திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இருக்கும் பொற்குவியலைக் கணக்கிடும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது - நீதி மன்றத்தின் ஆணையின் அடிப்படையில்.
ஒரு கோயிலுக்குள் தேவையில்லாமல் பெரும் அளவு மதிப்புள்ள பொற்குவியல்கள் முடங்கிக் கிடப்பது சரியானதுதானா? தேவையானதுதானா? அறிவுடைமையானதுதானா? என்ற கேள்விகள் எழுந்தால், அவை நியாயமானவையே!
ஆன்மிகப்படியோ ஆச்சாரப்படியோ பக்த மெய்யன்பர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும் கூட கோயில் என்பது மனதை ஒருமுகப் படுத்துவதற்கான ஓரிடம் என்றே கூட வைத்துக் கொள்வோம்!
(உடம்பே கோயில் ; உள்ளமே இறைவன் உறையும் இடம் என்று கூறும் சிலரின் தத்துவார்த்தச் சங்கதியைக் கூட சற்றுத் தூர ஒதுக்கி வைத்துக் கொண்டு சிந்திப்போம்!)
இப்படி மனதை ஒருமுகப்படுத்தும் இடத்தில் எதற்காக இந்தத் தங்கக் குவியல்கள்? எதற்காக இவை தூசிபடிந்து, அழுக்கேறிக் கிடக்கவேண்டும்?
அதுவும் தேவையில்லாமல் இப்படி சொத்துக்கள் குவிந்து கிடந்தால் அங்கே தவறுகள் நடப்பது என்பது எதிர் பார்க்கக் கூடியதே! அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல சந்தர்ப்பங்களில் கோயில் நகைகளைக் கடத்திச் சென்றுள்ளனர் என்ற குற்றச் சாற்றும் கூட எழும்பியதுண்டே!
பொதுவாக தங்கம் என்பது அரசின் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டியதாகும். அதன் மதிப்பின் அடிப்படையில்தான் ரூபாய்ப் புழக்கமும் இருக்க வேண்டும் என்பது பொருளாதாரக் கண்ணோட்டத் தில் கூறப்படுவதாகும்! ரிசர்வ் வங்கியில் இருக்கும் தங்கத்தின் மதிப்பை விட பணப்புழக்கம் அதிகமாக நாட்டில் இருந்தால் அது பணவீக்கத்தில் கொண்டு போய்விடும் என்றெல்லாம் பொருளாதார மேதைகள் கூறி என்ன பயன்? அந்த மேதைகள் யாராவது அரசு கஜானாவில் இருக்க வேண்டிய தங்கம் கோயிலுக் குள் முடங்கிக் கிடக்கக்கூடாது என்று வாய் திறந்து சொன்னதுதான் உண்டா?
இப்பொழுது இதில் இன்னொரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் குறிப்பிட்ட அறையில் உள்ள நகைகளை மதிப்பிட பெண் அதிகாரி ஒருவர் சென்றபோது அவர் தடுக்கப்பட்டுள்ளார்! அது கோயில் அய்தீகத்துக்கு விரோதமானதாம்! பெண்ணை அனுமதிக்கக்கூடா தாம். எந்த ஒரு நியாயத்தின் அடிப்படையிலாவது கோயில் சமாச்சாரங்கள் ஒத்துப் போகின்றனவா?
பெண்ணை சக்தி என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, சக்தியில்லையேல் சிவன் இல்லை என்று இன்னொரு பக்கத்தில் சிலாகித்துக் கொண்டு, இப்படி பெண்ணை அவமானப்படுத்த லாமா?
கோயில் நிருவாக அதிகாரிகளாக, ஆணையர்களாக பெண்கள் இருக்கிறார்கள் - அவர்களையும் அனுமதிக்கக்கூடாது என்று சொல்லப் போகிறார்களா?
இராத்திரி பூராவும் என்ன வேலை செய்து கொண்டு இருந்தான் இந்த அர்ச்சகப் பார்ப்பான் என்று யாருக்குத் தெரியும்? குஜராத்தில் சவ்மிய நாராயண் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் கோயிலுக்குள்ளேயே தனி அறையில் காமலீலைகள் செய்து வந்த செய்தி படங்களுடன் பக்கம் பக்கமாக வெளி வரவில்லையா?
காஞ்சிபுரம் மச்சேந்திரசுவாமி கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் கர்ப்பக் கிரகத்திலேயே பக்தைகளிடம் உடலுறவு வைத்துக் கொண்டது சிரிப்பாய்ச் சிரித்ததே! இந்த யோக்கியதையுள்ள பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாகக் கோயில் கருவறைக்குள் ராஜா மாதிரி நடந்து செல்லலாம். அதிகாரி என்ற முறையில் பெண் ஒருவர் கோயில் நகை அறைக்குள் போகக் கூடாதா?
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் நகையறைக்கு அரசு பணி நிமித்தமாகச் சென்ற பெண் அதிகாரியைத் தடுத்தவர்கள் மீது அரசு அதிகாரி தன் கடமையைச் செய்யவிடாமல் தடுத்த தாகக் கூறி வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
-----------------------"விடுதலை” தலையங்கம் 24-9-2012
6 comments:
தந்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வைர விழா : பிரபல அமெரிக்க புற்றுநோய் மருத்துவர் எஸ். சம்பந்தம் அவர்களின் வாழ்த்து
சென்னை, செப். 24: தந்தை பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவன வைரவிழா கொண்டாட்டத் தின்போது பிரபல அமெரிக்க புற்று நோய் மருத்துவர் எஸ். சம்பந்தம் அவர்கள் கீழ்க்கண்ட வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.
கருமம் செயஒருவன் கைதூவேன் - ஒருவன் பெருமையின் பீடுடையது இல்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வை நாடி
உடல் நலம் கெட்டு நோயுறுவது வாழ்க்கையின் ஒரு பகுதியே ஆகும்.
விபத்துகள், அனைத்து வகையான நோய்கள், முதுமை அடைதல் ஆகியவை மனித வாழ்க்கை முடிவுறும் வழிகளாகும்.
இதய நோய்கள், தொற்று நோய்கள், புற்றுநோய் ஆகி யவை நமது சமூகத்தில் அதிக அளவிலான இறப்புகளை ஏற்படுத்துபவையாகும். அறிவே ஆற்றல் எனும் ஆயுதமாகும். சரியான, வலுவான சிந்தனை மற்றும் பலம் நிறைந்த தத்துவ வாதத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவே முழுமை யான ஆற்றலாகும். பெரியாரியலின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றாக இருப்பதாகும் இந்த உண்மை.
ஒரு நேரத்தில், ஒரு தனிப்பட்டவரை ஒரு நோய் பீடித்தால், நோயின் தீவிரத்துக்கும் அதனைக் குணம் பெறச் செய்யும் முயற்சிக்கும் இடையே நடக்கும் கடுமை யான போட்டியில், அந்த நோயைக் குணப்படுத்து வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கத்தான் செய்யும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளே நோய் வராமல் தற்காத்துக் கொள்வதும், விரைவில் அந்நோய் பீடித்துள் ளதை அடையாளம் கண்டு கொள்வதும்தான்.
இத்தகைய தற்காப்பு நடவடிக்கையும், நோய் பீடித் துள்ளதை விரைவில் கண்டறிவதும், அந்த நோய் தோன் றியது முதல் முடிவு வரை பெறப்படும், அந்த நோய் பற்றிய ஒருங்கிணைந்த அறிவினைப் பொறுத்ததே ஆகும்.
தந்தை பெரியார் அவர்களைப் போன்றே தங்களையும் வடிவமைத்துக் கொள்ளும் சமூக உணர்வும், சுயநியாய உணர்வும் கொண்ட மக்கள் இச் சாதனையைத் திரும்பத் திரும்பச் செய்கின்றனர்.
வாழ்க்கையின் போக்கை மாற்றிடும், வாழ்க்கைக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த முக்கியமான நடவடிக் கையைப் பற்றிய விழிப்புணர்வை எல்லா ஆண்கள் மற்றும் பெண்களிடம் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
நோய்வாய்ப்படுவது என்பது பெருந்தன்மை மிக்கது; இயல்பானது; பாராட்டத்தக்கது. இந்தத் தகவல் நெடுஞ்சாலைகளில் மட்டுமன்றி அனைத்து சந்து பொந்துகளின் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு செல்லப்படும்போது, அந்த உண்மை மேலும் மேலும் தெளிவாகிறது.
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும், ஒவ்வொரு அமைப்பும் பின்பற்றத் தகுந்த முக்கியமான சேவை இது. இந்தப் பெருந்தன்மையான நோக்கத்திற்காக இந்தச் சேவையை மேற்கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் எனது வணக்கத்தை நான் மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது முயற்சிகளில் அவர்கள் பெருவெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு
- எஸ். சம்பந்தம்
மணம் வீசும் மலர் தந்தை பெரியார் 134ஆம் பிறந்த நாள் மலர் (2)
எழுத்துரு அளவு
தந்தை பெரியாரின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலருக்கு தமிழர் தலைவர் முனைப்பாகத் தொடரும் நம் பணிகள் என்று தலைப்பிட்டு எழுதிய வாசகங்களே மலருக்குக் கட்டியம் கூறுகின்றன. அதில் 1962 முதல் இடைவிடாது செப்டமபர் 17 அன்று வெளிவந்த அத்தனை மலர்களின் அட்டைகளும் அலங்கரிக்கும் பாங்கு நம்மை ஈர்த்தாலும், ஒரு செய்தி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதுவரை அத்தனை மலர்களிலும் அய்யாவின் அழகு மிளிரும் உயிரோட்டமான புகைப் படங்களை அட்டையை அழகு செய்ய, இக்கால இளைய தலைமுறையை ஈர்க்கும் வகையில் முதன் முதலாக அய்யா அழகோவியமாய்த் திகழ்கிறார்.
காவியங்கள் - ஓவியங்கள்
எனவேதான் நம் ஆசிரியர் அவர்கள், இம்மலரின் தனிச் சிறப்பு பொன்மலருக் குத் தனித்த மணமும் இணைந்ததாக நம் அறிவு ஆசான் தந்தை அவர்களின் அந்த பிறந்த நாளில் செய்தியாகச் சிந்தனைக் குவியலாக, எழுதிய கருத்தாழம் மிக்க கட்டுரைகள் இணைந்தன. ஆதலால் ஒவ்வொன்றும் திராவிடர் இனத்திற்கான காவியங்கள்! சமுதாய ஓவியங்கள்!
வருங்காலத்தில் பல்கலைக் கழகங்கள் பி.எச்.டி. என்ற முனைவர் கலாநிதி (ஈழத் தமிழர்கள் குறிக்கின்ற சொல்லாக்கம் அந்த பட்டத் தகுதியுள்ள முனைவருக்கான ஆய்வுச் சுரங்கங்கள் ஆகும் என்று குறிப்பிட்டவை இம் மலரைப் பொறுத்த வரையிலும் தொடர்கின்றன. தூண்டுகின்றன.
ஆசிரியர் குறிப்பிட்டதைப் போல் அய்யாவின் பிறந்தநாள் செய்திகள் 1962 முதல் தொடங்கி 1973 (95 ஆம் வயது ஆண்டு மலர்) வரை 12 ஆண்டுகள். முக்கிய செய்திகள் இடம் பெற்று வரலாறு படைத்துப் பின் அவர்தம் கொள்கை தத்துவங்கள் (எழுத்தும், பேச்சும், ஆண்டு மலர்களின் அணிகலன்களாயின ஏனென்றால் அந்த அறிவுச் சுரங்கம் அள்ள அள்ளக் குறையாத கருத்துச் சுரங்கம். பக்கத்துக்குப் பக்கம் பளிச்சிடும் படங்கள் எழில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றச் செய்கிறது.
பேராசிரியரின் பாராட்டு
அதனால்தான் விடுதலை மலர்களின் சிறப்பை வியந்து திராவிட இயக்கத்தின் வாழும் முதுபெரும் தலைவர்களில் ஒருவ ரான இனமானப் பேராசிரியர், இப் போதெல்லாம் விடுதலை வெளியீடு களைப் பார்த்தாயா? விடுதலை மலர் களைப் பார்த்தாயா? பயனுள்ளவையாயும் படிப்பதற்கு ஏற்ற அழகிய அச்சிலும், படங்களுடன் பளிச் என்று இருக்கிறது என்று குறிப்பிட்டது எவ்வளவு உண்மை என்பதை இம்மலரைக் காண்போர் உணர்வர்.
கலைஞரின் கருத்தோவியம்
திராவிடர் கழகத்தவர்களின் எழுத்தோ வியங்கள் மட்டுமல்லாது, தி.மு. கழகத் தவர்களின் எழுத்தோவியங்களும் இடம் பெற்றிருப்பது, பெரியார் தான் என்றும் மாபெரும் திராவிட இயக்கத்தின் மறைந்தாலும் மனத்தில் நிறைந்து நிற்கும் தலைவர் என்று காட்டும் வெளிச்சச் சுவடுகள்.
ஒரு தலைவராக உயரவேண்டு மென்று ஒரு போதும் அவர் எண்ணிய தில்லை. ஆனால், காலம் அவரை ஒரு மிகப் பெரிய சமூகச் சீர்திருத்தச் சிற்பியாக உருவாக்கியது. சுயமரியாதை இயக்கத் தலைவராக - திராவிட இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவராக வரித்துக் கொண்டது.
எனும் பெரியார் குறித்து தலைவர் கலைஞரின் தமிழ்ச் சமுதாயமே, இளைஞர்களே, புரிந்து கொள்வீர்! விழிப்படைவீர்! எனும் கட்டுரையின் வைர வரிகள் தி.மு.கழகத் தவரையும் ஓடிச் சென்று இந்த மலரை வாங்கிப் படித்து உயரிய சிந்தனை தீபத்தை ஏற்றச் செய்கிறது.
1969 ஆம் ஆண்டில் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் ஏழை எளியோர்க்குப் பயன் தரும் வகையில் அவற்றைச் சட்டங்களாகவும், திட்டங் களாகவும் நடைமுறைப்படுத்திட ஆவன செய்த அரிய நிகழ்வுகளையும் நினைந்து கலைஞர் பெருமிதம் அடை கையில் பெரியார் வாழ்கிறார், பெரியார் இன்றும் தேவைப்படுகிறார். அவற்றை யெல்லாம் பட்டியலிட்டு, இவையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் தமது காலம் முழுவதும் எதிர்த்துப் போராடிய ஆதிக்க சக்திகளின் இன்றைய ஆணவச் செயல் கள் என்பதனைத் தமிழ்ச் சமுதாயமே, இளைஞர்களே, புரிந்து கொள்வீர்! விழிப் படைவீர்!! என்று ஒளி வெள்ளம் பாயச் செய்கிறது.
வீரமணி இருக்கிறார்
அதே வேளையில் பெரியார் இல்லா விட்டாலும் வீரமணி இருக்கிறார் என்று நலம் பெற்று ஆசிரியர் வாழ்ந்துவர வாழ்த்தி என்னை விட இளையவர், இன்னும் நீண்ட காலம் வாழவேண்டும். அப்படி அவர் வாழுகின்ற நேரத்தில் தமிழ் நாட்டிற்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, அடித்தட்டு மக்களுக்கு பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். அந்தப் பணிக்கு நான் இருந்தால் நானும் அவருக்கு உதவியாக இருப்பேன் என்று கலைஞர் தமது வாழ்த்துக்களை மேலும் மேலும் குவித்து விடைபெறுகின்றேன் என்று பாராட்டிய வரிகளைக் கேட்ட வரிகளை மீண்டும் மலரில் படிக்கையில் நம் மனம் குளிர்கிறது. நம் கைகளும் வாழ்த்த உயருகின்றன.
பெரியார் பிறந்தநாள் மலரென்றால் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் பெரியார் குறித்த புதிய சிந்தனை வெள்ளம் பாயும் கட்டுரை தவறாது இடம் பெற்றுவிடும். ஆண்டுதோறும் புதிய புதிய சிந்தனைகள். புதிய புதிய கோணத்தில் வடித்திடும் எழிற்கோலங்கள். இந்த மலரில் தந்தை பெரியாரைச் சமுதாய விஞ்ஞானியாகப் பார்க்கிறார். புதிய பார்வை இது.
புரட்சிக் கவிஞரின் புதுப்போர்
பேராசிரியரை அடுத்துப் புரட்சிக் கவிஞர் பொதுப் போர் புதுப்போர் எழுக எழுக! என்று புதுமையாகக் கூறுகிறார். போர் தெரிகிறது. அது என்ன புதுப்போர். கவிதையைப் படித்தால் பளிச்சென விளங்கும். பட்டெனப் புரியும்.
அன்னையாரின் உரை
பெரியார் மறைந்து ஆறு நாட்களுக் குப் பின் அன்னை மணியம்மையார் அய்யா மறைந்தது குறித்து உரைத்தவை இன்றும் நம் காதுகளின் அருகில்இருந்து உரைப்பது; போல் ரீங்காரமிடுகின்றன. 24-9-2012
செந்துறை இராஜலெட்சுமி திருமண மண்ட பத்தில் நடைபெற்ற மணவிழாவிற்கு வருகைதந்த அனைவரையும் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மண்டல செயலாளர் சி.காமராஜ், தி.மு.க சொற்பொழிவாளர் ச.அ.பெருநற்கிள்ளி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி, பா.ம.க. ஒன்றிய செயலாளர் செல்ல.ரவி, பா.ம.க. மாநில துணைத் தலைவர் உலக.சாமிதுரை, வி.சி. கட்சி தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் செ.வெ.மாறன், கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், தி.மு.க. மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் உரையாற்றி இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். அவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:
கொள்கை உரமேறிய இந்த பகுதியில் இருபது நாட்களுக்குள்ளாக இரண்டாவது முறையாக வந்து உங்களையெல்லாம் சந்திப்பதிலே எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன். சுயமரியாதைக் கொள் கையை ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்றம் பெற்றி ருக்கிறார்கள். பிள்ளைகள் பொறியியல், மருத்துவம் படிக்க வைத்து சனிக்கிழமையில் இந்த திரும ணத்தை இராமச்சந்திரன் நடத்துகிறார் என்றால் அந்தத் துணிச்சல் பெரியார் பல்கலைக் கழகத்திலே படித்தால்தான் வரும்.
சட்ட சபையில் ஆளும் கட் சிக்கு சிம்மமாக விளங்கக்கூடிய நமது சட்டமன்ற உறுப்பினர் சனிக்கிழமையில் திருமணம் செய்து கொண்டவர் எல்லா வெற்றிகளையும் பெறக் கூடியவர் அவரது தந்தை பவளவிழா நாயகர் சிவ.சுப்பிரமணியத்திற்கு நமது வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களெல்லாம் பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் வாழ்விலே உயர்ந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் நாமெல்லாம் படிக்க முடியுமா?
இந்த பகுதிகளில் பள்ளிக்கூடம் ஏராளம் வரு வதற்கு காமராஜரிடம் பெரியார் பரிந்துரை செய் திருக்கிறார். விதிமுறைகளைக்காட்டி அதிகாரிகள் தயங்கியபோது மைல்கல்லை பார்க்காதே மனிதனைப் பார் என்ற காமராஜரால், பெரியா ரால் நாம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் மூடநம்பிக்கைகள், செவ்வாயில் காலடி வைக்கின்ற நேரத்திலும் செவ்வாய் தோசம், ஜாதி, சடங்குகள், சம்பிரதாயம் என்ற அறியாமை நோய்கள் அகல ஈரோட்டு மருந்தே - பெரியாரி யலே தீர்வு என விளக்கி வாழ்வியல் உரையாற் றினார். 24-9-2012
செப்.28: விஜயவாடாவில் உலக நாத்திகர் மாநாடு தமிழர் தலைவர் பங்கேற்கிறார்
விஜயவாடா, செப். 24-துணிவு நிறைந்தவராகவும், மனிதநேயம் மிக்கவராகவும் இருந்து - சமத்துவத்தை நோக்கி நடைபோடுங்கள் என்ற தலைப்பில் அனைத்துலக மாநாடு ஒன்றை விஜயவாடா நாத்திக மய்யம் ஏற்பாடு செய்து நடத்த உள்ளது. விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியும், விஜயவாடா நாத்திக மய்யத்தைத் தோற்றுவித்த இணை தோற்றுநருமான சரஸ்வதி கோரா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒட்டி, செப்டம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் இந்த இருநாள் மாநாடு விஜயவாடா சித்தார்த்தா அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள துவக்கவிழாவின்போது சரஸ்வதி கோரா அவர்களின் வாழ்க்கை மற்றும் சேவை பற்றிய ஒளிப்படக் கண்காட்சி ஒன்று இடம் பெறும். அனைத்துலக மனிதநேய நன்னெறிக் கழகத்தின் தலைவரும் பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த ஒரு மாபெரும் கல்வியாளருமான சொஞ்சா எக்கரிக்ஸ் (Sonja Eggericks) இந்த விழாவின் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு பெருமைப் படுத்துவார். இந்தத் தகவலை வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜி. சமரசம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான முனைவர் கி.வீரமணி அவர்கள் இந்தத் துவக்க விழாவுக்குத் தலைமை தாங்குவார் என்றும் அவர் கூறினார்.
வெகு காலமாக துவக்கப்படுவதற்காகக் காத்தி ருக்கும் கோரா மற்றும் சரஸ்வதி கோரா அனைத்துலக நாத்திக ஆய்வு மய்யத்தைத் துவங்கி வைக்கவும், கோரா, சரஸ்வதி கோரா, மற்றும் நாத்திக மய்யம் என்னும் நூல், ஜிம் ஹெர்ரிக் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கோராவுடனான எனது வாழ்க்கை என்ற சரஸ்வதி கோரா அவர்களின் தன் வரலாற்று நூல் ஆகிவற்றை வெளியிடவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என்று நாத்திக மய்யத்தின் இயக்குநர் ஜி.விஜயம் கூறினார்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கும் உலகத் தலைவர்களில் ஜெர்மனி சுதந்திரக் கல்வி நிறுவனத்தின் தலைவரும், ஜெர்மன் நாட்டு பிராண்டர்பர்க்கில் உள்ள சுதந்திர சிந்தனையாளர் சங்கத்தின் தலைவருமான வோல்கர் முல்லர் (Volker Mueller) அவர்களும், புகழ் பெற்ற பகுத்தறிவு எழுத்தாளரும், லண்டனிலிருந்து வெளிவரும் மனித நேயர் என்னும் இதழின் ஆசிரியருமான ஜிம் ஹெர்ரிக்(Jim Herrick) அவர்களும், புதுடில்லி காந்தி தேசிய சமாதான அமைப்பின் தலைவர் ராதா பட் அவர்களும், ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வி.பாலமோகன் தாஸ் ஆகியோரும் அடங்குவர்.
இந்த மாநாட்டில் கருத்துரை ஆற்ற உள்ள அறிஞர் பெருமக்களில் மங்களூர் அனைத்திந் திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்ட மைப்பின் தேசியத் தலை வர் நரேந்திர நாயக் , திறந்தவெளிப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஆர்.வி.ஆர். சந்திரசேகர ராவ் , தெற்குகுஜராத் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பி.ஏ.பரிக் , அனைத்திந்திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் யு. கலாநாதன், ஒடியா பகுத்தறிவாளர் கழகத் தத்துவ இயலாளர் தானேஸ்வர் சாஹூ, அனைத்துலக மனிதநேய நன்னெறிக் கழகத்தின் பிரதிநிதி பாபு கோகினேனி , வார்தா காந்திய சிந்தனைகள் ஆய்வு மய்யத் தலைவர் சம்ஸ்கார் லவணம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபி ஜோசப், விஜயவாடா வாசவ்ய மஹிளா மண்டலியின் தலைவர் சென்னுபட்டி வித்யா மற்றும் எண்ணிறந்தோர் அடங்குவர்.
இத்தகவலை விஜயவாடா நாத்திக மய்யத்தின் இயக்குநர் விஜயம் தெரிவித்துள்ளார். 28-9-2012
Post a Comment