Search This Blog

25.9.12

பெரியார் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு


செப்டம்பர் 23 விழா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் 60ஆம் ஆண்டு வைர விழா திருச்சியில் பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று வெகு நேர்த்தியாக நடைபெற்றது.

பல ஆண்டுகளாக தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்தில் உதித்திருந்த கருத்துக்கு 1952 செப்டம்பர் 23ஆம் தேதியன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரம் என்ற அமைப்பைப் பதிவு செய்ததன் மூலம் சட்ட ரீதியான வடிவத்தைக் கொடுத்தார்கள்.

அன்னை மணியம்மையார் அவர்கள் திருமணம் என்பதுகூட இந்த எண்ணவோட்டத்திற்கான ஒரு முக்கிய அம்சமாகும்.

தந்தை பெரியார் அவர்களின் எண்ணமும், செயல்பாடும் எத்தகு தொலைநோக்கானவை - சிறப்பானவை  என்பதற்கு - பெரியார் நிறுவனங்கள் வளர்ந்தோங்கி நிற்கும் காட்சிகள் கட்டியங்கூறிக் கொண்டு நிற்கின்றன.

இயக்க வெளியீடுகள் விடுதலை (இரு இடங்களில் பதிப்பு) உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் போன்ற ஏடுகளும், இதழ்களும் அகப் பொலிவிலும், தோற்றத்தின் பொலிவிலும், புதிய தலைமுறையினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குச் சந்தாக்களின் எண்ணிக்கை உயர்ந்து பல்லா யிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்து, தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை மணம் தமிழர் களின் வீடுகளில் கமழும் நிலை என்பது சாதாரண மானதல்ல.

அதிகார மய்யங்களைக் கைகளில் வைத்துக் கொண்டுள்ள அமைப்புகளே ஆச்சரியப்படும் அளவுக்கு இந்தியாவின் தலைநகரமான டில்லியில் கேந்திரமான இடத்தில் பெரியார் மய்யம் செம்மாந்து நிற்கிறது.

அதை மய்யப்படுத்தி பல்வேறு ஆக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு மேலும் விரிவாக்கப் பணிகள் திட்ட அளவில் உள்ளன.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார்  அவர்களைப்பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன் கணித்துச் சொன்னது கனிந்திருக்கும் கால கட்டம் இது.

மதவாதம் உலகப் பந்தை சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில், மதமற்ற உலகு ஒன்றின் மூலம் தான் சமத்துவ, சமாதானம், ஒப்புரவு உலகினைக்  காண முடியும்.

சச்சரவுகளும், சுரண்டலும், ஆதிக்க வெறியும், அமைதி தொலைந்த வாழ்வும், மூடத்தனமும், பெண்ணடிமைத்தனமும் பின்னிப் பிணைந்து கிடக்கும் உலக மக்களுக்குத் தந்தை பெரியார் கொடுக்கும் சிந்தனை ஒளிதான் அதற்கான திறவு கோலாகும்!
இந்தத் திசையில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு இந்த இயக்கத்திற்கு இருக்கிறது.

கல்வியின் மூலம்தான் ஒடுக்கப்பட்ட எந்த ஒரு சமுதாயமும் முன்னேற முடியும் என்ற உறுதியான எண்ணத்தின் அடிப்படையில் பெரியார் அறக்கட்டளை மூலம் ஒரு தொடக்கத்தைக் கொடுத்தார்கள்.

இருபால் ஆசிரியர் பயிற்சி பள்ளி, தொடக்கப் பள்ளி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம் என்ற தொடக்கம், அன்னை மணியம்மையார் காலத்தில் வளர்த்து இன்று தமிழர் தலைவர் தலைமையில் வானுற உயர்ந்து கண்டோர் களிக்கவும், சரியாகக் கணிக்கவும், மாற்றார் மலைக்கவுமான ஒரு பெரு நிலையை எட்டியுள்ளது.

நிறுவனப்படுத்தப்படாத எந்த ஒரு செயலுக்கும் ஆயுள் காலம் குட்டையாகும். இதனை மிக ஆழமாக உணர்ந்து, காலா காலத்துக்கும் அய்யாவின் தத்துவம் நிலை பெற்று, இயக்கம் வலு பெற்று நிற்பதற்கான அடிப்படைப் பணிகளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் திட்டமிட்டுச் செய்துள்ளது.

அந்த வரலாற்று உண்மையைப் பதிவு செய்யும் நிகழ்ச்சிதான் கடந்த 23ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற விழாவாகும். பல்வேறு சிறப்பு அம்சங்களோடு அது நடைபெற்றுள்ளது. அந்த நிறுவனம் மேலும் வலுப் பெற, ஒளி பெற ஒல்லும் வகைகளில் எல்லாம் உதவ வேண்டியது ஒடுக்கப்பட்ட மக்களின், தமிழினப் பெரு மக்களின் முக்கிய கடமையாகும்.

                     ------------------------"விடுதலை” தலையங்கம் 25-9-2012

9 comments:

தமிழ் ஓவியா said...

மணம் வீசும் மலர் தந்தை பெரியார் 134ஆம் பிறந்த நாள் மலர் (3)



- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்

இதயத்தோடு இதயமாகக் கலந்து வாழ்ந்த நம் அருமைத் தலைவரை - அன்புத் தந்தையை இழந்து தவிக்கும் நாமெல்லாம் மற்றவர்களிடமிருந்து இரங்கலை, அனுதாபத்தைப் பெற்றுக் கொள் கிற நிலையிலேதான் இருக் கிறோமே தவிர, யாருக்கும் நம் இரங்கலையோ, அனுதாபத் தையோ ஆறுதலையோ தெரிவித்து விட முடியும், என்று சொல்ல முடியும். (விடுதலை 29-12-1973)

வழக்கறிஞர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை

நேற்றைய மழையிலே இன்று முளைத்த காளான்கள் இலங்கைத் தமிழர்களுக்குத் தாங்கள்தான் ஏகபோக உரிமையாளர்கள் போல் நீட்டி முழங்கி, நம் பணியைச் சுயமரியாதை இயக்கப் பணியை, தந்தை பெரியார் கொடி உயர்த்தியதைத் தமிழர் தலைவர் தொடர்ந்து பாடுபட்டு வருவதை இருட்டடிப்பு செய்யும் ஈனத்தனத்தைத் திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்கள் தேசபக்தி யாவது வெங்காயமாவது எல் லாம் வருண பக்திதான் எனும் வித்தியாசமான, சிறப்பான தலைப்பில் தோலுரித்துக் காட்டுகிறார்.

இலங்கைத் தமிழர்களுக்காக இவ் வளவு போராடியும் இவ்வளவு குரல் கொடுத்தும் ஏதும் பயன் இல்லையே என்று ஏங்கும் நமக்கு, மத்திய அரசு மீதே ஆத்திரம் கொள்ளும் நமக்குச் சூத்திரக் கயிற்றின் நூல், நூல்களிடம் சிக்கி யிருக்கிறது என்று வெளிப்படுத்துகிறார் கோ.சாமிதுரை.

23-07-1939 இல் குடிஅரசு தீர்மானங்களின்படி அருப்புக் கோட்டை தமிழ் மாநாட்டில் கடுமையாக இலங்கைத் தமிழர் களுக்கு ஆதரவாகத் தீர்மானம். அதாவது ஒன்பதாவது தீர்மானம் இலங்கையில் உள்ள தமிழர் களைப் பற்றி இலங்கை சர்க்கார் எடுத்து வரும் தப்பான நடவடிக் கையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.


தமிழ் ஓவியா said...


இலங்கையில் உள்ள தமிழர் களுக்கு ஏதாவது தொல்லைகள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் நஷ்டங்களுக்குச் சென்னை அரசாங்கத்தாரும் இந்திய அரசாங் கத்தாரும் பொறுப்பாயிருக்க வேண்டி வரும் என்று இம்மாநாடு கருதுகிறது என்று தீர்மானம் போட்டார்கள். ஆனால் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையில் மத்திய அரசு தமிழர் களுக்கு நியாயம் செய்ய முற் படவே இல்லை. காரணம். இது வரையில் ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்கள் பார்ப்பனர்களே! விடுவார்களா பார்ப்பனர்கள்? ஆட்சியாளர்களை அடக்கித் தமிழர்களுக்கு விரோதமாகச் செய்து வருகிறார்கள்.

நன்றி தெரிவிப்போம் என்று ஆசிரியரின் நாம் அறிந்த மற்றொரு உயர் பண்பைத் தெரிவிப்பதைப் படித்து அறிகிறோம். மரு. சோம. இளங்கோவன் வாயிலாக சோம.இளங்கோவன் எழுது கிறார். அய்யா! தந்தை பெரியார் அவர்களாலும் உங்களாலும் பயனடைந்த பல்லாயிரக் கணக்கானவர்களில் குறைந் தது ஆயிரம் பேரையாவது எனக்குத் தெரியும். அதில் ஒரு சிலர் கூட நன்றியுடன் இல்லையே.

இனி அவர்களுக் கெல்லாம் நீங்கள் உதவி செய்யக்கூடாது என்பேன். சிரித்துக் கொண்டே ஏதோ நம் இனம் முன்னேற நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். அது நமக்கு எந்த விதத்திலும் இழப்பு இல்லை. இதில் மானம் மரியாதை, பெருமை எல்லாம் பார்க்க முடியாது நன்றியும் எதிர்பார்க்கக் கூடாது என்பார்.

கடிதங்கள்

தந்தை பெரியாரின் பெயர்த்தி டாக்டர் நாகம்மை அவருடைய கணவர் வெங்கடேசின் கடிதம், பொன்னீலனின் கடிதம் ஆகியன புதுமை, புது வரவு. ஞளுசுஞஐ ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 60 ஆண்டு முதுமை எய்தினாலும் அதன் வளர்ச்சி அதன் நோக்கங்கள் குறித்து அறியப் பன்னிரண்டு பக்கங்கள் துணை புரிகின்றன. ஆராய்ச்சியாளருக்கு தமிழ் நாட்டில் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தினால் செயல்படுத்தப் படும் புரா திட்டத்தினை மேனாள் குடி யரசுத் தலைவர் அப்துல்கலாம் வாயிலாக அறிகிறோம்.

திராவிடர் கழகச் செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு அவர்கள் தேர்ந்த பேராசிரியரைப் போல் கையில் எடுத்த வுடன் படிக்கத் தூண்டும் தில்லை நாயகம் பிள்ளை படித்துறையும் திராவிடர் கழகமும் எனும் தலைப் பில் திராவிடத்தால் வீழ்ந்தோம் எனும் வெட்டிப் பேச்சு வீணர்களின், திண்ணைப் பேச்சு வீரர்களைத் திணறடிக்க அருமை யான புள்ளி விவரங்களைத் தருகிறார்.,

தந்தை பெரியார் சமூகப்புரட்சியாளர் மட்டுமல்லர். கல்விப் புரட்சியாளரும் கூட எனும் இக்கட்டுரை ஆசிரியரின் கட்டு ரையும் அது போன்றதே. பு. இராசதுரை திராவிட மொழிகளின் ஏற்றத்திற்கு நீதிக் கட்சி பாடுபட்ட வரலாற்றை, ஆய்வுக் கண்ணோட்டத்தில் அளிக்கிறார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழன் பனின் கவிதைகள், திருமணம் குறித்த பெரியாரின் புரட்சிக் கருத்துக்கள் எனறு பல செய்திகள். மேனாள் மேயர் சா.கணேசன், கவிஞர் மா.செங்குட்டுவன் கவிதைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே, முடிவுரையாக ஆசிரியர் கூறியது போல, பெரியார் என்ற ஜீவநதி தடை பல கடந்து என்றும் வற்றாது, வறளாது ஓடிக் கொண்டேயிருக்கும் என்பதை இளைய தலைமுறை, மாணவ, மாணவிகளான பெரியார் பிஞ்சு களுக்கு உணர்த்துவோம். ஆதிக்கத் தளைகளை அறுத்திடும் பணியில் மும்முரப்படுத்தும் முனைப்பான கழகப் பணிகளும் எப்போதும் போல தொய்வின்றித் தொடரும் என்பதற்கான உயிரோட்டச் சான்று மணம் வீசும் இம்மலர். 25-9-2012

தமிழ் ஓவியா said...

தலைவிதி

கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணர முடியாதவனுக்குத் தலைவிதி.

விடுதலை 5.5.1972



தமிழ் ஓவியா said...

தெலங்கானாவின் கரீம்நகரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பார்ப்பனர்களைத் திணறடித்த கவுதம புத்தர் பெரியார்! அறிஞர்கள் முழக்கம் - கருத்து விருந்து!



கரீம்நகர், செப்.25- பார்ப்பனர்களுக்கு எதிராகப் பதிலடி கொடுத்து திணற அடித்த கவுதமப் புத்தர் பெரியார் என்று கவிஞர் மலயசிறீ முழங்கினார்.

பிரஜா நாஸ்திக சமாஜ பத்திரிகைக் குறிப்பு, கரீம்நகர், தெலங்கானா மக்களின் அடிமன ஆழத்தில், வேரூன்றி நின்றிருக்கும் மூட நம்பிக்கைகளை பிடுங்கி எறிவதற்கு, ஒவ்வொரு வரும் சமுதாய ரீதியாக வும், கல்விப் பயனைப் பெற்றும் சுயமரி யாதைப் போராட்ட வீரர் அறிவுலகப் பேரா சான் அய்யா தந்தை பெரியார் ஈ.வெ. இராம சாமி அவர்களின் சிந் தனைப் போக்கை முன் னெடுத்துச் செல்ல வேண் டும் என முன்னணிக் கவிஞர் டாக்டர் மலயசிறீ அழைப்பு விடுத்தார்.

உள்ளூர் பத்திரிகை யாளர் சங்கத்தில், பிரஜா நாஸ்திக சமாஜத்தின் நிறுவனத் தலைவர் ஜீடீ சாரையா தலைமையில் பெரியார் ஈ.வெ. இராம சாமி அவர்களின் 134ஆம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடை பெற்றன. நிகழ்ச்சியில் முதன்மை விருந்தின ராகக் கலந்து கொண்ட டாக்டர் மலயசிறீ அவர் கள், மதங்களுக்கும், ஜாதிகளுக்கும் எதிராக மட்டுமல்லாமல், உயர் ஜாதியினரின் அரசியல் அதிகார ஆணவத்தை யும் தட்டிக் கேட்ட திண்மை படைத்தவர் பெரியார் என பாராட்டுரைத்தார்.

மூட நம்பிக் கைகளை வளர்த்தெ டுத்து மனித இனத் தையே அடியோடு நாசப் படுத்தும் பார்ப்பனர் களுக்கு எதிராகவும், பதிலடியும் கொடுத்துத் திணறடித்த கவுதம புத்தர்- பெரியார் என விளக்கினார்; கல்வி இல் லாத இடத்தில் மூட நம் பிக்கைகள் மண்டியிருக் கும்; மூடத்துவத்தின் சிகரமாக கடவுள் நம் பிக்கை கொடிகட்டிப் பறக்கும்.

பிற்படுத்தப்பட்டவர் முதல் அமைச்சர்

எனவேதான் ஒவ் வொருவரும் படித்தவர் களாக, கல்வியாளர் களாக வடிவெடுக்க வேண்டும் என டாக்டர் மலயசிறீ கேட்டுக் கொண்டார்; சமுதாயப் புரட்சிக்கு அடிநாதம்/வித்து கல்வியே என அவர் வலியுறுத்தினார். வெகு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செய லாளர் கொம்மு இரமேஷ் பேசுகையில், சமூகப் புரட்சியாளர் களான ஜோதிபா புலே, சத்ரபதி ஆகியோர் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் பாடுபட் டனர். பெரியார், தமிழ் நாட்டில், பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல மைச்சராக்கினார் என்று குறிப்பிட்டார்.

சுய மரி யாதை உணர்வு எங்கி ருக்கிறதோ அங்கே புரட்சி கண்டிப்பாக வெடிக்கும்; நாட்டு மக்கள் தொகையில் விழுக்காடு இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரை ஆட்டிப்படைக்கும் வல் லாதிக்கக் காரர்களாக பார்ப்பனர்கள் விளங்கு கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்; பார்ப் பனர்களிடம் இழந்து நிற்கும் சுய மரியாதை யினை மீட்டெடுத்து, பெரியார் வகுத்துத் தந்த பாதையில் வெற்றி நடை போட வேண்டும் என் றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உண்மையைக் கண்டவர்!

அடுத்து உரை நிகழ்த்திய, 'எரிமலை' டாக்டர் ஜி. இலச்சையா அவர்கள் பேசுகையில், கிறித்துவுக்கு முந்தைய காலத்திலிருந்தே சொத் துரிமை முதன்மை பெறத் துவங்கிவிட்ட தெனவும், இதனைக் கேள்வி கேடடவர்கள் கேவலப்படுத்தப்பட்டு, கொன்றொழிக்கப் பட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்; மனிதர் களை மனிதர்களாகவே பார்க்கவேண்டும், உண் மைகளை வெறும் உண் மைகளாக மட்டுமே பார்த்தவர் தந்தை பெரியார் எனவும் அவர் புகழ்ந்துரைத்தார்.

பெரியாரை ஆய்வு செய்து முனைவர் பட் டம் பெற்ற குமாரசாமி அவர்கள், பெரியாரை ஆய்வு செய்ய உயரதி காரிகள் தமக்கு விதித்த தடைகளை, இடையூறு களை விளங்கப்படுத் தினார். பெரியார் போன்ற உயர்ந்த மனிதர்களை படித்து உணரும்போது தான் அடுத்தடுத்த தலை முறைகளுக்கும் வாழ்க்கை பயனுள்ளதாக அமை யும் என குமாரசாமி வலியுறுத்தினார். பெரி யார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து ஒழுக வேண் டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் லட் சுமையா, வேங்கட மல் லைய, மல்லெல இலட் சும போதி, கடபல விஜயகுமார், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட் டத் தலைவர் சுதாரி லட்சன்ன, பொதுச் செயலாளர் குங்குட்ல லட்சுமண், தம்மிடி சுதீர், சுதாரி பிரேம் சாகர், சம்பத், திருமதி உமா, லாவண்யா, கம்மம் தள்ளி ராஜ்குமார், அம் பேத்கர் இலட்சிய அமைப்பின் தலைவர் கனுமல்ல ராஜ்குமார் சுவாமி ஆகியோரும் கலந்துகொண்டனர். 25-9-2012

தமிழ் ஓவியா said...

பெல் வளாகத்தால் பெருமை பெற்ற திருவெறும்பூர் - பெரியார் வளாகத்தாலும் பெருமை பெற்றது பெரியார் மருத்துவமனை திறப்பு தமிழர் தலைவர் மனம் திறந்து பாராட்டு



திருவெறும்பூரில் உள்ள பெரியார் மருத்துவமனையை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார் (23.9.2012).

திருச்சி, செப். 25- திருவெறும்பூர் பெரியார் வளாகத்தில் பெரியார் மருத்துவமனையை 23.9.2012 அன்று திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டினார்.

திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூரின் சிறப்புக்குக் காரணம் பெல் என அழைக்கப்படும் பாரத மிகுமின் தொழிற்சாலை! இந்தப் பெல் வளாகத்தோடு, இப்போது பெரியார் வளாகமும் இணைந்து கொண்டது.

திருவெறும்பூர் பேருந்து நிலையத்தின் மிக அருகிலேயே கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தங்கத் தலைவர் பெரியாரின் முழு உருவ வெண்கலச் சிலை. அவரின் வலது புறம் அவரது பெயராலே படிப்பகம். அவரின் இடதுபுறம் அவரது பெயராலே புறநோயாளிகள் மருத்துவமனை. ஆக திருவெறும் பூரின் சிறப்பு அடையாளமாக வேகமாக வளர்ந்து வருகிறது இவ்வளாகம்.



மருத்துவர் ஜான்போஸ்கோ, தொழிலதிபர் வீகேயென் அவர்களுக்கு இரத்த அழுத்தம் பார்த்து மருத்துவப் பணியை தொடங்கினர்

திருவெறும்பூரில் பெரிய அளவில் பெரியார் சிலை அமைக்க வேண்டுமென மாவட்டத் தலைவர் மு.சேகர் உள்ளிட்ட தோழர்களுக்கு எண்ணம் வந்த ஆண்டு 2006. அது நிறைவு பெற்ற ஆண்டோ 2010இல். முழுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, முறையான அரசின் அத்தனை அனுமதிகளும் பெற்று திருச்சி - தஞ்சை பிரதான சாலையில், திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலைக்காகப் பெறப்பட்டது. முட்புதர் களும், மேடு பள்ளங்களும், சமன்படுத்த முடியுமா என்கிற உட்கேள்வியோடும் இருந்தது அவ்விடம்!


தமிழ் ஓவியா said...

எனினும் பெரியாரின் தோழர்களாயிற்றே, மேடு பள்ளங்கள் நிறைந்த, சமனற்ற தமிழ் நிலப் பெரும் பரப்பையே சரிசெய்த பெரியாரின் பிள்ளைகள் அல்லவா?

பணிகள் மும்மரமாகின. மேடுகள் வெட்டப் பட்டு, பள்ளங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இடம் சமமானது. சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டது, வண்ணம் தீட்டப்பட்டது, அதில் அய்யாவின் பொன்மொழிகள் பதியப்பட்டன. நாற்புறத்தின் உள்ளே அழகிய பூச்செடிகளும், அற்புதமான புல்வெளிகளும் உருவாக்கப்பட்டன.

இந்த உருவாக்கத்தின் இடையிலேயே தந்தை பெரியார் படிப்பகம் உருவாக்கப்பட்டு, 1.6.2011இல் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களால் திறக்கப் பட்டு, அது செயற்பட்டு வந்தது.

பெரியார் படிப்பகம்

சிறிய அளவிலான படிப்பகம் எனினும், பெரிய அளவிலான மக்கள் வந்து போயினர். பெரியார் சிலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை யும் பார்த்து, தொடர்ந்து தங்களின் உழைப்பால், பொருளால் பெரியாருக்கு நன்றி செலுத்தினர்.

பல்வேறு சிந்தனைக்கு ஊடாக, பெரியார் சிலை திறப்பு எப்போது? எனப் பெருந்திரள் மக்கள் கேட்கும் அளவிற்குச் சூழ்நிலை உருவானது. காரணம் என்ன தெரியுமா? அய்யா சிலையைக் கடந்து தான் தினமும் ஆயிரக்கணக்கான வாக னங்கள் சென்று வர வேண்டும். அதனூடாக பல்லாயிரம் மக்கள் அய்யாவைப் பார்த்துச் செல்கின்றனர். எனவே சிலை திறப்பு எப்போது? எனும் கேள்வியும் இயல்பானது. அதற்குரிய நாளும் உருவானது!

ஆம்! தந்தை பெரியார் படிப்பகத்தைத் தொடர்ந்து, அய்யாவின் முழு உருவ வெண்கலச் சிலை 17.9.2011இல் வெகு சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது. மூடநம் பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் என அன்று முழுவதும் திருவெ றும்பூருக்குத் திருவிழா தான்!

பெரியார் மருத்துவமனை



கம்பீரமாக தோற்றமளிக்கும் மருத்துவமனை



படுக்கை வசதியுடன் கூடிய பிரிவு

ஆக பெரியார் படிப்பகம், பெரியார் சிலை இரண்டும் சிறப்பாக அமைக்கப்பட்டது. இது போதுமா? கூடாது, கூடவே கூடாது. மக்களுக்கு வேறு ஏதாவது செய்ய வேண்டும். பிரதான சாலையில், மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற கருத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி அவர்கள், மிக மிகக் குறைவான கட்ட ணத்தில் பெரியார் மருத் துவமனை ஒன்றைத் தொடங்கலாம் என அறிவித்தார். அறிவித்த கணத்தில் அதற்குண் டான வேலைகள் தொடங்கின.



தமிழர் தலைவருடன் செவிலியர்கள்

முழு உருவ வெண் கலச் சிலையோடு, முழு நாள் திருவிழாவும் நடத்தி யதில் பெரும் செலவுகள்! மனமுவந்து மக்கள் கொடுத்த பெருங்கொ டை கள்! இந்த நேரத்தில் (எந்த நேரத்திலும்) பெரி யார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தர் வீகேயென் அவர்களை நாம் நினைவில் கொள் வோம். முழு உருவ அய்யா சிலையை, முழுவடிவ நன்கொடையோடு வழங்கிய பெருமை அவர்க ளைச் சாரும்.

தொழிற்சாலைக்கும் இல்லத்திற்கு மான தனது வாகனப் பயணத்தில், தினம் தின மும் அய்யா வைக் காணும் அரிய வாய்ப்பில் மகிழ்ந் திருக்கிறேன் என அவர் கள் சொன்னதையும் இங்கு பதிவிடுதல் அவசியம்.

எம்.ரவீந்திரன் எனும் பெருமகனார்



எம்.ரவீந்திரன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார்.


தமிழ் ஓவியா said...

ஆக, அனைத்தும் சிறப்பாய் முடிந்தது. அடுத்துத் தொடரவேண் டியது மருத்துவமனைக் கட்டடம். குறைந்தது ஆகும் 15 இலட்சம். என்ன செய்யலாம்? எங்கு திரட்டலாம்? தலைக்கு 5000 என்றாலும் 300 பேர் வேண்டுமே? 10,000 என்றாலும் 150 பேர் வேண்டுமே? எனச் சிந் தித்தபோது, ஒருவர் வந் தார். ஆம்! ஒரே ஒரு மனி தர் வந்தார். அவர் தான் விடையாய் நின்றார்! பெருங்கொடையாய் தந் தார்! 15 இலட்சமென்ன... 20 இலட்சத்தில் நானே எழுப்புகிறேன் மருத்துவ மனையை! என்றார். எழுப்பியும்விட்டார். அவர் பெயர் எம்.இரவீந் திரன்!

31 அடி நீளத்தில், 31 அடி அகலத்தில் பரவி நிற்கிறது பெரியார் புற நோயாளிகள் பிரிவு மருத் துவமனை, காத்திருப்பு அறை, வரவேற்பு அறை, மருத்துவர் அறை, ஊசி போடும் அறை, மருந்துகள் அறை, இரத்தப் பரிசோதனைக் கூடம், நான்கு படுக்கைகள் அமையும் வண்ணம் தனி அறை, இரண்டு கழிவறைகள் என ஒரு கட்டடத்திற்கே உரிய கட்டுமானத்தில் அமைந்திருக்கிறது பெரியார் மருத்துவமனை. கூடுதல் சிறப்பாக தரை முழுக்கவும் பளிங்கு கற்கள்; சுவர் முழுக்கவும் பளிங்கு கற்கள்!

தன் வீட்டைப் போல பார்த்துக் கொண்டார் இரவீந்திரன். ஒரு மருத்துவமனைக்கு மேலும் சில சிறப்புகள் வேண்டுமே என யோசித்தார். மின் தடையைப் போக்க ஜெனரேட்டர், மருத்துவர் வசதிக்கு குளிரூட்டும் பெட்டி (ஏசி), வாகனங்களைப் பாதுகாத்து வரிசைப்படுத்த தனிக் கூடம், மருத் துவமனை வெளியே, மண் தரைகளின் மீதும் அழகிய கற்கள் பதிப்பு என ஒரு மாளிகையாய் உருவாக்குகிறார் இரவீந்திரன்.

ஆரம்பம் முதல் தீவிரக் கவனிப்பும், ஆழ்ந்த ஆலோசனைகளையும் வழங்கிய நம் ஆசிரியர், திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும்போதும், தஞ் சையிலிருந்து திருச்சி செல்லும்போதும் மருத்துவ மனைப் பணிகளைம் பார்த்துக் கொண்டார். இரவீந்திரன் அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தார். அவருக்கு மட்டுமின்றி, அவரின் தந்தைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக, மருதநாயகம் இரவீந் திரன் மாளிகை என அக்கட்டடத்திற்குப் பெயர் சூட்டினார்.

தமிழர் தலைவர் திறந்தார்

இதோ! மருத்துவ மனை தயாராகிவிட்டது. 23.9.2012இல் திறப்பு விழா தேதியும் அறிவித்தாகி விட்டது. தொழிலதிபர், மனிதநேயர் இரவீந்திரன் தலைமை வகிக்க, பெரி யார் மணியம்மை பல் கலைக்கழக இணை வேந்தர் வீகேயென், திருச்சி மண்டலத் தலை வர் ஆரோக்கியராஜ் ஆகி யோர் முன்னிலை வகிக்க, திருச்சி மாவட்டத் தலை வர் மு.சேகர் வரவேற்பு வழங்க, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மருத்துவர்கள் ஜான்போஸ்கோ, முத்துக்குமார், இராஜசேகர், சேதுராமன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பு செய்ய, மாநில, மாவட்ட, ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்கள் துணை நிற்க திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் புறநோயாளி கள் பிரிவு மருத்துவம னையைத் திறந்து வைத் தார்.

அன்றைய தினமே 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற் றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நூற்றுக் கணக்கானோர் பயன்பெறும் நிலையும் வந்து சேரும். மக்களுக்காக, மக்கள் மூலமே எழுப்பப்பட்டு, இன்றைக்கு அந்த மக்களுக்கே போய்ச் சேர்ந் திருக்கிறது பெரியார் பணி!

இது உருவாகப் பாடுபட்ட மாவட்டத் திரா விடர் கழகத் தலைவர் மு.சேகருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்தார். மருத்துவமனையைச் சிறப்பாக கட்டிடச் செய்த சின்னத்தம்பி உள்ளிட்ட தொழிலாளர் களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

ஆக படிப்பகம், பெரியார் சிலை, பெரியார் மருத்துவமனை எனப் படிப்படியாக, ஒன்றன்பின் ஒன்றாக மக்கள் பணி ஆற்றியிருக்கிறது திராவிடர் கழகம்! அய்யா சிலையைக் காணும்போது சுய மரியாதை உணர்ச்சிப் பெருகும்! படிப்பகம் வரும் போது அறிவாற்றல் விரியும்! மருத்துவமனை நம் உடல் நிலையைப் பேணிக் காக்கும்!

இதைவிட சிறப்பு வேறெதுவாக இருக்கும்? பொது மக்கள் பயன்பாட்டின் கீழ் இன்றைக்கு திருவெறும்பூர் பெரியார் வளாகம் செயற்பட்டு வருகிறது. இப்போது சொல்லுங்கள்!

திருவெறும்பூரின் அடையாளம்! பெரியார் வளாகம்!! என்று சொல்லியதில் மிகையேதும் உண்டோ?

- வி.சி.வில்வம் -

தமிழ் ஓவியா said...

கோவிலில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு உணவு மறுப்பு! காஞ்சிபுரத்தில் பதற்றம்!

சென்னை, செப். 25- தூப்புள் கோவில் என்று அழைக்கப்படும் சிறி வேதாந்த தேசிகள் கோவிலில் வெள்ளிக்கிழமை யன்று பிற்பகலில் ததியாராதனம் என்னும் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பார்ப் பனரல்லாத பக்தர்களுக்கு உணவு வழங்க மறுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்தக் கோவிலின் ஆண்டு திரு விழாவின் போது இந்த ததியாராதனம் என்னும் உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 40-50 ஆண்டு காலாமாக ஒரு தனியார் அறக்கட்டளை நடத்தி வருகிறது. பார்ப்பனர் அல்லாத சில பக்தர்கள் தங் களுக்கும் இந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டதை இத்திட்ட அமைப்பாளர்கள் மறுத்ததினால் பிரச்சினை எழுந்தது.

அனைத்து ஜாதி பக்தர்களுக்கும் பொதுவான கோவில் வளாகத்தில் ஜாதியின் பெயரில் பாகுபாடு காட்டப்படுவதாக தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் ஜி.ஆர்.ரவி என்பவர் ஒருபுகாரை உடனே காஞ்சிபுரம் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் அளித்தார்.

அதனையடுத்து நிருவாக அலுவலர் விஜயன் தலைமையில் ஒரு அலுவலர் குழு கோவிலுக்குச் சென்று, ஒன்று அனைத்து ஜாதி மக்களுக்கும் உணவு வழங்குங்கள் அல்லது உங்கள் உணவு வழங்கும் திட்டத்தை வேறு எங்காவது செய்து கொள்ளுங் கள் என்று அந்தத் திட்டத்தின் அமைப் பாளர்களிடம் தெரிவித்தது. கோவில் திருவிழா நாட்களில் வைஷ்ணவர்களுக்கு உணவு வழங்க இந்த ததியாராதனம் என்னும் உணவு வழங்கும் திட்டத்தை கோவில் வளாகத்திற்குள் நடத்த அதன் அமைப்பாளர்கள் அனுமதி வாங்கியுள்ளனர் என்றும் விஜயன் கூறினார்.

கோவிலில் சோறு போடுவது கூட பார்ப்பனர்களாகப் பார்த்துத்தான் போடு வார்கள் போல் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாத புரவலர்கள் நன்கொடையாக அளித்த காசி நகர சத்திரங்களில் பார்ப்பனர் அல்லாத தந்தை பெரியாருக்கு உணவு வழங்க மறுத்ததால் அவர் பட்ட மன வேதனையை எவரால் மறக்கவோ, மறுக் கவோ முடியும்? இன்றைக்கும்கூட இந்த நிலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.25-9-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பிறந்த நாளில் செக் - குடியரசுப் பெண் செய்து கொண்ட சுயமரியாதைத் திருமணம்


சென்னை, செப்.25- செக் - குடியரசு நாட்டைச் சேர்ந்த அலைஸ் என்பவர், தமிழ் நாட்டைச் சேர்ந்த அன்பு மகேஷ் என்பவரை காதலித்து சுயமரியாதை திருமணம் முறையில் வாழ்க்கை இணையராக ஏற்றுக் கொண்டார்.

அலைஸ், அன்பு மகேஷ் இருவரும் இணையத்தின் மூலம் அறிமுகமாகி நேரில் சந்தித்துப் பழகி காதலர்களாகி தந்தை பெரியாரின் 134ஆம் ஆண்டு பிறந்த நாளில் பெரியார் திடலில் (17.09.2012) பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில், திராவிடர் கழகத்தின் பொருளாளரும், வழக்கறிஞருமான கோ. சாமிதுரை அவர்களின் தலைமையில் திருமண நிலைய இயக்குநர் திருமகள் அவர்களின் முன்னிலையில் இணையர்களாக இணைந்தனர்.

செக் - குடியரசு நாட்டைச் சேர்ந்த அலைஸ் தொன்மையான மொழிகளுள் லத்தின், தமிழ் இரண்டில் லத்தீன் மொழி வழக்கொழிந்துவிட்டதால், தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட் டுக்கு வந்திருக்கிறார். இங்கு, ஏற்கெனவே இணையத்தில் நண்பராக இருந்த அன்பு மகேசை நேரில் சந்தித்துப் பழகியிருக்கிறார். தொடர்ந்து அன்பு மகேசின் சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள வெல்லூர் கிராமத்திற்கு தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்திருக்கிறார்.

2012 பொங்கல் திருநாளன்று அலைசின் விருப்பத்தை அன்பு மகேஷ் நிறைவேற்றியிருக்கிறார். வெல்லூர் கிராமமும், அங்கு வாழும் மக்களின் அன்பும் பண்பும் அலைசின் மனதை வெகுவாக தொட்டிருக்கிறது.

அன்பு மகேசின் மீதான நட்பு காதலாக கனிந்திருக்கிறது. அலைஸ் இயல் பாகவே மதமற்ற சூழலில் வாழ்ந்தவர். ஆதலால், இருவரும் மனமொத்து மதம், இனம், மொழி கடந்து வாழ்விணையர்களாக சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டபோது, பெரியார் திரை குறும்பட போட்டியில் பரிசு பெற்ற குறும்பட இயக்குநர் முரளிதரனின் வழி காட்டுதலில் இருவரும் நண்பர்களுடன் பெரியார் திடலுக்கு வருகை தந்தனர்.

அவர்களின் எண்ணப்படியே அவர்களுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய ஆங்கில மொழியாக்க புத்தகங்களும், விடுதலை சந்தாவும் கொடுக்கப் பட்டது.

இருவரும், தந்தை பெரியாரின் நினைவிடத் தையும் காட்சியகத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு தந்தை பெரியாரையும், அவர்தம் பணிகளின் தாக்கத்தையும் எண்ணி வியந்தவாறே புறப்பட்டுச் சென்றனர். 25-9-2012