உதாரணமாக மதுரை மகாநாட்டில் பனகால் அரசர் பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதற்கு ஒரு கமிட்டியை நியமித்துப் பார்ப்பனர்கள் விண்ணப்பங்களை கமிட்டி பரிசோதிக்கலாமா என்றும், பூணூல் இல்லாதவர்களைச் சேர்த்துக் கொள்வது என்கின்ற நிபந்தனை வைக்கலாமா என்றும், மற்றும் பலவித நிபந்தனைகளின் மீதாவது சேர்க்கலாம் என்றும் சொன்னார். பிறகு கோயம்புத்தூர் மகாநாட்டிலும், கடைசியாக நெல்லூர் மகாநாட்டிலும் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை நான் ஆட்ஷேபித்தே வந்திருக்கிறேன். பொது ஜனங்களுக்கும் பிரியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.
ஆனால் தலைவர்களுக்கு ஏதோ அவசியமிருப்பதாகத் தெரிகின்றது. அதை உத்தேசித்தே சென்ற மாதம் கூடின ஒரு சாதாரண தனிப்பட்ட கூட்டத்தில் நான் ஆட்ஷேபிக்கப் போவதில்லை என்று கூறி இருக்கின்றேன். ஏனெனில் தலைவர்கள் என்பவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் என்று கருதித்தான்.
இது போலவே முன்னமும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என்கின்ற ஒரு பிரச்சினை கோயம்புத்தூர் மகாநாட்டில் 1927 ல் எழுந்தது. நான் ஆட்ஷேபித்தேன். தோழர்கள் பனகால் அரசர், சர். பாத்ரோ முதலியவர்கள் மிகவும் கேட்டுக் கொண்டார்கள். பொது ஆறக்ஷபனை கூட பலமாய் இருந்தது. கடைசியாக நான் இவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் பின்பு விஷயம் தெரிந்து கொள்ளட்டும் என்கின்ற எண்ணத்தின் மீதுதான் தடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி பாசாகிற்று என்றாலும் ஒரு அம்மன் காசு அளவு பயன்கூட ஏற்படவில்லை. இதன் பயனாய் முன்னையை விட அதிகமாய் காங்கிரசை ஜஸ்டிஸ் கக்ஷியார் எதிர்க்க நேர்ந்தது. அது போலவே இப்போதும் பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஏதோ ஒரு உள் கருத்துக்கொண்டு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இதன் பயனைக் கண்டிப்பாய் அனுபவிக்கப் போகிறார்கள். அந்த தைரியத்தின் மீதே இப்போது நான் தடுக்கப் போவதில்லையென்று சொல்லுகிறேன். இப்படிச் சொன்னதால் சில தோழர்கள் நான் சம்மதம் கொடுத்ததாகச் சொல்லு கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாய்த் தெரியும். பார்ப்பனர்களிடம் நான் துவேஷமாய் இருந்தாலும் சினேகமாய் இருந்தாலும் அந்தப் பலன்களையெல்லாம் இவர்கள் தான் அடைவார்களே ஒழிய, எனக்கு ஒரு லாபமும் இல்லை. வேண்டுமானால் பார்ப்பனர்களால் ஏற்படும் விஷமமும், தொல்லையும் எனக்குச் சொந்தமாகும்.
நான் சென்ற வாரப் பத்திரிகையில் "பார்ப்பனீய ஒழிப்புக் கொண்டாட்ட நாள்" என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட வேண்டும் என்று எழுதி இருக்கின்றேன்.
இவை நிற்க, பொதுவாக விஷயத்தை உங்கள் ஞாபகத்துக்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன்.
பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கின்ற ஒரு விதியும் நமக்குள் இருந்து வருகின்றது என்றாலும் இது எப்போதும் இருக்க வேண்டியதா? அல்லது எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டியது? என்று யோசித்துப் பாருங்கள். எல்லா இந்திய மக்கள் மாத்திரம் அல்லாமல் உலக மக்கள் எல்லோருமே சகோதரர்களாக தோழமையுடன் வாழ வேண்டுமென்றும் வகுப்பு வித்தியாசங்கள் என்பது எங்கும், எந்த ரூபத்திலும் காணக் கூடாதென்றும் கூப்பாடு போடுகின்ற நாம் எப்போதும் பார்ப்பனர்களை சேர்க்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். சர்வ ஜன சகோதரத்துவத்துக்கும் வகுப்புப் பிரிவு மறைவுக்கும் தான் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். இது சாதாரண அறிவுடையவர்களுக்கு விளங்காது. சிறிது கூர்மையான பகுத்தறிவைப் பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு விளங்கிவிடும்.
எப்படியெனில் ஒரு வியாதியை சௌக்கியப்படுத்த அந்த வியாதியின் சத்தை இன்ஜக்ஷன் செய்வது போல் உதாரணமாக பீனிச மூக்கு வியாதிக்காரனுக்கு அந்தப் பீனிச மூக்குச் சீயையும், கெட்ட நீரையும் எடுத்துச் சேர்த்து பக்குவம் செய்து இன்ஜக்ஷன் செய்தால் அந்த மூக்கு வியாதி சௌக்கியமாய் விடுகின்றது.
அதுபோல் பார்ப்பனர்களை விலக்கி வைப்பது என்பதில் பார்ப்பனீயம் ஒழிந்து விடுகின்றது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் வகுப்புகளின் உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒழிந்து சமநிலைக்கு வர நேருகின்றது. இவற்றின் பலனாய் ஒற்றுமையும், சமத்துவமும் வந்து பிரிவும் பேதமும் தானாய் மறைய நேரிடுகின்றது.
இந்த நிலை ஏற்படும் வரையில்தான் நாம் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோமே ஒழிய, உலகம் உள்ள வரையில், மனித சமூகம் உள்ள வரையில் கூடாது என்றும் வேண்டும் என்றும் நாம் கருதி ஏற்படுத்தவில்லை.
இப்போது உள்ள கேள்வியெல்லாம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடவும் தகுதி ஆனதும் அவசியமானதுமான காலம் வந்து விட்டதா என்பதேயாகும். என்னுடைய அபிப்பிராயத்தில் இல்லை என்றே கருதுகிறேன். சிலர் வந்து விட்டது என்கிறார்கள். சிலருக்கு இரண்டும் புரியாமல், சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் மாதிரி ஒரே மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய இந்த அபிப்பிராய பேதங்களுக்குக் காரணமே ஒழிய வேறில்லை.
"பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள காலம் வந்து விட்டது" என்று இன்று சொல்லுகின்றவர்கள் தலைவர்கள் என்கின்றவர்களே யாவார்கள். தோழர்கள் சர். ஷண்முகம், பொப்பிலி ராஜா, சர். உஸ்மான், ராஜன் போன்றவர்களே ஆசைப்படுகின்றார்கள் என்றால் அதன் பலாபலனை அடைந்து பார்க்க அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வரையில் இந்தப் பிரச்சினை விஷயத்தில் ஒரு சாந்தியும் ஏற்படாது. ஆதலால் நான் குறுக்கே நிற்பதில்லை என்று சொல்லிவிட்டேன். எனது தோழர்கள் பலரும் இதை ஒப்புக்கொண்டது எனக்கு சந்தோஷமே.
இப்போது எனக்கும் மற்றும் பல எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினை இந்தப் பார்ப்பனர்களைப் பொருத்ததல்ல.
பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டு பிறகு ஜஸ்டிஸ் கட்சி செய்யப்போகும் வேலை என்ன? அதற்கு வேலைத்திட்டம் என்ன? என்பது தான் முக்கிய பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் தான் நாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதா அல்லது விலகுவதா என்கின்ற தத்துவம் இருந்து வருகின்றது.
அதைத்தான் நாங்கள் முக்கியமாய்க் கருதுகிறோம். அந்த விஷயத்துக்கு ஒரு வேலைத் திட்டம் அனுப்பியிருக்கிறேன். அது யோசனைக்கு வரும். அதைப் பொறுத்தே எங்கள் முடிவும் இருக்கும். பார்ப்பனர்களைச் சேர்க்கும் விஷயம் முடிவடைந்தால் ஏதோ ஒரு சில கூட்டத்துக்குத்தான் பயன் உண்டாகலாம்.
நமது வேலைத்திட்ட விஷயம் முடிவடைவதில்தான், இந்த தேசப் பொது மக்களின் "தலையெழுத்து" நிர்ணயிக்கப்படப் போகின்றது.
ஆதலால் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டேன். பிறகு நீங்கள் எல்லோரும் யோசித்துத் தக்கது செய்யுங்கள்.
--------------------- 29, 30.09.1934 இரு நாள்கள் சென்னையில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது என்ற தீர்மானத்தை யொட்டி தந்தைபெரியார் ஆற்றிய உரை.”பகுத்தறிவு ”சொற்பொழிவு 07.10.1934
11 comments:
குற்றாலம் வாரீர்!
இம்மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி முடிய நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடக்க உள்ளது.
கடந்த 35 ஆண்டுகளாக அன்னை மணியம்மை யார் அவர்கள் காலந்தொட்டு இந்தப் பட்டறை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கழகத் தலைவர் அவர்களும், கழகப் பேராசிரியர்ப் பெரு மக்களும், கழக முன்னணியினரும் பெரியாரியலின் பல்வேறு தலைப்புகளில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான இருபால் இளைஞர்களும் இப்பட்டறையால் பலன் பெற்றுள்ளனர்.
வெறும் பாட வகுப்புகள் மட்டுமின்றி களப்பயிற்சி, யோகா பயிற்சி முதலியவையும் கற்பிக்கப்படு கின்றன.
இப்பட்டறைகளில் பயிற்சி பெற்றவர்கள், கழகத் தின் பல்வேறு பொறுப்புகளுக்குப் பிற்காலத்தில் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரோட்டில் கோடைக் காலத்தில், தந்தை பெரியார் அவர்கள் இத்தகு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்து அவர்களே பாடங்களை நடத்தியுள்ளார். இன்றைய நமது கழகத் தலைவரும் அத்தகு பயிற்சிப் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்டு, மாணவர் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, கொள்கைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் பலனை இன்று கழகமும், நாடும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த மண்ணுக்கான தத்துவம் என்பது தந்தை பெரியார் அவர்களுடையதே! தந்தை பெரியார் கண்ட இயக்கம் என்பது புத்தர் இயக்கத்தின் இன்னொரு பதிப்பு அல்லது மறுபக்கமாகும்.
ஆரியத்தின் ஆணி வேரை வீழ்த்த தோன்றியது தான் புத்த நெறி! வர்ணாசிரம தர்மத்தை வேரோடு சாய்க்கவந்த தத்துவம் அது!
போக்குவரத்து வசதியற்ற அந்தக் கால கட்டத்தில் அரசக் குடும்பத்தில் பிறந்த அந்தக் கவுதமப் புத்தர், எல்லா வனப்புகளையும், வளர்ப்பு களையும் துறந்து மக்கள் மத்தியில் இருந்த துக்க இருளை துடைத்தழிக்கப் புறப்பட்டு பிரச்சாரம் செய்தார்.
அதே அச்சின் வார்ப்பில்தான் 29 பதவிகளைத் தூக்கியெறிந்து, ஆடம்பர வாழ்வைக் கசக்கி எறிந்து தொண்டறத்தில் குதித்தார் - தும்பை மலரினும் தூயதான உள்ளம் கொண்ட தந்தை பெரியார்.
பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பார்ப்பனீய வருணாசிரம சமூக அமைப்புதான் சகல நோய்களுக்கும், துன்பத்துக்கும் பகைமைக்கும், பேதங்களுக்கும் காரணம் என்பதைத் தெற்றென உணர்ந்து மக்கள் மத்தியில் தம் சிந்தனை வெளிச் சத்தை பாய்ச்சினார். எதிர்ப்புப் புயல்கள் கிளம்பி னாலும் அவற்றைத் தூசாகத் தட்டி, தம் பூகம்பப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டு, மக்கள் மத்தியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றியும் கண்டார்.
இன்றைக்கு ஏற்பட்டு இருக்கும் எல்லா வகையான வளர்ச்சிகளுக்கும், மாற்றத்திற்கும் இந்த வரலாற்றுத் தலைவரின் உழைப்புதான் அடிப்படை!
ஆரியம் வளைந்து வளைந்து, குழைந்து குழைந்து, குமைந்து குமைந்து தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளும் சாகசங்களை அறிந்த ஒன்றாகும்.
வரலாற்றில் அதன் மீது ஏவப்பட்ட எதிர்ப்பு களையெல்லாம் சீரணித்துக் கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் மூலபலத்தை நோக்கிப் போர் புரிந்த காரணத்தால்தான் அதன் ஜம்பம் பலிக்கவில்லை. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பெயராலும், பா.ஜ.க. என்ற பெயராலும், பாரதி சங்கம் போன்ற பெயராலும் தலைமையைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டு தான் உள்ளது.
இந்த நிலையில் நம் இன இளைஞர்களை ஈட்டி முனையாக வளர்த்தெடுக்க வேண்டாமா? ஆரியத் தின் அங்க மச்ச அடையாளங்களை எடுத்துரைக்க வேண்டாமா? தத்துவ ரீதியாக ஆரியத்தைத் தகர்த்தெறிய வேண்டாமா?
இத்தகைய அடிப்படையைச் செய்யக் கூடிய ஒரே ஒரு புரட்சி இயக்கம் இந்நாட்டில் திராவிடர் கழகமே!
குற்றாலத்தில் நான்கு நாட்கள் என்றால் மற்ற மற்ற மாவட்டங்களில் சனி, ஞாயிறுகளில் பட்டறைகள் நடத்தப்பட்டும் வருகின்றன.
அவற்றில் பயிற்சி பெறும் இருபால் இளைஞர் களைக் கழக இளைஞரணி, மாணவரணிப் பொறுப் பாளர்கள் ஆற்றுப்படுத்தி, கழகப் பணியின் பக்கம் மடை மாற்றம் செய்திட வேண்டும்.
குற்றாலம் பயிற்சி பட்டறை 16 வயதுக்கு மேற்பட்ட இருபால் இளைஞர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கும் கடமையினை ஆங்காங்குள்ள கழகத் தோழர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள் கிறோம்.
இளைஞர்களின் எழுச்சியே எதிர்காலத்திற்கான உத்தரவாதமாகும்.
செயல்படுவீர்! - தோழர்களே! 22-9-2012
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற சுயமரியாதைத் திருமணம்
தாம்பரம், செப். 22- திராவிடர் கழகத் தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் சகோதரும், சுயமரியாதைக் காரருமான சு.நற்குணனின் மகன் க.ந. பொற்கோ-சிறீவித்யாவின் இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று வாழ்வியல் கருத்துரை வழங்கி சிறப்பித்தார்.
மூன்று தலைமுறைகளாய் சுயமரியாதைக் குடும்பம்
சென்னைக்கு அடுத்துள்ள, தாம்பரம் கிழக்குப் பகுதியில், வேளச்சேரி முதன் மைச் சாலையில் அமைந்துள்ள வாசு தேவா திருமண அரங்கத்தில் 21.9.2012 அன்று காலை 9 மணியளவில் சு.நற்குணன் - ந.கலையரசி ஆகியோரது மகன் க.ந. பொற்கோ, தியாகராஜன் - கீதா ஆகி யோரது மகள் சிறீவித்யா ஆகியோரின் இணையேற்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணவிழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் சு.அறிவுக்கரசு வரவேற்றுப் பேசினார்.
அவர் தமது வரவேற்பு ரையில், தங்கள் குடும்பம், மூன்று தலைமுறை களைத் தாண்டி சுயமரியாதைக் குடும்பமாய் இருந்து வருவதைப் பற்றியும், ஆசிரியருடன் தமது குடும்பத்தினரின் கொள்கைத் தொடர்பு பற்றியும் சுவைபடக் கூறினார். கழகப் பொருளாளர் கோ.சாமி துரை, சென்னை மண்டல செயலாளர் ஞானசேகரன், விழுப்புரம் மு.வ.சோமசுந்தரம் இணையர், பண்ருட்டி ரோட்டரி கிளப் இராமமூர்த்தி (ரெட்டியார்), ராணிப்பேட்டை ஓய்வுபெற்ற பெல் மேலாளர் ஜெயராமன், நியூசிலாந்து மணி நிலவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் சி.பி.சந்திரசேகரன் மணமக்களை அறிமுகப் படுத்தி உரையாற்றினார். அவர் தமது உரையில், தந்தை பெரியாரின் பணியை நாம் அறிவோம். உணர்வோம்.
அந்தப் பணியை தமிழர் தலைவர் அவர்கள் தொடர்கிறார். அதுமட்டுமல்ல, வாழ்க்கை துணை என்பதை வாழ்விணை என்று மாற்றியதை எண்ணி எண்ணி பெருமையடைகிறேன் என்று குறிப்பிட்டார்.
தந்தை பெரியாரும் மானுடப் பற்றும் போல
தொடர்ந்து, வாழ்த்துரை வழங்க வந்த சென்னை மண்டலத் தலைவர் இரா.இரத்தினசாமி, மண மக்கள் தந்தை பெரியாரும் மானுடப்பற்றும் போலவும், அன்னை மணியம்மையாரும் இராவண லீலா போலவும், காமராசரும் கல்வியும் போல வும், திருவள்ளுவரும் திருக்குறளும் போலவும், அம்பேத்கரும் சட்டமும் போலவும், தமிழர் தலைவரும் 31ஊ சட்டமும் போலவும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று வாழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து, மணமகளின் சித்தியும், ஆப்டெக் லிமிடெட்டில் மேலாளராக பணிபுரியும் மீனாட்சி தமது வாழ்த்துரையில், தன்னுடைய திருமணமும் சம்பிரதாயங்களை மறுத்து கலப்புத் திருமணமாக நடைபெற்றது என்றும், ஆகவே, ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மண மக்களை வாழ்த்துவதாகவும் கூறினார் (மீனாட்சி அவர்கள் பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது). அவரைத் தொடர்ந்து கழகத்தின் சொற்பொழி வாளர் இராம.அன்பழகன் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
கடலூரும் காஞ்சியும் இணைந்திருக்கிறது
வாழ்த்தரங்கம் நிறைவுபெற்றபிறகு, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், வாழ்வியல் உரை நிகழ்த்தி இணையேற்பு விழாவை நடத்தி வைத்து சிறப்பித்தார். அவர் தமது உரையில், திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் குடும்பத்தினருடனான 70 ஆண்டு களுக்கும் மேலான கொள்கைத் தொடர்பை எடுத்துக் கூறினார். முரட்டு சுயமரியாதைக்காரர், சுப்ரமணியம் முரட்டு சுயமரியாதைக்காரர் என்றால் எதிரிகள் கேட்கும் எந்தக் கேள்விகளுக் கும் கொள்கை ரீதியாகப் பதில் அளிக்கக் கூடியவர். அப்படிப்பட்ட சுப்பிரமணியம் பற்றிய நினைவு களைப் பகிர்ந்து கொண்டார்.
இன்று இந்தத் திருமணத்தின் மூலம் கடலூரும் - காஞ்சிபுரமும் தத்துவரீதியாகவே இணைந்திருப்பது சிறப்புக் குரியது என்றார். மேலும் அவர் கூறுகையில், இது ஜாதி மறுப்புத் திருமணமாக நடைபெறுவது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. எல்லா வகை யிலும் இது சிறந்து விளங்குகிறது. ஆகவே, நூற் றுக்கு நூறு மதிப்பெண்களாய் பெறக் கூடியதாக இந்த இணையேற்பு விழா அமைந்திருக்கிறது என்று சான்றளித்துப் பேசினார்.
தன்னையே உதாரணமாக்கிய தமிழர் தலைவர்
.
மேலும் அவர், மீனாட்சி அவர்கள் தாலி பற்றி பேசியதை நினைவூட்டி, தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் 1958ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 7ஆம் தேதி மாலையில், கொழுத்த ராகு காலத்தில் பெரியார் மாளிகையில் தாலி இல்லாமல் தனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். என்னாயிற்று! நாங்கள் இன்று நன்றாகத்தானே இருக்கிறோம் என்று அறிவார்ந்த கேள்வியை எழுப்பினார்.
தொடர்ந்து, இராச மாணிக்கம் அவர்கள் எழுதிய தமிழர் திருமணத் தில் தாலி என்ற புத்தகத்தை எடுத்துக் குறிப்பிட்ட பகுதிகளை படித்துக் காட்டி, தமிழர்களுக்கு வரலாற்று ரீதியாக தாலியே கிடையாது என்பதை தெளிவுபடுத்தினார்.
மணவிழாவிற்கு, பொதுவுடைமை இயக்கத் தைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டிருப் பதையொட்டி சிலரின் அய்யங்களுக்குப் பதிலளிக் கும் வகையில், திராவிடர் இயக்கம், பொது வுடைமை இயக்கம் இரண்டும் வேறு வேறு என்று சிலர் பேசுகிறார்கள்.
அல்ல இரண்டும் இணை கோடுகள் என்று கூறிவிட்டு, தமது உரைக்கு வலு சேர்க்கும் விதமாக தோழர் சிவ.சுப்பிரமணியம் அவர்கள் எழுதியிருக்கிற, வரலாற்றுப் பொருள் முதல் வாதம் - அரிச்சுவடி என்ற புத்தகத்தை எடுத்து, அதில் நமது சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தது. பொதுவுடைமை பொதுவுரிமை பெற்ற சமூகமாக இருந்தது. பண்பாட்டுப் படையெடுப்பு வந்தபிறகுதான்; தானமாகப் பெண் ணைத் தரும் வழக்கம் உருவானது என்ற பகுதியை வாசித்துக் காட்டினார்.
தொடர்ந்து, சமஸ்கிருத திருமண மந்திரங்களின் பொருளை விளக்கி, மணவிழாவுக்கு வந்திருந் தோருக்கு புரோகிதத் திருமணத்தின் கேடுகளை சுட்டிக்காட்டினார். இதற்கு மாற்றாகத்தான் தந்தை பெரியார் நமக்கு, சுயமரியாதைத் திருமணத்தை கொடையாகக் கொடுத்தார் என்பதை நிறுவினார்.
தோழர் கிரேன் முகர்ஜியின் வியப்பு!
தொடர்ந்து அவர், சுயமரியாதைத் திருமணத்தின் புரட்சி பற்றி குறிப் பிடும்பொழுது, பாரத கலாச்சாரம் என்பது அறிவியலுக்கு எதிரானது. பெண்களை சந்தைப் பொருளாக் குவது. ஆகவே, தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் செய்த புரட்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென் றால், ஒரே ஒரு தகவலைச் சொன்னால் போதுமானது.
நாடாளுமன்ற வாதி யும், பொதுவுடைமை அமைப்பைச் சேர்ந்தவருமான தோழர் கிரேன் முகர்ஜி அவர்கள், நான் ஒரு பொது வுடைமை வாதியாகவே இருந்தாலும் என் மகளுக்கு புரோகிதர் இல்லாமல் மணம் செய்ய முடியாது. காரணம், உங்களுக்கு பெரியார் கிடைத்திருக்கிறார். எங்களுக்கு கிடைக்க வில்லை என்று சொன்னதாகச் சொல்லி, சுயமரி யாதைத் திருமணத்தின் புரட்சியை சுருங்கச் சொல்லி மக்களின் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே விளங்கச் செய்தார்.
அறிவுரை அல்ல! வேண்டுகோள்!
தொடர்ந்து, மணமக்களை குறிப்பிட்டுப் பேசும்போது, இன்றைய தலைமுறையினருக்கு அறிவுரை பிடிப்பதில்லை. அதுமட்டுமல்ல, சுயமரி யாதைத் திருமணம் செய்து கொள்கிற தோழர் களுக்கு அது அவசியமுமில்லை. அதனால், வேண்டு கோள் வைக்க விரும்புகிறோம். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள். தன் முனைப்பு இல்லாமல் வாழுங்கள். உற்ற நண்பர்களாக வாழுங்கள். முக்கியமாக உங்களை ஆளாக்கிய பெற்றோர்களை மறந்து விடாதீர்கள் என்று கூறி, வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார்.
இறுதியாக நிலவெழிலன் அனைவருக்கும் நன்றி கூறி மணவிழாவை இனிதே நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில், தாம்பரம் மாவட்டத் தோழர்கள் கு.ஆறுமுகம், சிகாமணி, ராசு, சுரேஷ், சண். சரவணன், ராவணன், தினேஷ், ரமேஷ், சிவசாமி, மீனம் செல்வம், மறைமலைநகர் தோழர்கள்: துரைமுத்து, பிச்சைமுத்து, ப.முருகன், சிதம்பரம் செல்வரத்தினம், உடுமலை வடிவேல், ஓட்டுநர் மகேஷ் மற்றும் மணவீட்டாரின் உற்றார் உறவினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இணையேற்பு விழாவை சிறப்பித்தனர் 22-9-2012
தமிழ் - இன, கலாச்சாரப் போராட்டத்துக்குப் பயன்படுமா?
தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படி பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் எடுத்துக்காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம்.
ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைத் தடுத்துத்தான் நம்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக, அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக, சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம். எனவே, அக்காலச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. கலாச்சாரத்தின் பேரால் - இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும்.
அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவராவோம். மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு, நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றி லிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்ததாக வேண்டும். மொழியால் மேம்பாடும், வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடமாட்டா.
- தந்தை பெரியார் விடுதலை 27.1.1950
போலித் தமிழர்கள் - நடிப்புச் சுதேசி திடீர்த் தமிழர்களை நன்கு அடையாளம் கண்டு ஒதுக்குவீர்!
போலித் தமிழர் கட்சிகள் பல தமிழர்தம் மேம்பாட்டிற்காக தொடங் கப்பட்ட இயக்கங்களல்ல; செவ்விய சிந்தனையின்றி அனல் பறக்கும் வெற்றுப் பேச்சினை முதலீடாகக் கொண்டு, தமிழனின் தமிழ்க் காதலை பலவீனமாக தப்புக் கணக்கு போட்டு, தமிழன் கடந்த அய்ம்பது ஆண்டு காலமாக கண்ட மட்டற்ற வெற்றியினை எதிரியிடம் விலை பேசி விற்கத் துணிந்திட்ட கோடரிக்காம்பு களின் குவலம்தான் அவை.
கோடரிக் காம்புகள் செழித்து வளர்ந்து விழுது களைப் பரப்பும் ஆலமரமாக முடியாது. ஆனால் படர்ந்த பயன்தரும் அந்த ஆலமரத்தின் இளம் விழுதுகள் சிலவற்றைச் சேதப்படுத்தக் கூடும். இளம் விழுதுகள் ஒன்றிரண்டுகூட சேதப்படாமல் பாதுகாக்கின்ற பொறுப்பு அந்த ஆலமர நிழலை அனுபவிக்கும் நமக்கு உண்டு என்பதால்தான் இந்தக் கட்டுரை.
அப்போலி நடிப்புச் சுதேசி தமிழர் கட்சிகள் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். பரிதவிக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையை பகடைக் காய்களாய்ப் பயன்படுத்தி, தமிழக அரசியலில் அடியெடுத்து வைக்க லாம் என்பதே இவர்களின் நோக்கம். இவர்களும், இவர்களைப் போன்று தங்களது தமிழக அரசியலுக்காக ஈழப் பிரச்சினையைப் பயன் படுத்த முனைந்தோர் கொடுத்த சிந்தனை யற்ற அறிவுரையே போரின் கடைசி நாட்களில் தமிழர்கள் அதிக அளவில் மாண்டதற்குக் கரணியம் என்றோர் கூற்றும் புறந்தள்ள முடியாத ஒன்றாகும்.
திராவிட அரசியல் கட்சிகளை வெற்றி கொண்டால் தமிழகத்தை அரசோச்சலாம் என்று மனப்பால் குடிப்பதில் தவறில்லை. மக்களாட்சி யில் ஒவ்வொரு தமிழனும் தமிழ கத்தை ஆள நினைக்கின்ற உரிமை சரியானதுதானே. ஆனால் திரா விடக் கொள்கைளை எதிர்த்துத் தமிழகத்தை ஆளலாம் என நினைப் பது சிறுபிள்ளைத்தனம்; ஆசையி னால் மோசம் போன கூற்றாகும்.
திராவிடக் கொள்கையின் வெற்றியே இன்று தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தைத் திராவிட அரசியல் கட்சிகள் ஆண்டு வருவதற்குக் காரணம். திராவிடக் கொள்கைகளை முற்றும் அறியாத சில தமிழகக் கட்சிகள் கூட தங்களது அரசியல் வெற்றிக்காக திராவிடம் என்ற சொல்லை தாங்கிப் பிடிப்பதி லிருந்து இக் கொள்கை மக்களிடத்தே வெற்றி பெற்றிருப்பது தெளிவாகிறது.
கம்யூனிசம் போன்ற தத்துவங்கள் கூட காலாவதியாகிப் போனதோ என்று அய்யுறும் இக் கால் கட்டத்தில் பெரி யாரிசம் மட்டும் இன்றும் செழித்து வளர்கிறது என்றால் அதன் கரணியம் என்ன? பெரியாரிசம் ஒரு பன்முகம் கொண்ட கொள்கை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சீரிய அடிப் படைத் தத்துவத்தில் எழுப்பப்பட்டதாகும்; பொருளாதார ஏற்ற தாழ்வாகினும், ஆண்-பெண் ஏற்ற தாழ்வாகினும், சாதி-சமய ஏற்ற தாழ்வாகினும், மொழியால் ஏற்ற தாழ்வாகினும், இன்னும் பிற பலதரப்பட்ட ஏற்ற தாழ்வாகினும் இவ்வேற்ற தாழ்வுகள் அனைத்தையும் எதிர்க்கின்ற வல்லமை பெற்ற தத்துவம் இப் பெரியாரிசமே!
இங்கு குறிப்பிடப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் மட்டும் உருவாக்கப்படு மாயின், அதற்கு வல்லமை குறைவு. கரணியம், அது மக்களை ஒன்று படுத்தும் இயக்கமாக இல்லாது தனிமைப்படுத்தும் இயக்கமாகவே விளங்கும். குறிப்பாக வெறும் மொழியை வன்முறையையும் அரசியல் கொள்கையாக வைத்து இயங்கும் எந்த இயக்கமும் மக்களுக்குப் பயன்படாது.
மகாராஷ்டிரத்தில் இருக்கும் சிவசேனா என்ற கட்சியே நல்ல சான்றாக விளங்குகிறது. இயக்கம் என்பது மக்களை சார்ந்ததாக இருக்கவேண்டும். மொழியின் அடிப்படையில் மக்கள் தாழ்த்தப்படுவார் களாயின் அதை எதிர்த்துப் போரிடுவது என்பது வேறு, மொழியே ஒரு இயக்கத் தின் கொள்கையாக அமைவது வேறு. தந்தை பெரியார் இந்தியை எதிர்த்துப் போரிட்டது, இந்தியின் ஆதிக்கத்தால் தமிழன் தாழ்வு பெறுவான் என்ற மனிதநேயக் கொள்கையினால்; மொழி வெறியால் அல்ல. அதனால்தான் அவர் வெற்றி பெற்றார்.
மதவெறியால் அல்லது சாதி வெறியால் உந்தப் பட்டு இயங்கும் கட்சிகளும் இயக்கங்களும், குமுகாயத்திற்கு எத் துணை ஊறு விளைவிக்கிறதோ, அதற்கும் மேலாக மொழி வெறியை மட்டும் முதன் மைப் படுத்தும் கட்சிகளும் இயக்கங்களும் ஊறு விளைவிக்கக் கூடும். குமுகாயத் தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுக்கக் கூடும்.
தந்தை பெரியார் அவர்கள் தான் ஏன் மொழியை முன்னிறுத்திப் போராட வில்லை என்பதற்கு அவர் கூறும் கரணி யம் அவர் எத்துணை ஆழ்ந்த சிந்தனை யாளர் என்பதை வெளிக்காட்டுகிறது. தமிழ் என்பதும் தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத்தான் பயன்படுமே ஒழிய இனப் போராட்டத் திற்கோ, கலாச்சாரப் போராட்டத் திற்கோ, சிறிதும் பயன்படாது. மொழிப் போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது என்றார். (விடுதலை 27.1.1950)
ஆனால், பெரியாரைப் பின்பற்றும் பெருந் தகையாளர்களுக்குத் தடு மாற்றம் ஒன்றும் இல்லையே. மனிதநேயத்தின் அடிப்படையில் தமிழீழம், ஈழத் தமிழர்களின் பிறப் புரிமை, பிரபாகரன் யாராக இருப் பினும், பெரியாரிசம் போற்றுவோரின் நிலைப்பாடு மாறாதே! இது அல் லவோ கொள்கை!! இனம், மொழி, பண்பாடு, பகுத் தறிவுத் தடத்தில் பயணிப்பதால் திராவிடர் கழகம் தெளிவான - உறுதியான முடிவுகளை எடுக்க முடிகிறது.
தந்தை பெரியார் என்ற இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனித நேயச் சிந்தனையாளர் திராவிடர் என்ற சொல்லை மிக்க பொறுப் புணர்வோடும், ஆழ்ந்த சிந்தனை யோடும் தெரிவு செய்திருக்கிறார் என்பது அவர் அந்தச் சொல்லைக் கையாண்ட விதத்திலிருந்து காண லாம். சுருங்கக் கூறின், திராவிடர் என்றால், மனித நேயர்கள், பிறப் பொக்கும் உல்லா உயிர்க்கும் என்ற உயர்ந்த கொள்கைக்குச் சொந்தக் காரர்கள், அந்த உயரிய கொள் கையை மறுப்போரை எதிர்ப்போர்கள்.
இளைஞர்களே! புதிய உலகைப் படைக்கும் சிற்பிகள் நீங்கள்! நாசக் காரர்களிடம் விலை போகிவிடா தீர்கள் !!
நயவஞ்சக வீரவசனங்கள் பேசும் வாய்ச்சொல் வம்பாளிகளின் பின் சென்று ஏமாறாதீர்! விழுந்த இனம் எழவேண்டுமானால் அது விரியன் களையா ஊன்று கோல்களாகக் கொண்டு எழ முயற்சிப்பது? அய் யகோ...! என்னருமை இளைஞர்காள் விழிமின்! எழுமின்!! 22-9-2012
அப்பா - மகன்
சகிப்பு
மகன்: சகிப்புத் தன்மை மிகவும் முக்கியமானது என்று ராஜபக்சே கூறியுள்ளாரே, அப்பா!
அப்பா: என்ன செய் வது, இவரையே சிலர் சகித்துக் கொண்டு இருக்க வில்லையா மகனே? 22-9-2012
ராஜபக்சேவுக்கு வரவேற்பு அளித்தது உசிதமல்ல கலைஞர் பேட்டி
சென்னை, செப். 22 - இலங்கையிலே தமிழ் மக்களைக் கொடுமைப் படுத்திய அதன் அதிபர் ராஜபக்சேவுக்கு வர வேற்பு கொடுத்தது உசித மல்ல என்றார் திமுக தலைவர் கலைஞர்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: செய்தியாளர் :- இலங்கை அதிபர் இந் தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எதிர்த்து எழுதி வரு கிறீர்கள். அறிக்கை விட்டிருக்கிறீர்கள். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்துள்ளது. பிரத மரே அவருக்கு விருந் தளித்திருக்கிறார். இது முறையா? கலைஞர் :- ஒரு நாட்டின் பிரதமரையோ, அதிபரையோ வரவேற் பது என்பதும், உபசரிப் பது என்பதும் மரபு களாகும்.
அந்த மர பினை இந்திய அரசு பின்பற்றுவதாக நமக்கு பதில் சொல்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை யிலே தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு, இவ்வளவு எதிர்ப் புகளுக்கிடையே ராஜ பக்ஷேயின் இந்திய வருகையை தி.மு. கழகம் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே உள்ள எல்லா எதிர்க் கட்சி களும் கண்டித்தும்கூட, அவருக்கு வரவேற்பு அளித்தது உசிதமல்ல என்பதுதான் தமிழ் மக்களின் கருத்து.
அன்னிய முதலீட்டினை ஆதரிப்பது அந்தந்த மாநிலங்களின் உரிமை!
செய்தியாளர் :- அன்னிய முதலீட்டினை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட் டம் நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதனை வரவேற்று நிறை வேற்றப் போவதாக அறி வித்திருக்கிறார் களே?
கலைஞர் :- அது அந்தந்த மாநில உரிமை களாகும். அவரவர்கள் தங்கள் மாநில நிலை மைகளுக்கேற்ப, மக் களுடைய கருத்துக் களையும் அறிந்து, அதை ஏற்றுக் கொள்வதாக கருத்து அறிவித்திருக் கிறார்கள்.
செய்தியாளர் :- மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யிலிருந்து வெளியேறியி ருக்கிறார். இந்த நேரத் தில் நீங்கள் கூட்டணி யில் காங்கிரஸ் கட்சி யுடன் உறுதியாக இருக் கிறீர்களா?
கலைஞர் :- எங் களைப் பொருத்தவரை யில், நாங்கள் மற்ற கட்சிகள் எடுக்கும் முடி வுகளைப் பற்றி விமர் சிக்க விரும்பவில்லை. திராவிட முன் னேற்றக் கழகத்தைப் பொருத்து, எந்த கூட்டணி யிலே நாங்கள் இடம் பெற் றாலும், அந்தக் கூட் டணியிலிருந்து அவச ரப்பட்டோ, ஆத்திரப் பட்டோ உடனடியாக விலகிக் கொள்வதை விரும்புவதில்லை.
கூட் டணி தர்மத்தை நாங் கள் எப்போதும் காப் பாற்றுவோம். அப்ப டியே காப்பாற்றி வருகிறோம். கொள்கை மாறுபாடுகள் ஏற் பட் டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை.
காலி இடங்களை நிரப்புவது எங்கள் வேலை அல்ல!
செய்தியாளர் :- மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்பட வுள்ளது. ஏற்கனவே தி.மு. கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதிரி யான சூழலில் நீங்கள் அமைச்சரவையில் மேலும் இடங்களை எதிர்பார்க்கிறீர்களா? அளித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
கலைஞர் :- காலி இடங்களை நிரப்புவது எங்கள் வேலை அல்ல.
செய்தியாளர்:- உங்கள் கட்சிக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
கலைஞர்:- இதெல் லாம் கட்சியின் செயற் குழு, பொதுக் குழுவிலே விவாதித்து முடிவெ டுக்க வேண்டிய விஷ யங்கள்.
செய்தியாளர் :- கர் நாடக அரசு தமிழகத் திற்கு தண்ணீர் கொடுக்க தொடர்ந்து மறுக் கிறது. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமர் சொல்லியும் கர்நாடக முதலமைச்சர் தண்ணீர் கொடுக்க முடியா தென்று சொல்கிறாரே?
கலைஞர் :- இதைப் பற்றி நாங்கள் எங் களுடைய கருத்தை ஏற் கனவே சொல்லியிருக் கிறோம். கர்நாடகத் தோடு நட்பு முறை யிலும், நேச மனப் பான்மையுடனும் கழகம் ஆட்சியிலே இருந்தபோது கலந்து பேசி தமிழகத்திற்குத் தேவையான தண்ணீ ருக்காக நாங்கள் வாதாடியிருக்கிறோம், போராடியிருக்கிறோம். இப் போதும் உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றா லும் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட அலட்சியப்படுத்து கின்ற அரசாக, கர்நாடக அரசு இருக்கின்றது என்பதை மறந்து விடு வதற்கில்லை. எனவே இதை விடக் கடுமை யான நடவடிக்கை மூலம் அல்லது இந்திய நாட்டளவில் நதிநீர் பிரச்சினைகளைத் தீர்ப் பதற்கு வழிகாட்டக் கூடிய சட்டத் திட்டங் களை நிறைவேற்றுகிற வரையில் இப்படித்தான் நிலைமை இருக்கும் என் பது என்னுடைய கருத்து.
கர்நாடக அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது நல்லதல்ல!
செய்தியாளர் :- தமிழக அரசு இந்தப் பிரச் சினையிலே முறை யாக நடந்து கொண் டிருக்கிறதா?
கலைஞர் :- நான் இப்போது தமிழக அரசைப் பற்றி சொல் லவில்லை. கர்நாடக அரசு இவ்வளவு பிடி வாதம் காட்டுவது நல் லது அல்ல. இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.
22-9-2012
கட்டப் பஞ்சாயத்தா?
சென்னை வளசரவாக் கம் - ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பன்னீர்செல்வத் தின் மகள் பவித்ராவு, எழும்பூர் ரெயில்வே அதி காரி செங்குட்டுவன் மகன் கோவேந்தன் (போர்ச்சுகல் நாட்டில் இந்தியத் தூதர கத்தில் பணியாற்றுபவர்) ஆகியோருக்குப் பெரி யோர்களால் நிச்சயித்த படி ஜாதகப் பொருத்தப்படி விவாஹ சுப முகூர்த்தம் கோடம்பாக்கத்தில் சாங்கோ பாங்கமாக புரோ கித பார்ப்பனரின் மந்திர கோஷங்களோடு வெகு ஜோராக நடைபெற்றது.
தாலி கட்டியதுதான் தாமதம்! பிரச்சினையும் வெடித்தது! பொதுவாக கல்யாணத்தில் எங்கே பிரச்சினை ஆரம்பமாகும் என்றால் சாப்பாட்டில்தான்.
மாப்பிள்ளை வீட்டார் சாப்பிடவில்லை - மாப் பிள்ளை வீட்டார் சாப்பிட வில்லை என்ற சேதி மண் டபம் முழுவதும். என்ன விஷயம்?
4 லட்சம் ரூபாய் ரொக் கம், போர்ச்சுகல் நாட்டுக் குப் போக விமான செலவு ரூபாய் ஒன்றரை லட்சம் - இவற்றை வைத்தாலே போச்சு! என்று நிபந்தனை! மணமகள் வீட்டாருக் குத் தலை சுற்றியது. மணமகள் பவித்ராவோ கதறல். காரில் மாப்பிள்ளை வெடுக்கென்று வெளி யேறினார்.
வேறு வழியின்றி புகார் காவல் நிலையத்துக்குச் சென்றது. உதவி காவல் துறை ஆணையர் விசா ரணை என்று சேதி.
இதில் என்ன அதிர்ச்சி என்றால் காவல்துறை பெண் அதிகாரி சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டு வருகிறாராம்.
இப்பவே இப்படி! வெளி நாட்டுக்குச் சென் றால் அங்கே என் கதி என்ன என்று மணமகள் வினா தொடுக்கிறார் - மணமகள் தந்தையாரின் நிலைப்பாடும் இதுவே! மாப்பிள்ளை வேண் டவே வேண்டாம். சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்கிறார் மணமகள் துணிவோடு.
இது வரவேற்க வேண் டிய சரியான - துணிச்ச லான முடிவு. நமக்கு என்ன அய்யமென்றால் சட்டப்படி வரதட்சணை குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரி - அதுவும் ஒரு பெண் அதிகாரி இதில் ஏன் சொதப்புகிறார்? கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடு கிறார்?
அய்.எப்.எஸ். அதிகாரி வேலை போய்விடும் என்ற பச்சாதாபமா? இது போன் றவர்களுக்குச் சட்டப் படியான தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண் டாமா?
அந்தத் தண்டனையில் கொட்டை எழுத்துக்களில் ஏடுகளின் முதல் பக்கத்தில் வெளியிடப்படவேண்டும். அப்பொழுதுதான் பெண் களை விலைப் பொருளாகக் கருதும் வீணர்களின் கொட்டமும் அடங்கோ அடங்கென்று அடங்கும்!
- மயிலாடன் 22-9-2012
எச்சரிக்கை!
எழுத்துரு அளவு
யாருடைய மின்னஞ்சல் முகவரியையாவது கைப்பற்றி, அவருக்குத் தெரிந்தவர்களுக்கு வேண்டுகோள் மின்னஞ் சல் அனுப்புவது சமீபத் திய மோசடி. வெளிநாடு வந்த இடத்தில் பணத்தை இழந்து தவிக்கிறேன்.
இந்த கணக்கில் கொஞ் சம் பணம் செலுத்துங் கள் என்பதாக அந்த மின்னஞ்சல் இருக்கும். பணம் போட்டால் மோச டிப் பேர்வழி சுருட்டிக் கொள்வார். முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், சமீப கால மாக லண்டனில் தங்கி தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அவ ருடைய மின்னஞ்சல் முக வரியை யாரோ கைப்பற்றி இப்படி செய்துவிட்டார் களாம்
- எச்சரிக்கை!
சைதாப்பேட்டை இளங்காளிஅம்மன் கோயில் சிலை இடிக்கப்படுமா?
சென்னை, செப். 22- சென்னை சைதாப்பேட்டையில் அரசு நிலத்தை ஆக் ரமித்துக் கட்டப்பட்டுள்ள இளங்காளியம் மன் கோயில் இடிக்கப்படும்ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதில் வேறு உணர்வு களுக்கு இடம் தராமல் ஆக்கிரமிப்பு என்ற கண்ணோட்டத்தில் அரசு செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி யுள்ளது.
அண்ணா சாலையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை அடுத்து உள்ள இளங்காளி அம்மன் கோயில் பிரதான இடத்தில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிர மித்து கட்டப்பட்ட கோயிலாகும். பல தலைமுறைகளாக இந்தக் கோயில் அந்த இடத்தில் இருக்கிறது என்ற போதிலும், தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை செல்வி ஜெயலலிதா தொடங்கிய 2006 ஆம் ஆண்டில் இருந்துதான் இந்தக் கோயில் பிரசித்தி பெறத் தொடங்கியது.
சமூக நல ஆர்வலர் ஆர். நடராசன் அவர்கள் அளித்த தகவல் அறிவும் உரிமை விண்ணப்பத்திற்கு கிடைத்த தகவல் களின்படி, இந்தக் கோயில் இரண்டு கிரவுண்டு நிலத்துக்குப் பரந்துள்ளது. இது அரசு நிலம் என்பதால், இந்தக் கோயில் வேறு இடத்துக்கு மாற்றப் படவேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் அளித்த பதிலில், இந்த அரசு நிலத்தின் மீதான ஆக்கிரமிப்பு பொது நோக்கத் திற்காக அந்த இடம் தேவைப்படும்போது அகற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள் ளதைக் காணும்போது, இந்த இடம் ஆக் கிரமிப்பு என்பதை அரசு மறுக்கவில்லை என்று தெரிகிறது.
அண்ணா சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட் சியும் நெடுஞ்சாலைத் துறையும் 2006 இல் கலந்தாலோசித்தபோது, இந்தக் கோயிலை அகற்றும் பிரச்சினை விவாதிக் கப்பட்டது. நீதி மன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
பேருந்து நிலையத்தை அடுத்து உள்ள இந்த வண்ணமயமான கோயிலுக்கு முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி, அதிமுக தலைவர்கள், மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் என்று பல முக்கிய பிரமுகர் கள் வருகை தந்துள்ளனர். இந்த ஒரு கோயிலில் மட்டுமே அம்மன் சிலை வடக்கை நோக்கி இருப்பதால், இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது என்று நம்பப்படுகிறதாம். மற்ற அம்மன்களின் சிலைகளும், சிவன், முருகன், பெருமாள் போன்ற மற்ற கடவுள்களின் சிலைகளும் கிழக்கை நோக்கியே உள்ளன என்று இக்கோயிலின் அறங்காவலரும் மேலாளரு மான கிருஷ்ணமூர்த்தி ராஜா கூறுகிறார்.
கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் என்பதை ராஜா மறுக்கிறார். சைதாப்பேட்டையில் உள்ள அண்ணா சாலை மற்றும் பேருந்து நிலையம் அமைந்து உள்ள இடம் தங்களின் குடும்பத்திற்குச் சொந்தமானது என்றும், தனது முன்னோர்கள் 300 ஆண்டு களுக்கும் மேலாக இந்தக் கோயிலைப் பராமரித்து வருவதாகவும் அவர் கூறு கிறார். மூன்று நூற்றாண்டுகளாக இந்தக் கோயிலை எங்களது குடும்பத் தினர் பராமரித்து வருகின்றனர் என்பதற் கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
இந்த நிலம் முன்பு ஆற்காடு நவாப் களுக்கு சொந்தமாக இருந்தது. ஆங்கி லேயர் வந்தபோது, நவாப்கள் இந்த நிலத்தை எங்களது குடும்பத்திற்கு ஒப்புவித்துவிட்டனர் என்று கூறும் ராஜா, இந்த நிலத்தை அதன் மதிப்பில் 20 விழுக்காடு மதிப்பில் அரசு கையகப் படுத்தியது என்றும் அது முதல் இந்த நிலம் பொது நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள தனது குடும்பம் ஒப்புக் கொண்டது என்றும் கூறுகிறார்.
இந்த விஷயத்தை கவனிப்பதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
Post a Comment