Search This Blog

13.9.12

அழுக்குருண்டை பிள்ளை-யார்? விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே!

அழுக்குருண்டை பிள்ளை-யார்? அறிஞர்கள் கருத்து!

விநாயகர் வரலாறு அசிங்கமும், ஆபாசமும் நிறைந்தது என்பதையும், தமிழின அறிவு நெறி நாகரிகப் பண்பாட்டுக் கொள்கைகட்கு ஒத்து வராது என்பதையும் நாம் ஆண்டாண்டு காலமாக விளக்கி வருகிறோம் எனினும், நம் கருத்துக்கு ஆதரவு தந்து வலியுறுத் தும் வகையில் பிற துறை அறிஞர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன என்பது கண்டு ஓரளவு மன ஆறுதல் அடையும் நாம், அவ்வாராய்ச்சி அறிஞர்களின் சிந்தனைக் கருத்துகளைத் தமிழக மக்கள் பார்வைக்குப் படைக்கிறோம்.

இந்த வழிபாடு இடைக்கால ஏற்பாடே

அறிஞர்கள் சிலர், சங்க இலக்கியத் தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் - இடைக்காலத்தில் வந்த வழிபாடுதான் விநாயகன் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்ம வர்மனின் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிறுத்தொண்டர், இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலை யைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இஃது உண்மைதான்.

ஞானசம்பந்தர்

பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்

கருள் செய்யும் பொருட்டாகக்

கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே  என்று பாடுகிறார்.

                   --------------------(டாக்டர் சோ.ந. கந்தசாமி தமிழ்த் துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ஞானவிநாயகர் என்னும் கட்டுரையில் பக்கம் 20)

பண்டைய நூல்களில் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டையத் தமிழ் நூல்களில் இவ்விநாயக வழிபாடு சொல் லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமை அம்மை பெண் யானையின் வடிவு கொள்ள சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத் தொண்டர், பரஞ்சோதி என்ற பெயரோடு வடபுலத்தில் வாதாபி என்ற நகர்மேல் படை எடுத்துச் சென்று, அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது, அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும் வாதாபியில் இருந்து கொணர்ந்ததால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

              --------------------(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகின்றான் என்ற கட்டுரையில் பக்கம் 17) மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குடமுழுக்கு விழா மலர் 8.9.1978.)

விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே!

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதை தெளிவாக உணரமுடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்போ பல்வேறு விதமாகக் கூறப்பட் டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால் ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க் கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

கணபதி, பெண்ணில்லாமல் ஆணுக் குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பிறந்தவர் என்றும் கூறப்படுகிறது. புராணக் கதை யில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டை ஆக்கி விளையாடிக் கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீதுஅவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகனென்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை கணபதியின் பிறப்பை வேறு விதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத்தில உள்ள   யானைத் தலை ராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்து பிறகு ஒரு குழந் தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்தவில்லை. பிரம்மவை வர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப் பார்வை தோஷத்தால், தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதி யின் தாய், தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம்.

ஆனால், கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்னும் ராட்சசி வயிற்றுள் புகுந்து குழந் தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைகொண்ட கஜாசுரன் என்ற ராட்சசன் தலையை வெட்டி, தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும், கண்ணும் இல்லாத இக்குழந் தைக்கு தனக்குத் தலை இல்லை என்று எவ்வாறு தெரிந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவ தாவது: சிவனும், பார்வதியும் யானையைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

-------------------------(பொதுவுடைமை இயக்க அறிஞர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா.  என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 42)

6 comments:

தமிழ் ஓவியா said...

ஜோதிடம், அரைகுறை ஆபாச உடைக் காட்சிகள், மதவெறி - இவற்றைப் பரப்புவதுதான் ஊடகத்தின் பணியா? பத்திரிகைக் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேள்வி



சென்னை, செப். 13- மூட நம்பிக்கைகளை யும், குறிப்பிட்ட மதத் தைச் சேர்ந்தவர்கள் மீது அவதூறுகளையும் பரப் புவதுதான் ஊடகங் களின் பணியா? தனியார் தொலைக்காட்சிகளும் வரைமுறைக்கு உட் படுத்தவேண்டும் என் றார். முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும், இன் றைய பத்திரிகைக் கவுன் சில் தலைவருமான மார்க் கண்டேய கட்ஜு.

அண்ணா பல்கலைக் கழக ஊடக அறிவியல் துறையின் சார்பில் தனி யார் தொலைக்காட்சி களின் சுய கட்டுப்பாடு என்ற தலைப்பிலான சொற்பொழிவு சென் னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் நீதிபதி மார்க் கண்டேய கட்ஜு பேசி யது: இந்தியாவில் வறட்சி, வறுமை காரணமாக விவ சாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுபோன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு ஊட கங்கள் முக்கியத்துவம் அளிக்காமல், பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அதிக முக்கி யத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.

கிரிக்கெட், சினிமா, பேஷன் ஷோ போன்ற பொழுதுபோக்குச் செய்திகள்தான் 90 சத வீதம் ஒளிபரப்பப்படு கின்றன. விவசாயிகள் தற்கொலை, ஊட்டச் சத்து குறைவான குழந் தைகள், பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பின்மை போன்ற செய்திகள் வெறும் 10 சதவீதம்தான் இடம் பிடிக்கின்றன.

டிஆர்பி ரேட்டிங் கில் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக ஜோதிடம், அரைகுறை ஆடையுடன் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி கள், பேய்க் கதைகள், தொடர் கதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப் படுகிறது.

தனியார் தொலைக் காட்சிகள் தாங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதாகக் கூறிக் கொள்கின்றன. சுயகட் டுப்பாடு என்பது கட் டுப்பாடே அல்ல; எந்த வொரு சுதந்திரமும் வரை யறைக்குட்பட்டது தான். எனவே, காட்சி ஊடகங்களையும் பத் திரிகைக் கவுன்சிலின் கீழ் கொண்டுவர வேண் டும்.

அதன்பிறகு, இதன் பெயரை வேண்டுமா னால் ஊடகக் கவுன்சில் என்று மாற்றிக்கொள்ள லாம். அதில் காட்சி ஊடகங்களுக்கும் பிரதி நிதித்துவத்தை வழங்க லாம். ஆனால், ஊடகங் கள் தவறு செய்தால் அவற்றைத் தண்டிக்கும் அதிகாரமும் இந்த கவுன் சிலுக்கு வழங்கப்பட வேண்டும்.

இதற்காக, பத்திரி கைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினேன். ஆனால், ஊடக நிறுவ னங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருப்ப தால் இதுவரை ஒன்றும் நடைபெற வில்லை.

ஊடகங்களின் திட்டமிட்ட பிரச்சாரம்

மத நல்லிணக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்: எந்தவொரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த ஒரு மணி நேரத் துக்குள் இந்திய முஜா ஹிதீன் அமைப்போ, ஜெய்ஷ் -இ-முகமது போன்ற அமைப்புகளோ இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக் கொள் வதாக இ-மெயில் வந் துள்ளதாகவும், எஸ்.எம்.எஸ். வந்துள்ள தாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடு கின்றன.

இது, இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகள் போன்று காட்டுவ தாகும். இந்த நிலையை மாற்ற வேண்டும், நாட்டில் மதச் சார்பற்ற நிலையைப் பாதுகாக் கவும், மத நல்லிணக் கத்தைப் பேணவும் ஊடகங்கள் செயலாற்ற வேண்டும்.

சமூகக் கொடுமை களான ஜாதிப் பிரச்சி னைகள், மூட நம்பிக்கை கள், ஏழ்மை போன்ற வற்றுக்கு எதிராக ஊட கங்கள் போராட வேண் டும். மக்களிடம் அறிவி யல் பூர்வமாக சிந்திக்கத் தூண்ட வேண்டும்; மக் களின் மூட நம்பிக்கை களைக் காட்டி அவர் களை ஏமாற்றக் கூடாது.

பீகாரில் பத்திரிகை சுதந்திரம் கிடையாது. அங்கு செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடை பெறுவதில்லை; ஆனால், மாநில அர சுக்கு எதிராக எழுதும் செய்தியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படவும், இடமாற்றம் செய்யப் படவும் பத்திரிகை நிறு வனங்கள் நிர்பந்திக்கப் படுகின்றன.

இதுதொடர்பாக, ஓர் உண்மையறியும் குழுவை நியமித்துள்ளேன். இந்த மாத இறுதிக்குள் அந்தக் குழு அறிக்கை சமர்ப் பிக்கும்.

கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதியை கைது செய் துள்ளது மிகப் பெரிய தவறு. ஜனநாயகத்தில் கார்ட்டூன் மூலம் கருத் துகளை விமர்சிக்கவோ, முன்வைக்கவோ செய்ய லாம். இதற்காக கார்ட் டூனிஸ்டை கைது செய்ய முடியாது.

இந்த விவகாரத்தில் அவரைக் கைது செய்த காவல்துறையினர் மீதே வழக்குத் தொடரலாம் என்றார்.

அண்ணா பல்கலைக் கழக ஊடக அறிவியல் துறைத் தலைவர் இ. அருளறம் உள்ளிட் டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

13-9-2012

தமிழ் ஓவியா said...

கூடங்குளம்: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணுங்கள் தமிழக முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!



தஞ்சை, செப். 13- கூடங்குளம் பிரச்சினையில் போராட்டக்காரர்களை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணவேண்டும் என்று நேற்று தஞ்சையில் செய்தியாளர் களிடையே திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

பேட்டி வருமாறு: கூடங்குளத்தைப் பொறுத்தவரையிலே முதலமைச்சர் அவர்கள், போராட்டக்காரர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வை ஏற்படுத்தவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் வன் முறை தலைதூக்கக் கூடாது. ஒரேயடி யாக அணுமின் நிலையமே கூடாது என்ற வாதம் திராவிடர் கழகத்திற்கு ஏற்புடையது அல்ல.

போதிய அளவுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டுமே தவிர, இன்றைய சூழலில் மக்களுடைய மின் தேவைக்கும், நாட்டினுடைய மின் உற்பத்திக் கண்ணோட்டத்தில் அணு மின்சாரம் என்பது தவிர்க்க முடியாதது; இன்றியமையாதது.

அமைதியான முறையில் இப்பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும். மக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காணவேண்டும். அப்பாவி மக்களின் மீது அடக்குமுறையை ஏவி விடுவதன் மூலமாக பிரச்சினைக்குத் தீர்வு வந்துவிடாது.

முதலமைச்சருக்கு எங்களது வேண்டுகோள் என்னவென்றால், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, நம்பிக்கையை உண்டாக்குங்கள். இது வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையல்ல. பல ஆயிரக்கணக்கான மக்களின் சிந் தனையை மாற்றவேண்டும் அதுதான் மிக முக்கியம்.13-9-2012

தமிழ் ஓவியா said...

பொட்டு

கேள்வி: அது சரி, தமிழ்ப் பெண்ணாக இருந்து கொண்டு ஏன் பொட்டு வைப்பதில்லை?

பதில்: எந்த மதத்தின் பழக்க வழக்கத்தோடும் என்னை நான் பிணைத்துக் கொள்வதில்லை. அதனால் என்றைக் காவது தோணினால் மட்டுமே பொட்டும், பூவெல்லாம் வைத்துக் கொள்வேன். தாலியைக்கூட இரவு நேரங்களில் கழற்றி வைத்து விடுவதுண்டு.

பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம்

(ஆனந்தவிகடன் 12.9.2012)

பொட்டு என்பது ஒரு மதச் சின்னம் என்பதை இப்பொழுதாவது பெண்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா? எங்கே பார்ப்போம்.

தமிழ் ஓவியா said...

பச்சை ரத்தம் : பக்தையின் உயிரைப் பதம் பார்க்கிறது!

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணி அப்பகுதியில் உள்ள ஏரியில் நடந்து வருகிறது.

வேலைக்குச் சென்ற பெண்கள் சாமி வந்ததாகக் கூறி ஆடுவதும், பாடுவதுமாக பொழுதைக் கழித்து வந்தனர். இந்நிலையில் ஏரிக்கரையில் ஒரு கல்லை நட்டு அதற்கு பூசை செய்து பொங்கலிட்டு, படைத்து பக்தி பரவசமடைந்ததுடன், வேலை செய்கிறவர்கள் எல்லாம் பங்கு பணம் போட்டு உணவும் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த சின்ன பாப்பா (35) என்பவர் தன்மீது சாமி வந்ததாகக் கூறி ஆடி உள்ளார். உடன் இருந்தவர்கள் எல்லாம் கும் பிட்டு சாமிக்கு என்ன குறை என்று கேட்டுள்ளனர். (இவர்கள் குறையை யார் கேட்பது) அதற்கு சாமியாடி யான சின்னப் பாப்பா எனக்கு இரத்த காவு வேண்டு மென்று கூறியவுடன் ஒரு கோழியை கொண்டு வந்து கொடுத்துள்ளனர். கோழியை கடித்து ஒரு துளி இரத்தமும் வெளியே வராமல் அப்படியே உள்ளுக்குள் உறிஞ்சு குடித்திருக்கிறார்.

அப்புறம் என்ன கோழியின் பச்சை ரத்தம் உள்ளே சென்றதும் ஒவ்வாமை என்னும் அலர்ஜி ஏற்பட்டு உடல் முழுவதும் வீங்கி நினைவிழந்து உயிருக்குப் போராடி வருகிறார். உடல் முழுவதும் நீல நிறமாக மாறிவிட்டது. பச்சை ரத்தத்தைக் குடித்ததால் உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் என ஆலோசனை கூறியதற்கு அங்கே கூடி இருந்த பெண்கள் கூட்டம் கறுப்பு அறைந்து விட்டதால்தான் இதுபோல ஆகிவிட்டது என மேலும் மூடநம்பிக்கை யான கதையைச் சொல்லி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாமல் படுக்கைப் போட்டு படுக்க வைத்துக் கொண்டு பூஜை, சாமியாடல் கழித்தல் என்று செய்து கொண்டிருப்பதுடன்.

இந்து மத கடவுள் வந்ததாக ஆடி கோழி ரத்தத்தைக் குடித்து உடல் பாதிக்கப்பட்டதற்கு கிருத்துவ மத போதகர்களை அழைத்து வந்து ஜெபம் படித்து வேண்டுதல் நடத்தியுள்ளனர். இந்துமத மோசடியால் உயிர் ஊசலாடுவதைத் தடுக்க ஜெபம் என்ற பெயரில் கிருத்துவ மத மோசடிக்காரர்கள் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

- அ.தமிழ்ச்செல்வன்
விடுதலை செய்தியாளர், தருமபுரி

தமிழ் ஓவியா said...

தோழர் ஏ.எம்.கோபு மறைவு பொதுவாழ்வு ஓர் இலட்சிய வீரரை இழந்துவிட்டது!



இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.எம்.கோபு அவர்கள் இன்று விடியற் காலை மருத்துவமனை யில் காலமானார் என்ற செய்தி கேட்டு, மிகவும் வருந்துகிறோம். அவரது வயது 82.

தோழர் ஏ.எம்.கோபு அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அந்தக் கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும், இறுதி மூச்சடங்கும் வரை பாடுபட்ட, அரிய லட்சிய வீரர்.

மக்கள் பிரச்சினைக்காக பல முறை சிறைக்குச் சென்ற அவர், அனைத்துக் கட்சியினரிடமும் மிக வும் அன்போடும் பண்போடும் பழகும் பான்மையர் ஆவார்!

தனது மரணத்துக்குப்பின் உடலை பொது மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்த தோழர் ஏ.எம்.கோபு அவர்கள் இவ்வகையிலும் பொது வாழ்வில் ஒரு முன்மாதிரி என்ற பெருமைக் குரியவர் ஆகிறார் (இன்று மாலை சென்னை பொது மருத்துவமனையில் உடல் ஒப்படைக்கப்படுகிறது).

குடந்தையில் திராவிடர் கழகத்தின் தலைவ ராகப் பல ஆண்டு காலம் பணியாற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குடந்தை டி.மாரிமுத்து அவர் களுக்கு உறவினர் என்பது மட்டுமல்ல; சுய மரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடும், ஈர்ப்பும் கொண்ட ஒரு மார்க்சிஸ்ட் தோழர் ஆவார்.

இடையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, கடிதம் எழுதி நலம்பெற வாழ்த்தி யிருந்தோம். தமிழகப் பொதுவாழ்வு ஒரு நேர்மையான கொள்கை வீரரை இழந்துவிட்டது! அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
13.9.2012

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

கழகத் தலைவர் மரியாதை

மறைந்த தோழர் ஏ.எம்.கோபு அவர்களின் உடலுக்கு இன்று காலை 10.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் உடன் சென்று மரியாதை செலுத்தினார். கோபு அவர்களின் குடும்பத்தினருக்கும், கட்சியின் முன்னணி தலைவர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்தார்.13-9-2012

Ivan Yaar said...

இந்த மாதிரி வெட்டி கட்டுரைகள் எழுதுவதை விட்டு விட்டு
நாடு மக்களுக்காக எதாவது நன்மை செய்ய முயற்சி செய்யவும். !

இந்த மாதிரி கட்டுரைகளால் மக்களுக்கு என்ன லாபம். அவர்களின்
கஷ்டம் நீங்கி விடுமா ? உங்களக்கு திராவிடர் கழகம் பணம் கொடுப்பார்கள்
அதை ஏழை மக்களுக்காக செலவிடவும்.