Search This Blog

21.1.15

69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து பார்ப்பனர்கள் தீர்மானம்-இது பெரியார் மண் மறந்து விட வேண்டாம்!

69 சதவீதத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டுள்ளது பார்ப்பன சங்க மாநாடு
சட்டப் பாதுகாப்போடு இருப்பது 69 சதவீத இடஒதுக்கீடு!
உச்சநீதிமன்றத்தில் சரியானபடி வழக்கை நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசு

தமிழர் தலைவர்  விடுத்துள்ள முக்கிய அறிக்கை


தமிழ்நாட்டில் உரிய சட்டப் பாதுகாப்போடு நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி தீர்மானம் போட்டிருப் பதைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் நடை முறையில் உள்ள இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய முறையில் வாதாடிப் பாது காக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


திருச்சி சீரங்கத்தில் பாரத் பிராமணர் சங்க மாநாடு சீரங்கம் - சிருங்கேரி திருமண மண்டபத் தில் நேற்று (19.1.2015) நடைபெற்றதில்  முக்கிய தீர்மானம் என்ன தெரியுமா?


1.    உச்சநீதிமன்றத்தில் கூறியபடி, 50 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். உயர் வகுப்பின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்க இடஒதுக்கீடு பிரச் சினைக்கு தீர்வு காண விழிப்புணர்வு நடைப் பயணம் விரைவில் துவங்கப்படும்.


2. சிறீரங்கம் இடைத்  தேர்தலில் அ.பா. பிராமணர் சங்கம் ஆளும் அதிமுக வேட் பாளருக்கு ஆதரவைத் தெரிவித்து, அவரது வெற்றிக்காக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்.


- பார்ப்பனரின் நிலைப்பாடு எவ்வளவு கேலிக்குரியது என்பது இதன் மூலம் புரிய வேண்டிய உண்மையாகும். 


தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீடு (69 சதவீதம்) சட்ட பூர்வமானது; அரசியல் சட்டத்தின் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்பினைப் பெற்றது.  (இந்தியாவிலேயே இந்த வாய்ப்பு தமிழ்நாட்டுச் சமூக நீதி சட்டத்திற்கு மட்டுமே உள்ள சிறப்புத் தகுதியாகும்).


கெடுத்துக் கொண்டவர்கள் பார்ப்பனர்களே!

முதலில் இருந்த இடஒதுக்கீட்டில் (1928 முதல் 1950 வரை அமுலில் இருந்த வகுப்புவாரி உரிமை ஆணைப்படி), 100க்கு 2-3 விழுக்காடு மட்டும் மக்கள் தொகையில் இருந்த பார்ப்பன வகுப்புக்கு அவ்வாணைப்படி ஒதுக்கப்பட்ட இடங்கள் 16 சதவிகித இட ஒதுக்கீடு ஆகும் - அதாவது அவர்களது மக்கள் தொகையைப் போல 5, 6 மடங்கு அதிகம். இருந்தும் - 100க்கு 100 இடங் களையும் முன்புபோல அனுபவிக்கும் வாய்ப்பை நீதிக்கட்சி ஆட்சி  ஆதரவுடன் நிறைவேறிய சட்டம் தடுத்து விட்டதே என்று எரிச்சல் காரண மாக, அரசியல் சட்டம் செய்யும் குழுவில் ஒருவ ரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்ற பார்ப் பனரை வாதாடச் செய்து, சண்பகம் துரையரசன் என்ற பார்ப்பன அம்மையாரை மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாமல், போட்டதாக நீதிமன்றத்தில் (பொய்) சத்திய பிரமாணம் செய்து வழக்குப் போட்டு, அவ்வாணை செல்லாது என்று தீர்ப்பே வந்ததினால்தான் பார்ப்பனர் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்கள்.


மக்கள் தொகை சதவீதத்தைவிட அதிகமாக இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள்


தற்போது, கல்வி, உத்தியோகம் என்று இரு பிரிவுகளின்கீழ் இந்திய அரசியல் அடிப்படை உரிமைக்கான பிரிவுகள் - 15 (4) - 16 (4) ஆகியவை களின்படி, அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்திற்கு மேல் இன்னும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?
4வது பிரிவுப் பணிகள் IV Class என்பதில் வேண்டுமானால் அவர்கள் குறைவாக  அல்லது இல்லாமலேயே இருக்கக் கூடும்; ஏனெனில்  அவை குறைவான ஊதியம் உடைய  பியூன், அட்டெண்டர், கலாசி, காவற்காரர் பணிகளாகும். துப்பரவுத் தொழிலாளர்களில் நம் மக்கள்தானே 100-க்கு 100 சதவிகிதம் மலத்தைத் தலையில் சுமந்து கொள்ளும் பணிகள் மாத்திரம் ஒடுக்கப்பட் டோருக்கு தரப்பட்டுள்ள பதவிகள் போலும்!


மத்திய அரசில் இடஒதுக்கீடு  ஆயிரக்கணக் கான ஆண்டுகளாகவா உள்ளது? இல்லையே!


ஓர் 60 ஆண்டுகாலக் கணக்குகூட சரியாக இருக்காதே!


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (80 விழுக்காடு மக்கள் தொகையில்) 1992 முதல் தானே கிடைத்துள்ளது அதுவும் 27 விழுக்காடு தானே! கால் நூற்றாண்டுகூட ஆக வில்லையே!


பல நூற்றாண்டுகளாக நிலவிய சமூக அநீதிக்குப் பரிகாரம் காணும் முயற்சி என்பது ஒரு கால் நூற்றாண்டுகூட தாண்டாத நிலையில் - இப்படி ஒரு பொய் அழுகை, போலிக் கூப்பாடு, பொருந்தாத மாய்மாலம், பார்ப்பன நயவஞ்சகத்தின் வெளிப்பாடு என்பது அல்லாமல் வேறு என்ன?


போகிற போக்கில் சொல்லப்பட்ட குறிப்பு


ஏதோ உச்சநீதிமன்றத்தில் பாலாஜி என்பவர் வழக்கில் வந்த தீர்ப்பில், போகின்ற போக்கில், பொத்தாம் பொதுவில் (இதற்கு சட்ட மொழியில் - “Obiter Dicta” என்று அழைப்பார்கள்). கூறப்பட்டது தானே!
நீதிபதியால் அத்தீர்ப்பில் கூறப்பட்ட ஒரு குறிப்பே தவிர தீர்ப்பு அல்லவே அல்ல.


ஆனால், பார்ப்பனர்கள், ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் அதை மெய்யாக்கி விடலாம் என்ற நப்பாசையில் தொடர்ந்து இதனை இடைவிடாமல் கூறியே வருகின்றனர்!

ஊடகங்கள் எல்லாம் அவாள் ஆயுதங் களாகவும், அல்லது அவாளின் அடிமைகளாக இருப்பதாலும் புரியாத விஷயத்தை ஏதோ புரிந்து கொண்டது போல சிற்சில நேரங்களில் புலம்புவது வாடிக்கையாகி விட்டது!


ஜஸ்டீஸ் எஸ். இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் ஆணித்தரமான கருத்து


உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அரசியல் சட்டத்தின் விதிகளின்படி இட ஒதுக்கீட்டிற்கு 50 என்ற உச்ச வரம்பு கிடையாது என்பது மட்டுமல்ல; அது கூடவும் கூடாது! காரணம் அந்த கருத்து வழக்கின் தன்மை, நியாயம் மாநிலத்தில் உள்ள மக்கள் நிலவரம் - ஆகியவைகளைப் பொறுத்து ஒவ் வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான அளவும் சமூக நீதியை அளிக்க தேவைப்படும் என்ற கருத்தை,

இந்திரா சஹானி வழக்கு என்று பெயர் பெற்ற மண்டல் கமிஷனை 9 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வில்  தனித்து தீர்ப்பு எழுதிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் எஸ். இரத்தினவேல் பாண்டியன் எழுதிய  தீர்ப்பில் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்ற கருத்து ஏற்புடையது அல்ல என்று தொகுத்தே மிகவும் ஆணித்தரமாக எழுதி வரலாறு படைத்துள்ளார்.

உயர்ஜாதி, பார்ப்பன நீதிபதிகள் பெரும்பான்மை

1. ஜஸ்டீஸ் பாசல் அலி
2. ஜஸ்டீஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர்
3.    ஜஸ்டீஸ் மாத்யூ
4.    ஜஸ்டீஸ் சின்னப்பரெட்டி,
5.    ஜஸ்டீஸ் ஹெக்டே
6.    ஜஸ்டீஸ் தேசாய்
7.    ஜஸ்டீஸ் ஜீவன்ரெட்டி

மேற்காட்டியவர்களில் அத்தனை பேரும் தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ அல்ல என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று.


ஜஸ்டீஸ் ஹெக்டே அவர் எழுதிய ஒரு தீர்ப்பில் தாண்ட வேண்டிய தூரம் எவ்வளவு என்பது இடையே உள்ள இடைவெளியின் ஆழத்தைப் பொறுத்த ஒன்றே தவிர, வேறு எதுவும் சரியான அளவுகோலாக இருக்க முடியாது என்று அழகாகக் கூறினார்.


The extent of reservation    பற்றி அவர்

“The length of the leap to be provided depends upon the gap to be covered of” என்று கூறியுள்ளார்.


தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு


தமிழ்நாடு அரசு - இந்த 69 சதவிகித சட்டத்தை வீழ்த்திட துடிப்போரை இப்படி அடையாளம் கண்டு - உச்சநீதிமன்றத்தின் வழக்கிலும் சரியானபடி நடத்திட வேண்டியது அவசியம்! அவசரம்!!


தமிழ் மக்கள் ஒரு போதும் பார்ப்பனர் ஆசை நிறைவேறிவிட ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள் என்பது உறுதி.


இது பெரியார் மண் மறந்து விட வேண்டாம்!



-----------------------------கி.வீரமணி  தலைவர்,    திராவிடர் கழகம்
சென்னை
20-1-2015

11 comments:

Unknown said...

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Unknown said...

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


நிதி நெருக்கடி என்று கூறி, பல முக்கியத் துறைகளுக்கான நிதியை வெட்டும் மத்திய அரசு, கோயில்களில் குவிந்து கிடக்கும் நிதியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. (மத்திய) அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும் - பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது போன்று - பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது.

மக்களின் சுகாதாரத் திட்டத்திற்காக செலவு செய்வதில் 20 விழுக்காடு வெட்டு!
உயர் கல்வித் துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டு.

வரிமூலம் பறிக்கும் அரசு

பெட்ரோல், டீசல் (ஏழை விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில்) உலகச் சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களைச் சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது!

உரவிலையும் கூடவே விவசாயிகளின் தலையில் விடிகிறது; சந்தைப் பொருளாதாரத்தின் கொள்ளை லாபக் குபேரர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக கட்டுப்பாடுகளை நீக்கி கதவுகள் - திறந்து விடப்படும் கொடுமையும் நாளும் வளர்ந்துவருகிறது!

மக்களைத் துன்புறுத்தும் இந்த மாய வளர்ச்சியின் உண்மைத் தன்மையை வாக்களித்தவர்கள் உணரத் தலைப்பட்டு வருகிறார்கள்!

கோயில்களில் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தலாமே!

நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு, பல லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய கோயில்களான திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், குருவாயூரப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக கடன் பத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு - திருப்பிக் கொடுக்கலாமே!

மக்கள் பணத்தை முழுமையாக மக்கள் நலத்திற்குச் செலவிடுவதில் என்ன தவறு?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டைப் பாரீர்!

எடுத்துக்காட்டாக, கடவுள்களிலேயே அதிக வருவாய் பெறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வருமானம் 2014-2015 பற்றிய ஒரு புள்ளி விவரம் இதோ:

அதன் பட்ஜெட் ரூ.2401 கோடி, ரூ.900 கோடி உண்டியல் மூலம் வசூல்; வங்கியில் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி மூலம் வருவாய் 655 கோடி ரூபாய், பக்தர்களின் மொட்டை - மயிர்மூலம் ரூபாய் 190 கோடி வருவாய், கட்டட வாடகை மூலம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ.108 கோடி - வருவாய்.

செலவு விவரம் பாரீர்!

ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு ரூ.109 கோடி!
மருத்துவமனைகளுக்கு ரூ.55 கோடி
மற்ற பெரும் பகுதி - ஊழியர்கள் சம்பளம்.
இதன் வைப்பு நிதி மூலதனம் 7,000 கோடி ரூபாய்!

இந்து மதப் பிரச்சாரத்துக்கு
ரூ.100 கோடியாம்

மற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரித் துறையினர் தரும காரியங்களுக்கு எவ்வளவு விழுக்காடு செலவு செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும்போது, வெங்கடாஜலபதி கோயிலில் கொழுத்த பார்ப்பனர் சுரண்டல் எப்படி உள்ளது பார்த்தீர்களா? இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடியில் ஹிந்து தர்ம பிரச்சாரமாம்! அதன் விவரத்தை அளிக்கவேண்டாமா?

கிறித்துவர்களின் கல்வித் தொண்டு மருத்துவத் தொண்டுக்கு முன் இது எம்மாத்திரம்? அரசின் மக்கள் நலப் பணிகள் மருத்துவம், கல்வி, முதலியவற்றை இவைகளை ஒருங்கிணைத்தாவது செய்தால் திருப்பதி ஏழுமலையான் கோபித்துக் கொண்டு வெளி நாட்டிற்கா போய் விடுவார்?

மூடபக்தியினால் திருப்பதிக்கு வாரி வழங்கும் பணக்காரர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும்.

பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்

எனவே - மனிதர்களை வாழ விடுங்கள்.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திட அரசுகள் வழி காணட்டும்!

பெரியார் கூறிய மூன்று வகை முதலாளிகளில்

1) உயிருடன் மூலதனம் போடும் முதலாளிகள்

2) கடவுள் (கல்) முதலாளிகள்

3) பிறவி முதலாளிகளான பார்ப்பனர்

இந்த முதலாளித்துவத்தை எதிர்த்து ஒழித்தால் ஒழிய சமதர்மம் வருமா? சிந்தியுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21.1.2015

தமிழ் ஓவியா said...

ஜாதி-மத வெறிகளை எதிர்த்தும்,
மனிதநேயம், சமூகநீதியை வலியுறுத்தியும்
2000 வட்டார மாநாடுகள்
திருவாரூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்


திருவாரூர், ஜன.21- ஜாதி, மதவெறி களை எதிர்த்தும், மனிதநேயம், சமூக நீதியை வலியுறுத்தியும் 2000 வட்டார மாநாடுகள் தமிழகம் முழுவதும் திரா விடர் கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரு கின்றன என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (21.1.2015) திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: திராவிடர் கழக மாநாட்டின் நோக்கம்...?

தமிழர் தலைவர்: ஜாதி வெறி, மத வெறிகளை எதிர்த்தும், மனித நேயம், சமூகநீதி ஆகியவற்றை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 2000 வட்டார மாநாடுகளை நடத்த திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை (22.1.2015) வரை 14 மாநாடுகள் நடைபெறுகின்றன. மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, அதனுடைய சங் பரி வாரங்களும் புதிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சி செய்கின்றன. அதுகுறித்து மக் களிடத்தில் எச்சரிக்கை உணர்வை ஏற் படுத்துவதும் இம்மாநாட்டின் நோக்க மாகும். புதிய பலம் ஏற்பட்டதுபோல அவர்கள் நினைக்கிறார்கள்.

அது இல்லை என்பதை நாம் காட்டுவோம்

செய்தியாளர்: மேனாள் முதலமைச் சர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சந்திப்பு குறித்து...?

தமிழர் தலைவர்: டில்லியில் சிபிஅய் இயக்குநரை வழக்கு சம்பந்தப் பட்டவர்கள் யார் யார் சந்தித்தார்கள் என்பது பிரச்சினையானது. உச்சநீதிமன் றத்திலும் இது கடுமையாக விமரிசிக்கப் பட்டது. இது மத்திய நிதியமைச்சர் ஜெட்லிக்கு தெரியாததா?

செய்தியாளர்: இலங்கையின் புதிய ஆட்சி குறித்து...?

தமிழர் தலைவர்: ஒரு மாற்றம் தெரி கிறது. 13 ஆவது சட்டத் திருத்தம் நிறை வேற்றப்படும் என்பதும், மாகாணங் களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப் படும் என்கிற மாநில சுயாட்சி அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. இந்த வெள்ளிக்கீற்று கள் அகலமாக வேண்டும். ராஜபக்சே குடும்பம் செய்த அநியாயங்கள், கொடு மைகள்குறித்து விசாரணை ஆரம்ப மாவது வரவேற்கத்தகுந்தது.

செய்தியாளர்: மீத்தேன் திட்டம் வரவேற்கத்தகுந்தது என்று பாஜக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

தமிழர் தலைவர்: மூன்றாண்டு களுக்கு முன்பாகவே மதுக்கூர் திராவிடர் கழக மாநாட்டில் மீத்தேன் குறித்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட் டில் விவசாயிகள் கடுமையாக எதிர்த்துக் கிளம்பியுள்ள இந்த காலகட்டத்தில், ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் இப்படிப் பேசியிருப்பது சரியானதுதானா? நாட்டு மக்கள் இவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்தியாளர்: சிறீரங்கம் இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு?

தமிழர் தலைவர்: சிறீரங்கம் தேர்தல் ஆதரவுகுறித்து விரைவில் அறிக்கை வெளிவரும்.

செய்தியாளர் சந்திப்பின்போது திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் உடனிருந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/94680.html#ixzz3PVinkqc4

தமிழ் ஓவியா said...

கங்கை இந்துக்களின் தனிச் சொத்தா?


கங்கையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து பல கிலோமீட்டர் கரைப்பகுதிகள் பிணநாற்றமெடுத்து அருவருப்பான நிலையில் இருக்கும் பட்சத்தில் கங்கை யில் பிணங்களை வீசுவது குறித்து சாமியார்கள் முடி வெடுப்பார்கள் என்று மத்திய நீர்வள மற்றும் கங்கை நீர் சுத்திகரிப்பு துறைக்கான அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

சனிக்கிழமை அன்று அலகாபாத் கங்கைக் கரையில் சாமியார்கள் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டு உமாபாரதி கூறியதாவது, மத்திய அரசு கங்கையில் இந்து மக்கள் கொண்ட கொள்கைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காது, இந்துக்களின் நம்பிக் கையின் அடிப்படையில் தான் மோட்சமடைவதற்காக கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, உலகிலேயே கங்கை நதிமாத்திரம் தான் எலும்புகளைக்கூட மிகவிரைவிலேயே அரித்து தண்ணீரோடு கலந்துவிடும் தன்மை கொண்டது.

இதனடிப்படையில் தான் கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, மலர்கள், உடைகள் கங்கையில் வீசப்படுகின்றன என்றால் அவை நீண்ட நெடிய கங்கை கரையில் உரமாக மாற்றப்படுகின்றன. மேலும் கங்கை நதிக்கரையில் மரங்கள் நடுவது குறித்து சாமியார்களிடம் கேட்டு இருக்கிறோம், இந்துமத சாஸ்திரங்களின் படி கங்கைக் கரையில் மரங்கள் நடுவதா வேண்டாமா என்பதை சாமியார்கள் தான் இறுதிமுடிவெடுப்பார்கள். கங்கை மாசுபடுவது இறந்த உடல்கள் மற்றும் கடவுளுக்கு சாற்றிய மலர்கள் மற்றும் ஆடைகளால் தான் என்று கூறுவது முட்டாள் தனமானது, நவீன காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் கங்கைக் கரையில் அமைந்துவிட்டன. இவற்றிலிருந்து வரும் கழிவுகளால் தான் கங்கை மாசடைந்து வருகிறது.

கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது, ஆனால் அது ஒருபோதும் இந்த நாட்டின் மக்களாகிய இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்காது. கங்கைக்கரை முழுவதும் தடுப்புகள் அமைப்பது குறித்து மத்திய அரசு எந்த ஒரு முடிவை யும் எடுக்காது; அது அந்த அந்த மாநில அரசின் முடிவுகள், மேலும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பது குறித்து எந்த ஒரு மாநில அரசு சாமியார்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இந்துக்களின் நம்பிக்கையில் விளையாடவேண்டாம் என்று கர்ச்சிக் கிறார் அமைச்சர் உமாபாரதி.

கடந்த வாரம் கங்கையில் 200-க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தது குறித்து நேரிடையாக பதிலளிக் காமல் மத நம்பிக்கைகளை நாம் இழிவுபடுத்தக் கூடாது.உடல்கள் இன்றல்ல நேற்றல்ல; தொன்று தொட்டு கங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இது குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை, இருப்பினும் சாமியார்கள் தான் இது குறித்து முடிவு செய்யவேண்டும், மேலும் திருவிழா காலங்களில் சாமி சிலைகள் கங்கையில் வீசுவதற்குப் பதிலாக கங்கைக் கரையில் பெரிய பள்ளங்களைத் தோண்டி அதில் கரைக்க வேண்டும் என்ற தொண்டு அமைப்பின் கோரிக்கைக்கு பதிலளித்த உமா பாரதி கங்கையை ஒரு சிறிய பள்ளத்தில் அடைக்க முடியுமா? என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். என்னே தர்க்கம் இது? சிலைகளை குழிதோண்டி மூடமுடியாதா?

இந்து சாமியார்களைக் கேட்டு முடிவெடுப்பதற்கு கங்கை என்ன இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட சொத்தா? நாட்டின் பொதுச் சொத்து அல்லவா! இந்துக்களைத் தவிர வேற்று மதத்தவர்கள்

கங்கையில் நீராடக் கூடாது என்று கூட சட்டம் செய்வார்கள் போல தோன்றுகிறது.

கங்கை மாசுபடுவதற்கு முக்கிய காரணம் மனித உடல்களையும், கிழட்டு மாடுகளையும் எரியூட்டி எரிக்கப்பட்ட மனித சாம்பலையும், எலும்புகளையும் கங்கையில் வீசுவதுதான் என்பதை மறுக்கிறார் ஒரு மத்திய அமைச்சர் என்றால் மதம் அவர்களின் மதியை எப்படி எல்லாம் பாழ்படுத்தி இருக்கிறது! எதையும் இந்து சாமியார்கள் தான் முடிவு செய்வர்களா? ஆஸ்தான சாமியார்களைக்கூட அதிகாரப் பூர்வமாக அமைத்துக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடு மன்னர்கள் காலத்திற்குச் செல்லுகிறதா? எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

மேலான ஆட்சி



தந்திரத்தாலும், வஞ்சகத்தாலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. _ (குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

திருவரங்கம் விடுதலை வாசகர் வட்டத்தில் நடைபெற்ற இராவண காவியம் விந்த காண்டம் சொற்பொழிவு

திருவரங்கம், ஜன. 21_ விடுதலை வாசகர் வட்டம் திருவரங்கம் சார்பில் 10ஆவது மாதாந்திர கூட்டம் 29.11.2014 அன்று மாலை 6.30 மணிக்கு மு. மீனாட்சி சுந்தரம் (தலை வர் வி.வா.வ.) தலைமை யில் சிறப்பாக நடைபெற் றது. தந்தை பெரியார் சிறப்பைப் பற்றிய கவி தையை டி.செல்வராஜ் படித்தார்.

அனைவரையும் வழக்குரைஞர் சா.ஹரி ஹரன் (செயலாளர் வி. வா.வ) வரவேற்று உரை யாற்றினார் ஆ.பெரிய சாமி, சா.கண்ணன், இரா. மோகன்தாஸ், எம்.நேருஜி (திமுக) ஆகியோர் முன் னிலை வகித்தார்கள். வி. சீனிவாசன் (திமுக) வாழ்த் துரை வழங்கினார்.

பொறியாளர் சி.ரெங்க ராஜூ நிகழ்ச்சியை துவக்கி ஆற்றிய உரையில் தந்தை பெரியாரின் பண்புகள் கொள்கை உறுதி மனித நேயம் அரிய பண்புகளை எடுத்துக் காட்டுடன் விளக்கினார். ஆரியரு டைய நிர்வாகத்தில் இயங் கும் திருச்சி சீதாலெட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரியில் (ஷி.ஸி.சிஷீறீறீமீரீமீ) தந்தை பெரியாரை உரை யாற்ற அழைத்தார்கள்.

தந்தை பெரியார் உரை யாற்றுவதை கேள்விபட் டவுடன் இயக்கத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித் தார்கள். உடனடியாக தந்தை பெரியார் பெண் கள் கல்வி கற்க வேண்டு மென கொள்கையை வலியுறுத்தி 50 ஆண்டு களாக போராடி வருகி றேன் பெண்கள் கல்வி கொள்கை வெற்றி பெற் றது என மகிழ்ச்சி அடைந் தேன் என தக்க பதிலடி தந்தார்.

இராவண காவி யம் 5 காண்டம், 57 பட லம், 3100 செய்யுள் கொண்ட காப்பியம். இராவணகாவி யத்திற்கு 1948 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு தடைவிதித்தது ஆனால் 1971 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அரசு தடையை நீக்கி ஆணை பிறப்பித் தார் என சிறப்பான உரை யாற்றினார்.

பேராசிரியர் இ.சூசை முழக்கம்

ஆசிரியர் புலவர் குழந்தை தன் இராவண காவியம் விந்த காண்டம். ஆரிய படலம் முடிய உள்ள பாடல்கள் மூலம் இரா வணப் பேராசின் எல்லை விந்தியம் முதல் தென்னிந் தியா முழுவதும், இன்றைய ஒரிசா மாநிலம் (பழைய கலிங்கம்) உள்ளிட்டதாக பரவியிருந்தது எனக் கூறுகிறார். விந்த காண் டம் 28 பாடல்களைக் கொண்டும், ஆரியபடலத் தில் ஆரியர்களின் வாழ்வு முறை ஒழுக்கச் சீர்கேடு களை நுட்பமாக ஆய்வு டன் சாடியுள்ளார்கள்.

ஆரியர்கள் தங்கள் மனைவி மக்களுடன் உடலாலும், உள்ளத்தாலும் மகிழ்ந் திருந்தனர். ஆயினும் காட்டில் வசதியுடன் துறவிவேடம் பூண்டு மனித சமுதாயத்தில் உயர்ந்தவனாகவும், கருத வைத்தும் தங்களை வணங்க வைத்தும், தமிழர் களுக்கு சோமபானம் வழங்கி போதையில் மதி யிழந்து, மதிப்பு இழந்து வீழ்த்தினார்கள்.

ஆரியப் படலத்தில் ஆரியர்கள் சூழ்ச்சியில் மூழ்கிய ஆரி யர்கள் என்றே கூறுகிறார். இராவணன் படையுடன் வரும்போது ஆரியர்கள் ஓடி ஒளிந்தனர் எனப்பகர் கின்றார். ஆரியர்களுக்கே தனி மொழியாக சமஸ்கிரு தம் இல்லை. வடிவமில்லை, சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவராக கருதிக்கொண்டு அந்தந்த இடத்திற்கு தக்கவாறு வேடம்பூண்டனர்.

உதார ணம் தமிழ்நாட்டில் அந் தணர், தெலுங்கு நாட்டில் தெலுங்கு பிராமணர் எனவும், ஆரியர்கள் மராத் தியுடன் (சவுராஷ்டிர மொழி) கலந்து சமஸ் கிருதம் எனக்கூறியுள் ளார். இந்த பொய்யுரை களை கூறியதால் இவர் களை உயிருடன் கொளுத்த வேண்டும் என கார்த்தி என்ற ஆய்வாளர் வெகுண்டு உரைக்கின்றார். ஆரியர் களின் வாழ்வு நெறியினை புலவர் குழந்தை சாடி யுள்ளார்.

ஒற்றுமையான சமூகத்தினை குறிப்பாக தமிழர்களை பிரித்தல், இயலவில்லை எனில் தமி ழர்களுடன் கூட்டுசேர்ந்து அடுத்து கெடுத்தல், பொருட்களை கேடு செய் வது, ஆராயாமல் எதனை யும் செய்தல் இவைகளை யெல்லாம் பஞ்சதந்திரம் எனக்கூறி ஏமாற்றுகின் றனர் என்பதை ஆரிய படலத்தில் விரித்துரைக் கப்பட்டிருக்கிறது.

ஆரியர் கள் பொய் புரட்டுகளை, ஒழுக்கச்சீர்கேடுகளை பட்டியலிட்டு விரித்து ரைத்தால் இராவண காவியத்தை தீய இலக் கியம் எனக்கூறி அழித்து விடுவர் என்றே புலவர் குழந்தை அஞ்சினார் அஞ்சியதற்கு காரணம் இராவண காவியம் நின்று நிலைத்து காலத்தால் அழி யாமல் இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் பேரவா எனக்கூறி பேராசிரியர் சூசை நிறைவு செய்தார்.

கூட்டத்திற்கு வருகை தந்தோர் சட்டஎரிப்பு வீரர்முத்துகுமாரசாமி, ப.இராமநாதன், தி.சண் முகநாதன், பி.தேவா, இரா.முருகன், காட்டூர் கனகராசு, க.சுதாகர், கிருஷ்ணகுமார், க.பாஸ் கர், திமுகவை சார்ந்த மு.கருணாநிதி.ராஜேஷ், மூலதோப்புரவி, கே. மாணிக்க, செல்வகுமார், அப்பு.அன்பு கணபதி, சு.பரஸ்கரன் ந.நிஜவீரப்பா மற்றும் ஏராளமான இயக்க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் கள்.
இறுதியாக டி.பி.தியாக ராசன் நன்றி கூற இனிதே முடிவுற்றது.

Read more: http://viduthalai.in/e-paper/94719.html#ixzz3PVkwhEB9

தமிழ் ஓவியா said...

திராவிடர் விழிப்புணர்ச்சி 13ஆம் வட்டார மாநாடு:

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்


நன்னிலம், ஜன.22- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்! என தமிழர் தலைவர் கருத்துரையாற்றினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நேற்று (21.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு 13ஆம் வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய கருத்துரை வருமாறு: வளர்ச்சி வளர்ச்சி என்று போட்ட சத்தத்தில், மயக்க பிஸ்கட்டில் ஏமாந்து இன்றைக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஓர் ஆட்சியை மத்தியில் உட்கார வைத்தார்கள் மக்கள் ஏமாந்தார்கள். ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன வளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தினார்கள்!?

மதவாதத்தைக் கிளப்பி வருகிறார்கள். யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து! மனிதனுக்கு மதம் பிடித்தால் என்னவாகும்? ஒரு கட்சிக்கோ, ஆட்சிக்கோ மதம் பிடித்தால் என்ன ஆகும்? அதுதான் இப்பொழுது நடக்கிறது.

காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள், இப்பொழுது கோட்சேவுக்குச் சிலை வைப்போம் என்கிறார்கள். ஒரு நாடு எப்பொழுது வளர்ச்சி அடையும்? அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இணக்கமாக கைகோர்த்து வாழ்ந்தால் தான் அந்நாடு வளர்ச்சி அடையும்.

ஆட்சியிலே உள்ளவர்களே சிறுபான்மை, பெரும் பான்மை பேசி மக்களை ஒருவரோடு ஒருவர் மோத விட்டால் அந்த நாடு வளர்ச்சி அடையுமா?

குஜராத்தில் என்ன நடந்தது? அது நாடு முழுவதும் நடைபெற வேண்டுமா? நாம் அதைஅனுமதிக்கலாமா? ஏற்கத்தான் முடியுமா?

120 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கிக் கொண்டு தவிக்கிறது. எதை எதையெல்லாம் விற்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள் மத்தியில் உள்ள ஆட்சியாளர்.

இந்த லட்சணத்தில் ஒவ்வொரு வரும் நான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒருவர் கூறுகிறார் - இன்னொரு சங்கராசசாரியாரோ - ஒவ்வொரு வரும் பத்துப் பிள்ளைகளைப் பெற்று தள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள் - மத்தியில் ஆள்பவர்கள். இவற்றை யெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்!

ஒரு பெண் எத்தனை குழந்தையைப் பெற்றுக் கொள் வது என்பதை ஆண்கள் முடிவு செய்யலாமா?

கருவைப் பத்து மாதம் சுமந்து பிரசவிக்கும் பெண்ணுக்கல்லவா அதன் வலியும் சுமையும் தெரியும்.

கேட்டால் கடவுள் கொடுக்கிறான் என்று சமாதானம் சொல்கிறார்கள். அந்தக் கடவுளிடமே சொல்லுங்கள். அவர்தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே! பெண்களின் கருப்பையை ஆண்களுக்கு மாற்றி வைக்கச் சொல்லுங்கள். பத்து மாதம் ஆண்கள் கருவைச் சுமந்து பிரசவிக்கட்டுமே! ஏற்றுக் கொள்வார்களா? (பலத்த சிரிப்பு - கை தட்டு!)

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியில் ஒரு பக்கம் பார்ப்பனர் ஆதிக்கம்; இன்னொரு பக்கத்தில் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் இரண்டும் நாட்டைச் சூறையாடுகின்றன.

அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நிற்பதாக சத்தியம் செய்து கொடுத்துப் பதவி ஏற்கிறார்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார் பின்மைக்கு விரோதமாகப் பேசுகிறார்கள் - நடந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்களை அடையாளம் காணுங்கள் என்று எச்சரிக்கவே திராவிடர் கழகம் நடத்தும் திராவிடர் விழிப்புணர்ச்சி மாநாடுகள்!

வீட்டுக்காரன் தூங்கலாம்; குறட்டை விட்டுக் கூடத் தூங்கலாம்; ஆனால், காவல்காரன் தூங்கலாமா? தூங்கத்தான் முடியுமா?

அந்தக் காவல்காரனாக இருந்துதான் திராவிடர் கழகம் எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற பழமொழிதான் உங்களுக்குத் தெரியுமே! என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/94744.html#ixzz3PYfW3C49

தமிழ் ஓவியா said...

கலவரங்களில் ஆர்.எஸ்.எஸின் பங்கு கிரண்பேடிக்கு திக்விஜய்சிங் கேள்வி


புதுடில்லி, ஜன 22_ ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசியவாத அமைப்பு என டில்லி தேர்தலில் போட் டியிடும் பா.ஜ., முதல்வர் வேட்பாளரும், முன்னாள் அய்.பி.எஸ்., அதிகாரியு மான கிரண்பேடி தெரி வித்திருந்தார். இது தொடர்பாக தனது டுவிட் டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ஆர் .எஸ்.எஸ்., நாட்டை ஒருமைப்படுத்தியதாக கிரண்பேடி கூறி உள் ளார். ஒரு அய்.பி.எஸ்., அதிகாரியாக அவர் மத கலவரங்கள் தொடர்பான சட்ட ஆணைய அறிக்கை களை படித்ததில்லையா? கலவரங்களில் ஆர்.எஸ். எஸ்.,ன் பங்கு என்ன வென்று படித்ததில் லையா? சுதந்திர போராட் டத்தில் ஆர்.எஸ்.எஸ்.,ன் பங்கு என்னவென்று கிரண்பேடியால் சொல்ல முடியுமா? ஆர்.எஸ். எஸ்.அய்., சேர்ந்த 5 சுதந்திர போராட்ட வீரர் களின் பெயர்களை அவ ரால் சொல்ல முடியுமா? கோட்சேவை அவர் தேசபக்தராக கருது கிறாரா? இந்துத்துவா என்பதற்கு என்ன அர்த் தம் என்று அவர் விளக்கு வாரா? கிரண்பேடி அவர்களே..உங்களது சொந்த விருப்பங்களுக்காக வரலாற்றை சிதைக்க வேண்டாம். உங்களது அரசியல் ஆசை என்ன என்பது எனக்கு தெரியும். அதில் தவறேதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மற்றவர்களின் அரசியல் ஆசைகளுக்காக அன்னா ஹசாரேவின் சமூக சேவை கள் பயன்படுத்தப்படுவதற் காக பரிதாபப்படுகிறேன். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94739.html#ixzz3PYffHxGS

தமிழ் ஓவியா said...

நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது.
_ (குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/94737.html#ixzz3PYfyLEc7

தமிழ் ஓவியா said...

பெருமாள் முருகனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழகம் பங்கேற்பு

சென்னை, ஜன.22_ கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நாவலுக்கு எதிராக இந்துத்துவவாதிகளும், ஜாதியவாதிகளும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சினைகளால், எழுத்தாளர் பெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் வாழ முடியாத வண்ணம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இனிமேல் தான் எழுதப் போவதில்லை, தனது எழுத்துகள், புத்தகங்கள் இனி பதிப்பிக்கப்படமாட்டாது என்று அறிவித்ததோடு, எழுத்தாளர் பெருமாள்முருகன் இறந்துவிட்டான்; இனி இருப்பது பேராசிரியர் பெ.முருகன் தான் என்று மிகுந்த மன உளைச்சலோடு முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி ஒரு எழுத்தாளனின் படைப்புக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் பெருமாள் முருகனோடு நிற்கப்போவதில்லை; கருத்துரிமைக்கு எதிரான இந்த பாசிசப் போக்கு இனி எல்லா விதங்களிலும் தொடரக்கூடிய ஆபத்தை எடுத்துச் சொல்லும் விதத்தில் பெருமாள்முருகனுக்கு ஆதரவான ஆர்ப் பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் 20.1.2015 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன், பேராசிரியர் அருணன், தியாகு, பேராசிரியர் மார்க்ஸ், எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், ஞானி, நடிகை ரோகிணி, இயக்குநர் வெற்றிமாறன், ராம், உள்ளிட்ட தலைவர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்கு நர்கள், ஊடகத்துறையினர் உள்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/page-3/94778.html#ixzz3PYh6q3K0