Search This Blog

23.9.12

மக்களே! பார்ப்பனீயம் ஜாக்கிரதை!! BEWARE OF BRAHMINISM


தென் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் மறுபடியும் கதர், காங்கிரஸ், மறியல் என்னும் பெயர்களைச் சொல்லி மூடமக்களிடம் உண்டியல் பிச்சை, தட்டப்பிச்சை முதல் பல தந்திரங்களால் பணம் வசூலிக்க வழிகளுண் டாக்கி, பார்ப்பனரால்லாதாரையே கூலிகளாகப் பிடித்து அவர்கள் வசம் அம் மார்க்கத்தை ஒப்புவித்து கூப்பாடு போடச்செய்து, பிரசாரம் செய்ததின் பயனாய் அடங்கிக்கிடந்த பார்ப்பனீயம் இப்போது மறுபடியும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருக்கிறதென்பது யாவரும் அறிந்ததேயாகும்.

பார்ப்பனீயத்தின் கருத்தெல்லாம், தேசம் பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு வரவேண்டுமென்பதைத் தவிர வேறு ஒரு காரியமும் இல்லை என்பதும் வெகு காலத்திற்கு முன்பே விளங்கிய விஷயமாகும். அதற்காக என்று செய்யப்படும் கதர்-காங்கிரஸ்-மறியல் முதலிய பிரசாரத்தின் கருத் தெல்லாம் சட்டசபை தாலூகா, ஜில்லாபோர்டுகள் முனிசிபாலிட்டி முதலிய வைகளை பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பிடுங்கி பார்ப்பன ஆதிக்க வசம் ஒப்புவிக்கும் தரகர் வேலை என்பதைத் தவிர மற்றபடி இவற்றால் எல்லாம் மதுபானமோ, ஏழ்மைத்தன்மையோ, அடிமைத்தன்மையோ ஒழியப்போவ தில்லை என்பதும் நிச்சயமான உண்மையாகும்.

‘தேன் அழித்தவன் புறங்கை நக்கமாட்டானா’ என்பது போல் ‘பார்ப் பனர்களுக்கு போகமுடியாத சமயத்தில் ஒன்று அரை உத்தியோகமோ, ஸ்தானமோ நமது கைக்கு வராதா’ என்று எண்ணுகின்ற தொண்டர்களும் சிலர் இருக்கலாம் என்றாலும் பார்ப்பனரல்லாத மக்கள் இது சமயம் ஏமாந்தால் கடைசியில் ஆபத்தாய் முடியும்.

உதாரணம் வேண்டுமானாலும் நிதானமாய் யோசித்துப் பார்த்தால் விளங்கும். இப்போது, முனிசிபல் எலக்ஷனும், தாலூகா ஜில்லாபோர்ட் எலக்ஷனும் சமீபித்த உடனே எத்தனை ‘வரி செலுத்துவோர்’சங்கம், ‘நகர நல உரிமை’சங்கம், ‘குடியானவர்கள்’சங்கம், ‘ரோட்டில் நடப்பவர் கள்’சங்கம், ‘ரயிலில் பிரயாணம் செய்கின்றவர்கள்’சங்கம், ‘மதுவிலக்கு’ சங்கம், ‘சுகாதார’சங்கம், ‘தொழிலாளிகள்’சங்கம், ‘உழுது பயிர் செய்வோர்’ சங்கம், ‘வேலையற்றவர்கள்’சங்கம் என்பவைகளாகிய அநேக சங்கங்கள் புறப்பட்டு வருகின்றதை கவனித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும். 1920- வூ த்திய சீர்த்திருத்தத்தின்போதும் சட்டசபை தேர்தலை உத்தேசித்து கிளப்பப்பட்ட காங்கிரஸ் கிளர்ச்சியானது ஒத்துழையாமையில் ஆரம்பித்து, தேர்தல்கள் வந்தவுடன் சட்டசபைப் பிரவேசமாக மாறி எலக்ஷன் முடிந்த உடன் எல்லாமுமே அடங்கிப்போய்விட்ட சங்கதி யாவரும் அறிந்ததே. இப்போதும் அதுபோலவே 1931ம் வருஷத்திய சீர்திருத்தத்தை எதிர்பார்த்து, சட்டசபை தேர்தல்களை உத்தேசித்து, ஒரு வருஷத்திற்கு முன்னால் இருந்தே போடுகின்ற கூச்சல் இது என்பதைத் தவிர மத்தியில் இந்த 5, 6 வருஷங்களாய் ஏதாவது நடவடிக்கைகள் நடந்ததா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இவற்றிற்கு மத்தியில் ஏற்பட்ட ஒரு தேர்தலின் போதும், சட்டசபை காலாவதி முடிவதற்கு ‘மூன்று நாள்’ இருக்கையில் காலம் சென்ற ‘தேசபக்த சிகாமணி’ மோதிலால் நேரு உள்பட, பல ‘தேசபக்த சீஷர்கள்’ பின்பற்றுபவர்கள் உள்பட அநேகர் சட்டசபையின் மீது ‘கோபித்து’ ராஜினாமா கொடுத்து விட்டுவந்து , மறுபடியும் மூன்று நாளில் அடுத்த காலாவதி தேர்தலுக்கு நின்றது முதலிய காரியங்களையும் யோசித்துப்பாருங்கள்.

இன்று தென் இந்தியாவிலுள்ள காங்கிரஸ் ஸ்தாபனங்களின் தலைவர் கள் எல்லோருமே 100க்கு 90 பேர்களுக்கு மேலாகவே அந்த கூட்டத் தினரும், அதில் நேரில் கலந்து இருந்தவர்களும் பார்ப்பனர்களுமாகவே இருக்கின்றார்களா இல்லையா என்பதையும், மற்ற பொது ‘தேசீய’ ஸ்தாபனங்கள், கூட்டங்கள் ஆகியவைகளின் தலைவர்கள் காரியதரிசிகள் ஆகியவர்களும் அனேகமாய் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

மற்றும் காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காங்கிரஸ் காரர்கள் என்கின்ற முறையில் வட்டமேஜை மகாநாட்டுக்குப் போயிருக்கும் பிரதிநிதிகளும் பார்ப்பனர்களா? அல்லவா?என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

கடைசியாக சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவர்களும் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப்பாருங்கள். இவைகளை எடுத்துக்காட்டுவது வாசகர்களுக்கு ஒரு சமயம் பார்ப்பனத் துவேஷமாய் காணப்பட்டாலும் படலாம். என்றாலும் தொண்டர்கள் என்பவர்கள் மாத்திரம் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனரல் லாதார்களா? அல்லவா? என்பதையும், அத்தொண்டர்களின் ஜீவனம் பெரிதும் அக்காங்கிரஸ் சம்மந்தத்தின் பேரினாலேயே இருக்கின்றதா? இல்லையா? என்பதையும், இத்தொண்டர்களுக்கு காங்கிரசினால் ஜீவனம் இல்லாவிட்டால் இவர்கள் அங்கு இருப்பார்களா? என்பதையும், இவர்கள் காங்கிரசின் மூலம் ஜீவிப்பதைத் தவிர வேறு வழியில் பாடுபட்டுப் பிழைக்க 100க்கு 10 பேராலாவது முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

மற்றும் ஒரு விஷயத்தையும் யோசித்துப்பார்க்க விரும்புகின்றோம். அதென்னவென்றால்:-

பார்ப்பனர்களின் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்களே காங்கிரசில் தலைவர்களாயிருக்கவும், பார்ப்பனரல்லாதார்களில் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரி கள் முதலியவர்கள் அதுபோல் காங்கிரசில் சேராமலிருக்கவும் காரணம் என்ன? பார்ப்பனரல்லாத வகுப்போ, ஜாதியோ, அதாவது வயிற்றுப் பிழைப்பை காங்கிரசின் மூலம் நடத்துகின்றவர்கள் தவிர மற்ற பார்ப்பன ரல்லாதார் சமூகமே ‘தேசத்துரோகிகளா’? அல்லது ‘குலாம்களா’? அல்லது ‘நக்கிப்பொறுக்கிகளா?’ என்பதை யோசித்துப் பாருங்கள்.

திருவாளர்கள் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, சி.வி.வெங்கட் ரமணய்யங்கார், பாஷ்யம்அய்யங்கார், ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன், மகாலிங்கய்யர் ஆகியவர்களுக்கு இருக்கும் ‘சுயராஜ்ய தாகம்’ ‘சமதர்ம உணர்ச்சி’ முதலியவைகள் திருவாளர்கள் வெரிவாட செட்டியார், இரத்தின சபாபதி முதலியார், டாக்டர் நடேச முதலியார், தம்மண்ண செட்டியார், குமார சாமி செட்டியார், காயாரோகணம் பிள்ளை முதலியவர்களுக்கு ஏன் இல்லை. முற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் தான் யோக்கியர்கள், நாணையக்காரர்கள், தேசபக்தர்கள், தியாகமூர்த்திகள் ஆகியவர்களா? பிற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் அந்தப்படி அல்லாதவர்களா? அல்லது தேசத்தின் பேரால் பணம் சம்பாதித்து அதனால் சாப்பிட்டுக் கொண்டிருப் பவர்களா?

இவைகள் ஒருபுறம் இருந்தாலும், இன்று தமிழ் நாட்டு காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவரிடமாவது, காங்கிரஸ் கமிட்டித் தலைவரிடமாவது இன்று காங்கிரசில் வேலை செய்யும் காங்கிரஸ் தொண்டர்கள் அல்லது பக்தர்கள் என்பவர்களில் 100க்கு 5 பேருக்காவது நம்பிக்கையோ, அல்லது மரியாதையோ இருக்கின்றதா? என்று காங்கிரஸ் பக்தர்களையும் தொண்டர் களையும் கேட்டுப்பாருங்கள். பார்ப்பனரல்லாத தொண்டர்கள் ஒவ்வொரு வரும் அவர்களிடம் அடியோடு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்லு வார்கள், சொல்லுகிறார்கள்.

அப்படி யிருக்க அவர்களை தலைவர்களாக்கியதும், தலைவர்க ளாகக் கொண்டாடுவதும், அவர்களது தலைமையில் தொண்டாற்றுவதுமான காரியம், வெறும் - பரிசுத்தமான வயிற்றுப் பிழைப்பு நாடகமாக இராமல், கடுகளவாவது நாணையமோ, சுயமரியாதையோ உடைய தேசியமாகவோ, தேசபக்தியாகவோ இருக்க முடியுமா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள்.

சைவ மடங்களில் வெட்டிச் சோறு இல்லாவிட்டால் அங்கு எப்படி நூற்றுக்கணக்கான மொட்டைப்பண்டாரங்கள் இருக்கமுடியாதோ அது போலவே, காங்கிரஸ் பெயரைச் சொல்லி வயிறுவளர்க்க இடம் இல்லா விட்டால் இன்று இத்தனை தேச பக்தர்கள் ,தேசிய வீரர்கள் , தொண்டர்கள், காங்கிரசில் இருந்து ‘தொண்டாற்ற’ முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இன்று காங்கிரசில் வயிறு வளர்ப்பவர்களில் 100க்கு 90 பேர் இதில் வந்து சேர்வதற்கு முன் எங்காவது நாணையமான, கௌரவ மான தொழிலில் ஈடுபட்டு தாராள முறையில் சுதாவில் வயிறு வளர்த்தார்களா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

எங்கோ இரண்டு ஒன்று மூளையிலுள்ள கோளாறாலோ வேறு காரியங்களை எதிர்பார்த்தோ இந்த கூட்டத்தில் சேர்ந்திருப்பதாலேயே அவர்களை உதாரணமாகக் கொண்டு வராதீர்கள். அதிகம் பெயர்களின் யோக்கியதைகளையே கவனித்துப் பார்க்க விரும்புகிறோம்.

இவற்றையெல்லாம் ‘குடி அரசு’ ஆரம்பித்த காலத்திலேயே பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாலும் மேடை மேடையாய் கூப்பாடு போட்டிருந் தாலும் இப்போதும் அதை ஏன் திருப்புகிறோம் என்றால், உண்டியல் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு மேடையேறி கள்ளு, சாராயக்கடைகளில் குடி காரர்களும், கீழ்மக்களும், வெறிகாரர்களும் பேசுவதுபோல் வாயில் வந்த படி மற்றவர்களைப் பேசும் இழிதன்மையின் யோக்கியதையையும் காரணங்களையும் மக்களுக்கு எடுத்துக்காட்டவே நாம் எழுத நேரிடு கின்றது.

காங்கிரஸ் தொண்டர்கள் என்பவர்கள், காந்தி பக்தர்கள் என்பவர்கள், அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடித்தவர்கள் என்பவர்கள் வெளிப்படை யாய் தேர்தல் கூலிகளான பிறகும், கூலிக்கு மற்றவர்களை வையத் தொடங் கிய பிறகு அவர்களது யோக்கியதையை பொது ஜனங்களுக்கு வெளிப் படுத்தாமல் இருக்க முடியவில்லை.

காந்தியைக் கும்பிடுவதிலோ, அவர்மீது புகழ் மாலை பாடி ஜீவனம் செய்வதிலோ நமக்கு பொறாமையில்லை. கல்லைக் கும்பிட்டு அதன்மீது புகழ்மாலை பாடி அதன் பெயரை சொல்லிக் கொண்டு வயிறுவளர்க்கும், முட்டாள்தனத்தை விட, இதை நாம் அதிகமாக குற்றம் சொல்லவரவில்லை. ஆனால், அதற்காக தேர்தலில் ஏன் பிரவேசிக்க வேண்டும் என்று தான் யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

ஏற்கனவே இருக்கின்றவர்களை விட இவர்கள் தரகர்களாயிருந்து வேலை செய்வதன் மூலம் கொண்டு வந்து நிறுத்தப்படுபவர்கள் எந்த விதத்தில் யோக்கியர்கள், நாணையமானவர்கள் என்று சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். தொண்டர்களுக்கு கூலி கொடுத்து, அல்லது கூலி கிடைக்கச் செய்து மற்றவர்களை வாய்கொண்டமட்டும் வையச் சொல்லு கின்றார்கள் என்பதைத்தவிர வேறு என்ன அதிகமான யோக்கியதை இருக்கின்றவர்களுக்கு இவர்கள் கங்காணிகளாக இருக்கின்றார்கள்?

எந்த காங்கிரஸ்-கதர்-மறியல் தொண்டருக்கும் தேர்தலைப்பற்றி பேசவும், பார்ப்பனரல்லாத பிரமுகர்களைப்பற்றி வசைபாடவும் என்ன அவசியம் இருக்கின்றது? சர்க்காராரை வைதுவிட்டு வயிறு வளர்ப்பதில் அக்கரை இல்லை. மற்றபடி தேர்தல் ஸ்தாபனங்களில் இருக்கும் நபர்களைப் பற்றி பேசவேண்டிய காரியம் எதற்கு? அதுவும் பார்ப்பனர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு எதிர் அபேக்ஷகர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு பேசுவது என்றால் யார் சகிப்பார்கள்? அந்தப்படி எதற்காக சகித்துக் கொண்டு இந்த இழிவான வேலையில் ஒரு கூட்டம் பிழைப்பதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியவில்லை.

மனிதர்களுடைய சொந்த குணங்களின் உண்மையை இருபுறமும் சொல்லுவதைப் பற்றி நமக்கு சங்கடம் இல்லை. ஆனால் அவர்கள் அந்தக் கக்ஷிக்காரர் இந்தக் கக்ஷிக்காரர் என்றும் காங்கிரஸ் கக்ஷிக்காரர் அல்ல என்றும் சொல்லுவதனால் அதில் நாணையம் உண்டா என்றும் பாருங்கள்.

காங்கிரஸ் கக்ஷிக்காரர் என்றால் என்ன அருத்தம்? ‘தொண்டர் களுக்கு சோற்றுக்கு கொடுக்கின்றவர்’ என்பதைத் தவிர வேறு என்ன வித மான நல்ல அபூர்வ- பொது நன்மைக்கு ஏற்ற நாணையமான குணம் இருந் தது - இருக்கின்றது-இருக்கும் என்று சொல்ல முடியும்? அளவுக்கு மிஞ்சி னால் எதுவும் கெடுதி என்பதை உணராமல் மக்கள் எல்லோரையும் மூடர்கள் என்று எண்ணிக்கொண்டு வேலை செய்வது என்பது என்றைக்கானாலும் ஒரு நாளைக்கு வெளியாக்கப்படவேண்டியதாய் தான் முடிகிறது.

ஆதலால் பொது ஜனங்கள் பார்ப்பன தந்திரத்தைக் கண்டும், பார்ப்பனக் கூலிகளின் நாடகத்தைக் கண்டும் ஏமாந்துபோக கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

நிற்க பல ‘தேசபக்தர்கள்’ தாங்கள் ஜெயிலுக்குப் போய் விட்டு வந்ததை பிரமாதமாகப் பேசி மக்களை ஏய்க்கின்றார்களாம். அனேகருக்கு வீட்டுச்சாப்பாட்டை விட இப்போதைய ஜெயில் சாப்பாடு நல்ல சாப்பாடு என்பதையும்,வீட்டிலிருப்பதை விட அங்கு சௌக்கியம் அதிகம் என்ப தையும் யாவரும் அறியாமல் இல்லை. இதற்கு மற்றொரு உதாரணமாக 5.11.31ந் தேதியின் ‘இந்தியா’ வாரப்பத்திரிக்கையில் உண்மையில் நடந்ததாக எடுத்துக்காட்டியிருக்கும் ஒரு விஷயத்தை குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘வேலையில்லா திண்டாட்டத்துக்கு பரிகாரம்’ என்ற தலைப்பின் கீழ்.

‘ஒரு அதிகாரி ஒருவனுக்கு 12 மாதம் தண்டனை விதித்தார். அதற்கு எதிரி பிரபுவே உமக்கு வந்தனம். எனது கஷ்டத்தை கொஞ்ச காலத்திற்குத் தீர்த்து வைத்தீர்கள். என்னைப்போல் வேலையில்லா மல் திண்டாடும் ஒவ்வொருவரும் இதை அடைவது நலம் என்று சொல்லி அதாவது (ஒரு வருஷத்திற்காவது தனக்கு சாப்பாட்டிற்கு வழியேற்றப்பட்டதே என்று) சந்தோஷப்பட்டான்

என்பதாகும்.

இந்தப்படி விஷயங்களைப் பச்சையாய் எடுத்துச் சொல்லுவதில் சிலருக்கு சங்கடம் இருக்கலாம். உண்மையாய், யோக்கியமாய் வேலை செய்கின்ற தொண்டர்களைப்பற்றி நாம் யாதொன்றும் கற்பிக்க வரவில்லை. அப்படிக்கில்லாமல் மேல் கண்டபடியெல்லாம் பேசுவதும், உண்மைக்கு விரோதமாக துவேஷபுத்தியுடன் சுயநலத்துக்கு விஷமப் பிரசாரம் செய்வதும், மற்றும் ஒருவருக்கொருவர் உள்ள சொந்த மனஸ்தாபங்களில் புகுந்து ஒருவரிடம் கூலி வாங்கி மற்றவர்களை வைய உபயோகித்துக் கொள்வதுமான ‘தேச சேவை’யைக் கண்டிக்காமல் இருப்பது பயங்காளித் தனமாகும் என்பதோடு, ஒழுங்குக்கும் சமாதானத்திற்கும் பங்கமேற்படுத்து வதுமாகும் என்றே வெளிப்படுத்துகிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை சொல்லி இதை முடிக்கின்றோம். அதா வது:- இந்தமாதிரி ‘தேசீயத்தொண்டர்’களைச் சுவாதீனம் செய்து, அவர் களை ஏவி விட்டு, தங்கள் பகைமைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் காரியம் செய்கின்றவர்களுக்கு இன்று சற்று சந்தோஷமா யிருப்பதாகக் காணப்படலாமே ஒழிய, நாளைக்கு இதே தொண்டர்களை சற்று அதிகக்கூலி கொடுத்து வாங்கி, இவர்கள் மீதே உசுப்படுத்திவிடுவது என்பது பிரமாதமான காரியம் அல்லவென்பதை நினைவிலிருத்தும்படி தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

             -------------தந்தைபெரியார் -”குடி அரசு” - தலையங்கம் - 15.11.1931

6 comments:

தமிழ் ஓவியா said...

சம்பளம்

மனைவிக்குக் கணவன் சம்பளம் கொடுக்க வகை செய்யும் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது என்ற தகவல் கசிந்ததாலும் கசிந்தது; வழக்கம் போல பார்ப் பனர்கள் தங்கள் கந் தாயத்தைத் தொடங்கி விட்டனர்; அதிலும் குறிப்பாக இதுபோன்ற பிரச்சினைகளில் திரு வாளர் சோ ராமசாமி அய்யர்வாளின்வால் சும்மா இருக்காது தாவு தாவு என்று தாவிக் குதிக்க ஆரம்பித்து விட்டது.

இந்தச் சர்ச்சை மக்கள் மத்தியில் செல் லட்டும் விவாதப் புயல் கள் வீசட்டும் - அதன் பின் இறுதி முடிவு எட்டப்படட்டும்!

அதே நேரத்தில் பெண்களைப் பார்த்து நீ பொட்டச்சி, வெட்டி செருக்கி தானே? சம் பாதிச்சுப் போடுபவன் ஆண் மகன் நான் தானே - நான் கொண்டு வந்து கொடுத்தா தானே நீ வடிச்சிக் கொட்ட முடியும்? என்று கேள்வி கேட்கும் ஆண்களைப்பற்றி எப்பொழுதாவது இந்த ஆண் திருமகன்கள் ஒரே ஒரு வரி எழுதியதுண்டா?

பெண் என்றால் சம்பளம் வாங்காத வேலைக்காரி என்ற நினைப்புதானே பெரும் பாலான ஆண்களிடம்?

ஒரு பைசா என்றா லும் கணவன் கையை எதிர்பார்த்துதான் தவம் இருக்க வேண் டும் என்ற நிலைப்பாடு தானே மனைவிமார் களுக்கு?

பெண் சம்பாதிப்பவ ராக இருந்தால் பிரச் சினை இல்லை; (அதி லும்கூட மாத சம் பளத்தை அப்படியே கணவனிடம் கொடுத் தாக வேண்டும் என்கிற கறார் பேர்வழிகளும் உண்டே!)

இந்த வார துக்ளக் கில் (26.9.2012) இந்தச் சட்டம் பற்றி வழக்கம் போல தாறுமாறாக எழு தியதுடன் கடைசியாக முடிக்கும் பொழுது.. இப்படி எழுதுகிறது.

மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா மாதிரிதான். அது நிறைவேறினதும், இதுவும் நிறைவேறி டும் என்று மங்கலம் பாடியுள்ளது.

அப்படியென்றால் இந்தப் பிரச்சினையை யும் அந்தக் கண் ணோட்டத்தோடுதான் பகுத்தறிவுவாதிகளிடம் பார்க்க வேண்டும்.

- மயிலாடன் 23-9-2012

தமிழ் ஓவியா said...

திருச்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நிறுவனர் நாள் விழா அறிவியல் கண்காட்சி, நடமாடும் புற்றுநோய் கண்டுபிடிப்பு வாகனம் நடமாடும் கணினி மய்ய வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது


தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் புற்றுநோயை கண்டுபிடிக்கும் நடமாடும் வாகனத்தை சென்னை மருத்துவர் எஸ்.ஜெகதீசு சந்திரபோஸ் திறந்து வைத்தார் (திருச்சி, 23.9.2012).

திருச்சி, செப்.23 எல்லோருக்கும் எல்லா மும் என்ற தந்தை பெரி யாரின் உன்னத கொள் கையை செயலாக்கி வரும் பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா வும், மற்றும் திருச்சி பெரியார் கல்வி நிறுவ னங்களின் நிறுவனர் நாள் விழா இன்று (23.9.2012) காலை 10.30 மணியள வில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளா கத்தில் நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சி

முதல்நிகழ்ச்சியாக பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக மாணவர் களால் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட் சியை பெங்களூரு இந் திய அறிவியல் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் இ.அருணன் தொடங்கி வைத்தார், தமிழர் தலை வர் கி.வீரமணி, மருத் துவர் ஜெகதீஸ் சந்திர போஸ், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப குழுமம் தலைவர் ப.குபேரன் ஆகியோர் அறிவியல் கண்காட் சியை பார்வையிட்டனர்.

நடமாடும் புற்று நோய் கண்டுபிடிப்பு வாகனம்

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற் படும் வகையில் நடமா டும் புற்றுநோய் கண்டு பிடிப்பு வாகனத்தை சென்னையை சேர்ந்த மருத்துவர் எஸ்.ஜெக தீஸ் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடமாடும் கணினி மய்ய வாகனத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப குழுமம் தலைவர் ப.குபேரன் தொடங்கி வைத்தார்.தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடமாடும் கணினி மய்ய வாகனத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப குழும தலைவர் ப.குபேரன் திறந்து வைத்தார் (திருச்சி, 23.9.2012).

அதைத் தொடர்ந்து கலைவாணர் என். எஸ்.கே. அரங்கத்தில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் வரவேற்புரையாற்றிட நிகழ்ச்சி தொடங்கியது. இந் நிகழ்ச்சியில் பேராசிரி யர் அருணன், டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், ப.குபேரன் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் தலைமை உரையாற் றினார்.பெரியார் அறிவியல் கண்காட்சியை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இ.அருணன் திறந்து வைத்தார் (திருச்சி, 23.9.2012).

அவர் பேசுகையில்: பெரியார் மாபெரும் மக்கள் தலைவர் இந்த நிறுவனம் மக்கள் நிறு வனம். பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் மிகச்சிறப் பாக நடைபெறுவதற்கு காரணம் மக்களிடம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என தந்தை பெரி யார் அவர்கள் பெற்றது தான். கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் மனிதனை நினை என்று சொன் னார்கள். தந்தை பெரியாரின் தொண்டு தான் எங் களுக்கு முதல் பலம். சுயமரியாதை இயக்கம் என்றால் வெறும் கட வுள் மறுப்பு மட்டுமல்ல; அதைத் தாண்டி மனித நேயத்தை சொல்லக் கூடியது.

அந்த மனித நேய அடிப்படையில் மக்களுக்கு தேவையான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்த இந்த நடமாடும் வாகனம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த வாக னத்தை நல்ல முறையில் கிராமங்கள் தோறும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த இயக் கத்திற்கும், சுயமரி யாதை பிரச்சார நிறுவ னத்திற்கும் இந்த இயக் கத்தால் வெளியேற்றப் பட்டவர்களாலே பல தொல்லைகள், இடை யூறுகள் ஏற்பட்டன.

அந்த இடையூறுகளை யும் தகர்த்தெறிந்து இந்நிறுவனம் சிறப்பாக நடைபெறுவதற்கு கார ணம் பலரும் உடலுதவி, பொருளுதவி செய்த துடன் மேலும் அறப் பணி தொண்டர்களாக பணியாற்றி வருவது தான். இந்த இயக்கத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் பலருக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டு, இசை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன.

பாராட்டு

பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவ னத்தில் சிறப்பாக பணி புரியும் பணியாளர் களை குடும்பத்துடன் அழைத்து பாராட்டப் பட்டனர். நிறைவாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநூதல் செல்வி நன்றியுரையாற் றினார்.

இவ்விழாவில் தலைமை கழக நிரு வாகிகள் உள்பட ஏராள மான கழகத் தோழர் களும், பொறுப்பாளர் களும், கல்வி நிறுவ னத்தைச் சேர்ந்த ஆசிரி யர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், கலந்து கொண்டனர்.23-9-2012

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவருக்கு இதர பிரிவில் (ஓ.சி.) இடம் ஒதுக்குவதில் சட்ட மீறல் இல்லை உயர்நீதிமன்றம் உத்தரவுசென்னை, செப். 23- இதர பிரிவு (ஓ.சி) இடங் களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடம் ஒதுக்குவதில் எந்த விதி மீறலும் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஜெனி தா ஜெப ரூபா தாக்கல் செய்துள்ள மனு விவரம் வருமாறு:

நான் பிற்படுத்தப் பட்ட வகுப்பை சேர்ந் தவள். 2012 13 கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பிற்கான எனது கட் ஆப் மார்க் 197.25. கலந்தாய்வில் நான் இதர வகுப்பு பிரிவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள் ளேன். ஆனால், என்னை பிற்படுத்தப்பட்ட பிரிவு இட ஒதுக்கீட்டில் கணக்கிட்டுள்ளனர். அரசு மருத்துவ கல்லூரி யில் சேர்வதற்காக எனது பெயர் பரிசீலிக் கப்படவில்லை. இதனால், எனக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. எனவே, எனக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் தருமாறு உத்தர விட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி பால்வசந்த குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மருத்துவப் படிப்பில் இதர பிரி வினருக்கு 31 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. 565 பேர் மதிப் பெண் கள் தகுதி அடிப்படை யிலும், பிற்படுத்தப்பட் டோர் பிரிவில் ஓபன் பிரிவில் 358 பேரும், பொதுப்பிரிவில் 483 பேரும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட பிரிவில் மொத்தம் 841 பேர் கட் ஆப் மதிப் பெண் 198.50 அடிப் படையில் தேர்வு செய் யப்பட்டுள்ளனர். மனுதாரர் பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் 927ஆவது இடத்தில் உள்ளார். அவருக்கு அரசு மருத்துவ கல்லூரி யில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை. தேர்வு நடத்தப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்க வில்லை என்று வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, பிற்படுத் தப்பட்ட பிரிவை சேர்ந் தவருக்கு இதர பிரிவில் இடம் ஒதுக்குவதில் எந்த சட்ட மீறலும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்ணை விட குறைந்த மதிப் பெண் பெற்ற எந்த மாணவரும் அரசு மருத்துவ கல்லூரியில் சேரவில்லை. எனவே, இதில் முறைகேடு எது வும் நடக்கவில்லை. அதனால், இந்த மனு தள் ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். 23-9-2012

தமிழ் ஓவியா said...

மணம் வீசும் மலர் தந்தை பெரியார் 134ஆம் பிறந்த நாள் மலர்- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்

தந்தை பெரியார் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் - விடுதலையின் 50 ஆவது ஆண்டு மலர். அதாவது ஆசிரியர் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்ற 50 ஆவது ஆண்டில் வெளிவந்த மலர் என்றால் பெருமையல்ல. விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின் 1962 ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் பிறந்த நாளுக்கு மலர் வெளியிடத் தொடங்கி 50 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவரும் மலர் என்று குறிப்பிட்டால்தான் பெருமை. ஆசிரியர் தமிழர் தலைவருக்குப் பெருமை.

நினைத்தால் மலைப்பாயிருக்கிறது. வியப்பாயிருக்கிறது. ஏன்? ஆச்சரியமாகக் கூட இருக்கிறது. ஏனென்றால் 50 ஆண்டுகளின் தொடர்ச்சி.

அக்ரஹாரத்து ஏடுகள் - ஆனந்த விகடன், கல்வி என்று - அவை கூடத் தொடர்ந்து மலர் வெளியிட வாய்ப்புகள், வசதிகள், அவாள் வாசகர்கள் வரவேற்பு இருந்தும் ஓய்ந்து போய்விட்டன.

50 ஆண்டு விடுதலை மலர் ஆண்டுக்கு ஆண்டு புதுமைக்கு மாறியிருக்கிறது. நவீனத்திற்கு இடமளிக்கிறது என்பது மட்டுமல்ல அதன் சிறப்பு. தந்தை பெரியார் பிறந்து, வளர்ந்து, விடுதலை ஏட்டைத் தொடங்கி, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த, அவ்வியக்கத்தின் இரண் டாவது மாநில மாநாட்டைத் தோற்றுவித்த ஈரோட்டு மண்ணில் - அன்னை நாகம்மையார் கள்ளுக்கடை மறியலைத் தலைமையேற்றுக் கண்ணம்மையுடன் போராடித் தேசிய இயக்கத்திற்கு உயிரூட்டிய மண்ணில் வெளியிடப்பட்டது.

1972 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் வாழ்ந்த போது ஈரோட்டில் செப்டம்பர் 17 இல் அவருடைய பிறந்த நாள் விழாவைச் சீரோடும் சிறப்போடும் நடத்திய தமிழர் தலைவர் 40 ஆண்டுகளுக்குப் பின் அதை விடச் சிறப்புடன் நடத்திக் காட்டிய பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் நடைபெற்ற மலர் வெளியீடு இது.

பெரும்பாலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைத் தமிழர் தலைவர் சென்னையிலேயே இருந்து கலந்து கொண்டு ஆண்டு தோறும் சீரோடும் சிறப்போடும் நடத்துவதும் வழக்கம். விதிவிலக்காக நெய்வேலியில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் நன்மங்கலம் நடைபெற்றது 2011 ல் திருவெறும்பூரில் பெரியார் சிலை திறப்பு விழாவாக ஆசிரியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பிறந்த நாள் விழா ஆங்காங்கே சிறப்பாக நடைபெறும்.

நெய்வேலி என்ற உடன் கழக இரட்டையர்கள் நெய்வேலி ஜெயராமன், நெய்வேலி ஞானசேகரனிடம் இது குறித்து விசாரித்தோம். சிதம்பரத்தில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 1993 ல் நடைபெற்றபோது, அய்யா பிறந்தநாள் விழாவை நெய்வேலியில் நடத்த வேண்டும் என்று ஆசிரியரிடம் தான் நெய்வேலி ஞானசேகரன் கேட்டிருக்கிறார்.

ஆசிரியர் அப்போது கல்லூரி உருவாக்கப் பணியில், கல்விக் கண் திறக்கும் பணியில், ஈடுபட்டிருக்கிறார். எனவே ஒரு லட்ச ரூபாய் பெரியார், மணியம்மை சிறுதுளி பெருவெள்ளம் எனும் பெயரில் திரட்டிய நிதிக்குக் கல்லூரி நிதி திரட்டித் தந்தால் நெய்வேலியில் அய்யா பிறந்த நாள் விழாவைத் தாம் வந்து நடத்தித் தரலாம் என்று யோசனை சொல்லி, மறு வார்த்தை சொல்லாமல் கொடுத்து விடுகிறோம் என்று உடனே சொல்லியிருக்கிறார். ஆசிரியர், நெய்வேலி ஜெயராமனிடம் அவர் தன் உடன்பிறப்பு கேட்டது தெரியாமல், நெய்வேலியில் அய்யா பிறந்தநாள் விழாவை ஆசிரியர் வந்து நடத்திக் கொடுக்க வேண்டுமென்று கேட்க, அவரிடமும் சிறுதுளி பெரு வெள்ளம் திட்டத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் கோரிக்கையை வைத்திருக்கிறார் நம் தமிழர் தலைவர்.

நெய்வேலி ஜெயராமனோ, அய்யா, ஒரு இலட்ச ரூபாயா? எப்படி அய்யா? என்று தயங்க, உங்கள் தம்பி ஞான சேகரன் ஒரு இலட்ச ரூபாய் சரி என்று சொல்லி விட்டார் என்று சொல்ல, அப்படியா, தம்பி சொல்லி விட்டால் சரி என்று சொல்லி நெய்வேலியில் கல்லூரி நிதித் திரட்டிக் கொடுத்து 17-9-1993 ல் சீரோடு நடத்தி முடித்த தமிழர் தலைவர் இதே ஆண்டு 17-9-2012 இல் ஈரோட்டில் அய்யா பிறந்தநாள் விழாவைக் கொண் டாடும் முன் வந்தது பெருமை என்றால் அந்தப் பிறந்தநாள் விழாவில் பல அற்புத நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

விடுதலை அறிவியலில் அடுத்த கட்ட வளர்ச்சியான அய்-பேடு, அய்-போன் என்று ஈரோட்டில் எட்டியது.தமிழ் ஓவியா said...

குடிஅரசு தொகுதி 41, 42 என்று வெளியாயிற்று. இவ்விழாவில் திராவிடர் கழகக் கொடியை உருவாக்கிய சண்முக வேலாயுதம் படத்தினை ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்த படத் திறப்பு விழா, பெரியவர் பொத்தனூர் சண்முகம் திறந்து வைத்த சுயமரியாதை இயக்கச் சுடரொளிகள் படத் திறப்பு விழா ஆகியன நடைபெற்றன.

இவ்விழாவிற்கு மகுடமாக அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் இரண்டு. ஈரோட்டு மண்ணில் வாழ்ந்து மறைந்த திராவிட இயக்க வீராங்கனை, தேசிய இயக்க முன்னோடி அன்னை நாகம்மையார் வாழ்க்கை வரலாறு பேரா சிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் எழுதிய தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

அடுத்துக் குறிப்பிடத்தக்கதுதான் தந்தை பெரியார் 134 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் வெளியீடு.

மலரின் முன் அட்டையிலிருந்து கடைசி வரை பகுத்தறிவு மணம், சுயமரி யாதை இயக்க மணம், சீர்திருத்த மணம் சிந்தனைச் சிறப்பு மணம், அரிய பல எழுத்தோவியங்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் எழுத்துக்கும் மணம் உண்டு என்று ஏடு பேசுகிறது.

மனந்திறந்த பாராட்டு

மலரின் பெருமையை வாய்விட்டு நம் ஆசிரியர் பெருமகனாரே பாராட்டி விட்டார். நன்கு உழைத்து கடுமையாக உருவாக்கி இருக்கிறார்கள் வாய்விட்டு, மனம் திறந்து பாராட்டி நாம் கேட்ட வார்த்தைகள். ஈரோட்டில்மலர் மலர்ந்த உடனேயே மடமடவென விற்றுத் தீர்ந்ததே ஒரு மாண்புறு காட்சி. பின்னால் வந்தவர்களுக்கு மலர் தீர்ந்துவிட்டது என்ற பதிவைத் தயங்கித் தயங்கித்தான் சொன்னார் மலர் விற்பனையாளர் பூமிநாதன். சென்னையிலிருந்து மீண்டும் மலர் வந்து சேர வேண்டிய நிலை.

பகுத்தறிவுப் பகலவன் நம் தந்தை வாய்ச்சொல் வீரரல்லர், புரட்சிக்காரர், போராட்டவாதி புரட்சி மலர உயிரையும் கொடுக்க முன்வந்தவர் என்று இதுவரை வெளிவராத செய்தியுடன் விரிகிறது. பெரியாரின் இந்தச் செய்தி பார்ப்பனத் தணிக்கையாளர்கள் 8-7-1976 ல் தணிக்கை என்ற பெயரில் வெட்டி விட்ட பகுதி. இது ஒன்றுக்காவது திராவிட இயக்க வீரர்கள் மலர் வாங்கிப் படிக்க வேண்டும். இதைத் தேடிப் பிடித்து வெளியிட்ட விடுதலை பொறுப்பாசிரியர் கவிஞரைப் பாராட்ட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

சாதி வித்தியாசமோ உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற பத்திரிகை களைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அதைப் பறிமுதல் செய்து விடவேண்டும். உயர்வு தாழ்வு வித்தியாசம் முதலி யவை கொண்ட மடாதிபதிகளை யெல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொது ஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதி களைச் தீவாந்திரத்திற்கு அனுப்பிட வேண்டும். சுவாமிகளுக்குள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்றுப் படிப்பில்லாத வர்களுக்குப் படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்குத் தொழிலும் ஜீவனமும் ஏற்படுத்த உபயோகப் படுத்திவிட வேண்டும்.

இதுபோல், காரியங்கள் செய்யத் தக்க உரம் கொண்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டு வரவேண்டும். அப்பேர்ப்பட்ட சட்ட வரலாற்றில், ஆட்சிக்குட்பட்ட நாடுகள்தான் இன்று சுயமரியாதை யையும் சீர்திருத்தமும் பெற்று விளங்குகின்றன.

அப்பேர்ப்பட்ட வீர ஆட்சிக்கு நாட் டைக் கொண்டு வரவேண்டுமானால் அநேக சீர்திருத்தக்காரர்கள் உயிர் துறக்கத் தயாராக இருந்து கொண்டு பாமர மக்களிடையில் உண்மையைப் பரப்ப முன்வரவேண்டும்

- தந்தை பெரியார்

அடுத்து 13-12-1969 ல் மதுரையில் நடைபெற்ற நகராட்சி வரவேற்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு பகுதியைப் படிக்கையில் நமக்கு மெய் சிலிர்க்கிறது. 24-12-1969 விடுதலையை எடுத்து முழுப் பேச்சையும் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. எனவே அதில் ஒரு துளியை இங்கே சுட்டுவோம்.

புரட்சிகரமான கருத்து என்று சொல்லும்படியான பல மாறுதல் கருத்தைச் சொல்லி வருகிறேன். இது போன்று பெரும்பாலான மிகப் பெரும்பாலான மக்களின் கருத்து களைச் சொல்கிறவர்களை, அதன் படி நடக்கின்றவர்களை மக்கள் எதிர்ப்பது மட்டுமல்ல, கொலை செய்வது இயற்கை. ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரும்பாலான மக்களின் கருத் துக்கு, நடத்தைக்கு மாறாக இருந்து வருகிறேன் என்றாலும், இதுவரை என்னை யாரும் கொலை செய்ய வில்லை என்பதோடு, இந்த நகர மக்கள் எனக்கு வரவேற்பளிக் கிறார்கள் என்றால் மக்கள் அவ் வளவு பண்பாடு பெற்றிருக் கிறார்கள் என்பது தவிர இதனால் எனக்கொன்றும் பெருமை இல்லை.

யேசுநாதரை, நாத்திகன் என்று சொல்லி அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். முகமது நபியை நாத்திகன் என்று சொல்லி ஓட ஓட அடித்து விரட்டினார்கள். அது போன்றே பவுத்தர்கள், சமணர்கள் எல்லாம் கொல்லப்பட்டிருக் கிறார்கள். சமூக சீர்திருத்தம் செய்ய முற்பட்ட ஆப்ரகாம் லிங்னைச் சுட்டுக் கொன்றார்கள். கென்ன டியைச் சுட்டுக் கொன்றார்கள். நமது நாட்டில் ஒன்றும் பெரிய மாறுதல் செய்யவில்லை. கோவில் கள் எல்லாம் குச்சுக்காரி விடுதிகள். பார்ப்பனர் விலகிக்; கொண்டு மற்றவர் படிக்க இடம் கொடுக்க வேண்டும்.

காங்கிரசில் அயோக்கியர்கள் பெருகி விட்டார்கள். அதைக் கலைக்க வேண்டும் என்று சொன்ன தற்காகக் காந்தியை சுட்டுக் கொன்றார்கள்.

தொடரும் --23-9-2012