Search This Blog

20.9.12

விநாயகனாகிய பிள்ளையார் கடவுள் பிறப்பின் கதையை எழுத வெட்கமா?

வெட்கமா?

இந்து மத வியாபாரிகள் இப்பொழுதெல்லாம் விவேகத்துடன், வீராப்புடன் மார் தட்டிக் கொள்ளும் வகையில் தங்களின் கடவுள்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.

வளைந்து, நெளிந்து, குனிந்து, குமைந்துதான் நடக்கும்படி, சொல்லும்படி, எழுதும்படி நேர்ந்துவிட் டது. ஒருவகையில் நம் இயக்கத்துக்கு, கொள் கைக்குக் கிடைத்த வெற்றி தான் இது!


எடுத்துக்காட்டாக விநாயகனாகிய பிள்ளையார் எனும் கடவுள் ஒன்று போதாதா?

கடவுள் என்றால் பிறப்பு - இறப்பு அற்றவர் என்று சொல்லிக் கொண்டு  ஆவணி மாதம் பூர்வபட்ச சதுர்த்தி, விசாக நட்சத் திரம் கூடிய சோம வாரத் தில், சிங்க லக்னத்தில் விநாயகர் பிறந்தார் என்று, கடவுளுக்கே ஜாதகம் எழுதி வைத்துள்ள தெருப்புழுதியை என்னவென்று சொல்லுவது!

இந்த முதல் பல்டியை! விட்டுத் தள்ளுவோம்!

மனிதனாக இருந்தாலும், மாடாக இருந்தாலும், கடவுளாக இருந்தாலும் அவர்களின் பிறப்பு என்பது ஒரே மாதிரியாகத்தானே இருக்கும். வெவ்வேறு வகையாக, விதவிதமாக முரண்பாடு இருக்க முடியாதல்லவா!

ஆனால் இந்த வீணாகப் போன விநாயகன் பிறப்புக்கு  எத்தனை எத்தனை ஆபாசக் கதைகள் - மூலங்கள்! நதி மூலம், ரிஷி மூலங்களைப் பார்க்கக் கூடாது என்பதில் உள்ள இரகசியம் இதுதானோ!

காட்டுக்குப் போனான் சிவன் - தன் மனைவியோடு. அங்கு ஆண் யானையும், பெண் யானையும் புணர்ந்ததைக் கண்டு சிவன் ஆண் யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும்  உருக் கொண்டு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலம் விநாயகர் பிறந்தார் என்பதெல்லாம் மனிதன் காட்டு விலங்காண்டியாய் திரிந்த காலத்தில்  கற்பிக்கப்பட்டது என்பது, ஒரு கடுகளவு அறிவைப் பயன்படுத்தும் எவருக்கும் விளங்குமே!


(ஆனால் பக்தர்களுக்கு விளங்காது என்றால் - அதன் பொருளைப் புரிந்து கொள்க!)

பார்வதி குளிக்கப் போகும்போது தன் உடல் அழுக்கைத் திரட்டி பிள்ளை யாரைப் பிடித்து வைத்தார் என்பதுதானே பிள்ளையார் பிறப்பின் கதை.

ஒரு வார இதழ் விநாயக மலரை வெளியிட்டுள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது தெரியுமா? நீராடச் சென்றபோது காவலுக்கு ஒருபிள்ளையை உருவாக்கிக் காவலாக்கினாள் என்று தந்திரமாக எழுதுவதைக் கவனிக்கவும். உண்மையைச் சொல்ல ஒருக்கால் வெட் கப்பட்டும் இருக்கலாம்.

அழுக்கை உருட்டி உருவாக்கினாள் என்று தினமலரால்எழுத முடியவில்லை. இது பித்தலாட்டம் மட்டுமல்ல - நம்மை நினைத்து அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள் என்பதுதானே இதன் உட்பொருள்?


             ---------- மயிலாடன் அவர்கள் 20-9-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

தமிழ் ஓவியா said...

இட ஒதுக்கீட்டில் நமது அடுத்த பணி

தந்தை பெரியார் 134ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதைத் திராவிடர் கழகம் வலியுறுத்தும்; அதற்கான நடவடிக்கைகளில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் சமூக நீதித்திசையில் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினை இது. 60 ஆண்டுகளுக்கு மேலாக இட ஒதுக்கீடு இருக்கிறது. இதற்கு மேலும் இடஒதுக்கீடு தேவைதானா என்கிற வினாவை எழுப்புவோர் உண்டு. மேலெழுந்தவாரியாக இதனைப் பார்த்தால் நியாயம் இருப்பது போன்ற தோற்றம் தென்படலாம்; அது ஓர் இடமாறு தோற்றப் பிழைதான்.

ஏற்கெனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலை வாழ் மக்களுக்கும், இட ஒதுக்கீடு இருந்து வந்துள்ளது என்பது உண்மைதான் என்றாலும் நடைமுறையில் சட்ட ரீதியாக அவர்களுக்கு அளிக் கப்பட வேண்டிய விகிதாச்சார எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

எடுத்துக்காட்டாக மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 149 பேர்களில் ஒருவர்கூட தாழ்த்தப் பட்டவர் இல்லை என்பது கசப்பான உண்மையாகும்.

கூடுதல் செயலாளர்கள் 108 பேர்களில் தாழ்த்தப்பட்டோர் வெறும் இரண்டே இரண்டு பேர் தான். இயக்குநர்கள் மொத்தம் 477 பேர்கள் இருக்கின்றனர் என்றால் இதில் தாழ்த்தப்பட்டோர் வெறும் 17 தான். விகிதாசாரத்தில் சொல்ல வேண்டு மானால் இது வெறும் 2.9 சதவிகிதம்தான். 15 சத விகித இடஒதுக்கீடு எங்கே? 2.9 சதவிகிதம் எங்கே?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் இருவருக்கும் மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது 22.5 சதவிகிதமாகும். (முறையே 15ரூ + 7.5ரூ) ஆனால் நடைமுறையில் இது எவ்வளவுப் பெரிய வீழ்ச்சி என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அய்.ஏ.எஸ். அதிகாரிகளை எடுத்துக் கொண்டாலும் கூட மொத்தம் 3251 எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 13.9 விழுக்காடு இடங்கள் தான் (சட்டப்படி 15 சதவிகிதம் அளிக்கப்படவில்லை) மலைவாழ் மக்களுக்கு 7.3 சதவிகிதம் தான் (சட்டப்படி 7.5 சதவிகிதம் இருக்க வேண்டும்.) பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 12.9 சதவிகிதம்தான் (ஆனால் சட்டப்படி 27 விழுக்காடு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்) தாராள மயம், தனியார் மயம், உலக மயம் (LPG) என்ற கொள்கைகள் காரணமாக பொதுத்துறை களின் எண்ணிக்கை குறைந்து தனியார்த் துறை களும், பன்னாட்டு நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன.

எனவே, சமூக நீதி - இடஒதுக்கீடு என்பது அடுத்த கட்டம் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு நோக்கி கவனம் திரும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இப்பொழுதே அரசுத் துறைகளில் பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு தனியார்த் துறைகளில் முக்கியமான கேந்திரப் பதவிகளில் போய் அமர்ந்து விட்டனர்.

அத்தகையவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே; எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி ஏட்டில் (11.8.2012) வெளிவந்துள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை தரக் கூடியதாக இருக்கிறது.

முன்னேறிய ஜாதியினர் 92.6 சதவிகிதம் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 44.6 சதவிகிதம் அளவுக்குப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்து கின்றனர். இவர்கள்தான் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யும் இடத்தில் இருக்கின்றனர். உயர் ஜாதிக்காரர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் அந்த இடத்தில் அமர்ந்திருக்கும் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கோ, பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ பார்ப்பனர் அல்லாதாருக்கோ வாய்ப்புக் கிடைக்கும் என்பது குதிரைக் கொம்பே! பார்ப்பனர்களின் குணாதி சயத்தை அறிந்தவர்கள் இந்த முடிவுக்குத் தான் வர முடியும்.

மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது குறித்துப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சமூகநீதிப் பிரச்சினையில், இட ஒதுக்கீடு திசையில் திராவிடர் கழகம் எப்பொழுதுமே தொலைநோக்கோடு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கக் கூடிய - அரசியல் சாராத சமூக நீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி இயக்கமாகும்.

எனவே தந்தை பெரியார் பிறந்தநாள் செய்தியாக தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு என்பதில் திராவிடர் கழகம் தன் பணியை முடுக்கிவிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் கூறி இருக்கிறார்.

இதில் கட்சிகளைக் கடந்த அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.
20-9-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

நாமம்!

செய்தி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிழக் குக் கடற்கரை சாலைப் பகுதிகளில் பக்தர்களுக்கு கொழுக்கட்டை - சுண்டல் - அதிமுகவினர் ஏற்பாடு.

சிந்தனை: அண்ணா திமுக என்பதை ஆன்மிக திமுக என்று மாற்றிக் கொள்ளலாம் அல்லவா! வாழ்க அண்ணா நாமம்! 20-9-2012

தமிழ் ஓவியா said...

மதக் குறி

மதக் குறி என்பது மாட்டு மந்தைக்-காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே, மதத் தலைவன் தன் மதத்தைப் பின்பற்று கிறவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்திய குறியேயாகும்.

பெரியார்(விடுதலை, _ 25.5.1950)