது உண்மை. ஆனால், அம்மொழி ஒவ்வொன்றும் சமஸ்கிருதம் அல்லாத பிறமொழிச் சொற்களையும், சொல்லுரு வங்களையும் அளவின்றிப் பெற்றிருப் பதையும் அவர்கள் தெளிவாகக் காண்பர் என்றாலும், அச்சொற்களே அம்மொழி வடிவில் பெரும் பகுதியை உருவாக் குகின்றன;
அச் சொற்களிலேயே அம் மொழியின் உயிர்நாடி நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்திருக்க மாட் டார்கள். அவ்வறியாமையின் பய னாய், அம்மொழிகளில் காணலாகும் அச்சமற் கிருதப் புறத்தன்மைகளுக்குக் காண முடியாத யாதோ ஒரு சில மூலத்திலி ருந்து தோன்ற வேற்று மொழிக் கலவை யாம் என்ற பெயர் சூட்டி அமைதி யுற்றனர்.
உண்மையில் சமற்கிருத மொழிச் சிதைவுகளாய் கௌரிய இனத்தைச் சேர்ந்த வங்காளம் போலும் மொழிகளிலும், சமற்கிருதத்திற்குப் புறம்பான சில சொற்களும் சொல்லுரு வங்களும் இடம் பெற்றுள்ளன; அப் பண்டிதர்கள் கருத்துப்படி, திராவிட மொழிகளுக்கும் அக்கௌரிய மொழி களுக்கிடையே மதிப்பிடத்தக்க வேறு பாடு எதுவும் இல்லையாதல் வேண்டும்.
இவ்வாறு, திராவிட மொழியில் காண லாகும் சமற்கிருதப் புறத்தன்மைகளை, வேற்று மொழிக் கலவையாக மதித்து ஒதுக்குவது, உண்மை நிலையிலிருந்து உருண் டோடி வீழ்வதாகும். மேலும், திராவிடம் சமற்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையின ராக மொழி நூல் வல்லுநர்க்கு ஏற் புடையதாய் விளங்கினும், இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது.
மேலே கூறிய பண்டிதர்கள் சமற்கிருத மொழியை ஆழக் கற்று, வட இந்திய மொழிகளை விளங்க அறிந்தவரே எனினும் அவர்கள் திராவிட மொழிகளை அறவே கண் டறியாதவராவர்; அல்லது, ஒரு சிறிதே அறிந்தவராவர்.
ஒப்பியல் மொழி நூல் விதி முறைகளில் ஒரு சிறு பயிற்சியும் பெறாத எவரும், திராவிட மொழி களின் இலக்கண விதிகளையும் சொற்களையும் நன்கு கற்றுத் தேர்ந்து, அவற்றைச் சமற்கிருத இலக்கண முறைகளோடும் ஒப்புநோக்க அறியாத எவரும், திராவிட இலக்கண அமைப்பு முறையும், சொல் லாக்க வடிவங்களும், இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த அவற்றின் எண்ணற்ற வேர்ச் சொற்களும், எத்தகைய சொல் லாக்க, சொற்சிதைவு முறைகளினாலேயா யினும், சமற்கிருதத்திலிருந்து தோன்றி யனவாகும் என்று கூற உரிமையுடையவராகார்.
(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் -
தமிழாக்கம்: புலவர் கா. கோவிந்தன்)
Read more: http://viduthalai.in/page3/94224.html#ixzz3Obi86O00
சுதந்திரத் திராவிடத்தில் ஆரியர் கதி என்ன?
- அறிஞர் அண்ணா
திராவிடநாடு பிரிவினை ஏற்பட்ட பின்பு, ஆரியர்கள் எங்கு செல்வது என்பது பற்றி, ஆரியர்களேதான் முடிவு செய்ய வேண்டும்.
ஆங்கிலோ - இந்தியர்கள் முதலிய மைனாரிட்டிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆரியர்களுக்கும் அளிக்கப்படும்.
ஆனால் மூடப்பழக்க வழக்கங்களும், பிறவியில் உயர்ந்தவன் என்பதும், வைதீகமும், வர்ணாச்சிரமமும் இருக்க இடங்கொடுக்க மாட்டோம்.
ஆரியர்களை எங்கும் ஓடிப்போகும்படி சொல்லவில்லை ஆனால், ஆரியர்களுக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லையானால் மேலே பல ஆரியவர்த்தத்திற்கு போகலாம்.
ஆரியர்கள் இந்நாட்டை விட்டு வெகு சுலபத்தில் போய் விட மாட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் விரட்டப்பட்ட போதுதான் வெளியேறினார்கள்.
ஆனால், நாங்கள் ஹிட்லராக இருக்க விரும்பவில்லை.
Read more: http://viduthalai.in/page3/%20_94226.html#ixzz3ObiUvZlE
தமிழர் தலைவர் பார்வையில்...
பெரும்பாலான பண்டிகைகளின் கதைகள் எல்லாம் தேவர்கள், அசுரர் களை அழித்து ஒழித் தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்ட தாகவே இருக்கும்.
பிரபலமாகக் கொண் டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.
தேவர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப் பனர்கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வர லாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணாவின் ஆரிய மாயை நூலிலும் விரிவாகக் காணலாம்)
தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத்ததும் திராவிட இனத்தின் தன்மானங் கருதித்தான்.
தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலை விடுதலை ஏடு வெளி யிட்டதுண்டு.
தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள் - தை முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.
பொங்கல் விழாவை புதுப்பொலி வுடன், தமிழர் பண்பாடு மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தோடு புதுத் திருப் பத்தைக் கொடுத்ததும் நம் இயக்கம் தான். இதன் மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப் பட்டது.
உலகம் பூராவும் அறுவடைத் திரு விழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப் பெரும் விழா பொங்கலாகும்.
இதிலும்கூடப் பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான புராண சரக்கு களை வேண்டிய மட்டும் திணித் துள்ளனர். தந்தைபெரியார் இதுகுறித் தும் ஆழமான கருத்தினை வெளிப் படுத்தியுள்ளார்கள். அதனையும் இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத் தமாக இருக்கும்.
ஒரு பொங்கல் நாளில் (விடுதலை 13.1.1970) தந்தை பெரியார் எழுதியுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப் படுகிறது.
பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்-கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல் லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்ப தாகத் தை மாதத்தையும் முதல் தேதி யையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.
இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றா லும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.
இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகை யென்று சொல்லப்படுவதாகும். ஆங்கி லத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.
என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.
- கி. வீரமணி
Read more: http://viduthalai.in/page3/94228.html#ixzz3ObihoI2X
வால்மீகியின் வாய்மையும்-கம்பனின் புளுகும்!!
அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.
இதுபற்றி பண்டித மன்மத நாததத்தர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.
இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.
இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார். ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான்.
உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார். ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?
Read more: http://viduthalai.in/page3/94230.html#ixzz3Obip05UT
தை முதல் நாளே; தமிழர் புத்தாண்டுத் திருநாள்! (கலைஞர் கடிதம்- 11.1.2015)
உடன்பிறப்பே, 9.-1.-2015 அன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் நடைபெற்ற தேர்தலில் ஒரு மனதாக வெற்றி பெற்ற என்னையும், பேராசிரியரையும், பொருளாளரையும் பாராட்டிச் சிறப்புத் தீர்மானம் ஒன்றும், மத்திய அரசைக் கண்டித்து ஒரு தீர்மானமும், மாநில அரசைக் கண்டித்து மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதோடு, மூன்றாவதாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, ஏடுகளில் அந்தத் தீர்மானம் வெளி வந்திருப்பதைக் கண்டிருப்பாய்.
அந்தத் தீர்மானம் தான், பொங்கல் திருநாளை - தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்கள் உள்ளம் தோறும் உவகைப் பெருக்குடன் இல்லந்தோறும் இன எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதாகும். 23.-1.-2008 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் - தி.மு. கழக ஆட்சியில் - மேதகு ஆளுநரும், எனது இனிய நண் பருமான திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் ஆற்றிய உரையில், தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வதென்றும்,
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்று பெரும் புலவரும் தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் முடிவெடுத்தார்கள் என்றும் அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார் என்றும், திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது,
ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும், எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ் நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டுப் பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக் களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட;
புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் என்றும் அறிவித்தார். மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சி தானந்தப் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார்,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள்
மூன்று :- 1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது;
2. அதனையே தமிழாண்டு எனக் கொண்டாடுவது;
3. வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது என்பனவாகும்.
அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது.
அதில், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர்.
அய்யன் திருவள்ளுவரை கருத்துலகத்தின் அளவு கோலாய்க் காட்டியது திராவிட இயக்கம். இன்று காலத்தின் அளவுகோலாகவும் திருவள்ளுவரைக் கருதச் செய்திருக்கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும் என்று எழுதியிருந்தார். மலேசியா நாட்டில் தமிழர்கள் தற்போது தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகி றார்கள்.
டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள்.
இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்று விளக்கியுள்ளார். தி.மு. கழக ஆட்சியில் செந்தமிழரெல்லாம் பெரு மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்ளத்தக்க வகையில் செய்யப்பட்ட அறிவிப்பாக, ஆளுநர் பர்னாலா அவர்களின் அறிவிப்பு கருதப்பட்டு, தமிழ் மக்கள் எல்லாம் அந்த ஆண்டு பொங்கல் விழாவினை எப்போதும் இல்லாத வகையில் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்ந் தார்கள்.
அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதாவுக்கு! 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக எப்படியெல்லாம் கழக ஆட்சியிலே கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்த முற்பட்டாரோ, அப்படியே தமிழின அடையாளத்தைக் காட்டும் இந்த அறிவிப்புக்கும் மூடு விழா நடத்திட ஏற்பாடுகளை அவசர அவசரமாகச் செய்தார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23.-8.-2011 அன்று பேரவையில் கூறும்போது, தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித் திரையில் தொடங் குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண் படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றார். கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நல்ல முயற்சிக்கு எதிராக அ.தி.மு.க. ஆட்சியில், நஞ்சைக் கலந்து நசுக்கு வதைப் போல், ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டது.
தமிழ் நாட்டுச் சரித்திரத்திலே தமிழையே பகைத்துக் கொள்கிற - செம்மொழி என்றாலே வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற பெரும் பிற்போக்குத்தனமான ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்திலும் இப்படித் தமிழையே வெறுக்கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக் கிறார்கள். அதைப் பற்றி நான் அப்போதே ஒரு கதையின் மூலம் விளக்கியிருக்கிறேன்.
நக்கீரன் காலத்திலே குயக்கொண்டான் என்று ஒருவர் தமிழ்ச் சங்கத்திலே நடைபெற்ற ஒரு பட்டி மன்றத்திலே ஆரியம் நன்று, தமிழ் தீது என்று சொல்ல - உடனே நக்கீரனுக்குக் கோபம் வந்து, தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ, சாகக் கடவாய் என்று அறம் பாடினாராம். உடனே குயக் கொண்டான் கீழே விழுந்து இறந்து விடுகிறார். உடனே அங்கேயிருந்த சிலர் நக்கீரனைப் பார்த்து; குயக் கொண்டாரைப் பிழைக்க வைக்க கேட்டுக் கொண்டார்களாம்.
அதைக் கேட்ட நக்கீரன், ஆரியம் நன்று தமிழ் தீ தென் றுரைத்த காரியத் தால் காலன்கோட் பட்டானைச் -சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினால் செந்தமிழை தீர்க்க சுவாகா! என்று பாட, குயக் கொண்டான் உயிர் பெற்று எழுந் தானாம். தமிழக அரசின் அறிவிப்பு வந்த நேரத்திலேயே மிகச் சிறந்த தமிழ்க் கல்வெட்டு ஆய்வாளரும் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் அவர்கள், இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் - ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடு வதில் என்ன தவறு? என்றார்.
தி.மு. கழக ஆட்சியில் ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29.-1.-2008 அன்று 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன். 1-.2.-2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை. சிவபுண்ணியமும், ம.தி.மு.க. சார்பில் அப்போது அங்கேயிருந்த மு. கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு. செல்வமும் அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது.
இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட தி.மு. கழக ஆட்சியிலே சட்டமாகக் கொண்டு வரப்பட்டு 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஜெயலலிதா ஆட்சியிலே அது மாற்றப்பட்டு விட்டது.அவரது அந்த அறிவிப்பினை பா.ஜ.க. அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது. அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவினால் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவை அவையிலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து, அதுபற்றி கருத்துக் கேட்ட போது, கம்யூனிஸ்ட்களின் தமிழ் உணர்வுக்குத் தலை வணங்குகிறேன் என்று அப்போதே பதில் கூறினேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிக்கையில், அ.தி.மு.க. அரசின் அந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மையாகக் கண்டித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித் தார்.அவர்களுடைய அந்தத் தமிழ் உணர்வுக்கு நான் அப்போதே நன்றி தெரிவித்திருக்கிறேன்.
தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு!
இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! என்று பாடியதையும் நினைவு கூர விரும்புகிறேன்.
இந்த வரலாற்று உண்மையை மறைக்கத்தான் இன்றைக்கு இருக்கும் ஆட்சியாளர்கள் பெரு முயற்சி எடுத்து, சித்திரைத் திங்கள் தான் தமிழ் ஆண்டின் துவக்கம் என்று மாற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அவர்களின் நடவடிக் கைக்கு தமிழ்நாட்டு மக்கள் எந்த மரியாதையும் கொடுத்ததாகத் தெரியவில்லை.
வெளிநாட்டிலே வாழும் தமிழர்கள் கூட இந்த உண்மையைப் புரிந்து கொண்டு; தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழர் களின் திருநாள், தமிழ்ப் புத்தாண்டின் துவக்கம் என்று உறுதி செய்து கொண்டு, கொண்டாடு கிறார்கள். எனவே அ.தி.மு.க. அரசு அதை ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ, அதைப் பற்றிக் கவலைப்படாமல், தைத் திங்கள் முதல் நாளை, தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடிட தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தை முதல் நாளே; தமிழர் புத்தாண்டுத் திருநாள்!
அன்புள்ள, மு.க.
இளவல் வீரமணி அவர்களின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்தது
அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் கூறியது. தி.மு. கழக அரசின் அறிவிப்புகண்டு, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ, தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது.
பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே அதாவது 24.-1.-2008 அன்று தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில், தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும், விவசாய வாழ்வு சார்ந்தும் தைத்திங்கள் முதல் திருநாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற திருநாளாகும்.
மறைமலை அடிகளார் போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறிஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக்கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடைமுறைப்படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித்திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடுகிறார்கள்.
எல்லா தேசிய இனங்களுக்கும் அழிக்க முடியாத சில அடையாளங்கள் உண்டு. தமிழர் களுக்கு நில அடையாளம் இருக்கிறது; இன அடையாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும் குழப்பத்தில் இருந்தது. அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக்கிறது.
Read more: http://viduthalai.in/page-6/94354.html#ixzz3OcOangmi
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ஜனவரி 16,17,18 மூன்று நாட்கள் 21ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் பண்பாட்டுத் திருவிழா
தை 1 - தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா
* பெரியார் விருது * நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்
* ஒளிப்படக் கண்காட்சி * இயற்கை உணவுத் திருவிழா
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் 21ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் பண் பாட்டுத் திருவிழா (ஜனவரி 16,17,18-வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது.
முதல் நாள் நிகழ்ச்சி
16.1.2015 அன்று வெள்ளி மாலை 4.00 மணிக்கு விழா தொடக்க நிகழ்வாக உயிர்நிழல் கானுயிர் கண்காட்சியை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைக்கிறார்.
அன்பு பகுத்தறிவு கலை இலக்கிய இசைக் குழுவின் சார்பில் முல்லை நிலம் சார்ந்த தொல் பறை, ஆதிக்குடிகளின் மண், பலகை கருவி களின் தொல்லிசை, நாட்டுப்புறப் பாடல்கள் தொல் இசை நிகழ்ச்சிகளையும், கண்ணப்பர் ஒயிலாட்டக் குழு கருப்பையா வழங்கும் ஒயிலாட்டம் & சிலம்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் தொடங்கி வைக்கிறார்.
முதல் நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் முனைவர் ந.மங்கள முருகேசன் வரவேற்க, திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றுகிறார். தமிழ்ப் புத்தாண்டு என்னும் தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையாற்று கிறார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுயமரியாதைச் சுடரொளி ஆ. திராவிடமணி படத்தைத் திறந்து வைத்து தலைமையுரையாற்றுகிறார். எழுத்தாளர் வே.மதிமாறன், சூழலியலாளர் ம.யோகநாதன் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கப் படுகிறது. தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் விழா சிறப்புரை ஆற்றுகிறார்.
தமிழ்சாக்ரட்டிஸ் தொகுப்புரை வழங்க வி.பன்னீர்செல்வம் நன்றி கூறுகிறார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி
17.1.2015 அன்று மாலை வித்தியாசமான இசைக் கருவிகளுடன் பாவாடைராயன் கிராமியக் கலைக் குழுவின்சார்பில் வீரேந்திரன் பிரேம் வழங்கும் பம்பை ஆட்டம் மற்றும் தென்றல் குழந்தைகள் மன்றம் சார்பில் நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சிகளை பகுத்தறிவு கலை இலக்கிய அணி, மாநிலக் கலைத்துறை அமைப்பாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் தொடங்கி வைக்கிறார்.
வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் தலை மையில் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வரவேற்க, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநில செயலாளர் மஞ்சை வசந்தன் அறிமுக உரை ஆற்றுகிறார்.
முல்லை நில உயிர்ச்சூழல் எனும் தலைப்பில் ஓசை காளிதாஸ் கருத்துரையாற்றுகிறார். முனைவர் இளங்கோவன் பண் ஆராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார் படத்தைத் திறந்துவைக்கிறார். இந்திய யூனியன் முசுலீம் லீக் பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் வாழ்த்துரை ஆற்றுகிறார்.
பொம்மலாட்டக் கலைஞர் மு.கலை வாணன், எழுத்தாளர் இ.மலர்வதி, கலை இயக்குநர் லால்குடி இளையராஜா ஆகி யோருக்கு பெரியார் விருது வழங்கி திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றுகிறார். ஏ.இராஜ சேகர் தொகுப்புரையாற்ற, கி.சத்தியநாராயணன் நன்றி கூறுகிறார்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சி
மூன்றாம் நாள் 18.1.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் மாடாட்டம், மயிலாட் டம், கொக்காலிக்கட்டை, கிழவன்-கிழவி ஆட்டம், கரகாட்டம், பறையாட்டம், நாட்டுப் புறப் பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளை சமர் கலைக் குழுவின் சார்பில் வேலு வழங்குகிறார்.
நிகழ்ச்சியை அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் நலச்சங்கக் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தொடங்கி வைக்கிறார். டெய்சி மணியம்மை தலைமையில் செ.கனகா வரவேற்புரையாற்ற, உ.மோகனப்ரியா அறிமுக உரை ஆற்றுகிறார். திராவிடர் திருநாள் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் கோவி. லெனின் கருத்துரையாற்றுகிறார். இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் வாழ்த்துரை ஆற்றுகிறார்.
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் படத்தை திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்து ராமன் திறந்துவைக்கிறார். திரைப்பட இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமான், ஊடகவியலாளர் ப.ரகுமான் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றுகிறார். இறைவி தொகுப்புரையாற்ற, சுமதி கணேசன் நன்றி கூறுகிறார்.
மூன்று நாட்களும் உயிர்நிழல் கானுயிர் கண்காட்சி, பண்பாட்டு விளையாட்டுகள், இயற்கை உணவுத்திருவிழா ஆகியன நடைபெறுகின்றன.
திராவிடர் திருநாளில் ஒவ்வொரு ஆண்டும் அய்வகை தினைக்கோட்பாட்டை மய்யப்படுத்தி அந்தந்த நிலத்தின் சூழல் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். அந்த வகையில் இவ்வாண்டு முல்லை நிலம் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. அதில் மர வீடு, தொங்கு பாலம் உள்ளிட்ட வற்றுடன் குழந்தைகள், பெரியவர்கள் அனை வரும் கண்டு ரசிக்கும்படி காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.
பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறி வாளர் கழகம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மூன்று நாட்களும் (ஜனவரி 16,17,18) தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் 21ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் பண்பாட்டுத் திருவிழா நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 95512748139551274813, 99404892309940489230, periyarmedia@gmail.com
Read more: http://viduthalai.in/page-6/94355.html#ixzz3OcP2GSby
இயக்கத்தின் இலட்சியங்களைப் பரப்புவதோடு மதவாத சக்திகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட வேண்டும்
இயக்கத்தின் இலட்சியங்களைப் பரப்புவதோடு
மதவாத சக்திகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட வேண்டும்
கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட11 அம்சங்கள்
திருச்சி, ஜன.12- திராவிடர் கழகக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதோடு, மதவாத சக்திகளுக்கு எதிராக பொது மக்களைத் திரட்டும் கடமையும் நமக்கு உண்டு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் திருச்சிராப்பள்ளி - புத்தூர் பெரியார் மாளிகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 11.1.2015 காலை 10.30 மணிக்கு, கழகச் சொற்பொழிவாளரும், கோவை மண்டல திராவிடர் கழகச் செயலாளருமான கோவை - புலியகுளம் வீரமணி கடவுள் மறுப்புக் கூற, தொடங்கியது.
மறைந்த திராவிடர் கழக வீராங்கனை ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், திருநெல்வேலி மண்டல திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் சி. மனோகரன் ஆகியோர் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கழகத் தலைவர் தெரிவித்த கருத்துரைகள்
1. தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் உலக அளவில் பரவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் சிறப்பான வெற்றிகள் கிடைத்துள்ளன.
2. தமிழ்நாட்டில் அதிக பொதுக் கூட்டங்களை நடத் துவது நமது கழகம்தான் - ஆனாலும் ஊடகங்கள் உள் நோக்கத்துடன் அவற்றை வெளியிடுவதில்லை - நம் இயக்க ஏடுகளைப் பெரிய அளவில் பரப்பிட வேண்டும்.
3. தொலைநோக்கோடு தந்தை பெரியார் சொன்னது பிற்காலத்தில் நடந்தது. காமராசர் அவர்கள் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவியைத் துறந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவராகச் சென்றபோது - அதை தந்தை பெரியார் வரவேற்கவில்லை; மாறாக அது தமிழ்நாட்டுக்கும் அவர்களின் ஆட்சிக்கும், காமராசருக்கும் தற்கொலைக்கு ஒப்பந்தம் என்று தந்தை பெரியார் தந்தி கொடுத்தார்; காமராசருக்கு; பிற்காலத்தில் அது அப்படியே நடந்ததா இல்லையா? காமராசரும் அதை உணர்ந்து வெளிப்படை யாகவும் ஒப்புக் கொண்டார்.
4. 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்குமுன் மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்தால், நாட்டின் மதம் சார்ந்த தன்மைக்குக் கேடாக முடியும் என்று எச்சரித்தோம். வளர்ச்சி வளர்ச்சி என்று மோடி பிரச்சாரம் செய்வது - ஒரு ஏமாற்று வேலை என்றும் கூறினோம்.
இப்பொழுது மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகவில்லையா? நம் எச்சரிக்கையை பொருட்படுத்தாதவர்கள், இப்பொழுது நம் எச்சரிக்கையின் அருமையை உணரும் நிலை ஏற்பட்டுள்ளதே! பிஜேபியுடன் கூட்டு வைத்திருந்த கட்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக விலகி வருகின்றனவே!
5. தந்தை பெரியார் தம் கொள்கைகளின் அருமைகளை முன்பைவிட இப்பொழுது மக்கள் உணரத் தலைப்பட் டுள்ளனர்; இடதுசாரிகளும் தந்தை பெரியார் கொள்கை களைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருப்பது வர வேற்கத்தக்கது.அதே நேரத்தில் நம்முடைய இயக்கத்தின் கட்டமைப்பை உறுதிப்படுத்தவேண்டும் - பிரச்சாரம் பெரிய வீச்சில் நடைபெறவேண்டும்.
6. 2000 வட்டார மாநாடுகளை அறிவித்துள்ளோம், எண்ணிக்கையில் ஒன்று கூடக் குறையக் கூடாது, 2001 ஆக அது இருக்க வேண்டுமே தவிர, ஒன்று கூடக் குறையக் கூடாது. இம்மாநாடுகளில் ஒத்த கருத்துள்ள பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் அழைக்க வேண்டும்.
7. அப்படி நடத்த உள்ள திராவிடர் விழிப்புணர்ச்சி மாநாட்டுக்கு கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் அமைப்பு ரீதியான ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்ட பகுதி களில் ஈடுபட வேண்டும். வசூல், விளம்பரம், ஏற்பாடுகள் பற்றி அவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
8. கழகச் சொற்பொழிவாளர்கள் தங்கள் சுற்றுப் பயணத்தில் இயக்க நூல்களையும் கொண்டு சென்று விற்பனை செய்வது நலம். எல்லா வகைகளிலும் நம் கொள் கைப் பிரச்சாரத்துக்கான வாய்ப்பினை விரிவுபடுத்த வேண்டும்.
9. நம் இயக்கக் கொள்கைகளோடு இன்று ஏற்பட்டுள்ள மதவாதப் போக்குகள் - வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி ஆட்சியைப் பிடித்துள்ள மத்திய பிஜேபி ஆட்சியில் எந்தளவு வளர்ச்சி - ஊழலைப் பற்றிப் பேசும் அவர்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களைப் பற்றியெல்லாம் முறைப் படுத்தி பட்டியலிட்டு கழகச் சொற்பொழிவாளர்கள் உரையாற்றிட வேண்டும். மதவாத சக்திகளுக்கு எதிராக வெகு மக்களை அமைப்புகளை ஒன்று திரட்ட வேண்டும்.
10. இயக்கச் சொற்பொழிவாளர்கள், உள்ளூர் கழக நிருவாகிகளிடமும், தோழர்களிடமும் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் - நல்ல உறவு அவர்களிடையே இருக்க வேண்டும்.
11. தந்தை பெரியார் மறைந்து 41 ஆண்டுகள் ஓடி விட்டன, அந்த இமயம் சாய்ந்த நிலையிலும், நம் இயக் கத்தை வலுவாகவே கட்டியுள்ளோம், பிரச்சாரங்களில் தொய்வு இல்லை, வெளியீட்டுத் துறையில் பெருஞ் சாதனை படைத்துள்ளோம்.
சமூகநீதித் துறையில் நாம் சாதித்துள்ளது சாதாரணமானதல்ல எடுத்துக்காட்டு, எம்.ஜி.ஆர். அரசில் கொண்டு வரப்பட்ட வருமான வரம்பு ஆணையைத் திரும்பப் பெறச் செய்ததோடு, 49 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டின் அளவை 69 சதவிகிதமாக அதிகரிக்கச் செய்ததற்கு கழகத்தின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. 69 சதவீதத்தைப் பாதுகாத்த வகையிலும் ஆக்கப்பூர்வமாக செயல் பட்டுள்ளோம்.
மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக் கப்பட திராவிடர் கழகம் அகில இந்திய அளவில் ஆற்றிய பங்கு மகத்தானது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அகில இந்தியாவில் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்டவர்கள் பலன் பெற்றுள் ளனர்.
அடுத்து தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்து வதில் நம் கவனம் இருக்கும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை நிலைநாட்டத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப் படும். மக்கள் மத்தியில் நம் பணிகள் போய்ச் சேர கழகச் சொற்பொழிவாளர்களின் பங்கு மிக முக்கியமானது.
மேற்கண்ட கருத்துகளைக் கழகத் தலைவர், கழகச் சொற்பொழிவாளர்களின் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிழைநுதல்செல்வி, செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் தஞ்சை இரா. செயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், திருச்சி மண்டல தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் மு. சேகர், மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் கழகச் சொற்பொழிவாளர்கள் பெரும்பாலும் வந்திருந்தனர். டாக்டர் அன்பழகன் நன்றி கூற பிற்பகல் 12.30 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.
Read more: http://viduthalai.in/e-paper/94349.html#ixzz3OcPqlD61
பெரியார் திடலில் திராவிடர் திருநாள் : மூன்று நாள் விழாவையும் காண வாரீர்!
சிறீரங்கம் பார்ப்பனரைப் பல்லக்கில் தூக்குவதா? நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்!
பெரியார் திடலில் திராவிடர் திருநாள் : மூன்று நாள் விழாவையும் காண வாரீர்!
செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
சென்னை, ஜன.12- ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாள்களில் சென்னைப் பெரியார் திடலில் நடக்கவிருக்கும் திராவிடர் திருநாள் விழாபற்றி விளக் கம் அளித்த திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அனைவரையும் திராவிடர் திருநாள் விழாக்களைக் காண வருமாறு அன்பு அழைப்பையும் கொடுத்தார் செய்தியா ளர்களிடம் இன்று அவர் தெரிவித்தாவது.
திராவிடர் திருநாளின் மய்யக் கருத்து என்ன?
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத் தின் சார்பில் மூன்று நாள் திராவிடர் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன என்று இன்று (12-1-2015) சென்னை பெரியார் திடலில் செய்தியாளர் கேட்ட கேள்விக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பதில்:
திராவிடர்கள்மீது திணிக்கப்பட்ட ஆரியப் பண்பாட்டை எதிர்க்கக் கூடியதாகும். ஆரியர் திராவிடர் என் பதை ரத்தப் பரிசோதனை அடிப்படை யில் நாங்கள் கூறுவதில்லை. கடைப் பிடிக்கும் பண்பாட்டின், கலாச்சாரத் தின் அடிப்படையில்தான் கூறுகிறோம்.
திராவிடம் என்றால் ஜாதியற்றது - பிறப்பில் பேதமற்றது; அனைவருக்கும் அனைத்தும் என்பது - உழைப்புக்கு மதிப்பளிப்பது - விவசாயத்தைப் போற்றுவது. ஆரியம் என்றால் பிறப் பில் பேதம் பேசுவது, உழைப்பை அவமதிப்பது - விவசாயத்தைப் பாவத் தொழில் என்பது. திராவிடர்களுக்கு என்று உள்ள அடையாளத்தை வெளிக் காட்டுவதுதான் பெரியார் திடலில் நடக்கும் மூன்று நாள் விழாவாகும்.
ஊடகத் துறையினருக்கு அழைப்பு
ஊடகத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். பெரியார் திடலில் மூன்று நாட்கள் (சனவரி 16,17,18) நடக்கவிருக்கும் திராவிடர் திரு நாள் விழாவுக்கு நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தோடு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர்.
கோவையில் காந்தியார் நினைவு நாள்
காந்தியார் படுகொலை செய்யப் பட்ட ஜனவரி 30ஆம் நாளை மதச் சார்பற்ற சக்திகளின் ஒன்றுபட்ட நாளாகக் கருதுகிறோம். வரும் 30ஆம் தேதி கோவையில் திராவிடர் கழகத் தின் சார்பில் எனது தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.
திருமாவள வன், சி.சி.அய்.டி.யூ. தலைவர் சவுந்தர ராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை மு. இராமநாதன் (திமுக) முதலியோர் உரையாற்று கின்றனர்.
பி.கே. திரைப்படம்
பி.கே. என்ற திரைப்படம் இந்தி யில் வெளியாகியுள்ளது. முற்போக்கு கருத்துக்கள், மூடநம்பிக்கை எதிர்ப்புச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத சக்தி கள் எதிர்த்தாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மொழி ஒரு பிரச்சினையல்ல. அதில் இடம் பெற்றுள்ள கருத்துதான் முக்கியம். நாளை திராவிடர் கழகக் குடும்பங்கள் எல்லாம் அத்திரைப்படத்தைப் பார்க்க இருக்கிறோம்.
மாதொரு பாகன்
மாதொரு பாகன் என்ற புதினத்தை பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் எழுதி இருக்கிறார். இந்நூல் எழுதப் பட்டு நான்கு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் அதனை எதிர்த்துப் பிற் போக்குவாதிகள் அச்சுறுத்துகின்றனர். ஒரு எழுத்தாளனுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா? வேண்டுமா னால் மறுப்பு எழுதட்டும்.
அதை விட்டு விட்டு கதவடைப்பு என்றெல்லாம் சொல்லி அச்சுறுத்துவது அசல் பிற்போக்குத்தனம். பெருமாள் முருகன் தம் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் முற்போக்குச் சக்தி களின் ஆதரவு அவருக்கு உண்டு. அவரை அழைத்துப் பாராட்டுவோம்.
தமிழக அரசு அவருக்குத் தேவை யான பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும்.
சிறீரங்கம் பார்ப்பனரைச் சுமந்த நிகழ்ச்சி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடருவோம்!
சிறீரங்கம் கோயிலில் அர்ச்சகர் பார்ப்பனரை பல்லக்கில் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த் தது, தி.மு.க. ஆட்சியில் அதனைத் தடையும் செய்தது. அதனை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்றனர்; அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அப்படி இருக்கும் பொழுது இவ்வாண்டு பார்ப்பனரைச் சுமக்கும் பிரம்ம ரதம் என்ற நிகழ்ச்சி நடந்துள் ளது. அதனை எதிர்த்த திராவிடர் கழ கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
இப்பொழுது நடக்கும் அதிமுக ஆட்சியில் இந்த ஆணையில் ஏதோ திருத்தம் செய்துள்ளதாம். யார் என்ன செய்தாலும் கண்டிப்பாக இது நீதிமன்ற அவமதிப்பாகும். உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரா விடர் கழகம் தொடரும்.
சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதி
உலக வரலாற்றில் சர்வாதிகாரி களுக்கு ஏற்பட்ட அதோ கதி. இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கும் ஏற்பட்டு விட்டது. இன்றைக்கு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் நிலை. கடைசி நேரத்தில் கூட இராணுவத்தைப் பயன்படுத்தித் தேர்தலை ரத்து செய்து சர்வாதிகாரி யாகலாமா என்ற முயற்சியில் தோல்வியைக் கண்டு இருக்கிறார்.
வினை விதைத்தவன் வினையறுப் பான் என்பது பழமொழி. திருப்பதி ஏழுமலையான் சக்தி அம்பலமானது - சோதிடமும் தோற்றது.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவு இந்திய பிரதமர் மோடிக்கும் பலத்த அடிதான். வாழ்த்துகள் கூறியவர் ஆயிற்றே! தமிழர்கள்தான் என்னைத் தோற்கடித்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைப் புதிய அதிபர் உணர வேண்டும் - உணர்ந்து செயல் பட வேண்டும்.
தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், அவர்களின் படகுகளை யும் விடுவிக்க வேண்டும்.
- செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்
Read more: http://viduthalai.in/e-paper/94342.html#ixzz3OcQ4Y8M4
தமிழர்தலைவர்உரையில்தெறித்தமுத்துகள்!
வியாபார ரீதியால் மிஸ்டு கால் கொடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது தமிழ்நாட்டில் கட்சிக்கு ஆள் பிடிப்பதற்கு மிஸ்டு கால் கொடுக்கிறார்கள்.
மிஸ்டு காலும் சொந்த காலும்
கொள்கை எல்லாம் ஒன்றும் தேவையில்லை - வெளியில் சொல்லும் அளவுக்கு அவர்களின் கொள்கை களும் நாட்டு மக்களுக்கு விரோதமானவையே! எனவே சொந்தக் காலில் நிற்க முடியாமல் மிஸ்டு காலில் நிற்க முயற்சிக்கிறது பிஜேபி.
>>>
ராசி பலனா, காசி பலனா?
ஏடுகளில் ராசி பலனை வெளியிடுகிறார்கள்; ஒரே ராசி உடையவர்களுக்கு ஒவ்வொரு பத்திரிகையிலும் வெவ்வேறாகவே இருக்கும்; இதில் எது உண்மை என்பதைச் சிந்திக்க வேண்டும்; இலங்கையில் ஜோதிடர் களின் பேச்சைக் கேட்டுதான் ராஜபக்சே தேர்தலில் நின்றார். என்னாயிற்று? ராசி பலன் கை கொடுத்ததா?
இலங்கையிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமது மனைவியுடன் வந்தார் ராஜபக்சே - (நம் பத்திரிகையாளர்கள் எல்லாம் தாக்கப்பட்டனர்) கோவிந்தா கோவிந்தா! என்று கோஷம் போட்டார் ராஜபக்சே! கடைசியில் தேர்தல் முடிவு கோவிந்தா கோவிந்தாவாக போய் விட்டதே!
ராசிபலன் என்று ஏடுகள் வெளியிடுவது - அவற்றை விற்று காசி பலன் அடைவதற்கே என்பதை நினைவில் வையுங்கள்.
>>>
மது போதையும் மத போதையும்
டாஸ்மாக் போதை பொழுது விடிந்தால் போய்விடும். ஆனால் மத போதைக்கு ஆட்படுபவர்கள் சுலபத்தில் அதி லிருந்து விடுபட முடியாது. அறிவு நாசம், பொருள் நட்டம் கால விரயம் என்ற எத்தனையோ சொல்லலாம். இந்தப் போதைகளை எல்லாம் போக்குவது ஈரோடுப் பாதைதான்.
>>>
கழகம் ஓர் அலாரம்!
இரவு தூங்கச் செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பதற்காக அலாரம் வைத்துப் படுப்பார்கள். குறிப்பிட்ட நேரம் வந்ததும் அலாரம் ஒலிக்கும். உடனே எழுந்திருக்க மாட்டார்கள் - எரிச்சலாக அந்த அலாரத்தின் பொத்தானை அழுத்தி விட்டு, மறுபடியும் புரண்டு படுப்பார்கள்; அலாரம் மட்டும் தூங்காது; மறுபடியும் ஒலிக்கும். அவன் தூக்கத்திலிருந்து எழுகின்ற வரை இடைவெளி விட்டு இடைவெளி விட்டு அடித்துக் கொண்டே இருக்கும்.
அந்த அலாரம் போன்றதுதான் திராவிடர் கழகம்; தூங்கிக் கிடக்கும் தமிழன் விழிப்புக் கொள்ளும் வரை கழகம் என்ற அலாரம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.
>>>
கறுப்புச் சட்டை
நீதிபதிகள் கறுப்பு நிறச் சட்டை அணிகிறார்கள். நீதிக்கு எப்படி கறுப்புச் சட்டை தேவைபடுகிறதோ. அதுபோலவே சமூக நீதிக்கு எங்கள் கறுப்புச் சட்டை தேவைப்படுகிறது.
Read more: http://viduthalai.in/e-paper/94351.html#ixzz3OcQLaqdX
பாடுபடுவான்
இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான்.
(குடிஅரசு, 3.5.1936)
Read more: http://viduthalai.in/page-2/94353.html#ixzz3OcQUo6Gx
வழிகாட்டும் திமுக தீர்மானம்
9.1.2015 அன்று தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் சிறப்பானவை; வரவேற்கத் தக்கவை. குறிப்பாக முதல் தீர்மானம் தன்னிலை விளக்கம் கொண்ட நீண்ட தீர்மானமாகும்.
இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மைக்கு விரோத மானது மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பதைப் பொது வாகக் குறிப்பிடாமல் காரண காரியத்துடன் அத் தீர்மானம் விளக்கிக் கூறுகிறது.
இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே, இராமருக்குப் பிறக்காதவர்கள், முறை தவறிப் பிறந்தவர்கள், பகவத் கீதை - தேசிய நூல், காந்தியாரைப் போன்ற தேச பக்தரே கோட்சே, காந்திக்குப் பதிலாக கோட்சே நேருவைத் தான் சுட்டிருக்க வேண்டும், நாடு முழுவதும் கோட்சேக்குச் சிலைகள் அமைக்க வேண்டும், கிறிஸ்துமஸ் நாளை நல்லாட்சி நாளாக அனுசரிப்பது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க முயற்சி, அப் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது,
டில்லி பல்கலைக் கழக விடுதி மாணவர்களுக்கான சுற்றறிக்கையில் ஆங்கிலம் அகற்றப்பட்டு இந்தியை மட்டுமே பயன்படுத்துவது, 2021இல் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவது என்று பா.ஜ.க. அரசில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர்கள் பா.ஜ.க.வை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். இந்து மகா சபைத் தலைவர்கள் மற்றும் இவைகளின் துணை அமைப்புகள் வெளிப் படையாகவே கருத்துத் தெரிவித்தும், அறிக்கை வெளியிட்டும் வருகின்றனர் என்பனவற்றையெல்லாம் சுட்டிக் காட்டும் தி.மு.க. பொதுக் குழு, மதச் சார் பின்மையிலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேட்கையிலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பிற இயக்கங்களும் தங்களின் மாநில உணர்வு மற்றும் அரசியல் மாச்சரியங்களை மறந்து, மத்திய அரசின் நடவடிக்கைகளினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மதவாத பேராபத்தை ஒன்றுபட்டு எதிர்த்திட முன்வருமாறு திமுக பொதுக் குழுவின் தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அடிப்படைக் கட்டுமானம் உள்ள மிகப் பெரிய கட்சியான திமுக இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதைச் சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது முடியாது.
இன்றைக்கு நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மதவாத அச்சுறுத்தலிலிருந்து மக்களைக் காத்திட முன் வந்து முன்மொழியப்பட்டுள்ள தீர்மானமாகவே இதனைக் கருதிட வேண்டும்.
மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும்கூட பல்வேறு மதங்கள் மத்தியிலே கலவரங்களை உண் டாக்கும் வேலையில், பிஜேபி.யும் அதன் பரிவாரங் களும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன.
முதல் அமைச்சர் பொறுப்பில் நரேந்திரமோடி இருந்த நிலையில்தானே குஜராத் மாநிலத்தில் சிறு பான்மையினருக்கு எதிராகக் கலவரம் தூண்டப்பட்டு, 2000க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அத்தகையவர் இந்திய ஆட்சியின் பிரதமராகவே வந்தாகி விட்ட நிலையில், நாட்டில் என்ன நடக்கும் என்ற பீதி மக்கள் மத்தியிலே எழுந்து நிற்கிறது.
அதனைத்தான் திமுக பொதுக் குழு விரிவாக சுட்டிக் காட்டியுள்ளது. அமைச்சர்களாக இருக்கிறோம் என்கிற பொறுப்புணர்ச்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, மத வெறியைத் தூண்டும் நஞ்சினைக் கக்கி வருவதை திமுக பொதுக் குழு அழுத்தமாகவே கண்டித்துள்ளது.
பி.ஜே.பி. அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று திராவிடர் கழகம் எச்சரித்து வந்ததோ, அந்த ஆபத்துகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஆர்ப்பரித்து, சுனாமி அலை போல பாய்ந்து வருவதைக் காலந்தாழ்ந்தாவது உணர்ந்திட வேண்டும்; அப்படி உணர்ந்த நிலையில் தேர்தலில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த கட்சி களும், தலைவர்களும்கூட, அந்தக் கூட்டணியிலிருந்து வேகமாக விலகி வர ஆரம்பித்துள்ளனர்.
திராவிடர் இயக்கச் சித்தாந்தம் ஆழமாக வேர் விட்டு வளமிகுந்து நிற்கும் தந்தை பெரியார் அவர் களின் தமிழ் மண்; இந்த வகையிலும் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று ஆறுதல் கொள்ளலாம். இந்த நிலை இந்தியா முழுமையும் உருவாக தமிழ்நாடு வழி காட்டியாக இருக்க வேண்டும்.
மிகப் பெரிய அரசியல் கட்சியான தி.மு.க. இதற்கான வெளிச்சத்தை - நற்பாதையைக் காட்டியுள்ளது.
தி.மு.க. இப்படி தீர்மானித்ததாலேயே ஏட்டிக்குப் போட்டி என்ற பாணியில் அரசியல் மாச்சரியத்தோடு செயல்பட எத்தனிக்கக் கூடாது; அதனைத் தான் திமுக பொதுக் குழுத் தீர்மானம் வலியுறுத்தவும் செய்கிறது. அரசியல் மன மாச்சரியங்களை மறந்து மதவாத பேராபத்தை எதிர்த்திட வேண்டும் என்று அத்தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதே சொற்களைக் கையாள மனம் இல்லை என்றால், மதவாத பேராபத்தை எதிர்கொள்ளும் வகையில் வேறு சொற்களைக் கையாண்டு தீர்மானங் களை நிறைவேற்றலாம்! அப்படி எழுத தமிழில் சொற்களுக்கா பஞ்சம்? இதற்குமுன் எப்படி நடந் திருந்தாலும் இனி வருங் காலத்திலாவது மதச் சார் பின்மையை, சமூக நீதியைக் காப்பாற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணி திரளட்டும் - இதில் திமுக முந்திக் குரல் கொடுத்திருப்பது பெருமைக்குரியதே ஆகும்.
Read more: http://viduthalai.in/page-2/94356.html#ixzz3OcQZHPwe
சிறுபான்மையினரைச் சீண்டும் பா.ஜ.க. அமைச்சர்
போபால், ஜன.13_ முஸ் லீம்களின் தொழுகையும் சூர்ய நமஸ்காரம் தான் என மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாராஸ் ஜெயின் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு கடந்த 2007 ஆம் ஆண் டில் இருந்து சூர்ய நமஸ் கார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில்,முஸ்லீம்களின் தொழு கையும் ஒருவித சூர்ய நமஸ்காரம்தான். சிறு பான்மையினரும் சூர்ய நமஸ்காரம் செய்யவேண் டும். ஆனால் விருப்பம் இல்லாத மாணவர்கள் சூர்ய நமஸ்கார நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளத் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜெயி னின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாநில அரசு சூர்ய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் துள்ளது. அந்த நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் ஜெயின் இவ்வாறு தெரி வித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் ஏதாவது கருத்து தெரி வித்து சர்ச்சையில் சிக் குவது வழக்கமாகிவிட் டது என்பது குறிப்பிடத் தக்கது.
Read more: http://viduthalai.in/e-paper/94368.html#ixzz3Oi8DDH6w
வரவேற்கத்தக்கது - இங்கல்ல, கருநாடகத்தில்
அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு
சுடுகாடு
மைசூரு, ஜன.13- கருநாடக மாநிலத்தில் கிரா மங்களில் உள்ள அனைத்து சுடுகாடுகளும் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவானது என்றும், எஞ்சி இருக்கும் சுடுகாடுகளும் அரசின் சுடுகாடு களாக மாற்றப்படும் என்றும் கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் வி.சிறீனிவாஸ் பிரசாத் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் மைசூருவில் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனிவாச பிரசாத் கூறும்போது, இதுகுறித்து அரசு தேவை யான உத்தரவுகளை துணை ஆணையர்களுக்கு பிறப்பித்துள்ளது. சுடுகாடுகளைப் பொதுவாக்கு வதற்குரிய மாற்றங்கள் குறித்து குடியிருப்பவர் களிடமிருந்து எவ்வித எதிர்ப்புகளும் இன்றி அவர்களின் வசதிக்காகவே நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.
அரசு ஆழ்துளைக் கிணறு, மேற்கூரை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைத்து உள்ளூர் பணியாளர்களைக்கொண்டு பராமரிக்கப்படும். இந்த முயற்சியில் ஆட்சேபணை ஏதுமிருந்தால், துணை ஆணையர்கள் இரண்டு ஏக்கர் அளவில் நிலத்தை கிராமத்தில் பெற்று அரசு சார்பில் பொது சுடுகாடு, அத்தியவசியத் தேவைகளுக்கான வசதிகளுடன் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மைசூரு வட்டத்தில் கிராம செயலாளர்கள் சங்கத்தினரின் நாட்குறிப்பு, நாட்காட்டி ஆகிய வற்றை வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனி வாச பிரசாத் வெளியிட்டார். இடுகாடு மற்றும் சுடுகாடுகளுக்கு கிராமங் களில் ஜாதி அடிப்படையில் இருக்கும் பிரச் சினையைத் தீர்க்கும் வகையில் நாங்கள் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவாக ஒவ்வொரு கிராமத் திலும் ஒரேயொரு பொது சுடுகாடு, எரிமேடை அரசு சார்பில் அமைத்திட உள்ளோம். சுடு காடுகள், எரிமேடை ஆகியவை முழுமையாக அரசு சுடுகாடுகளாக அறிவிக்கப்படும்.
மைசூர் மாவட்டத்தில் திரைப்பட நகர் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஒரே இடத்தில் படப்பதிவு நடத்த வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டார்.
Read more: http://viduthalai.in/e-paper/94375.html#ixzz3Oi8MB7XC
சாமியாரிணிகள் விஷயமா?
சீடன்: விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சாத்வி பிராச்சி என்ற சாமியாரிணி இந்துக் கள் நான்கு குழந்தை களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியிருக் கிறாரே, குருஜி?
குரு: இது சாமியாரி ணிகள் தலையிட வேண்டிய விஷயமா, சீடா!?
Read more: http://viduthalai.in/e-paper/94379.html#ixzz3Oi8TV3c8
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதன் மனிதனை சுமப்பது கேவலம் என்று நினைக்கவேண்டாமா? அப்படி நினைக்கவில்லை என்றால், அதற்குள்ளிருப்பது ஜாதி இறுமாப்பும், ஆணவமும்தான் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
திருக்குறளில் ஒரு குறள் உண்டு:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)
பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனுக்கும், பல்லக்கில் அமர்ந்து செல்கின்றவனுக்கும் இடையே உள்ள நிலை மையைச் சுட்டிக்காட்டி, அறத்தின் பயன் இதுதான் என்று கூறவேண்டாம் என்று எவ்வளவு அழகாக மனிதப் பண்பை, உரிமையைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருவள்ளுவர்.
மதத்தை மய்யப்படுத்தி நடக்கும் எல்லாவித அக்கிரமங் களுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் முடிந்த பரிகாரம் அனைத்து ஜாதியினருக்கும், அர்ச்சகர் உரிமை என்ப தாகும். அதனையும் நிறைவேற்றி முடித்து, ஆதிக்கக் கூட்டத்தின் ஆணிவேரை வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!
Read more: http://viduthalai.in/page-2/94394.html#ixzz3Oi8kead7
இன்றைய ஆன்மிகம்?
கடவுள்
கடவுள்கள் சிவன், விஷ்ணு, பிர்மா, விநாய கன், சுப்பிரமணியம் முதலியோர்பற்றிக் கதை கதையாக எழுதி வைத் துள்ளார்களே, அவை நடமாட்டம் பற்றி எல் லாம் எழுதித் தள்ளி யுள்ளார்களே- இப்பொ ழுதெல்லாம் இந்தக் கடவுள்களின் நடமாட் டங்களோ, செயல்களோ ஒன்றையும் காணோமே - ஏன்? உயிரோடு இருக் கிறார்களா? செத்துப் போய் விட்டார்களா?
Read more: http://viduthalai.in/e-paper/94434.html#ixzz3OnUKTz57
அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா?
முருகன் கோயிலுக்கு அழைக்கிறார்
அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்
அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இப்படி அதிகார பூர்வமாக சுற்றறிக்கை விடுவது சட்டப் படி சரிதானா? மதச் சார்பற்ற அரசா? இந்து மதச் சார்பு அரசா?
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இந்து மதக் காரர்கள் மட்டும்தான் பணி யாற்றுகிறார்களா? ஒருக்கால் இந்து மதக்காரர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதுகிறார்களா?
இதனை எதிர்த்து நீதி மன்றம் சென்றால் மேலாண் இயக்குநரும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் கூண்டில் ஏறிப் பதில் சொல்ல வேண்டாமா?
அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்ச ராக வந்ததும் அரசு அலு வலகங்களில் உள்ள கட வுளர் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார் பின்மையைக் காப்பாற்றினார்.
அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா?
அண்ணாவுக்கு நாமம் என்று முதல் அமைச்சர் உட்படச் சொல்லுவதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது - அதாவது அண்ணாவின் கொள்கைக்கு நாமம்! புரிகிறது! புரிகிறது!!
அ.இ.அ.தி.மு.க. அரசில் பணியாற்றும் மற்ற மதக்காரர்களின் நிலை என்ன? வேறு மதத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் மத சம்பந்தமான விழாவில் பங்கேற்க இப்படி சுற்றறிக்கை வெளியிட்டால் ஏற்றுக் கொள்வார்களா?
அரசுப் பணியாளர்கள் மத்தியில் வேண்டாத விகற்பத்தை அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே ஏற்படுத்தலாமா?
எல்லா வகையிலும் ஆட்சி சீர் கெட்டுப் போய் விட்டதோ!
Read more: http://viduthalai.in/e-paper/94437.html#ixzz3OnUZclvM
என்னே பித்தலாட்டம்
இன்று மகரஜோதியாம்!
இன்று சபரி மலையில் மகர ஜோதியாம் சபரிமலை யில் பக்தர்கள் கூட்டமாம்! ஏடுகள் இப்படி செய்திகளை வெளியிடுகின்றன.
மகரஜோதி மோசடி என்பது ஏற்கெனவே அம்பலமாகி விட்டது.
கேரள முதல் அமைச்சர் - கேரள தேவசம் அமைச்சர் என்று எல்லோருமே மகர ஜோதி உண்மையல்ல - செயற்கைதான் - மின்வாரிய ஊழியர்கள் காட்டும் ஏற் பாடுதான் என்று ஒப்புக் கொண்ட பிறகு, மகர ஜோதியை அனுமதிக்க லாமா?
மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் இந்தப் பித்தலாட்டத்தை அனுமதிக்க லாமா?
Read more: http://viduthalai.in/e-paper/94433.html#ixzz3OnUrZMVF
கங்கையைப் புனிதப்படுத்தும் கனவான்கள் பார்வைக்கு...
எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதக்கும் கோரக்காட்சி
பீதியில் உறையும் பொது மக்கள்
காசி, ஜன.14_ புனித கங்கை என்று போற்றப் படும் கங்கையில் இது வரை இல்லாத அளவுக்கு ஏராளமான எண்ணிக்கை யில் மனிதப் பிணங்கள் மிதப்பதால் மக்கள் பீதி யில் உறைந்து கிடக்கின்றனர்.
மோடி வெற்றிபெற்ற நாடாளுமன்றதொகுதியான வாரணாசி மற்றும் அதற்கு மேற்கே உள்ள உன்னாவ் போன்ற பகுதி களில் கடந்த இரண்டு மாதங்களாக 200க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தன. அடையாளம் தெரியாத இந்தப் பிணங் களால் அந்தப்பகுதி மக்களிடம் அச்சம் மிகுந்து காணப்படுகிறது. சில பிணங்கள் நாய் மற் றும் காகங்கள் சிதைத்து விட்டதால் மிகவும் கோரமாக காட்சியளிக் கின்றன.
இதுகுறித்து உன்னாவ் மாஜிஸ்ட்ரேட் கூறியதாவது, எங்களுக்கு சில மீனவர்கள் மூலம் கங்கை நதியில் பிணங்கள் அதிக அளவு மிதந்து வருவதாக தகவல் வந்தது. பொதுவாக ஏழைகள் உடலை எரிக்க போதிய பொருளாதார வசதி யில்லாத காரணத்தால் ஆள் ஆரவாரமற்ற பகுதிகளில் கங்கைக் கரை யில் விட்டுவிடுவார்கள் இப்படி வாரத்திற்கு நான்கு, அய்ந்து பிணங்கள் மிதந்து வருவதுண்டு, ஆனால் திடீரென இவ் வளவுப் பிணங்கள் வருவது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.
இது குறித்து வார ணாசி ஹனுமான் காட் பகுதி மீனவர்கள் கூறிய தாவது, கங்கையின் போக்கு அதிகம் இருக்கும் போது பிணங்கள் தானா கவே மிதந்து சென்று விடும், ஆனால் தற்போது நதியின் போக்கு மிகவும் மெதுவாக உள்ளது. இத்தகைய காரணத்தால் பிணங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்து விட்டன.
தற்போது மகர சங்ராந்தி விழா இன்றி லிருந்து துவங்கு கிறது. இந்துக்கள் இந்த நாளில் கங்கையில் குளிப்பதை புனிதமாக கருதுகின்றனர். ஆனால் அலகாபாத், வாரணாசி, உன்னாவ் கங்கைக் கரைகளில் தொடர்ந்து பிணங்கள் ஒதுங்கிக் கொண்டு இருக்கின்றன.
வாரணாசி சுற்றுப் புறப் பாதுகாப்பு ஆர்வலர் ராகேஷ் ஜஸ்வால் கூறியதாவது, கங்கைப் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றை மோடி தொடங்கி வைத்தார், அந்த இயக்கத்தின் தலைவராக ராமாஜி திரிபாடி உள்ளார். மோடி வரும் காலங்களில் மட்டும் கங்கைக் கரையில் மண்வெட்டி கடப்பாரை குப்பை அள்ளும் உபகர ணங்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடு கிறார்கள். மத்திய அரசு கங்கை சுத்தத்திற்கு என்று 20,000 கோடிக்கு பல்வேறு திட் டங்களை வகுத்துள்ளது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசைக் கண்டித்து விட் டது, இவ்வளவு நடந்த பிறகும் அரசு கங்கையைச் சுத்தப்படுத்துவதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பிணங்களை இலவசமாக எரிக்க வாரணாசியில் மட்டும் 5 அமைப்புகள் உள்ளன. பெயருக்குத் தான் இலவசமே தவிர பிணம் எரிப்பவர்கள் முதல் விறகு வாங்கும் வரைக்கும், அய்ந்தாயிரம் வரை பிடுங்கிவிடுகிறார்கள். ரூ.100_க்கே திண்டாடும் ஏழைகள் ஆயிரக்கணக் கில் எங்கே கொடுப் பார்கள்? என்று கூறி யுள்ளார்.
Read more: http://viduthalai.in/e-paper/94435.html#ixzz3OnV0uZgp
Post a Comment