Search This Blog

1.1.15

அறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் பொருந்தாத பித்தலாட்டம் வைகுந்த ஏகாதசி!இன்று வைகுந்த ஏகாதசியாம்; இது வைணவர்களுக்கு உகந்த நாளாம். இன்று வைணவக் கோயில்களில் சொர்க்கவாசல் கதவைத் திறப்பார்கள்; விடியற்காலையில் பக்தர்கள் இந்த வாசல் வழியாகச் சென்று வந்தால் வைகுந்ததத்திற்கு  - அதாவது சொர்க்கத் துக்குப் போவதாக  அய்திகமாம்.
வைணவர்கள் இப்படி என்றால், சைவர்கள் போட் டிக் கடை வைக்க வேண் டாமா?


சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து விரதமிருந்து, சிவன் கோயிலுக்குச் சென்று வழி படுவார்கள்; அப்படி செல்லுபவர்கள் சிவலோகம் - அதாவது மோட்சத்திற்குச் செல்லுவார்களாம்.

வைகுந்த ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறந்து செல்பவர்களும், சிவராத்திரி யன்று விரதமிருந்து சிவன் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களும் அப்படியே சொர்க்கத்திற்குப் போக வேண்டியதுதானே!  ஏன் வீட்டுக்குத் திரும்பி வருகி றார்கள்?


அப்படி செல்லு பவர்கள் திரும்பி வரக் கூடாது அப்படியே சொர்க் கத்திற்குச் செல்லுவார்கள் என்று கற்பனையாக ஒரு கதை கட்டி விட்டால் போதும்; ஒரு பக்தனாவது கோயிலுக்குச் செல்லுவானா?

சரி, கதைக்கு வருவோம்! என்ன அந்த வைகுந்த ஏகாதசி?

திரேதாயுகத்தில் முரன் என்ற பெயரில் ஒரு கொடிய அசுரன் இருந்தானாம். (எந்தப் புராணக் கதை, இதிகாசக் கதையை எடுத்துக் கொண்டாலும் ஓர் அசுரனோ, ஓர் அரக்கனோ வந்து விடு வான்; கதாநாயகன் பார்ப் பான் என்றால் வில்லன் அசுரனாக இருக்க வேண் டும் அல்லவா!)

முரன் என்ற அந்த அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமை கள் செய்தானாம் (தேவர்கள் என்றால் வேறு யார்? பார்ப்பனர்கள்தான்!) வழக்க மான கதை போலவே தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் (அதாவது விஷ்ணுவிடம்) முறையிட் டனராம். (தீபாவளி கதையை எடுத்துக் கொண்டால் நரகா சுரன் என்னும் அரக்கன் தேவர்களுக்குக் கொடுமை கள் இழைத்தான் - தேவர் கள் விஷ்ணுவிடம் முறை யிட்டார்கள் என்று கதை வரும் - அதனையும் நினைவில் கொள்க!)

முரனுடன் போர் புரிய மகாவிஷ்ணு சங்கு சக்கரத் துடன் புறப்பட்டானாம். பல நாள் போர் நடந்ததாம் (ஓர் அரக்கனைக் கொலை செய்ய கடவுளே பல நாள் போரிட்டாராம் - அப்படி யென்றால் கடவுள் சக்தி எம்மாத்திரம் என்பதைத் தெரிந்து கொள்க!) நாள் தோறும் போர் முடிந்ததும் ஓய்வெடுக்க ஒரு குகைக்குச் சென்று விடுவாராம். அப்படி விஷ்ணு படுத்திருந்தபோது முரன் திடீரென்று அந்தக் குகைக்குள்ளேயே நுழைந்து விஷ்ணுவைத் தாக்கத் தொடங்கினானாம்.

அப்போது விஷ்ணுவின் உடலிலிருந்து ஒரு மகத்தான சக்தி பெண் வடிவத்தில் வெளிப்பட்டு அந்த அரக் கன் முன் வந்து நின்றாளாம். அவ்வளவுதான் அந்த அரக்கன் அந்தப் பெண் ணின் அழகில் மயங்கி வந்த காரியத்தை மறந்தானாம். (பெண்ணைக் கூட்டிக் கொடுத்துதான் ஒரு கடவுள் ஜெயிக்க வேண்டுமோ! இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை தெரிந்து கொள்க!)

அரக்கன் மயங்கிய போது படைக் கலத்துடன் விசுவ ரூபத்துடன் தோற்ற மளித்த அந்தப் பெண் அரக்கனை அழித்தாளாம்!

அரக்கனைக்கொன்ற சக்தியே! ஏகாதசியன்று உனக்கு உனக்குத் திருநாமம் சூட்டுகிறேன்.

இந்த மார்கழி மாதத்தில் உன்னை நினைத்து வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பேன் என்றானாம் கையாலாகாத விஷ்ணு.

அறிவுக்கும், ஒழுக்கத் துக்கும் பொருந்தாத இந்தப் பித்தலாட்டம்தான் வைகுந்த ஏகாதசியாம்! அய்யய்யோ எழுதவே கை கூசுகிறதே!

----------------------- மயிலாடன் அவர்கள் 01-01-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

92 comments:

தமிழ் ஓவியா said...

கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் புத்தாண்டுச் செய்தி!


பெரியாரை உலகமயமாக்குவோம்!

பெரியார் உலகத்தை விரைந்து உருவாக்குவோம்!

கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் புத்தாண்டுச் செய்தி!

கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் புத்தாண்டுச் செய்தி!

கழகக் குடும்பத்தின் உறவுகளே,
புத்தாண்டில் வரும் புதிய வரவுகளே,
இன உணர்வாளர்களே, இனிய நண்பர்களே,
பகுத்தறிவாளர்களான என்னருந் தோழர்காள்!

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆங்கிலப் புத்தாண்டுகள், தமிழ்ப் புத்தாண்டும் (தை முதல் நாள்) இரண்டுமே வரவேற்கத் தகுந்தவை. காரணம் வரலாறும், வாழ்வும், வளர்ச்சி நோக்கில் அவை நமது பெருமைக்குரியவையே!

நமது கொள்கை இரு மொழிக் கொள்கை!

நமது கொள்கை இருமொழிக் கொள்கை. (மற்ற எம்மொழிகளை விரும்பி எவர் கற்கவும் நாம் தடையாய் இருப்பதில்லை; நம்பிள்ளைகள்மீது மற்றொரு பண்பாட்டைத் திணிப்பதற்காக கட்டாயமாக்கும் மொழித் திணிப்பை எதிர்ப்பது அதன் காரணமாகவே) உறவுக்குத் தமிழ், உலகுக்கு ஆங்கிலம் என்ற பரந்த விசாலப் பார்வை - அறிவியல் பார்வையாகும்!

திராவிடர் இயக்க ஆட்சிகளின் அசைக்க முடியாத அறிவின் விசாலமாகும். இம்மொழிக் கொள்கை. அது புறத்தோற்றத்தில் வெறும் மொழி; ஆழ்ந்த அகத் தோற்றத்தில் அது நம் வழி - பண்பாட்டு படையெடுப்பு மீட்பு ஆகும்.

பண்பாட்டு அரசியல் தளத்தில் ஆரியம்!

திராவிடர்தம் பண்பாட்டை அழித்து நேரிடையான போர்தொடுக்க, பண்பாட்டு அரசியல் தளத்தில் ஆரியம் ஆயத்தமாகி நிற்கிறது!

மின்மினிகள் மின்சாரத்துடன் மோதி வெற்றி யடைய மிகையான நம்பிக்கையில் மிதக்கின்றன!

அசுரர்களை வெல்லும் ஆரிய உபாயம்! நம் இன மக்கள் ஏமாந்தே பழக்கப்பட்டவர்கள் அசுரர்களை வெல்ல - அசகாய சூரத்தனம் தேவையில்லை - அவமானத்தை ஒதுக்கி வைத்து விட்ட மோகினி அவதாரங்களே போதும்.

தகுந்த ஆயுதம் என்ற யுக்திகளைக் கையாளும் ஆரியம், அவ்வப்போது பற்பல உருவங்களில் வந்த வரலாறு அறியாதவர்கள் அல்ல - உண்மையான திராவிடர் இயக்கத்தவர்கள்; ஆரிய மாயைப் புரிந்தவர்கள்; என்றாலும் சிற்சில நேரங்களில் பதவி மோகினியின் ஈர்ப்புகளால், வேர்களை மறந்தவர்கள் - வீழ்த்தப் பட்ட வீரர்கள் ஆகிறார்கள்! அவ்வளவுதான்! பெரியார்த் தொண்டர்களோ இதனை நன்கு அறிந்தவர்கள்!

பெரியாரின் பூமியில் நடந்த இந்தப்போர் தேவாசுரப் போராட்டமாக ஒரு கட்டத்தில் தெரிந்தது!

மறு கட்டத்தில் தேசீயம் என்ற போர்வையுடன் வந்தது!

மதம் பக்தி என்ற மயக்கப் பிஸ்கட்டுகள்

மதமும், பக்தியும் என்ற மயக்க பிஸ்கட்டுகளுடன் இப்போது வந்துள்ளது!

எச்சரிக்கை மணி அடித்து, எழுப்பிடும் பணி எமது பணி என்ற கடமை உணர்வுடன் கழகம் களம் காண - உயிர் எம்முடையதல்ல - எமது இலட்சியங் களுக்கானது; அதற்கொன்று என்றால் அது வாழாது; இலட்சியம் தாழாது தலை நிமிர்த்தி வென்றிட, எம்மைத் தர என்றும் தயார் என்ற சூளுரைக்கும் பாசறை வீரர்களைப் பக்குவப்படுத்துவதே எம் அயராப் பணி; சோர்விலா உழைப்பு!

சுடுதீயால் சொக்கத் தங்கங்கள் அழிவதுண்டோ!

சொக்கத் தங்கங்கள் சுடு தணலால் அழிவதில்லை; ஜொலிக்கவே செய்யும். நம் பணி - விழிப்புற்றெழுந்து நம்மை அழிக்க நினைக்கும் ஆரியத்தின் சவால் களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வதே நம் சூளுரை - புத்தாண்டில்!

கொசுக்கள் கடிக்கலாம்; இரத்தத்தை உறியலாம்; நம் திட சித்தத்தை மாற்றாது; மாற்ற முடியாது!

ஆரியம் வேறு - திராவிடம் வேறு!

இருபால் தோழர்களே! கொள்கை வீரர்களே - விளக்குங்கள் வீதி தோறும்; ஆரிய - திராவிடம் என்பது ரத்தப் பரிசோதனை முடிவு அல்ல - லட்சிய வேறுபாட்டின் வெளிப்பாடு என்று.

ஆரியம் என்பது வேதியம்; சனாதனம். மாற்றத்தை எதிர்ப்பது சம ஈவுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாதது!

வெறும் மூடநம்பிக்கையை வற்புறுத்துவது.

திராவிடம் என்பது பகுத்தறிவு - சமத்துவம் - மாற்றத்தை, வரவேற்கும் வளர்ச்சியின் மறுபெயர்- கேள்வி கேட்டு அறிவை விரிவு செய்ய அனுமதிக்கும் ஆழமான தத்துவம்!

அனைவருக்கும் அனைத்தும் என்ற சம வாய்ப்பு தரும் புதுமை - வேட்கை!

அறப்போர் சங்கு ஊத ஆயத்தமாவீர்!

எனவே, நாம் திராவிடர் என்பதை பெருமையுடன் கூறி, மனுதர்மத்தை மகுடமேற்றும் முயற்சியை முறியடிக்கும் வாய்மைப் போருக்கு ஆயத்தமாக அறப்போர் சங்கு ஊதிட ஆயத்தமாவீர்!

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு என்பது ஒரு பழமொழி.

களச்சாவு யாசித்துப் பெறுவது கருஞ் சட்டை அணிந்த கடமை வீரர்களின் பேறு என்பது நம் மொழி என்று சூளுரைத்து, அனைவருக்கும் புரட்சிப் புத்தாண்டு வாழ்த்துக் கூறுகிறோம்!

பெரியாரை உலகமயமாக்குவோம் பெரியார் உலகத்தை விரைந்து உருவாக்குவோம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1-1-2015

Read more: http://viduthalai.in/e-paper/93719.html#ixzz3NZpmZGcA

தமிழ் ஓவியா said...

உலகின் மிக பெரிய பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்புவாஷிங்டன், ஜன. 1_- உல கின் மிகப்பெரிய பயங்கர வாத அமைப்பாக ஆர்.எஸ். எஸ் உருவெடுத்து வருவ தாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அறிவித் திருக்கிறது. தீவிரவாதிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள ராஷ்ட் ரிய சுயம் சேவக்சங் (ஆர்எஸ் எஸ்) என்ற இந்து மதவாத அமைப்பு உள்ளது. இந்து ராஷ்ட்ரிய, இந்து நாடு அமைக்க பாடுபடுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு பல பயங்கரவாதச் செயல் களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.

உலகில் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. இந்தியாவின் இறை யாண்மைக்கு எதிராகவும், மதச்சார்பற்ற பன்முகத் தன்மை உடைய நாட்டின் அடையாளங்களை அழித்து இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கு இந்த அமைப்பு முற்பட்டு வரு கிறது. இதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற சித்தாந்தம் என விஷ வித்துக்களை நாட்டில் விதைத்து வருகிறது.

2014ஆ-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் தீவிரவாத செயல்பாடுகளில் அதிக முனைப்புக் காட்டி வரு கிறது. இதேபோல் இந்தி யாவில் நக்சல்கள், மக்கள் விடுதலை ராணுவம், சிமி என்ற இஸ்லாமிய அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்து ராஜ்யத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925ஆம் ஆண்டு இந்தியாவில் உரு வாக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதி ராகச் செயல்படுவது இதன் மற்றொரு நோக்கம். முஸ் லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி காந்தியாரை 1948-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இதற் கான தடை நீக்கப்பட்டது. முஸ்லிம் உள்பட சிறு பான்மை மக்களுக்கு எதி ராக தாக்குதல் நடத்து வதை ஆர்எஸ்எஸ் தீவிர வாத அமைப்பு தனது வழக் கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மதக்கலவ ரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.

இப் போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இதற்கு ஆதரவாக உள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மிக துணிச்சலாக பல இடங்களில் மத மோதல் களை உருவாக்கும் வேலை யில் இறங்கி உள்ளது.

இந் தியா முழுவதும் இந்துத் துவாவை கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது. இதனால் உலகில் ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக உள்ளது என்று அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93722.html#ixzz3NZq2RfL6

தமிழ் ஓவியா said...

ஒரு தொலைக்காட்சியில் இப்படியும்


கிருஷ்ணன் ராதைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவளுக்குத் தெரியாமல் வேறு சில பெண்களோடு லீலை செய்கிறான். அதை அறிந்த ராதை கிருஷ் ணனைத் தேடிச் செல்கிறாள்.

அங்கே கிருஷ்ணன் தனக் குத் துரோகம் செய்து விட் டதைப் பார்த்து கண்ணீர் மல்குகிறாள்.

அப்படி இரவு முழுதும் அவள் உதிர்த்த கண்ணீர்தான் மான ஸகங்காவாம்.

கிளைகளும், பூக்களும் வானத்தை நோக்கி இருப் பதுதான் வழக்கம். ஆனால் நந்தவனத்தில் பெண்கள் அந்த பூக்களை பறிக்க எதுவாக எல்லாம் கீழ் நோக்கி இருக்குமாறு கிருஷ் ணன் தன் கால்களால் மிதித்து கொண்டிருப் பானாம்.

பெண்கள் அந்த கிளைகளை பற்றியவாறு பூக்களை பறிக்கும்போது கிருஷ்ணன் காலை தூக்க கிளைகள் மேலெழும்ப கோபியர்கள் கிளைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டிருப்பார்களாம். அந்த நேரம் பார்த்து அவர்களிடம் கிருஷ்ணன் லீலை புரிவானாம்!

இந்த மானங்கெட்ட கூத்தை ஒரு பார்ப்பனர் பக்தி ரசம் பொங்க பொங்க சொல்லி கொண்டிருந்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/93721.html#ixzz3NZqDPeBL

தமிழ் ஓவியா said...

எந்த தேசத்திலும்...

இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்கு தாண்டவமாடுகின்றன.
(விடுதலை, 30.4.1958)

Read more: http://viduthalai.in/page-2/93727.html#ixzz3NZqUNd3i

தமிழ் ஓவியா said...

மதச்சார்பற்ற சக்திகளின் கரங்கள் இணையட்டும்!

இன்று ஆங்கிலப் புத்தாண்டு - 2015 பிறக்கும் நாள். இந்நாளில் வரவு - செலவு கணக்குகளை எண்ணிப் பார்க்கலாம்.

கழிந்த 2014ஆம் ஆண்டு சோதனைகளும், வேதனை களும் பெரும்பாலும் சூழ்ந்த ஆண்டாகவே ஆகிவிட்டது.

இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி என்பது குறிப்பிடத் தகுந்ததாக அமைந்தது; இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.டி5 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

ஒடிசா லீவர் தீவில் அக்னி - 4 ஏவுகணை சோதனையும் வெற்றி. மங்களயான் செயற்கைக்கோளை செவ்வாய்க் கிரக சுற்று வட்டாரப் பாதையில் இணைத்ததன் மூலம் இத் திசையில் மகத்தான முத்திரையை இந்தியா பதித்துள்ளது. செவ்வாய்த் தோஷம் போன்ற மூடநம்பிக்கைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தென் மாவட்டங்கள் மக்களின் வயிற்றில் பால் வார்த்தது.

அதே நேரத்தில் பம்பாற்றுக் குறுக்கிலும் காவிரி நதியின் குறுக்கிலும் தடுப்பணைகள் கட்டிட ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு உதவி செய்வது அதிர்ச்சிக்குரியதாகும்.

நீரோட்டப் பிரச்சினைகளில் இந்திய துணைக் கண்டத்தில் சட்ட ரீதியாகவும், உண்மையின் அடிப்படை யிலும் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவின் தேசிய நீரோட்டமும் தேக்க நிலைக்கு ஆளாகியுள்ளது என்பது கசப்பான பேருண்மையாகும். குறிப்பாக நாட்டின் அடிப்படைத் தொழிலான வேளாண்மை என்பது நோய்ப் படுக்கையில் வீழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றால், அது மிகையல்ல!

தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் முதல் அமைச்சராயிருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா ஊழல் குற்றச்சாற்றுக் காகத் தண்டனை விதிக்கப்பட்டார். இந்தியாவில் இது முதல் நிகழ்வு!

தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் அவர்களைப்பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி திரு நாகமுத்து அவர்கள், தமிழ்நாட்டின் தந்தை என்று ஒரு தீர்ப்பில் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பொறுத்த வரையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் ஆட்சி போர்க் குற்றம்பற்றி விசாரணை நடத்திட அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம் குறிப்பிடத் தகுந்த தாகும் என்றாலும் அந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

கழிந்த ஆண்டில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டா லும் 2015ஆம் ஆண்டில் அதன் நடவடிக்கைகள் வெற்றி கரமாக அமைந்து கொடுங்கோலன் ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை அளிக்கப்பட் டால் 2015ஆம் ஆண்டு மனித உரிமைத் திசையில் மகத்தான கலங்கரை விளக்காய் ஒளிவீசும் என்பதில் அய்யமில்லை.

2014இல் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் - மத்தியில் பி.ஜே.பி. தலைமையில் அமைந்த தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சி என்பது கறைபடிந்த அத்தி யாயம் என்பதில் அய்யமில்லை.

தமிழ் ஓவியா said...

மதச் சார்பற்ற இந்தியா என்ற அரசமைப்புச் சட்டத்தைக் குப்புறத் தள்ளிக் குழி பறிக்கும் பாசிசக் குதிரையாக குதியாட்டம் போடுகிறது நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு.

எந்த அளவுக்கு அது பாசிசத்தின் உச்சக் கொதி நிலையை எட்டிப் பிடித்துள்ளது என்றால் - காந்தியாரைக் கொன்ற கொலைகாரன் இந்து வெறியன் நாதுராம் கோட்சேவுக்குக் கோயில் கட்டுவோம் என்று கூறும் முரட்டுத் துணிச்சலைக் கொடுக்கும் அளவுக்கு!

இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார் - அந்த ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ.க.வின் பின்புலம் - பின்பலம் தூண்டுகோல் என்பதைப் புரிந்து கொண்டால் - இந்தக் காலக் கட்டம் எவ்வளவுக் குரூர இருள் சூழ்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சியின் நிர்வாகப் போக்குகளை எடுத்துக் கொண் டால் பார்ப்பன, பனியா என்கிற இரு சக்கர வண்டியாக அது நடந்து கொண்டு இருக்கிறது.

கார்ப்பரேட்களின் கைவாளாகச் சுழலுகிறது - உயர் ஜாதி பார்ப்பனர்களின் கைப் பந்தாக உருண்டு கொண்டு இருக்கிறது. காங்கிரஸ்மீது எந்த குற்றச்சாற்றுகளை எதிர்க்கட்சியாக இருந்தபோது பிஜேபி வைத்ததோ, அதே குற்றங்களை ஆட்சியில் இருக்கும்போது இந்நிலையில் பன் மடங்காக சற்றும் பதற்றமின்றிச் செய்து கொண்டு இருக்கிறது.

வளர்ச்சி வளர்ச்சி! - என்று பிரதமருக்கான வேட் பாளராக நரேந்திரமோடி அன்று குரல் கொடுத்தார் - இப்பொழுது தளர்ச்சி! தளர்ச்சி! வீழ்ச்சி! வீழ்ச்சி! என்று கூறும் அளவுக்குப் பொருளாதாரம் தலைக்குப்புற வீழ்ந்து கிடப்பது வெட்கக் கேடாகும்.

இந்த நிலையில் 2014இல் - இந்த இந்துத்துவா பாசிசத்தை வீழ்த்தும் வியூகமாக திராவிடர் கழகம் தந்தை பெரியார் என்னும் அறிவு ஆசானின் தத்துவப் பெருங் குரலை முன்னிறுத்தியது.

முதற்கட்டமாக 2000 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார். அதன் தொடக்கம் 2014ஆம் ஆண்டின் இறுதியிலே கிளம்பி விட்டது. 2015 ஆகஸ்டு நடுப்பகுதியில் அதன் நிறைவு அமையும்போது தமிழ் மண்ணில் மேலும் புதிய தெம்புடனான புத்தெழுச்சியைக் காண முடியும்.

திராவிடர் கழகம் இந்த மாநாடுகளை நடத்தினாலும் மதச் சார்பற்ற சக்திகளும், சமூக நீதி சக்திகளும் ஒன்றி ணைக்கப்பட்டு கடைகோடி மனிதனும் கிளர்ந்தெழும் கடமையை நிச்சயம் செய்யும்.

அரசியல் காரணமாக சிதறிக் கிடக்கும் ஒரு சூழ்நிலை - மதவாத பிற்போக்குச் சக்திகளுக்குப் பலத்தைக் கொடுத்துவிட்டது. இப்பொழுது முற்போக்குச் சக்திகள் அதனை உணரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதற்கான கொள்கை அடித்தளத்தை தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுக்காத திராவிடர் கழகம் அதன் தலைமை உருவாக்கும்; அந்த வகையில் 2015 வெற்றித் திருமுகமாக ஒளிரட்டும்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/93736.html#ixzz3NZqeAbnK

தமிழ் ஓவியா said...

புத்தாண்டு உறுதி எப்படி? - 2015


புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நண்பர்கள் - உறவுகள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வது, நாகரிக உலகின் பழக்கங்களில் ஒன்றாகி விட்டது!

டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்று கருதி அதுவரை விழித்திருந்து மக்களுடன் மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவது வழமையாக அண்மைக் காலத்தில் பெரு நகரங்களில் உலகம் முழுவதும் மாறி வருகிறது!

ஆட்டம் - பாட்டு - கூத்து - தொலைக்காட்சிகளிலும், கடற்கரை யிலும், பொதுவிடங்களிலும் உணவு விடுதிகளிலும் - விருந்துகளாகவும் நடைபெறுகின்றன.

சிலர் சில உறுதிகளை - புத்தாண்டு உறுதிகளாக - ஏற்று சிற்சில நாள்கள், அல்லது சிற்சில வாரங்களில் மறந்து அல்லது துறந்து விடுகின்றனர்!

அவை மனிதர்களின் பலவீனங்களால் ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகள்.

இவை எல்லாவற்றையும்விட நாம் பெறும் படிப்பு, சம்பாதிக்கும் பணம், விழையும் பதவி வாய்ப்புகள் - வேண்டும் புகழ் - முதலிய பலவற்றைவிட நாம் எதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதைச் சிந்திப்பது நல்லது!

மனிதம் பூத்துக் குலுங்கும் நல்ல மனிதர்களாக நமது எஞ்சிய வாழ்நாளை நாம் இனிதே கழிப்பது எப்படி?
தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு குறுகிய உழக்குக்குள் நம் வாழ்க்கையை அடக்கிக் கொண்டு புழு வாழ்க்கை வாழுவதை மாற்றி - தொல்லுலக மக்கள் எல்லாம் நலஞ் சூழ வாழ நாம் தொண்டறம் புரிந்து அதில் இன்பம் காணுவதற்கு உறுதியேற்பதே தலை சிறந்த புத்தாண்டு வாழ்த்துக்குரிய பொருள் அடக்கமாகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்)

என்பதை சுயமரியாதை இயக்கம் கண்ட மனிதகுல மாமேதை தந்தை பெரியார் அவர்கள் அனைவருக்கும் அனைத்தும் என்று எளிமையாக கூறினார்.

அவ்வறம் ஓங்க வேண்டும். அவ்விதி செயலில் வர வேண்டும். அதற்கு நாம் பிறரை எதிர்ப் பார்ப்பதைவிட நமது பங்களிப்பு என்னவென்று சுய பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்!

நல்ல துவக்கம் என்பது எப்போதும் நம்மிலிருந்தே தொடங்குவதே என்றும் சிறந்தது!

ஒன்றே செய்வோம்! அதை
இன்றே செய்வோம்- அதுகூட
நன்றே செய்தோம்
என்றே அமையட்டும்!

வாசக நேயர்களே, உங்கள் அனை வருக்கும் புத்தாண்டு பொலிந்த வாழ்த்துக்கள்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/93738.html#ixzz3NZr6m4lU

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கலில் புதிய வரவுகளின் சங்கமமாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் எழுச்சி!

- துரை சந்திரசேகரன்


தந்தை பெரியார் காலந்தொட்டு அய்யாவின் கொள்கைகளை, கோட் பாடுகளை, லட்சியங்களை மாணவர்கள் இளைஞர்களிடையே பரவச் செய்திடும் வண்ணம் பெரியாரியல் சுயமரியாதை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழமை. கொள்கைத் தெளிவு, லட்சி யத்தில் ஆழ்ந்த பிடிப்பு, கோட்பாடுகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதில் தேர்ச்சி பயிற்சி முகாமின் மூலம் ஏற்படுவதுடன், மக்களிடையே பரப்பிடும் சீரிய கொள்கைப் பரப்பாளர்களாகவும் திகழச் செய்யும். கோடை விடுமுறையை பயன்படுத்தி இப்படிப்பட்ட பயிற்சிப் பட்டறைகள் அன்னை மணியம்மையார் காலம் வரை நடந்து வந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட்டது. மாவட் டந்தோறும் பயிற்சிப் பட்டறைகள் 2 நாட்கள் வீதம் நடத்தப் பெற்று வரு கின்றன. கோடையில் மட்டும் கொள்கைப் பயிற்சிப் பட்டறை குற்றாலத்தில் 4 நாட்கள் என 39 ஆண்டுகளாக நடத்தப் பட்டு வருகிறது. ஏலகிரி, சுருளி, ஒகேனக்கல் என 3 நாள், 4 நாள் பயிற்சிப் பட்டறைகளும் இளைய தலைமுறையின் எழுச்சிக்கு வித்திட்டு வருகின்றன.

இம்முறை ஒகேனக்கலில் டிசம்பர் 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகத் தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. 150-க்கும் மேற்பட்ட புதிய வரவுகள் இம்முகாமில் பங்கேற்றது சிறப்புக் குரியது படித்த பட்டதாரிகள் அதிக அளவில் பங்கேற்றதும் குறிப்பிடத் தக்க அளவில் பெண்கள் கலந்து கொண்டதும் கூடுதல் சிறப்பு.

மூன்று நாட்களும் பயிற்சிப் பட்ட றையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு வகுப்பு நடத்தியது. மாணவர்களுக்கு பெரு மகிழ்வை, பேரெழுச்சியை ஏற்படுத்தியது. வகுப்புரிமை வரலாற்றை, இடஒதுக்கீட் டின் பயன் துய்ப்பை, ஒடுக்கப்பட்டோர் உய்யும் - உயரும் வகை செய்த சமூக நீதியை விளக்கிடும் வகையில் சமூக நீதி எனும் தலைப்பில் ஆசிரியர் நடத்திய வகுப்பும், இன்றைய சூழலில் நாட்டு மக்களை அச்சுறுத்தும் இந்துத்துவா அரசியலை நடைமுறையாகக் கொண் டுள்ள மத்திய அரசின் மோடி ஆட்சியின் செயல்பாடுகள், மதவெறி அமைப்புகளின் ஆணவப் போக்குகள், அதனால் விளை யும் கேடுகள் இவற்றை அம்பலப்படுத் திடும் வண்ணம் இந்துத்துவா என்னும் தலைப்பில் தலைவர் எடுத்திட்ட வகுப்பும், இயக்கத்தின் அடிப்படை கருத்தான கடவுள் மறுப்பு பற்றி நகைச்சுவையோடு மாணவர்கள் இலகுவாக உள்வாங்கிடும் வண்ணம் அய்யா எடுத்த வகுப்பும் இளைஞர்களுக்கு சீரிய கொள்கைப் புரிதலை ஏற்படுத்துவதாய் அமைந்தது.

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெரியார் ஒரு அறிமுகம், பெரியாருக்குப்பின் திராவிடர் கழகம், பார்ப்பனர் பண்பாட்டு படையெடுப்பு, தமிழர் தலைவரின் தனித்தன்மைகள், ஆகிய தலைப்புகளிலும், கழக பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி பெரியார் பேணிய பெண்ணியம் பற்றியும்,

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி வரலாறு, 1973 வரை திராவிடர் கழக வர லாறு, உலகம் படைப்பா? பரிணாமமா? ஆகிய பொருள்கள் பற்றியும்,

பொதுச் செயலாளர் துரை. சந்திர சேகரன் இயக்கப் போராட்டங்கள் எனும் தலைப்பிலும்,

பேராசிரியர் ப. காளிமுத்த ஆரியர் - திராவிடர், தமிழர் புராண இதிகாசப் புரட்டுகள் ஆகிய தலைப்புகளிலும் மருத் துவர் கவுதமன் பேய், பூதம், பிசாசு, பில்லி, சூனியம், சாமியாடுதல் - மோடியே என்பது பற்றியும், முனைவர் க. அன் பழகன் திராவிடர் இயக்க மாவீரர்கள் எனும் தலைப்பிலும் பட்டறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் பயன் பெறும் வண்ணம் வகுப்புகளை சிறப்பாக்கி தந்தனர்.

யோகா பயிற்சி

யோகா மாஸ்டர் தஞ்சை சம்பந்தம் யோகா பயிற்சியினை மூன்று வேளைகள் உடலுக்கும், உள்ளத்துக்கும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் வழங்கினார்.

பேச்சுப் பயிற்சியும், கலைப் பயிற்சியும்

பேச்சாளராக திகழ என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுபற்றியும், கவிஞராக, கலைஞராக எழுதும் ஆர்வம் உள்ளவர்களை அடையாளம் காணும் வண்ணமும், முகநூலில் பதிவு செய்துள்ளவர்களின் ஆர்வம், அவர்கள் மேற்கொள்ளும் வண்ணமும் பயிற்சியினை மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னா ரசு பெரியார், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் வழங்கினர்.

குறும்படம், ஆவணப்படம், பெரியார் திரைப்படம்

27,28 இரு நாட்களும் இரவுப் பொழு தில் குறும்படங்கள், ஆவணப் படங்கள், பெரியார் திரைப்படம் கண்ணுக்கும், கருத்துக்கும், விருந்தாக அமையுமாறு ஒளிபரப்பப்பட்டன. பெரியார் ஊடகத் துறை இதற்கான ஏற்பாட்டைச் செய்தது.

மாணவர்களுக்கு பரிசுகள்

குறிப்புகள் சிறப்பாக எழுதியிருந்த மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசு களையும், பட்டறையில் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இயக்க நூல்களை (ரூபாய் அய்யாயிரம் மதிப் பிலான) ஈரோடு சம்பத் வழங்கினார். மாணவர்கள் அனைவருக்கும் இனிப் புகள் பொத்தனூர் அய்யா க. சண்முகம் அவர்கள் வழங்கினார்.

தமிழ் ஓவியா said...

கலை நிகழ்ச்சி

அன்பு பகுத்தறிவு கலை இலக்கிய குழுவினரின் உணர்ச்சியைத் தூண்டும் கலை நிகழ்ச்சி நடத்தப் பெற்றது.

தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவாளர் கழகத்தின் ஒத்துழைப்புடன் சிறப்பான ஏற்பாடுகள் பயிற்சி பட்டறைக்காக செய்யப்பட்டு இருந்தது. சுற்றுலாவாசிகளை ஈர்த்திடும் ஒகேனக்கல் பெரியார் கொள்கைப் பயிர் செழிக்க பயிற்சிப் பட்டறைக்காகவும் தக்க இடமாக அமைந்திருந்தது. தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் டிசம்பர் திங்களில் பெரியாரியல் பயிற்சி பட்டறை ஒகேனக்கலில் தொடர்ந்து நடைபெறும் என கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிவித்த போது அரங்கமே கையொலியால் அதிர்ந்தது.

கேள்வியும் கிளத்தலும்

பட்டறையின் பயிற்சி மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பக்குவமான வகையில் அருமையான பதில்களை கேள் வியும் கிளத்தலும் நிகழ்ச்சியின்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளித்தார். தாங்கள் கேட்கும் கேள்விக்கு இனமான தலைவரே பதில் வழங்குகிறார் என்ற வகையில் மாணவர்களின் முகத்தில் தோன்றிய மலர்ச்சிக்கு ஈடேது நீங்கள் எப்போதும் கேள்வி கேட்கலாம்.

இணையதள வழியாகவும் கேட்கலாம். அனைத்துக் கேள்விகட்கும் விடுதலை, உண்மை வழியாக பதிலிறுக்கப்படும் என்று தலைவர் சொன்ன போது மாண வர்கள் உளமகிழ்ந்து கைதட்டி வரவேற் றனர். தாங்கள் பெற்ற பயிற்சியின் பயனை மாணவர்களிருவர் மனந்திறந்து நன்றி யுடன் வெளிப்படுத்தியபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. சிறப் போடும், பொறுப்போடும் இந்த ஏற்பாட் டுக்குத் துணை நின்ற அத்துணை தோழர் களையும் தமிழர் தலைவர் பாராட்டினார். எவ்வித குறையுமின்றி மிகுதியான நிறைவுகளோடு பயிற்சிப் பட்டறை நிறைவு பெற்றது. கலந்து கொண்டு பயன் துய்த்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் தமிழர் தலைவரால் வழங்கப் பட்டது. பெரியார் 1000 போட்டித் தேர்வில் பெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பும் நடந்தது. மாவட்ட தலைவர் வேட்ராயன் நன்றி உரையுடன் பட்டறை நிறைவுற்றது.

Read more: http://viduthalai.in/page-2/93740.html#ixzz3NZrGICv2

தமிழ் ஓவியா said...

பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு திராவிடர் கழகம்

திராவிடர் விழிப்புணர்வு முதல் வட்டார மாநாடு

பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு திராவிடர் கழகம்

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை


சென்னை, ஜன. 1- சென்னை எம்ஜிஆர் நகரில் 26.12.2014 அன்று நடைபெற்ற முதல் திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது குறிப்பிட்டதாவது:

இந்த காலக்கட்டத்தில் அவசியமான மாநாடாக கழகத்தலைவர் அவர்களால் சேலம் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டு, திராவிடர் விழிப்புணர்வு முதல் மாநாடாக இங்கே நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கிருட்டினகிரி, பென்னாகரம், நாகையில் மாநாடுகள் நடைபெறுகின்றன. ஒரு நூற்றாண்டு காலமாக தந்தை பெரியார் எந்த உணர்வை ஊட்டி பாடுபட்டாரோ, அதன் தேவை இன்றும் ஏற்பட்டுள்ளது. 1925 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இடதுசாரிகள் அதே ஆண்டில்தான் தொடங்கினார்கள். மற்றொரு அமைப்பாக பிற்போக்கான அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதே ஆண்டில்தான் தோன்றியது.

சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஈடாக வேறு எந்த சொல்லும் கிடையாது. தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்கு முன் ராமனைக் கையில் எடுத்தார். பார்ப்பனரால் மொழி பெயர்க்கப்பட்ட இராமாயணத்தைக் கையில் எடுத்தார். ராமாவதாரம் வருண தர்மத்தைக் காக்கவே உருவாக்கப் பட்டது.

பார்ப்பன சிறுவன் இறந்தான், அதற்குக் காரணம் ராமன் ஆட்சியில் வர்ணதர்மம் கெட்டுப்போய்விட்டது தான் காரணம் என்றதும் ராமன் காட்டுக்கு சென்று அங்கே தலைகீழாக தவம் செய்து கொண்டிருந்தவனிடம் (தவம் என்றால் படிப்பது) என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டபோது சம்பூகன் தவம் செய்து கொண்டிருக் கிறேன் என்றான். சம்பூகன்-சூத்திரன் தவம் செய்வதா? என்று வர்ண தர்மத்தைக் காக்க, ராமனால் வெட்டிக் கொல்லப்பட்டான்.

ராஜாஜி 1937ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தபோது 2500 பள்ளிகளை மூடினார். 1951ஆம் ஆண்டில் ஆறாயிரம் பள்ளிகளை மூடினார். பார்ப்பனர்கள் வர்ண தர்மத்தை நிலைநிறுத்துகிறார்கள்.

தந்தைபெரியார் 75 ஆண்டுகளுக்கு முன் ராமனை அடையாளம் காட்டினார். இன்று ராமன் அரசியல் முகமாக இருக்கிறான். இந்தக் காலக்கட்டத்தில் பிரச்சாரம் இன்னும் தேவை. திராவிட இன உணர்ச்சி வேண்டும். தமிழ்த் தேசி யக் கட்சிகளில் பார்ப்பனர்கள் ஊடுருவி இருக்கிறார்கள்.

சூத்திரர் கழகம் என்று பெயர் வைக்கலாம் என்றால், இழிவை ஏற்பதாக இருக்கும், பார்ப்பனர் அல்லாதார் கழகம் என்றால், நமக்கு என்று வரலாறு இருக்கும் போது ஏன் அப்படி இருக்க வேண்டும் என்றுதான், ஒரு பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழையக்கூடாது என்ற ஏற்பாடு இருக்க வேண்டும் என்பதால் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் வைத்தார்.

பார்ப்பன அம்மையாரையே தலைமை ஏற்றதால் ஏற்பட்ட நிலையைப் பார்க்கிறோம். பவுத்தம் பார்ப்பனர் ஊடுருவியபின் என்ன ஆயிற்று?

இதற்காகவெல்லாம் குரல் கொடுக்கின்ற அமைப்பு திராவிடர் இயக்கம்தான். தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா வுக்கே தேவைப்படுகிறது. வட மாநிலங்களுக்கும் நம் தலைவர் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது.

-இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93750.html#ixzz3NZrlJKsJ

தமிழ் ஓவியா said...

யாரிந்த மாளவியா?: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

சுனாமியால் பத்தாண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற் பட்டது. இன்று மதவெறி சுனாமி வந்துகொண்டிருக்கிறது. காந்தி இறந்த ஜனவரி 30ஆம் தேதி அன்று கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்களாம். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும்போது மாளவியாகுறித்து பேசினார்கள். 1946க்கு முன்பாகவே மாளவியா இறந்துவிட்டார். இதுகூட தெரியாமல் காங்கிரசார் பேசுகின்றனர். அந்த மாளவியா யார் என்றால் இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்து துணைவேந்தராக இருந்தவர். அதேபோல் இராதாகிருஷ்ணன் காங்கிரசில் உறுப்பினர் இல்லை, போராட்டங்களில் பங்கேற்கவில்லை, சிறை செல்லவில்லை. ஆனால், அவர் பிறந்த செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடச் செய்துள்ளனர். ஆனால், எல்லாம் இழந்தவர் வ.உ.சிதம்பரம் காங்கிரசில்கூட அவருக்கு பதவி இல்லை.

1916ஆம் ஆண்டில் லக்னோ ஒப்பந்தம் நடைபெற்றது. காங்கிரசு-முசுலீம் அமைப்புக்கு இடையில் ஒப்பந்தத்தைக் கடுமையாக மாளவியா எதிர்த்தார். இரட்டை ஆட்சி முறையை காங்கிரசு முயற்சித்தது. முசுலீம்கள் ஏற்கமுடியாது என்று எதிர்த்தார்கள். பின்னர் மூன்றில் இரண்டு பங்கு முசுலீம்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் ஏற்பதாகக் கூறினார் கள். அதன்படி ஒப்பந்தம் ஏற்பட்டபோது மாளவியா எதிர்த்தார். பெரியார் ராமனைப்பற்றி எச்சரித்தார்.

அரவிந்தர் ஆசிரமம் பாலியல் குற்றச்சாற்றுக்கு உள்ளாகி உள்ளது. கிருஷ்ணதாஸ் கோஷ் தொடக்கத்தில் பகுத்தறிவாளர். ஸ்காட்லாந்து சென்று மருத்துவப்பட்டம் பெற்றவர். பின்னர் சமிதி என்று ஆன்மிகத்தில் புகுந்தார். 30.8.1905 தேதியில் அவருடைய மனைவியான விருமாளி னிக்கு அரவிந்தர் கடிதம் எழுதினார். நான் கடவுள் அவதாரமாக என்னை உணர்ந்தேன். என்னுடைய 14 வயதில் ஞானம் பெற்றேன் என்று எழுதினார். விருமாளினி கேட்ட கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி என்றால் 29வயதில் ஏன் என்னைத் திருமணம் செய்தீர்கள், என் வாழ்வை ஏன் வீணாக்கினீர்கள்? என்று கேட்டார். அப்போதே அவர் அப்படித்தான் இருந்துள்ளார். அவர் ஆசிரமத்தில் இப்போது செய்திகள் வருகின்றன.

சமஸ்கிருதத்தில் அனைத்தும் மூடக்கருத்துகள் இருக் கின்றன. எனவே, படிக்கச் சொல்கிறான். தென் தமிழகத்தில் ஒருவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் சூட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு ஜாதி ஆதிக்கம் இருந்தது. பின்னர் முத்துக்குட்டி என்று பெயர் வைத்தார்கள். வைகுண்டசாமியாக ஆனவர். தோள்சீலைப்போராட்டம் நடைபெற்றது.

திருவரங்கம் கோயிலுக்கு அருகில் பெரியார் சிலை வைப்பதா? பஞ்சும், நெருப்பும் ஒன்றாக இருப்பதா? என்றார்கள். ஆம் பெரியார் நெருப்புதான்.

வருண ஜாதி முறையை வலியுறுத்தக்கூடிய சமஸ் கிருதம், பாஜகவை எதிர்க்காதவரை நாட்டில் மாற்றம் வருவ தற்கு வாய்ப்பு இல்லை.

- இவ்வாறு தம்முடைய பேச்சில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93753.html#ixzz3NZrwc25K

தமிழ் ஓவியா said...

சமுதாய மாற்றத்துக்கு வித்திட்டது திராவிடர் இயக்கம்: கோ.வி.செழியன்

திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. செழியன் பேசும் போது, என்றைக்கும் தீர்க்கத்தரிசியாக தந்தைபெரியார் இருந்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் போன்றவைகளைவிட சுயமரி யாதை உள்ள தமிழன், திராவிடன் என்பதில்தான் பெருமை. ஒரே தலைவர் தந்தைபெரியார்தான். பின்னர் வரக்கூடி யதை முன்னதாகவே சொல்பவர்கள் தீர்க்கதரிசி அது போல் தந்தைபெரியார் சொல்லியுள்ளார். மதத்தைத் திணிக் கும் மோடி, மதவெறியர்களுக்கு எதிராகக் கண்டனக் குரலை எழுப்பி வருகிறது திராவிடர் கழகம்.

ஈழத்தமிழர் உரிமை, கச்சத்தீவு மீட்பது, மோடிகும்பலை எதிர்கொள்வது உள்ளிட்ட பலவற்றிலும் தந்தைபெரியா ரின் சீடர் அண்ணா தொடங்கி ஆசிரியர், சுபவீ, கலைஞர், பேராசிரியர் ஆகிய திராவிட இயக்கத் தலைவர்களுக்கு மூலப்பட்டா தந்தை பெரியார் கொள்கை, இலட்சியங்களா கும். இவர்களிடமிருந்து ஆயிரம் மடங்கு வேகம் பெறுகி றோம்.

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடியிருந்ததுபோல் ஆரியம் இருக்கிறது. தந்தை பெரியார் பெயரைச் சொல்லாமல் ஆட்சி தமிழகத்தில் இல்லை. அண்ணா முதல்வராக சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும், இதற்கு முன் நடைபெற்றவைகளும் செல்லும் என்றார்.

அப்போது எதிர்க்கட்சியினர் அண்ணாவைப் பார்த்து, தேர்தலில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட தந்தை பெரியாருக்கு இந்தத் தீர்மானம் காணிக்கையா என்று கேட்டபோது, இந்தத் தீர்மானம் மட்டுமல்ல, இந்த சட்டமன்றமே தந்தை பெரியாருக்கே காணிக்கை என்றார். சட்டமன்றத்துக்கு செல்லாமலேயே வென்றவர் தந்தை பெரியார். சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான உணர்வை ஊட்டியவர் தந்தை பெரியார். காங்கிரசு கட்சி சுதந்திரத்துக்காகவும், கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களுக்காகவும் இருக்கின்றன. ஆனால், சமுதாய மாற்றத்துக்கு வித்திட்ட இயக்கம் திராவிடர் இயக்கம். யாருக்கு உழைக்கிறோமோ, அதனால் பலன் பெற்றவர்கள் நன்றி கெட்டவர்களாக உள்ள நாடு.

தெருவில் செல்லும்போது மலம் பட்டுவிட்டால் அந்த இடத்தை மட்டுமே சுத்தம் செய்வார்கள். ஆனால், மலத்தை விடக் கேவலமாக மதிக்கப்பட்ட சமுதாயமாக தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இருந்தது. அப்படிப் பார்ப்பனர்களால் தொடக்கூடாதவர்களாக இருந்தோம்.

சமூகநீதிக்காவலர் விபிசிங் பிரதமராக இருந்தபோது அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அப்போது கலைஞர் விக்டோரியாவுக்கு, காந்திக்கு, நேருவுக்கு தேசிய மலருக்கு நாணயம் வெளியிடப்பட்டதே, அம்பேத்கருக்கு நாணயம் வெளியிடவேண்டும் என்று கோரினார்.

தொட்டால் தீட்டு என்ற காலம் மாறி விபிசிங்கால் அறிமுகப்படுத்தப்பட்ட நாணயத்தில் உள்ள அம்பேத் கரைத் தொட்டு எடுக்கும் நிலையை திராவிட இயக்கம் கொண்டுவந்தது.

நூற்றுக்கு நூறு விழுக்காடு தந்தை பெரியார் கொள்கை களை இளைஞர் சமுதாயம் வென்றெடுத்தது என்று வரலாறு படைக்கட்டும்.

-இவ்வாறு திருவிடைமருதூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியன் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93752.html#ixzz3NZs7Cz6V

தமிழ் ஓவியா said...

ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாள்: கலைஞர் வாழ்த்து

உலக நிகழ்வுகளை வருங்காலத் தலைமுறை களுக்குக் காலமுறைப்படி நினைவூட்டிடும் வரலாற் றிற்கு அச்சாணியாக இயேசு நாதரின் பிறப்பினை மைய மாக வைத்துக் கணக்கிடப் படும் ஆங்கில ஆண்டு நிரலில் 2014 விடைபெற, புத்தாண்டு 2015 பிறக்கிறது!

பொய்களையே அணி கலன்களாகப் பூண்டவர் கள் தமிழக அரசியலில் புரிந்துவரும் கேடுகளைப் பறைசாற்றிப் பெங்களூரு தனிநீதிமன்றம் உரிய தண்டனை வழங்கி, சட் டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட் டிய ஆண்டு 2014! மத்திய அரசில் மாற் றத்தை ஏற்படுத்திய அந்த 2014 மறைந்திட, புதுமை விளையுமா? எனக் காத் துள்ள மக்களை நாடி வருகிறது 2015!

சங்கப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடிய நீடுவாழ் கென்றி யான் நெடுங்கடை குறுகி என்னும் புறநானூற்றுப் பாடலில் அட்ட குழிசி அழற்பயந் தாங்கு - என்னும் வரி, இட்ட அரிசி பானையில் சோறாக வெந் திருக்குமென எதிர்பார்த்து நிற்க, அது எரி நெருப்பாய்க் கனன்றது கண்டு வேதனை கொண்ட நெஞ்சம்போல மாற்றத்தை எண்ணி வாக்களித்த மக்களுக்கு மூன்றாண்டுகளாகியும் ஏமாற்றம் குறையவில்லை!

வாக்குறுதிகளை காப்பாற் றும் வாய்மை இல்லை! மின்சாரமில்லை! அதற்கும் இரண்டுமுறை உயர்த்தப் பட்ட கட்டணமோ அநி யாயம்! பேருந்துக் கட்டண உயர்வோ பேரதிர்ச்சி! பால் விலை உயர்வோ மகா கொடுமை! உப்பு முதல் உணவுப் பொருள் ஒவ்வொன்றின் விலையும் விஷம் போல் உயர்வு! புதிய தொழிற்சாலைகள் இல்லை; ஏற்கனவே இருந்த தொழில் களைக் காக்கும் திராணி யும் இல்லை!

தொழிலாளர் வாழ்வோ தொடர் போராட் டம்! போராடும் போக்கு வரத்துத் தொழிலாளர்க ளுக்குச் சிறைக்கூடமே பரிசு! எடுத்தேன் - கவிழ்த் தேன் என்ற எதேச்சாதி கார நடவடிக்கைகளால் எங்கும், எதிலும் குழப்பம்! எனினும், எதனையும் தெளிவுபடுத்துவதில் நாட்டமில்லை!

ஏடுகளும் எதிர்க்கட்சிகளும் சுட்டிக் காட்டினாலோ வழக்குகள் ஈட்டி முனைகளாய்ப் பாய் கின்றன! மத்திய அரசோ வளர்ச் சிப் பணிகளில் நாட்டம் செலுத்துவதைவிட பள்ளி களில் சமஸ்கிருத வாரம்! அரசுத் துறைகளுக்கான இணைய தளங்களில் இந்தி மொழி!

மதச் சார் பற்ற கொள்கையை மண் ணில் மிதித்து இந்துத்வா வின் நடமாட்டம்! என் பனபோல் ஆரவார ஆதிக்க அரசியலில் ஆர்வம் காட் டுவதுடன்; தமிழகம் மேலும்மேலும் பாதிக்கப் படும் வகையில் மேகதாது என்னுமிடத்தில் காவிரியில் இரண்டு புதிய அணைகளைக் கட்டிட முனைந்திடும் கர்நாடக அரசைத் தடுத்திடாமை!

உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையிலும் முல் லைப் பெரியாறு பிரச்சி னையில் கேரள அரசு புதிய அணை கட்டுதற் கான சுற்றுச்சூழல் ஆய்வு களை மேற்கொள்ள அனு மதி வழங்கித் தமிழகத்திற் குப் பாதகம் செய்தல்!

தமி ழரைக் கொன்றுகுவித்த போர்க்குற்றவாளி இராஜ பக்சே இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துரைத்துத் தமிழினத்திற்குத் துரோக மிழைக்கும் திசையில் நடை போடல்! என 2014 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு - தமிழக நலனுக்கு - தமிழர் முன்னேற்றத்திற்கு எதிராகவே தாங்க முடி யாக் கேடுகளைப் பதிவு செய்து அரங்கேற்றிவிட்டு நகர்கிறது.

தமிழ்ச் சமுதாயம் கடந்த சட்டமன்ற, நாடா ளுமன்றத் தேர்தல் காலங் களில் நன்று இது; தீது இது என ஆராயாது அவ சரப்பட்டதால் இன்று தமி ழகம் அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகளில், மக்கள் நலப்பணிகளில், உற்பத்தி யில், தொழில் வளர்ச்சியில் என அனைத்து வகையி லும் இந்திய அளவில் பின் தங்கிவிட்ட அவலத்தை யும் ஜனநாயக விரோத - மக்கள் விரோதச் சேட் டைகள் நாள்தோறும் பெருகி வருவதையும் எல் லோரும் எண்ணிப் பார்த் திட வேண்டும்.

இந்த அவலம் களையப்படவும், இப்போதைய பின்னடைவு களிலிருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதை யில் கொண்டு செல்லப்பட வும், களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து முனைப் போடு உழைத்திட வேண் டும்.

அதற்கு இந்தப் புத் தாண்டு 2015 வழிவகுக்கும் எனும் உறுதியான நம்பிக் கையுடன் திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார் பில் தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத் தாண்டு தின நல்வாழ்த் துகளை உரித்தாக்குகிறேன்!

Read more: http://viduthalai.in/page-8/93729.html#ixzz3NZsThOqV

தமிழ் ஓவியா said...

2014ஆம் ஆண்டின் கழக முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

1 - 2014ஆம் ஆண்டின் நம் பணிகள்! ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு உள்ளிட்ட பணிகள் தமிழர் தலைவர் அறிவிப்பு (பெரியார் உலகம் அமைப்போம் - பெரியார் பணியும் முடிப்போம்!)

1 - கீழ்த்தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி திருவாரூரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

1 - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு தேசிய அளவிலான விருது வழங்கல்.

2 - ஜாதி - மூடநம்பிக்கை ஊடுருவல்களுக்கு ஒரே தடுப்பு மருந்து தந்தை பெரியாரே! மியான்மா நாட்டின் தலைநகர் பினாங்கில் தமிழர் தலைவர் ஆய்வுரை.

3 - மலேசியா துன் அப்துல் ரசாக் பல்கலைக்கழகத்தில் வேந்தர் கி.வீரமணி

5 - பாடையை சுடுகாடு வரை தூக்கிச் சென்று கழகப் பெண்கள் புரட்சி.

8 - இருபதாம் நூற்றாண்டில் மனிதர்களை மனிதப் படுத்திய நாத்திகச் செம்மல் தந்தை பெரியாரும், நாத்திக அறிஞர் கோராவும்! விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் 75ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை.

11 -மும்பையில் சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா, தந்தை பெரியாரின் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா. இவ்விழாக்களை அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யமும், மும்பை பகுத்தறிவாளர் கழகமும், மும்பை திராவிடர் கழகமும் சிறப்புடன் நடத்தின.

15 - சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற புத்தக காட்சியில் தமிழர் தலைவர்.

16 - பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை மருத்து வர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு கிடையாதா? தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற சமூகநீதிப் பாதுகாப்பு சிறப்பு பொதுக்கூட்டம்.

17, 18, 19 - திராவிடர் திருநாள் விழா கொண் டாடப்பட்டது (பெரியார் திடல்)

18 - கருஞ்சட்டை வீரர் வ.சு.சம்பந்தம் படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் உரை.

25 - சுயமரியாதை சுடரொளி சு.அறிவுக்கண்ணு அவர்களின் நினைவுக் கல்வெட்டு மற்றும் படத்திறப்பில் தமிழர் தலைவர்.

31 - வாலாஜாபேட்டையில் தமிழர் தலைவர் உரை.

பிப்ரவரி

2 - தருமபுரி ஆ.அறிவுச்செல்வி - பூ.அருண்குமார் ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

8 - சமூக நீதி மன்றத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ராமலிங்கேஸ்வர ராவ் அவர்களுக்கு தமிழர் தலைவர் நேரில் பாராட்டு.

12 - இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் படத்திறப்பு மற்றும் வித்யாமந்திர் கல்வி குழுமத்தின் நிறுவனர் வே.சந்திரசேகர் அவர்களை பாராட்டி கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நினைவுப் பரிசு வழங்கினார் (உரை)

16 - திருச்சியில் தி.மு.க. மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

21 - பெரியார் மருத்துவ அணி சார்பில் இலவச மருத்துவ முகாம் சிவகங்கையில் தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்.

23 - ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்து தமிழர் தலைவர் கருத்துரை.

26 - ரூ.800 கோடி பெருவழிச் சாலையை தடுப்பதுதான் உணர்ச்சியா! போடியில் தமிழர் தலைவர் உரை.

மார்ச்

2 - கரூர் பெரியாண்டான் கோயிலில் மீண்டும் கட்டமைக்கப்பட்ட தந்தை பெரியார் 112ஆம் ஆண்டு பிறந்தநாள் வளைவினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

3 - கடலூர் மண்டலம் சார்பில் பெரியார் உலகத்திற்கு 100 பவுன் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது.

5 - திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்களிடம் நீங்கள் புதியதோர் உலகம் செய்ய வேண்டும் என்று தமிழர் தலைவர் வேண்டுகோள்.

6 - பெரியார் பாலிடெக்னிக் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு ஏராளமான பரிசுகள், நிறுவனத் தலைவர் பாராட்டு.

7 - சென்னை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு: பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வுக்குப் பின் மாணவராய் மாறிய பேராசிரியர் ந.சுப்பிரமணியனை புகழ்ந்து தமிழர் தலைவர் உரை.

10 -அன்னை மணியம்மையாரின் 94ஆம் ஆண்டு பிறந்தநாள். சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

16 - மதவெறி, ஜாதி வெறி, பிற்போக்குத்தனம் சந்தர்ப்ப வாதம் இவற்றை முறியடித்திட மதச்சார்பற்ற கொள்கையை உடைய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்வீர். தஞ்சையில் தி.க. பொதுக்குழு தீர்மானம், சென்னையில் அன்னை மணியம்மையாரின் நினைவுநாள்- கழகத் தோழர்கள் அம்மா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை.

ஏப்ரல்

1 - 16ஆவது மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டம். மார்த்தாண்டத்தில் தமிழர் தலைவரின் உரை.

தமிழ் ஓவியா said...

2 - 100 அம்சங்களைக் கொண்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு ஈடு இணை ஏது? மதுரையில் தமிழர் தலைவர் முழக்கம்.

19 - சென்னை புத்தகச் சங்கமம் - உலக புத்தக நாள் பெருவிழா. பார்வையாளர்களை கவர்ந்த கட்டியக்காரி நாடகக் குழுவினர்களுக்கு தி.க. பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

27 - பூஜை அறையை விட புத்தக அறைத்தான் முக்கியம். புத்தகர் விருது வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுரை.

மே

8 - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு சிந்தனை மய்யத்தின் சார்பில் முற்போக்கு எழுத்தாளர் அருணன் அவர்களுடைய இலக்கிய ஆய்வுப் பணியை பாராட்டி பேராசிரியர் வெள்ளையன் விருதினை தமிழர் தலைவர் வழங்கினார்.

13 - மறைந்த கழகத் தோழர் பெரியார் சாக்ரட்டீசுக்கு தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

21 - பெங்களூருவில் சாகித்ய அகாடமி விருது பெற்ற இறையடியானுக்கு தமிழர் தலைவர் பாராட்டு.

30 - டாக்டர் கால்டுவெல் அவர்களின் 200ஆம் ஆண்டு விழா எழுத்தாளர் நாராண.துரைக்கண்ணனின் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றினார்.

31 - பெரியார் சாக்ரட்டீசு நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் மற்றும் பல்வேறுபட்டத்தோழர்கள் உருக்கமான உரை.

ஜூன்

7 - ஜெர்மனி பல்கலைக் கழகங்களின் அழைப்புகளை ஏற்று ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

8 - குற்றாலம் பயிற்சி முகாமில் இளைஞர்களை அதிக அளவில் பங்கேற்க ஏற்பாடு: காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்.

11 - ஜெர்மனியின் தமிழர் தலைவர் தலைமையில் தாலி மறுப்புடன் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.

17 - திராவிட இயக்க போராளி விருது பெற்ற ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையாருக்கு தமிழர் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

24 - திரைப்பட இயக்குநர் இராம.நாராயணன் மறைவு. தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை.

25 - அவசர நிலை எமர்ஜென்சி அறிவிப்பு நாள் 39ஆம் ஆண்டு நினைவூட்டல் கூட்டம் - சென்னை

27 - திருவாரூரில் நடைபெற்ற திராவிட விவசாயத் தொழிலாளர் எழுச்சி மாநாட்டின் எதிரொலி மாவட்டம் முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் கூடிக் குழும கலந்துரையாடல் கூட்டம்.

29 - குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

29 - மதுரையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் எடிசன்ராசா புதிதாக தொடங்கிய பெட்ரோல் பங்க் திறந்து வைத்தார்.

ஜூலை

3 - திருமகள் பவளவிழா - தமிழர் தலைவர் வாழ்த்து

3 - பன்னாட்டு மனிதநேயத் தலைவர் லெவி பிராகல் ஆந்திர நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் ஆகியோருக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நூல்களை வழங்கினார் - சென்னை.

4 - தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் லெவி பிராகல் மற்றும் வேளாண் விஞ்ஞானி வெங்கடபதி ரெட்டியாருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

5 - மதுரையில் லெவி பிராகல் அவர்கள் கவுரவ டாக்டர் பெற்றமைக்கானப் பாராட்டு விழா மற்றும் உலகமயமாகும் பெரியார் மனிதநேயச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம்.

7 - திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க.மு.தாஸ் அவர்களின் மகனின் திருமண விழாவில் தமிழர் தலைவர் தலைமை வகித்தார்.

7 - தியாக.முருகன் - கலா ஆகியோரது பண்ணை இல்ல அறிமுக விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரை யாற்றினார் - ஆண்டிமடம் (கொங்குநாட்டார்குப்பம்)

7 - ஆண்டிமடம் முன்னாள் எம்.பி.எஸ்.சுப்பிரமணியன் உடல்நிலையை தமிழர் தலைவர் நலம் விசாரிப்பு.

9 - திருப்பூர் தமிழர் தலைவர் தலைமையில் தமிழ் மறவர் புலவர் அண்ணாமலை - சரசு இல்ல பெ.அறிவாழி - சு.சித்ரா மணவிழா 10 - சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் திராவிட இயக்க தமிழர் பேரவை மு.மாறன் இல்ல மா.தமிழரசி - சு.அரவிந்தன் மண விழா 15 - கல்வி வள்ளல் காமராசர் 112ஆம் ஆண்டு பிறந்தநாள். சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்.

18 - ஜெயபிரகாஷ் - காவியச்செல்வி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா (கடலூர்)

19 - பேராயர் எஸ்றா சற்குணம் 76ஆம் ஆண்டு பிறந்தநாள் - தமிழர் தலைவர் பாராட்டு - சென்னை

20 - சென்னை பெரியார் திடலில் கழகப் பொறுப் பாளர்களுக்கு களப்பணி பயிற்சி முகாம்.

தமிழ் ஓவியா said...

20 - 1964-இல் பெரியாரால் மணம் முடித்து, 2014-இல் பொன் விழா காணும் ஜோதி - யசோதா தமிழர் தலைவர் பாராட்டு.

21 - நிதிநிலை அறிக்கை பற்றிய விளக்கக் கூட்டத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி தலைமை உரையாற்றினார் - தஞ்சை

27 - ஆந்திராவில் சமூக நீதிக்கான நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி விருது வழங்கும் விழா - அய்தராபாத்.

ஆகஸ்ட்

1 - சமஸ்கிருத வாரம் என்பது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே - அதனை முறியடிப்போம்! - சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை.

2 - விக்கிரவாண்டி பெரியார் தொண்டர் நல்லாசிரியர் மறைந்த தண்டபாணி அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

12 - பவள விழா நாயகி திருமகள் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், அவரது துணைவியார் மோகனா வீரமணி அவர்களும் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பெரியார் பேருரையாளர் இறையன் எழுதிய இல்லாத ஹிந்து மதம் நூல் வெளியீடு.

13 - மும்பை நகரில் சீர் வரிசை சண்முகராசனின் உருவப்படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

17 - சுயமரியாதைச் சுடரொளி அலர்மேலு காவிரிச் செல்வன் நினைவுநாள் - கொள்கை ஒளி வீச்சாக சிறப்புடன் நடந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

26 - டெசோ கூட்டம்

26 - திருச்சி சிவாவின் துணைவியார் தேவிகா ராணியின் உருவப்படத்தை கலைஞர் திறந்து வைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தலுரை.

செப்டம்பர்

3 - ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக கர்மத்துக் குரியவர்களான நாங்கள் (டெசோ) கடைசி வரை இருப்போம் - போராடுவோம்! பொது வாக்கெடுப்பு நடத்துக- தனியீழமே ஒரேதீர்வு! பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்.

5 - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்தார்.

5 - கடவுள் மறுப்பாளர் கண்மதியன் கவிதை நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டு சிறப்புரை

8 - திருச்சி மாணவரணி - இளைஞரணி கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்த அரிய திட்டம்

11 - தலைவாசலில் திராவிடர் கழக வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் கருத்து 14 - குடந்தையில் பெரியார் - அண்ணா பிறந்தநாள்

18 - வெளிச்சம் கட்டடத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார் .

19 - வடசென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சி மிகு தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் (17.9.2014)

19 - புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

19 - இணையதளத்தின் மூலம் பெரியார் 1000 வினா - விடைப் போட்டி ஆப்பிள் இயங்குதளத்தில் iPhone, iPad கருவிகளுக்கான செயலி தொடங்கி வைத்தார் தமிழர் தலைவர்.

20 - தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழத்தில் ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கான தேடல் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில், தமிழர் தலைவர் பங்கேற்பு

21 - பண்பாட்டு ஆதிக்க அரசியலை ஒன்றுபட்டு முறியடிப்போம் சென்னை பெருந்திரள் முழக்கப் போராட்டத்தில் தமிழர் தலைவர் உரை

21 - யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க மாநாட்டில் தமிழர் தலைவர் சிறப்புரை - திருச்சி

23-26 - சென்னை பெரியார் திடலில் செப்டம்பர் 23 முதல் 26 வரை ஓர் சிந்தனையுடன் கூடிய அறிவு விருந்து, தமிழர் தலைவரின் அரிய உரைகள்.

தமிழ் ஓவியா said...


27 - சி.பா.ஆதித்தனார் 110ஆம் ஆண்டு பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்.

30 - அனைத்துக் கட்சிக் கூட்டம்

30 - கூத்தன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் நினைவுரை

அக்டோபர்

3- நாகைப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை (தந்தை பெரியார் பிறந்தநாள் கூட்டம் (3.10.2014)

4 - பொத்தனூரில் தந்தை பெரியார் சிலை - பெரியார் வளாகம் - நாகம்மையார், மணியம்மையார் படங்கள் திறப்பு (4.10.2014)

6 - திருப்பூரில் பெரியார் மேளா: பகுஜன் சமாஜ் கட்சியின் பாராட்டத்தக்க ஏற்பாடுகள் - தமிழர் தலைவர் பங்கேற்றார்.

நவம்பர்

8 - செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பவழ விழா சிறப்பு மலரை வெளியிட்டு தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.

8 - புதுவை அரியாங்குப்பத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் 136ஆம் ஆண்டுபிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பெரியார் 1000, சிந்தனைச் சோலை பெரியார் ஆகிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழர் தலைவர் பரிசு வழங்கினார்.

8 - தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில் சமூக நீதிக்கான ஆலோசனை கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு கட்சிப் பிரமுகர்கள்.

13 - கருநாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள எம்.எஸ்.இராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் எஸ்.ஆர்.ஜெயராம் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அவரை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றார். (13.11.2014)

16 - தலையங்க விமர்சனம் - 100 கருத்தரங்க மேடை யில், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஆய்வுத்துறை அறிஞரும், திராவிடர் இயக்க எழுத்தாளருமான பேராசிரியர் மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் உருவப்படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

தமிழ் ஓவியா said...

23 - புவனேசுவரில் நடைபெற்ற சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் உரை.

26 - தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் நடைபெற்ற துணைவர்களை இழந்த ஆ.சி.சம்பத் - ச.கற்பகம் ஆகியோருக்கு ஜாதி மறுப்பு மறுமணத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார். 28 - விபிசிங் நினைவுநாள்: சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் நூல் அறிமுக விழாவில் தமிழர் தலைவர் உரை

30 - திருச்சியில் நடைபெற்ற சாமியார்கள் ஜாக்கிரதை என்ற கருத்தரங்கில் தமிழர் தலைவர் உரை

30 - பெரியார் பெருந்தொண்டர் முருகசடாட்சரம் (படத்திறப்பு விழா) சமுதாய ஆசிரியராக திகழ்ந்தார் - தமிழர் தலைவர் புகழாரம் (மணப்பாறை)

டிசம்பர்

1 - தமிழர் தலைவரின் 82ஆம் ஆண்டு பிறந்தநாள்: உரத்தநாடு சார்பில் 82 விடுதலை சந்தா வழங்கப்பட்டது. (1.12.2014)

2 - தமிழர் தலைவரின் பிறந்தநாள் தமிழ் நாடெங்கிலும் கழகத் தோழர்கள் உற்சாகக் கொண்டாட்டம்.

4 - தமிழர் தலைவர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரி வித்தார். 7 - சேலத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் மறைந்த கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை நினைவு மலரை தமிழர் தலைவர் வெளியிட்டார்.

7 - சேலம் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்.

12 - இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனப் பொதுக்கூட்டம்

13 - மகளிரணிக் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவித்த வேலை திட்டங்கள்

20 - தஞ்சையில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? மாபெரும் கண்டன பொதுக் கூட்டம்.

21 - சுயமரியாதைச் சுடரொளி ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையாருக்கு தமிழர் தலைவர் இறுதி மரியாதை.

22 - சென்னை மகளிரணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம் 22 - மறைந்த ஆனந்த விகடன் பாலசுப்பிரமணியம் உடலுக்கு தமிழர் தலைவர் இறுதி மரியாதை

23 - சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கலந்து கொண்டார்

24 - தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் அமைதிப் பேரணி, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 41ஆம் ஆண்டு நினைவுநாளில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்பு

24 - சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பல திசைகளில் தந்தை பெரியாரின் முத்திரை! கருத்த ரங்கத்தில் தமிழர் தலைவர் பங்கேற்பு.

26- கழக செயல்திட்டத்தின் படி 2000 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நடத்துவதின் துவக்க மாநாடாக சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தென்சென்னை வட்டார மாநாடு.

27 - ஒகேனக்கல்லில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழர் தலைவர் பங்கேற்று பயிற்சி அளித்தார். 28 - தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில் ஒகேனக்கல் திராவிடர் கழகத் தலைமை செயற்குழுக் கூட்டம்

28 - ஆசிரியர், பெருந்திரைக் காட்சியின் மூலமாக இந்துத்துவா என்ற தலைப்பில் வகுப்பு நடத்தினார்.

28 - திராவிடர் கழக வட்டார மாநாடு (கிருட்டினகிரி)

29 - திராவிடர் கழக வட்டார மாநாடு (பென்னாகரம்)

Read more: http://viduthalai.in/page-7/93749.html#ixzz3NZslndR7

தமிழ் ஓவியா said...

ஆலை முதலாளிகளுக்கு ஆதரவாக நிலங்களை கையகப்படுத்த அவசரச் சட்டமா?

ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து
ஆலை முதலாளிகளுக்கு ஆதரவாக
நிலங்களை கையகப்படுத்த அவசரச் சட்டமா?

எத்தனைக் காலம் ஏமாற்ற முடியும்? வேடம் கலைகிறது!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளே தயாராவீர்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்போது, ஏழை விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன; அப்போது இதே பிஜேபி அதனை ஆதரித்த நிலையில், இன்று அதற்கு நேர் முரணாக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள பிஜேபி - மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் விரோத மான போக்கையே மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசு என்ற ஆர்.எஸ்.எஸ். அரசு தொடர்ந்து கடைப்பிடிப்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்.

அதானி, டாட்டா, பிர்லா போன்ற பெரு முதலாளிகளின் கார்ப்பரேட் சுரண்டலுக்கு உதவிடும் வகையில் எல்லா துறைகளிலும் கதவு திறந்து விடப்படுகிறது.

பொதுத் துறையை தனியார் துறையாக மாற்றுவதற்காக முன் திட்டங்கள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன மோடி அரசில்.

அதானிக்கு ரூ.6,200 கோடி

இன்ஷ்யூரன்ஸ் மசோதாவில் வெளி நாட்டு மூல பங்கை 49 சதவிகிதமாக உயர்த்திடும் மசோதாவை, நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன என்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தை திடீரென்று முடித்து விட்டு, அவசரச் சட்டம் என்ற கொல்லைப் புறக்கதவை பா.ஜ.க. அரசு திறந்து, கார்ப்பரேட் கொள்ளைக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது!

பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய ஏற்பாட்டாளர் போல திகழ்ந்த அமைப்பு, அதானி குழுமங்கள் என்பது உலகறிந்த செய்தி! அதற்கு விசேஷ கடன் சலுகையாக ரூபாய் 6,200 கோடி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து உடனடியாக கொடுக்கப்படுகிறது என்ற செய்தி எதைக் காட்டுகிறது?

கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், வெளிநாட்டுப் பணத் திமிங்கிலங்களுக்கும் உதவிடும் வகையில், நிலம் கையகப் படுத்தும் சட்டம் ஏழை, எளிய விவசாயிகளின் உரிமை களைப் பாதுகாக்கும் வகையில் - சில திருத்தங்கள் கொண்டு வந்து, முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் நிறைவேற்றப்பட்டது.

அன்று பிஜேபி சொன்னதென்ன?

அப்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களும், மாநிலங் களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அருண் ஜெட்லி அவர்களும் பா.ஜ.க.வின் சார்பில் அந்த திருத்தத் திற்கு ஒத்துழைப்பும் கொடுத்து விட்டு, இப்போது ஆளுங் கட்சியான நிலையில் அதற்கு நேர் எதிரான ஒரு நிலைப் பாட்டை எடுப்பது ஏன்? வாக்காளர்களான வெகு மக்கள் அறிய மாட்டார்கள் என்ற நினைப்பா?

பல்டிக்கு என்ன காரணம்?

நிலம் கையகப்படுத்தும் சட்டம், பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் கொண்டு வந்து அமலில் இருந்து வரும் ஓர் பழைய சட்டம். 1894இல் நிறைவேறி அமலில் இருந்துவரும் சட்டம் 2013-இல் (இடையில் சில மாற்றங்கள் வந்த போதிலும்), சில முக்கிய பாதுகாப்பு விதிகள் - விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு புகுத்தப்பட்டு, திருத்தப்பட்ட சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

முக்கியமாக, தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நிலம் எடுக்கையில், நேரடியான வகையில் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பத்தவர்களின் 70 முதல் 80 சதவிகித ஒப்புதல் பெற்ற பிறகே நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்ற பாதுகாப்பு விதி (Safety Valid) அதில் திருத்தப்பட்டது.

காரணம், கையகப்படுத்த முனையும் போது ஏற்படும் பாதிக்கப்பட்ட மக்களின் கடும் எதிர்ப்பு - பற்பல நேரங்களில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையிலும், போலீஸ் தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் - ரத்த வெள்ளம் - ஏற்பட வழி வகுத்து விடும் நிலை தோன்றுகிறது.

தமிழ் ஓவியா said...

இரண்டு ஆண்டுகளாக விவாதித்துதான் அச்சட்டம் முன்பு, நாடாளுமன்றத்தில் 12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகே இப்பிரிவுகளைப் புகுத்திய திருத்தப்பட்ட சட்டமாக நிறைவேறியது.

அதோடு மற்றொரு பாதுகாப்பாக இப்படி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்குமுன் இதன் சமூக தாக்கத்தின் விளைவு மதிப்பீடு (Social Impact Assessment (SIA) பற்றி நன்கு ஆராய்ந்த பிறகு, தரப்படல் வேண்டும் என்பதும் ஆகும்.

மூன்றாவதாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 4ஆவது அட்டவணை - சில சட்டங்களுக்கு விதி விலக்கு தரும் வகையில், 13 சட்டங்களை மட்டுமே வைத்துள்ள நிலையில்தான், மேற்காட்டிய சமூக தாக்க விளைவு மதிப்பீட்டிலிருந்து விலக்குகள் தரப்பட்டன.
புதிய அவசரச் சட்டம் அந்த நிபந்தனைகளையெல்லாம் நீக்கி தனியார் அரசு உதவியோடு கையகப்படுத்த உதவும் வகையில் உள்ளது.

குழந்தைகள் கையில் இருந்த பண்டத்தைக் கொத்திய பருந்தின் கதை!

மிக முக்கியமான பொது நலத்துறை, தற்காப்பு, தேசப்பிணைப்பு, ரயில்வே வளர்ச்சி, அணுசக்தி, மின்சாரம் போன்றவைகளைப் பெருக்க தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்த இந்த விதிக்கு விலக்குகள் தரலாம் என்பது மேற்காட்டிய 4ஆவது அட்டவணை சட்டம்.

ஆனால், தற்போது அவசர அவசரமாய் கொண்டு வந்து அமல்படுத்த மோடி அரசு துடியாய்த் துடிக்கும் சட்டத்தால் முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்டு, முற்போக்காளர்களால் வரவேற்கப்பட்ட அந்த விதிகள் எல்லாம் காணாமற்போய் - குழந்தை கையில் உள்ள பண்டத்தை பருந்துகள் திடீரென்று கொத்திக் கொண்டு பறந்து விடுவது போன்ற தொரு நிலையை உருவாக்கவே, இந்த கொல்லைப்புற வழிச் சட்டங்கள்.

எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்?

பா.ஜ.க. - மோடி அரசு வந்தால் விவசாயிகள் தற் கொலைகள் மாறி, பாலும், தேனும் ஓடும் என்ற பிரச் சாரத்தை நாடு முழுவதும் ஊடகங்கள் ஊதினவே இப்போது யதார்த்தம் என்ன?

ஏழே மாதங்களில் வேஷம் கலைந்து வருகிறது; மக்களுக்கும், ஆதரித்தவர்களுக்கும் இந்த அரசை அடையாளம் கண்டு கொள்ளும் அரிய வாய்ப்பு இத்தகைய மக்கள் விரோத விவசாய - பாட்டாளி விரோதப் போக்கின் மூலம் புரிய வைக்கிறது!

எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும்?

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
31-12-2014

Read more: http://viduthalai.in/page1/93684.html#ixzz3NZtA9UIY

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைவர் புத்தாண்டு செய்தி

நகர்ந்த ஆண்டு (2014) நாட்டில் மதவெறிக்கு கதவு திறந்து, மனிதநேயத் திற்கு அறைகூவல் விடுத்து, பல வேதனை நிகழ்வுகளை மனித குலத்துக்குத் தந்த ஆண்டு.

வரும் புத்தாண்டு (2015) அவைகளை நீக்கி, அனைவருக்கும் அனைத்தும் என்ற அமைதி கொழிக்கும் சமத்துவ ஆண் டாகப் பொலிந்து சரித்திரம் படைக்கும் ஆண்டாக அமையட்டும்.!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
31-12-2014

தமிழ் ஓவியா said...

குழவிக் கல்லுக் கடவுள் காப்பாற்றாது கோயிலுக்குச் சென்றவர்கள் பலியான கோரங்கள்

சேலம், டிச.31-_ சேலத்தில் மொபட் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுடன் பொறியாளர் பலியானார். கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

சேலம் பொன்னம்மாப்பேட்டை ரமணா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது 36). பொறியாளரான இவர் டில்லியில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டப்பணியில் வேலை செய்து வந்தார். மோகனுக்கும் அம்மாப்பேட்டை பசுபுல குருநாதர் பகுதியை சேர்ந்த எம்.காம். பட்டதாரியான கவிதா(27) என்பவருக்கும் கடந்த மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து மோகன் டில்லி சென்றார். இந்த நிலையில், விடுமுறை எடுத்துக்கொண்டு மோகன் சேலம் வந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவியுடன் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மொபட்டில் சென்றார். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இதனிடையே சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற ஒரு அரசு பேருந்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஆத்தூரில் திரும்பி மீண்டும் சேலத்தை நோக்கி வந்தது. இந்த பேருந்து அம்மாப்பேட்டை முக்கிய ரோட்டில் வந்து கொண் டிருந்த போது மோகனுடைய மொபட் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மோகன் மற்றும் அவரது மனைவி கவிதாவை அந்த வழியாக வந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன், கவிதா இருவரும் பரிதாப மாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்மாப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். பின்னர் அவர் கள் விபத்தில் பலியான மோகன், கவிதா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுடன் பொறியாளர் பலியான சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

திருநள்ளாறு கோயிலுக்குச் சென்று வந்தவர்கள் பலி

விருதுநகர், டிச.31_ விருதுநகர் அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி, 3 மாத குழந்தை ஆகியோர் இறந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவருடைய தம்பி பொன்ராஜ் (40). இவர்கள்

கோவில்பட்டியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தனர். பொன் ராஜ் நாதசுர கலைஞராகவும் இருந்தார். இந்த நிலையில் 2 பேரும் தங்கள் குடும் பத்தினருடன் காரில் திருநள்ளாறு சென்றனர். பொன்ராஜ் மனைவி பிரியா (32), மகள் முத்துசவுமியா (6), பாலவி சாலி (3 மாதம்), சரவணன் மனைவி லெட்சுமி (36), மகன்கள் முத்துக்குமரன் (17) பிளஸ்-2 மாணவர், பிருத்திவி தங்கம் (10) 5-ம் வகுப்பு மாணவர் ஆகியோர் ஒரே காரில் சென்றனர். காரை சர வணன் ஓட்டினார். திருநள்ளாறில் சனீஸ்வரனை தரிசித்து விட்டு அனைவரும் ஊருக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு விருது நகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் அருகே மதுரை-நெல்லை நெடுஞ்சாலையில் கார் சென்றது. அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு லாரி நின்று கொண் டிருந்தது.

தமிழ் ஓவியா said...

அப்போது சரவணனின் கட்டுப் பாட்டை இழந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலை மீட்பு படையினரும், வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கை யில் ஈடுபட்டனர். காயமடைந்தவர் களை மீட்டு உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பொன்ராஜ் பரிதாபமாக இறந்தார். சாத்தூர் ஆஸ்பத்திரியில் பொன்ராஜின் மகள் பாலவிசாலி இறந்தார். பொன்ராஜின் மனைவி பிரியா மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்தார்.

விபத்தில் காயமடைந்த சரவணன், அவருடைய மனைவி லெட்சுமி, மகன் கள் முத்துக்குமரன், பிருத்திவி தங்கம், பொன்ராஜின் மகள் முத்துசவுமியா ஆகியோர் சாத்தூர் தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சரவணன் மேல் சிகிச்சைக் காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காஞ்சிபுரம் கோயில்: பக்தர் படுகாயம்
காஞ்சிபுரம், டிச.31-_ காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பொதுவாக வழக்குகள் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து ஒரு மண்டலம் நெய் தீபம் போட்டு ஈஸ்வரனை வழிபட்டால் வழக்குகள் தீர்ந்துவிடும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இதனால் இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் இடையே ஒரு குறையாக இருந்து வந்தது. இதையடுத்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை ராஜகோபுரம் கட்டுவதற்காக கீழே பள்ளம் தோண்டி ஜல்லி போடும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் திருவண்ணாமலை மாவட்டம் சுமங்கலி கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி(வயது 35) என்ற தொழிலாளி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சின்ன காஞ்சீபுரம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேல் மருவத்தூர் கோயிலுக்குச் சென்ற 4 பக்தர்கள் சாவு

தமிழ் ஓவியா said...

சென்னை, டிச. 31_ மேல்மருவத் தூர் கோயிலை நோக்கி பக்தர்கள் நடந்து செல்வது தெரியாத காரணத் தால், நெடுஞ்சாலையில் வேகமாக வந்த பேருந்து அந்த கூட்டத்தில் புகுந்தது. இதில் 3 பெண்கள், ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிறீபெரும்புதூர் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் 26 பேர், இருமுடி கட்டி நேற்று அதி காலை 3.30 மணிக்கு ஒரு வேனில் காலையில் நிறுத்தி விட்டு, அனை வரும் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அதிகாலை இருட்டு மற்றும் பனிப் பொழிவு ஆகியவற்றால் சாலையின் ஒருமுனையில் இருந்து மறுமுனையில் கடப்பவர்கள் டார்ச் லைட் போன்ற வற்றை அடித்தபடி கடப்பது வழக்கம்.

ஆனால், பெண் பக்தர்கள் இது போன்ற எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி சென்னை -_ திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து கோயிலுக்கு சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக தனியார் பேருந்து ஒன்று சாலை காலியாக இருக்கிறது என்று வேகமாக வந்தது. திடீரென சிகப்பு ஆடையில் சில மீட்டர் தூரத்தில் மக் களின் தலை தெரிந்ததும், பிரேக் போட்டு பேருந்தை கட்டுப்படுத்த முயன்றார்.

ஆனால், அதற்குள் பக்தர்கள் கூட்டத்தில் பேருந்து புகுந்து நடந்து சென்ற கும்பல் மீது மோதியது. இதில், மாத்தூரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி அமுதா (35), ராமமூர்த்தி மனைவி முனியம்மாள் (35), நாராயணன் மனைவி பத்மாவதி (38), அவரது மகன் திவாகர் (12) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 4 ஆண்கள், ஒரு பெண் படுகாயம் அடைந்தனர். இதற்கிடை யில், பேருந்தை எடுத்துக் கொண்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பிவிட்டார்.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர். மேல்மருவத்தூர் கோயில் அருகே விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Read more: http://viduthalai.in/page1/93694.html#ixzz3NZtSp5T2

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பிள்ளை பிறக்குமா?

திருமணமானதும் வரும் முதல் வரலட்சுமி நோன்பில் பூஜை செய் தால் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

அப்படி குழந்தை பிறந்தது தொடர்பாக புள்ளி விவரங்கள் ஏதே னும் உண்டா? குழந்தை பிறப்பது என்பதற்குப் பல்வேறு உடற்கூறு காரணங்கள் இருக்கும் பொழுது வரலட்சுமி நோன்பில் பிள்ளை பிறக் குமா? கேள்விக்கு என்ன பதில்?

தமிழ் ஓவியா said...

அவசரமும் - அவசியமும்


நாள்தோறும் ஏடுகளைப் புரட்டினால் தவறாது வெளி வரும் தகவல்கள் கொலை, கொள்ளை, சங்கிலிப் பறிப்பு, பாலியல் வன்கொடுமை இத்தியாதி இத்தியா திதான் - அதே போல சாலை விபத்துகள்! விபத்துகள்!!

திருவண்ணாமலையில் மகளிர் காவல் நிலையத் திலேயே பெட்ரோல் குண்டு வீச்சு என்றால்; அதன் தன்மை என்ன? காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லையா? இன்னொரு செய்தியும் தொடர்கிறது. வங்கியில் சென்று பணம் எடுத்து வருபவர்கள் வழியில் மறிக்கப்பட்டு பணம் பறிப்பு!

ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்கள் நிலங்களை, சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். அரசு நிலங்களை ஆக்ரமித்துக் கொண்டனர்; காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் ஆளும் கட்சிக் காரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை; அதனால் சாலை மறியல் இத்தியாதி இத்தியாதி செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

அதேபோல வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டி கொலை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி என்பது போன்ற செய்திகளும் இடம் பெறுகின்றன கொலையில்கூட கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொல்லுகிறார்களாம்.

நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா? என்று நமது உடலை நாமே கிள்ளிப் பார்க்க வேண்டியுள்ளது.

மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு என்பது பெரும் அளவில் கேள்விக் குறியாகி விட்டது நீதிபதி வீட்டிலும், காவல்துறை அதிகாரிகள் வீட்டிலும் திருட்டு எனறால் எங்கே போய் முட்டிக் கொள்வதாம்?
தமிழ்நாட்டில் ஆட்சி இருக்கிறதா? அதிகாரிகள் இருக்கின்றனரா? காவல்துறை இயங்குகிறதா? என்ற கேள்விகள் பரவலாக எழுந்து நிற்கின்றன.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே கல்லூரி மாணவர்களிடையே அடிதடி என்பதெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டியவையாகும்.

இதற்கு என்னதான் முடிவு? தமிழ்நாடு அரசு இந்த நிலையை அலட்சியப்படுத்தக் கூடாது. வேலியே பயிரை மேயும் வேலைகள் நடந்து கொண்டுள்ளன.

அதிகாரிகளை மாற்றிக் கொண்டே இருந்தால் சரியாகி விடுமா? அது ஒரு வகையில் கேடாகத்தான் முடியும்.

காவல்துறையில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லையென்றால், அதனை உடனடியாகக் கவனித்து பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி நாட்டில் நாளும் நடந்து வரும் அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆளும் கட்சியினரின் தலையீட்டைத் தடுக்க வேண்டும்.

மக்கள் ஓர் ஆட்சியில் முதலில் எதிர்ப்பார்ப்பது தங்களின் பாதுகாப்பாகும். ஏற்கெனவே இருந்த ஆட்சியின் திட்டங்களை முடக்குவது என்பதில் கவனம் செலுத்தாமல், மக்களிடத்தில் உள்ள உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, காரியமாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இது அவசரத்திலும் அவசரமாகும், அவசியத்திலும் அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...

பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...

2014ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

1 - ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல் அளித்தார்.

5 - இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. - டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 17 நிமிடம் 8 விநாடியில் ராக்கெட்டிலிருந்து செயற்கைக் கோள் பிரிந்து வட்டப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது.

20 - ஒடிசா வீலர் தீவில் நடத்தப்பட்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி.
தேசிய காவல் அகாடமியின் முதல் பெண் இயக்குநராக அருணா பகுகுணா நியமனம்.

21 - கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்பட்டதால், வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைத்து உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.

22 - கடந்த 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப் பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.

27 - தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே சென் னையில் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக இரு நாட்டு மீனவர்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

30 - வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியது.

31 - மாநிலங்களவை எம்.பி.தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், எல்.சசிகலா, புஷ்பா, விஜிலா சத்தியானந்த், திமுக சார்பில் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேர் போட்டியின்றி தேர்வு.

பிப்ரவரி

1 - நாட்டின் முதலாவது மோனோ ரயில் சேவை மும்பையில் தொடக்கம், வடாலா முதல் செம்பூர் வரை 8.8 கி.மீ.தூரம் உள்ள வழித்தடத்தில் மோனோ ரயில் சென்றது.

11 - நேபாள பிரதமராக சுஷில் கொய்ராலா பதவியேற்பு.

12 - ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை. புதிதாக தமிழகத்துக்கு 9 ரயில்கள் உட்பட 73 புதிய ரயில்கள் அறிவிப்பு.

14 - டில்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ், பாஜ கட்சிகள் எதிர்த்து வாக்களித்ததால், முதல்வர் கெஜ்ரிவால் ராஜினாமா. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 49 நாளில் முடிவுக்கு வந்தது.

15 - திருச்சியில் திமுக 10ஆவது மாநில மாநாடு தொடங்கியது.

17 - இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல், வாகனங்கள், உள்நாட்டு செல்போன்கள், டி.வி, ஃபிரிட்ஜ் உள்பட வீட்டு உபயோகப் பொருள்கள், சோப்புகள் ஆகியவற்றுக்கு வரிச்சலுகை அறிவிப்பு, அரிசி மற்றும் ரத்த வங்கிக்கு சேவை வரி ரத்து.

18 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆயுள் தண்டனையாக குறைத்து அதிரடி தீர்ப்பும் வழங்கியது.

18 -மக்களவையில் தெலங்கானா மசோதா நிறைவேற்றம்.

19 - தஞ்சை, திண்டுக்கல் மாநகராட்சிகள் உதயம்.

தமிழ் ஓவியா said...

20 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் மேலும் 4 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

20 - மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

27 - நாட்டின் முதல் அஞ்சலக ஏடிஎம் சேவை சென்னையில் தொடக்கம்.

மார்ச்

1 - தெலுங்கானா மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல்.

8 - மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற போயிங் 777 ரக பயணிகள் விமானம், நடுக்கடலில் விழுந்து நொறுங்கியதில்

5 இந்தியர்கள் உட்பட 239 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

20 - பழம்பெரும் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் மரணம்.

22 - தமிழகம் முழுவதும் மீண்டும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகியது.

24 - கெய்ரோவில் வன்முறையில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாக காரணமாக இருந்த எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி ஆதர வாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

27 - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரிய, அமெரிக்காவின் தீர்மானம் அய்.நா.சபையில் நிறை வேறியது. இதற்காக நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.

ஏப்ரல்

9 - குஜராத் மாநிலம் வதோதரா மக்களவைத் தொகுதியில், பாஜ பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். தனது மனைவி பெயர் ஜசோதா பென் என்றும், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார் என்றும் வேட்பு மனுவில் தெரிவித்தார்.

15 - திருநங்கைகள் அனைவரையும் மூன்றாம் பாலினமாக பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

27 - உச்ச நீதிமன்றத்தின் 41 ஆவது தலைமை நீதிபதி யாக ஆர்.எம்.லோதா பதவியேற்பு.

மே
4 - நடுவானில் பறக்கும்போதே எதிரி நாட்டு விமானங்களை தகர்க்கும். ஆஸ்ட்ரா என்ற அதிநவீன ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

5 - கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 248 வழக்குகளை உடனடி யாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

6 - ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு உயர் அதிகாரிகளை சிபிஅய் விசாரிக்க, அரசிடம் முன் அனுமதிபெற தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

7 - முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.

16 - நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிப்பு. 337 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தது. இக்கட்சி தனித்தே 283 இடங்களை பிடித்தது. தமிழகத்தில் நடந்த 5 முனைப்போட்டியில் அதிமுக 37 இடங்களை பிடித்தது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ராதாகிருஷ்ணன் வெற்றி. ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி.

16-ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல் தெலங்கானாவில் டிஆர்எஸ்., சீமாந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடித்தன.

16 - ஒடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 119 இடங்களில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

25 - 70 ஆண்டு கால அம்பாசிடர் கார் தொழிற்சாலை மூடப்பட்டது.

25 - ஆந்திராவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 13 வயதான பூர்ணா, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய சிறுமி என்ற சாதனை படைத்தார்.

26 - இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு. அவருடன் 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 22 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.அய்.பிக்கள் பங்கேற்றனர்.

ஜூன்

2 - நாட்டின் 29ஆவது மாநிலமாக தெலங்கானா உதயமானது. அம்மாநிலத்தின் முதல்வராக கே.சந்திர சேகரராவ் பதவியேற்பு.

3 - டில்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டே பலி.

6 - மக்களவை சபாநாயகராக பாஜ மூத்த பெண் எம்.பி.சுமித்ரா மகாஜன் பதவியேற்றார். இதன் மூலம் மக்களவையின் 2ஆவது பெண் சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

தமிழ் ஓவியா said...


7 - கூடங்குளம் அணுமின் நிலைய முதல் உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்திய அணுமின் நிலையங்களில் முதல் முறையாக உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது.

9 - அதிவேக புல்லட் ரயில்களை இயக்கும் வகையில் வைர நாற்கர ரயில் திட்டம் செயல் படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் குடியரசத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையில் தெரிவிக்கப்பட்டது.

13 - சுற்றுலா பயணப்படியை பெறுவதற்காக போலியாக பயணச்சீட்டு அளித்து மோசடியில் ஈடுபட்ட 6 எம்பிக்கள் மீது சி.பி.அய் வழக்குப் பதிவு செய்தது.

18 - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 3 பேர் கொண்ட பராமரிப்பு குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

25 - ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை பட்ஜெட்டுக்கு முன்பாகவே மத்திய அரசு உயர்த்தியது. அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவிகிதமும் உயர்த்தப்பட்டு அமலானது.

28 - சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் திடீரென இடிந்து சரிந்து விழுந்ததில் 63 பேர் கட்டட இடுபாடுகளுக்குள் சிக்கி பலி.

ஜூலை

1 - கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

4 - ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி தவித்த தூத்துக்குடி செவிலியர் மோனிஷா உள்பட இந்தியாவை சேர்ந்த 46 செவிலியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

10 - பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

15 - மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ. 825 கோடி செலவில் புதிதாக 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

16 - தமிழகத்தில் வேட்டி அணிவதற்கு தடை விதித்தால் கிளப்களின் அனுமதி ரத்தாகும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

17 - ரஷ்யா - உக்ரைன் எல்லையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த மலேசிய பயணிகள் விமானம் ஏவு கணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் உடல் சிதறி பலி.

24 - டில்லியில் நடந்த இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதமாக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

30- கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி பலியான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பளிக்கப்பட்டது. பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், தாளாளர் சரஸ்வதி உட்பட 8 பேருக்கு 5 ஆண்டு சிறையும், கட்டட பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இவ் வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட்

6 - வேட்டி மற்றும் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருபவர்களை தடை செய்யும் கிளப், சங்கங்கள், மனமகிழ் மன்றங்களின் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

6 - இந்திய ராணுவத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவிகிதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

8 - மக்களவை வரலாற்றில் முதல் முறையாக, தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளித் தார் மத்திய வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன்.

13- தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்பு.

13- கனடா நாட்டின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சள் பார்கவா என்ற பேராசிரியருக்கு கணித கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு கிடைத்தது.

தமிழ் ஓவியா said...


19 - பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணி யாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

25 - கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

செப்டம்பர்

13 - திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஆண், பெண் இருவருக்கும் மருத்துவ சோதனை கட்டாயம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

22 - சமையல் எரிவாயு மானியம், முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித் தொகைகள், கல்வி உதவித் தொகை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் பலன்கள் வங்கி கணக்கு மூலம் ஆதார் அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டு வழங்கப்பட மத்திய அரசு முடிவு.

24 - மங்கள்யான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் இணைந்ததன் மூலம் உலக விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பி மகத்தான சாதனையை இந்தியா படைத்தது.

24 - கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்த 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

29 சென்னையில் தமிழ் நாட்டின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு, அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அக்டோபர்

தமிழ் ஓவியா said...

17 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.

19 - அரியானாவில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ. 47 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான் மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதி களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உயர்ந்து அந்த மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

21 - வழக்குரைஞர் அலுவலகங்கள், பார் அசோசி யேஷன் அறைகளில் நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.

25 - ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 10 உயர்த்தப் பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

27 - வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய, தொழில் அதிபர்கள் பிரதீப் பர்மன் (டாபர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்) டிம்ளோ பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் 5 இயக்குநர்கள் ராதா, சேத்தன், ரோகன், அன்னா, மல்லிகா பங்கஜ் சிமன்லால் லோதியா (தங்கம் வெள்ளி வியாபாரி) ஆகியோரின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது.

28 - தாது மணல், கிரானைட் கொள்ளை குறித்து விசா ரணை நடத்த அமைக்கப்பட்ட சகாயம் குழுவுக்கு அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம், ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் 4 நாட்களில் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கெடு விதித்தது.

29 - வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்த 627 பேரின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது. அவர்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.அய்.டி) விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நவம்பர்

6 - வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக மத்திய அரசு அளித்த 628 பேர் பட்டியலில் 289 பேர் கணக்குகளில் பணம் இல்லை எனவும், 122 பெயர்கள் இரு முறை இடம் பெற்றுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.அய்.டி) அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 - ஜாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதமானது அதை நடத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்தது.

14 - இலங்கையில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவிப்பு.

16 - அய்எஸ் தீவிரவாதிகள் மீண்டும் ஒரு அமெரிக்க பிணைக் கைதியின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். மேலும் 18 சிரியா நாட்டு ராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த பயங்கர வீடியோவையும் வெளியிட்டனர்.

21 - இந்தாண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாக இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தை அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்தது.

டிசம்பர்

4 - திருவனந்தபுரம் கொச்சியில் பிரபல நீதிபதி கிருஷ்ணய்யர் மரணம்.

10 - திருமலையில் சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது செய்தி சேகரிக்கவும் படம் எடுக்கவும் வந்த தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

10 - 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோருக்கு நார்வேயில் வழங்கப்பட்டது.

11 - தமிழகத்தில் மின் கட்டணம் 15 சதவிகிதம் உயர்த்தி தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.

14 - ஓய்வூதிய விதிகளின் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு.

16 - பாகிஸ்தானில் ராணுவப் பள்ளிக்குள் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நுழைந்து வகுப்பறைகளில் இருந்து குழந்தைகள் மீது கண் மூடித்தனமாக சுட்டதில் 140 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 160 பேர் பலி.

23- ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாயின. ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. காஷ்மீரில் எந்தக்கட்சியிலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

அரவிந்தர் “ஆ”சிரமத்தில் பாலியல் கொடுமை


சிக்கும் வரை சாமியார்; சிக்கிய பின் போலிச் சாமியார் என்பார்கள் வழக்கத்தில். ஆசிரமங்களில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் செய்தி வரும்போது, எல்லா மடமும் அப்படியில்ல... நல்ல மடங்களும் இருக்கு என்று கைகாட்டுவார்கள். பிரேமானந்தா மாட்டிய போது, சாய்பாபாவைக் காட்டினார்கள்.. சங்கர மடத்தைக் காட்டினார்கள்.

சாய்பாபாவும், சங்கரமடமும் மாட்டியபின், புதிய சாமியார்களைக் காட்டினார்கள். புதிதாய் வந்தவர்களும் சீக்கிரம் சீக்கிரமாய் மாட்டியபின், வெள்ளைக்காரப் போலீசிடம் மாட்டாமல் இருப்பதற்காகவே பாண்டிச்சேரியில் ஆசிரமம் கட்டிய அரவிந்தரின் ஆரோவில் ஆசிரமத்தைக் கை காட்டினார்கள். (நீண்டநாட்களாக மாட்டாமல் இருப்பதற்காக போலும்!) இப்போது அங்கே நடக்கும் உண்மைகளும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த அரவிந்தர் பக்தர்கள் தங்கள் சொத்துகளையும், உடைமைகளையும் ஆசிரமத்திற்குக் கொடுத்துவிட்டு அங்கேயே தங்கியிருக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்குவதற்காக ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் புதுவை ஒயிட் டவுண் பகுதியில் பல குடியிருப்புகள் உள்ளன. இதில் சுமார் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி யுள்ளனர். இவர்களுக்குப் பல விதிமுறைகள் உண்டு. நிர்வாக விதிமுறைகளை மீறுவோர்-மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவை குருசுகுப்பத்தில் உள்ள குடியிருப்பில் பீகார் மாநிலச் சகோதரிகள் அய்ந்துபேர் சேவை செய்து வந்தனர். இவர்களின் பெற்றோர் புதுவையில் வேறொரு இடத்தில் வீடு எடுத்து வசித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோதரிகள் அய்வரும், ஆசிரம நிர்வாகிகள் சிலர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல்துறையில் புகார் அளித்ததுடன், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்தனர். ஆசிரம நிர்வாகத்தின்மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினர். சகோதரிகள் கொடுத்த புகார் காவல் துறையினரால் பதிவு செய்யப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தை அணுகிப் புகாரைப் பதிவு செய்ய உத்தரவு பெற்றனர்.

தமிழ் ஓவியா said...


ஆசிரம விதிகளை மீறி காவல்துறையில் புகார் கொடுத்ததால் அய்ந்து சகோதரிகளையும் ஆசிரமக் குடியிருப்பிலிருந்து வெளியேற வேண்டும் என ஆசிரம நிர்வாகம் கூறியது. சகோதரிகள் குடியிருப்பிலிருந்து வெளியேற மறுத்ததுடன், ஆசிரம நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆசிரம நிர்வாகத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததுடன், ஆசிரமக் குடியிருப்பிலிருந்து சகோதரிகள் வெளியேற வேண்டும் என்றும் ஆணையிட்டது.

சகோதரிகள் உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றமும் ஆறுமாத காலம் அவகாசம் கொடுத்து, குடியிருப்பிலிருந்து சகோதரிகள் வெளியேற வேண்டும் என ஆணையிட்டது.

உச்ச நீதிமன்றம் கொடுத்த ஆறு மாதக் கெடு முடிந்தும் சகோதரிகள் குடியிருப்பை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தனர். இதனைப் பார்த்த ஆசிரம நிர்வாகம், நீதிமன்ற உத்தரவைக் காட்டி, காவல்துறையினர் மூலம் சகோதரிகளைக் குடியிருப்பிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது. இதனை அறிந்த சகோதரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தங்களை வெளியேற்றினால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியுள்ளனர். சகோதரிகளுள் ஒருவர், நான்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று தங்களை வெளியேற்றினால் இங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். மற்ற சகோதரிகள் கீழ்தளத்தில் நின்றுகொண்டு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, குடியிருப்பிலிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் அங்கு வந்து, மேலிருந்து குதிக்கும் முடிவைக் கைவிட்டு கீழே இறங்கி வரும்படிக் கூறியபோது சகோதரி மறுத்துள்ளார். பேட்டி எடுக்க பத்திரிகை-யாளர்கள் மொட்டை மாடிக்குச் சென்றபோது காவல்துறைத் துணை ஆய்வாளரும் உடன் சென்று மீட்டுக் கைது செய்துள்ளனர்.

மற்ற 4 சகோதரிகளையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பியுள்ளனர். தங்கள் பெற்றோரிடம் செல்வதாகக் கூறிச் சென்ற சகோதரிகள் மறுநாள் அதிகாலையில் காலாப்பட்டு கடற்கரைப் பகுதிக்குச் சென்று பெற்றோருடன் கைகோர்த்தபடி கடலுக்குள் இறங்கியுள்ளனர்.

ஏழு பேரும் தண்ணீரினுள் அதிக தூரத்திற்குச் சென்றுவிட்டதால் இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த மீனவர்களால் நான்கு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. சகோதரிகளுள் இரண்டு பேரும், அவர்களது தாயாரும் உயிரிழந்துவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

உயிர் பிழைத்த சகோதரிகளுள் ஒருவர்,

அரவிந்தர் ஆசிரமக் குடியிருப்பில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். அங்கு எங்களுக்குப் பாலியல் தொந்தரவுகள் வந்தன. இதனை எதிர்த்து ஆசிரமத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினோம். போலீசில் புகார் அளித்தோம். ஆனால் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை ஆசிரம நிர்வாகம் வெளியேற்றியதால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்தோம்.

பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நாங்கள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தோம். பின்னர் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு எடுத்தோம். அதிகாலையில் குடும்பத்துடன் சின்னகாலாப்பட்டு கடற்கரைக்குச் சென்றோம். அப்போது அங்கு இருந்த 2 பேர் என்னைத் தூக்கிச் சென்று கற்பழித்தனர். ஏற்கெனவே வேதனையில் இருந்த எங்களுக்கு இது பெரிய கொடுமையாக இருந்தது.

அதன் பின்னர் நாங்கள் ஏழு பேரும் கடலில் குதித்தோம். எங்களது அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் நான்கு பேரைக் காப்பாற்றினர். நான் கற்பழிக்கப்பட்டதை நிரூபிக்க டி.என்.ஏ. சோதனை நடத்த தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

- செல்வா

--------------------

ஆரோவில்லில் இன்னுமோர் அட்டூழியம் நில அபகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவில் ஆரோவில் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்டது கோட்டக்கரை கிராமம். விவசாயம் மற்றும் கால்நடை மேய்த்தல் போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்து வாழ்ந்து வரும் இக்கிராம மக்கள் பயன்படுத்திய பொது-வழியானது முற்றிலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் ஆகும். இவர்கள் இவ்வாறு அந்நிலத்தைத் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வேளையில், திடீரென்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஆரோவில் நிருவாகத்தைச் சேர்ந்த அங்காத்து, கோபால், கோதண்டராமன் மற்றும் ஆரோவில் பகுதியின் முக்கியப் பிரமுகர்கள் இணைந்து, அரசாங்கத்திற்குச் சொந்தமான அம்மக்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலங்களைச் செம்மைப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு சுத்தம் செய்திருந்த பகுதியை சிறுவர்கள் தங்களது விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தச் சிறுவர்கள் இளைஞர்களாக மாறிய பிறகும் இந்தப் பகுதியில் விளையாடி வந்த வேளையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வேளையில் ஆரோவில்லின் எல்.ஆர்.எம். (L.R.M.) என்ற ஒப்பந்தக்காரர் மூலமாக அந்தப் பகுதியைச் (புறம்போக்கு) சுற்றி வேலி போட்டிருக்கிறார்கள். இதனை அறிந்த அக்கிராம மக்கள் உடனடியாக வேலி போடும் இடத்திற்குச் சென்று ஏன் இவ்வாறு வேலி போடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் இந்த வேலிப் பகுதியினை நீங்கள் பயன்படுத்தலாம், உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படி இருந்துவந்த சூழலில் திடீரென்று ஒருநாள் விளையாட்டு மைதானம் அமைந்திருந்த வேலிப் பகுதியில் கனரக (கண்டைனர்) வாகனத்தை நிறுத்தியதுடன், இனிமேல் கோட்டக்கரை கிராம மக்கள் இந்த இடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று மிரட்டியிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இது போதாதென்று 27.06.2014 அன்று மாலை நேரத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சரசு, மாரி, தெய்வானை, பூரணி, கலா, மனோரஞ்சிதம் ஆகிய ஆறு பெண்களும் இந்தப் பொதுவழியாக இளங்காளி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது எதிர்த்திசையில் சத்பிரேம் என்பவர் கோவிலுக்குச் செல்லும் பாதையினை அடைத்துள்ளார். சத்பிரேம் என்பவர் ஆரோவில்லில் தங்கியிருக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர். கோட்டக்கரை கிராம மக்கள் ஆண்டாண்டுக் காலமாகப் பயன்படுத்தி வந்த பொதுவழியினை சத்பிரேம் தடுத்து வைத்ததைப் பொறுக்க-முடியாமல் வேறு வழியின்றி, இது அரசாங்கத்திற்குச் சொந்தமான புறம்போக்கு நிலம். மேலும் எங்கள் கிராம மக்கள் இவ்வழியைத்தான் பிரதான பாதையாகப் பயன்படுத்தி வருகிறோம். நீங்கள் யார் இதைத் தடுப்பதற்கு? என்று சத்பிரேமைக் கடக்க முயன்ற பெண்களை நாக்குக் கூசும் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஆடைகளைத் தொட்டும் கைகளைப் பிடித்தும் இழுத்து கீழே தள்ளியிருக்கிறார் வெளிநாட்டுக்காரரான சத்பிரேம். மேலும் அவர், எனக்கு அனைவரையும் தெரியும். எனவே உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஏளனமாகக் கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட கோட்டக்கரை கிராம மக்கள் வெகுண்டெழுந்து 28.06.2014 அன்று பகலில் மொரட்டண்டி சுங்கவாயிலை (டோல்கேட்) முற்றுகையிட்டு கிராமப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சத்பிரேமையும், அரசாங்க நிலத்தை அபகரிக்க முயன்ற அங்காத்து, கோபால், கோதண்டராமன் உட்பட்டவர்களையும் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் நடந்த தகவலறிந்து அங்கு வந்த கோட்டக்-குப்பம் உதவி காவல் கண்காணிப்பாளர் நிஷாசேகர், தாசில்தார் ருக்மணி சிறீவித்யா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்-களிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக அன்று இரவு கோட்டக்கரை கிராமப் பெண்கள் ஆரோவில் காவல் நிலையத்தை முற்றுகை-யிட்டு குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பெண்கள் போராட்டத்தின் விளைவாக சம்பந்தப்பட்ட சத்பிரேம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. மேலும் ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் ரகுநாதன் அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பதாக அக்கிராம மக்களுக்கு உத்திரவாதமும் அளித்தார். அதன்மீது எவ்வித மேல்நடவடிக்கையும் இன்றுவரை நடை-பெறவில்லை. அரசாங்கத்திற்குச் சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் (சர்வே எண்: 286) மட்டுமல்லாமல் மேலும் சுமார் 140 அரசாங்கப் புறம்போக்கு இடத்தினையும் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அங்குள்ள மக்கள் மிகவும் வேதனையுடன், சிறு ஏரிகளுக்குச் செல்லவேண்டிய வாய்க்கால், ஓடைப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்திப் பேசிய சத்பிரேமைக் கைது செய்யாமலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டு எடுக்க எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியப்படுத்துகிறார்கள் அரசு அதிகாரிகள்.

- சோசு

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எது தெரிந்ததோ அது நன்றாகவே தெரிந்தது

இவ்விடம் அரசியல் பேசலாம்

எது தெரிந்ததோ அது நன்றாகவே தெரிந்தது


"வணக்கம் தோழரே!" என்றபடியே சந்தானத்தின் சலூன் கடைக்குள் நுழைந்தார் மகேந்திரன். "இப்போ கொஞ்ச நாளாகவே க்ளைமேட் ரொம்ப ரம்மியமா இருக்கு பார்த்திங்களா? குளிர்ந்த காற்றும் அடிக்கறதால வெயிலே தெரியல!" என்று மகேந்திரன் சொன்னதுமே தனது வழக்கமான சரவெடியை எடுத்துவிட்டார் சந்தானம்.

"ஆமா ஆமா! பூமி குளிர்ந்து இருந்தாலோ, ஊருக்குள்ள இருக்கறவங்க சந்தோஷமா இருந்தாலோ, சிலருக்கு மட்டும் புடிக்கவே புடிக்காதுங்கற மாதிரி இந்த பி.ஜே.பி. தலைவருங்க பண்ற அலும்பு தாங்கல பார்த்திங்களா?"

"அதுசரி, நாட்டுல யாருமே முடிவெட்ட மாட்டோம்னு முடிவெடுத்துட்டா நீங்க எப்படிக் கடை நடத்துவீங்க? அதேமாதிரி, நாட்டுல பிரச்சினையே இல்லைன்னா அவங்க எப்படிக் கட்சிய நடத்துவாங்க?"

"சைக்கிள் கேப்புல எனக்கே ஆப்பா?! நான் என்ன அந்த சூனா சாமி முஸ்லிம்களுக்-கெல்லாம் ஓட்டுரிமையே கொடுக்கக் கூடாதுன்னு சொன்ன மாதிரி குண்டக்க மண்டக்கவா பேசிட்டு இருக்கேன்?!"

"ஹஹஹ! சும்மா ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன் தோழர்! அவங்களுக்கு மக்களிடம் பெயரெடுக்கணும்னு கட்டாயம் வந்தால் அப்துல்கலாமை ஜனாதிபதியாக்குவாங்க! தேவையில்லைன்னா உனக்கே ஓட்டுரிமை இல்லைன்னும் சொல்வாங்க! அதான அவங்க வழக்கமே!"

"ஆமா ஆமா, காதுல மாட்டுன இயர்போன்ல ஏ.ஆர்.ரஹ்மானோட லிங்கா பாட்டை ரசிச்சுக்கிட்டே முஸ்லிம்னாலே பிடிக்காதுன்னு சொல்வாங்க! சொல்வாங்க!"

"இதாவது பரவாயில்ல, இன்னொரு பக்கம் உத்தர பிரதேசத்து பி.ஜே.பி.க்காரங்க தாஜ்மஹாலை இடிக்கணும்னு சொல்லியிருக்-கறதைப் பார்த்திங்களா?

தமிழ் ஓவியா said...

"அவங்க இப்படிச் சொன்னால் அது வெறும் அரசியல் செய்தி, அதேநேரத்தில் மீனாட்சி அம்மன் கோவிலைத் தகர்ப்போம்னு யாராவது சொன்னால் அதைத் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்னு சொல்வாங்க! தீவிரவாதத்துக்கே இன்னும் நம்மூரு அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் சரியான அர்த்தம் தெரியலைன்னுதான் தோனுது தோழரே!

"உண்மைதான் தோழர். அந்தம்மா சுஷ்மா ஸ்வராஜ், பகவத் கீதையை தேசியப் புனித நூலா அறிவிக்கணும்னு சொல்லியிருக்காங்க பார்த்திங்களா?"

"எப்பவும் பூணூலைத்தான் புனித நூல்னு சொல்வாங்க! இப்போ கொஞ்சம் மனசு மாறி, பகவத் கீதைன்னு வந்திருக்காங்க போல!"

"அவங்க பகவத் கீதையைப் புனித நூலா கொண்டு வர்றாங்களோ இல்லையோ, கருநாடக பி.ஜே.பி. எம். எல். ஏ.க்கள் கிருஷ்ணலீலாவைப் புனித நூலா கொண்டு வந்திடுவாங்க போல!"

"எந்த லீலையைச் சொல்றீங்க தோழர்?"

"அதான் சட்டசபைலயே செல்போன்ல ஆபாச கோணத்துல படம் பார்த்துக்கிட்டிருந்-தாங்கல்ல! அதைத்தான்!"

"ஆமா, ஆமா, நானும் கேள்விப்பட்டேன்! பகவத் கீதையைப் புனித நூலாக பி.ஜே.பி.க்காரங்-களுக்கு மட்டுமாவது அறிவிச்சு அவங்க சொல்ற அந்த கலாச்சாரத்தைக் காப்பாத்தச் சொல்லணும் முதலில்!"

"வேணும்னால் அந்த கீதாபதேசத்தை, "செல்போனில் எது தெரிந்ததோ அது நன்றாகவே தெரிந்தது; எது தெரிகிறதோ அது நன்றாகவே தெரிகிறது; எது தெரியுமோ அதுவும் நன்றாகவே தெரியும்,. இன்று இது யாருடைய ஆபாசப் படமோ, அது நாளை மற்றவருடையதாகி விடும்!"னு மாற்றி எழுதச் சொல்ல வேண்டியதுதான்!

தமிழ் ஓவியா said...

"அதுசரி, இந்த பி.ஜே.பி.க்கார தலைகளோட ஒவ்வொரு நாள் அறிக்கையையும் பார்த்தால் சினிமாவுக்கு நடிக்கிறதுக்கு வாய்ப்புத் தேடிப் போறவங்க விதவிதமான ஆக்சன்ல நடிச்சுக் காட்டிப் பாராட்டு வாங்கத் துடிக்கிறதுதான் ஞாபகத்துக்கு வருது தோழர்!"

"அட, சினிமா பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கீங்களே!

"நானும் சினிமா வாய்ப்பெல்லாம் தேடிட்டு, ஒன்னும் செட்டாகாமல்தான் தோழர் இந்தக் கடையப் போட்டுட்டு உட்கார்ந்திட்டேன்! ரஜினி ரசிகர்கள், "அரசியலுக்கு ரஜினி வருவாரு வருவாரு"ன்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்குற மாதிரி என்னால எதிர்பார்த்துக்கிட்டு இருக்க முடியல தோழரே! குடும்பத்தைக் காப்பாத்தறதுதானே நம்மோட முதல் கடமை!

"ரொம்பச் சரி தோழர்! ரஜினியும் சரி, நரேந்திர மோடியும் சரி, மோடி மஸ்தான் வித்தையில ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை! ரெண்டு பேரையும் நம்பி ஏமாந்து போறதென்னவோ மக்கள்தான்!

"இதுக்கு முன்ன இருந்த மன்மோகனை செயல்படாத பிரதமர்னு சொன்னாங்க. அவரு அமைதியாக இருந்தாலும் மத்தவங்க இந்த அளவுக்கு ஆட்டம் போடல. அதிலும் ஆட்சிக்கு வந்த ஆறே மாசத்துல ஒவ்வொரு பி.ஜே.பி. தலைவருமே ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கும் பேட்டை ரவுடி ரேஞ்சுக்கும்ல பேசுறாங்க!"

"பேட்டை ரவுடின்னு நம்மூரு ராஜாவை மனசுல வச்சுத்தானே சொன்னிங்க?"

"பின்ன, எங்க ஏரியாப்பக்கம் வந்தேன்னா காலை உடைப்பேன், கையை உடைப்பேன், உயிரோட திரும்பிப் போக முடியாதுன்னுல்லாம் படத்துல ரவுடிங்கதானே பேசுவாங்க!"

"ஆமாங்க தோழர். லேட்டஸ்ட்டா ஆர். எஸ். எஸ். ஹிந்து மகா சபாங்கற தீவிரவாத அமைப்பிலிருந்து காந்தியைக் கொன்ற கோட்சேவைப் பாராட்டியதோட அடங்காமல் கோட்சேவுக்குச் சிலை வைகக்ணும்னும் சொல்லியிருக்காங்க பார்த்தீங்களா?"

"காந்தியை ஓரங்கட்டி படேலை முன்னணி தேசத் தந்தையா காட்டணும்னு பி.ஜே.பி. தலைமை முடிவு பண்ணினப்பவே இப்படியெல்லாம் ஆகும்னு தெரியும்! தலை எப்படியோ, அதே மாதிரி தானே வாலும் இருக்கும்?"

"நாட்டுல அவனவனுக்கு கக்கூஸ்கூட இல்லாம ஓரஞ்சாரம் போயிட்டுத் திரியிறாங்க. இவனுங்க என்னடான்னா கோட்சே சிலைக்கு மூவாயிரம் கோடி, நாலாயிரம் கோடின்னு வீம்புக்குச் செலவழிக்கிறானுங்க!"

"ஆமா, பொதுமக்களுக்கு எத்தனையோ அடிப்படை வசதிகளைச் செய்து முடிக்கத் தேவையான அரசுப் பணத்தை இப்படி வீணடிக்கிறாங்க! வயித்தெரிச்சலாத்தான் இருக்கு!"

"அவனுங்கதான் அப்படின்னா, நம்ம மாநில அரசோட நிலவரமோ இன்னும் கலவரமாத்தான் இருக்கு! மொத்த நிர்வாகமும் முடங்கிப் போயிருக்கு பார்த்திங்களா!"

"ஆமாம் தோழர்! அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கறிங்க! சென்ட்ரல் கவர்மெண்டு என்னடான்னா ஆதார் அட்டை வாங்கிட்டியா வாங்கிட்டியான்னு கேட்டு டார்ச்சர் பண்றானுங்க! ஸ்டேட் கவர்மெண்டு என்னடான்னா ரேஷன் அட்டையைக் கூட புதுசாத் தர மாட்டிங்கறானுங்க!"

"அதானே, ரேஷன் அட்டையே கிடைக்கலையாம்... இதுல ஆதார்னு உதார் வேற!"

"இதுல வருஷா வருஷம் அடிஷனல் சீட்டை மட்டும் சேர்த்துக்கறானுங்க!"

"ஒன்னு சொல்லட்டா? நானெல்லாம் படிக்கிற காலத்துல எக்ஸாமுக்குக் கூட அடிசனல் பேப்பர் வாங்கினதில்லை தோழர்! என்னைக்கூட அடிஷனல் சீட்டு வாங்க வச்சிட்டாங்க!"

"ஹஹஹஹ!"

- கல்வெட்டான்

தமிழ் ஓவியா said...

கருத்து

இந்தியாவில் நீதித்துறைக்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரு கோடி பேருக்கு எட்டு நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளனர். வெளிநாடுகளில் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்ற அளவில் உள்ளனர். இங்கு வழக்குகள் தாக்கல் ஆவதன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பொதுமக்கள் பிரச்சினை-களுக்குத் தீர்வுகாண நீதிமன்றங்களை நாட வேண்டும். கட்டப் பஞ்சாயத்தை மக்கள் நாடக்கூடாது. அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

- நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, உச்ச நீதிமன்றம்

நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி... என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில் இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்பதை நாங்கள் நம்பவில்லை.

ஹெல்சின்கி பகுதியில் 44 வேறுபட்ட தாய்மொழிகளைக் கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. எங்களுக்கு இது சவாலான வேலைதான் என்றாலும், தாய்மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் ஃபின்னிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்.

- ஹென்னா மரியா விர்க்குணன், மேனாள் கல்வி அமைச்சர், பின்லாந்து

தீவிரவாதத்தைவிட மோசமானது இணையக் குற்றங்கள். ஆனால், அதற்கு எதிரான வலுவான சட்டங்கள் நம்மிடம் இல்லை. சில சமயங்களில் இதுபோன்ற குற்றங்களைக் கையாளும்போது உச்ச நீதிமன்றமே திகைத்து நிற்கிறது. ஆபாசப் படங்களை வளர்ந்த நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால் இந்தியாவில் அதைத் தடை செய்யும் சட்டங்கள் இல்லை.

- எஸ்.மோகன், மேனாள் நீதிபதி, உச்ச நீதிமன்றம்


தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து கருத்துச் சொல்வதால் பல தரப்பினரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொது-வாழ்க்கைக்கு வந்துவிட்டால் மானம் - அவமானம் பார்க்கக் கூடாது என்ற பெரியாரின் வார்த்தைகளே எனக்கு வழிகாட்டுகின்றன. என் கருத்துகளுக்காக தொலைபேசியில் மிரட்டுவார்கள்; பொது இடங்களில் அவமானப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்பார்கள். ஆனால், எதிர்ப்புகளின் அற்பத்தனங்களைப் புரிந்துகொண்டால், அது வலிக்காது!

- கவிஞர் மனுஷ்யபுத்திரன்

தமிழ் ஓவியா said...

குழந்தைகளுக்குக் கொடூரமான ஆண்டு

2014ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ள பல்வேறு வன்முறைகளில் ஒரு கோடியே அய்ம்பது லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கடந்த ஆண்டினை குழந்தைகளுக்கு எதிரான ஆண்டாக அய்.நா.அவையின் குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா, உக்ரைன், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களால் பல லட்சம் குழந்தைகள் தங்கள் நாடுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர்.

ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 6 கோடியே 80 லட்சம் குழந்தைகள் போலியோ நோயால் தாக்கப்-பட்டுள்ளனர். தெற்கு சூடானில் 70 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைவால் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அய்.நா. அவையின் குழந்தைகள் நல நிதியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

கொலை நூலா தேசிய நூல்?

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புகள் எல்லா பக்கமும் தொடங்கிய நிலையில், அத்தனை முற்போக்குக் குரல்களையும் ஒருங்கிணைத்தது பெரியார் திடல். பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்கள் ஒன்றாகக் கொடுத்த குரல் இந்தியாவுக்கே வழிகாட்டியுள்ளது. மதவாத அரசினை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கான கூர்முனையைத் தீட்டியது 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டம். பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், பல்துறை சான்றோர் பெருமக்கள் என சமூக அக்கறை கொண்ட மக்களால் பெரியார் திடலின் எம்.ஆர்.ராதா மன்றம் நிரம்பி வழிந்தது. பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்று அசோக் சிங்கால் கூட்டிய கூட்டத்தில் பேசியுள்ள சுஷ்மா சுவராஜ் கிருஷ்ணனின் விளையாட்டை தேசிய விளையாட்டு என்று அறிவித்திட அவர் கட்சிப் பெண்கள் ஏற்பார்களா?

மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தின் நூல் பொதுவான நூலாக இருக்க முடியுமா? கீதை இந்து மதத்துக்கான நூலும் அல்ல. 3 விழுக்காடு பார்ப்பனர்களுக்கான நூல். வருண அமைப்பை வலியுறுத்தும் நூல். வன்முறையைத் தூண்டும் நூல். தத்துவக் குழப்பங்கள் கொண்ட நூல் ஆகும்.

கீதை சொல்லக்கூடிய தர்மம் என்பது வருண தர்மமே. மகாபாரதத்தில் இடைச்செருகல் செய்யப்பட்டதுதான் கீதை. தந்தை பெரியார் மகாபாரதம் குறித்துக் கூறும்போது, அது ஒரு விபச்சாரப் புத்தகம் என்று கூறுவார். ஒருத்தனும் ஒருத்தனுக்கே பிறந்தவன் இல்லை. 5 பேருமே பாண்டுவுக்குப் பிறக்காதவர்கள்.

பாடநூலாகக் கூட இருக்கக் கூடாத நூல். தேசிய நூலாக இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மன்ற கவுரவத் தலைவர் அருணன் பேசும்போது,

1. முதலில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்று இருக்க முடியுமா? தேசியப் பறவை, தேசிய விலங்கு போல் தேசிய நூல் இருக்க முடியுமா?

2. நூலின் கருத்தியல்படி தேசியப் புனித நூல் என்று இருக்க முடியாது. 3. மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசில் ஒரு மத நூல் தேசிய நூல் என்பது சட்ட விரோதம். மதச்சார்பற்ற அரசு என்று சொன்னால் மதங்களைச் சாராத அரசு என்றுதான் பொருள். பெரியார் சொல்வார், கன்னி என்று சொன்னால் அனைத்து ஆண்களுடன் சேர்ந்திருப்பது என்றா பொருள்? ஆண்களிட-மிருந்து விலகி இருப்பதுதானே பொருள் என்று கேட்பார்.

அப்படியே எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பது என்றால் கீதை ஒரு மதத்தின் நூல் இல்லையா? அது வைணவ நூல். 80விழுக்காடு இந்துமதத்தினர், 14 விழுக்காடு முசுலீம்கள், 2 விழுக்காட்டினர் கிறித்தவர்கள் உள்ள நாட்டில் எப்படி ஏற்கமுடியும்?

தேசியப் புனித நூல் யோக்கியதை கீதைக்கு உண்டா?

போர்க்களத்தில் இவ்வளவு பேர் சத்திரியர்களைத் தீர்த்துவிட்டால் பெண்-களிடையே வருணக் கலப்பு ஏற்பட்டுவிடுமாம்.

தமிழ் ஓவியா said...


சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று கூறிவிட்டு அவனாலேயே மாற்ற முடியாது என்றால் என்ன கடவுள்?

சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி கூறும்போது, ஜாதி பேதம் குணத்தின் அடிப் படையில் அல்ல, பிறப்பின் அடிப்படையில் தான் பகவான் சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளார். ஆகவே, கீதையை தேசிய நூல் ஆக்கக்கூடாது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியபோது, இலக்கியம் என்கிற வகையில் தொன்மை என்று 2000 ஆண்டுகள் முன்பு என்று காலத்தின் தொன்மைப்படிக் கூறவேண்டும் என்றால், திருக்குறள் உலகப் பொது அறம் சார்ந்த நூல். அதனுடன் கீதையை ஒப்பிட்டுக்கூடப் பேசக்கூடாது.

சூத்திரர்கள் போராடிய காரணத்தால் சுதந்திரம் பெற்றோம். இசுரேலிடம் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்? 7 சக்கரம் குதிரைகள், வில் அம்பு கொடுத்து உபதேசம் செய்ய வேண்டியதுதானே?

47 வருடங்களாக பாகிஸ்தான் இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவருகிறான். கண்ணன் என்ன செய்கிறான்? அப்போதும் அதிகாரம் இருந்த இடத்தில் இருந்தவன் நீதானே?

எழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. நேரம் கடந்து விட்டது புல்லர்களை வீழ்த்த. நம்மை அடிமை யாக்கும் தத்துவம் பகவத்கீதை!

விஞ்ஞானத்தில் மனித இனம் முன்னேறுகிறது. நவீன முலாம் பூசி அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். முன்னோர்களைப்போல இப்போது நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய போது குறிப்பிட்டதாவது:

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோமோ அதையெல்லாம் செய்கிறார்கள். எச்சரிக்கையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும். இராமாயணம், மகாபாரதம் கற்பனை, உண்மை அல்ல என்பது மோடிக்கும், சுஷ்மா சுவராஜூக்கும் தெரியும். ராமன் பாலம் கட்டப்படவில்லை என்பதும் தெரியும். இந்தியாவை இந்துஸ்தான் என்று அறிவிப்பதே ஆர்.எஸ்.எஸ். திட்டம். தாழ்த்தப்பட்டவர்களைக் குறிவைத்து அம்பேத்கர் ஜெயந்தி என்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:-

கீதையினுடைய நோக்கம் என்ன? கீதையினுடைய மறுபக்கம் என்று சொல்லக்-கூடிய இந்த நூலில் நாம் சொல்லியிருக்-கிறோமே.

முதலில் எந்த கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கேள்வி கேட்டால், அவர்களால் பதில் சொல்ல முடியாது. எத்தனை கீதைகள்!

கீதை என்பது, பாலகங்காதர திலகர் சொல்கிறார்:

கீதை என்பது, ஒரு கீதை, இரண்டு கீதையல்ல. ஏராளமான கீதைகள் இருக்கின்றன. அவதூர் கீதை, அஷ்டா வர்த்தன கீதை, ஈஸ்வர கீதை, கபில கீதை, கணேச கீதை, தேவி கீதை, உத்தர கீதை, பாண்டவர் கீதை, பிரம கீதை, சுஜ்ஜி கீதை, யவ கீதை, ராக கீதை, வியாச கீதை, சிவ கீதை, சுப கீதை, சூர்யகீதை என்று திலகர் எழுதியிருக்கிறார்.

ராமன் எத்தனை ராமனடி கேட்டதுபோல, கீதை எத்தனை கீதைகள்; இவற்றில் எந்தக் கீதையை அறிவிக்கப் போகிறார்கள் என்று கேட்டால், நாங்கள் விரும்பும் கீதை.

தமிழ் ஓவியா said...

ஏனென்றால், இடையில் உள்ளே புகுத்தப்பட்டதுதானே கீதை. மகாபாரதத்தில் ஏது கீதை? அதுமட்டுமல்ல, கொஞ்சம் அறிவுள்ளவர்கள் யாராவது கேள்வி கேட்கமாட்டானா? 700 சுலோகங்கள்கூட இல்லை; அதைவிட அதிகமான சுலோகங்கள் உள்ளன என்று சொல்லி, அதில் எழுதி யிருக்கிறார். இந்து பத்திரிகையில் வெளிவந்த ஆதாரத்தை எடுத்து இந்தப் புத்தகத்தில் போட்டிருக்கிறோம். 745 சுலோகங்களுக்குமேல் இருக்கக்கூடிய ஒரிஜினல் கீதைகள் வேறு; இப்பொழுது இருக்கக்கூடிய டூப்ளிகேட் கீதை என்று அந்தக் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் எழுதியிருக்கிறார்கள். யாராவது இதனை அறிவுபூர்வமாக விவாதிக்கட்டும். இதற்கு மறுப்பு சொல்லட்டும். யாரும் இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், இவர்களால் கீதையை முழுக்கப் படிக்க முடியாது; 700 சுலோகங்கள் முழுவதும் படித்தார்கள் என்றால், அவர்களுக்குத் தனிப்பரிசே கொடுக்கலாம். அந்தத் தண்டனையை இரண்டாண்டு காலம் ஏற்றுக்கொண்டவன் நான்தான்.

தமிழ் ஓவியா said...


அவ்வளவையும் படித்து, அந்தச் சுலோகங்களையும் கீதையின் மறுப்பு நூலில் எடுத்துக்காட்டியுள்ளோம். அந்த சுலோகங்களைப் படித்தால், தலைவலி வரும்; புரிந்துகொள்ள முடியாது. ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கும். ஆனால், எல்லோரும் என்ன சொல்லுவார்கள் என்றால், பகவான் கண்ணன் கீதையில் சொன்னபடி,

எது சரியாக நடந்ததோ; அது சரியாக நடந்தது

எது சரியாக முடிந்ததோ, அது சரியாக முடிந்தது என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள்.

இங்கே மிக அழகாகச் சொன்னார் சுப.வீ. அவர்கள்.

மேற்கண்ட வாசகமே கீதையில் கிடையாது.

கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்று சொல்லும்பொழுது, கடமை என்பது என்ன தெரியுமா? அதற்கு விளக்கம் சொல்கிறார் அம்பேத்கர் அவர்கள், ஜிலீமீ விமீஸீவீஷீஸீ ஷீஸீறீஹ் லீமீ சிணீமீ; ஜாதி தர்மக் கடமை; அந்தத் தர்மத்திலிருந்து நீ விலகாதே! நீ சாகடிக்கவேண்டும்; போர் செய்யவேண்டும்; எதிரில் இருப்பவன் சொந்தக்காரனா, சகோதரனா என்று பார்க்காதே!

அப்பொழுதும் அவன் தயங்குகிறான்!

அதற்கு ஒரு விளக்கம் சொன்னார்; அந்த விளக்கத்தை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆத்மா என்ற ஒன்று தனியாக இருக்கிறது; அது கூடு விட்டுக் கூடு பாயும்! அதை உன்னால் அழிக்க முடியாது; ஆத்மா அழிவில்லாதது; இந்த உடல்தான் அழியக்கூடியது. ஆகவே, இந்த உடலைத்தான் நீ சாகடிக்கிறாயே தவிர, ஆத்மாவை நீ சாகடிக்கவில்லை. உண்மை-யாகவே நீ அவர்களைச் சாகடிக்கிறாய் என்று வருத்தப்படாதே! ஆகவே, அந்த ஆத்மா எப்பொழுதும் வேறிடத்திற்குப் போய்விடுகிறது. ஆகவே, நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே, போரிடு! என்று சொன்னார்.

இதைச் சொன்னதுதான்; இதற்காக உபதேசம் செய்ததுதான் இந்தக் கீதை.

பகவான் கண்ணன் கீதையில் சொன்னபடி, யாரும், யாரையும் கொலை செய்ய முடியாது. ஏனென்றால், என்னதான் கொலை செய்தாலும், அவர் உடல்தான் அழியுமே தவிர, ஆத்மா அழியாது; ஆகவே, இது கொலையாகக் கருத முடியாது. எனவே, என்னுடைய கட்சிக்காரர் அவரைக் கத்தியால் குத்தினார் என்பது உண்மை; அவர் இறந்துவிட்டார் என்பதும் உண்மை. அதற்காக என்னுடைய கட்சிக்காரரை குற்றவாளி என்று கருத முடியாது. ஏனென்றால், பகவான் கண்ணன் கீதையில் சொல்லி-யிருக்கிறார், ஆத்மா என்பது அப்படியே வேறொரு இடத்திற்குப் போய் விடும். எனவே, என்னுடைய கட்சிக்காரரை விடுதலை செய்யவேண்டும் என்று வழக்குரைஞர் சொன்னால்,

இதைக் கேட்டுவிட்டு நீதிபதி என்ன தீர்ப்பு எழுதுவார்:

அற்புதமான விளக்கம்; இதுபோன்று இந்தியன் பீனல் கோட்டில் இதுபோன்ற விளக்கத்தை எந்த வழக்குரைஞரும் சொல்லியது கிடையாது. ஆகவே, நான் அவரை விடுதலை செய்துவிடுகிறேன் என்றா சொல்வார்? அப்படி அவர் விடுதலை செய்தால், அவருடைய நீதிபதி பதவிக்கே ஆபத்தாகிவிடும்.

மாறாக, அவர் ஒரு புத்திசாலியாக இருந்தால், பகுத்தறிவுவாதியாக இருந்தால் என்ன தீர்ப்பு எழுதுவார்?

உங்களுடைய வாதத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். யாரும், யாரையும் கொலை செய்ய முடியாது. ஆத்மா அழிவில்லாதது. ஆகவே, நான் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கிறேன். இவரும் தூக்குக் கயிற்றில் தொங்குவார். இவருடைய உடல்தான் அழியுமே தவிர, அவருடைய ஆத்மா அழியாது என்றுதானே அந்த நீதிபதி எழுதுவார்.

ஆகவே, நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். பகுத்தறிவிற்கு உடன்பாடானதா இந்த கீதை! தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது எல்லாம் பிறகு; முதலில் அதனை ஒரு சாதாரணமான நூலாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

கோட்சே நீதிமன்றத்திலே சொன்னபொழுது, பகவத் கீதையைத்தான் நான் படித்தேன். பகவத் கீதைதான் எனக்கு இதுபோன்று செய்வதற்கு அடித்தளமான ஒரு தைரியத்தை மிகத் தெளிவாகக் கொடுத்தது என்று அவர் சொல்லியிருக்கிறார்.

இதனை நான் கீதையின் மறுபக்கம் நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால், இதனைக் குறித்து வைத்துக்கொண்டு ஆதாரப்பூர்வமாக மறுக்கச் சொல்லுங்கள், பார்ப்போம்!

எனவே, சமுதாயத்தாலே கீதை புறக்கணிக்கப்-படவேண்டிய நூலே தவிர, ஜாதியை ஆதரிக்கின்ற நூலே தவிர வேறு கிடையாது என்று ஆதாரங்களுடன் உரையாற்றினார். அத்தனை எளிதில் இந்நாட்டை மதவாத நாடாக்கிவிட முடியாது; எப்பாடு பட்டாலும் முடியாது என்பதற்குக் கட்டியங்கூறும் நிகழ்ச்சியாக அன்றைய கூட்டம் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

திருநள்ளாறு : சனிப்பெயர்ச்சிப் பித்தலாட்டங்கள்


சிறப்புச் செய்தியாளர் குழு :

திருநள்ளாறு : சனிப்பெயர்ச்சிப் பித்தலாட்டங்கள்

நேரடி ரிப்போர்ட்


சனிப்பெயர்ச்சி என்ற பெயரில் ஊடகங்கள் உச்சகட்ட அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்க, அந்தப் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்த நம் செய்தியாளர் குழு, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சென்று வந்தது.இனி, ஓவர் டூ திருநள்ளாறு...

சிறீ தர்ப்பாரண்யேஸ்வரர்தான் கருவறையில் இருக்கும் கல் கடவுள். அதாவது, தர்ப்பைப் புல் வளரும் காட்டைப் பாதுகாக்கும் கடவுள். (காட்டைத்தான், மனிதர்களை அல்ல!) ஆனால், வாடகைக்கு வந்தவர் வீட்டுக்காரரையே ஆக்கிரமிப்பு செய்தது போல, தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் வாடகைக்கு வந்த சனி பகவானை வைத்துக் கொண்டு, கருவறையில் இருக்கும் மூலவரைப் பின்னுக்குத் தள்ளி, சனிபகவானின் பெருமை பேசப்படுகிறது என்று புலம்புகிறார்கள் அங்குள்ள மூத்த குடிமக்கள்.

நளமகாராசனை சனீஸ்வரன் விரட்ட அச்சமடைந்த நளமகாராசன் தர்ப்பாரண்-யேஸ்வரர் ஆலயத்தில் தஞ்சமடைந்ததாகவும், எப்படியும் ஒருநாள் நளமகாராசன் வெளியில் வந்துதானே ஆக வேண்டும் என்று எதிர்பார்த்து சனீஸ்வரனும் அங்கேயே தங்கிவிட்டானாம். அரசனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சப்பட்ட மக்கள் சனீஸ்வரனை வணங்க ஆரம்பித்து விட்டார்கள். ஆக தலப்பட்டா தர்ப்பாரண்யேஸ்வரர் பெயரில் இருக்க, சனீஸ்வரன் சண்டமாருதம் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதுதான் தலவரலாறு.
தர்ப்பாரண்யேஸ்வரரை வைத்து கல்லா கட்ட முடியாமல்தான் சனி பகவான் பேரில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. அது இன்று பலன் தருகிறது என்பன போன்ற விவரங்கள் உண்மை (செப்டம்பர் 16-_30, 2014) இதழில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சனீஸ்வரன் ஒவ்வொரு ராசியாக இடம் பெயர்ந்து அந்த ராசிக்காரர்களுக்குக் கேடு விளைவித்துக் கொண்டிருப்பானாம். இப்படிக் கேடு விளைவிப்பவன் எப்படி பகவானானான் என்று தெரியவில்லை! நாளேடுகளிலும், ஊடகங்களிலும் சனிப்பெயர்ச்சித் திருவிழா வணிக விளம்பரம் முக்கியத்துவம் பிடிக்க, இண்டிபெண்டன்ஸ் டே, 2012, ஏலியன், ஸ்டார் வார்ஸ், அவதார், வார் ஆஃப் வேர்ல்ட்ஸ் என்று ஹாலிவுட் படங்களையெல்லாம் பார்த்திருந்த நமக்கு வானத்தில் நடக்கப்போகும் அதிசயத்தைப் பார்க்கும் ஆவல் இல்லாமலா இருக்கும்? அதுவும் பக்கத்திலேயே நடக்கிறது என்றால் பிளைட் டிக்கெட் மிச்சம். அப்படி என்னதான் நடக்கிறது என அறியும் ஆவலுடன்தான் புறப்பட்டுச் சென்றிருந்தோம். உள்ளே நுழையும்போதே நளன் குளித்த குளத்திற்குத்தான் முதலில் செல்ல வேண்டும் என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டனர். இதற்காகவே சோப், நல்லெண்ணெய் என்று அந்த வியாபாரம் வேறு களைக்கட்டியது. நாம் நேராக நளன் குளத்திற்குச் சென்றோம். அதுதான் அந்தக் குளத்திற்குப் பெயர். அங்கே கண்காணிப்புக் கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள். உடை மாற்றும் அறை, பொருட்கள் வைக்கும் அறை அப்படி இப்படியென்று அமர்க்களப்பட இவற்றை ஜெயா, தந்தி, சன், டைமன்ட் (உள்ளுர்) தொலைக்காட்சிகள் வேறு நேரலை செய்து கொண்டிருந்தன. பெண்கள், படித்துறை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம் பெண்கள் உடை மாற்றும் அறைகள் இருக்க, குளிக்கும் இடத்திலேயே அணிந்திருக்கும் உடையைக் கழட்டிப்போட்டு விட வேண்டு மென்று சட்டம் வேறு. அதையும் அங்கே குளத்தினுள்ளேயே கிரில் கேட் அமைத்து அதில் எழுதியும் மாட்டியிருந்தனர். வேறு வழியில்லாமல் பெண்கள் சங்கடத்துடன் உடையைக் களைய வேண்டிய நிலை? இதற்காகவே படித்துறைப் பக்கம் குளிக்காமல், இளைஞர்கள் குளத்தின் உள்ளே கிரில் கேட் பக்கம் சென்று வேடிக்கை பார்க்கின்றனர். இது இல்லாமலா கோவில்? அண்மைக் காலமாகத்தான் இந்த உடைகளை குளத்தினுள்ளேயே கழற்றிப் போடும் பழக்கம். அதுவே இப்போது வழக்கமாகியிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சனி பெயரும் நேரமான 2.43 பற்றி கவலைப்படாமல் அதற்கு முன்னும் பின்னும் குளித்தவர்கள் கழற்றிப் போட்ட அழுக்குடைகள் கங்கை நதியில் இறந்த பிணங்கள் மிதப்பதைப் போல அருவருப்புடன் மிதக்க அதிலேயேதான் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அழுக்குத்துணி... 60 லட்சம்!

சரி இதற்கு என்னதான் தீர்வு? மக்கள் இப்படியேதான் குளிக்க வேண்டுமா என்று பார்த்துக் கொண்டிருந்தபோதே சீருடை அணிந்த ஊழியர்கள் அங்கு வந்து அந்த உடைகளைச் சேகரிக்கின்றனர். அதைச் சின்னச் சின்ன மூட்டையாகக் கட்டிப் போட்டு டிராக்டரில் எடுத்துச் செல்கின்றனர்.

நாம் மிகுந்த ஆவலுடன் எங்கு? எதற்கு? எடுத்துச் செல்கிறீர்கள் என்று அவர்களை விசாரித்ததில் கோவில் நிர்வாகத்தைக் கேளுங்கள் என்று நம்மை மர்மத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டனர். நாம் கூடிய மட்டும் கோவில் தொடர்பான நபர்களிடம் விசாரித்ததில் அவர்களிடம்தான் கேட்க வேண்டும், இவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறி நம்மைத் தவிர்ப்பதிலேயே குறியாய் இருந்தனர். துணிக்காக மட்டுமல்ல. எல்லா விசயத்திற்கும்தான். வேறு வழியின்றி மக்களிடம் விசாரிக்கும் பொழுதுதான் நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதாவது இந்த அழுக்குத் துணிகள் வெளுக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகின்றன. அல்லது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்காக இந்த ஆண்டுக்கு ரூபாய் 60 லட்சத்திற்கு கோவில் சார்பாக குத்தகை விடப்பட்டுள்ளது. குத்தகையே 60 லட்சம் என்றால்? குத்தகைதாரர் எவ்வளவிற்கு விற்பார் என்பதை உங்கள் கணக்குக்கே விட்டு-விடுகிறோம்.

மக்கள் உடுத்தியுள்ளதையும் கழற்றிப் போட வைத்து அதில் லட்சக்கணக்கில் காசு பார்க்கும் சாமர்த்தியம் பாவமும், புண்ணியமும் நரகமும் இல்லை என்பதை அவர்களாகவே ஒத்துக்கொண்டதாகவே தெரிகிறது. இது மக்களுக்கு விளங்க வேண்டும். விளங்க வைக்கவும் வேண்டும்.

அதுமட்டுமல்ல, காலை முதல் மாலை வரை நாம் அங்கேயே சுற்றிச்சுற்றிப் பார்த்ததில் ஊடகங்களின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் நமக்குத் தெரிய வந்தது. அதாவது, போனால் போகிறது என்று அதிகபட்சமாகக் கணக்கிட்டாலும் 25,000 பேர்களுக்குமேல் வந்து போகிற மக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் 8 லட்சம், 10 லட்சம், 12 லட்சம் என்று வெட்கமில்லாமல் புளுகித் தள்ளுகின்றனர். இந்த ஆண்டு வந்திருக்கின்ற மக்கள் எண்ணிக்கையேகூட சென்ற ஆண்டு வந்தவர்களைவிடக் குறைவு என்று அங்கிருக்கும் மக்களே சொல்கின்றனர். அதுமட்டுமல்ல, திரும்பத் திரும்ப வருகிறவர்கள் ஒரு சிலரே. புத்தம் புதிதாக ஏமாறுபவர்கள்தான் அதிகம் வந்து செல்கின்றவர்.

பிறகு கோவில் பக்கம் நம் பார்வை திரும்பியது. பக்தி என்பது வெறும் வியாபாரம் தான் என்பதையே அங்கும் காண முடிந்தது. சாதா தரிசனம் ரூ.200, சிறப்பு தரிசனம் ரூ.500 என்று தனியே கவுன்டர் வைத்து டிக்கெட் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. வழக்கம் போல தர்ம தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், நம்மைப் பார்த்ததும் நம்மிடம் சீறியும், புலம்பியும் தள்ளிவிட்டனர். காசு இருக்கிறவனுக்குத்தான் கடவுளா? எங்களைப் பார்த்தால் பக்தர்களாகத் தெரியவில்லையா? கால் கடுக்க, மதிய உணவு கூட உண்ண முடியாமல் தவிக்கிறோமே, இதை எப்படியாவது அம்மாவிடம் சொல்லி நடவடிக்கை எடுங்கள் என்று ஒரு பெண் நம்மிடம் புலம்பினார். என்ன செய்ய... தான் இருப்பது புதுச்சேரி மாநிலம் என்பதோ, தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மாறிவிட்டார் என்பதோ தெரியமுடியாத பக்தர் அவர்.

தமிழ் ஓவியா said...

அவர் புலம்பலில், இயலாமையும், ஏமாற்றமும் இருந்ததே தவிர இந்த ஏற்றத் தாழ்வுக்கு இடம் கொடுக்கலாமா இந்தக் கடவுள் என்று கடவுள் மீது கோபம் வரவில்லை? அதுசரி, அது வந்தாதான் அவங்க இந்தக் கோவிலுக்கே வந்திருக்க மாட்டார்களே.

இது ஒரு பக்கம் இருக்க, எப்படியாவது உள்ளே சென்று சனி பகவானைத் தரிசித்துவிட வேண்டும் என்று தவித்த மக்கள் ரூ.200, டிக்கெட்டை வாங்கியபடி பார்க்க முயன்று முயன்று நேரமாக நேரமாக பொறுக்க முடியாமல், அந்த டிக்கெட்டை பாதி விலைக்காவது விற்க முயல, அதையும் வாங்க ஆளில்லாமல் நொந்து போய் திரும்பினர். இன்னொரு பக்கம் இலக்கு வைத்து கல்லா கட்ட கோவில் நிர்வாகம் திறந்து வைத்து கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்த இரண்டாவது சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்ட்டர், டிக்கெட் வாங்க ஆளில்லாமல் உள்ளே இருந்தவர்கள் ஈ ஓட்டிக் கொண்டிருந்தனர்.

ஊடகங்களின் அதீத விளம்பரம்!

அறிவுக்கும், அறிவியலுக்கும் சற்றும் தொடர்பில்லாத இந்த மூடநம்பிக்கை வணிகக் கொள்ளைக்கு ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்களால்தான் இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இன்றும்கூட அந்த ஊடகங்கள்தான் அதீத விளம்பரத்தையும், பிரச்சாரத்தையும் செய்துகொண்டிருக்கின்றன. அதையொட்டி அவர்களுக்கும் பெரிய அளவில் விளம்பர வருவாய், லாபம், கொள்ளை! அதற்கென்று வெளியிடப்படும் சிறப்பு இதழ்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மூடநம்பிக்கைக் கருத்துகள் கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் பொழிந்து தள்ளப்படுகின்றன.

முகநூலில் இது குறித்து அதிஷா எழுதியிருக்கும் இந்தக் கருத்தே போதுமானது.

மீடியா முழுக்க கடந்த ஒன்றரை மாதமாக சனிப்பெயர்ச்சி என்பதை ஏதோ உலக அழிவுக்கு ஒப்பான ஒரு நிகழ்வாக ஊதிப்பெருக்கி வகுத்துக் கூட்டி... பாவப்பட்ட அப்பாவி பொது ஜனங்களை உறையும் பீதியில் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

அனேகமாக இவர்கள் கொடுத்த ஓவர் அலப்பறைஸ் ஆஃப் அஸ்ட்ராலஜியில் சனிபகவானுக்கே பீதியாகி அவரும்கூட நம்ம ராசிக்கு என்ன பலன் போட்டிருக்கான், எங்கே போய் பரிகாரம் பண்ணலாம், சுவாமிஜி நான் தப்பிக்கவே முடியாதா என்று மென்டலாகி மெர்சலாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

ரா..ரா...மனசுக்கு...

சனிப்பெயர்ச்சி விழா கூட்டத்தின் ரகசியம் குளக்கரைக்குச் சென்றபோதுதான் புரிந்தது. பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையை அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தபின் அங்கேயே களைந்துவிட்டு வந்துவிட வேண்டுமாம். அப்படி விடுவதன் மூலம் அவர்களைப் பிடித்த சனி விலகிவிடும் என ஒரு புரட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து அமைப்பினர் திட்டமிட்டுப் பரப்ப, அந்தக் காட்சியைக் காண்பதற்கென்றே இளைஞர்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. கூட்டம் கூடுவது ஒரு புறம் அதிகரிக்க, அங்கு அவிழ்த்து விடப்படும் ஆடைகள் பல லட்சத்திற்கு ஏலமும் விடப்படுகிறது. கூட்டத்திற்குக் கூட்டமும், வரும்படிக்கு வரும்படியும் வந்து சேருகிறது. (இந்த வியாபாரம் பிற கோவில் குளங்களிலும் விரைவில் அமலாகக்கூடிய அபாயம் இருக்கிறது.)

திருநள்ளாறையும் விடாத திருட்டு டி.வி.டி.

திருநள்ளாறு தல வரலாறு - டி.வி.டி. குறைந்த விலையில் 10, 15, 20 ரூபாய்க்கு என்று விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதே வேளையில் குறைந்த விலை என்று போலி டி.வி.டி.களை வாங்கி ஏமாறாதீர்கள் என்ற விளம்பரப் பதாகையும் இன்னொரு பக்கத்தில் கண்ணில்பட்டது. சனீஸ்வரா!

ரொட்டேசனில் பூஜைப் பொருட்கள்

இது பல கோவில்களிலும் நடக்கும் ஒன்று தான். இங்கேயும் உண்டு - ஆனால் இங்கே மேட்டர் துண்டுதான். கோவிலுக்குப் பூஜைக்குச் செல்லும்போது அர்ச்சனைப் பொருட்களை (எள்ளு, கருப்புத் துண்டு, பூ, பழம், தேங்காய் எக்சட்ரா.. எக்சட்ரா..) வீட்டிலிருந்து நீங்கள் எடுத்துவரக்கூடாது. அங்கு உள்ள கடைகளில்தான் வாங்க வேண்டும். அப்படி வாங்குவது எல்லாமே பக்தர்கள் வீட்டுக்குச் செல்வதில்லை. அவற்றைக் கோவிலிலேயே கொடுத்துவிட வேண்டுமாம். விருப்பப்படும் சிலர் மட்டும் கையில் வாங்கிச் செல்கிறார்கள். மற்றபடி, 90 விழுக்காடு மடிப்புக் கலையாத துண்டுகள் மீண்டும் அடுத்த சுற்று விற்பனைக்கு கோவிலின் உள்ளே உள்ள கடைகளுக்கு வந்துவிடுகின்றன.

(உணவு டோக்கன்கள் பற்றி தனியாகப் படித்திருப்பீர்கள்)

சனிப்பெயர்ச்சியைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர்கள் அங்கிருந்த வியாபாரிகளே! பக்திப் பிரவாகத்தோடு மதியம் 2:43 மணி-க்குக் காத்திருந்த பக்தர்களிடம் இருந்து கூடுமானவரை காசுவாங்கி கல்லாவை நிரப்புவதில் குறியாய் இருந்தது கோவில் நிர்வாகமும், சுற்றுப்பட்டுக் கடைகளும்! வெளியூர்களிலிருந்து வந்து கும்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில், உள்ளூர்க்காரர்களும் சுற்றுப்பட்டுக் கிராமத்தவர்களும் புது வியாபாரிகளாக மாறியிருந்தனர்.

பலித்தவரை பார்ப்பனியம் என்பது போல, முடிந்த வரையிலும் மக்களிடம் சுரண்டும் தொழில் அங்கு நடந்து கொண்டிருந்தது.

இதெல்லாம் சரி, அந்த உலகப் புகழ் பெற்ற சனிப் பெயர்ச்சி பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். அந்த 2:.43இல் என்னதான் நடந்தது. ஆனால், அதிலும் ஒரு முக்கியமான சதி நடந்தது. அதாவது, நளன் குளத்தைச் சுற்றி புறாக்கள், காகங்கள், பருந்துகள் ஆகியவை பறப்பதும், சுற்றியிருக்கும் மரங்களில், அமர்வதுமாக இருந்தன. இது மக்கள் கூடத் தொடங்கியதுமே அவை பறக்கத் தொடங்கிவிட்டன. இப்படி பறப்பதும், அமர்வதும் என்று இருந்த பறவைகள் 2:30க்கு மேல் சென்று அதனதன் இடங்களில் அடங்கிவிட்டன.

தமிழ் ஓவியா said...


பிரளயம் போல் ஏதாவது நடந்திருக்க வேண்டுமல்லவா? ம்... ஹூம்... நஹி... நஹி... 2:43 மணிக்காக குளத்தில் மக்களும், வெளியில் மிகக் குறைந்த அளவில் மீடியாக்களும் என்ன நடக்குமோ என்று காத்திருந்தனர். 2:43 மணியும் தொடங்கியது. சரி, எப்படித்தான் இதை அறிவிப்பார்கள் என்றிருக்கையில், கோவில் தேர் வடம் பிடிப்பதை அறிவிக்க வேட்டு வைப்பார்களே! அந்த வேட்டை மூன்று முறை வெடித்தார்கள். உடனே குளத்தில் இருந்தவர்கள் உணர்ச்சி வயப்பட்டு முங்கி எழுந்தனர். மறுமுறை இரண்டு வேட்டு விட்டனர்.

வேட்டு நளன் குளத்தருகில் வைக்காமல், திட்டமிட்டு வெளியில் வைத்ததால், வேறு வழியின்றி பறவைகள் நளன் குளத்தின் மேலேயே பறந்தன. வேட்டு இங்கே வைத்திருந்தால், பறவைகள் குளத்திற்கு வெளியே பறந்திருக்கும். இந்தச் சதியைப் புரிந்து கொள்ளாமல், பறவையோடு பறவையாகப் பறந்த பருந்துகளையும், சனி பகவானையும் இணைத்து மக்கள் பரவசமடைந்தனர். மதியம் மணி 2:43அய் இயல்பாகக் கடந்து 2:44க்கு நகர்ந்தது கடிகார முள்.

எப்படியும் ஏமாற, மக்கள் தயாராக இருக்கும் போது இப்படிப்பட்ட மோசடிகள் நடந்து கொண்டுதானிருக்கும். இத்தகைய மடமைகளுக்கு எதிரான நம் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

- சிறப்புச் செய்தியாளர் குழு

--------------------

செயற்கைக்கோள் செயலிழக்குமா? பொய்ப்பித்த தொலைக்காட்சி நேரலை

சனீஸ்வர பகவானின் அருளால், தாக்கத்தால் சனிக் கிரகத்திலிருந்து வரும் ஒளிக்கற்றை அல்லது கதிர்வீச்சால் திருநள்ளாறுக்கு மேலே பறக்கும் விமானம், செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் போன்றவை ஓரிரு நிமிடங்கள் அல்லது நொடிகள் செயலிழந்து விடுகின்றன அல்லது நின்று மீண்டும் பறக்கின்றன. (எதுவும் உறுதி இல்லாததால் தான் இத்தனை அல்லதுகள். கண்ணதாசனோ, ஜேசுதாசோ... பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு என்ற திரைப்பட நகைச்சுவை போலத்தான் இருக்கிறது இவர்கள் கதையும்!) சரி... இப்படிச் சொன்னது யார்? நாசாவாம்! திருநள்ளாறின் இந்த சக்தியைக் கண்டு அதிசயித்து ரகசியமாக வந்து ஆராய்ச்சி செய்து பார்த்தார்களாம். ஆனால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்! இப்படி ஒரு புரட்டுக் கதையை உலகப் புகழ் பெற்ற நாசா ஆய்வு மய்யத்தை வைத்தே, 7 ஆண்டுகளுக்கு முன்னர் கிளப்பிவிட்டனர்.

ஆனால், இன்றும் அது புதுசு போலவே ஓடிக் கொண்டிருக்கிறது. இதையே விளம்பரமாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு நம்மிடம் நாசாவே வியந்த திருநள்ளாறு என்று பதிகம் பாடாத குறையாக வியந்து புகழ்கிறார்கள் பக்தர்கள்.

நாசா அப்படிச் சொன்னதா? ஓரிரு நிமிடங்களோ, நொடியோ செயற்கைக் கோள் செயலிழந்து போகுமா? அப்படிச் செயலிழந்தால் மீண்டும் செயல்படவைக்க முடியுமா? அதன் சுற்றுப் பாதையில் சுற்றுமா? நியூட்டன் விளக்கிச் சொன்ன விதிப்படி, எந்த ஒரு புற விசையும் இல்லாமல் ஒரு பொருள் மீண்டும் நகரமுடியுமா? அப்படியே சனிபகவான் சக்தியால், செயற்கைக் கோள் நிற்குமேயானால், பின்னர் யார் சக்தியால் பறக்கிறது? செயற்கைக் கோள் செயலிழக்கும் என்றால், கூகிள், விக்கிபீடியா மேப்புகளில் திருநள்ளாறு படம் வந்தது எப்படி? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினால், இல்லையில்லை... அது சனிப்பெயர்ச்சி நடக்கும் நேரத்தில் தான் அப்படி. அதுவும் அந்தக் குளத்தில் தான் நடக்கும்.! என்றார்கள் சிலர். இல்லையில்லை.. கோவிலில் என்றார்கள் சிலர். செயற்கைக்கோளையே செயலிழக்க வைக்கும் அளவு சக்தியுள்ள ஒரு ஒளி/ஒலிக்கற்றை சனிக் கோளிலிருந்து வரமுடியுமா? சனி ஒளி உமிழும் கோள் அல்ல.. அது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கக்கூடிய ஒன்றுதான். அங்கிருந்து அப்படி எந்த ஒளியோ, அலையோ, கதிர்வீச்சோ இங்கு வர வாய்ப்பில்லை.

தமிழ் ஓவியா said...

அப்படி வருவதாயிருந்தாலும் அது வந்து சேர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை முன்பு நாம் சொன்ன சூரிய ஒளிக் கணக்கை வைத்து நீங்கள் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அதே சனிப்பெயர்ச்சி நேரத்தில் செயற்கைக்கோளே செயலிழந்து போகும் எனில், செல்பேசிகள் என்னாவது? குறைந்தபட்சம் அவையாவது செயலிழந்து போக வேண்டாமா? அதையும் சோதித்துப் பார்த்தோம். அதே 2:43 மணிக்கு கோவிலுக்குள்ளிருந்து நண்பர் அழைத்த அழைப்பை, குளத்திலிருந்து எடுத்துப் பேசிய போதும் எந்த வித சிக்னல் பிரச்சினையு மில்லாமல் தெளிவாகக் கேட்டது. (அதைப் பதிவு செய்தும் வைத்துள்ளோம்.) அடுத்த ஆண்டில் ஜாமர் கருவிகளைப் போட்டு தடை செய்ய முயன்று மீண்டும் அறிவியலைத் தேடி வந்தாலும் வருவார்கள்.

தவிர, காவல்துறையினரின் வாக்கிடாக்கிகள் இயங்கின. திருநள்ளாறிலிருந்து நேரலை (செயற்கைக்கோள்களின் உதவியுடன்) செய்துகொண்டிருந்த சன் நியூஸ், தந்தி, ஜெயா மற்றும் சில உள்ளூர் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகளும் எவ்வித சிக்னல் சிக்கலுமின்றி துல்லியமான ஒளிபரப்புடன் இயங்கின. 2:43 மணி-க்கு சனியிலிருந்து வரும் கருநீலக் கதிர்களைப் படம்பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்து சுற்றிலும் கேமராவோடு நம்மைப்போலவே நின்றுகொண்டிருந்த யாருக்கும் கதிர்கள் புலப்படவில்லை; கதிர்களால் எந்தத் தடையும் ஏற்படவில்லை.

ஊடகங்கள் பரப்பிய புரளியும், பொய்யும் அந்த ஊடகங்களின் நேரலை ஒளிபரப்பினாலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதே! இனியாவது, இந்த ஊடகங்கள் இந்தப் பித்தலாட்டத்திற்குத் தரும் விளம்பரத்தை நிறுத்திக் கொள்ளுமா?

-----------------------

Mobile Court

வந்திருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பாவத்தைப் போக்குவதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்று ஜலக்கிரீடையை நேரலை செய்த தனியார் தொலைக்காட்சிகள் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன.

ஆக, அங்கு வந்திருக்கும் மக்கள் ஏதோ ஒரு வகையில் பாவம் செய்தவர்களே! அதாவது, குற்றங்களைச் செய்துவிட்டு, இதிலிருந்து- _அந்தப் பாவத்திலிருந்து விடுபட நளன் குளத்திற்கு வந்திருக்கின்றனர். அப்படி என்றால்? வந்திருக்கும் அனைவரின் மீதும் திமிஸி போட்டு குற்றப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்திருக்-கலாமே? வந்தவர்களை விட்டுவிட்டு, பின்னர் வடை போச்சே என்று திரைப்பட நடிகர் வடிவேலு மாதிரி அங்கலாய்க்க வேண்டியதில்லை அல்லவா?

--------------------------------

திருநள்ளாற்றைச் சுற்றி வளைக்கும் இந்துத்துவாக்கள்!

திருநள்ளாறுக்குச் சென்று இறங்கிய உடனேயே நமக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று. போன வருசம் மாதிரி இந்த வருசம் கூட்டமில்லை என்பது. அதனால் உடனே பக்தி போய்விட்டது என்றெல்லாம் முடிவு கட்டிவிட முடியாது. அந்த ஆட்டோக்காரரின் கருத்துப்படி, இப்போ பி.ஜே.பி. ஆட்சியிலிருப்பதால் இந்து முஸ்லிம் பிரச்சினை அது இதுன்னே ஏதாவது பிரச்சினையாகும்கிற பயம் இருக்கு! என்றார். அவர் சொன்னதில் ஓர் உண்மை உண்டு. திருநள்ளாறு பகுதியில் உள்ள பக்தி வணிகத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவக் கும்பல் பலவகையிலும் உள்ளே புகுந்திருக்கிறது.

பி.ஜே.பி.யில் வந்து சேருங்கள்... எங்களுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று எர்வாமாட்டின் விளம்பரம் போல சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் ஒரு கையை உயர்த்தியபடி ஷோ காட்டுகிறார் மோடி. கூடவே அமித்ஷா, உள்ளூர் பி.ஜே.பி.யினர் படங்கள். ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா என்று கீதையை ரூ.100க்கும், நூற்றி சொச்சத்துக்கும் உரக்கக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள் சில சிண்டு தரித்த பார்ப்பனர்கள். அவர்களுக்குப் பக்கத்திலேயே கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் பார்வையற்ற பக்தர்கள் சிலர்!

தமிழ் ஓவியா said...


உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்... உங்கள் உடல்நலனுக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்காக இந்த(து) அமைப்பு! உங்கள் கல்வி வளர்ச்சிக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்கு இந்து மதம் இன்னின்ன வழிமுறைகளைக் கூறுகிறது அதற்காக இந்த அமைப்பு! எப்படி மந்திரங்களைச் சொல்லி, இறைவனைப் பிரார்த்தித்து அதிக மதிப்பெண் பெறுவது என்பதைச் சொல்லுவதற்கும், வழிகாட்டுவதற்கும் (!?) ஓர் அமைப்பு! நீங்கள் இதில் பயன்பெறலாம்... வந்து பார்க்கலாம்... அங்கு எண்ணற்றோர் உதவிபெறுகிறார்கள்... எல்லோருக்கும் தங்குமிடம், உணவு இலவசம்... என்று நான்கைந்து துண்டறிக்கைகளைக் கையில் திணித்துவிட்டு, உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவலாம் என்று வருகிறது கடைசி வார்த்தை. பிறகு பார்க்கலாம் என்றால்... இருப்பதைக் கொடுங்க என்கிறார் அந்தப் பெண்மணி. சில்லறை இல்லைங்க என்றால், எவ்ளோன்னாலும் நாங்க கொடுக்கிறோம் என்கிறார். சரி, பார்ப்போம் என்று கிளம்பியவரிடம், நோட்டீசுக்காவது காசு கொடுங்க என்றார். 10 ரூபாய் எடுத்து நீட்டியவரிடம் 20 ரூபாயைப் பிடுங்கிக் கொண்டுதான் விட்டார் அந்த அம்மையார். பக்கத்தில் இருந்து பார்த்ததே நம்மைப் பயமுறுத்த, மாட்டுவோமா நாம்? எஸ்கேப்.

தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு. ஏகப்பட்ட அய்யர்களையும், அய்யாக்களையும் இந்திராணிகளையும் காணாமல் அறிவிப்பு வந்துகொண்டிருக்க, ஜோசியர் சுப்பிரமணியத்தின் மனைவியைக் காணாமல் அவர் தேடிக் கொண்டிருந்தபோது தான், மனுசன்... இதைக் கண்டுபிடிக்க முடியாமல் என்ன ஜோசியர் என்று அலுத்துக் கொண்டார்கள் பக்தர்கள். பாவம்! அறிவிப்பு செய்தவரைத் தவிர மற்ற அனைவரையும் தேடியிருப்பார்கள் போல... அவர்கள் அறிவித்த பட்டியல் அவ்ளோ நீளம். திருநள்ளாறு கோவில், குளத்தைச் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருந்த இந்த அறிவிப்புகளின் மூலமாக தங்களுடைய ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருந்தது ஜன கல்யாண் அமைப்பு! ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்துவதைப் போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவித்திருந்தது மக்கள் மத்தியில்.
பக்தி மய்யங்களை இந்துத்துவாவின் பெயரால் ஒன்றிணைப்பது எளிது என்பதுதானே அவர்களின் வளர்ச்சிக்கான சூத்திரம்!

-----------------------

தமிழ் ஓவியா said...


அறிவியல் சொல்வது என்ன?

சூரிய மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய கோள் சனி. இது சூரியனிலிருந்து 142 கோடியே 60 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது. இது சூரியக் குடும்பத்தின் 6ஆவது கோளாகும். இதற்கு 47 துணைக் கோள்கள் இருக்கின்றன. அதாவது 47 நிலவுகள், சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு (பூமியின் ஆண்டுக் கணக்குப்படி) 30 ஆண்டுகள் ஆகின்றன. சனிக்கோளுக்கு அதுதான் ஓர் ஆண்டு. அதாவது, சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் பூமி சூரியனை 30 முறை சுற்றி வந்துவிடும்.

தமிழ் ஓவியா said...


நமது முன்னோர்கள் பார்வையளவில் கணித்து வைத்திருந்ததை இன்றைய அறிவியல் மிகத் துல்லியமாக கணித்துக் கொடுத்திருக்கிறது.

இத்தனை கோடி (சுமார் 122 கோடி கி.மீ.) தொலைவிலுள்ள சனிக் கோள், பூமியில் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகிறது என்று எண்ணுவதே மடமை ஆகும். அப்படியே அவர்களின் எண்ணப்படியே கணக்கிட்டாலும் அதுவும் மிக மிகத் தவறான ஒன்றே! அதாவது, 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு 8 நிமிடம் ஆகிறது. அதற்குள் பூமி ஒரு நிமிடத்திற்கு 28 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிப் பெயர்ந்து கொண்டுமிருக்கும்..

எனில் அந்த 8 நிமிடத்திற்குள் பூமி 223 கி.மீ. தன்னைத்தானே சுற்றியிருக்கும். நாம் பார்க்கும் நேரத்தில் கிளம்பும் சூரிய ஒளிக்கதிர் பூமியில் விழும் இடம் 223 கி.மீ. மாறியிருக்கும். (அதாவது சென்னைக்கு விருத்தாசலத் துக்கும் உள்ள தொலைவு) 14300 கி.மீ. தொலைவு சூரியனைச் சுற்றி யிருக்கும். இதற்கிடையில் பூமி 23.5 டிகிரியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது தனிக் கணக்கு.

15 கோடி கி.மீ.க்கே இப்படி என்றால்? 127 கோடி கி.மீ.க்கு எப்படி? அதுவும் சனிக்கோள் ஒளி உமிழக் கூடியதும் அல்ல.

அப்படியே மக்கள் இதை நம்பித் தொலைத்தாலும் சனிப் பெயர்ச்சியை பூமியின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கான நேரம் மட்டுமே மாறுபடும். இவ்வளவுதானே தவிர திருநள்ளாற்று கொம்யூன் பஞ்சாயத்துக்குத்தான் வரவேண்டும் என்று கட்டுப்பாடான பிரச்சாரம் செய்வது என்பது இந்து மதம் நிலைத்திருப்பதற்கும் அதற்காக மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது அவசியம் என்பதற்கும், அந்த அப்பாவி மக்களிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பொருட்களையும் கொள்ளை அடித்துவிட்டு, அவர்களை இடைவிடாமல் கடவுள் சிந்தனையில் ஆழ்த்தி வைப்பதற்குமே ஆகும்.

இதில் பக்தர்கள் புரிந்து கொண்டிருப்பது இந்த ஹிந்து மதத்தின் சதியைப் பற்றி அல்ல. தன்னை இந்த இந்த இராசிக்காரன் என்றும், ஒரு இராசியிலிருந்து சனி இன்னொரு இராசிக்கு; பெயர்கிறது என்பதை பெயர்கிறார் என்றும், அதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆகவே, 3 X 2½ = 7½ என்று கணக்கிட்டு 7½ நாட்டு சனி என்றும் மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர்; புரிந்து அல்ல.

-----------------------------------

பணமும் கோவிந்தா? புண்ணியமும் கோவிந்தா?

எந்தக் கோவிலாக இருந்தாலும் சரி அன்னதானம் செய்தால் புண்ணியம் என்பது பொதுவான அய்தீகம். (அதற்காக-வென்றே சுற்றிலும் பிச்சைக்காரர்கள் கும்பல்) அதற்கு இந்தத் திருநள்ளாறு கோவிலும் விதிவிலக்கல்ல. அங்கு வந்து சமைத்து வைத்து படைக்க வாய்ப்பில்லாததால், பக்தர்கள் சிலர் அங்குள்ள உணவுக்கூடங்களில் (Hotels) உணவுக்கான சீட்டு (Token) வாங்கி அதை தானம் பெற காத்திருப்போரிடம் கொடுத்துவிடுகின்றனர். அதை வாங்குவது பெரும்பாலும் பிச்சை எடுப்பவர்களே. இப்படி ஒரே பிச்சைக்காரரிடம் உணவிற்கான எண்ணற்ற சீட்டுகள் (Token) சேர்ந்துவிடுகிறது. சரி அவர்களாவது இதைப் பயன்படுத்தினால், அதை வாங்கிக் கொடுத்துவருக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால் அதிலும் மண்தான். அதாவது பிச்சைக்காரர்கள் அங்கு ஓசியில் கிடைக்கும் உண்டைக்கட்டி உணவை வாங்கிச் சாப்பிட்டுவிடுவதால், அவர்-களுக்குத் தானம் செய்யப்பட்ட அந்த உணவுக்கான சீட்டை அந்தப் பிச்சைக்-காரரும் பயன்படுத்தவில்லை. சரி, என்னதான் செய்கிறார் என்று பார்த்தால் அது, எந்த உணவுக்கூடத்தில் காசுக்காக வழங்கப்பட்டதோ அதே உணவுக் கூடத்துக்கு பாதி விலைக்கே திரும்பப் போய்விடுகிறது. (சாப்பாட்டுக் கடைக்-காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே இப்படி ஓர் ஒப்பந்தம்) இது எப்படி இருக்கிறது? கடைக்காரருக்குக் காசு! உணவும் தயாரிக்கப்படாமல், வழங்கப்-படாமல் அதோடு மட்டுமா? வழங்கப்-பட்ட உணவுச்சீட்டும் பாதி விலைக்கே திரும்ப எடுத்துக் கொண்டார் அல்லவா? மீண்டும் அந்த உணவு டோக்கன் விற்பனைக்குத் தயார். இது எப்படியோ போகட்டும். இந்த அன்னதானம் செய்ய நினைத்தாரே... அந்த பக்தரின் நிலை?

இருந்த பணமும் கோவிந்தா!! இல்லாத புண்ணியமும் கோவிந்தா!

தமிழ் ஓவியா said...

கற்பிதங்களுக்கு எதிரான கலகம்
பிகே(PK) : கற்பிதங்களுக்கு எதிரான கலகம்

- பிரபாகரன் அழகர்சாமி

பிகே(PK)

இந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்), த்ரீ இடியட்ஸ் (தமிழில் நண்பன்) போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், முன்னணித் திரைநட்சத்திரமான அமீர்கான் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இந்தித் திரைப்படம் பிகே (PK).

இந்தித் திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம், இப்போது உலகெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மிகுந்த சமூக அக்கறையுடனும், தேர்ந்த படைப்-பாற்றலோடும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் பகுத்தறிவாளர்களால் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு. மதங்கள் இல்லாத, கடவுள்கள் இல்லாத, கடவுள்களிடம் பேசுவதற்கு இடைத்தரகர்கள் இல்லாத ஒரு கிரகம்.

அந்தக் கிரகத்தில் மனிதர்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு உடை கிடையாது, தனிப் பெயர்கள் கிடையாது, மொழிகூடக் கிடையாது. அப்படி ஒரு கிரகம். அதிசய கிரகம் என்று சொல்லிவிட முடியாது.

ஏனென்றால் இந்தப் பூமியில் மனித இனம் தோன்றியபோது எப்படி இருந்ததோ அப்படிப்பட்ட ஒரு கிரகம்தான் அது. அந்தக் கிரகத்தில் இருந்து பூமிக்கு ஒரு மனிதனை விண்கலத்தில் அனுப்புகிறார்கள்.

ராஜஸ்தான் பாலைவனத்தில் அவனை இறக்கிவிட்டுச் செல்கிறது அந்த விண்கலம். தன்னுடைய சொந்தக் கிரகத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்றால், அந்த விண்கலத்தை அழைப்பதற்கு டாலர் வடிவில் உள்ள ஒரு கருவியைக் கழுத்தில் மாட்டியிருக்கிறான் அவன். இந்தப் பூமியில் அவன் சந்திக்கும் முதல் மனிதன், அந்தக் கருவியைப் பிடிங்கிக்கொண்டு ஓடிவிடுகிறான்.

அந்தக் கருவியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவன் ஊர் ஊராக அலைகிறான். அதில் அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களுடைய நம்பிக்கைகள், என்ன செய்தால் இழந்த பொருளை மீட்க முடியும் என்று மனிதர்களைப் பார்த்து இவன் பின்பற்றும் வழிமுறைகள் என்று விரிகிறது படம்.

என்ன இது எதுவும் நம்பும்படி இல்லையே என நீங்கள் நினைக்கலாம்

.உண்மைதான், இதெல்லாம் சினிமாத்தனம்தான். இந்த நம்பமுடியாத சினிமாத்தனத்தை வைத்துக்-கொண்டு, மக்கள் நம்பிக் கொண்டிருக்கிற பல கற்பிதங்களின் மீது கேள்விக்கணைகளைத் தொடுத்துத் தகர்த்தெறிந்திருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


படத்தில் இன்னொரு சிறிய துணைக்கதையும் உண்டு. வெளிநாடு ஒன்றில் மேற்படிப்பிற்காகச் சென்ற ஜனனி அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சர் ஃபராஸ் மீது காதல் கொள்கிறாள். இந்து ஆன்மீக குரு (சாமியார்) ஒருவர் மீது தீவிரபக்தி கொண்ட குடும்பம் ஜனனியுடையது. அவளுடைய காதல்பற்றித் தெரிந்தவுடன் அவளுடைய அப்பா சாமியாரிடம் முறையிடுகிறார். அந்த முஸ்லிம் இளைஞனை நம்பாதே அவன் உன்னை ஏமாற்றிவிடுவான் என்று ஜனனியிடம் சொல்கிறார் சாமியார். சாமியார் சொன்னதுபோலவே ஜனனியின் காதல் முறிந்துவிடுகிறது.

அந்தப் பாகிஸ்தான் முஸ்லிம் இளைஞன் உண்மையிலேயே ஜனனியை ஏமாற்றினானா, சாமியார் சொன்னது போலவேதான் அது நடந்ததா, முடிவில் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்று போகிறது அந்தக் கதை.

நீ இழந்ததை மீட்க வேண்டுமா, உன் கோரிக்கை நிறைவேற வேண்டுமா, கடவுளிடம் முறையிடு, அவர் நிறைவேற்றி வைப்பார் என்று வேற்றுக்கிரகவாசியிடம் அறிவுறுத்துகிறார்கள் பூலோக மனிதர்கள்.

அவனுக்குத்தான் மதமே கிடையாதே, எந்தக் கடவுளிடம் முறையிடுவது.

இந்து, முஸ்லிம், கிறித்தவ, சீக்கிய, சமணம் என எல்லா மதக் கடவுளையும் வேண்டுகிறான். எல்லா மத வழிபாடுகளையும் செய்கிறான்.

தமிழ் ஓவியா said...

வெள்ளிக்கிழமை விரதம் இருக்கச் சொல்கிறது ஒரு மதம்.- செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கச் சொல்கிறது இன்னொரு மதம். பகலிலே உணவருந்தாதே என்கிறது ஒரு மதம், அனைத்தையும் பின்பற்றுகிறான். தன் உடலை வருத்திக்கொண்டு பல மத வழிபாடுகளையும் செய்கிறான். என்ன செய்தாலும் ஒரு பயனும் இல்லை. எந்தக் கடவுளும் வந்து இழந்த பொருளை மீட்டுத் தந்துவிட மாட்டார் என்று பார்வையாளனையே சொல்ல வைத்துவிடுகிறார் படத்தின் இயக்குநர்.

ஒரு மதத்தின் கடவுளை இன்னொரு மதம் ஏற்பதில்லை. ஒரு மதத்தின் வழிபாட்டு முறைக்கும் இன்னொரு மதத்தின் வழிபாட்டு முறைக்கும் சம்பந்தமே இல்லை.

ஒரு மதத்தின் பழக்கவழக்கம் இன்னொரு மதத்தோடு முரண்படுகிறது. ஒரு மதத்தில் வெள்ளை உடை அணிந்த பெண்விதவை. அதை நம்பி, வெள்ளை கவுன் அணிந்த மணப்பெண்ணிடம் போய் விதவையா என்று கேட்டு அடி வாங்குகிறார். அந்த மதத்தில் விதவை என்றால் கருப்பு உடை அணிவது வழக்கமாம்.

சரியென்று, கருப்பு பர்தா அணிந்த மூன்று பெண்களைப் பார்த்து விதவையா எனக் கேட்கப் போய், அந்த மூவருக்கும் கணவனான ஒருவர் இவனை அடிக்கத் துரத்துகிறார். ஒரு மதத்தில் பக்தர்களுக்கு மதுவை (ஒயின்) தீர்த்தமென வழங்குகிறார் பாதிரியார். அதை நம்பி கடவுளுக்குக் காணிக்கையாக மதுபாட்டில்-களோடு தர்காவிற்குச் சென்று அடி வாங்குகிறார். அந்த மதத்தில் மது அருந்துவது பாவச்செயலாம்.

தமிழ் ஓவியா said...

இந்தக் கோவிலில் உள்ள கடவுள் சக்தி வாய்ந்த கடவுள். இந்தக் கடவுளிடம் வேண்டி காணிக்கை செலுத்தினால் உன் வேண்டுதல் நிறைவேறும் என்கிறார்கள். அதை நம்பி, கூட்ட நெரிசலில் சிக்கி, நீண்ட வரிசையில் போய்க் காணிக்கை செலுத்தியும் தன் வேண்டுதல் நிறைவேறாததால், காவல் நிலையத்தில் போய் கடவுள் மீது மோசடி செய்துவிட்டதாகப் புகார் கொடுத்து அங்கும் அடி வாங்குகிறார்.

அவன் கேட்கின்ற கேள்விகளையும் நடந்து கொள்கின்ற முறையையும் பார்த்து அவன் ஏதோ மது போதையில் இருக்கிறான் என்று நினைத்து மக்கள் அவனைப் பிகே என்று அழைக்கிறார்கள். பிகே என்றால் இந்தி பேச்சுவழக்கில் போதை அல்லது போதையில் இருப்பவர் என்று பொருள்.

ஒரு கட்டத்தில், தொலைக்காட்சி ஊடகவியலாளராகப் பணிபுரியும் ஜனனி, பிகேவைச் சந்திக்கிறார். பிகேவைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்கிறார்.

அவர் மட்டுமே பிகே வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர் என்பதை நம்புகிறார்.

அவருக்கு உதவ விரும்புகிறார். பிகே தொலைத்த அந்த அதிசயக் கருவி, ஜனனியின் குடும்பம் பின்பற்றுகிற சாமியாரிடம் இப்போது இருப்பது தெரிய வருகிறது. அது சிவன் தன் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் என்று அந்தச் சாமியார் மக்களை ஏமாற்றி வருகிறார். அந்தச் சாமியாரின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தினால்தான் அதை மீட்க முடியும் என்று ஜனனியும் பிகேவும் உணர்கிறார்கள்.

ஆன்மிக குரு என்ற பெயரில் கடவுளின் ஏஜெண்டுகளாக இருக்கிற சாமியார்களின் மோசடித்தனங்களைத் தன்னுடைய எளிமையான வெகுளித்தனமான கேள்விகளின் மூலம் அம்பலப்படுத்துகிறார்.

ஏற்கெனவே துயரத்தில் இருக்கும் பக்தனை மேலும் துன்பப்படுத்தும் வகையில் ஆயிரம் மைல் கடந்துபோய் இமயமலையில் இருக்கும் கடவுளை வணங்கச் சொல்லும் சாமியார் உண்மையான கடவுளிடம்தான் பேசுகிறாரா.

தமிழ் ஓவியா said...


தன் பக்தனைத் துன்பப்படுத்தும் கடவுள் உண்மையிலேயே கடவுள்தானா என்று பல கேள்விகளைக் கேட்டு சாமியாரைத் திக்குமுக்காடச் செய்கிறார்.

இவன் வேறு மதத்துக்காரன் அதனால்தான் தன் மீது குற்றம் சுமத்துகிறான் என்று சாமியார் சமாளிக்கிறார். குழந்தை பிறக்கும்போது அது எந்த மதம் என்று அதன் உடலில் ஏதாவது லேபிலோடு பிறக்கிறதா, இங்கே யாருடைய உடலிலாவது மதம் என்ன என்று லேபில் ஏதாவது இருக்கிறதா என்பது போன்ற எளிமையான கேள்விகளைப் பிகே கேட்கிறார்.

இவையெல்லாம் தொலைகாட்சியில் ஒளிபரப்-பப்படுகிறது. நாடெங்கும் பல சாமியார்களை அவர்களுடைய பக்தர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

மந்திரத்தால் தங்கச் சங்கிலி வரவழைக்கும் சாமியாரிடம், இதை வைத்தே நீங்கள் உலகத்தின் வறுமையைப் போக்கி-விடலாமே என்று கேட்கிறார் ஒரு பக்தர். பக்தி என்பது பயத்தில் இருந்துதான் பிறக்கிறது என்பதை மிக எளிமையான செயல்முறை விளக்கத்தின் மூலம் புரியவைக்கிறார் இயக்குநர்.

தேர்வுக்காலத்தில் ஒரு கல்லூரியின் வாசலில் ஒரு கல்லை வைத்து, அதற்கு ஒரு குங்குமப் பொட்டும் வைத்து, அதன் முன் சில சில்லறைக் காசுகளைப்போட்டுப் பாருங்கள். சீக்கிரமே, தேர்வு பயத்தில் இருக்கும் மாணவர்களிடையே அந்தக் கல் ஒரு கடவுளாகச் செல்வாக்கு பெறும் என்ற எளிய உண்மையை விளக்குகிறார். மதங்களையும் கடவுள்களையும் கற்பித்தவன் மனிதன். மதம் மனிதர்களைப் பிரிக்கிறது, மனிதர்களுக்குள் பகையை வளர்க்கிறது. மனிதனால் கற்பிக்கப்பட்ட கடவுள் மனிதனைப் போலவே கோபப்படுகிறது, பொருட்களின் மீது ஆசைப்படுகிறது, மனிதன் துன்பப்படுவதைக் கண்டு ரசிக்கிறது, பழிவாங்கிறது.

அப்படிப்-பட்ட மதமும் கடவுளும் மனிதர்களுக்குத் தேவையில்லை என்பதுவே இந்தப் படம் முன்வைக்கும் வலுவான கருத்து. மதமும் கடவுளும் என்னவென்று அறியாத ஒருவனுடைய பார்வையில் இந்தக் கற்பிதங்களின் மீது எழும் கேள்விகள்தான் படத்தின் கதை. அதற்காக வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த மனிதர் என்ற உத்தியை இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு கடினமான கருத்தை, முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியிலேயே கதையை அமைத்துக் கொண்டு செல்வதற்கு இந்த உத்தி உதவியும் இருக்கிறது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும், மதம், கடவுள்,மொழி, தேசம் என்ற எதுவும் அறியாத இந்த வேற்றுக்கிரக மனிதரைப் போலவே நிர்வாணமாய்ப் பிறக்கிறது.

பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களைப் பற்றிக்கொண்டு மறுபிறவி, மறுமை வாழ்வு, சொர்க்கம் போன்ற இல்லாத அடுத்த உலகத்தை அடைவதற்கான சாவியைத் தேடுவதே வாழ்க்கை என வாழ்ந்து முடிக்கிறான். பகுத்தறிவின் அடிப்படையே தர்க்கரீதியான கேள்விகளை எழுப்பி அதற்கு விடைகாணும் முயற்சிதான்.

அந்தக் கேள்விகள் பெரும்பாலும் எளிமையான கேள்விகள்தாம். முன்முடிவு-களைக் களைந்து, மனத்தடைகளைக் கடந்து எழும் கேள்விகள். குழந்தைகள் கேட்குமே அதுபோன்ற வெகுளித்தனமான கேள்விகள்.

அதைத்தான் இந்தத் திரைப்படம் செய்கிறது. பிகே ஒரு முழுநீளப் பகுத்தறிவு திரைப்படம். மதத்திற்கு மாற்றாக மனிதநேயத்தை முன்வைக்கும் திரைப்படம். மதம் ஒரு போதை (பிகே) என்று உணர்த்தும் திரைப்படம்.

தமிழ் ஓவியா said...

யார் இந்த “மண்ணுருண்டை மாளவியா?”


இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடியரசு நாளான ஜனவரி 26இல்தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.

ஆனால் இம்முறை - பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.(அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற _ மனிதநேய அடிப்படையில் _ வாழ்த்துகிறோம் - அவருக்கு வழங்கியது எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).

அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி _ பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் _- வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி).

இன்றைய தலைமுறையினரில் பலருக்கு பண்டித மதன் மோகன் மாளவியா யார் என்றே தெரிந்திருக்காது. தெரிய வாய்ப்பில்லை.

இவரது 152ஆவது பிறந்த நாளையொட்டி இவருக்கு மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசால் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேரன் கூறுகிறார்!
19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவருக்கு 21ஆம் நூற்றாண்டில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

இவர் ஹிந்து மஹாசபா என்ற சனாதன மதத்தைப் பரப்ப, பாதுகாக்கவே ஒரு அமைப்பை 1915இல் நிறுவியவர்.

RSS என்ற அமைப்புக்கு முன்னோடி இந்த ஹிந்து மகாசபை _- அதன் பெயர் பச்சையாக, வெளிப்படையாகத் தெரிவதை மறைத்து, ஏதோ சேவைக்காகவே தோற்றுவிக்கப்பட்ட தேசிய அமைப்பு என்ற ஒரு உருமாற்றத்தை புனே சித்பவன் -பிரிவு பார்ப்பனர் டாக்டர் ஹெட்கேவாரால், ஹிந்து மஹாசபை தோற்றுவிக்கப்-பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு _ 1925இல் ஆர்.எஸ்.எஸ். உண்டாக்கப்பட்டது. அதே நோக்கத்தோடு!

தமிழ் ஓவியா said...

பண்டித மதன்மோகன் மாளவியா என்ற ஹிந்து சனாதனி _- கீழ்க்கண்ட அமைப்பு-களுடன் அதிக தொடர்பு கொண்டவர்.

அ) பிரக்ய ஹிந்து சமாஜ்.

ஆ) பாரத் தர்ம மகாமண்டல்.

இ) சனாதன தர்ம மஹாசபா போன்ற மத அமைப்புகளுடன் இணைந்து, வேத வைதிக சனாதனத்தைப் புகுத்துவதை தமது வாழ்நாள் பணியாகச் செய்தவர்.

இவரது சனாதன உணர்வு எவ்வளவு தீவிரம் என்றால் இவர் லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் (1930) கலந்து கொள்ளச் சென்ற போது, ஓர் சனாதன ஹிந்து - கடல் கடக்கக் கூடாது என்ற வேத அய்தீகத்திற்கு மாற்று கண்டுபிடித்து (!) _- ஒரு பிடிமண்ணை எடுத்து உருண்டையாக்கி, அதை எடுத்துக் கொண்டே சென்று வெளிநாட்டில் தங்கினால், சொந்த மண்ணிலேயே இருப்பதாக அர்த்தம் என்று வியாக்கியானம் கூறிக் கொண்டு, கப்பலில் மண் உருண்டையுடன் சென்றவர். எனவே இவரை அக்காலத்தில் மேடைகளில் பேசும்போது மண்ணுருண்டை மாளவியா என்று அழைப்பது வழக்கம்.

(பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது மாளவியாவைப் பின்பற்றுவதில்லை!)
இந்நாட்டின் பாரத ரத்னமாகிய (?) இவரின் மிகப் பெரிய சாதனை _- காசி ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியது.

பல்கலைக்கழகம் நிறுவியது எல்லோருக்கும் கல்வி தர என்றால், அதற்கு ஏன் ஹிந்து பல்கலைக்கழகம் என்று பெயர் இட வேண்டும்? இதன் விளைவாக அதே உ.பி.யில் அலிகார் என்ற இடத்தில் இஸ்லாமியர்களுக்காகப் பல்கலைக்கழகம் ஒன்றும் ஏற்பட்டது!

நம் மக்களின் ஒருமைப்பாடு பட்டபாடு இது! கல்விகூட மதக் கண்ணோட்டத்துடன் என்பதே இந்த நாட்டின் தனிச் சிறப்பு!

ஹிந்து மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான சனாதன தர்மத்தின் முக்கியக் கூறான வர்ணாஸ்ரம தர்மம் அதாவது ஜாதி அமைப்பு ஒழியக் கூடாது; நிலைத்து நிற்க வேண்டும் என்று 1929 மே முதல் வாரத்தில் சென்னைக்கு வந்தும், அதன்பின் திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளிலும் சென்று தீவிரமான சனாதனக் கருத்துகளைப் பரப்பியவர்.

சென்னையில் 1929 மே முதல் வாரத்தில் வந்து பேசிய பண்டித மதன்மோகன் மாளவியா. ஜாதியை ஒரு போதும் ஒழிக்க முடியாது என்றார்!

1. ஜாதி தர்மம் என்பது ஹிந்து தர்மம் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையிலேயே கூறும் தர்மம்!

2. தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கம், இந்த வேண்டாத வேலையில் -_ ஜாதி ஒழிப்பில் ஈடுபடுகிறது; அதனை முளையிலேயே இங்குள்ளவர்கள் கிள்ளி எறிய வேண்டும்.
(இன்று சுயமரியாதை இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ள 89 ஆண்டு கால இயக்கம் என்பது கல் போன்ற உண்மை).

3. கோவில்களில் எல்லா இடங்களிலும் நுழைய வேண்டும் என்று கூறுவது தவறு, எதனால் பிரச்சினைகளும், போராட்டங்களும் ஏற்படுகின்றன என்றால், யார் யார் (எந்தெந்த ஜாதிக்காரர்) எங்கெங்கே, எதுவரை செல்லலாம் என்று நன்கு விளம்பரப்படுத்தி, அறிவிப்புச் செய்யாததாலேயே ஏற்பட்ட தீய விளைவு அது என்று கூறி, ஜாதிமுறைகளை நியாயப்-படுத்தினார்.

4. குழந்தை மணம் (பால்ய விவாஹம்) தடை பற்றி விவாதம் எழுந்தபோது, குழந்தை மணம் தேவை என்று அழுத்தந் திருத்தமாகக் கூறி வாதாடியவர் பண்டித மதன்மோகன் மாளவியா.

இவரை 1929 மே முதல் வாரம் (8.5.1929) கோட்டயத்தில் நடந்த S.N.D.P. யோகம் என்ற சிறீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையார் நடத்திய மாநாட்டிற்கு அழைத்துப் பேசச் சொன்னபோது, அவர் ஜாதியை ஒழிக்க முடியாது; அது வீண் வேலை, தீண்டாமைக்கு ஹிந்து சாஸ்திரங்களில் இடமில்லை என்று கூறியதோடு, கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்-களையும் தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்ப சுத்தி மூலம் அழைத்து வர வேண்டும்; வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசியபோது அங்கே கூடியிருந்தோர் பொறுமை இழந்து, எதிர்க் கேள்வி கேட்டனர்!

அவர்கள் ஹிந்து மதத்திற்குத் திரும்பினால் எந்த ஜாதியில் அவர்கள் வைக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் கேட்டபோது, மாளவியா பதில் அளிப்பதைத் தவிர்த்தார்! கீதை சொல்லும் குணகர்மப்படி சிறந்தவர்களை உயர் ஜாதியில் வைப்பார்களா என்று கேட்டனர்.

வைதீக சனாதனிகளும் இவரது குறிப்பிட்ட அளவு தீண்டாமை எதிர்ப்புப் பேச்சைக்கூட ஏற்காமல், எதிர்த்தனர்.

தமிழ் ஓவியா said...


சென்னையில் திரும்பி வந்துபேசும் போது, மதராஸ் சாஸ்திரிகள் ஆன பார்ப்பனர்-களிடம் வேதத்தில் தீண்டாமைக்கான சுலோகங்கள் இல்லை என்று கூறி மாளவியா சில சுலோகங்களையும் கூறினார். மதராஸ் சாஸ்திரிகளோ அதை மறுத்து எங்களிடம் ஆதாரம் உண்டு. வேதம் சனாதன மதம் தீண்டாமையைக் கூறியுள்ளது என்று பதில் கூறினர்.

ஆதாரம் காட்ட முடியுமா உங்களால் என்று இந்தப் பார்ப்பனர்களை அவர் கேட்க, அவர்கள் அச்சிட்ட சமஸ்கிருத வேத சாஸ்திர புத்தகங்களைக் கொண்டு வந்து காட்ட, இவர் வேறு வழியின்றி, அடுத்து எப்படியிருந்தாலும் இப்படிப்பட்ட மக்களிடம் பரிதாபம் காட்ட வேண்டாமா? என்று அய்யோபாவம் ஆர்கியுமெண்டைப் பேசி, பின்வாங்கினார்.

5. சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்கு வதற்குப் பதிலாக ஹிந்தியைப் பொது மொழியாக வைக்க வேண்டும் என்று (ஒரு தந்திரமாக) பேசியவர்.

மேற்காட்டிய அத்துணையும் அந்தக் கால 1929 ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளன _- குடிஅரசு -”Revolt’ ஏடுகளில் இவரது பேச்சுகளையும் -_ கருத்துகளையும் மறுத்து பல கட்டுரைகள் வெளிவந்து விளாசித் தள்ளியுள்ளனர் _ ஆதாரப்பூர்வமாக! உ.பி.யைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதியே இன்று அவரது கருத்தாக (இணையத்தில்) வாஜ்பேயிக்கும், மதன்மோகன் மாளவியாவுக்கும் பாரத ரத்னா; விருது அறிவித்தது எவ்வகையிலும் ஏற்கக்கூடியது அல்ல என்று அறிக்கை விடுத்துள்ளார்!
எனவே,

1. இரு விருதுகளும், இரு பார்ப்பனப் பெரு மக்களுக்கு,

2. ஜாதி வர்ண தர்மக் காப்பாளர்களுக்கு,

3. சனாதனப் பாதுகாவலர்களுக்கு,

4. மக்களின் ஒருமைப்பாட்டை உடைத்து - மத அடிப்படையில், ஜாதி அடிப்படையில், அவர்களை வைத்திருப்பது நீடித்து நிலைத்து இருப்பதற்கு.

5. மதமாற்றங்களுக்கு முன்னோடித்தனத்தின் சன்மானம் - இத்தியாதி! இத்தியாதி.

காந்தியைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.-காரரான நாதுராம் கோட்சே என்றால், கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல, அவர் இந்து மஹா சபையைச் சேர்ந்தவர் என்று வெகு சாமர்த்தியமாக பிஜேபிகாரர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் கூறுவதுண்டு.

அப்படியே பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த ஹிந்து மஹா சபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கலாமா? படுகொலைக்குப் பரிசு பாரத ரத்னாவா?

மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசின் ஆறு மாத நிறைவு எத்தனை சாதனைகளைக் குவிக்கிறது - பார்த்தீர்களா? _ புரிந்து கொள்ளுங்கள்!

இளைஞர்களே, இளைய தலைமுறையாக பழைய வரலாற்றுச் சுவடுகளை உற்று நோக்கி உண்மையை உணருங்கள்!

ஏமாந்தவர்களாக இனியும் இரோம் என்று விழிப்புற்று எழுக! எழுகவே!!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

லிங்கா : ஆபாசத்தின் அதிஉச்சம்

- ஜெகதீசன்


கல்லணையை கரிகால் சோழன் கட்டவில்லை; மாறாக அவன் எதிரி மன்னன் எவனோ ஒருவன் கட்டினான் என்றொரு திரைப்படம் தமிழில் வந்தால் அதை எத்தனை தமிழர்கள் சகித்துக்கொள்வார்கள்? கற்பனைத் திரைப்படம், பொழுதுபோக்குப் படம் என்று எளிதில் அதை நாம் கடந்துபோவோமா? கடக்கத்தான் முடியுமா?அப்படியிருக்கும்போது பென்னிகுவிக் என்கிற பிரிட்டிஷ்காரன், காலனியாதிக்கத்தின் பிரதிநிதியாக, சம்பளத்துக்கு வேலைசெய்யும் பிரிட்டிஷ் அரசின் வேலைக்கார வெள்ளைத்-துரையாக தமிழ்நாட்டுக்கு வந்தவன், வந்த இடத்தில் தான் கண்ட வறுமையைப் போக்க தன்னுடைய பிரிட்டிஷ் எஜமானர்களின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்களுடன் கடுமையாக மல்லுக்கட்டி பல்வேறுவிதமான தடைகளுக்கு மத்தியில் கட்டிய பெரியாறு அணையை, லிங்கேஸ்வரன் என்கிற இந்திய ராஜா (நன்கு கவனிக்கவும் அவன் தமிழ் ராஜாவல்ல, இந்திய ராஜா) தன் சொத்தை விற்றுக் கட்டினான், அதை வெள்ளைக்காரன் தடுத்தான் என்று ஒருவர் திரைப்படம் எடுப்பதும், அதில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிப்பதும், அந்த அசிங்கத்தை ஊரே கூடி சிலாகிப்-பதும் தனிப்பட்ட முறையில் என்னளவில் ஆபாசத்தின் அதிஉச்சம் என்றே படுகிறது.

லிங்கா திரைப்படம் நெடுக வரலாறு வல்லுறவு செய்யப்-பட்டிருக்கிறது. அதுவும் கூட்டாக. லிங்கா திரைப்படம் பார்ப்பது என்பது ஒரு அபலையைத் தேடிப்போய் சிறைப்பிடித்து வந்து நான்கைந்து பேர் கூட்டாக வன்கலவி செய்ததை திரையில் பார்ப்பதைப் போன்றதொரு அருவெறுப்பான அனுபவமாக உணர்ந்தேன்.

அந்த அளவுக்கு இதில் பெரியாறு அணையின் உண்மை வரலாறு வன்கலவி செய்யப்பட்டிருக்கிறது.

ஆபாசம் என்பது ஒருவரின் உடலில் இருக்கும் துணியின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. ஊரறியத் திருமணம் செய்து, உலகறிய குடும்பம் நடத்தி அந்தக் குடும்ப வாழ்வின் பயனாக ஒருவன் பெற்ற பிள்ளையை, அது அவனுக்குப் பிறந்த பிள்ளையே அல்ல, எனக்குப் பிறந்த குழந்தை என்று சம்பந்தமே இல்லாத ஒருவர் சொல்வது எவ்வளவு ஆபாசமானதோ, அதே அளவு ஆபாசமானது பெரியாறு அணை பற்றிய ரஜினியின் லிங்கா திரைப்படம். தயவு செய்து இதை கற்பனைத் திரைப்படம் என்று மட்டும் என்னைக் கடக்கச் சொல்லாதீர்கள். பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்தால் அதை கற்பனைதானே கடக்கலாம் என்பீர்களா?

வரலாற்றை மீளாய்வு செய்வது வேறு. வல்லுறவு செய்வது வேறு. லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வளித்த பெரியாறு அணையின் வரலாறு லிங்கா திரைப்படத்தில் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தான் அதை ஆபாசத்தின் அதி உச்சம் என்கிறேன்.

தமிழ் ஓவியா said...

PK ( (பி.கே) - அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய தரைப்படம

சமீபத்தில் ‘PK’ (Film) என்ற இந்தி திரைபபடம் ஒனறு வெளியாகியுள்ளது. வேற்றுக் கரகத்திலிருந்து பூமிக்கு ஒருவர் வருகிறார். வந்த சிறிது நேரத்திலேயே அவரது ரிமோட் பறி போகிறது. அந்த ரிமோட் இல்லாமல் அவர் வந்து இறங்கிய செயற்கைகோளை திருமப வரவழைக்க முடியாது. அதனால் இப்பூமியில் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தான் கதையின் முழு சாராமசம்.

அபபோது கடவுள், மதம் பற்றிய சந்தேகங்களை பி.கே' என அழைக்கப்படும் அமீர்கான் எழுப்புவது, இன்றைய மதவாதிகளை திணறடிப்பது தான் படம் முழுக்க வரும் காட்சிகள்.

முஸ்லீம், இந்து, கிறித்துவர், சீக்கியர் என அவர்களது கலாச்சார ஆடைகளை அணியவைத்து, அவர்கள் ஒவ்வொருவரும் எந்தமதம் என கேள்வி கேட்கிறார். அந்தந்த ஆடைகளுக்குரிய மதத்தை மற்றவர் சொல்ல ஒவ்வொருவருடைய பெயரைக் சொல்ல வைக்கும் போது முஸ்லீம் உடை அணிந்தவர் இந்துப் பெயரையும் மற்றவர்களும் வெவ்வேறு மதம் சார்ந்த பெயர்களைச் சொன்னதும், ''இப்பொழுது சொல்லுங்கள் இவர்கள் எந்த மதம்?'' என்று கேள்வி கேட்டுவிட்டு, மீசை தாடியுடன் உள்ள ஒருவரை முதலில் சீக்கியர் என்றும், அவரது மீசையை மட்டும் எடுதது விட்டு, முஸ்லீம் என்றும், தாடியை எடுத்ததும் அவரை இந்து என்றும் சொல்லி விளக்கும் போது அரங்கமே கையொலயால் அதிர்கறது.

தன்னுடைய ரிமோட்டை கண்டு பிடிக்க ஒவ்வொருவரிடமும் விசாரிக்கும் போது ''கடவுள் தான் கண்டுபிடிக்க வேண்டும்'' என்ற பதில்களே அனை வரிடமிருந்து வந்ததால் கடவுள் எங்கே என்று படம் முழுக்க தேடுகிறார்.

அப்போது வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பலையை வரவழைப்பதோடு சிநதிக்கவும் வைக்கிறது.

''கடவுள் யாரென்று கேட்க'' சிவன் படத்தை ஒருவர் காட்ட அப்போது 'சிவன' வேடமணிந்த ஒரு கலைஞர் வரும்போது அவரைத் துரத்தி துரத்தி ஓடும்போது அரங்கமே சிரிப்பால் நிரம்புகிறது.

நிர்வாணமாக பீ.கே. ஆடை களை கைப்பறறுகிற காட்சிகள் நகைச் சுவை மட்டுமல்ல நாட்டில் நடக்கும் ஆபாசங்களை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

காதல் விசயத்தைக் கையாளும் போதும் கூட கதாநாயகி ஜகத்ஜனனி என்ற இந்து பெண்ணுக்கும், பாகிஸ் தானைச் சேர்ந்த சர்ஃபரோஸ் என்ற இளைஞனுக்குமான காதலைச் சித்தரிப் பதன் மூலம் மத நல்லிணக்கத்தையும் நாடுகளுக்கிடையேயான நல்லிணக்கத் தையும் வலியுறுத்த முயற்சி செய்துள்ள இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி நமது பாராட்டுக்குரியவர்.

கடவுளைக் காட்டுவதாக சவால் விடுத்த பிரபல சாமியாரான தபஸ்வி ஜிக்கும், பி.கே.க்கும் நடக்கும் உரை யாடலை நேரலையாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பும் இறுதிக்காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது., ஆனால் இறுதியில் ''கடவுள் இருக் கிறார். ஆனால் நீங்கள் சொல்லுகின்ற கடவுள் அல்ல அவர்'' என்று சொல்வது இயக்குநர் சமரசத்திற்கு வந்து விடுகிறார் என்ற ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது.

என்ன செய்ய? படம் சிக்கலில்லாமல் வெளியிடப்பட்டு ஓட வேண்டுமே என அவர் நினைத்திருப்பார்.

இப்படத்தில் அமீர்கானின் நடையும் ஓட்டமும் நடிகர் விக்ரமை நினைவுப்படுத்தினாலும் விக்ரம் அளவுக்கு முழுநிறைவு (ஜீமீக்ஷீயீமீநீவீஷீஸீ) இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் மதவாதிகளின் குறிப்பாக சாமியார்களின் பித்தலாட்டங்களையும், மக்களின் அறியாமையையும் தோலுரித்துக் காட்டுவதில் இப்படம் போல் இதுவரை எதுவும் வரவில்லையென்பது மட்டும் உண்மை. பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல மத நம்பிக்கையாளர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

- பொ. நடராசன் நீதிபதி (பணிநிறைவு), மதுரை.

Read more: http://viduthalai.in/page-2/93804.html#ixzz3NfDNNJzr

தமிழ் ஓவியா said...

பெரிய நன்மை

நீதி முறையையும், நீதி இலாகா வையும் திருத்தினால் புற்று நோய்க்கும், சயரோக நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தது போன்ற அவ்வளவு பெரிய நன்மை மனிதச் சமுதாய ஒழுக்கத்திற்கு ஏற்பட்டு விடும்.
(விடுதலை, 17.10.1969)

Read more: http://viduthalai.in/page-2/93795.html#ixzz3NfDf7nWw

தமிழ் ஓவியா said...

பி.கே. திரைப்படத்திற்கு பிகாரிலும் வரி விலக்கு

கடவுளையும், மதத்தையும் கேள்விக்குள்ளாக் கிருக்கின்ற பி.கே. படத்திற்கு உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பிகாரிலும் வரிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது. நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகமாவதைத் தொடர்ந்து படத்திற்கான டிக்கெட் கட்டணம் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பதைக் கட்டுப்படுத்த வரி விலக்கு முடிவை பிகார் அரசு எடுத்துள்ளது. இந்தப் படத்திற்கான வசூல் இதுவரையில் இந்திய திரை உலக வரலாற்றில் இல்லாத அளவில் படம் வெளிவந்த 12 நாட்களுக்குள் 330 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது.

சென்சார் செய்யாமல் 4 படங்கள் தயாரிக்க எனக்கு அனுமதி கொடுங்கள் திராவிட நாட்டை நான் அடைந்து காட்டுகிறேன் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதுபோல் இந்தப் படம் மக்கள் மனதில் கடவுளையும், மதத்தையும் கேள்விக்குள்ளாக்கி சிந்திக்க வைக்கும் என்பதற்கு இந்தப் படத்தின் வசூலே சாட்சியாக உள்ளது என்று திரைப்பட விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/93797.html#ixzz3NfDvU04x

தமிழ் ஓவியா said...

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தில் மூடநம்பிக்கை பற்றிய அறிவியல் பூர்வமான அலசல்


மதுரை, ஜன.2_ 14.12.2014 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடு தலை வாசகர் வட்டத் தின் 24 ஆவது சொற் பொழிவு 144, வடக்கு மாடவீதி (முருகானந்தம் பழக்கடையில் நடை பெற்றது). கூட்டத்திற்கு பொ.நடராசன் தலைமை தாங்கி விடுதலை இம்மாத சிந்தனைபற்றி உரை யாற்றுகையில் பீகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி கூறிய ஆரியர்கள் அன்னியர்களே என்ற கருத்தினை விளக்கிப் பேசினார். செல்லத்துரை வரவேற்புரை கூறினார். பெரியார் பேழை என்ற தலைப்பில் சடகோபன் பேசுகையில், மணியம் மையாரின் தியாகத் தொண்டினை பாரதி தாசன் கவிதை வரிகளில் விளக்கிப் பேசினார். சிறப்பு பேச்சாளரை அறி முகம் செய்து மா.பவுன் ராசா பேசினார். சிறப்புப் பேச்சாளர் பொ.தனராஜ் (தலைமை ஆசிரியர் பணி நிறைவு) பேசுகையில், தலையில் தேங்காய் உடைத்தல் எவ்வாறு மருத்துவ ரீதியாக பாதிப் பினை ஏற்படுத்துகிறது என்பதனை விளக்கினார்.

பாம்புக்கடி, நாய்க்கடி போன்ற விசயங்களில் மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகளை விளக்கிக் கூறி மருத்துவத்தால் எவ் வாறு குணப்படுத்துவது என்பதையும் தெளிவுப் படுத்தினார். காதலர் தினத்தை எதிர்க்கும் இந்துத்துவா வாதிகள் பற்றியும், முரு கன், சிவன், கிருஷ்ணன் இந்திரன் போன்ற கட வுளர்களின் காமலீலை களை நகைச்சுவையோடு எடுத்துக்காட்டி இவை பற்றி இந்துத்துவாவாதிகள் மவுனம் சாதிப்பது ஏன்? என்ற வினாவை எழுப் பினார். கும்பமேளாவில் நிர்வாண சாமியார்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், மும்பை சிவப்பு விளக்கு பகுதியி லிருந்தும், கல்கத்தாவிலி ருந்தும் விலைமாதர் பத் தாயிரம் பேர் காவி உடை யில் வரவழைக்கப்பட்டு சாமியார்களையும், பக்தர் களையும் சந்தோசப்படுத்தி வருவதை எந்த இந்துத்து வாவாதிகள் எதிர்த்தனர் என்ற கேள்வியையும் எழுப்பினார். அவரது பேச்சு சிரிப்பதற்கு மட்டு மின்றி சிந்திப்பதற்கும் ஒரு விருந்தாக அமைந்தது இறுதியில் விடுதலை வாச கர் வட்டச் செயலாளர் அ. முருகானந்தம் நன்றி கூறினார்

Read more: http://viduthalai.in/page-4/93773.html#ixzz3NfEzyo90

தமிழ் ஓவியா said...

சூறையாடப்படும் இயற்கை வளம்


முன்னாள் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மோடி அரசு சமூகத்தை மாத்திர மல்ல சுற்றுப்புறச்சூழலையும் கடுமையாக சீர்குலைக் கும் வகையில் முன்யோசனை ஏதுமில்லாமல் ஆபத் தான திட்டங்களை செய்து வருகிறது என்று கூறி யுள்ளார்.

முன்னாள் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் செய்திதொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், மோடி அரசு தனியார் முதலாளிகளுக்காக சுற்றுப்புறச்சூழல் சட்டத்தில் தேவையற்ற திருத்தங் களைக் கொண்டுவர முயல்கிறது.

வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்த சட்டங்களை திருத்த அமைத்துள்ள டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு பரிந்துரைத்த சட்டதிருத்தம் நடைமுறைப்படுத்தப் பட்டால், கடுமையான பின்விளைவுகளை எதிர்கால இந்தியா சந்திக்க நேரிடும், அக்குழுவால் பரிந்துரைக் கப்பட்ட சட்டத் திருத்தத்தில் பழங்குடியினரின் வாழ்வா தாரம் பற்றி குறிப்பிடப்படவில்லை, வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் பற்றி எந்த ஒரு புதிய சட்டமும் இயற்றப்படவில்லை, வனப்பாதுகாப்பு குறித்து எந்த ஒரு வரிகூட அந்தச் சட்ட திருத்தத்தில் கூறவில்லை. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழுவில் உள்ளவர்கள் முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள். வனப்பாதுகாப்பு குறித்தும் புவியியல் சூழல் குறித்தும் அவர்கள் முற்றிலும் அறியாதவர்களாக உள்ளனர்.

எல்லா சட்டத் திருத்தங்களும் நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு பல்வேறு அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அமைக்கப்படும். எடுத்துக் காட்டாக, போபால் நச்சுக்காற்று விபத்திற்குப் பிறகு நாடு முழுவதுமுள்ள பல்வேறு அறிஞர்களின் ஆலோசனை களைக் கேட்டு எதிர்காலத்தில் இது போன்ற கோரவிபத்துகள் நடக்காவண்ணம் புதிய சட்டங்கள் திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அதுபோல் வனப்பாதுகாப்பிற்கு நாடு முழுவதும் உள்ள வனப்பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைகளைக் கேட்டு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், மோடி அரசு சுற்றுப்புறச்சூழல் சட்டதிருத்தம் குறித்து வனப் பாதுகாப்பு மற்றும் புவியியல் அறிஞர் களிடம் எந்த ஒரு ஆலோசனையையும் பெறவில்லை. விரைவில் இந்தச்சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று உமாபாரதி அவர்கள் கூறியுள்ளார். எந்த விதியின் கீழ் இந்தச் சட்டங்கள் திருத்தப்படும் என்று அரசு தான் பதில் கூறவேண்டும். அப்படி இந்தச் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால், வனப்பாது காப்பு கேள்விக்குறியாகிவிடும். முதலாளிகளின் கண்மூடித்தனமான போக்கால் வனவளம் முழுவதும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் மூலம் எதிர் கால இந்தியா மிகவும் மோசமான சுற்றுப்புறச்சூழல் அபாயத்தைச் சந்திக்கும் என்று ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே உள்நாட்டு முதலாளிகள் கிராம மற்றும் வனப்பகுதி களில் புதிய தொழில் தொடங்க சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டம் பெருந்தடையாக உள்ளதாகவும், அந்தச்சட்டத்தை திருத்துவதன் மூலம் கிராமப்புறங்கள் பொருளாதாரத்தில் சிறந்துவிளங்கும் என்றும் கூறி னார்கள். இதனடிப்படையில் உடனடியாக முன்னாள் தேசியப் பாதுகாப்புச் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் வனப்பாதுகாப்பு குறித்து சம்பந்தமில் லாதவர்களும் முன்னாள் தொழில் துறை அதிகாரி களும் நியமிக்கப்பட்டனர்.

அப்போதே இந்தக் குழு குறித்து பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்தது. இவர்கள் பரிந்துரைத்த சட்ட திருத்தம் அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் முன் வைக் கப்படும் என்று மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது மோடி அரசின் ஒவ்வொரு நகர்வும் கார்ப்பரேட் டுகளின் ஏக போகத்திற்கான நடைப் பாவாடை விரிப்பாக இருக்கிறது.

இதன் விளைவு நாட்டை விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகள் சூறையாடலில்தான் முடியும். இதனைத் தடுத்து நிறுத்தும் சக்தி வெகு மக்களின் கிளர்ச்சியில் தான் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் தேவை விழிப்புணர்வே!

Read more: http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/93796-2015-01-02-10-58-34.html#ixzz3NfGoKy4C

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை!


கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணி போன்றது.
- தந்தை பெரியார்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.
- பெர்னாட்சா

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை
- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை.
- குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்கு கேவலம் ஒரு புழுவை படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.
- ஒரு மேநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே
- வால்விச்மன்

Read more: http://viduthalai.in/e-paper/93827.html#ixzz3Nfk7t3NI

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி...

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம். தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.

அந்தப் பாடல்:

ஆரியம் நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93827.html#ixzz3NfkhuTwQ

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார் பற்றி அண்ணா!


முதலில்லா வியாபாரம்! சோகமில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்கு குறை கிடையாது!

அரசு உரிமையை, அந்தப்புரத்தை அழகு மனைவியை, கொஞ்சும் குழவியை துறந்தார் புத்தர். அவர் துறவி இவர் (சங்கராச்சாரி) மடம். மட ஊழியர், மதியிழந்தோர் தரும்தனம் அத்தனத்தால் பெறு இன்பம் இவற்றிலே நீந்துகிறார். இவர் உபதேசிக்கவும் முன் வருகிறார். ஊராரும் கேட்கின்றனர்.

அதில் எந்த இடத்தில் தமிழகத்தில் அரசு போகத்தைத் துறந்த இளங்கோவடிகள் என்ன காதலையும் கரு தனத்தையும் துறந்த மேகலையென்ன மற்றும் வதிந்த இங்கு துறவிக்கோலமும் துரைமார் வாழ்வுக்கு மேற்பட்டதான வாழ்வும் பெற்றுள்ள ஆரியத் தலைவர் உபதேசம் சொல்கிறார்.

சங்கராச்சாரியார், சாற்றியபடி தாம் நடக்க முன்வர வேண்டும். உழைத்து வாழ ஊராரின் உபதேசகராக இராமல் பாடுபட முன்வர வேண்டும். மடத்தை விட வேண்டும். மாநிதி துறக்க வேண்டும். இதந்தேடல் கூடாது. இனத்தாரை வாழ வைக்கும் இயல்பினை நீக்க வேண்டும். மனிதராக வேண்டும். மனது மறுபிறவி எடுக்க வேண்டும்.

இவை அத்தனையும் அறிஞர் அண்ணா அவர்களால் திரு.மணியன் அய்யர் குறிப்பிடும் முதலமைச்சர் புகழும் காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றி படம் பிடிக்கப்பட்ட கருத்து சித்திரம்.

(ஆதாரம்: திராவிட நாடு - 19.4.42

Read more: http://viduthalai.in/e-paper/93828.html#ixzz3Nfku3ffn

தமிழ் ஓவியா said...

ருசியக் கதை!

முஷ்பிகி என்பவர் ஒரு மன்னரிடம் விகடகவியாக இருந்தார். அவரது விகடத்தைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னர். அவரை எப்படியாவது ஒழித்துக் கட்ட விரும்பினார்.

குளிர்காலம் வந்தது. அப்பொழுது ஆடைகள், காலணிகள் ஏதும் இன்றி முஷ்பிகியை பொக்காரோவில் உள்ள ஒரு கோபுரத்தில் இரவு முழுவதும் பூட்டி வைக்கும் படி மன்னர் உத்தரவிட்டார். இரவு முழுவதும் அங்கு கிடந்து பனியால் முஷ்பிகி இறந்து போவார் என்று மன்னர் நினைத்தார்.

ஆனால் கவிஞர் இறந்து விடவில்லை. அவர் இரவு முழுவதும் ஒரு கனமான கல்லைத் தூக்கிக் கொண்டு அந்தக் கோபுரத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். இதனால் அவர் உடலில் உஷ்ணம் இருந்து கொண்டே இருந்தது. காலையில் கவிஞர் உயிருடன் இருப்பதைக் கேட்டு மிகவும் வியப்படைந்த மன்னர், கவிஞரிடம் கேட்டார்:

முஸ்பிகி, இரவு முழுவதும் உமக்கு எப்படி குளிராமல் இருந்தது?

இரண்டு அல்லது மூன்று பர்லாங்குகளுக்கு அப்பால் இருந்த ஒரு சிறிய தீச்சுடர் தான் எனக்கு உஷ்ணம் தந்தது. நான் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தேன் என்றார் கவிஞர்.

ஓகோ அப்படியா! எனவே அந்த உஷ்ணத்தினால் உமக்கு வெது வெதுப்பாக இருந்தது போலும்! என்றார் மன்னர். பகுத்து அறிந்தால் எந்தவித சூழ்ச்சியையும் வெல்லலாம் என்பதற்கு அந்தக் கவிஞரின் புத்திக் கூர்மை ஓர் எடுத்துக்காட்டு.

- ரஷ்ய சிறுகதை

Read more: http://viduthalai.in/e-paper/93828.html#ixzz3Nfl5qfVg

தமிழ் ஓவியா said...

காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?

இந்திய யூனியன் மதசார்பற்றது. ஆதலால் கோவில் நடப்பு, செப்ப னிடுதல் ஆகிய காரியங்களுக்கு அரசாங்கப் பணத்தைச் செலவழிக்கக் கூடாது என்று 7.12.1947 ஹரிஜன் இதழில் காந்தியார் எழுதினார்.

இது எழுதிய 53ஆவது நாளில் காந்தியார் பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93828.html#ixzz3NflE8giq

தமிழ் ஓவியா said...

சாத்தாணியின் புரோகிதம்


நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலே தான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.

(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/93829.html#ixzz3NflSoGI2

தமிழ் ஓவியா said...

கடவுள் அப்பீல் தள்ளுபடி

கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன்.

எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/93829.html#ixzz3NflihIoE

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

துர்க்கை அம்மன்

துர்க்கை அம்மனுக்கு உகந்த நாள் செவ் வாய்க்கிழமையாம் அப் படியானால் செவ்வாய்க் கிழமையன்று இந்துக்கள் கல்யாணம் செய்து கொள்ள மறுப்பது ஏன்? தயங்குவது ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/93792.html#ixzz3NfmsgNKU

தமிழ் ஓவியா said...

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் ஒத்திகை


சூரத், ஜன.2_ குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்த, தீவிரவாத தடுப்பு ஒத்திகையின்போது மாநில காவல் துறையினர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து காணொளி ஒன்றை தயாரித்திருந்தனர்.இதற்கு நாடு முழுவதும் தற்போது எதிர்ப்பு வலுத்துவருகிறது.

கடந்த மாதம் நர்மதா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாத ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டது. இதில் நடித்தவர்கள் தொழுகை நடத்துவது போன்றும், இஸ்லாமிய புனித நூலின் வாசகங்களை உச்சரிப்பவர்கள் போன்றும் நடித்தனர். அவர்கள் அனைவரது தலையில் தொழுகையின் போது அணியும் குல்லாய் இருந்தது. இது காவல்துறையின் ஒத்திகை தொடர்பானது; இதில் தவறு ஏதுமில்லை, அப்படி யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குஜராத் முதல்வர் கூறியிருந்தார். இந்த நிலையில் சூரத்தில் நடந்த ஒரு ஒத்திகையிலும் இதே போன்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அனைவரும் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் போன்றும் அவர்கள் அனைவரும் தொழுகை நடத்துவது போன்றும், அதில் சில சிறுவர்கள் இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. குஜராத் காவல் துறையின் இந்த மதவெறி தொடர்பாக நாடுமுழுவதும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93783.html#ixzz3Nfn7cfI2

தமிழ் ஓவியா said...

காஷ்மீர் பண்டிட்டுகள்மீது (பார்ப்பனர்கள்மீது) மோடி அரசின் அக்கறைசிறீநகர், ஜன.2- காஷ்மீர் மாநிலத்தில் தலைநகர் சிறீநகர் அருகில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1000 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை அமைத்து, காஷ்மீர் பண்டிட்டு களுக்கு மத்திய அரசு வழங்க உள்ளது.

காஷ்மீரிலிருந்து வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைத்து பண்டிட்டுகளை அழைத் துக்கொடுத்து, மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புமாறு மத்திய அரசு வலியுறுத்திவருகிறது. மேற்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அகதிகளாக உள்ள 5,764 குடும்பத் தினர் வாக்குரிமை இன்றி உள்ளனர். கடந்த சட்ட மன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் களிலும் அவர்கள் வாக்களிக்கவில்லை. உள்துறையைச் சார்ந்த மூத்த அலுவலர் ஒருவர் கூறும்போது, உள்துறை யின் சார்பில் குடியுரிமை இல்லாமல் உள்ள அகதிகளுக்கு நிரந்தரக் குடி உரிமை வழங்குமாறு மாநில உள்துறைக்கு கடி தம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்மூலம் அடுத்தமுறை மாநிலத் தேர்தலில் அவர்கள் வாக்களிக்கவும், மாநிலத்தில் சொத்து களை வாங்கவும், மாநில அரசுப்பணிகளில் பணி வாய்ப்புகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும்.

ஜம்முவுக்கு அருகில் இரண்டு அறைகளுடன் கூடிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளதானது முதலில் காஷ்மீர் பண் டிட்டுகள் மாநிலத்துக்கு திரும்புவதற்கான ஏற்பா டாகவே இருக்கிறது. கட்டப்பட்டுவரும் அடுக் குமாடிக் குடியிருப்புகள் நல்ல தரத்துடன் ரூபாய் 40 இலட்சம் மதிப்பில் கட்டப்படுகின்றன.

தேசிய கட்டடக் கட்டுமானக் கழகத்தின் (என்பிசிசி) அங்கீகாரத் துடன் வடிவமைக்கப் பட்டு, என்பிசிசிமூலமே கட்டப்படுகின்றன என உள்துறையின் சார்பில் பேசிய அலுவலர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, மாத ஊதியம் ரூபாய் முப்பதாயிரத்திலி ருந்து பத்து இலட்சம் வரையிலும் உள்ள பணி களில் உள்ளவர்கள் விரும் பினால் தாங்களாகவே வீடுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் காஷ் மீர் பண்டிட்டுகள் மறு வாழ்வுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படியே சிறீ நகர் அருகில் உள்ள பகுதியில் ஒரேயடியாக ஆயிரம் குடியிருப்புகள் அமைக் கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சக அலுவலர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93788.html#ixzz3NfnGG0Sa

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தாத்தா பிறந்த நாள்:டிசம்பர் 2

அய்யாவுடன் முதல் சந்திப்பு

பெரியார் தாத்தாவுடன் சிறுவனாக ஆசிரியர் கி.வீரமணி

என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி. என் ஆசிரியர் அவர்கள் அவரிடம் டியுஷன் படித்த எல்லா மாணவர்களுக்கும் தமிழர் இனவுணர்வு, மொழி உணர்வைத் தூண்டி, குடிஅரசு, திராவிட நாடு வார இதழ்களை அவர் வரவழைத்துப் படித்ததோடு எங்களிடமும் தருவார்.

தமிழ்ப் பெயர் பெற்றேன்

மாணவத் தோழர்கள் பலரும் பெயர் மாற்றங்கள் செய்து கொண்டு அப்படியே அழைத்துக் கொண்டோம். அவர் சுப்பிரமணியம், திராவிடமணியானார். நான் சாரங்கபாணி, வீரமணி என்று அழைக்கப் பெற்றேன். அண்ணாவின் திராவிட நாடு ஏட்டில் வந்த கலிங்கராணியில் வீரமணி ஒரு பாத்திரம்! பாலவேலாயுதம் இளவழகன் ஆனார். ஜெய்சந்திரன் வெற்றித்திங்கள் ஆனார்! இப்படிப் பலப்பல! இப்படிக் கொள்கை உணர்வுடன் வளர்ந்த மாணவர்களை எங்கள் ஆசான் திராவிடமணி ஊக்கப்படுத்தினார்.

அரங்கேற்றம்

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏடு தொடங்கி நடத்திய அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள், திராவிட நாடு ஏட்டுக்குக் கழகத் தோழர்கள் நன்கொடை அளிக்க வேண்டுமென ஒரு வேண்டுகோள் கடிதத்தினை எழுதி, அவரே ரூபாய் நூறும், அச்சுயந்திரப் பொருட்களும் நன்கொடை அளித்திருப்பதையும் குறிப்பிட்ட கடிதம் அய்யா அவர்கள் கையெழுத்திலேயே முதற்பக்கத்தில் வெளிவந்தது.

அந்நிலையில் திராவிட நாடு ஏடு சிறப்பாகத் தொடர்ந்து வெளிவர இயக்கத் தோழர்கள் பல ஊர்களில் நிதி திரட்டி, பொதுக்கூட்டம் போட்டு அண்ணாவை அழைத்து நிதியளித்தனர். கடலூரில் இந்த ஏற்பாட்டினை திராவிடமணி முன்னின்று செய்தார். 112 ரூபாய் (நூற்றுப் பன்னிரெண்டு) பணமுடிப்பு (அப்போது அது பெருந்தொகைதான்) திரட்டிப் பொதுக்கூட்டத்தில் தந்தார். கடலூர் (O.T.) செட்டிக் கோவில் மைதானத்தில் 1943-இல் அப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அண்ணாவுக்கு முன் பூவாளூர் பொன்னம்பலனார் பேசினார். அன்று என்னை அந்த மேடையில் உள்ள மேஜையின் மீது ஏற்றி, என் ஆசிரியர் அரங்கேற்றம் செய்தார். பொதுமேடையில் நான் பேசியது. மனப்பாடம் செய்ததுதான் என்றாலும் தட்டுத் தடுமாற்றம் இன்றிப் பேசிக் கைத்தட்டல்கள் பலமுறை வாங்கினேன்.

* * *

அய்யாவைச் சந்தித்தேன்

1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி..

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்டத் திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இளவயதிலேயே என்னைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த என்னுடைய ஆசிரியர் திரு.ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது.

அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம். எப்போது விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது.

பொழுது விடிந்ததும் நண்பர் திரு.ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க என்னை அழைத்துப் போனார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம்.

அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்று அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்துப் பேசிய அண்ணா அவர்கள் என் பேச்சை வைத்தே தொடங்கினார்.

இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார். அய்யா அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி!

மதிய உணவு இடைவேளையில் என்னைப் பார்த்த அய்யா, அன்புடன், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அய்ந்தாம் வகுப்பு என்றேன். நன்றாகப் படி என்று தட்டிக் கொடுத்தார்கள்.

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி எழுதிய
அய்யாவின் அடிச்சுவட்டில் நூலிலிருந்து..

தமிழ் ஓவியா said...

காகத்திற்குத் தனியாகக் காதுகள் கிடையாது. கண்களுக்குப் பின்புறம் உள்ள சிறு துவாரமே கேட்கப் பயன்படுகிறது.

உயரமாகவும் வேகமாகவும் பறந்து செல்வன ஆர்ட்டிக் டர்ன் பறவைகள். ஒரே நேரத்தில் 1 முதல் 3 முட்டைகள் வரை இடும். ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா பகுதிக்குப் பறந்து செல்லும். (19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம்) ஒரே ஆண்டில் 2 கோடை காலத்தைப் பார்க்கின்ற பறவை இது. தன் வாழ்நாளில் பறக்கின்ற தூரத்தை நிலவுக்குச் சென்றுவரும் தூரத்துடன் ஒப்பிடலாம்.

புளோவர் என்ற பறவைக்கு முதலையின் பல் இடுக்குகளில் உள்ள பொருள்கள்தான் மிகவும் பிடிக்குமாம். முதலையின் வாய்க்குள் உட்கார்ந்து கொண்டு அங்குள்ள உணவுத் துணுக்குகளையும் சிறு புழுக்களையும் சாப்பிட்டு முதலையின் பற்களைச் சுத்தப்படுத்துமாம். இந்தப் பறவை சாப்பிடும்போது, முதலையானது சுகமாக வாயைத் திறந்து காட்டிக் கொண்டிருக்குமாம்.

வாழும் பறவை இனங்களில் மிகப் பெரியது நெருப்புக்கோழி. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடியது. இதன் முட்டையானது 1 கிலோ 350 கிராம் இருக்கும். நீர் அருந்தாமல் பல நாள்கள் வாழும். எதிரிகள் தாக்க வந்தால் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளும்.

நியூசிலாந்து நாட்டில் உள்ள கக்காபோ கிளிகளுக்குப் பறக்கத் தெரியாது.

மனிதர்களைப் போல் சிரிக்கக் கூடிய பறவை கூக்குபரா.

தையல் சிட்டு என்ற பறவை பெரிய இலை அல்லது இரண்டு மூன்று சிறிய இலைகளை எடுத்துக் கொள்ளும். இலையைச் சுருட்டி இரண்டு பக்கங்களிலும் துளையிட்டு நாரால் கூட்டினைக் கட்டிவிடும். பின்னர் அதில் நார், பஞ்சு போன்றவற்றை நிரப்பி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்.

எகிப்திய கழுகுக்கு மிகவும் பிடித்தமான உணவு நெருப்புக் கோழியின் முட்டைகள் ஆகும். கடினமான ஓட்டையுடைய முட்டையை அலகால் கொத்தி உடைக்க முடியாது என்பதால் பெரிய பெரிய கற்களை முட்டைமீது தூக்கிப் போட்டு உடைத்துச் சாப்பிடும்.

புளோவரைத் தவிர பிற பறவைகளை இரையாகச் சாப்பிட நினைக்கும் முதலை, தன்மீது குச்சிகளைப் பரப்பியபடி, அமைதியாக நீரில் காத்திருக்கும். கூடுகட்ட குச்சிகளைக் தேடிவரும் பறவைகள் குச்சிகளை எடுக்க அருகில் வந்ததும் பிடித்துச் சாப்பிட்டு-விடும்.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலேயர்கள் வியந்த ஆங்கிலப் புலமை


சட்ட மேதை என அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் ஆங்கில மொழியில் அதீதப் புலமை பெற்றிருந்தார். கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், உடன் பயின்ற உயர் ஜாதி மாணவர்கள் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட - புறந்தள்ளப்பட்ட அம்பேத்கரின் ஆங்கில அறிவு வளர அவரது தந்தை இராம்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்த இராம்சி அம்பேத்கருக்கும் சொல்லிக் கொடுத்து அறிவை வளர்த்தார். தந்தையிடம் பெற்ற பயிற்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் எழுதுவதிலும், மொழிபெயர்ப்பதிலும் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் பேசுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

படிப்பின்மீது மகனுக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்த தந்தை, புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அறிவாற்றலுக்குத் துணை நின்றார். தன் பெண்களிடம் கடன் வாங்கியோ அல்லது அவர்களது நகைகளை அடமானம் வைத்தோ புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். தான் படிப்பதற்குத் தந்தை செய்த தியாகங்களைப் பார்த்த அம்பேத்கர் தந்தையின் நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நூலறிவினை வளர்த்தார்.

* * *

பின்னாளில் மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியவர்களுள் பரோடா அரசின் மன்னரும் ஒருவர் ஆவார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். எனவே, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர் யாராவது கல்லூரியில் படிக்க முன்வந்தால் பொருளுதவி செய்வதாக கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

இதனைக் கேட்ட அம்பேத்கரின் நண்பர் கிருட்டினாசி பரோடா மன்னருக்கு அவர் பேசியதை நினைவுப்படுத்தி ஒரு கடிதம் எழுதினார். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த அம்பேத்கர், பரோடா மன்னரின் உதவியைப் பெற முழுவதும் தகுதி வாய்ந்தவர் என்பதையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைப் படித்த மன்னர் அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்தார். மன்னர் கேட்ட கேள்விகளுக்குச் சிறந்த முறையில் பதில் அளித்தார் அம்பேத்கர். மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்து ரூபாய் உதவித்தொகை வழங்கும்படி ஆணையிட்டார். அம்பேத்கர் படித்துத் தேர்ச்சி பெற்றார்.

1930ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு அம்பேத்கருக்குக் கிடைத்தது. அம்பேத்கரின் ஆங்கிலப் புலமை அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த பிரிட்டானியப் பேரரசின் தலைமையமைச்சர் இராம்சே மாக்டொனால்டு அம்பேத்கரைப் பாராட்டியுள்ளார். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளிலேயே அம்பேத்கருடைய பேச்சு மிகவும் அருமையானது என்று இண்டியன் டெய்லி மெயில் என்ற நாளிதழ் பாராட்டியுள்ளது.

புரவலர் வியந்த புலமை!

முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் அம்பேத்கரின் படிப்புக்கு உதவி செய்த பரோடா மன்னர் சாயாசிராவும் ஒருவர். அம்பேத்கரின் பேச்சைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார். தம்முடைய உதவியால் படித்தவர் தலைசிறந்த பேச்சாளராக இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைந்தார். தகுதி வாய்ந்த ஒருவருக்குத் தாம் உதவி செய்ததை நினைத்துப் பெருமை அடைந்ததுடன், அம்பேத்கருக்கு விருந்து வைத்துப் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...

ஆரோக்கிய உணவு


மாதுளம் பழம்

இமயமலை மற்றும் எகிப்து இடையேயான பிராந்தியப் பகுதியே மாதுளம் பழத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்தியா, பெர்சியா, மெசபடோமியா, துருக்கி மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் பண்டைக் காலத்திலிருந்து பயிரிடப்பட்டுள்ளது.

பண்டைய பாபிலோனிய நூல்கள் மற்றும் யாத்திராகமப் புத்தகத்தில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கலிபோர்னியாவின் ஸ்பானிஷ் குடியேற்ற மக்களால் 1769ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் புனிகா க்ரேனடம் (Punica Granatum) என்பதாகும். Plantae வகையினுள் Lythraceae குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.

மாதுளை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளில் கிடைக்கிறது. இனிப்புச் சுவையினையுடைய மாதுளை இதயத்திற்கும் மூளைக்கும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இருமலைக் குணப்படுத்தும். புளிப்புச் சுவையினையுடையது வயிற்றுக் கடுப்பினை நீக்கும்.

100 கிராம் மாதுளையில், 83 கலோரி ஆற்றலும், 18.7 கிராம் கார்போஹைட்ரேட்டும், 13.67 கிராம் சர்க்கரையும், 4 கிராம் நார்ச்சத்தும், 1.17 கிராம் கொழுப்பும், 1.67 கிராம் புரோட்டினும் உள்ளன. மேலும் வைட்டமின் B1, B2, B3, B5, B6, B9, கொலைன், வைட்டமின் சி, ஈ, கே, கால்சியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றன சிறிதளவும் அடங்கி உள்ளன.

உடலுக்குத் தீமை தரும் வைரஸ் கிருமிகளை அழித்துவிடும் ஆற்றல் மாதுளைக்கு உள்ளது. நோயின் பாதிப்பில் உடல் நலிந்து சோர்வடைந்தவர் தினமும் சாப்பிட வலிமை பெறலாம். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கும் அதிக வலிமை தரவல்லது.

மாதுளம் பழச் சாற்றினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் கட்டுப்படும், இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது என இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆன்டிஆக்சிடன் அதிகம் உள்ளது. இது அடர்த்தி குறைந்த லிப்போப்ரொட்டீன் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பினை தமனிகளின் சுவர்களில் படிவதைத் தடுக்கிறது.

அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிடு-பவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக் குறைவு என அமெரிக்கப் புற்று நோய் ஆராய்ச்சி சங்கத்தின் கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

தகவல் களஞ்சியம்

தையல் எந்திரத்தைக் கண்டறிந் தவர் மெட்ரிக்சிங்கர் இவர் இதைக் கண்டறிந்த விதம் மிக சுவாரசியமானது. தையல் எந்திரத்தின் எல்லாப் பாகங் களையும் கண்டறிந்த சிங்கர், ஊசியை மட்டும் அதில் எவ்வாறு பொருத்துவது என்று ரொம்பவே யோசித்தாராம். பின்னர் படுக்கைக்கு சென்றதும் ஒரு கனவு கண்டார். காட்டுவாசிகள் கூட்டம் கையில் கூர்மையான ஈட்டிகளுடன் அவரைச்சுற்றி நின்று நடனம் ஆடு கிறது. அந்த ஈட்டிகளின் முனைகளில் துளைகள் இருந்ததை பார்த்துவிட்டார். உடனே சிங்கருக்கு பொறி தட்டியது. அதன் மூலம் தையல் எந்திரத்தில் ஊசியை பொருத்தி தீர்வு கண்டார்

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் டி.வி. அல்லது கணினித் திரையைப் பார்த்துக் கொண் டிருப்பவர்களுக்கு இதயநோய் ரிஸ்க் இரண்டு மடங்கு அதிகம்.

யானைகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தூங்குகின்றன. யானை ஒரே இடத்தில் தொடர்ந்து 8 மணி நேரம்கூட நிற்கும்.

(நூல்: அறிவியல் செய்திகள் களஞ்சியம்)

Read more: http://viduthalai.in/page7/93848.html#ixzz3NlS5Vutd

தமிழ் ஓவியா said...

ஆத்மா மற்றொரு மோசடி

தந்தை பெரியார் அவர்கள் கடவுளை கண்டு பிடித்தவனை மன்னிக்கலாம். ஆத்மாவைக் கண்டு பிடித்தவனை மன்னிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஆத்மா என்பதற்கு என்ன விளக்கம் சொன்னார்கள்? அது கண்ணுக்குத் தெரியாது. கூடுவிட்டு கூடு பாயும், என்று இதை நம்முடைய தமிழ்ப் புலவர்கள் என்ன செய்தார்கள்? ஆத்மாவை ஆன்மாவாக ஆக்கி ஆன்மாவை ஆன்மீகமாக்கி அதற்கப்புறம் ஆன்மீகத்தை ஆன்மீக சொற்பொழிவுகளாக ஆக்கி வைத்துவிட்டார்கள்.

இங்கே அறிஞர்கள் இருக்கின்றீர்கள். இனிமேல் சாதி என்றுகூட எழுதக் கூடாது. நம்முடைய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டது என்பதைக் காட்டுவதற்கு ஜாதி என்றே எழுத வேண்டும். இதை என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சொல்கின்றேன் (கைதட்டல்)

நமது சரக்கு வேறு. அவர்களுடைய சரக்கு வேறு என்று தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பாலையும் நீரையும் பிரிக்க முடியாது. பாலோடு மண்ணெண்ணெயை ஊற்றினால் பளிச்சென்று தெரியும். இது வேறு, அது வேறு என்று. அது மாதிரி ஆரியம் வேறு, தமிழ் வேறு. ஒரு காலத்தில் தூக்கி எறியப்பட்ட கருத்துக்கள் ஆட்டம் போடுகின்றன. உலகத்தில் உள்ள கழிவுப் பொருள்களை எல்லாம் நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். ஆத்மா கூடு விட்டு கூடு பாய்கிறது என்று சொல் கின்றார்கள். ஆத்மா ரொட்டேசன் ஆகிறது.

தந்தை பெரியார் ஒரு முறை பளிச் சென்று கேட்டார். பெரிய ஆராய்ச்சிக் கெல்லாம் போகவில்லை. குப்பனுக்கும், சுப்பனுக்கும் விளங்க வேண்டும் என்ப தற்காகச் சொன்னார்.

இங்கிருந்து ஆத்மா கிளம்பி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்தால் உலகம் தோன்றிய பொழுது எவ்வளவு மக்கட் தொகை இருந்ததோ அவ்வளவு தானே இன்றைக்கும் இருக்க வேண்டும். இன்றைக்கு எப்படி இவ்வளவு ஜனத் தொகை வளர்ந்தது. ஆத்மா என்ன கட்டிப்போட்டால் குட்டி போடுகின்ற சங்கதியா? என்று கேட்டார். அய்யா, ஆத்மா மறுப்பு வாசகத்தை எவ்வளவு விஞ்ஞான பூர்வமாக சொல்லியிருக் கின்றார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

தந்தை பெரியார் ஒரு விஞ்ஞான ரீதியான சிந்தனையாளர். ஒருவர் இறந்து போகிறார். அவரை கொளுத்துகிறோம் அல்லது எரிக்கிறோம். கீதை கருத்துப்படி ஆத்மா புறப்பட்டு இன்னொரு கூட்டுக் குள் செல்கிறது. அது உடனே குழந் தையாகப் பிறந்து விடுகின்றது.

அடுத்த கேள்வி அய்யா கேட்டார் - அப்படியானால் நரகத்தில் ஆட்கள் எப்படி இருக்கிறார்கள்?

(நூல்: பகவத்கீதை இதுதான் - கி.வீரமணி)

- தகவல்: க.பழநிசாமி (தெ.புதுப்பட்டி)

Read more: http://viduthalai.in/page7/93851.html#ixzz3NlSYLtK6

தமிழ் ஓவியா said...

மோசமான 2014


2014 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 87 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். என சிபிஜே (பத்திரியாளர்களுக்கான் பாதுகாப்பு ஆணையகம்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் பத்திரிகைத் துறையைச்சார்ந்தவர்கள் தினசரி ஏதாவது ஒரு நெருக்கடிக்கு ஆளாகிக் கொண்டுள்ளனர். முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் உள்ள பத்திரிகை யாளர்கள், மற்றும் மத்திய ஆசிய நாடு களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் கடுமையான நெருக்கடியின் கீழ் பணியாற்றிவருகின்றனர். தென் அமெரிக்காவில் அர்ஜண் டைனா, பெரு போன்ற நாடுகளில் இந்த ஆண்டு 17 பத்திரிகையாளர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும், ஊழல் அரசியல்வாதிகளால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதி களால் தலைவெட்டிக் கொலை செய்யப்பட்ட 8 பத்திரிகையாளர்களும் அடங்குவர். ஆப்கானில் அஞ்ச நிட் ரிங்கஸ் என்ற பத்திரிகையாளர் சித்திர வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உலகை உலுக்கிய சம்பவமாகும்.2011-ஆம் ஆண்டு 79 பத்திரிகையாளர்கள் கொல் லப்பட்டனர். இதனை அடுத்து இந்த ஆண்டு அதிக அளவில் கொல்லப்பட் டுள்ளனர். இந்தியா, சிறீலங்கா, பாகிஸ்தான், மற்றும் நேபாள் போன்ற் நாடுகளில் பத்திரிகையாளர்கள் கடும் நெருக்கடிகளுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். இங்கு பத்திரிகையாளர் களுக்கு எதிராக நடக்கும் படுகொலைகள் திசை திருப்பப்பட்டுவிடுகின்றன. உக்ரைன் மற்றும் வடக்கு ஆப்ரிகக நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதலின் போது அசோஸியேசன் பிரஸ் நிறு வனத்தில் பத்திரிகையாளர்கள் சிமோன் கமிலி மற்றும் மொழிபெயர்ப்பாளர் அபு அஃபாஸ் இருவரையும் குறிவைத்து இஸ்ரேல் துருப்புகள் தாக்குதல் நடத்தியது.

எபோலா நோயின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எபோலா நோய் பற்றிய செய்தியை மக்களிடையே எடுத்துச்சென்ற மகத்தான பணியைச்செய்துள்ளனர். முக் கியமாக் உலகில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்கள் பற்றிய முழுமையான தகவல் வெளி வரவில்லை, அல்லது அந்த அரசுகளால் அச்செய்தி மறைக்கப்படுகிறது. பத்திரி கையாளர்களின் மரணம் என்பது மக்கள் உரிமைகளின் மரணம் என்று நியூயார்க் நகரில் உள்ள தலைமையகத்தில் இருந்து சி.பி.ஜெ அமைப்பு வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page7/93852.html#ixzz3NlSh9NSH

தமிழ் ஓவியா said...

ஆண்டாள் என்று ஒருவர் இருந்தாரா? இதோ ஆச்சாரியார் பதில்


மார்கழி மாதம் - போட்டிப் போட்டுக் கொண்டு சில நாளேடுகள் நாள்தோறும் ஆண்டாள் பாடியதாக திருப்பாவையிலிருந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றன. உண்மையிலே ஆண்டாள் என்ற பக்தை இருந்தாளா? இல்லை என்று மறுப்பவர் யார் தெரியுமா? வைணவப் பக்தரான சாட்சாத் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தான் அப்படி சொல்லுகிறார் இதோ அவர்.

ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி என்னும் ஆங்கில மாதப் பத்திரிகையில் (1946 செப்டம்பர் இதழில்) எழுதினாரே! இதற்கு என்ன பதில்?

Read more: http://viduthalai.in/e-paper/93857.html#ixzz3NlUSl5Wr

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வைகுண்ட ஏகாதசி

விரதங்களில் சிறந்தது வைகுண்ட ஏகாதசியாம்; இந்த விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய் யும் பலனைத் தருமாம். அஸ்வமேத யாகம் என் றால் என்ன? குதிரைகளை நெருப்பில் போட்டுப் பொசுக்குவது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/93859.html#ixzz3NlUcj3t0

தமிழ் ஓவியா said...

காலத்துக்கேற்ற...


காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனா வான். - (குடிஅரசு,26.1.1936)

Read more: http://viduthalai.in/page-2/93860.html#ixzz3NlUxNMG7

தமிழ் ஓவியா said...

மலேயா தமிழர்கள்


மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17 - 01 - 1932ல் அகில மலேயா தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண் டாற்றிவரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். அய்யாறு, தாமோதரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலான வர்கள் அம்மகாநாட்டில் அதிகமானப் பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள்.

அந்த மகா நாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக் கின்றன.

அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங்களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் அகில மலேயா தமிழர் மகாநாடு என்பதை அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு என்று மாற்ற வேண்டும் என்பதும் முக்கியமான தீர்மானங்களாகும்.

இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங்களைச் சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறையில் செய்ய வேண்டு மென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இத்தீர்மானங்களை யெல்லாம் நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர்களும் சீர்திருத்த ஆர்வமுடைய தோழர்களும் இவைகளை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார்களென்று நம்புகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 07.02.1932

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNQerAz

தமிழ் ஓவியா said...

உள்ளத் தூய்மை கொண்டோர் முகத்திலே கொடுமை சாயல் கொண்டி ராது. நல்ல பழக்க வழக்க முறைகள் கொண்ட நாட்டில் நல்ல நிலைமை யும், கெட்ட பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் கேடுகளும் நிலவும், அவரவர்களின் செய் கைகளுக் கேற்ப முகமும் உடலும் தோற்றமும் ஏற் படுகின்றன; அதற்கேற்றபடி பலனும் அடைகின்றனர்.
மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவன் அல்ல. மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவன் ஆவான். இம்சை செய் யாமல் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழத்தகும் அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால், அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி மனிதத் தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறிவிட்டது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNayHIb

தமிழ் ஓவியா said...

பூனைக்கும்? பாலுக்கும்?


இந்திய சட்டசபையில் மேன்மை தங்கிய வைசிராய் என்ன பிரசங்கம் செய்யப்போகிறார் என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் அனேகர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பிரசங்கமும் சென்ற 25 - 01 - 1932 தேதியில் வெளிவந்து விட்டது. அதில் குறிப்பிடத்தகுந்தபடி விஷயம் தற்கால சட்டமறுப்பைப் பற்றி ராஜப்பிரதிநிதி அவர்கள் சொல்லியிருக்கும் விஷயமேயாகும்.

மேன்மைதங்கிய ராஜபிரதிநிதியவர்கள் சண்டைக்கு இழுக்கப் பட்டால் எந்த அரசாங்கம் பின்வாங்கி நிற்கும்? என்று கேட்கும் கேள்வியும், சட்டமறுப்புக்கு விரோதமாக இப்பொழுது அமலில் உள்ள முறைகள் அவசியமாக இருக்கக் கூடிய வரையில் அவைகள் தளர்த்தப்படவே மாட்டா என்று கூறி இருப்பதும் மிகவும் கவனிக்கக் கூடிய விஷயமாகும்.

அதிலும் காங்கிரஸ் காரர்கள்பால் அனுதாபம் காட்டுவதன் மூலம் தேசாபிமானிகள் என்று காங்கிரஸ்காரர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றும், சட்டமறுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலைமையில் இருப்பதன் மூலம் அரசாங்கத்தார்க்கும் நல்லபிள்ளைகளாக இருக்க வேண்டுமென்றும் தடுமாறிக் கொண்டிருக்கின்ற கோழைத் தலைவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

அவசரப்பட்டு சட்டமறுப்பைத் தொடங்கியவர்கள் காங்கிரசின் குட்டித் தலைவர்களென்பது நாடறிந்த விஷயமாகும். ஆனால் திரு.காந்திக்கு இராஜப்பிரதிநிதி பேட்டி கொடுத்துப் பேசியிருந்தால் சட்டமறுப்பியக்கம் இவ்வளவு கஷ்டமான நிலைமைக்குப் போயிருக்காதெனவும், ஆகவே ராஜப்பிரதிநிதியவர்கள் திரு. காந்திய வர்களுக்குப் பேட்டியளிக்க மறுத்தது தவறு எனவும் இந்த நடுநிலைமைக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் இவ்வாறு சொல்லுவதிலும் ஒரு சிறிதும் அர்த்தமில்லை என்றுதான் நாம் சொல்லுகிறோம். உண்மையில் திரு. காந்தியவர்கள் சமாதானப் பிரியமுடையவராயிருந்தால் காங்கிரசின் சர்வாதிகாரி யாகிய தன்னுடைய அனுமதியும் இல்லாமல் குட்டித் தலைவர் களால் தொடங்கப்பட்ட சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு ராஜப்பிரதிநிதி அவர்களுடன் சமாதானம் பேச முன்வருவாரானால் அது நியாயமாக இருக்கும்.

அப்பொழுது ராஜப்பிரதிநிதியவர்கள் சமாதானம் பேச மறுத்திருந்தால் காங்கிரஸ் தன்னுடைய கொள்கைப்படி சட்டமறுப்பு ஆரம்பித்திருக்கலாம். அப்பொழுது இந்த நடுநிலைமைவாதிகள் கூறும் ராஜப்பிரதிநிதி காந்திக்குப் பேட்டியளிக்க மறுத்துவிட்டது தவறு என்று சொல்லுதவற்கு அர்த்தமிருக்க முடியும்.

இது நிற்க, சட்டமறுப்பியக்கத்தால் ஒரு காரியமும் நடக்கப் போவதில்லை என்பது நமது நேயர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமே ஒழிய வேறில்லை இதுவரையிலும் நடந்த சட்டமறுப்பினால் நமக்கு கிடைத்த பலன் என்ன என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இது விளங்காமல் போகாது, சட்ட மறுப்பு இல்லாமலிருந்தால், வட்டமேஜை மகாநாட்டுக் கமிட்டிகளின் வேலை இன்னும் திறமையாகவும், தாராளமாகவும், விரைவாகவும், நடந்து முடியக்கூடும்.

இப்பொழுது கொஞ்சம் சீர்பட்டிருக்கின்ற தொழில்களும், வியாபாரங்களும், விளைவுப் பொருள்களின் அக விலைகளும் இன்னும் கொஞ்சம் சீர்படக்கூடும். சட்டமறுப்பு நடை பெறுவதால் இவைகள் பாதகமடையக் கூடுமேயொழிய நமது நாட்டிற்கு வேறு கடுகளவு நன்மை கூட உண்டாகப் போவ தில்லையென்று ஆரம்பமுதல் கூறிவந்ததையே இப்பொழுதும் கூறுகிறோம்.

ஆகையால், சட்டமறுப்பு இயக்கத்தில் சிறிதும் நம்பிக்கையில்லா விட்டாலும் அது நாட்டுக்குத் தீமை விளைவிக்கும் பயனற்ற வழி என்று எண்ணிக் கொண்டிருந்தாலும், பாமர மக்களின் தூற்றுதலுக்கு பயந்து பேசாமலிருக்கும் ராஜீயவாதிகள் தமது கோழைத்தனத்தை விட்டுவிட்டு தைரியமாக சட்டமறுப்பை அடக்குவதற்கு உதவி செய்வதே சிறந்த காரியமாகும்.

சட்டமறுப்பு நின்றால் அவசர சட்டங்களும் நீக்கப்படும் என்னும் கருத்தைத் தெளிவாக இராஜப்பிரதிநிதியவர்கள் தமது பிரசங்கத்தில் கூறி யிருப்பதைக் கவனித்து ஆவன செய்வதே கடமையாகும். பூனைக்குத் தோழன் பாலுக்குக் காவல் என்று சொல்லிக் கொண்டு வாழுகின்ற சமயம் இதுவல்ல என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 31.01.1932

Read more: http://viduthalai.in/e-paper/93894.html#ixzz3NoOBoAlt