Search This Blog

2.9.12

எலி வளை எலிகளுக்கே! விநாயக பகவான் என்ன ஆனான்?

எலி வளை எலிகளுக்கே!


எலி வளை எலிகளுக்கே!
இந்த முழக்கம் மூத்த பெரியார் பெருந் தோண்டர்களுக்கு நினைவில இருக்கலாம், தமிழ்நாடு தமிழருக்கே! என்று தந்தை பெரியார் குரல் கொடுத்த போதுதான் இந்தக் குரலை ஆனந்த விகடன் கொடுத்தது.

ஆமாம்! எலி வளை எலிகளுக்குத்தான் இருக்க வேண்டும்; அது கண்டிப்பாக பாம்பு வளைகளாக ஆகக் கூடாது என்று திருப்பி அடி கொடுத்தது சுயமரியாதை இயக்கம்.

ஆரியம் கொடுக்கும் அடிகளுக்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்ந்து கொடுக்கும் வீரனாக இருப்பது திராவிடர் இயக்கமே!


கறுப்புக்கு மறுப்பு என்று எழுதப்பட்ட நேரத்தில் மறுப்புக்குச் செருப்பு என்று அடி கொடுத்ததும் திராவிடர் இயக்க வீரர்கள்தாம்.


1948 இல் சென்னையில் இரசிக ரஞ்சனி சபாவில் கே.எஸ்.இராமசாமி சாஸ்திரி தலைமையில் முற்போக்குப் பார்ப்பனர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் தர்ப்பை ஏந்திய கையால் வாளும் ஏந்துவோம் என்று பார்ப்பனர்கள் முழக்கமிட்ட நேரத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஒரு கவிதையை எழுதினார்.

பார்ப்பனர் இதுவரை வாளினைத் தொட்டறியாத சோதா மக்களா? என்று அடிமடியில் கை வைத்து உலுக்கினார்.

அந்தக் கவிதையில் இன்னொரு இடம் -ஈர்ப்புத் தன்மை கொண்டது.

மாநாட்டுக் கன்வீனர் மணி எனும் ஓர் ஆள்
அவசியம் நேர்ந்தால் அரேபியாவில் யூதர்கள் அரசினர் மீது தொடங்கிய
வேலையை திராவிடர் மீது தொடங்குவோம் என்று கூறினாராம்! நன்று! நன்று!!
குருதி வெறிகொண்டு திரியும் நாய்களை அடித்துப் போடும்  அலுவலைத்
திராவிடர் எடுத்துக் கொள்ளக்கூடும்

தடுத்துக் கொள்ள முடியுமா பிறர்க்கே?


எனப் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (குயில்: 13-.5-.1948)
இப்படி எத்தனை எத்தனையோ உண்டு,

ஏன் இவையெல்லாம்? விவரம் இல்லாமலா? நேற்று ஒரு செய்தி ஏடுகளில (31-8-2012)

சென்னையில் உள்ள புகழ்பெற்ற கஸ்தூரிபா மகப்பேறு மருத்துவமனை யில் எலி கடித்து பிறந்த குழந்தை இறந்த சேதி இரக்கம் உள்ளோரைக் கிறங்கச் செய்தது.

உயர்நீதிமன்றமும் உஷ்ணமாக வார்த்தைகளைக் கொட்டியது. அதன் விளைவு எலி வேட்டையைத் தொடங்கிய சென்னை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து மருத்துவமனை களிலும் எலி வேட்டையை ஓகோ என்று நடத்தியது . அதன் விளைவாக 7031 எலி வளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 240 குழுக்கள் இதற்கான வேலையில் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கின!
வளைகளில் எலிக் கொல்லி மருந்து வைக்கப் பட்டதில் 587எலிகள் செத்துக் கிடந்தனவாம்!

பட்டபின்தான் துயரம் என்ற அவசர கதியில் எலி வேட்டை யாடியது வரவேற்கத் தக்கதுதான்.

ஆனால் இந்த நேரத்தில் ஸ்ரீமான் பாலகங்காதர திலகர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கும்போது சில பல தகவல்கள் நம்மை நோக்கிச் சிரிப்பை உமிழுகின்றன.

அந்தச் சுவையான துண்டங்களை நமது தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் நூலான காங்கிரஸ் வரலாறு - மறைக் கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியா யங்களும் எனும் நூலில் சிறப்பாகக் காணமுடியும்; அந்தத் தகவல்கள் ஆசிரியரின் கற்பனையல்ல; மூல ஆதாரங்களுடன் அதனை விளக்கியுள்ளார்.

தக்காணத்தில் யானைத் தலையை உடைய இக் கடவுள் (விநாயகன்) பிரபலமானதாகப் புனிதத்தன்மை பெற்றிருந்தது. அதோடு, மொகலாய ஆதிக்கத்தோடு போரிட்டு மேற்கு வாயிலில் ஒரு அரசை உண்டாக்கிய மராட்டியர்களின் தலைமை வீரனான சிவாஜியின் வழிபாட்டு மரபுடைய தாகவும் இது இருந்தது. இதில், முன்னதன் வழியாக திலகர், மிகவும் மத அடிப்படையிலான ஒரு விழாவில் சமுதாய, அரசியல் உட்பொருளை உள் நுழைக்க விரும்பினார்.

இது முழுக்க முழுக்க் சாதாரண மான ஒரு பண்டிகை. ஆனால், அந்தச் சாதாரண மதப் பண்டிகையை திலகர், இதுதான் நமக்குச் சமுதாய விழா, தேசிய விழா, இதை மிகவும் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று தூக்கிப் பிடித்து, இந்துக்களின் மத உணர்ச்சிக்குத் தீனி போட்டார்.

திலகர் முயற்சியால் ’Ganesh Festival’’ (பிள்ளையார் விழா) என்பது ரொம்பவும் தீவிரமாகி, இந்த விழா பெரிய அளவில் நடக்க ஆரம்பித்தது. இப்படிப் பெரிய அளவில் விழா நடத்தும்போது, காலரா, பிளேக் போன்ற நோய்கள் வருவது அந்தக் காலத்தில் மிகவும் சர்வ சாதாரணம். இப்போதுதான் சுகாதார அறிவு வளர்ந்து மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதால் காலரா, பிளேக் எல்லாம் தடுக்கப்பட்டிருக்கின்றன.

அதுமாதிரி, ஒரு முறை மகாராஷ்டிரத்தில் புனா பக்கத்தில் தீவிரமாகப் பிளேக் நோய் வந்துவிட்டது. பிளேக் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியும். எலி செத்து விழுந்து, அந்த செத்த எலிகள் மூலம் இந்த பிளேக் நோய் பரவும், எலிகளைக் கொன்றால்தான் இந்தப் பிளேக் நோயைத் தடுக்க முடியும்.

அந்தக் காலத்தில் வெள்ளைக் காரன் மக்களெல்லாம் பிளேக் நோயில் சாகக் கூடாது என்பதற்காக எலிகளைக் கொல்லும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தினான்.

உடனே, திலகர், நம்முடைய மதத்தை அழிப்பதற்காக வெள்ளைக் காரன் திட்டமிட்டு இறங்கி விட்டான் என்று எலி ஒழிப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.

முட்டாள்தனமாக அவர் சொல்லவில்லை; அயோக்கியத் தனமாகச் சொன்னார். அதுதான் மிகவும் முக்கியமானது.

பிள்ளையாருடைய வாகனம் எலி. அந்தப் பிள்ளையாருடைய வாக னத்தை அழிக்க வேண்டுமென்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றால் _ நம் கலாச்சாரத்தில், இந்து மதத்தில் கை வைத்துவிட்டான் என்று அர்த்தம்; ஆகவே விடக்கூடாது என்று பிரச்சாரம் பண்ணினார். பிளேக் நோய் பரவுவதைப் பற்றி கவலைப்படவில்லை அவர்.

இதனுடைய விளைவு எப்படி இருந்தது துர்காதாஸ் கூறுகிறார்.

‘’Official anti-Plague Measures in Poona to be considered an outrage on the religious Susceptibilities of
Indians. So L. ciolent indeed was his antipathy of his that he even suffered eighteen months imprisonment to allegedly inciting the murder of two englishmen engaged in combating an outbreak of Plague in Poona District.’’

இதன் தமிழாக்கம்:

புனேயில் பிளேக்கை ஒழிக்கும் அதிகார பூர்வமான நடவடிக்கை களைக்கூட இந்தியர்களுடைய மத இயல்புணர்ச்சியின் மீதான ஒரு சீற்றம் என்று திலகர் கருதினார். ஆகவே வன்முறைக்கு இவருடைய இந்த இயல்பான வெறுப்புணர்ச்சியே உண்மைக் காரணமாகும். இதற்காக, புனே மாவட்டத்தில் திடீரென்று ஏற்பட்ட பிளக் நோயை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வெள்ளையர்களை கொலைக்கு உள்ளாகும்படி செய்ததாகக் குற்றம்  சாட்டப்பட்டு, பதினெட்டு மாத சிறைத் தண்டனையைக்கூட அனுபவித்தார்.


                 -----------------------(காங்கிரஸ் வரலாறு மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியா யங்களும் -கி.வீரமணி)

வீட்டுக்குள் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியை வீதிக்குக் கொண்டு வந்து, இந்து மதவெறி என்னும் நெருப்பு இறக்கையைப் பூட்டி, இந்துத்துவா அடிப்படை வாதத்துக்கு அடிக்கல் நாட்டிய இந்தத் திலகரைப் பற்றி அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடான நமது டாக்டர் எம்.ஜி.ஆர். ஏடு சாங்கோ பாங்கமாக பூச்சூட்டி எழுது கிறது.

சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகம் அறிஞர் அண்ணா அவர்களால் தீட்டப்பட்ட, புகழ் பெற்ற நாடகமாகும். அந்த நாடகத்தில் காகப் பட்டராக அறிஞர் அண்ணாவே தத்ரூபமாக நடித்தவர்கூட! அந்த நாடகத்தில் சிவாஜி வேடம் தாங்கி நாடக மேடையையே கிடுகிடுக்க வைத்து நடித்தவர்தான் வி.சி. கணேசன்.

சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் இந்த நாடகம் நடைபெற்றபோதுதான் (15.12.1945) சிவாஜி கணேசன் எனும் நிலைத்த பட்டத்தை தந்தை பெரியார் வழங்கி, கலையுலகில் சிவாஜி கணேசன் என்னும் மங்காச் சுடரொளியாகப் புகழ் பெறும் நிலை ஏற்பட்டது.

சிவாஜி மகாவீரன் சூரன் ஆயினும் வருணசிரமவாதிகளின் வலையில் எப்படி வீழ்கிறான்? வாள் ஏந்தும் கை தர்ப்பைப் புல்லிடம் எப்படி மண்டி யிட்டது? என்ற வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டதுதான். அண்ணாவின் அந்த நாடகம்.

இந்த அடிப்படை வாசனை சிறிதுமின்றி அண்ணா பெயரை வைத்துள்ள கட்சியின் அதிகார பூர்வ ஏட்டிலும் அதனைத் தலை குப்புறக் கவிழ்க்கும் வகையில் இந்துத்துவ வாதியான திலகருக்கு லாலி பாடுகிறது என்றால் இதன் பொருள் என்ன?

ஆர்.எஸ்.எஸ்.சின் அடிநாதமான ஒருவரை புகழ்வதன் மூலம் திராவிடர் இயக்கத்தின் அடிப்படையை தனக்குத்தானே தாழ்த்திக் கொண்டு விட்டது அ.இ.அ.தி.மு.க. என்பது வெளிப்படை!

இதன் மூலம் அ.இ.அ.தி.மு.க.வின் திராவிட முகமூடி கழன்று விட்டது (அ.இ.அ.தி.மு.க. ஏட்டில் வெளிவந்த கட்டுரை தனிப்பெட்டி செய்தி - காண்க.)

(அ.இ.அ.தி.மு.க. ஏட்டில் வெளிவந்த கட்டுரை தனிப்பெட்டி செய்தி - காண்க.)
சிவாஜி முஸ்லிம் அரசர்களை வென்றான் என்பதை மட்டும் மய்யப்படுத்தி அவனை முஸ்லிம் எதிர்ப்பாளனாக மெருகு கொடுத்து, அவன் பெயரில் சிவ(ஜி) சேனை எனும் அமைப்பை பால்தாக்கரே நடத்துகிறார்.

இதன் பின்னணியில் இவ்வளவு வரலாற்றுத் தகவல்களும், உண்மை களும் குத்திட்டு நிற்க நமது எம்.ஜி.ஆர். ஏடு திலகரைப் புகழ்வதின் நோக்கத்தை சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். அன்று திலகர் தூவிய மதவாத நச்சு விதை காலங் கடந்தும் நச்சு மரமாக வளர்ந்தது.

பிளிட்ஸ் ஏட்டில் வெளிவந்த வேறு ஒரு தகவல் இதோ:
எலி ஒழிப்பில் மதம்!

கேள்வி: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து வருகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள், அந்த நகரசபையின் எலி ஒழிப்புத் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?

கேள்வியாளர்: ஆம். பம்பாயில் தான்!

பிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?

கேள்வியாளர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.

பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி!

கேள்வியாளர்: ஆமாம். எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது. இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.

பிரதமர்: இது மிகவும் வருத்தத் திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இவர்கள் இப்படி எல்லாம் எதிர்ப்பு தெரிவிப் பதனால் தான் அந்தப் பிரச்சினை களை வெல்ல முடியவில்லை.


பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் அளித்த பேட்டி
(26.2.1977ஆம் தேதி இதழிலிருந்து)

இந்த விவரங்களை எல்லாம் தமிழ்நாடு முதல் அமைச்சருக்குத் தெரிந்திருந்தால் எலி வேட்டையைத் தடுத்திருப்பார் என்று நம்பலாம்.

கூடுதலாகத் தகவல்: எலி வேட்டையாடி 587 எலிகளை வேட் டையாடியுள்ளார்கள். விநாயக பகவான் என்ன ஆனான்?

யார் கனவிலாவது வரவில்லையா? மிரட்டவில்லையா? பரிதாபம்! அவர் என்ன செய்வார்? பிடித்து வைக்க ப்பட்ட கொழுக்கட்டையாயிற்றே!

-------------------- மின்சாரம் அவர்கள் 1-9-2012 “விடுதலை” ஞாயிருமலரில் எழுதிய கட்டுரை

22 comments:

தமிழ் ஓவியா said...

இந்தி கற்காததால்... கெட்டோமா?திராவிட கட்சிகள் ஆண்டதால் ஹிந்தி கற்காமல் விட்டு பல வேலைவாய்ப்புகளை இழந்தோம் என்று புலம்புவது தாழ்வு மனப்பான்மையின் உச்சம்.அஸ்ஸாம் ஆரம்பித்து பீகார்,யூ.பி. என வட இந்தியர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை தேடி வந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் என்ன தமிழ் புலவர்களா? இதோ இன்று இங்கு (புதுடெல்லி-நொய்டா பதிப்பு) தி ஹிந்து நாளிதழில் வெளி வந்துள்ள செய்தி. தமிழகத்தை சேர்ந்த குன்னூர் மாணவி ஸ்ருதி இங்கிலாந்தில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டியில் ஆசிய அளவில் முதல் இடம்பிடித்து பிரிட்டிஷ் ஸ்காலர்சிப் பெற தேர்வாகியுள்ளார்.

அவரது ஆங்கிலப் புலமையே அவரை தேர்வு செய்யக் காரணம் என நடுவர்கள் கூறியுள்ளனர்.ஏற்கெனவே இங்கு உள்ள வட இந்தியர்கள் நாங்கள் ஹிந்தி மட்டும் பயின்றதால் எங்கும் செல்ல வழி இல்லை,நீங்கள் நன்றாக ஆங்கிலம் பயின்று உள்ளதால் உலகம் முழுதும் கலக்குகிறீர்கள் என்று சொல்லிவரும் வேளையில்,நமது இளைஞர் மற்றும் இளம்பெண்கள் நிகழ்த்தும் இது போன்ற சாதனைகள் இங்கு உள்ள ஊடகங் களில் முதன்மைப் படுத்தப்படும் போது நம் மீதான மதிப்பு இன்னும் மேலோங்குகிறது.ஸ்ருதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
(முகநூலில் விஜயலட்சுமி என்பவர்)

தமிழ் ஓவியா said...

யார் பதவி விலக வேண்டும்?

பாரதீய ஜனதா கட்சி - பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத் துள்ளது. ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, தன்னிடம் நியாயமும், உண்மையும் இருக்குமானால், அவற்றை அழுத்தத்துடன் எடுத்து வைத்து பிரதமரைத் திணற அடிக்க வேண்டியது தானே!

அதெல்லாம் முடியாது நாங்கள் சொல்லுகிறோம் - நீங்கள் பதவி விலகித்தான் தீர வேண்டும் என்பது - கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான பாசிசக் குரலாகும்.
பிரதமர்மீது எந்த நீதிமன்றத்திலும் குற்றம் சொல்லப்படவில்லை. தீர்ப்புகளும் அந்த வகையில் வரவும் இல்லை.

அதே நேரத்தில் குஜராத்தில் இப்பொழுது என்ன நடக்கிறது? 2002இல் பிஜேபியை சேர்ந்த நரேந்திர யாய் தாமோதரதாஸ் மோடி முதல் அமைச்சராக இருந்தபோது 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லீம்கள் அரச பயங்கரவாதமாக காவல்துறையின் துணையோடு கொல்லப்பட்டனர்.

குறிப்பாக நரோடா பார்ட்டியா எனும் இடத்தில் 97 முசுலிம்கள் குழந்தைகள் உட்பட கொல்லப்பட்ட வழக்கில் பிஜேபியின் முன்னாள் அமைச்சர் மாயடெனகோட்நானி உட்பட 32 பேர்களுக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

பஜ்ரங்தளத்தின் மூத்த தலைவர் பாபு பஜ்ராங் கிக்கு வாழ்நாள் முழுவதும் தண்டனையாக அளிக்கப்பட்டது.

மோடி அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்ச ராகவிருந்த மாயாபென் கோட் நானி தலைமறைவாகி அதன்பின் நீதிமன்றத்தில் சரண் அடைந்தவர் என் பதையும் இந்த இடத்தில் நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்வதும் அவசியமாகும்.

மோடி அமைச்சரவையில் இருந்த ஒருவருக்கு கொலை வழக்கில் 28 ஆண்டுகள் தண்டனை என்றால் சாதாரணமானதா? நியாயமாக இதைக் காரணம் காட்டி குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சொல்வதில் தவறு என்ன இருக்க முடியும்?

குஜராத் மாநிலத்தில் வழக்கு நடந்தால் நியாயம் கிடைக்காது என்ற தன்மையில் உச்சநீதிமன்றமே வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றியதே - இதன் பொருள் என்ன?

சொராபுதீன் போலி என் கவுண்டர் வழக்கினை மகாராட்டிராவில் உள்ள நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை ஆணை பிறப் பித்துள்ளதே!

நீதிமன்றத்தில் அதுவும் உச்சநீதிமன்றத்தில் மோடி மொத்து வாங்கிய அளவுக்கு வேறு ஒருவர் வாங்கி இருக்கிறார் என்று சொல்ல முடியாது.

மற்றவர்கள் மீது நீதிமன்றம் இப்படித் தீர்ப்புக் கூறினால் முண்டாதட்டி சண்டியர்த்தனமாகத் தலையங்கம் தீட்டும், திருவாளர் சோ ராமசாமி, மோடி விடயத்தில் நீதிமன்றம் அடிக்கடி கொடுக்கும் மொத்துகள் பற்றிக் கண்டு கொள்ளவே மாட்டார் - வக்காலத்து வாங்கி எழுதுவார்.

சிறப்பு நீதிபதி ஜோத்ஸ்நா தனது தீர்ப்பில்..! அரசியல் சாசனத்தின் மதச் சார்பின்மைக்கு ஏற்படு கிற புற்று நோய்தான் இனக் கலவரங்கள் நரோடா பாட்டியாவில் கடந்த இனக்கலவரம் இந்திய அரசியல் சாசன வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் என்று கூறியுள்ளாரே! இது ஒன்று போதாதா மோடி பதவி விலகி ஓடுவதற்கு?

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், மதச் சார்பின்மை சக்திகள் ஒன்று திரண்டு மோடி பதவி விலக வேண்டும் என்ற குரல், குமரி முதல் இமயமலை வரை எதிரொலிக்கும் வகையில் உரத்த முறையில் எழுப்ப வேண்டும்.

சில பார்ப்பன ஏடுகளும் அவற்றின் தொங்கு சதையாக இருக்கக்கூடிய வீடண ஏடுகளும் அடுத்த பிரதமராக மோடி வருவதைத்தான் பொது மக்கள் விரும்புகிறார்கள் என்கிற புள்ளி விவரங்களை இப்பொழுதே அள்ளிவிட ஆரம்பித்துள்ளன. அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கும் அளவுக்கு மோடி அரசுமீது நீதிமன்றம் அளித்துவரும் தீர்ப்பு, மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த வர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை இவற்றின் அடிப்படையில் நாட்டையே கிடுகிடுக்கச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இந்த மதம் பிடித்த யானைக் கூட்டத்தின் திமிர் அடங்கும் - ஒடுங்கும்.1-9-2012

தமிழ் ஓவியா said...

கி.பி. 2030களில் தமிழன் பெயர் எப்படி இருக்கும்?

கலையரசு, முகிலன், இனியன், கலைமணி இப்படி தேன்போல இனிக்கும் நல்ல தமிழ்ப் பெயர்களை தன் பிள்ளைகளுக்கு வைத்து அகமகிழ்ந்தார் மாரிமுத்து.

நல்ல பெயர்களைக் கொண்டு வளர்ந்து ஆளான பிள்ளைகளிடம் தந்தையிடமிருந்த அந்த மொழிப் பற்று ஓரளவு இருந்தாலும் அவர் களின் பிள்ளைகளுக்கும் ஸ்தேவா, பிரியா, பவனியா சந்தோஷன் என் றெல்லாம் பெயர் வைத்தனர். பிள்ளைகளுக்கு வாய்த்த மனைவி மார்கள் சோதிடத்திலும் எண் கணிதத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததே இதற்கான காரணமாக இருந்தது.

தமிழுணர்வோடு நல்ல தமிழ்ப் பெயர்களை, பிள்ளைகளுக்கு வைக்க விரும்புகிறவர்கள் எண் கணிதம் ஜோதிடம் என்று போகக் கூடாது. காரணம் அவற்றால் தமிழப் பெயர் களை அமைத்துத் தர முடியாது.

சோதிடம், எண் கணிதம் ஒரு நம்பிக்கையே. இவர்கள் பரிந்துரைக் கும் பெயர்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அண்மையில் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தியைக் குறிப்பிடலாம். மலேசிய சிறைச்சாலைகளில் இருப்போரில் 49 விழுக்காட்டினர் தமிழர்களாம். சிறைச் சாலைகளில் அடைபட்டுக் கிடக்கும் இவர்கள் அனைவருமே சோதிடம் பார்த்து பெயர் சூட்டப் பட்டவர்கள்தானே. பிறகு ஏன் இப்படி?தமிழ் ஓவியா said...

ஒருவருக்கு ஏன்பெயர் வைக்கி றோம்? அவரை அழைக்க கூப்பிட பெயர் உதவுகிறது. மேலும் எந்த இனத்தவர் என்பதைத் தெரிந்து கொள்ளவும் பெயர் பெரிதும் உதவு கிறது.
லிம் வா சோங் இப்பெயருக்குரிய வர் ஒரு சீனர். முஸ்தபா பின் அலி இப்பெயருக்குரியவர் ஒரு மலாய்க் காரர். வில்லியம், டேவிட், மேரி என்று பெயர் கொண்டவர்கள் ஆங்கிலேயர்கள். மாணிக்கம், நாகம்மாள், முனியாண்டி இவர்கள் தமிழர்கள். இவ்வாறு ஒருவரின் பெயரைக் கொண்டு அவரின் இனத்தை எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.

சுவர்த்தி, பிராவெய்தா, சாகன்யா விஜிட்ரி இவர்கள் எல்லாம் யார்? எந்த இனத்தவர்கள்? இவர்களின் தாய்மொழி எது? குழப்பமாக இருக்கும். உண்மையில் இவர்கள் எல்லாம் பச்சைத் தமிழர்கள்தான். புதுமை, இனிமை என்னும் மயக்கத்தில், நாம் தமிழர்கள் என்கின்ற உணர்வு அறவே இல் லாமல், பொருள் புரியாத பெயர் களை அவர்களாகவே கண்டு பிடித்து உருவாக்கி தங்கள் பிள்ளை களுக்கு வைக்கப்போய் அப்பிள் ளைகள் தமிழர்கள் என்னும் அடை யாளத்தை முற்றிலும் இழந்து விட்டனர்.

தமிழர்களின் பெயர்கள் 95 விழுக் காடு வடமொழியில் இருப்பதை அறிந்து - வியந்து இதில் ஒரு மாற்றங் காண விரும்பி, நல்ல தமிழ்ப் பெயர்களைத் தேடியும் நானே உருவாக்கியும், ஓர் ஆயிரம் பெண், ஆண் குழந்தைகளுக்குரிய பெயர் களைத் தொகுத்து தமிழில் பெயரிடு வோம் என்னும் பெயரில் ஒரு நூல் வெளியிட்டேன்.

மலேசியாவில் திருவிடச்செல்வன் எழுதியுள்ள தமிழில் பெயரிடுவோம் என்ற இந்த நூல் என் உள்ளம் கவர்ந்தது என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் பாராட்டப் பட்டவை, இன, மொழி உணர்வு மிக்க அருமை நண்பர்களின் பேருத வியால் ஐந்து பதிப்புகள் வெளி யாகியும் இந்நூலின் குறிக்கோள் வெற்றிபெறவில்லை என் நண்பர் ஒரு வருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. தமிழில் பெயரிடுவோம் நூலிலிருந்து தேன்மலர், பனிமலர் என இரு இனிய தமிழ்ப் பெயர் களைத் தேர்ந்தெடுத்து ஒரு சோதி டரைப் போய் பார்த்திருக்கிறார். பிள்ளைகளின் பிறந்த நேரம், நாள் முதலியவற்றை ஆராய்ந்து சோதிடர், நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர்கள் சரிப்பட்டு வராது, சீயில் ஞியில் முதல் எழுத்தைக் கொண்ட பெயர்களாக வையுங்கள், பிள்ளைகளின் வாழ்வு சீராகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று கூற நண்பரும் யுகேந்திரன், திவ்யாஷினி என்று பெயர் வைத்துள்ளார். பெயர் வைப்பதில் சோதிடத்தின் குறுக்கீடு இருப்பதால், நல்ல தமிழ்ப் பெயர்கள் தமிழ்க் குடும்பங்களில் ஊடுருவ முடியாமல் உள்ளது.

தமிழ் ஓவியா said...


பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயரை வைப்பதிலோ, தாத்தா பாட்டியின் நினைவாக அவர்கள் பெயர்களை பிள்ளைகளுக்கு வைப்பதிலோ இன்றைய பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக இதுவரை யாரும் வைக்காத பெயராக இருக்க வேண்டும். கேட்பதற்கு புதுமையாக இனிமையாக இருக்க வேண்டும். காலத்திற்கேற்ற பெயராக மார்டன் பெயராக இருக்க வேண்டும் என்று சிந்திக்கும் இன்றைய பெற்றோர் வைக்கும் பெயர்கள் அடியில் கண்டபடி பிள்ளைகளின் பிறப்பாவணத்தில் பதிவாகின்றன.

பிரமீரா த/பெ. இராமலிங்கம்
ஷஹ ஸ்ரா த/ பெ. கணேசன்
சுவானிஷ் த/பெ சண்முகம்
லிஸ்மா த/பெ. நடராஜன்
பிரிதோஷ் த/ பெ. சுந்தரம்
பரிசீலன் த/பெ சண்முகம்
விஷ்ஷா த/பெ. சரவணன்

இவ்வாறான பெயர்கள், தமிழில் இல்லாத, பொருள் விளங்காத, முன்பின் கேட்டறியாத பெயர்களாக இருந்தாலும் குழந்தையின் பெயரை தந்தையின் பெயரோடு இணைத்துப் பார்க்கும்போது, குழந்தை தமிழ்க் குழந்தைதான் என்பதை அறிய முடியும். இராமலிங்கம், சுப்பிரமணி யம், கணேசன் நடராசன், சுந்தரம் இவை யாவும் வடமொழிப் பெயர் சொற்களாக இருந்தாலும் நெடுங் காலமாகத் தமிழ் வழக்கில் இருந்து வருவதால் லிஸ்மா த/பெ நடராஜன் என்னும் பெயரில் வரும் நடராஜன் குழந்தையை தமிழ்க் குழந்தை என்று அடையாளங்காட்டும்.

இது இன்றைய (2010) நிலை. ஆனால் இன்னும் 20,30 ஆண்டுகளில் அதாவது கி.பி.2030 களில் தமிழ்க் குழந்தைகளின் பெயர்களில் தந்தை யின் பெயர், சுப்பிரமணியம், கணே சன், இராமமூர்த்தி, நடராஜன் என் றெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை.

எதிர்காலத்தில் குழந்தையின் பெயரும் தந்தையின் பெயரும் யாருக்குமேவிளங்காத பெயராகத் தான் இருக்கப் போகிறது. கி.பி. 2030களில் தமிழர்களின் பெயர்கள் அடியில் கண்டவாறு தான் இருக்கப் போகிறது. இதில் யாருக்கும் ஐயம் வேண்டாம். இது மறுக்க முடியாத உண்மை.

பிரமிதன் த/பெ. சுப்ரித்
புஸ்லஹனி த/பெ சவர்ந்தன்
வனிசந்தி த/பெ ஹரித்தீஸ்
அஸ்வத்தா த/பெ நிசாகுலன்
அவீனசியா த/பெ அசோதின்
வசந்தியா த/பெ ஹனிஷான், அஸ்வத்தன் த/பெ னிஷான்
முஸ்கன் த/பெ ஷகுந்

மேற்காணும் பெயர்களை எங்கா வது பார்க்கும்போதோ எதிலாவது படிக்கும் போதோ அப்பெயருக் குரியவர் ஒரு தமிழினத்தவர் என அடையாளம் காட்டுமா?

தொன்மையான இலக்கியங்களை யும், உலகின் மூத்த மொழி செம்மொழி என அழைக்கப்படும் செந்தமிழ் மொழிக்குரியவர்களின் பெயர்கள் அஜஷந்தன், சுவாங்நிலி, சிஸ்வித்தியன், சர்லிங்கன் என் றெல்லாம் இருக்கப் போவதை நினைக்கும்போதுமனம் வலிக்கிறதே!

இம்மட்டோ! நெஞ்சைப் பிழியும் மற்றொன்றையும் இங்கு குறிப் பிடத்தான் வேண்டும். இன்றுபல குடும்பங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் ஆங்கிலத்திலேயே உரையாடுவதால், பிள்ளைகள், தமிழறிவு இல்லாமலேயே வளர் கின்றனர்.

ஒரு பச்சைத் தமிழச்சியின் மார்பில் வடியும் பாலை உண்டு வளரும் தமிழ்க் குழந்தை அது பேச தொடங்கும்போது, அதே பச்சைத் தமிழச்சி பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பாலை ஊட்டி வளர்ப்பது கொடு மையிலும் கொடுமையல்லவா?

மொழிப்பற்றும், இனப் பற்றும், ஒற்றுமை உணர்வும் இல்லாத ஓர் இனம் தமிழினம், இந்நாட்டில் நம்மைப் போன்று குடியேறிய சீனர்களிடம் இருக்கும் மொழி, இனப்பற்றையும் மெச்சத்தக்க ஒற்று மையையும் அன்றாடம் கண்கூடாகப் பார்த்தும் அவர்கள் போல் நாமும் இருக்க வேண்டும் என்கின்ற உணர்வு தமிழர்களிடம் எழவில்லையே ஏன்?

தடுக்கி விழும் பக்கமெல்லாம் தமிழின் பெயரால் இயக்கங்களை அமைத்துக் கொண்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கமிடும் தமிழவாணர்களே, நீங்கள் ஆற்றிவரும் தமிழ்த் தொண்டில், நல்ல தமிழ்ப் பெயர்களைப் பரப்பும் பணியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே என் அன்பான வேண்டுகோள்.

நாரண. திருவிடச்செல்வன்
மக்கள் ஓசை 13.6.2010 மலேசியா

தமிழ் ஓவியா said...

முடநம்பிக்கைகள்

திருமண மேடைப்பிரிவில் பதிவு செய்த தமிழ்க் குடும்பங்களிலிருந்து நான் தெரிந்து கொண்டது நிறையவே. குறிப்பிட்ட வயதுக்குள் தங்கள் பெண்களின் திருமணம் நடைபெறாமல் இருப்பதால் பரிதவிக்கும் பெற்றோர் நிறைய உள்ளனர். பல பெண்கள் நிறைய படித்து விட்ட காரணத்தால் அவர்களுக்கு நிகராகப் படித்த இளைஞர்கள் போதிய அளவில் இல்லை என்பது அனைத்து சமூகங்களிலும் காணப்படும் கவலை. எங்கள் பெண்களை அதிகம் படிக்க வைத்தது தவறாகப் போய்விட்டது என்று கவலைப்படும் பெற்றோர் களும் உண்டு.

பெண் படித்தவளாக இருக்கிறாள். அழகாக இருக்கிறாள். நல்ல பணியில் கைநிறைய சம்பாதிக்கிறாள். ஆனால் சரியான வரன் அமையவில்லை என்று வருந்துவோர் பலர். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் பெண் பிறந்த நட்சத்திரம் சரியில்லை என்று பலர் கூறுகின்றனர். பொது வாக உரிய காலத்தில் திருமணமாகாத பெண்களின் நட்சத்திரங்கள் எவை என்று பார்த்தால் மூல நட்சத்திரம், கேட்டை, ஆயில்யம், விசாகம் ஆகி யவை ஆகும். இந்நான்கு நட்சத் திரத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்யப் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

மூலநட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் திருமணம் செய்யும் பையனின் தந்தைக்குக் கேடு.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் பையனின் தாயாருக்குக் கேடு.

கேட்டை மற்றும் விசாக நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் பையனின் மூத்த சகோதரருக்கும் இளைய சகோதரருக்கும் கேடு என்று சோதிடர்கள் கூறுவதாகப் பலர் சொல்கின்றனர். திருமணத்திற்குப் பொருத்தம் பார்ப்பது என்பது தமிழர் சமூகத்தில் ஊறிப்போன ஒரு பழக்கமாகக் காணப்படுகிறது. தினம், கணம், மகேத்திரம், ஸ்தீரிதீர்த்தம், யோனி, ராசி, வசியம், ரச்சு வேதை, நாடி எனப் பத்து பொருத்தங்கள் தேவை என்று சோதிடர்கள் கூறுவர்.தமிழ் ஓவியா said...

இதில் உடலமைப்பின் ஒற்று மையை அல்லது பொருத்தத்தைக் கூறுவர். இரண்டு பொருத்தங்கள் மற்றவை அறிவு பூர்வமானவையல்ல. ஒரு குறிப்பிட்ட தினத்தில் அதாவது நட்சத்திரத்தன்று பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் குறை ஏற்படும் என்பதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை.

ஒரு சில நட்சத்திரங்களுக்கு எதுகை மோனையுடன் கூடிய சொல வடைகள் அல்லது பழமொழிகள் வழக்கத்திலுள்ளன. அதில் முக்கிய மாகக் கருதப்படுவது மூல நட்சத் திரத்திற்கான பழமொழி. ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலமாக்கும் என்பது.
சோதிடவியலில் ஆண்மூலம், பெண் மூலம் என்று எதுவும் கிடையாது. நான் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஓராண்டு சோதிடவியல் சான்றிதழ் படிப்பினை முடித்தவன். எனவே ஆண்மூலம், பெண் மூலம் என்று சோதிட வியலில் இல்லை என்பதை உறுதி யாகக் கூற முடியும். இந்தப் பழ மொழியின் உண்மையான பொருள் என்பது வேறு. ஆனிமூலம், பின் மூலம் என்பதாகும்.

ஆனி மாதத்தில் வருகின்ற மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசாளும் தன்மை பெற்றவர்கள். அதிகாரபலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு நட்சத் திரத்தையும் சோதிடவியல் நான்கு பாகங்களாக பிரித்துள்ளனர். இதை முதல் பாதம், நட்சத்திரத்தின் துவக்க நேரத்தில் வருவது முதல் பாதம், நட்சத்திரம் முடியும் நேரத்தில் வருவது நான்காம் பாதம். மூல நட்சத்திரத்தில் நான்காம் பாதம் என்பது பின்மூலம் என்று கருதப்படுகிறது. இந்த பின் மூலத்தில் பிறந்தவர்கள் எதிரிகளை, எதிர்ப் புகளை நிர்மூலமாக்குவார்கள் என்பது இதன் பொருளாகும். அதுவே பின்மூலம் நிர்மூலம் என் பதே ஒழிய பெண்மூலம் நிர்மூலம் அல்ல. இதுவே சோதிடவியல் கூறும் செய்தி ஆகும்.

உலகத்தில் மானிடராய்ப் பிறந் தோர் அனைவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. கிறித்தவர்களோ, இசுலாமியர்களோ, வேறு மதத் தினரோ நட்சத்திரப் பொருத்தமோ, ராசிப் பொருத்தமோ பார்ப்பதில்லை. அவர்களின் திருமணத்தால் யாருக் கும் குறையோ, கேடோ ஏற்படுவது இல்லை.

இறை நம்பிக்கை, மத நம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய தனிப் பட்ட கொள்கையாகும். நல்ல வற்றின்மீது நம்பிக்கை வையுங்கள். மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.

(நன்றி: ஊற்று ஜூலை 2012)

தமிழ் ஓவியா said...

தளபதியை வியக்க வைத்த நெப்போலியன்!ஒரு சமயம் போர் முனையில் நெப்போலியனின் படைகள் எதிரிகளின் திடீர்த் தாக்குதலுக்கு உள்ளாகி கஷ்டமான நிலையில் இருந்தன. அப்போது இரவு நேரம். கூடாரத்தில் நெப்போலியன் உறங்கிக் கொண்டிருந்தார். உறங்கும் நேரத்தில் நெப்போலியனை எப்படி எழுப்பித் தகவல் கூறி அவரது ஆலோசனையைப் பெறுவது என்று நெப்போலி யனின் பிரதான தளபதி சங்கடமடைந்தார். ஆனாலும் வேறு வழியில்லாததால் அந்தத் தளபதி நெப்போலியனின் கூடாரத்துக்குள் பிரவேசித்தார். அங்கு நெப்போலியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைத் தளபதி கண்டார். அவரை எழுப்பலாமா, வேண்டாமா என்று தளபதி யோசித்தபோது மேஜை மீது ஏதோ எழுதப்பட்ட காகிதம் ஒன்று விரித்து வைக்கப்பட்டிருந்தது தளபதியின் கண்களில் பட்டது. அவர் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தார். எதிரிப் படைகள் அன்று இரவு திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஊகித்து, எதிரிப் படைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதற்கான வழிவகைகளை அந்தக் கடிதத்தில் நெப்போலியன் தெளிவாக எழுதி வைத்திருந்தார். வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த நெப்போலியனின் படைத் தளபதி, அவரை எழுப்பாமல் அந்த ஆலோசனைக் கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆலோசனைப்படி தளபதி எதிர்த் தாக்குதல் நடத்தி எதிரிப் படைகளை பின்வாங்கி ஓடவும் வைத்தார்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு

தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு சென்னையில் 13.11.1938ஆம் தேதி ஞாயிறன்று ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் நடைபெறும். மாநாட்டுத் தலைவர் மறைத்திரு - மறைமலையடிகளாரின் திருமகளார் - தோழர் திருவரங்க - நீலாம்பிகை அம்மையார் அவர்கள். கொடி உயர்த்துபவர்: தோழர் மீனாம்பாள் சிவராஜ் அம்மையார் அவர்கள். திறப்பாளர்: தோழர் பண்டிதை அ.நாராயணி அம்மாள் அவர்கள். ஈ.வெ.ரா.நாகம்மாள் உருவப்படத்தை சென்னை தோழர் பார்வதி அம்மையார் அவர்கள் அலங்கரிப்பார். வரவேற்புக் கழகத் தலைவர்: தோழர் வ.பா.தாமரைக்கண்ணியம்மையார் (ஜலசாட்சி அம்மையார்) அவர்கள்

மாநாட்டில் தமிழ்நாட்டின் பல பெண்களும், தலைவர்களும், சொற்பொழி வாளர்கள், மாநாடு நடைபெறும் இடமும், பிறவும் பின்னர் அறிவிக்கப்படும்.

அமைப்பாளர்: டாக்டர் எஸ்.தருமாம்பாள் அம்மையார், மலர் முகத்தம்மையார் (புஷ்பவதி அம்மையார்) மூவலூர் ஆ.இராமாமிர்தம் அம்மையார்) விளம்பரச் செயலாளர்: கி.கலைமகளம்மையார் (சரஸ்வதி அம்மையார்)

மகாநாட்டுத் தொழிற்கூடம் (காரியாலயம்), 330, தங்கச்சாலைத் தெரு, சென்னை. விடுதலை, 11.11.1938, பக்கம் -3

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் மீது குற்றச்சாட்டு - தவிடுபொடி!தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத் துக்காக தமிழ்நாடு காங்கிரசிலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு இருந்தது. அதற்குரிய கணக்கு வவுச்சர் உட்பட தந்தை பெரியாரால் கொடுக்கப்பட்டு விட்டது. அந்தக் கணக்குள் ஆபீசில் கிடைக்க வில்லை என்று சொன்னார்கள். அந்த சமயம் தந்தை பெரியார் காங்கிரசை வெளுத்துக் கட்டிக் கொண்டி ருந்த சமயம். பெரியார் மீது ஏதாவது குற்றம் சுமத்த வேண்டும் என்று ஆதாரத்தைத் தேடிக் கொண்டு இருந்தவர்கள் இதைப் பிடித்துக் கொண்டார்கள். தோழர் முத்துரங்க முதலியார் காங்கிரஸ் ஆபீசுக்கு அதிகாரியாக வந்தார். அவரை விட்டு பெரியாருக்கு ரிஜிஸ்டர் நோட்டீஸ் அனுப்பினார்கள். கணக்கை அனுப்பாவிட்டால் பத்திரிகைகளில் வெளியிடப்படும் என்று அதில் மிரட்டி எழுதி இருந்தார்கள். மறுபடியும் ரிஜிஸ்டர் தபாலில் தந்தை பெரியார் அவர்கள் கணக்கை அனுப்பி வைத்தார்கள்.

யார் யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கணக்கில் பெரியார் குறிப்பிட்டிருந்தாரோ அவர்களுக்கெல்லாம் காங்கிரஸ் ஆபீசிலிருந்து கடிதம் எழுதி அவ்வாறு பணம் பெறப்பட்டதா என்று கேட்டார்கள். சம்பந்தப்பட்ட அத்தனைப் பேரும் தொகை பெறப்பட்டதாகப் பதில் எழுதிவிட்டார்கள். ஆயிரம் ரூபாயில் எழுநூறு ரூபாய் வைக்கம் சத்தியாகக்கிரகக் காரியதரிசிக்குக் கொடுக்கப்பட்டது. மீதி ரூபாய் 300இல் பாலக்காடு சவுரி ஆசிரமத்துக்குக் கதருக்குப் பஞ்சு வாங்கி அனுப்பியது. மீதி நூற்றுச் சில்லரை ரூபாய் கோட்டார் சத்தியாக்கிரகத்துக்குக் கொடுக்கப்பட்டது. இவ்வாறு சரியாக தந்தை பெரியாரால் கணக்கு ஒப்படைக்கப்பட்டதும் காங்கிரஸ்காரர்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றனர். ஆதாரம்: குடிஅரசு 24.11.1935 பக்கம் 11,12

தமிழ் ஓவியா said...

உச்சிக் குடுமி ஒழிக! தர்ப்பைப் புல் ஒழிக!


நேற்றுவரை சட்டமீறலைத் தவறெனக் கண்டித்து வந் தேன். பொதுமக்கள் மனதை அவ்வாறு வளர்க்கக் கூடாது என்று நினைத்து வந்தேன். இனி நீங்கள் சிறைக் கூடத்தை மாமனார் வீடு போலவும் படுக் கையறை போலவும் எண்ணிச் செல்லுங்கள். நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டுவதில் லை. ஒருவரை வையவோ, அடிக்கவோ வேண்டுவதில்லை. தமிழ் வாழ்க! என்றால் போதும். உடனே, தம்பி! வா வென ஆச்சாரியார் (சென்னை மாகாண பிரதம அமைச்சராக இருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார்) அழைத்துக் கொள்வார் நான் பிழைக்க வேண்டுமென்று நினைத்தால் போதும்; எதிரிகள் சாகவேண்டுமென நினைக்க வேண்டாம்.

தமிழன் வாழ்வு அவர்கட்கு பொறுக்கவில்லை. என்றென்றும் நம்மை அடக்கி அடிமைப்படுத்தி ஆளவே விரும்புகிறார்களென்று சென்ற 20 ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றேன்.

பனகல் அரசர் வெற்றி பெற்ற காலத்து பனகல் இறந்தார் என ஒரு செய்தியைப் பரப்பிப் புகையிலை வழங்கினர். ஜஸ்டிஸ் மந்திரிகளை இராட்சதர்க ளென்றும், அரக்கர்களென்றும், இராவணர் என்றும் கூறினர். ஆனால் இன்று உச்சிக்குடுமி ஒழிக! எனத் தொண்டர்கள் கூறினார்களென்று ஆச்சாரியார் தனது உச்சிக்குடுமியைத் தொட்டுப்பார்த்துக் கொள்ளுகிறார். உச்சிக்குடுமி ஒழிக என்றால் என்ன? உச்சிக்குடுமி தன்மைதானே ஒழியவேண்டுமென்பது. இதற்கு இவ்வளவு நோவும் வருவானேன்? சிறிதாவது ஞானம் வேண்டாமா? அன்று சரிகைக் குல்லாய் ஒழிக என்று இவர்கள் சொல்லவில்லையா? 2000 தர்ப்பையோ இன்றி உச்சிக் குடுமியோ ஒழிக என்றாலும் ஒரு அரக்கன் ஒழிக என்றதற்குச் சரியாகாதே! (கைதட்டல்) பிறன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான் இரா வணன் என்று கதை எழுதி வைத்து அந்தப் பெயரால் தமிழர்களை அழைக்கும் போது, உச்சிக்குடுமி டவாலி தர்ப்பை ஒழிக என்றால் என்ன? அத் தன்மைகள் ஒழிய வேண்டும் என்பதுதானே பொருள். - தந்தை பெரியார்

(இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தாய்மார்களைப் பாராட்டி 14.11.1938 அன்று சென்னை பெத்துநாயக்கன் பேட்டை தமிழ்க் கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து. விடுதலை 21.11.1938, பக்கம் 1)

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட்(டு)

கிரிக்கெட் என்றால் பார்பபனர்களுக்குச் செல்லப் பிள்ளை. பார்ப்பனர்களுக்குச் செல்லப்பிள்ளை என்றால் அது அரசாங்கத்தின் அதிகார மாளிகை மாணிக்கத் தொட்டிலில் சீராட்டப்படும்.

டெண்டுல்கர் (பார்ப்பனர்) எம்.பி.யாக்கப்பட்டு விட்டார். நியூசிலாந்துக்கு எதிராக அவர் விளையாடிக் கொண்டு இருக் கிறார். அவர் எடுத்த ஓட்டங் கள் 19 மற்றும் 17 (அதுவும் டெஸ்ட் போட்டியில்) ஆனாலும் ரூபாய் இலட்சக்கணக்கில் அவர் கணக்குக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிற வரை ஓய்வுபற்றி நினைத்தே பார்க்க மாட்டார் - அது ஒரு பார்ப்பனக் குணம்!இன்னொரு கூத்து! உலக இளைஞர் கிரிக்கெட் (ஜூனி யர்) போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டது.

அணியின் தலைவர் உன் முகுத், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவர் முதலா மாண்டு தேர்வு எழுதாமலேயே இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட் டுள்ளார். இது சட்டப்படி சரியானதுதானா?
இந்த வாய்ப்பு கிரிக்கெட்டுக்காரர்களைத் தவிர வேறு விளையாட்டுக்காரர்களுக்குக் கிட்டுமா?2-9-2012

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க.

பாரதீய ஜனதா கட்சி என்ற ஒன்றை அனுமதிப் பதே கூட கூடாத ஒன்றுதான். இக்கட்சியும் சரி, இதன் தாய் வீடான சங்பரிவார்க் குப்பைகளும் சரி மூடநம்பிக்கைகளை அடை காத்துக் குஞ்சு பொரிக்கும் வேலையில் தான் ஈடுபட்டுக் கொண் டுள்ளன.

விஞ்ஞான மனப்பான் மையை மக்கள் மத்தியில் தூண்ட வேண்டும் இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என் கிறது இந்திய அரச மைப்புச் சாசனம் 51A(h).

இந்தச் சாசனத்திற்கு உண்மையாக இருப்ப தாகத் தான் பா,ஜ.க. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சத்தியம் செய்து பதவியை ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் நடத்தை யில்? 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் எனும் எங் கள் கடவுள் அணில் களையும், குரங்குகளை யும் கொண்டு கடலில் பாலம் கட்டினான் என்று அரட்டை அடிக்கிறார் கள்.

இதன் மூலம் மக்கள் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரத் திட் டத்தை முடக்கிவிட்டனர். ஒன்றில் மக்கள் உறுதி யாக இருக்க வேண்டும். பா.ஜ.க. என்ற கட்சி நாட்டு மக்களின் வளர்ச் சிக்கு விரோதமான ஒன்று என்பதில் திட காத்திரமான தெளி வுடன் இருக்க வேண் டும்.

இன்னொரு சேதியு முண்டு. ராஜஸ்தான் மாநிலம் முன்பு பா.ஜ.க. வசம் இருந்தது வசுந்தரா எனும் ராஜ குலத்துப் பெண்மணி முதல் அமைச்சராக இருந்தார்.

இப்பொழுதோ அம் மாநிலம் காங்கிரஸ் வசம், முதல் அமைச்சர் அசோக் கெலாட்.

சென்றாண்டு கடும் கோடை அம்மாநிலத்தை வறுத்து எடுத்தது; மழை இல்லை. முதல் அமைச்சர் கெலாட் அமெரிக்கப் பயணமான மறுநாள் அம்மாநிலத்தில் மழை வெளுத்துக் கட்டியது.

ஆகா, அருமையான சந்தர்ப்பம்! காங்கிரஸ் காரரான கெலாட் இருந்தால் மழை பொழி யாது; வெளிநாடு சென்று விட்டதால் மழை கொட் டுகிறது என்று பிரச்சாரம் செய்தனர். பதாகைகளை அமைத்தனர்.

இந்தஆண்டு கெலாட் உள்ளூரில் இருக்கும்போதே மழை பெய்து விட்டதால் பா.ஜ.க.வினரின் முகம் சுருங்கி விட்டதாம் - இதையும் அவாளின் தினமலர்தான் வெளி யிடுகிறது. மழை பொழி வதற்கும் ஒருவர் ஊரில் இல்லாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? மழை பெய்வது எதனால் என் பதை எல்.கே.ஜி. மாண வர்களிடம் தெரிந்து கொள்ளட்டும் பா.ஜ.க.

- மயிலாடன் 2-9-2012

தமிழ் ஓவியா said...

இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டது சென்னை உயர்நீதிமன்றத்தில்தான்! உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் பெருமிதம்சென்னை, செப். 2- இடஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியல மைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரக்கூடிய வகையிலான வழக்கு கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடத்த ப்பட்டுள்ளன என உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் பெரு மிதத்துடன் தெரிவித் துள்ளார். கடந்த 1975ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் பதிவு செய்து உயர் நீதி மன்ற, உச்சநீதிமன்றங் களின் நீதிபதிகளாகவும், மூத்த வழக்கறிஞர்களாக வும் உள்ளவர்களின் அமைப்பான செலக்ட் 75 சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150ஆவது விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்று (1.9.2012) நடந்தது.

இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், இப்ராஹிம் கலிபுல்லா, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.முருகேசன், நீதிபதிகள் ஜோதிமணி, சித்ரா வெங்கட்ராம், நாகமுத்து, மூத்த வழக் கறிஞர்கள் கே.பராசரன், கே.கே.வேணுகோபால், நாகேஷ்வரராவ் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி சதாசிவம் பேசியதாவது:

சென்னை உயர் நீதி மன்றம் இந்திய நீதி மன்றங்களில் மிகவும் சிறப்பான அந்தஸ்தை பெற்றுள்ளது. லண்டன் நீதிமன்றங்களுக்கு அடுத்தபடியாக உலகி லேயே மிகவும் அதிக கட்டிடங்களை கொண்ட நீதிமன்றமாக சென்னை உயர்நீதி மன்றம் திகழ்கிறது.

உயர் நீதிமன்ற வளா கத்திலேயே மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள ஒரே உயர் நீதிமன்றம் இதுதான். இந்திய அள வில் அதிக எண்ணிக்கை யிலான வழக்கு களை விசாரித்து தீர்ப்பளித்து நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ள நீதிமன்ற மும், சென்னை உயர் நீதிமன்றம்தான். மாலை நேர நீதிமன்றங்களை தமிழ்நாட்டில் ஏற் படுத்தி அதன்மூலம் ஆயிரக்கணக்கான வழக் குகள் தீர்க்கப்பட்டுள் ளன.

2005இல் சமரச தீர்வு மையம் நாட்டி லேயே முதன்முதலில் சென்னை உயர் நீதி மன்றத்தில்தான் உரு வாக்கப்பட்டது. இங் குள்ள சம ரச தீர்வா ளர்கள் மற்ற மாநிலங் களில் உள்ள சமரச மய்யங்களுக்கு சென்று வழக்குகளை தீர்ப்பது குறித்து பயிற்சி அளித் துள்ளனர்.

முக்கிய தீர்ப்பு

இந்திய அரசியல மைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரக்கூடிய வகையிலான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளன. சென்னை துரைராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்ததுண்டு. சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் தொடரப்பட்ட மேல் முறையீடு தள்ளு படி செய்யப்பட்டது. அதன் பிறகே அரசியல மைப்பில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.

50ரூ இடஒதுக்கீடு

இதேபோல் சென்னை உயர் நீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படை யில்தான் கல்வி நிறுவ னங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக் கீடு முறை 50 சதவீத மாக்கப்பட்டது. இந்திய அரசியமைப்பு சட்டத் தில் 76ஆவது பிரிவில் திருத்தம் செய்ய இந்த தீர்ப்பே காரணமாக அமைந்தது.

குழந்தை தொழிலாளர்கள் சட்டம்

குவாரிகள் உரிமம் தொடர்பான விதிமுறை யில் உரிமத்தின் காலம் 10 ஆண்டுகள் என்று வரையறுத்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்தான். குழந்தை தொழிலாளர் மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வருவதற்கான உத்தரவை யும் சென்னை உயர் நீதிமன்றம்தான் பிறப் பித்தது.

நாட்டு மக்களுக்கு அரசுகளின் செயல்பாடு கள் குறித்து தகவல் தெரிவிப்பதற்காகத்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. அரசு பணி கள் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்ற நோக்கமே இதற்குக் காரணம். இந்த சட் டத்தின்கீழ் தகவல் பெற்று தொடரப்பட்ட வழக்கின் அடிப்படை யில் அசாம் மாநிலத்தில் ஏழை மக்களுக்குப் பொது வினியோக திட்டத்தின்கீழ் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை தவ றாகப் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்ததையும் மறந்துவிடக்கூடாது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதே நேரத்தில் சைபர் குற்றங் களும் அதிகரித்து விட் டன. உலகின் பயங்கரவாத அமைப்புகள் இன்டர் நெட் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைத் தான் முக்கிய ஆயுதங் களாக பயன்படுத்தி வரு கின்றனர். எனவே, இது போன்ற குற்றங்களை தடுத்து தனிமனித உரி மையையும் தேசிய பாதுகாப்பையும் பலப் படுத்த நீதித்துறை முன் வர வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் இந்த பணிகளை செய்யும் என்று நம்புகிறேன். இவ் வாறு உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் பேசினார்.2-9-2012

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு 31, 2012 தமிழர் தலைவரின் பீரங்கி முழக்கம்

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்

டெசோ அமைப்பின் சார்பில் 12.8.2012 அன்று ஓட்டல் அக்கார்டில் நடைபெற்ற ஆய்வரங்கத்திலும் சரி, மாலை சென்னை இராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டிலும் சரி ஆற்றப்பட்ட உரைகள் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் நுணுக்கமானவை, ஆழமானவை, தொலை நோக்கு, உடனடி நோக்கு இவைகளை உள்ளடக்கமாகக் கொண்டவை.

தமிழ்நாட்டு அளவில் நமது இயக் கங்கள் செயல்பட்டு வரும் தன்மை, இயக்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட கருத் துகள், தீர்ப்புகள் இந்திய எல்லைகளையும் தாண்டி உலகச் சிந்தனையாளர்களையும் ஆய்வாளர்களையும் ஈர்த்துத்தான் உள்ளன என்பது மன நிறைவைத் தரக் கூடியதாகும் என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் டெசோ மாநாடு - ஒரு கண்ணோட்டம் என்று 13.8.2012இல் ஓர் உரைச் சித்திரம் தீட்டியிருந்தார். அதிலே பாவாக, நூலாக ஊடுருவியிருந்த கலை ஞர் வேண்டுகோள் நம் போன்றவர் களுக்குப் பளிச்சிடாமல் இல்லை.

பத்து நாட்கள் தமிழகத்தின் எல்லா இடங்களிலும், பட்டி தொட்டிகள், பட்டினக் கரைகள் என்று எல்லா இடங்களிலும் நம்முடைய டெசோ அமைப்பிலே இருக் கின்ற தோழர்கள், செயலாளர்கள் சொற்பொழிவாளர்கள் இவர்கள் ஊருக்கு ஊர் சென்று ஆங்காங்கு நடைபெறுகின்ற பொதுக் கூட்டங்களில் ஈழத் தமிழர்களின் அவலங்களை - அவர்களுக்கு நாம் தர வேண்டிய பாதுகாப்பு நாம் நீட்ட வேண்டிய உதவிக் கரம் இவைகளைப் பற்றியெல்லாம் பேசி, தமிழ் மக்களுடைய பேராதரவை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்கிறேன் இத்தோடு நிறுத்தியிருந்தால் நம் தமிழர் தலைவரின் 23.8.2012 இந்த அறிவிப்பிற்கு வேலை இருந்திருக்காது.

மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்டு 31ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

அய்ந்து முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 31ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெசோ மாநாட்டிலே பேசிய தலைவர் கள் எல்லாம் இந்தியாவை வலியுறுத்த வேண்டும், வற்புறுத்த வேண்டும் என்று இங்கே பேசிய தலைவர்கள் எல்லாம் பேசினார்கள் இது தலைவர் கலைஞர் சுட்டிக் காட்டியது.

இந்தப் பேச்சிலே இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் முதன்மைக் கருத்து.

தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளலாம். தமிழர் இன உணர்வைப் புரிந்து கொள்ளாமல் செயல் படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிற உண்மை உணர்வுடைய தலைவர் ஒருவர் உள்ளார் என்றால் அவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்தான்.

நமக்கு விரோதமாக இருப்பது தமிழ் இனப்பகைவன் இராஜபக்சே என்பதைப் போலத் தமிழர் நலனில் சிறிதும் அக்கறை காட்டாது இருப்பது இந்திய அரசுதான்! ஆம்! வலியுறுத்திச் சொல்கிறோம். வருத் தத்துடன் சொல்கிறோம், வேதனையுடன் சொல்கிறோம் இந்திய அரசுதான்.

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தமிழர் பிரச்சினை மட்டு மல்ல, எந்தத் தமிழர் பிரச்சினையிலும் ஏக இந்தியா எனும் கண்ணோட்டப் போலி முகமூடியைப் போட்டுக் கொண்டு தமிழர் களுக்கு விரோதமாக இருப்பது இந்திய அரசுதான் என்பதை வோட்டுச் சீட்டுகளின் பின்நிற்கும் எந்தக் கட்சியிலும் சொல்லாது, மனிதநேய இயக்கம், மக்கள் நல இயக்கம் திராவிடர் கழகம்தான் எடுத்துச் சொல்ல முடியும் என்று துணி வோடு முடிவெடுத்து அறிவித்து விட்டார் நம் தலைவர். உடல் நலம் பெற்றுத் திரும்பி இருக்கும் தமிழர் தலைவர் ஓய்ந்து ஓய்வெடுப்பார், உறக்கம் கொள்வார் என்று எதிர்பார்த்த நம் இன எதிரிகளுக்கு மட்டுமல்லாது இந்திய அரசுக்கும் விடுக்கும் எச்சரிக்கைப் போராட்ட முழக்கம் இது.

போராட்டம் அறிவித்துப் பதுங்கி விடும் தலைவரல்லவே, அறிவிப்பில், அறிக்கை யில் 31.8.2012 வெள்ளியன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் திருச்சியில் நான் பங்கு கொள்வேன். கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்த ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் நமது பணி வெற்றியின் இலக்கை எட்டும் வரை தொடரும்! தொடரும் என்றார்.

நமக்கு ஏன் தயக்கம்?

இலங்கை அரசு ஈழத் தமிழர்களை மட்டும் தான் வேட்டையாடுகிறது - படுகொலை செய்கிறது என்று சொல்ல முடியாது. இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும் படுகொலை செய்து கொடுந் தாக்குதலை அன்றாடம் தொடுத்து வருகிறது

ஆக, ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழகத் தலைவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் படுகொலை செய்யப்பட்டால் இந்திய அரசு கண்டு கொள்ளாது என்ற எண்ணம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மத்தியில் எழுந்து நிற்கிறது. இது அலட்சியப்படுத்தப்படக் கூடியதும் அல்ல. கவலைப்பட்டால் போதாது; காரிய மாற்ற வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறார் தமிழர்தலைவர்.

தமிழக மீனவர்கள் பால் மனித நேயத்துடன் அக்கறை காட்டும் தலைவர் 1980 முதல் 2012 முடியக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 572, காயம்பட்டவர்கள் 1200, அழிக்கப்பட்ட படகுகள் 300, சேதப்பட்ட படகுகள் 600. இழப்பினைப் பொருளாதாரக் கணக்கில் சொல்ல வேண்டும் என்றால் 25,522 கோடியென்று எடுத்துக் கூறுவதைக் கவலையோடு பார்க்க வேண்டாமா? கரிசனத்தோடு கவனித்து இருக்க வேண்டாமா இந்திய அரசு?

தலைவரின் சலிப்பின் உச்சம் இது. அவ்வப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பொழுதெல்லாம், தமிழ்நாடு அரசு, இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழு தும், இந்தியாவின் பிரதமரோ இலங்கை அரசுக்கு தன் கவலையை (ஊடிஉநச) தெரி வித்துக் கொள்வார். இவை யெல்லாம் சம்பிரதாயங்களாகி விட்டன; கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டன.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசின் கண் மூடித்தாக்குதல் கள் விஷயத்தில் மட்டுமல்ல இந்திய அரசின் கண் மூடிய மவுனத்தையும் அனுமதிக்கக் கூடாது. எனவே ஒட்டு மொத்த தமிழினம் கிளர்ந்து எழுந்தே தீர வேண்டும் ஆகஸ்டு 31ல் எனவே தலைவரின் பீரங்கி போர் முழக்கம் செய்து விட்டது. இந்த முழக்கம் ஓயப் போவதில்லை. இலங்கைப் பிரச்சினையில் மட்டுமல்ல, காவிரி நீர்ப் பிரச்சினையா? முல்லைப் பெரியாறு பிரச்சினையா? சேது சமுத்திரம் திட்டமா?

பதவி உயர்வில் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடா எல்லாவற்றிலும் இங்கே ஓர் இந்திய அரசு என்பது இருக்கிறதா? கர்நாடகா சண்டித்தனம், கேரள வம்பு எல்லாவற்றையும் இந்திய அரசு இனி மேலும் அனுமதித்தால் - இந்திய ஒற்றுமை இவ்வளவுதானா? எனும் கேள்வியோடு சிக்கல் நின்று விடாது.

தமிழர் தலைவரின் இந்தக் குரலை இந்திய அரசியல் கட்சித் தலைவர்களே செவிசாயுங்கள்.

நம்முடைய நாட்டில் எங்கும் அரசியல், எதிலும் அரசியல், எந்த நிலையிலும் அரசியல் என்ற போக்கை மாற்றிக் கொண்டு பொதுப் பிரச்சினைகளில் நாம் எவ்வளவு மற்ற செயல்களில் ஒருவருக் கொருவர் மாறுபட்டு இருந்தாலும் இந்தப் பொதுப் பிரச்சினைகளில் ஒன்று பட வேண்டும். ஒரு வீட்டில் தீப்பிடித்துக் கொண்டால், அந்தத் தீயை அணைப் பதிலே வேறுபாடு பார்க்க முடியாதோ அதுபோல தமிழர் தலைவர் போராட் டத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய் யுங்கள்.

இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு எங்கோ மறைந்தார் நம் பகைவர் என்பது நினைவுக்குரியது. உறக்கத்தில் இருக்கும் இந்திய அரசு! அல்லது உறங்குவது போல் பாவனை காட்டும் இந்திய அரசு இனியும் தமிழகத்தைப் புறக்கணிக்குமானால் - தமிழ் மண்ணில் இந்தியத் தலைமை அமைச்சர் மட்டுமல்ல, இந்தியத் தேசிய கொடி போட்ட காரில் பயணிக்கும் எந்த அமைச்சரும் தலை தாழ்த்திட வேண்டிய நிலையே ஏற்படும் என்பதன் எச்சரிக்கை மணிதான் 31 ஆகஸ்டில் எழுப்பப்படும் மணியோசை - ஆசிரியரின் வீரமணி யோசை. 2-9-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

தொடரட்டும்!

செய்தி: நாடாளுமன்றத்தை முடக்குவது தொடரும்.

- வெங்கைய நாயுடு (பிஜேபி)

சிந்தனை: அப்படி என்றால் பி.ஜே.பி.யின் தோல்விப் பயணமும் தொடரும்.

இந்தியாவில் ஆண்டு தோறும் பிறக்கும் குழந் தைகளில் சுமார் 2 விழுக் காடு பிறவியிலேயே இதய நோய்களுடன் பிறக்கின்றன.
இந்தியத் துணைக் கண்டத்து மக்களின் உடல் நலன் காப்புக்காக செலவிடப்படும் தொகையில் 78 சதவிகிதம் பொது மக்களின் சொந்தப் பணம் ஆகும்.
விசா காலம் முடிந்த 700 இந்தியர்கள் இங்கிலாந் திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் என்றால் உலகிலேயே வீரமணிதான் அவர் பெரியார் கண்டெடுத்த மாமணி! உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் புகழாரம்!


சென்னை, ஆக.2- உலகில் எங்கு சென்றாலும் ஆசிரியர் என்றால் வீரமணி அவர்களைத்தான் குறிக்கும் என்றார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அரை நூற்றாண்டு (50 ஆண்டுகள்) பெருவிழா சென்னை - பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்தில் 25.8.2012 அன்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு தலைமையேற்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் அவர்கள் உரை யாற்றினார்.

உரை வருமாறு: பொன்விழா காணும் ஆசிரியர், என்னுடைய சிறந்த மாணவர்களிலே ஒருவரான மணியான வீரமணி அவர்களே, தோழமை நீதிபதி என்னுடைய முன்னாள் மாணவராகிய இலட்சுமணன் அவர்களே, என்னுடைய அருமை நண்பர் பெரியார் பேருரையாளர் நன்னன் அவர்களே, இங்கே வரவேற்புரை வழங்கிய சாமிதுரை அவர்களே, வீரசேகரன் அவர்களே, பரஞ்ஜோதி அவர்களே, குமரேசன் அவர்களே மற்றும் இங்கே வந்திருக்கின்ற பேரன்புமிக்க பெரியோர்களே, தாய்மார்களே, இளைஞர்களே, பத்திரிகை நண்பர்களே, என்னை தலைமையேற்குமாறு பணித்த என்னுடைய உயிரினும் மேலான ஆசிரியர் வீரமணி அவர் களுக்கு முதலில் என் நன்றி கலந்த வணக்கங்களைக் கூறிக்கொள்கிறேன்.

மறக்க முடியாத பசுமையான நினைவாக

என்ன காரணம் என்றால், எனக்கே சிறிது வியப்பு, வந்து கேட்டார் பரஞ்ஜோதி, அவர் கேட்டவுடன் நான் வருகிறேன் என்று சொன்னேன். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், இங்கு வந்தவுடன், இந்த இடத்திற்கு நான் வந்தவுடன் பெரிய புத்துணர்ச்சியைப் பெறுகிறேன் என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்கிறேன். இதே நாளில் 25.8.1974 ஆம் ஆண்டு முதன்முதலில் நான் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றபோது பெரியார் திடலில் வந்து, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் சென்றேன். அன்று ஆசிரியர் அவர்கள் என்னை வரவேற்றார் என்பது மறக்க முடியாத பசுமையான நினைவாக என் மனதில் இருக்கிறது.

பகுத்தறிவுப் பயிர் நன்றாக வளர்கின்றது

வீரபூமி என்று சொல்கிறார்கள் திரைப்படத்தில், அதேபோல, வீரத்தின் விளைநிலம் இருக்குமே யானால், அது பெரியார் திடல்தான், என்பதிலே எந்தவித அய்யப்பாடும் இல்லை. பகுத்தறிவுப் பயிர் நன்றாக வளர்கின்றது, வளர்ந்துகொண்டிருக்கிறது என்றால், அது பெரியார் திடல்தான் என்பதிலே சந்தேகமேயில்லை. அப்படிப்பட்ட ஒரு அரு மையான பூமிக்கு நான் மீண்டும் வருகிறேன் என்றால், உண்மையிலே எனக்குப் புத்துணர்ச்சியாக இருக்கிறது.


தமிழ் ஓவியா said...

இங்கே வந்தவுடன் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, நீதி கெட்டது யாரால் என்று எங்களிடத்தில் கேட்டார்கள்; நானோ, லட்சுமணனோ நீதியை கெடுக்கவே இல்லை; கெடுக்கவும் மாட்டோம். ஏனென்றால், நாங்கள் எல்லாம் பெரியார் வழியில் வந்தவர்கள். பெரியார் சமூகநீதிக்காகப் பாடுபட்டார். நாங்கள் வழக்கறி ஞர்களாக வந்த நேரத்தில், எங்கே நீதி தவறிவிடுமோ என்று நாங்கள் அச்சப்பட்டோமே தவிர, நீதிக்காக நாங்கள் போராடியதில் தவறியதே இல்லை. அதைத்தான் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். கறுப்புச் சட்டை போடாதவர்கள் மாநாட்டுக்கு வரக்கூடாது

1948 மே மாதம் 2 ஆம் தேதி தூத்துக்குடியில் மாநாடு நடைபெற்றது. 2 லட்சம் பேர் பங்கேற்ற பெரிய மாநாடு அது. அய்யா அவர்கள் பத்திரி கையில் எழுதினார், கறுப்புச் சட்டை போடா தவர்கள் மாநாட்டுக்கு வரக்கூடாது என்று. எனக்கும், எங்கண்ணனுக்கும் பயம்; அவசர அவசரமாகச் சென்று ஒரு வெள்ளைச் சட்டையை கறுப்புச் சட்டையாக்கி போட்டுக்கொண்டு வந்தோம். திராவிடக் கலாச்சாரம் போன்று உலகத்தில் எந்தக் கலாச்சாரமும் கிடையாது

பணிவோடு நான் ஒன்றை சொல்ல விரும்பு கிறேன். 1964 ஆம் ஆண்டு மொராக்கோ நாட்டில் உலகக் கவிஞர் பேரவை நடைபெற்றுக் கொண் டிருந்தது. என்னுடைய வாழ்க்கைத் துணைவியார் ஒரு கவிதை பாடினார்கள் தமிழிலே! அந்த மாநாட்டிற்குத் தலைவர் அந்த நாட்டின் அதிபர். அவர் என்னுடைய மனைவியின் கவிதையை கேட்டுவிட்டு, நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று சொன்னார். This is a Dravidian Song, how do get it.

நான் உடனே அவருக்குப் பணிவன்புடன் கூறினேன், We also come to the Dravidian State உடனே அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவரும், மொராக்கோ நாட்டு அதிபருமான அவர் சொன்னார், திராவிடக் கலாச்சாரம் போன்று உலகத்தில் எந்தக் கலாச்சாரமும் கிடையாது என்று. இதை நான் சொல்லவில்லை, மொராக்கோ நாட்டு அதிபர் சொன்னார்.

நம் இயக்கம் என்றைக்குமே அழியாது

மேலும் அவர் கூறுகையில், திராவிடர்கள் உலகத்தை ஆள்வார்கள் என்று சொன்னார். திராவிடர்கள் உலகத்தை ஆள் வார்கள் என்று நான் சொல்லவில்லை, மொராக்கோ நாட்டு அதிபர் அன்று சொன்னார்.

இப்படி இருக்கையில், நம் இயக்கம் அழியப் போகிறது அது, இதுவென்று புரளியைக் கிளப்பவேண்டாம்.

நம்ம இயக்கம் என்றைக்குமே அழியாது. அதற்காகத்தான் பெரியார் அவர்கள் பிறந் தார்கள், வாழ்ந்தார்கள், இந்த மண்ணிலே உலவினார்கள், உறங்கினார்கள்.

The Socraties of South Asia

உலகத்திலே ஒரு பெரிய தலைவர் இருந்தார் என்றால், அது பெரியார், பெரியார் பெரியார்தான்.

எதற்காக நான் சொல்கிறேன் என்றால், The Socraties of South Asia என்று பெரியாருக்குப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரிப் பட்டத்தை யாருக்காவது கொடுத்திருக்கிறார்களா?

இந்தப் பட்டத்தை யார் கொடுத்தது? யுனஸ்கோ - அய்க்கிய நாடுகளின் சபை.

அதுபோன்ற தலைவர்கள் இனி பிறக்கவே முடியாது. மரக்கட்டைகளாக இருந்த நம்மை, மண்ணாக இருந்த நம்மை மனிதர்களாக ஆக்கியவர் பெரியார்!

ஒரு வழக்கறிஞர் என்னிடம் வந்து, அய்யா காலையில் நடைபெறவுள்ள இந்த வழக்கின் விசாரணையை மதியத்திற்கு மாற்ற முடியுமா? என்றார். எதற்காக என்று நான் கேட்டேன். இப்போது ராகுகாலம் என்று சொன்னார்.

தமிழ் ஓவியா said...

எனக்குப் படுகோபம் வந்துவிட்டது. ராகு காலத்தில் குழந்தை பிறந்தால், கழுத்தை நெரித்து விடுவாயா என்றேன்?

இராகுகாலம், எமகண்டம் போன்ற மூட நம்பிக்கையால் கெட்டுக் குட்டிச்சுவராகிப் போன நாட்டில், இவையெல்லாம் கூடாது என்று பகுத்தறிவை வளர்த்தவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்தான். பெரியாரைப்பற்றி, மொராக்கோ நாட்டில் சொல்கிறான், யுனெஸ் கோவில் சொல்கிறான். பகுத்தறிவுப் பகலவனுக்கு அருமையான பகலவனாக இங்கே வந்திருக் கிறார்கள் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல...

லட்சுமணன்மீது எனக்குக் கோபம், ஆசிரியர் அவர்களை எங்கள் வீட்டு மாப்பிள்ளை, எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்று சொன்னார்.

அவர் தமிழ்நாட்டுப் பிள்ளை, இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாட்டுக்குக்கூட செல்லட்டும், ஆசிரியர், ஆசிரியர் என்று எவ்வளவு பேர் வரவேற்பு கொடுப் பார்கள் தெரியுமா?

எங்க வீட்டு மாப்பிள்ளை என்று சொல் கிறீர்கள், என்ன மாப்பிள்ளை, அவர் எங்க வீட்டுப் பிள்ளை, பகுத்தறிவு உலகமே அவரை தத்தெடுத்து இருக்கிறது என்றால், அது மிகையாகாது.

தமிழ்நாட்டின் சிறந்த

முதல் பேராசிரியர் பெரியார்

17.12.1967 அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்கிறார்:

The first Professor born in Tamilnadu this Periyar.

தமிழ்நாட்டில் முதன்முதலில் பிறந்த சிறந்த பேராசிரியர் பெரியார் அவர்கள். அந்தப் பேராசிரியர்தான் இந்த ஆசிரியரை நமக்கெல்லாம் கொடுத்திருக்கின்றார்.

பெரியார் கண்டெடுத்த மாமணிதான் நம்முடைய ஆசிரியர் வீரமணி

அண்ணா அவர்கள் மேலும் கூறுகையில்,

பல நூற்றாண்டுகளை ஒரு குப்பியில் அடைத்தவர் பெரியார். வால்டர், ரூசோ போன்ற அறிஞர்கள் எல்லாம் எப்படி பகுத்தறிவு கருத்து களைப் புகுத்துவதற்கு பல ஆண்டுகளாக இன்னல் பட்டார்களோ, அதை இருபதே ஆண்டுகளில் சாதித்தவர் என்ற பெருமை ஒரே ஒருவருக்கே உண்டு என்றால், அது பெரியாருக்குத்தான். அந்தப் பெரியார் கண்டெடுத்த மாமணிதான் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள்.

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், வீரமணியை எப்பொழுதுமே கூர்ந்து கவனிப்பவன் நான். வீரமணி அவர்கள் எழுதிக் கொண்டி ருப்பவர், படித்துக் கொண்டிருப்பவர், கேட்டுக் கொண்டிருப்பவர், இவையெல்லாவற்றையும்விட வீரமணி அவர்கள் ஒரு சிறந்த நிருவாகி என்பதில் எந்தவிதமான அய்யமுமில்லை.

வழக்கறிஞர் தொழிலில் சிறப்பாக இருந்தவர், அந்தச் சிறப்பை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இந்த விடுதலை ஏட்டுக்கு வந்தார் என்றால், அது சாதாரணமானதல்ல.

பொன்னுக்காக வந்தாரா? பொருளுக்காக வந்தாரா? மாலைக்காக வந்தாரா? என்றால், அதுதான் இல்லை. தமிழ்நாட்டில் நம்முடைய மக்களுக்கு சமநீதி வழங்குவதுதான் என்னுடைய வாழ்க்கையின் ஒரே லட்சியம் என்ற பெரியாரின் குறிக்கோளை நிறைவேற்றவே வீரமணி அவர்கள் அப்பணியை மேற்கொண்டார்.

ஆகவேதான், நான் அவரை உளமாரப் பாராட்டுகிறேன். எப்படி ஒரு தாய், தன் மகனை சான்றோன் எனக் கேட்டால், பெருமை அடைவாரோ அதுபோல், என்னுடைய மாணவன், அவருக்கே நான் பாராட்டு வழங்குகிறேன் என்றால், என்னையே நானே பாராட்டுவதாக நினைத்துக் கொள்கிறேன்.

தவறான வழியிலே செல்லாதவர் நமது ஆசிரியர்

எந்தக் காரணத்தைக் கொண்டும் பெரியார் அவர்கள் பொதுப் பணத்தினை தவறான வழியில் செலவழிக்கமாட்டார். அதேபோல், எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறான வழியிலே செல்லாதவர் நமது ஆசிரியர் அவர்கள் என்பதை நான் அறுதியிட்டுக் கூறுவேன்.

தமிழ் ஓவியா said...

வீரமணி அவர்கள் வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்திருந்தால், உயர்நீதிமன்ற நீதிபதியாக, உச்சநீதிமன்ற நீதிபதியாக, இன்னும் சொல்லப் போனால், உச்சநீதிமன்றத்திற்கே தலைமை நீதிபதியாக ஆகியிருக்கலாம். நான் சட்டக் கல் லூரியில் சட்டம்தான் சொல்லிக் கொடுத்தேன்; அவர் சமுதாயம்தான் என்னுடைய உலகம் என்று சமுதாயத்திற்கே நீதி வழங்குகின்றார் என்றால், அவர்தான் வீரமணி.

பெரியார் அவர்கள், வீரமணி அவர்களை விடுதலை நாளேட்டின் பொறுப்பை ஏற்கச் சொன்ன நிகழ்வை வீரமணி அவர்கள் சொல்லும்பொழுது,

யாருக்கும் கிடைக்காத ஓர் அரிய வாய்ப்பு

இது ஒரு அரிய வாய்ப்பு; என்னைப் பெரியார் அவர்களே அழைத்துச் சென்று விடுதலைப் பணிமனையில் இருந்த ஆசிரியர் நாற்காலியில் அமர்த்தினார். இதற்குமுன் இருந்த சிறந்த அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களாக இருந்தாலும்கூட கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பாகும். இன்றும் அதை நினைத்து நினைத்துப் பூரிக்கின்றேன் என்கிறார்.

அந்தப் பூரிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும்தான். ஏனென்றால், இப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கவே கிடைக்க மாட்டார். தமிழ் நாட்டின் சிறந்த பொக்கிஷம் வீரமணி அவர்கள்.

1962 ஆம் ஆண்டிலே இந்தப் பொறுப்பை ஏற்று, அய்ம்பதாண்டுகள் செவ்வனே தனது பணியை செய்து வருகிறார்.

தமிழ்நாட்டிற்கும், சமூகநீதிக்கும் நான் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்று இந்த வயதிலேயும் சொல்கிறாரே, அதற்காக நான் ஆசிரியர் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவரைப் போன்று எந்த மனிதரும் அய்ம்ப தாண்டுகள் ஆசிரியராக இருந்ததில்லை என்பதை தெளிவாக அனைவருக்கும் கூறுகின்றேன்.

விடுதலை என்றால்... வீரமணி என்றால்...

இறுதியாக நான் ஒன்றை கூற விரும்புகிறேன், வீரமணியைப்பற்றி பலர் சொல்லியிருக் கின்றார்கள். என்ன சொல்லியிருக்கின்றார்கள் தெரியுமா?

விடுதலை என்றால், சோர்வு அறியாத வீரர் வீரமணி, வீரமணி என்றால், நடை தளராத விடுதலை என்கிறார்கள்.

அருமையான எழுத்தாளர், சீரிய சிந்தனையாளர், மேடைப் பேச்சாளர், சிறந்த பகுத்தறிவாளர், ஒரே தலைப்பில் 115 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளவர்.

அவர் தலைசிறந்த நிருவாகி என்பதற்கு, கல்வி நிறுவனங்களின் நிருவாகம், அறக்கட்டளை நிருவாகம், இயக்க அமைப்பு நிருவாகம், நாளிதழ் நிருவாகம், இயக்கக் கொள்கையைப் பரப்பும் பணி, பெரியார் கொள்கைகளை உலகெங்கும் பரப்பும் பணி, சமூகநீதிக்கு ஓயாது பாடுபடும் ஒப்புயர்வற்றவர் ஆசிரியர் என்பதிலே நான் பெருமையடைகின்றேன், பாராட்டுகின்றேன். பவள விழாவிற்கும் நான் வருவேன்
அவர் உடல்நலத்தை அதிகமாகக் கவனிக்க வேண்டும். நான் முன்பே சொன்னதுபோல், நீங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளை. எங்கள் வீட்டுப் பிள்ளை நன்றாக இருந்தால்தான், பெற்றோர்களுக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சி. அதே மகிழ்ச்சியுடன் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன், ஆசிரியர் அவர்களின் விடுதலைப் பணி பவள விழாவான 75 ஆம் ஆண்டு விழாவிற்கும் கண்டிப்பாக நான் வருவேன் என்பதை சொல்லிக் கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றி!
வணக்கம்.

- இவ்வாறு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

நூல் வெளியீடு

முன்னதாக மு.வி.சோமசுந்தரம் எழுதிய எண்பதில் அன்பிணைப்பு நூலை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். எண்பதில் அன்பிணைப்பு என்ற நூலை வெளி யிட்டு தமிழர் தலைவர் உரையாற்றும் போது; நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதை போல இந்த வாழ்விணையர்கள் அன்பிணைப்போடு எண்பதைக் கொண்டாடி வருகிறார்கள்.

இல்லறத்தை நல்லறமாக நடத்தி வரும் இவர்கள் அவர்களின் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப நாகம்மையார் இல்லக் குழந்தைகளோடு இவ்விழாவை கொண்டாடி மகிழ வேண்டும் என்ற விருப்பத்திற்கு இணங்க இந்நிகழ்ச்சி இங்கு சிறப்பாக எழுச்சியோடு நடை பெறுகிறது. சோமசுந்தரம் அவர்கள் பகுத்தறிவு கொள்கையை பின்பற்றியதாலும், தந்தை பெரியார் கருத்துகளை ஏற்றுக் கொண்டதாலும் இக்குடும் பத்தை நல்ல முறையில் உருவாக்கி சிறப்போடு நடத்தி வருகிறார். அதே போல குடும்பத்தில் உள்ள அனைவரும் பகுத்தறிவு சிந்தனையாளர்களாக உருவாகியிருக்கிறார் கள்.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் எவரும் தோற்றதில்லை. இந்த வாழ் விணையராக இருக்கக் கூடிய வச்சலா அவர்களுக்கு தான் இந்நிகழ்ச்சியின் மூலம் நன்றி சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியை திருச்சியில் நடந்த வேண்டும். நாகம்மையார் பிள்ளைகளோடு தங்களது மகிழ்ச் சியை பகிர்ந்து கொள்ள வேண்டுமென வருகை தந்ததற்கு நன்றி சொல்கிறோம்.

சிறந்த மனிதநேய பற்றாளராக இந்த வாழ் விணையர்கள் திகழ்கிறார்கள். அவரது பிள்ளைகள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள் என இந்த குடும்பமே சிறப்பாக பெரியார் கொள்கையில் பின்பற்றி வருகிறார்கள். எண்பதாவது அகவை சிறப் பாக கொண்டாடுவது போல 100 ஆவது அகவையும் இந்த அன்பிணைப்போடு இதே வளாகத்தில் கொண் டாட வேண்டும் என தமிழர் தலைவர் கூறினார். நிறைவாக மு.வி. சோமசுந்தரம் அவர்கள் ஏற்புரையாற்றுகையில்:-

நான் இந்த வளாகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கோவில், குளம் என செல்கிறார்கள். அங்கெல்லாம் போகத் தேவையில்லை.

பெரியார் வளாகத்திற்கு வந்து இந்த பிள்ளைகளோடு மகிழ்வை பகிர்ந்து கொண்டா டியதே போதும். பலரும் இங்கு வரவேண்டும் என்பதே என் ஆசை என தனது ஏற்புரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமுதா அறவாழி வரவேற் புரையாற்றினார். நிறைவாக யாழினி அழகுவேல் நன்றி கூறினார். முன்னதாக நாகம்மை குழந்தைகள் இல்ல பிள்ளைகளுடன் உணவு விருந்து நடைபெற்றது.2-9-2012