Search This Blog

12.9.12

இட ஒதுக்கீட்டில் யாரும் கை வைக்க முடியாது-கி. வீரமணி

69 சதவிகிதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: திராவிடர் கழகம் தன்னை இணைத்துக் கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் பேட்டி



69 சதவிகித இட ஒதுக் கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், திரா விடர் கழகம் தன்னையும் இணைத்துக் கொண்டு, தம் கருத்தைத் தெரிவிக் கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நேற்று முன்தினம் ஒரு செய்தி: தமிழ்நாட் டில் கடந்த 33 ஆண்டு களுக்கு மேலாக செய லில் இருக்கக் கூடிய 69 சதவிகித இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தரப் படக் கூடிய அந்த சிறப்பான இட ஒதுக்கீடு, திராவிடர் கழகத்தின் அரிய முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது உங் களுக்கெல்லாம் தெரிந்ததே! 31(சி) சட்டத்தின் கீழ்!

இதுவரையில் அச் சட்டம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. 68 சதவிகிதமாக பல ஆண்டு இருந்தது. பிறகு 69 சதவிகிதமாக ஆகி, அது தொடர்ந்து நடை முறையில் இருந்து வருகிறது.

இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் கமிசன் வழக்கு உச்சநீதி மன்றத்தில் வந்தபோது, 50 சதவிகிதத்திற்குமேலே இருக்கக் கூடாது என்று சொன்னபோது, எங்கே 69 சதவிகிதமாக இருக் கக் கூடிய இந்த இட ஒதுக்கீடு பாதிக்கப் படுமோ என்று அஞ்சிய நேரத்தில்,

ஆணையல்ல - சட்டம்!

அரசு ஆணையாக, கம்யூனல் ஜி.ஓ. என்ப தற்குப் பதிலாக ஒரு தனிச் சட்டமாகக் கொண்டு வந்து, அதை 9 ஆவது அட்டவணைப் பிரிவிலே 31-சி பிரிவின் கீழ் வைத்தால், இட ஒதுக்கீடு பாதுகாக் கப்படும் என்றும்,

மண்டல் கமிசன் வழக்கில், 1992 ஆம் ஆண்டில் 9 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு  அளித்த தீர்ப்பு வந்த போது, அதிலிருந்து எப்படி வெளியே வருவது, எப்படி இட ஒதுக்கீடினை பாது காப்பது என்று கருதிய நேரத்தில்,

சட்டமாக இருந் தால், Retraspective effect என்று பின்னோக்கிக் கொடுக்கலாம் என்பதை விளக்கிச் சொல்லி, அதற்காக ஒரு அனைத் துக் கட்சிக் கூட்டத்தை (இன்றைய முதல்வராக இருக்கக் கூடிய செல்வி ஜெயலலிதா அவர்கள் தான் அன்றைக்கும் முத லமைச்சர்), அந்தக் கருத்தினை ஏற்று அவர்கள் அனைத்துக் கட்சியைக் கூட்டி, பிறகு ஒரே நாளில் சட்டமன்றம் கூட்டப்பட்டு, சட்டமாக இயற்றப்பட்டு, பிறகு மத்திய அரசின் ஒப்புத லுக்காக அப்போது அனுப்பப்பட்டது.

அப்போது நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தார். நாங்கள் எல்லோரும் ஒரு தூதுக் குழுவாகச் சென்று அவரைச் சந்தித்தோம்.

சந்தித்த பிறகு, அண்மைக் காலத்தில் நடை பெறாமல் இருந்தது போல், அப்போதும் அர்ஷத் மேத்தா பிரச்சினையில் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் இருந்தது.

நீங்கள் இட ஒதுக்கீடுப் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்திற்கு வாக்களிக்க வாருங்கள் என்று எல்லோரையும் நாங்கள் கேட்டுக் கொண் டதற்கிணங்க, அனைத்துக் கட்சியினரும் எங்களுக்கு ஒத்துழைத்தார்கள்.
அதன்பிறகு, சீதாராம் கேசரி அவர்கள் சமூக நல அமைச்சராகவும், பிரதமராக நரசிம்மராவ் அவர்கள் இருந்து அச் சட்டத்திருத்தம் நிறை வேறியது.

76 ஆவது சட்டத் திருத்தம்

அந்தச் சட்டத் திருத் தம் 76 ஆவது சட்டத் திருத்தம் நிறைவேறியது.

சங்கர்தயாள் சர்மா அவர்கள் குடியரசுத் தலைவராக அப்போது இருந்தார்கள். அவர்களும் ஒப்புதல் (Asscent) அளித்து, பிறகு சட்ட மாக வந்தது.

94 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் நடைமுறையில் இருந்து வருகிறது.

அதற்கு முன்னர் எம்.ஜி.ஆர். அவர்களின் காலத்தில் 68 சதவிகித மாக இருந்தது. பிறகு 69 சதவிகிதமாக ஆகியது.

எனவே, இதனை எதிர்த்து வழக்குப் போட்டார்கள் ஒரு தனியார் அமைப்பினர். அந்த வழக்கில் தடை கொடுக்கப்படவில்லை.

இதற்கு முந்தைய தி.மு.க. அரசு இருந்த போது அந்த வழக்கு மறுபடியும் வந்த பிறகு, அண்மையில் ஓய்வு பெறவிருக்கின்ற தலைமை நீதிபதி கபா டியா அவர்கள் தெளி வாக, இன்னும் ஓராண் டுக்குள்ளாக இதைத் தெளிவுபடுத்தி, எந்த அளவிற்கு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30 சத விகிதம், மிகவும் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதம், இரு பிரி வினருக்கும் சேர்த்து 50 சதவிகிதம் கொடுப்பது நியாயம்தான் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய அளவிற்கு, நீங்கள் புள்ளி விவரங்கள் (Quantifiable Data) கொடுக்கவேண்டும் என்று அவர்கள் சொன் னார்கள். அதற்காக ஓராண்டு அவகாசமும் அளித்தார்கள்.

ஓராண்டிற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் மூலமாக இதனை தெளிவுபடுத்தி அறிக்கை தரவேண்டும் என்று கபாடியா அவர்கள் கூறினார்.

கொடுத்த அவகாசம் முடிந்து, மீண்டும் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் அரசியலில் ஏற்பட்டது.

ஆட்சி மாறலாம்!

கட்சிகள் மாறினாலும், இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் ஒருவருக்கொருவர் அதிகப்படுத்தி இருக்கிறார்களே தவிர, அதிலே யாரும் மாற்றுக் கருத்துடையவர்கள் அல்ல, ஏனென்றால், இது பெரியார் மண்!

No.50 என்று சொல்லக்கூடிய Backward Classes, Most Backward Classes and Minority Welfare Department சார்பாக, 11.7.2011 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையம், நீதிபதி ஜனார்த்தனம் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்து, ஒரு தெளிவான அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. அந்தத் தெளிவான அறிக்கைப்படி அதை அமைச்சரவையிலே, இன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அதை விவாதத்திற்கு எடுத்து, விரிவாக விவாதித்து பிறகு, நியாயமாக இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. ஆகவே, மீண்டும் இதை உறுதிப்படுத்தி, ஜி.ஓ. 50 சதவிகிதம் என்று சொல்லக்கூடிய அளவிலே புதிதாக அரசு ஆணை 50 என்பதன்மூலமாக இந்த ஜி.ஓ. நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆணை போட்டே ஓராண்டு (11.7.2011)  ஆகிவிட்டது. இதனை நாங்கள் வரவேற்று பாராட்டினோம். இதிலே கட்சிக் கண்ணோட்டமோ மற்றவையோ கிடையாது. சமூகநீதிக் கண்ணோட்டம்தான் மிக முக்கியமானது.

மறு ஆய்வு மனு


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியாவின் தீர்ப்பை எதிர்த்து, வாய்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த விஜயன் என்ற வழக்கறிஞர் அத்தீர்ப்பினை மறு ஆய்வு (review) செய்யவேண்டும் என்று   மனு கொடுத்தார். இவ்வழக்கில் மறு ஆய்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது திடீரென்று, மீண்டும் அதே அமைப்பு, அதே நபர் புதிதாக சிலரைப் பிடித்துக் கொண்டு புதிதாக மறுபடியும் வழக்கு போட்டிருக்கிறார்கள்; அதற்காக நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றால், இது ஒரு அழிவழக்கு.  ஒரு விஷத்திற்காக இரண்டு முறை வழக்குப் போட சட்டத்தில் இடமில்லை.

காரணம் என்னவென்றால், ஜி.ஓ. தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிரிமீலேயர் என்பது ஆராயப்படவில்லை என்பதற்கு பதில் சொல்லி 20.7.2011 ஆம் தேதியன்று ஜி.ஓ. கொடுத்திருக்கிறார்கள்.

எனவே, இந்த வழக்கு தேவையற்ற, விளம்பரத்திற்காகவோ, அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ தலைமை நீதிபதி மாறினால் நீதி மாறிவிடுமா? இன்னொரு வழக்கினை இப்போது போட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை இரண்டு நாள்களுக்கு முன்னாலே ஊடகங்களின் வாயிலாகத்தான் நாங்கள் அறிந்தோம்.

திராவிடர் கழகம்தான் இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு மூலகாரணமாக இருந்தது என்பது உலகம் அறிந்த ஒன்று.

திராவிடர் கழகம் தன்னை இணைத்துக் கொள்ளும்

தமிழக அரசிற்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும், திராவிடர் கழகம் Intervene கலந்துகொள்ளக்கூடியவர்களாக எங்கள் கருத்துகளைக் கேட்கவேண்டும், எங்கள் வாதங்களைக் கேட்கவேண்டும். காரணம், இந்த 69 சதவிகிதத்தை அமைப்பதற்கு அரும்பாடுபட்ட ஒரு இயக்கம் திராவிடர் கழகம். எனவே, திராவிடர் கழகத்தின் சார்பிலே, எனது சார்பிலே உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரம் கழித்து வரக்கூடிய வழக்கில் எங்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று மனு போட, டில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்களிடம் பேசியிருக்கிறோம். அந்த வழக்கறிஞர் மூலமாக விரைவில் இது அறிவிக்கப்படும்.

திராவிடர் கழகம் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக, உச்சநீதிமன்றத்திலே வாய்ஸ் என்ற அமைப்பின்மூலமாக விஜயன் என்ற வழக்கறிஞர் மூலமாகப் போடப்பட்டிருக்கின்ற வழக்கில், இடைமறித்து, எங்களுடைய கருத்தினையும் கேட்கவேண்டும், 69 சதவிகிதம் செல்லுபடியாகும், அதற்குப் போதிய நியாயங்கள் இருக்கின்றன. நீதிபதி ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் அமைந்திருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கை, நியாயமான காரணங்களை அந்த அறிக்கையில் கொடுத்திருக்கிறார்கள். அறிக்கைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,

Justification of Reservation under the Tamilnadu act 45 of 94 என்று சொல்லக்கூடியதில், On Quantifiable Data இதில் புள்ளிவிவரங்களை வைத்து நியாயப்படுத்தி நீங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றம் கொடுத்த ஆணை. அந்த உச்சநீதிமன்றம் கொடுத்த ஆணைக்கேற்ப, மிகத்தெளிவாக, நியாயப்படுத்தி, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய இரு பிரிவினருக்கும் சேர்த்து 50 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்திலேயே, அம்பா சங்கர் ஆணைய அறிக்கையிலே மிகத் தெளிவாக புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மறுபடியும் அது குறையக் கூடிய வாய்ப்பில்லை.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையம்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை இப்போது கூடியிருக்கிறது. இவர்களுடைய விகிதாச்சாரத்தைவிட இட ஒதுக்கீடு குறைவாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதிபதி ஜனார்த்தன் தலைமையில் உள்ள பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையின்மீதுதான் இந்த ஜி.ஓ. போடப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு செய்திருக்கின்ற செயல், சட்டப்பூர்வமானது மட்டுமல்ல, விஞ்ஞானபூர்வமானது. ரொம்பத் தெளிவாகச் செய்திருக்கிறார்கள்.

இதில், வேண்டும் என்றே சிலர் குறுக்குச்சால் ஓட்ட நினைக்கிறார்கள்.

புள்ளிவிவரப்படி கூடுதலான எண்ணிக்கைக்குமேல் நீங்கள் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறீர்களா என்ற சந்தேகம் இருந்தால், அதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின்மூலம் ஆய்வு செய்து அறிக்கை பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

அதனை தமிழக அரசு பின்பற்றி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின் அறிக்கையை ஏற்று, ஜி.ஓ.50 அதைத் தெளிவாகப் போட்டிருக்கிறார்கள். ஓராண்டிற்கு மேலாக அது நடைமுறையில் இருக்கிறது.

கைவைக்க விடமாட்டோம்!

அரசியல் ரீதியாகவும் பார்த்தால், இட ஒதுக்கீட்டில் யாரும் கை வைக்க முடியாது; அதனை நாங்கள் விடமாட்டோம்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
             -----------------------”விடுதலை” 12-8-2012

10 comments:

தமிழ் ஓவியா said...

அம்மன் சாமியின் தாலி அறுப்பு

ஆவடி, செப். 12- கொரட்டூரில் கோயில் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமிகள், பஞ்சலோக முருகன் சிலை மற்றும் அம்மன் தாலி, பூஜை பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே நாகவல்லி அம்மன் கோயில் உள்ளது. கோயில் நிர்வாகி சிவ வடிவேலு நேற்று காலை வந்தபோது, பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு கோயில் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கருவறையில் இருந்த ஒரு அடி உயர பஞ்சலோக முருகன் சிலை கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது. மேலும், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 2 சவரன் தாலி செயின், வெள்ளி பூஜை பொருட்களும் கொள்ளை போயி ருந்தன. கொள்ளை சம்பவம் பற்றி கேள்விப்பட்டு கோயில் முன் மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, சிவவடிவேலு, கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளி களின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். மேலும் வழக்குப்பதிந்து கொள்ளையரை தேடுகின்றனர். 12-9-2012

தமிழ் ஓவியா said...

விநாயகர் சிலைகள் பறிமுதல்
பொள்ளாச்சி, செப். 12- மாநிலம் முழுவதும் ரசாயன கலவைகளால் தயாரான விநாயகர் சிலை களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். வரும் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண் டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து இடங்களிலும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் நிறு வப்படும். களிமண்ணால் ஆன விநாயகர் சிலை களையே செய்ய வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ் உள்ளிட்ட செயற்கை ரசாயன கலவைகள் கொண்டு சிலை செய்யக் கூடாது என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்து வருகிறது.

இதை மீறி, பல இடங்களில் ரசாயன கலவை மூலம் சிலை செய்யப்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் வடமாநில தொழிலாளர்கள் ரசாயன கலவை கொண்டு விநாயகர் சிலை தயாரிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் அதிகாரிகள், கோவை ரோட்டில் வடமாநிலத்தினர் விநாயகர் சிலை செய்யும் இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

சிலைகள் அனைத்தும் ரசாயன கலவை கொண்டு செய்யப் பட்டிருந்தது. 20-க்கும் அதிகமான சிலைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து வேன் மற்றும் டிராக் டரில் அதிகாரிகள் ஏற்றி சென்றனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரசாயன கலவையால் சிலை தயாராகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரசாயன கலவையால் தயாரிக்கப்படும் சிலைகள் பறிமுதல் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரி வித்தனர். (விநாயகர் தடுக்கவில்லையோ!) 12-9-2012

தமிழ் ஓவியா said...

ரசாயன வர்ணப் பிள்ளையாருக்குத் தடை!
ஈரோடு, செப். 12- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் விக்ரம்கபூர் கூறியிருப்ப தாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது களி மண்ணால் செய்யப் பட்ட விநாயகர் சிலைகளை வழிபாட்டிற்குப் பிறகு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாகும். ஆனால் சமீபகாலமாக ரசாயன வர்ணம் பூச்சு களுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர் நிலை களில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடுகின்றன.

எனவே களி மண்ணால் செய்யப்பட்ட எவ்வித ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் எக்காரணம் கொண்டும் கரைக்கக் கூடாது.

- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12-9-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

வரவேற்கலாம்!

செய்தி: குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக் கான பிரச்சாரத்தை முதலமைச்சர் நரேந்திர மோடி துவக்கினார்.

சிந்தனை: இரண்டாயிரம் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய வீரதீர சூரர் - மோடி அவர்களே வருக! வருக!! என சுவரொட்டி அடித்து, பதாகை களையும், கட்அவுட்களையும் வைத்து ஓ, தாராளமாக வரவேற்கலாமே!

குலைப்பது

செய்தி: மத நல்லிணக்கம் மூலமே மனித குல ஒற்றுமை சாத்தியம்

- சுவாமி கவுதமானந்தர்

சிந்தனை: மதம் என்றாலே நல்லிணக்கத்தைக் குலைப்பதுதானே! ஓ, சூடான அய்ஸ் கிரீமோ!

நம்பிக்கை

செய்தி: தேர்தல் பிரச்சாரத்திற்கு அத்வானி பயன்படுத்திய ரதத்தை மோடி பயன்படுத்துகிறார்.

சிந்தனை: கடந்த தேர்தலில் பிரதமரின் வேட் பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானியின் ரதம்தானே அது! ஆமாம், அவர்கள் ராசியை நம்புபவர்கள் ஆயிற்றே!2-9-2012

தமிழ் ஓவியா said...

முடக்கப்பட்ட மூலதனமும்- பல வகை முதலாளிகளும் கி. வீரமணி



நம் நாட்டில் மூன்று வகையான முதலாளிகள் இருக்கிறார்கள். முத லாளித்துவத்தின் மூன்று முகங்கள் அவை; அம்மூன்றையும் புரிந்து எதிர்த் தலே உண்மையான முதலாளித்துவத்தை ஒழிக்கும் முயற்சியாகும். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க அதன் முட்டுக்கட்டைகள், தடுப்புச் சுவர்கள் எவை என்று உணரவேண்டாமா? என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்கள்.

அந்த மூன்று முதலாளித்துவத் தையும் சரியாக அடையாளம் காட்டி னார்கள்.

1. கல் முதலாளி

பணக்கார முதலாளிகளான கடவுள் கள். (எடுத்துக்காட்டு நமது கோவில்கள், திருப்பதி, குருவாயூரப்பன் தொடங்கி நடைபாதை உண்டியல் வைத்துள்ள கடவுள்கள்வரை).

2. பிறவி முதலாளிகள் - பார்ப்பனர்கள்

உடலுழைப்பை வேறு ஒரு பிரிவுக்குத் தந்து, நோகாமல் தானம் வாங்கிய அறிவையும், கல்வியையும் ஏகபோக மாகக் கொண்டு மக்களைச் சுரண்டும் வருணபேத பரப்பாளிகள்.

3. மூலதனம் போடும் பணத் திமிங்கிலங்கள்

பணத்தை மூலதனமாகப் போட்டு தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு தராமல் வெறும் கூலி, சம்பளம் தந்து கொழுத்து வளரும் பணத் திமிங்கிலங் களான முதலாளிகள் - (டாட்டா, பிர்லா, அம்பானி, கிருபானி போன்ற முத லாளிகள்).

இம்மூவரில் முதல் போட்டு வியாபரம் செய்பவர், மூன்றாவது ரகத்தவரே!

இந்தக் கல் முதலாளிகளைப் பற்றி, ஓட்டு வேட்டையாடி அரசியல் சதுரங் கத்தில் காய் நகர்த்தும் பல கட்சிகள் பேசுவதில்லை.

வாக்கு வங்கி போய் விடுமே என்ற தேவையற்ற அச்சம்!

திராவிடர் இயக்கம் செய்த அரும் பெரும் சாதனை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையை உருவாக்கி, கோவில் பெருச்சாளிகள் நடத்திய கேட்பாரற்ற பகற்கொள்ளையைத் தடுத்து, பாதுகாத்தது!

என்றாலும், இன்னமும் அச்சுரண்டல் அர்ச்சகப் பார்ப்பனர்களால் நன்கு நடத்தப்பட்டே வருகிறது!

பெட்ரோலியப் பொருள்களுக்கு வரி, லாபத்தில் நடக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு, அத்தியா வசியப் பொருள்களுக்கும் வரி போட்டு மக்களைப் பிழியும் மாநில அரசுகள் - அந்தக் கோவிலில் உள்ள வருவாய்களை அரசாங்க அரசு கடன் பத்திரமாக (Bonds) வழங்கி, பணத்தை எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்குச் செல வழிக்கலாமே! இந்தப் பணம் கோவில் மூலதனமாகக் கூடத் தொடரும் - பறிப்பு அல்ல! வட்டி இல்லாக் கடனாக - அரசுகள் எடுத்துத் திருப்பித் தரலாமே!

டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட் டில் 10.9.2012 அன்று வெளிவந்த செய்திக் கட்டுரையைப் படித்தாவது அரசுகள் தெளிவு அடைய வேண்டும்.

தேவை துணிச்சல்தான்!

இதோ அந்தத் தகவல்கள்:

ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் பெறும் கேரள தேவசம் போர்டுகள்

கேரள தேவசம் போர்டுகளை மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனங் களுடன் ஒப்பிடுவது சரியாக இருக் காது. என்றாலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டினைப் பற்றிய சரியான தோற்றத்தை அது அளிக்கிறது. அதன்பின் தேவசம் போர்டு களுடன் போட்டியிட பொதுத்துறை நிறுவனங்கள் நம்பிக்கை கொள்ள இயலக்கூடும்.

கேரளாவின் 42 மாநிலப் பொதுத் துறை நிறுவனங்களும் சேர்ந்து ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 200 கோடி லாபம் ஈட்டும் நிலையில், நான்கு தேவசம் போர்டுகளின் மூலம் கிடைக்கும் வரு வாயோ 1000 கோடி ரூபாய்க்கு மேலாக உள்ளது.

இவற்றில் மிகவும் பணக்கார தேவசம் குருவாயூர் தேவசமாக இருப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. அதனை அடுத்து திருவாங்கூர், மலபார் மற்றும் கொச்சி ஆகிய மற்ற மூன்று தேவசங் களும் அந்த வரிசையில் வருகின்றன. ரூபாய் 2,500 கோடி அளவு சொத்துகள் கொண்ட குருவாயூர் தேவசம் போர் டுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 400 கோடிக்கும் மேலாக பணமாகவும், நகைகளாகவும் வருமானம் கிடைப்பதாக அதிகாரபூர்வமற்ற மதிப்பீடுகள் தெரி விக்கின்றன.


தமிழ் ஓவியா said...

குருவாயூரை அடுத்து 1,240 கோவில் களை நிருவாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டின் சொத்துகளின் மதிப்பு ரூ.700 கோடி என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வருவாய் பற்றிய சரியான புள்ளி விவ ரங்கள் கிடைக்கவில்லை. இக்கோவில் களில் 25 கோவில்களின் வருமானம் மட்டுமே அனைத்து கோவில்களின் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டுகிறது. இந்த 25 கோவில்களில் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 200 கோடி வருவாய் ஈட்டும் சபரி மலை கோவில் முதலிடத் தைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து செட்டிகுளங்கரதேவி கோவில் ரூபாய் 100 கோடி வருவாயை யும், எட்டுமானூர் சிவன்கோவில் ரூபாய் 60 கோடி வருவாயையும் ஈட்டுகின்றன.

சபரி மலையில் இருந்து கிடைக்கும் ரூபாய் 200 கோடியில் 100 கோடி ரூபாயை தேவசம் போர்டின் மற்ற கோவில்களுக் காக செலவிடப்படுகிறது என்று தேவசம் போர்டு அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

தேவசம் போர்டு நிருவகிக்கும் கோவில்களில் 100 கோவில்கள் மட்டுமே தங்களின் வருவாயிலிருந்து தங்கள் செலவுகளை செய்து கொள்ள முடியும். என்றாலும் ஒவ்வொரு கோவிலுக்கும் கிடைக்கும் நன்கொடைகள் மற்றும் பரிசுகள் பாதுகாப்பாக வைக்கப்படு கின்றன. தங்க, வெள்ளி ஆபரணங்கள், விலை மிகுந்த வைரக் கற்கள் போன்றவை இரட்டைப் பூட்டு போட்ட பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப் பட்டுள்ளன. தேவசம் போர்டின் 18 உப பாதுகாப்பு குழுக்களின் 24 மணிநேர பாதுகாப்பு இப் பெட்டகங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப் பட்டுள்ள நகை, பணம் போன்ற சொத்துக்களை கடந்த 15 ஆண்டுகளாக சரிபார்க்க தேவசம் போர்டுகளால் இயலாமல் போனது. சொத்துகளைப் பராமரிக்கும் பயனுள்ள ஒரு நடைமுறை இல்லாததன் காரணமாக, அவ்வப்போது சரிபார்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கை செயல்படுத்தப்பட முடியாமல் போனது.


தமிழ் ஓவியா said...

நிருவகிக்கும் கோவில்களின் எண் ணிக்கையில் முதல் இடத்தைப் பெற் றுள்ள மலபார் தேவசம் போர்டின் நிரு வாகத்தின் கீழ் 1,337 கோவில்கள் உள்ளன. வருவாய் அளவில் ரூபாய் 80 கோடி ஆண்டு வருமானம் பெறும் இந்த தேவசம் போர்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு கோவிலின் தனித்தனி வருமானம் பற்றிய புள்ளி விவரங்கள் இல்லை. என்றாலும் அந்த தேவசம் போர்டின் கீழுள்ள கோவில்களில் பணக் காரக் கோவில்என்று கருதப்படும் கடம்புழா சிறீபார்வதி கோவிலின் வருவாய் ஆண்டுதோறும் 30 விழுக்காடு அதிகரித்து வருவதாக தேவசம் போர்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோழிக்கோடு, கண்ணூர், பாலக் காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் 26 தாலுகாக்களில் உள்ள கோவில்கள் மலபார் தேவசம் போர்டின் கீழ் வருகின்றன. இந்தப் பகுதி காசர்கோடு, தலசேரி, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு என்று அய்ந்து கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கோவில்கள் தங்களின் செலவுகளுக்கு சிறப்புக் காணிக்கை களையே நம்பி உள்ளன.

தமிழ் ஓவியா said...

403 கோவில்களை நிருவாகம் செய் யும் கொச்சி தேவசம் போர்டின் ஆண்டு வருவாய் 50 கோடி ரூபாயாகும். மற்ற தேவசம் போர்டு கோவில்களைப் போலவே, இந்த தேவசம் போர்டு கோவில்களிலும் ஒரு சில மட்டுமே தங்கள் வருவாயிலிருந்து தங்கள் செலவு களை செய்து கொள்ள முடியும். இந்த தேவசம் போர்டில் சோட்டாணிக்கரை தேவி கோவில் ஆண்டு தோறும் ரூபாய் 6 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 10.9.2012

கேரள மாநில கோவில்களின் புரவலர்களாக மன்னர்கள் இருந்தனர்

தேவசம் போர்டுகள் உருவாக்கப்படு வதற்கு முன்னர், கேரள மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான கோவில்களின் புரவலர்களாக முன்னாள் ராஜ குடும்பங் கள் இருந்து வந்துள்ளன.

அதுபோல திருப்புணித்துரா சிறீ பூர்ணத்ரஷீய கோவில் கொச்சி ராஜ குடும்பத்தினராலும், கொடும்பாளூர் சிறீ குரும்பா கோவில் கொடுங்காலூர் கோவிலகத்தினராலும், புகழ்பெற்ற, மிகப்பெரிய பணக்காரக் கோவிலான திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினராலும் பராமரிக்கப்பட்டு வந்தன.

கோவில்களை நிருவகிக்க தேவசம் போர்டுகள் உருவாக்கப்பட்ட பின்னரும் கூட, ராஜ குடும்பத்தின ருக்கும், கடவுள் களுக்கும் இடையே உள்ள பந்தம் மிகவும் ஆழ்ந்ததாக இருந்து வருகிறது.

திருப்புணித்துரா சிறீ பூர்ணத்ரஷீய கோவிலுக்கு கொச்சி மன்னர்கள் தங்க ஆபரணங்களையும், கவசங்களையும், கோவில் சடங்குகளைச் செய்ய குறிப் பாக வடிவமைக்கப்பட்ட தங்கப் பாத்திரங் களையும் நன்கொடையாக அளித்தனர். இந்தக் கோவில் உண்டி வசூலில் முதல் இடத்தைப் பெற்றதாக இல்லை என்ற போதிலும், மன்னர்கள் அளித்த தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பொருள்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், கொச்சி தேவசம் போர்டின் கீழ் உள்ள பணக் காரக் கோவில்களில் ஒன்றாக அது விளங்கி வருகிறது என்று தேவசம் போர்டு அலுவலர் கே.தளபிள்ளை கூறுகிறார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீட்டின்படி இக்கோவிலில் 65 கிலோ தங்கமும், 65 கிலோ வெள்ளியும் உள்ள தாகக் கூறப்படுகிறது. தங்கத்தால் வேயப்பட்ட ஒவ்வொரு கவசமும் 6 கிலோ எடை கொண்டவை. பல்வேறு அளவு களில் உள்ள மூன்று சொர்ண கோளங் கள் அங்குள்ளன. இங்குள்ள விசேட சொர்ண கோலம் வைரம், வைடூரியம், கோமேதகம், பச்சை போன்ற மதிப்பு மிகுந்த நவரத்தினக் கற்களால் அலங் கரிக்கப்பட்டதாகும்.

ஆனல் இங்குள்ள மிகமிக முக்கிய மான நினைவுச் சின்னமே, விலைமதிப்பு மிகுந்த நவரத்தினக் கற்களால் அலங் கரிக்கப்பட்ட தங்கக் கிரீடம்தான். மலை அரண்மனை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கொச்சி மன்னர்களின் கிரீடத்தைப் போன்ற வடிவம் கொண்டது இந்த கோவில் கிரீடமும். இந்தக் கீரி டத்தின் மதிப்பு இதுவரை மதிப்பிடப் படவே இல்லை.

திருவிதாங்கூர் ராஜகுடும்பம் சிறீ பத்மநாபசாமி கோவிலுக்கு நன்கொடை யாக அளித்த செல்வம் அளவற்றது; கற்பனையும் செய்து பார்க்க முடியாதது.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 10.9.2012

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர்கள்!

பாரதீய ஜனதா கட்சியில் பிரதமருக்கான வேட்பாளர் யார் என்பதுபற்றி சர்ச்சை கிளம்பி யுள்ளது. பந்தியிலேயே இடமில்லை என்று ஆகிவிட்ட பிறகு இலையில் பொத்தல் என்று பேசுவதில் பொருள் இருக்க முடியாது.

2014 மக்களவைத் தேர்தலில் இப்பொழுதே வெற்றி பெற்றுவிட்ட மிதப்பில் அவர்கள் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த தேர்தலில்கூட நாங்கள்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று கூறி எல்.கே. அத்வானியை முன்னிறுத்திப் பார்த்தனர்; விளக் கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை.

காங்கிரசின் பலகீனம் தங்களுக்குப் பலம் என்று நினைக்கிறார்கள் போலும்! அதேநேரத்தில் பி.ஜே.பி. யார்? ஊழல் இலஞ்ச லாவண்யம் அறவேயற்ற மாசு மருவற்ற பத்தரைமாற்றுத் தங்கமா?

பி.ஜே.பி. ஆளும் எந்த மாநிலத்தில் ஊழல் இல்லை? பங்காரு லட்சுமணன் கதை என்ன?

எடியூரப்பாவின் முகவரி என்ன? கொக்கு ஒட்டகத்தைப் பழித்த கதையாக இருக்கக் கூடா தல்லவா?

ஊழல் என்பது வெறும் பொருளாதாரத்தில் நடப்பது மட்டுமல்ல; பி.ஜே.பி.யின் சிந்தனையே ஊழல் கொழிக்கும் தன்மை கொண்டதாயிற்றே! அவர்கள் நம்பும் - காண விரும்பும் இந்துத்துவா என்பதன் வரையறை என்ன?

அதில் நேர்மை ஏதாவது மருந்துக்கும் இருக் கிறதா? பிறப்பில் பேதம் என்பதைவிட மோசமான ஊழல் புத்தி வேறு உண்டா?

இந்திய அரசமைப்புச் சாசனத்தில் உறுதி யளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்பதில் நம்பிக்கை கொண்டவர்களா பி.ஜே.பி.யினர் அல்லது சங் பரிவார்க் கூட்டத்தினர்?

450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை அயோத்தியில் இடித்தார்களே - அந்தப் புத்தியில் நேர்மை இருக்கிறதா? பண்பாடு துளி யேனும் துளிர்த்துள்ளதா? ஊழலைவிட அபாயகர மான செயல் அல்லவா இந்து மதவெறி!

லிபரான் ஆணையத்தின் அறிக்கை என்ன கூறுகிறது? 17 ஆண்டுகள் விசாரணை நடத்திய ஆணையமாயிற்றே அது!

63 பேர்கள் குற்றவாளிகள் என்று பட்டியல் போட்டுச் சொல்லிவிட்டதே! ரேபரேலி (உத்தரப்பிர தேசம்) நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட 49 பேர்கள் மீது குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுவிட்டதே!

கலகம் விளைவித்தல், மக்களிடையே குரோத உணர்ச்சியைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித் தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல், பீதியை உண்டாக்குதல் என்னும் வழக்குப் பிரிவுகள் இவை.

இந்தத் தரத்தில் உள்ளவர்கள் ஊழலைப்பற்றிப் பேசலாமா? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பாபர் மசூதி இடிப்பு வழக்கினை விரைவுபடுத்தி விசாரித்தாலே பி.ஜே.பி. தலைவர்கள் கூண்டோடு கைலாசம் என்பார்களே - அதன்படி ஒருவர்கூட தேர்தலில் போட்டியிட முடியாதே - இவர்கள் வெளி யில்தான் நடமாட முடியுமா? எல்லாம் கடுங்காவல் தண்டனை குற்றவாளியாக அல்லவா இருந் திருப்பார்கள்!

மோடி என்ற மனித குல விரோதி, பிரதமருக்கான பி.ஜே.பி. வேட்பாளராம். இன்னொருவரை சிவசேனா தலைவர் பால்தாக்கரே முன்மொழிந்துள்ளார். அவர் யார் என்றால், மக்களவையில் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய திருமதி சுஷ்மா சுவராஜ்.

இவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? ஆம், நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம் - உங்களால் என்ன செய்ய முடியும்? என்று நாடாளுமன்றத்திலேயே சவால் விட்டவராயிற்றே.

ஆக, பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் - ஒன்று அரச பயங்கரவாதம் நடத்தி சிறுபான்மையின மக்களை வேட்டையாடியவராக இருக்கவேண்டும் அல்லது சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை நாங்கள்தான் இடித்தோம் என்று வெறித் தனமாகச் சொல்லுபவராக இருக்கவேண்டும்.

இவர்களைப் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கும் கட்சியை, அதன் தலைவர்களைப் பொது மக்களாகிய வாக்காளர்கள் நன்றாகவே அறி வார்கள் - சோ ராமசாமிகள் துள்ளவேண்டாம்! 12-9-2012

தமிழ் ஓவியா said...

சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை!

டெல்லி: சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இந்த கல்வி மையத்தில் மொத்தம் 212 பேராசிரியர்களும், 91 இணைப் பேராசிரியர்களும், 177 துணைப் பேராசிரியர்களும் உள்ளனர்.

ஆனால், இதில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. அதே போல தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெறும் 3 பேர் தான் பேராசிரியர்களாகவும், 3 பேர் தான் இணைப் பேராசிரியர்களாகவும், 4 பேர் மட்டுமே துணைப் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே துணைப் பேராசிரியராக உள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை என்பது மட்டுமல்ல, இணைப் பேராசிரியராகக் கூட இல்லை. ஆனால், துணைப் பேராசிரியர்கள் பதவியில் மட்டும் 7 பேர் உள்ளனர்.

ஐஐடிக்களில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லாததே இதற்குக் காரணமாகும். துணைப் பேராசிரியர் பதவிக்கான தேர்வில் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. இதனால் தான் இந்தப் பதவிக்காவது பிற்படுத்தப்பட்டவர்கள் வர முடிந்துள்ளதாகத் தெரிகிறது.

இதே நிலைமை தான் ஐஐடி காரக்பூர், ஐஐடி காந்திநகர், ஐஐடி ரூர்கி, ஐஐடி ரோபர் என பல இடங்களிலும் நிலவுகிறது.

ஐஐடி ஹைதராபாதில் மட்டுமே 22 பிற்படுத்தப்பட்டவர்கள் பேராசிரியர்களாக உள்ளனர்.

இந்தத் தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் மகேந்திர பிரதாப் சிங் என்பவர் திரட்டியுள்ளார். ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை ஆகியவை இவருக்கு இன்னும் பதிலைத் தரவில்லை. தந்தால் தான் அதன் வண்டவாளம் தெரியவரும்.
----------http://tamil.goodreturns.in/news/2012/09/12/quotas-fail-break-caste-ceiling-iits-000291.html