Search This Blog

8.9.12

உயர்நீதிமன்றத்திற்கு 150ஆம் ஆண்டுவிழா அழைப்பிதழில் திருவுக்குப் பதில் ஸ்ரீ வந்தது எப்படி?

150 ஆண்டு காணும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு; நமது சிறப்பான வாழ்த்துகள் விழா அழைப்பிதழில் திருவுக்குப் பதில் ஸ்ரீ வந்தது எப்படி?திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 150ஆம் ஆண்டு விழா இன்று தலைநகர் சென்னையில் மிகவும் சிறப்புடன் நடைபெறுகிறது. நமது நல்வாழ்த்துக்கள்! 100 ஆண்டுகளுக்கு முன் அதிகம் காணப்படாமல் இருந்த சமூகநீதிக் கொடி இன்றுதான் பட்டொளி வீசிப் பறக்கின்றது!

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதன் கருத்துச் செறிந்த தன்னலமற்ற போராட்டங்களும்தான் அந்த சமூக நீதிக் கொடி ஏற்றப்பட்டதற்கும், அது தலை தாழாமல் பறப்பதற்கும் காரணம் என்பதை, பலனை அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாய வழக்குரைஞர்கள், நீதிபதிகள் எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளனர் என்பது கேள்விக் குறியே - என்ற போதிலும், எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மூதுரைக்கேற்ப, நன்றி என்பது பயன் பெற்றோர் காட்டவேண்டிய பண்பு. உதவியோர் எதிர்பார்த்தால் அது சிறுமைக்குணம் என்பதே தந்தை பெரியார் தம் அறிவுரை!

இந்தியாவின் இதர மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் இன்னமும் சமூக நீதிக் கொடிகள் - இங்குள்ளதைப் போல் கம்பீரமாகப் பறக்கவில்லை என்பது கவலைக்குரிய, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதொரு செய்தியாகும்.

இன்னமும் ஏராளமான வழக்குகள் ஏன் தேங்கி உள்ளன? (மற்ற மாநிலங்களின் நீதிமன்றங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்பது ஒரு ஆறுதல் என்றாலும் கூட) தாமதிக்கப்பட்ட  நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா!

அது மட்டுமல்லாமல், அரசுகளின் அதீதச் சட்டங்கள் - நடவடிக்கைகளிலிருந்து அப்பாவி மக்களையும், நிறுவனங்களையும், ஜனநாயக மரபுகளையும் காப்பாற்றும் மக்களின் கடைசி நம்பிக்கையாக உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் (சில நேரங்களில் மாறுபட்டும் இருக்கலாம்) தான் என்பதால் வழக்குகளும் பெருகிடும் நிலை உள்ளது!

அழி வழக்குகள், அக்கப்போர் வழக்குகளைத் தடுத்து, அவை உண்மையான பொதுநல வழக்குகள் (Public Interest Litigation - PIL) அல்ல என்றும் நம் நீதியரசர்கள் கண்டிப்பதும் தண்டிப்பதும் கூட வரவேற்கத்தக்கதே!

தற்போதுள்ள, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஜஸ்டிஸ் மாண்பமை இக்பால் அவர்கள் யார்மாட்டும் தேர்ந்து ஓர்ந்து கண்ணோடாது  நீதி பரிபாலனம் செய்வதும், நமது நீதியரசர்களும் அந்த மாண்பை உயர்த்துவதும் மிகவும் சிறப்பான அம்சங்கள் ஆகும்.

இந்தப்படி நடக்கும் பொன்விழா அழைப்பிதழில் ஸ்ரீ (Sri) என்பது எப்படி நுழைந்தது? திரு (Thiru) என்பதுதான் தமிழக அரசின் ஆணைப்படியான நடைமுறை. அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக வந்தவுடன் போட்ட ஆணைகளில் இது முதலாவது ஆகும்.

தமிழ்நாடு அரசு நிதி உதவி செய்து, தமிழக  முதல் அமைச்சரும் கலந்து கொள்ளும் ஒரு முக்கிய விழாவில் ஏன் தமிழ் புறக்கணிக்கப்படவேண்டும்? புரியவில்லையே!


இதற்கு மூல காரணம் யார்? தலைமை நீதிபதி அவர்கள் இதனை விசாரித்து இனி வகுக்கும் நிகழ்ச்சிகளில் இது போன்ற சமஸ்கிருதமயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம் -----------”விடுதலை” 8-9-2012

18 comments:

தமிழ் ஓவியா said...

பொது நுழைவு தேர்வு: தமிழக அரசு கடும் எதிர்ப்பு

சென்னை, செப்.8-பிடிஎஸ்., எம்டிஎஸ். படிப் புகளில் சேர்வதற்காக இந்திய பல் மருத்துவக் கவுன்சில் நடத்த உத் தேசித்துள்ள, தேசிய தகுதி நுழைவுத் தேர்வை தமிழக அரசு கடுமை யாக எதிர்ப்பதாக முதல் வர் கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம்:

பிடிஎஸ் மற்றும் எம்டிஎஸ் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு முறை கொண்டு வர இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற் கான அறிவிப்பு அரசி தழில் வெளியிடப்பட் டுள்ளது எனது கவனத் துக்கு கொண்டு வரப் பட்டது. இந்த தருணத் தில், தேசிய நுழைவுத் தேர்வுகள் முறைக்கு எனது கடுமையான எதிர்ப்பை மீண்டும் தெரி வித்துக் கொள்கிறேன்.

இதேபோன்று இள நிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு களுக்கு நுழைவுத் தேர்வு முறை கொண்டு வர தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரி வித்து தங்களுக்கு 30.07.2012ம் தேதி கடிதம் எழுதியதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும்

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தமிழகம் எடுத்த தொடர் நடவ டிக்கைகளின் பயனாக தமிழகத்தில் 2007-2008ஆம் ஆண்டிலி ருந்து தொழில் படிப் புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளால் கிராமப்புற மற்றும் சமூக, பொரு ளாதார ரீதியில் பின்தங் கிய மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படு வர் என்பது நிபுணர் குழுவின் விரிவான ஆய்வுகளில் தெரிய வந்தது. இதையடுத்து, நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இது போன்ற நுழை வுத் தேர்வுகள் என்.சி. இ.ஆர்.டி மற்றும் சி.பி. எஸ்.சி பாடத்திட்டத் தின் அடிப்படையில் தான் நடத்தப்படும் என்பதால் மாநில பாடத் திட்டங்களில் 12ஆம் வகுப்பு படித்த கிராமப்புற மாணவர் களால் தேசிய அளவி லான நுழைவுத் தேர்வில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

தொழிற்கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் தாழ்த் தப்பட்டோர், பழங் குடியினருக்கு சமூக நீதியை காக்கும் நோக் கத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை தமி ழக அரசு அமல்படுத்தி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு முறையை அமல் படுத்தினால் இளநிலை மற்றும் முதுநிலை மருத் துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறையை சுமூகமான முறையில் அமல்படுத்துவதில் குழப் பத்தையும் சட்டச் சிக் கலையும் ஏற்படுத்தும்.

எனவே, பிடிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப் புகளுக்கு இந்திய பல் மருத்துவக் கவுன்சில் கொண்டு வர உத்தேசித் துள்ள, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு முறையை தமிழக அரசு கடுமையாக எதிர்க் கிறது. இந்த நுழைவுத் தேர்வு முறையிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவும், இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு தற்போதுள்ள நடை முறையை தொடர்ந்து கடைபிடிக்க அனும திக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

8-9-2012

தமிழ் ஓவியா said...

யார்தான் பொறுப்போ?

குஜராத் மாநிலம் நரோடா பாட்டியாவில் முசுலிம்களுக்கு எதிராக நரேந்திரமோடி முதல் அமைச்சராக இருந்த பிஜேபி ஆட்சியில் வன்முறை ஏவி விடப்பட்டு ஒரே இடத்தில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் மோடி அமைச்சரவையில் இருந்த பெண் அமைச்சர் மாயபென் கோட்நானி உட்பட 32 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். பெண் அமைச்சர் உட்பட 32 பேர்களுக்கு 28 ஆண்டு தண்டனை என்றால், குஜராத் விசுவ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் பாபு பஜ்ராங்கிற்கு வாழ்நாள் முழுமையும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முதல் அமைச்சர் பதவியிலிருக்கும் நரேந்திர மோடிக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. இதற்குப் பொறுப் பேற்று மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் வெடித்துக் கிளம்பியுள்ளது.

ஆனால் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள் என்ன சொல்லுகிறார்? நீதிமன்றம் மோடியைக் குற்றப்படுத்தவில்லை; மோடிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார் என்று இந்த புதிய வக்கில் வக்காலத்துப் போட்டு எழுதுகிறார்.

நரேந்திரமோடி ஆட்சியில்தான் 2000 பேர்களுக்கு மேலான முசுலிம்கள் குழந்தைகள் உட்பட படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் யார்? மோடி இடத்தில் பிஜேபி சாராத ஒருவர் இருந்திருந்தால் சோவின் பேனா இப்படி எழுதுமா?
அவர் சொல்லுகிற விவாதப்படி வைத்துக் கொண்டாலும் நீதிமன்றம் மோடிமீது குற்றம் சொன்னதே கிடையாதா? நீரோ மன்னன் என்று மோடியை உச்சநீதிமன்றம் சொன்ன தற்கு மேல் வேறு என்ன சொல்ல வேண்டும்?

குஜராத்துக்குள் வழக்குகள் நடத்தப்பட்டால் நீதி கிடைக்காது என்று கூறி, பல வழக்குகளை உச்சநீதிமன்றம் மகாராட்டிர மாநிலத்துக்கு மாற்றியதே - அதன் பொருள் என்ன?

முன்னாள் பெண் அமைச்சர் தண்டிக்கப் பட்ட வழக்கில்கூட நீதிபதி ஜோத்ஸ்நா என்ன கூறியுள்ளார்? நரோடா பாட்டியாவில் நடைபெற்ற வன்முறையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது இந்திய அரசமைப்புச் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு ஏற்பட்ட புற்று நோய் என்று குறிப்பிடவில்லையா? இது அம்மாநில ஆட்சியைப் பற்றிச் சொல்லப் பட்டதில்லையா? குஜராத்தில் நடத்தப்பட்ட மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத 28 பேர்களின் உடல்களைத் தோண்டி எடுக்கப் பட்டது தொடர்பாக சமூக சேவகர் டீஸ்டா செட்டால் வாட்மீது மோடி அரசு தொடுத்த வழக்குப்பற்றி உச்சநீதிமன்றம் என்ன சொன்னது? அவரைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்ட வழக்கு என்று குஜராத் மாநில அரசை சாடவில்லையா? குஜராத் அரசு என்றால் முதல் அமைச்சர் மோடிக்கு சம்பந்தம் இல்லை என்று சோ சொன்னாலும் சொல்லு வார். கண் மூடித்தனமாக - இந்துத்துவா வெறியரை ஆதரிப்பது என்று முடிவு செய்து கொண்ட பிறகு, கண் மூடித்தனமாக எழுதுகிறார் என்பதுதான் உண்மை.

ஊழல் வழக்கை விசாரிக்கக்கூடிய லோக் அயுக்தாவிற்கு நீதிபதியை ஆளுநர் நியமித்தது தொடர்பான பிரச்சினையில் குஜராத் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்ன கூறினார்?

மக்களாட்சியின் சாரமான சட்டத்தின் ஆட்சியில் உள்ள நம்பிக்கையை சுக்கு நூறாக நொறுக்கி விட்டது என்று கூறிடவில்லையா?

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மதக் கலவரம் வரலாறு காணாத பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டதற்கு அம்மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், யார்தான் பொறுப்பாம்? அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கடவுள்மீது பழி போட்டாலும் போடக் கூடியவர்கள்தான் - இந்துத்துவாவாதிகள். 8-9-2012

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சியின் சரிவும் பெரியாரின் துணிவும்!


நீதிக்கட்சியின் ஆதரவோடு டாக்டர் வி.சுப்பராயன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆட்சியைத் தொடர்ந்து 1937 வரை சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியே தொடரும் நிலை இருந்து வந்தது.

1937 சனவரியில் சென்னை மாகாணத்திற்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அத் தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் எழ முடியாது என்று கருத்ததக்க அளவுக்கு கடுமையான தோல்வியைத் தழுவியது. கட்சியின் தலைவரும் முதல்வருமான பொப்பிலி ராஜா மற்றும் பி.டி.ராஜன் பெத்தாபுரம் ராஜா உட்பட பெரும்பாலோரும் மண்ணைக் கவ்வினார்கள். கட்சிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது.

காங்கிரஸ்காரர்கள் கிண்டலும் கேலியுமாகப் பேச ஆரம்பித்தார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஆயிரம் அடிக்கும் கீழ் புதைக்கப்பட்டு விட்டது என்று ஆனந்தப் பாட்டுப்பாடினார்கள். சுயமரியாதை கட்சிக்கும் இறுதிக் கடன் செய்யப்பட்டு விட்டது. இனி ஈ.வெ.ரா.வுக்கும் இந்நாட்டில் வேலை இல்லை. அவர் காங்கிரசில் சரணடைந்துவிட வேண்டியதுதான் என்றெல்லாம் மனம் போனவாறு காங்கிரஸ்காரர்களும், பார்ப்பன தலைவர்களும் பேச ஆரம்பித்தார்கள், பார்ப்பன ஏடுகளும் கண்ட மாதிரி எழுதின.

நீதிக்கட்சி தலைவர்களும் கட்சிக்காரர்களும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்து விட்டனர். அந்த நேரத்திலும் தந்தை பெரியார் அவர்கள்தான் நிலை குலையாமல் நிமிர்ந்த நெடுங்குன்றாய் எழுந்து நின்று கட்சிக்கும், மக்களுக்கும் வழிகாட்டினார்கள்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே 1937 சனவரியில் சென்னை கோடம்பாக்கத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சு, தந்தை பெரியார் அவர்களின் கணிப்புக்கும், செயல்பாட்டுக்கும் கட்டியங் கூறுவதாக அமைந்திருந்தது. ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்தால் நான் மகிழ்ச்சி அடைவதோடு, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்துக்குப் பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக் கூடும் என்கிற தன்மையால், இயக்கப் பிரச்சாரம் பலமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜஸ்டிஸ் கட்சி ஜெயித்தவர்கள் தலைவர்கள், பதவி பெற்றவர்கள் ஆகியவர்களினது அநாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில் சிதறிக் கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய தோல்வி ஒரு சாதனமாகும்.
(தமிழர் தலைவர், பக்கம் 167)

தந்தை பெரியார் அவர்களின் இந்தவுரையில் தோல்வியை வெற்றியாக மாற்றும் அசாதாரண வைர நெஞ்சத்தைக் காணமுடிகிறது. தந்தை பெரியார் அவர்கள் கணித்தது போலவே நீதிக்கட்சி அந்தத் தேர்தலில் மீளமுடியாத தோல்வியை சந்தித்த நேரத்தில், அதனை எழுந்து நிற்கச் செய்து கையைப் பிடித்து வெற்றிப் பாதையில் செல்லும் பொறுப்பை தன்தலையில் போட்டுக் கொண்டு தந்தை பெரியார் அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். மற்ற நீதிக்கட்சித் தலைவர்களைப் போல தலைமறைவு வாழ்க்கையை அவர்கள் மேற்கொண்டார்கள் இல்லை. காங்கிரஸ் பெரு வெற்றிபெற்று, நீதிக்கட்சி படுபாதாளத்தில் வீழ்ந்த அந்த நிலையிலும் தந்தை பெரியாரின் எழுத்துகள் எவ்வளவு திராணி நிறைந்ததாக இருந்தன!

தமிழ் ஓவியா said...

பெரியார் சொன்ன தேங்காய் மூடி கதைஎங்கள் ஊரில் ஒரு முதியவர் இருந்தார். தேங்காய் மூடி என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும். உடனே கோபம் வந்துவிடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார், எனது சிறுவயதில் எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதேபோல் இன்று இந்தி ஒழிக என்று எங்கு யார் சொன்னாலும் போதும்; ஆச்சாரியார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன்? இனி தேங்காய் மூடி என்றாலே போதும், அவர் நிச்சயம் வருவார். (கைதட்டல்) ஏன்? அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையைப் பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால், நான் அடிக்கடி இங்கு வர வேண்டியது மில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி நூற்றுக்கணக்காய் இருக்கிறது தேங்காய் மூடிக் கதை.

தந்தை பெரியார்

(இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையேகிய தாய்மார்களைப் பாராட்டி 14.11.1938 அன்று சென்னை பெத்துநாயக்கன் பேட்டை தமிழ்க் கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...

இராமசாமிப் பெரியார் அம்மானை (காஞ்சி வித்துவான் கணேச முதலியார்)


(அம்மானை மூன்று பெண்கள் கழங்கு வைத்து ஆடும் ஆட்டம் ஒவ்வொரு பாட்டிலும் முதல் இரண்டடிகளில் உள்ளது. ஒரு பெண் கூற்று பின் இரண்டு அடிகளில் வருவது. இரண்டாம் பெண் கூற்று, அது கேள்வியாக இருக்கும். அக்கேள்விக்கு மூன்றாவது பெண் அய்ந்தாம் வரியில் பதில் சொல்லுவாள். இங்ஙனம் வருகின்ற பாட்டுக்கு அம்மானை என்று பெயர்)

1. நீதியுடை நம்பெரியார் நிற அடிமைக் குல அடிமை!
சாதிமுறை ஒழித்திடலே சால்பென்றார் அம்மானை!
சாதிமுறை ஒழித்திடுதல் சால்பென்றார் ஆமாயின்,
நீதிமுறை பிழையாதோ நேரிதோ? அம்மானை!
நீதிமுறை நீடூழி நிலைபெறுங்காண் அம்மானை!

2. தீண்டத் தகாதவரைத் தீண்டியுடன் வாழ்வதுவே
மாண்புடைத்தென் றெம்பெரியார் மலர்ந்தனர் காண் அம்மானை!
மாண்புடைத் தென்றெம்பெரியார் மலர்ந்தனரே ஆமாயின்,
தீண்டாதார் நம்போன்றன் றோஉயர்வர்? அம்மானை!
உயர்தற்கே நம்பெரியார் உரைத்திட்டார் அம்மானை!

3. உத்தியோகப் பெயரெல்லாம் உறுசாதிப் பெயரென்றே
வித்திட்டார் வீணரென்றார் வீறுடையார் அம்மானை!
வித்திட்டார் வீணரெனல் உண்மையே ஆமாயின்,
ஏய்த்ததனை நம்மவரேன் விட்டனர்காண்? அம்மானை!
நம்மவரா உணர்வற்ற நடைப்பிணங்காண் அம்மானை!

4. சாதிப்பூசல் ஒழிந்தால் - சமத்துவமும் வந்தடைந்தால்-
நீதியொடு சுயராஜ்யம் நிலவுமென்றார் அம்மானை!
நீதியொடு சுயராஜ்யம் நிலவுமென்றார் ஆமாயின்,

பார்ப்பனரை வெறுப்பதேன்? பண்பலவே அம்மானை!
பார்ப்பனரே சாதிகளை படைத்தவர்காண் அம்மானை!
விடுதலை, 14.11.1938 பக்கம் 4

தமிழ் ஓவியா said...

ஈரோட்டுக்குப் போகிறோம்!ஆம் அந்த வீதியில்தான்
அவர் நடந்தார்
ஆம் அந்த வீதியில் தான்
தம் நண்பர்கள் சகாவோடு
சுற்றித் திரிந்தார்
அடங்காத பையன்
என்று
அவர் காலில் கட்டையைக்
கட்டிய போதும்
அதனையும் இழுத்துக் கொண்டு
சினேகிதர்களுடன்
சிலாகித்து மகிழ்ந்தார்
திண்ணைப் பள்ளிக்
கூடத்திலும் கேள்விதான்
தெருவில் சுற்றித் திரிந்தபோதும்
கேள்விக்கணை
கேள்விக்கணைகள்தான்!
கடை வீதியில்
கல்லிடைக்குறிச்சி
அய்யரிடத்திலும்
கேள்வி கேள்விதான்!
வீட்டுக்குவந்த உபந்நியாசி
களிடத்திலும் கேள்விதான்
பாகவதர்களிடமும்
பகுத்தறிவுத் தோட்டாதான்
கேள்வி கேள்வி எனும்
கிடையை மேய்த்துக்
கொண்டே திரிந்தார்!
அந்தக் கேள்வி
காந்தியார் வரை நீண்டதே!
ஏன் கடவுள் சமாச்சாரம்வரை
கரண்டிப் போட்டு இழுத்ததே!
கேலியோடு கேளிக்கையோடு
முடிந்துவிட்டதா?
பிளேக்நோய் வந்து மக்கள்
சுருண்டு விழுந்தபோது
மருத்துவமனைக்குத்
தூக்கிச் சென்றதும்
அந்தத் தோள்கள்தான்
சவமாய் விழுந்தபோதும்
சளைக்காமல்
சுடுகாட்டுக்குத் தூக்கிச்
சென்றதும் அந்த இளந்
தோள்கள்தான்
படித்துக் கிழித்ததுபோதும்
ராமா! வியாபாரத்தை
கவனி என்று
சொன்ன போதும்கூட அங்கும்கூட
சட்டாம்பிள்ளைதான்
வாயாடிதான்!

தமிழ் ஓவியா said...

வாலிப வயதிலே
பெரிய மனிதன்ஆன
அற்புதம்! அற்புதம்!!
நகராட்சியின் தலைவர்
நாற்காலியிலும் அமர்ந்தார்
கெட்ட பெயர்பற்றி
கவலைப்படவில்லை
சாலைகளை அகலப்படுத்தினார்
சகநண்பர்கள் எதிர்த்தார்
சேறுவாரி இறைத்தார்
சிரித்துக் கொண்டே
செயலென்னும்
சிலம்பெடுத்து ஆடினார்
29 பதவிகள் தேடித் தேடி
வந்தன
கால்சீட்டில் அத்தனையையும்
கழித்துக் கட்டி
நடைபோட்டார்
காங்கிரஸ் சாலையிலே;
அங்கு மட்டுமென்ன?
அவர்தான் தலைவர்!
எங்கு சென்றாலுமே
எங்கிருந்துதான்
தேடி வருமோ
அந்தத் தலைமைப் பதவி?
கொள்கைக்குக்
குந்தகம்வரும் என்றால்
தலையைச் சுற்றி
தூக்கி எறிந்த பதவிகள்
அடேயப்பா எத்தனை, எத்தனை!
வெள்ளைக்கார பிரபு
கெஞ்சவில்லையா?
சென்னை மாகாண
பிரதமர் பதவியை
ஏற்றருளுக என்று
ஒரு முறையல்ல
இருமுறையும்
தேடி வந்த பதவியைத்
திருப்பி அனுப்பியது
சாதாரணமா?
மயங்கவில்லையே அய்யா!
மக்கள் மனமென்னும்
சிம்மாசனத்தில்
வீற்றிருக்கத்தானே
ஆசைபட்டார்!
மாலைநேரத்தில்
மக்கள் கடலைக் கூட்டி வைத்து
பகுத்தறிவுப் பாடம்
நடத்துவதில்
எத்தனை எத்தனை உற்சாகம்!
ஒரு கட்டத்தில்
கல்லடியும் பட்டார்
இன்னொரு கட்டத்தில்
எடைக்கு எடை
எத்தனை எத்தனைப்
பரிசுகளைப் பெற்றாய் பெருமானே!
ஈரோடு எனும் ஊர்
உலக வரைபடத்தில்
பேரோடு நிற்கிறதே!
அங்குதானே
குடிஅரசு பிரசவம்!
அந்தக் குரு குலத்திலே
சீடராக இருந்தவர்தானே
அறிஞர் அண்ணா!
அந்த ஈரோட்டு
மாளிகையில்தானே
அண்ணல் காந்தியிலிருந்து
அலி சகோதரர்வரை
ஆசுவாசம் பெற்றனர்!
செயப்பிரகாசு வந்ததும்
அங்குதானே!
நீ இருக்கும் இடத்தில்தான்
எல்லாம் நகர்ந்தன - நடந்தன!
அந்த ஈரோட்டிலே
நீயும்
உமது தங்கையும், மனைவியும்
நடத்திய மறியல்தானே
காந்தியாரையே
கண் திறந்து பார்க்கச் செய்தது
சமூகநீதிக் கொடி
நீ கொடுத்தது
எனக்கு, உனக்கு என்று
இந்தியாவே
போட்டி போட்டுக் கொண்டு
தூக்கிக் கொண்டு
திரிகிறதே இன்று!
மதவாதப் பாம்பின்
நஞ்சை இறக்க
எல்லோரும் ஈரோட்டு
மூலிகையைத்தானே
தேடுகிறார்கள்
உன் மண்டைச்
சுரப்பை
உலகு தேடுகிறது
உன் சிந்தனை
நீர்ப்பரப்பைத்
தேடியல்லவா
உலக மனிதப் பறவைகள்
ஓடோடி வருகின்றன.
தந்தையே உன்
அய்.எஸ்.டி. முத்திரை
எல்லோருக்கும்
இங்கே தேவைப்படுகிறது
ஆனாலும் பார்ப்பனீயம்
மட்டும்
உன்னை
அண்ட முடியவில்லை
அக்னிப் பிரதேசமாயிற்றே
மெழுகுவத்தி
அண்ட முடியுமா?
ஒண்டத்தான் முடியுமா?
நீவாழ்ந்தபோது
பேசப்பட்டதைவிட
மறைந்த நிலையிலும் மணிக்கணக்கில்
பேசப்படுகிறாய்
உள்ளூர் பிரச்சினை முதல்
உலகப் பிரச்சினை வரை
தீர்வு எளிதாய்
கிடைக்கிறது
நீ வாரி இறைத்துச்
சென்ற சிந்தனை
முத்துத் தோப்பிலிருந்து!
உன்பிறந்த நாளே
எங்களின் தேசியத் திருநாள்!
எங்கள் பிள்ளைகளுக்கு
நாங்கள் சொல்லிக்
கொடுப்பதெல்லாம்
உந்தன் அரிச்சுவடியைத்தான்
ஆறாவது அறிவென்று
அறிமுகப்படுத்தினாயே
அதனைத்தான்
தொட்டிலாக்கி
ஆராரோ பாடுகிறோம்
நீ கொடுத்துச் சென்ற
கொள்கைச் சாவி
பத்திரமாய் இருக்கிறது
ஆசிரியர் பெருமகனிடம்.
எங்களைத் தூங்க
விடுவதில்லை அவர்
அவரும் தூங்குவதில்லை
நாம் தூங்கினால்
தமிழன் திருடப்
படுவானே!
சதா விழிப்புதான்
சதா உன் பணிதான்!
விண்ணப்பம் போடும்
இடத்திலிருந்து
எங்களைக் கரை ஏற்றினாய்
எதிரிகள் இப்பொழுது
விண்ணைப் பிக்கும் நிலை;
அடேயப்பா,
எத்தனைப் பெரிய வெற்றி
எங்கள் தலை வருக்கு!
இந்த ஆண்டு ஒரு சிறப்பு
என்ன தெரியுமா?
எங்கள் அய்யா பிறந்த
ஈரோட்டிலேயே
ஈரோட்டிறைவனுக்கு
ஈடில்லாப் பெருவிழா!
எழுச்சி மாநாடு
எனும் முத்திரையோடு!
திராவிடர் இயக்க நூற்றாண்டு
விழாவும் சேர்ந்து கொண்டது
கேட்கவும் வேண்டுமா?
கிடுகிடுக்கப் போகிறது
கிளர்ந்து வரப் போகிறார்
குடும்பம் குடும்பமாய்!
எங்களுக்கு முகவரி தந்த
ஈரோட்டுக்குச்
செல்லா திருப்போமா!
நாட்களை எண்ணிக்
கொண்டிருக்கிறோம்
செப்டம்பர் பதினேழே
வா,வா, விரைந்து வா!

- கவிஞர் கலி. பூங்குன்றன் 8-9-2012

தமிழ் ஓவியா said...

அன்றும் இன்றும்

அன்று

செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு 1929-_ ஒரு வரலாற்றுத் தொகுப்பு நூலில், பக்கம் 45இல் இருப்பது:-

முதலாவதாக மகாநாட்டுக்கு யானைகள் தருவதாய் வாக்களித்திருந்தவர்களிடம் சென்று, அவற்றைத் தர வொட்டாமல் வேண்டிய சூழ்ச்சி செய்து வருகின்றார்கள்.

அதனால் சுமார் 150 மைல் தூரத்திலிருந்து யானைகள் வர ஏற்பாடு செய்திருக்கின்றது. இவ்வளவு தூரத்திலிருந்து யானை கள் வர வேண்டுமென்று முதலிலேயே தெரிந்திருந்தால் யானை களைப் பற்றிய பிரஸ்தாபமே வெளியிட்டிருக்கப்பட மாட்டாது.

நிற்க, ரயில்வேக்காரர்களாலும் அவர்கள் நமக்கு முதலில் நம்பிக்கை கொடுத்திருந்தவைகளுக்கு விரோதமாக காரியங்கள் செய்யச் செய்து விட்டார்கள். உதாரணமாக மகாநாட்டுப் பந்தலுக்குச் சிறிது சமீபமாக ஒரு ஸ்டேஷன் ஏற்படுத்தித் தருவதாக நம்மை நம்பச் செய்தார்கள். கடைசியாக மகாநாடு 4 நாள் இருக்கும்போது அதன் செலவுக்கு 3209 ரூ. கட்டினால்தான் ஸ்டேஷன் போடப்படும், என்று ரயில்வேக்காரர்கள் தந்தி அடித்து விட்டார்கள்.

இன்று

மாநாட்டிற்கு அனுமதி கிடையாதென்று நீதிமன்றத்திற்குச் சென்ற அ.இ.அ.தி.மு.க. அரசு
வடக்கே இருக்கிற மத்திய அரசு, டில்லி அரசுகூட ஈழ மாநாடு நடத்து வதைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லி அனுமதி அளித்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சர்க்கார் - ஈழ மாநாடு நடத்துவதை நாங்கள் ஏற்க முடியாது என்று, தான் நேரடியாகச் சொன்னால் நன்றாக இருக்காது. ஊர் கேலி பேசும் என்ற எண்ணத்தால், காவல்துறை அதி காரியை விட்டு ஈழ மாநாட்டிற்கு தமிழ் ஈழ மாநாட்டிற்கு தடை விதித்தார்கள்.

- க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி 8-9-2012

தமிழ் ஓவியா said...

தீபாவளி என்ற மூடநம்பிக்கை பண்டிகையும் அதன் விளைவால் ஏற்படும் உயிர்ப்பலிகளும்

பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும் என்பது பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழியாகும்.

பக்தியின் விளைவால் கொண் டாடப்படும் தீபாவளி என்ற மூட நம்பிக்கைப் பண்டிகை தோன்றிய விதத்தை இங்கே காண்போம்.

பூமிதேவி என்னும் இந்த மண் ணுக்கும், மகா விஷ்ணு என்று சொல்லப்படும் ஒரு தெய்வத்திற்கும் நரகாசூரன் என்னும் ஒரு மகன் பிறந்தானாம். அவன் அதிக பலசாலியாக இருந்து கொண்டு பார்ப்பனர்களுக்கு துணைவராகிய தேவர்கள் என்பவர்களையெல்லாம் மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டிருந் தானாம். ஆதலால், தேவர்களெல்லாம், தமிழர் குலமாகிய அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாகச் சொல்லப்பட்ட நரகாசுரனுடைய கொடுமையை சகிக்க முடியாமல் மகாவிஷ்ணு என்னும் அந்த தெய்வத்தினிடம் சென்று முறை யிட்டார்களாம். மகாவிஷ்ணு என்பவரும், அந்த நரகாசுரனைக் கொன்று தேவர்களுடைய கஷ்டத்தை நீக்குவதாகக் கூறினாராம். அப்பொழுது பூமிதேவி, நரகாசுரனைக் கொல்லும் போது தன்னையும் உடன் வைத்துக் கொண்டே தன் மகனைக் கொல்லும் படி வேண்டிக் கொண்டாளாம். அதற்கு மகா விஷ்ணுவும் சம்மதித்தாராம்.

அதன் பிறகு மகா விஷ்ணு கிருஷ்ணனாகப் பிறந்து, சத்திய பாமையாகப் பிறந்திருந்த பூமி தேவி யையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் ஒரு தீவில் வசித்து வந்த நரகாசுரனைக் கொன்றானாம். கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறந்த நாளை பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டுமென்று வரம் கேட்டானாம் கிருஷ்ணனும் அவ்வாறே வரம் கொடுத்தானாம்.

இது தான் தீபாவளிப் பண்டிகைக் காகக் கற்பிக்கப்பட்டிருக்கும் கதை. இக்கதையை நம்பி தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் மக்களை சிறிதாவது புத்தியுள்ளவர்களென்று கூறமுடியுமா என்பதை நன்றாய் யோசனை செய்து பாருங்கள்!

ஆகவே, இத்தகைய அர்த்தமற்ற கதையைத் தெய்வீகமுள்ளதாக நம்பிக் கொண்டு, இதன் பொருட்டு ஒரு தேசம் கோடிக்கணக்கான பொருளை ஒரே நாளில் செலவு செய்யுமானால், அதை அறிவுடைய தேசமென்று சொல்ல முடியுமா?

தீபாவளிக்காக தயாரிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் உயிரிழப்புகள்

சிவகாசியில் தீபாவளி பண்டிகைக் காக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வருடாவருடம் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்படும் விபத்தில் பல உயிர்கள் பலியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் சிவகாசியில் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5.9.2012 அன்று பகல் 12 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 38 பேர் உயிரி ழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பட்டாசு தயாரிக்க இரசாயனங்களை கலந்த போது ஏற்பட்ட உராய்வில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆலை முழுவதும் பட்டாசுகளும், ரசாயனங்களும் நிறைந்து இருந்ததால் பயங்கர தீ விபத்து ஏற் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள் ளன. இந்த விபத்தில் பட்டாசு ஆலை முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
பட்டாசு வெடிபொருள்கள் வெடித் துச் சிதறியதில் சுமார் 40 அறைகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகி யுள்ளன.

இதுவரை நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள்...

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற விபத்தில் 11 பேரும், 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற விபத்தில் 4 பேரும், 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிகழ்ந்த விபத்தில் 7 பேரும், 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்தில் 7 பேரும், 2005 ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத் தில் 13 பேரும் இதுவரை உயிரிழந்துள் ளனர். கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற விபத்தில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டாசு ஆலைத் தொழிலாளர்களின் பரிதாப நிலை!

பட்டாசு ஆலைத் தொழிலாளர்க ளின் நிலையை அருகில் போய்ப் பார்த்தால் உயிர் பதைபதைப்புக்குள் ளாகும் நமக்கு. அப்படி ஒரு அவலமான நிலையில் அந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

எப்போது உயிர் போகும், என்ன ஆவோம் என்றே தெரியாத உறுதியற்ற வாழ்க்கைச் சூழலில் இவர்கள் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு விநாடியையும் கழித்து வருகிறார்கள். பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்போர் பெரும்பாலும் இளம் வயதுப் பெண்களும், வேறு எங்கும் போய் வேலை பார்க்க முடியாத பெண்களும்தான். சிறார்களும் இதில் ஏராளம். இவர்கள் அனைவருமே படிப்பறிவில்லாதவர்கள். பட்டாசு ஆலைத் தொழிலாளர் ஒருவர் கூறும்போது,

தமிழ் ஓவியா said...

எனக்கும் என்னைப் போன்றவர் களுக்கும் சிவகாசியை விட்டால் வேறு எதுவும் தெரியாது. நினைவு தெரிந்த நாளாக பட்டாசுத் தொழில்தான் செய்து வருகிறேன். வேறு வழியில்லை. என்னுடைய சம்பளம்தான் என் வீட்டில் அடுப்பு எரிய உதவுகிறது. உயிராபத்து நிறைய இருக்கிறதுதான். ஆனால் வேறு வழியில்லையே... என்றார் மற்றொரு தொழிலாளியோ, நாங்கள் ரொம்ப நாள்களாகவே எங்களுக்குப் பாதுகாப்பு கோரி கோரிக்கைகள் விடுத்தபடிதான் இருக்கிறோம். ஆனால் முதலாளிகள் அதைக் கண்டு கொள்வதே இல்லை. இப்படி ஏதாவது விபத்து நடக்கும்போதுதான் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் வருகிறார்கள். இப்படி குமுறிக் கொண்டிருக்கும் உள்ளங்கள்தான் சிவகாசி, சாத்தூர், திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் உள்ளன. ஆனால் அதைத் தாண்டி இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாத மிகச் சோகமான அவல நிலை.

தீபாவளிப் பண்டிகையால் ஏற்படும் இழப்புகள்!

தீபாவளியைக் கொண்டாடுவதற்காக ஒரு குடும்பத்தில் ஏற்படும் பொருள் இழப்பு எவ்வளவு தெரியுமா?

குழந்தைகளுக்குப் புதிய ஆடைகள் வாங்கவேண்டும்; பலகாரங்கள் செய்யவேண்டும் இப்படி ஒரு கட்டாய நிலைக்கு ஒரு குடும்பம் தள்ளப்பட் டுள்ளது.

ஒரு மனிதனின் மாதச் சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவது என்பது எவ்வளவு கடினம்.

ஒரு பட்ஜெட்டைப் போட்டுத்தான் குடும்பத்தை நடத்தவேண்டிய சூழல். இச்சூழலில், மூட நம்பிக்கையின் முட நாற்றமாக தீபாவளி என்ற பண்டிகையை, கடன் வாங்கியாவது கொண்டாடு வதற்கு மக்கள் தயாராக உள்ளனர். பின்னர் அந்தக் கடனை அடைப்பதற்கு அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

ஊடகங்கள் என்று சொல்லப்படும் தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வார இதழ்களோ இம்மூட நம்பிக்கையி லிருந்து மக்களைக் காப்பாற்ற எத்தனிக் கின்றவா என்றால் அதுவும் இல்லை? (ஒரு சில நாளேடுகள், இதழ்களைத் தவிர, குறிப்பாக, விடுதலை, உண்மை போன்ற பகுத்தறிவு நாளேடுகளைத் தவிர) தீபாவளிப் பண்டிகையைப் பற்றி புகழ்ந்து கூறும் நாளிதழ்கள் -அதற்காக மலர் போடும் நாளிதழ்கள் - இலவசங் களைத் தரும் நாளிதழ்கள் - இதன்மூலம் வியாபாரத்தைப் பெருக்கி பணம் அள்ளக்கூடிய நாளிதழ்கள்தான் பெருகி வருகின்றன. மக்களை மேலும் மேலும் மூட நம்பிக்கை என்னும் பள் ளத்தில் தள்ளி மண்ணை மூடத்தான் செய்கின்றன.

இதைத் தவிர்ப்பதற்கு என்ன வழி?

தீபாவளி என்ற மூடப் பண்டி கையை ஒழிப்பதற்கு மக்களிடம் பகுத்தறிவை வளர்க்கவேண்டும். மக்களிடம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பவேண்டும். புத்தி வந்தால் பக்தி போகும் என்ற அய்யாவின் பொன்மொழிப்படி நடந் தால், பொருட்செலவும், உயிர்ப் பலியும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

-ச. பாஸ்கர், சென்னை-18

தமிழ் ஓவியா said...

சிந்தனை துளிகள்

தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால் தேவையுள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும் - _ பெஞ்சமின் பிராங்கிளின்.

எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே குடி கொண்டிருக்கின்றன. உன்னால் எதையும் சாதிக்க முடியும் - _ சுவாமி விவேகானந்தர்.
தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்கக் கூடாது தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது -_ லெனின்.

மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான் - _ புத்தர்.

புகழை நோக்கி ஓடாதீர்கள். புகழை நீக்கியும் ஓடாதீர்கள் - மான்டெய்ன்.

தமிழ் ஓவியா said...

இவர்கள் மனிதர்கள்!

புதுக்கோட்டை அருகே எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு அண்மை யில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப் பேசி முடித்தார்கள். ஒரு சில நாட்கள் சென்றபிறகு, அப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பரிசோதனைக்குப் பின்னர் அப் பெண்ணுக்கு வயிற்றில் "புற்றுநோய் கட்டி" இருப்பது தெரிய வருகிறது. எல்லோருமே ஆடிப்போனார்கள். குணப்படுத்தவே முடியாத கட்டி என்றும், புற்றுநோயின் கடைசியில் அவர் இருப் பதாகவும் மருத்துவர்கள் அறிவித்து விட்டனர். இந்நிலையில் என்ன நடந்தது தெரியுமா நண்பர்களே? இன்றைய தினம் (02.09.2012) அப்பெண்ணுக்கும், என் நண்பருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அதற்கு என் நண்பன், "நான் அப்பெண்ணை திருமணம் செய் வதாக ஒப்புக் கொண்டுவிட்டேன். வார்த்தை மீறுவது தற்கொலைக்குச் சமம். நடப்பது நடக்கட்டும்!" என இயல்பாகக் கூறினான்.

அதேபோன்று திருச்சி கே.கே. நகரில் வசிக்கும் இன்னொரு நண்பரின் நேய மும், நினைவில் வருகிறது. ஒரு வயதான தம்பதிக்கு 23 வயதில் ஒரு மகள். பக்கத்து வீட்டில் என் நண்பர் இருக்கிறார். அப்பெண்ணுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கிறது. வயதான அம்மா,அப்பாவால் தினமும் மருத்துவ மனைக்குச் செல்ல இயலவில்லை. இந் நிலையில் என் நண்பரிடம் வரு கிறார்கள். மாத்திரைகள் வாங்கவும், மருத்துவ மனை போகவும் தொடர்ந்து அவர் உதவுகிறார். ஆனாலும் நோய் குணமாக வில்லை. குணமாகாது என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இறந்து போகவும் அப்பெண் தயாராகிவிட்டார். இந்நிலையில் என்ன நடந்தது தெரியுமா நண்பர்களே? உதவி செய்யப் போன நண்பனால் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை, அதேநேரம் அப்பெண் ணின் உணர்வு களைச் சிறிதும் காய மின்றி காப்பாற்ற முடிந்தது. ஆம்! அப்பெண்ணையே நண்பர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் 15 ஆண்டுகள் கழித்து அப்பெண் இறந்து போனார். திருமண வாழ்வில் ஒருநாள் கூட அவர்கள் உடலுறவு வைத்துக் கொண்ட தில்லை. காரணம் அதற்கான உடல் தகுதியை அப்பெண் பெற்றிருக்க வில்லை.

நான் சொல்ல வருவது இதைத்தான் நண்பர்களே! முதல் செய்தியில் நிச்சய தார்த்தம் செய்து கொண்ட நண்பரும், இரண்டாவதில் திருமணம் செய்து கொண்டவரும் நம்மிடையேதான் வாழ்கிறார்கள். நாமும்தான் வாழ்கிறோம்! நான் யாரையும் பிழை சொல்லவில்லை. மாறாக நாம் அதிகம் சிந்திக்க வேண் டியிருக்கிறது.

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

இரங்கல்ஆறுதல் சொல்வாய் தேறுதல் சொல்வாய்
எந்த வழக்கு என்றாலும்
எங்களுக்கு தைரியம்
சொல்வாய்
இவ்வளவு விரைவாய்
இறுதித் தீர்ப்பு வரும்
என எதிர்பார்க்கவில்லை
அண்ணா நாங்கள்
சட்டம் தெரியும்
சரித்திரம் தெரியும்
புதிய கோணத்தில்
தெளிவாய்ப் பேசத்தெரியும்
அய்யா ஆசிரியர்மேல்
வைத்த பற்று
உனது ஒவ்வொரு பேச்சிலும்
எழுத்திலும் தெரியும்
எல்லா இயக்கதவருக்கும்
வழக்காடுவாய்
ஆசிரியருக்கு எதிர்ப்பென்றால்
சிலம்பாடுவாய் வார்த்தைகளால்
நேற்றுத்தான் உனைப்
பார்த்தேன்
உளமார அனைவரையும்
விசாரித்தாய்
உனக்கு வீரவணக்கம்
சொல்லும் நேரம்
இவ்வளவு விரைவில்
வரும் என்று நாங்கள்
நினைக்கவில்லை!
தவிர்க்க இயலாததை
ஏற்றுக்கொள்!
இன்னும் விரைந்து
செயலாற்று இயக்கத்தில்
துக்கம் மறையும்
துயரம் குறையும்
எனும் ஆசிரியரின் கூற்றை
அடிக்கடி கூறுவாய்
ஏற்றுக் கொள்கிறோம்
எங்கள் அண்ணனே!
மேலும் தந்த
இயக்கத்தின் சட்டத்துறையே!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
கருஞ்சட்டைத் தோழர்களின் கனத்த இதயங்களின் வீர வணக்கம்! வீர வணக்கம்!

வா.நேரு, மதுரை
(மறைந்த மதுரை கி.மகேந்திரன் குறித்து இக்கவிதை)

தமிழ் ஓவியா said...

பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

தமிழ் ஓவியா said...தஞ்சை,செப்.9-தஞ் சாவூர்,திருவாரூர், திருச்சி மற்றும் சிவ கங்கை மண்டலங்கள் உள்ளடக்கிய மாவட்ட, ஒன்றிய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் களின் கலந்துரையாடல் கூட்டம் 2.9.2012 அன்று மாலை 6.30 மணி அள வில் தஞ்சை - பெரியார் இல்லத்தில் நடைபெற் றது.

கூட்டத்திற்கு பகுத் தறிவாளர் கழக மாநிலத் தலைவர்வா.நேரு தலைமைவகித்தார். தஞ்சை மாவட்ட பகுத் தறிவாளர் கழகச் செய லாளர் கோபு பழனி வேல், கடவுள் மறுப்பு முழக்கங்களைக் கூறி வரவேற்றுப் பேசினார். பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் வீ.குமரேசன் தொடக்க உரையாற்றினார்.


கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவிக் கப்பட்ட கருத்துகள்:

தொழிற்சங்க முனைப்புடன் அன் றாட நடவடிக்கையாக பகுத்தறிவாளர் கழகச் செயல்பாடுகள் அமைய வேண்டும். மக்களி டையே நிலவும் மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு பொது இடங்களில் அனைவரின் கவனத் தையும் கவரும் வகை யில் உண்மை விளக்க பிரச்சாரங்களை வண்ணமிகு கனிணி பதாகைகள் நிறுவுவதன் வாயிலாக பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி மேற் கொள்ளப்பட வேண்டும். மனநோயா ளிகள் ஏன் அந்த நிலைக்கு ஆனார்கள் என்று மருத்துவ அடிப்படையில் கண்டறிவதை விடுத்து பைத்தியம் என பட் டம் சூட்டப்படும் பரி தாபநிலையினை விளக்கிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மதவெறி அமைப் பான ஆர்.எஸ்.எஸ்.ன் தமிழ் இதழான விஜய பாரதம் பள்ளிக் கூடங் களுக்கு மூன்று ஆண்டு களுக்கு அனுப்பப்படு வதன் துவக்க நிகழ்ச்சி யில் பள்ளிக் கல்வி இயக்குநர்கலந்து கொண்டது, அரசின் மதச்சார்பாற்ற நிலைக்கு மாறுதலானது. மதவெறியினை ஊட்டும் செய்திகளை மாணவர் களிடம் கொண்டு சேர்ப் பதை உடனே நிறுத்தி நட வடிக்கை எடுக்க வேண் டும்.

மேலும் பள்ளிகளில் தினமும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண் டும் என்று அரசின் அறி விப்பு நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஒரு நாள் திங்கள்கிழமை அன்று மதப்பிரார்த்த னையும் நடத்தப்பட வேண்டும் எனும் பள்ளி கல்விஇயக்குநர் அலுவலக சுற்றறிக்கையினை திரும்பப் பெற வேண்டும். மத உணர்வுகளை ஊக்குவிக்கின்ற வகை யில் மதசார்பற்ற அரசு செயல்படக்கூடாது.

பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கைப் பணி தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும். அதற்கான சேர்க்கை படிவங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கவேண்டும். பகுத்தறிவாளர் கழகப் பிரச்சாரப்பணிகள் இளம்தலைமுறை யினருக்கு எளிதிலும், விரைவிலும் சென்ற டைவதற்கு ஏதுவாக பள்ளி, கல்லூரி ஆசிரி யர்கள் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் களாக அமைந்திடல் வேண்டும். மேலும் பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பாக ஆசிரியப் பெரு மக்களுக்கு பகுத்தறிவுப் பிரச்சார பயிற்சி வகுப் புகள் நடத்த வேண்டும்.

பள்ளிப் பாடப்புத்த கங்களில் பெரியார், அவர்தம் இயக்கம் பற் றிய சில தவறான தக வல்கள் குறிப்பிடப்பட் டுள்ளன. அவற்றைக் களைந்திட உரிய அதி காரிகளிடம் எடுத்துச் சொல்லி சரியான குறிப் புகள் மாணவர்களுக்கு சென்றடையும் விதமாக ஏற்பாடு செய்திட வேண்டும்.

பெரியார் 1000 வினா - விடை நிகழ்ச்சி யினை அந்தந்தப் பகு தியில் பொறுப்பாளர் கள் மிகுந்த முனைப் புடன் ஈடுபட்டு அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்றிடும் வகையில் ஏற்பாடுகள் செய்திட வேண்டும். மேற்கூறிய கருத்துகள் குறித்து ஆக்கபூர்வமான தீர் மானங்கள் நிறைவேற் றப்பட்டன. 9-9-2012

தமிழ் ஓவியா said...

பொது இடங்களில் கோவில்கள் - பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கோவில்களா? சட்டப்படி சந்திக்கப்படும்! திராவிடர் கழக சட்டத்துறை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுசென்னை, செப். 9- திராவிடர் கழக சட்டத் துறை கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 8.9.2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

சட்ட விரோதமாக பொது இடங்களில், நடைபாதைகளில் கோவில் கட்டுவது, விதிமுறைகளுக்கு முரணாக பெரியார் நினைவு சமத்துவபுரங்க ளில் வழிபாட்டுத் தலங் களை உருவாக்குவது, அரசு அலுவலகங்களில் பூஜை உள்ளிட்ட பிரச் சினைகளை சட்ட ரீதி யாக சந்திப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

1. இரங்கல் தீர்மா னம்: திராவிடர் கழக வழக்குரைஞரணி சட் டத்துறை தலைவராக வும், தமிழ்நாடு பார் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு மறைந்த மதுரை கி.மகேந்திரன் அவர்களுக்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங் கலையும், வீரவணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கிறது.

2. திராவிடர் கழக வழக்குரைஞர் அணி யினை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முன்பு இருந்த அணியை விரிவு படுத்தியும் புதிய பொறுப் பாளர்களை அறிவித்தும் மாநிலம் முழுவதும் திரா விடர் கழக வழக்குரை ஞர் அணியினை சிறப் பாக செயல்படுத்துவது எனவும் முடிவு செய்யப் பட்டது.

3. பொது இடங் களில் சட்ட விரோத மாக வழிபாட்டுத் தலங்கள் என்ற பெயரில் கோவில் கட்டுவதற்கு இக்கூட்டம் வன்மை யாக கண்டனம் தெரி விப்பதோடு திராவிடர் கழகத் தோழர்கள் எடுக் கும் தடுப்பு நடவடிக்கை களுக்கு வழக்குரை ஞரணி சட்ட ஆலோ சனை வழங்கியும் தேவைப்பட்டால் நீதி மன்றத்தை அணுகி சட்டபூர்வமாக தடுத்திடவும் முழு ஒத் துழைப்பு வழங்குவது என தீர்மானிக்கப்படு கிறது.தமிழ் ஓவியா said...

4. மாநில அளவில் சட்டத்துறை தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டுவது என முடிவு செய்யப்படுகிறது. அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

5. மாவட்ட அளவில் செயல்படும் வழக்குரை ஞரணி சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள வழக் குரைஞர் சங்கங்களுக்கு விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய ஏடுகளை சந்தா செலுத்தி தொடர்ந்து அனுப்புவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

6. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மூலம் நடைபெறும் கணினிப் பயிற்சியினை வழக்குரைஞர்கள் பயன்படுத் திப் பங்கேற்றுப் பலன டைய முடிவு செய்யப் படுகிறது.

7. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும் திராவிடர் கழக சட்டத்துறை உறுப்பினருமான வீரமர்த்தினி அவர்களின் மகள் பொறியா ளர் ம.வீ.கனிமொழி சட்டப்படிப்பு தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளதற்கு இக்கூட்டம் பாராட் டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறது.

8. சென்னை உயர்நீதி மன்ற அளவில் திராவிடர் கழக வழக்குரைஞர்கள் ஒரே குழுவாக செயல் படுதென்றும் அந்த குழுவில் என்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் த.வீரசேகரன், அ.அருள் மொழி மற்றும் ஆ.வீர மர்த்தினி ஆகியோர் களும், மதுரை உயர்நீதிமன்ற கிளை அளவில் வழக்குரைஞர் குழுவாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரை ஞர்கள் பொ.நடராசன், பி.கே. இராஜேந்திரன், மற்றும் ந.இளங்கோ

தமிழ் ஓவியா said...


ஆகியோர்கள் ஒரு குழு வாக இருந்து செயல்படுவதென்றும் தீர்மா னிக்கப் படுகின்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்குரைஞர்கள் வருமாறு:

ச.இன்பலாதன், கோ.சாமிதுரை, த.வீரசேகரன், ஆர்.பரஞ்சோதி (நீதிபதி ஓய்வு), வீரமர்த்தினி, அ.அருள் மொழி, இரத்னாகரன், தஞ்சை அமர்சிங், கரூர் மு.க.இராசசேகரன், வி.அருளரசன், திருவாரூர் சு.சிங்காரவேலு, திருப்பூர் பாண்டியன், ம.வீ.கனி மொழி, ஜெ.துரைசாமி, ஜெ.தம்பி பிரபாகரன், இரா.சரவணகுமார், தாராபுரம் நா.சக்திவேல், செயங்கொண்டபுரம் மு.இராசா, கல்லக்குறிச்சி ஜி.எஸ்.பாஸ்கர், ஆ.உத் திரகுமரன், ம.வீ.அருள் மொழி, ஜெ.ஜவகர், பி.எம்.குமாரவேல், எம்.குண சேகரன், எஸ். வெங்கடாசலம் ஆகி யோர் கூட்டத்தில் பங் கேற்று பல்வேறு கருத் துக்களை எடுத்துரைத் தனர்.

பொது இடங்களில் சட்டத்துக்கு விரோதமாகக் கோவில் கட்டுவதைத் தடுப்பது, பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் விதிமுறை களுக்கு விரோதமாக கோவில்கள் எழுப்புவதைத் தடுப்பது, அரசு அலுவலகங்களில் பூஜைகள் நடத்துவதைத் தடுப்பது மற்றும் பொது நல வழக்குகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப் பட்டது.

பேனா அளிப்பு

விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் பணியாற்றியமையைப்பாராட்டும் வகையில், மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரித்திருந்தபடி பேனா ஒன்று விடுதலை ஆசிரியர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பேனாவை கழகத் தலைவர் வேண்டுகோள்படி கழக பொருளாளர் ஏலத்துக்கு விட்டதில் வழக்குரைஞர் வி.அருள ரசன், ரூபாய் 2000க்கு ஏலம் எடுத்தார். இந்தப் பணம் கழக நிதி யில் சேர்க்கப்பட்டது.

மகேந்திரனைப் பற்றி....திராவிடர் கழக சட்டத் துறைத் தலைவராக இருந்த தோழர் கி.மகேந்திரன் மாணவப் பருவந்தொட்டு கழகத்தில் ஈடுபாடு கொண்டவர். அவரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நமது பங்குண்டு, உழைப்பால் திறனால் வளர்ந்து வந்தவர்; அவரை சென்னைக்கு அழைத்து மேலும் முக்கிய பொறுப்புகளை அளிக்க வேண்டும் என்று கருதியிருந்தேன் 59 வயதில் மறைந்து விட்டாரே!

கழகத் தலைவர் 8.9.2012

தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம்!

அருமை வழக்குரைஞர் தோழர்களே! வழக்குரைஞர்கள் என்றால் சமுதாயத்தில் ஒரு அச்ச உணர்ச்சி உண்டு; பொது வாழ்க்கையில் பங்கு பெறக் கூடிய வாய்ப்பும் உண்டு. உழைத்தால் மிகப் பெரிய நிலைக்கும் உயரலாம்.

அதே நேரத்தில் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் மிக முக்கியம். தனி வாழ்க்கையில் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று கருதுகிறவர்களின் பொது வாழ்வை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தனி வாழ்வில் ஒழுக்கம் பேணுவது தமக்கும், தம் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் கூட நல்லதே!

தமிழர் தலைவர் 8.9.2012