Search This Blog

10.9.12

பிள்ளையார் பிசினஸ் பலே! பலே!!எத்தனையோ ஏஜன்சிகளைக் கடைவீதிகளில் பார்த்திருக்கிறோம் சீயக்காய் ஏஜன்சியிலிருந்து ஏலக் காய் ஏஜென்சி வரை கருப்பட்டி ஏஜன்சியிலிருந்து கருவாடு ஏஜன்சி வரை படித்திருக்கிறோம்.

இப்பொழுது ஒரு புது ஏஜன்சி புறப்பட்டு இருக்கிறது.

அதுதான் ஸ்ரீவினாயகா ஏஜென்சிஸ்; என்ன புரியவில்லையா? கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் தான் இப்படி ஒரு ஏஜென்சிஸ் புறப்பட்டுள்ளது. (தகவல் உதவி: கழகத் தோழர் பையூர் மதி.மணியன்)

பாம்பே மாடல், 5 சிங்கம் மாடல், சாய்ந்த மாடல், கிருஷ்ணர் மாடல், கருப்பு மாடல், மயில்மேல் உட்கார்ந்த மாடல், (முருகனின் வாகனத்தை அண்ணன் விநாயகன் திருடி விட் டானா?) மட்டிக்கால் போட்ட பாம்பே மாடல் மற்றும் எண்ணற்ற டிசைன் களில் புதியவிதமான மாடல்களில் 1/2 அடி முதல் 20 அடி வரை வினாயகர் சிலை கிடைக்கும் என்று ஸ்ரீவினாயகா  ஏஜென்சிஸ் விளம்பரம் செய்துள்ளது.

கடவுள்களின் கதைகளைப் பார்த்தீர்களா? பக்தி பேஷனாகப் போய் விட்டது - பிசினசாகப் போய்விட்டது என்று சொன்ன மாஜி காஞ்சி சங்க ராச்சாரியார், திருவாளர் ஜெயேந்திர சரசுவதி வாயில் அரை டன் சர்க் கரையைத் தான் அள்ளிக் கொட்ட வேண்டும்.

கடவுளையே விலை கூவி விற்கும் நிலை ஏற்பட்டு விட்டதா இல்லையா? கோயிலில் தரிசனத்துக்குப் பணம் கேட்பதே ஒருவகை புற்று நோய் என்றார் விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் திருவாளர் வேதாந்தம் அய்யங்கார்- இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

அவர் என்ன செய்வார்? திருப்பதி ஏழுமலையானுக்கு பிராஞ்ச் ஆபீசுகள் (கோயில்கள்) வெளியூர்களில் தொடங் கப்பட்டு வசூல் வேலை ஜோராகவே நடைபெற ஆரம்பித்து விட்டது. (சோவே இதனைப் பொறுக்க முடியாமல் தலையில் அடித்துக் கொண்டு எழுதினாரே!)

இப்பொழுது டிசைன் டிசைனாக விநாயகர்கள் எங்களிடம் கிடைக்கும் என்று ஏலக்கடை போல கூவுகிறார்களே இது என்ன நோயாம்?

இந்து மதக் கடவுள் களிலேயே இந்த விநாயகன் கடவுள் போல் சிரிப்பாய் சிரிக் கும் கடவுள் வேறு ஏதுமில்லை ஊருக்கு இளைத்தவன் பிள் ளையார் கோயில் ஆண்டி! எனும் பழமொழி இப்படித்தான் வந்திருக்கும் போல் தோன்று கிறது!

விநாயகர் ஊர்வலம் என்று  கூறி விதவிதமான பிள்ளை யார்களை எடுத்துச் சென்று கடலில் போட்டு, மிதித்து உதைத்து செய்யும்  அவமானம் இருக்கிறதே - அதை என்ன சொல்ல!

அவனவன் கற்பனைக்கும், புத்திக்கும் தோன்றுவது போல டிசைன் டிசைனாக மோல்டு செய்து வைத்துக் கொண்டு அடித்துத் தள்ளிக் காசாக்கிக் கொள்கிறார்கள்.

கார்கில் யுத்தத்தை மய்யப்படுத்தி கார்கில் பிள்ளையார் என்று பெயர் கொடுத்து பிள்ளையார் கையில் துப் பாக்கிகளையும், பீரங்கிகளையும் கொடுக்கவில்லையா?

மற்ற மற்றவற்றிற்கெல்லாம் ஆகமம் பற்றிப் பேசும் அய்யர் மகா ஜனங்கள் தங்கள் கடவுள்களைக் கண்ட கண்ட மாதிரி சித்தரிப்பது பற்றி வாய் திறப்பது இல்லையே - ஏன்? ஏன்?

வேறு மதங்களில் இப்படி செய் வதுண்டா? இந்து மதத்தில் மட்டும் ஏன் இப்படி? இதற்கு வரலாறு கிடை யாது. இதற்கொரு நிறுவனர் கிடை யாது இதற்கென்று வரையறுத்துச் சொல்லும் வேத நூலும் கிடையாது; அப்புறம் என்ன? தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தானே!
படு தமாஷ் போங்கோ!
              -------------------------"விடுதலை”  7-9-2012

2 comments:

S. Robinson said...

தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.

S. Robinson said...

தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.