பூமியைப் பாயாகச் சுருட்டி இரண்யாட்சதன் கடலில் வீழ்ந்தான்; மகா விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்துக் கடலில் மூழ்கிப் பூமியை மீட்டான் என்று சொன்னால் சிறுவன் கூட சிலேட்டுப் பலகையால் அடிப்பான்.
என்றாலும் முடிந்தவரை பார்ப்போம் - கடவுளை எப்படியும் காப்பாற்றுவோம் என்று தினமணி வைத்திகள் புறப்பட்டு விட்டார்கள்.
கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக வேண்டும். அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இட மாகும் (விடுதலை 24.4.1967) என்றார் பெரியார்.
பார்ப்பான் பிராமணனாக திமிரோடு வாழ வேண்டும் என்றால் இந்தக் கடவுள் எண்ணம் கெட்டிப் பட்டாக வேண்டும்.
கோயிலுக்குள் கடவுள் இருக்கிறது என்றும், அந்தக் கடவுளோடு தொட்டுப்பழகும் கூடிக் குலவும் தனி உரிமை தங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்றும் பார்ப்பான் விடாப் பிடியாய்க் கட்டிக் கொண்டு அழுவதில் உள்ள ரகசியம் இதுதான்.
கடவுளை நேரில் கண்ட வர்கள் என்று தினமணி (14.10.2011) ஒரு பட்டியலை வெளியிடுகிறது.
கடவுள் பற்றிச் சொல்லும் போது கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று தானே இதுவரை சொல்லி வந்தார்கள். அப்படி இருக்கும்போது கடவுளைக் கண்ட வர்கள் என்று இராமகிருஷ் ணரையும், இராமலிங்க அடிகளாரையும், அரவிந்தரையும் எடுத்துக்காட்டுவானேன் தொடக்கமே மோசடியல்லவா!
திருவொற்றியூரில் குடி கொண்டுள்ள வடிவுடை அம்மனை இராமலிங்கனார் கண்டாராம். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பிற் காலத்தில் கடவுள் உருவம் உடையவர் என்பதெல்லாம் பிள்ளை விளையாட்டு என்று எப்படிக் கூறுவார் வடலூரார்.
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென் றால், அவைகளில் ஒன்றி லாவது குழுக் குறியின்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் செல்லாமல் மண்ணைப் போட்டு மறைந்து விட்டார்கள். அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் கைலாசபதி என்றும், வைகுண்டபதி என்றும், சத்தியலோகபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் - தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கிறார்கள் என்று பேருபதேசத்தில் உருவக் கட வுளைத் தோல் உரிக்கிறார் வடலூர் வள்ளலார் - அப்படிப்பட்டவர் திருவொற் றியூர் வடிவுடை அம்மனைக் கண்டவர் என்று தினமணி எழுதுவதற்குப் பித்தலாட்டப் பலமேயன்றி வேறு என்ன வாம்?
-------------------மயிலாடன் அவர்கள் 16-10-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
1 comments:
//திருவொற்றியூரில் குடி கொண்டுள்ள வடிவுடை அம்மனை இராமலிங்கனார் கண்டாராம்.//
இப்படி இராமலிங்க அடிகளார் கூறியதை நம்பும்பொழுது
யார்? கூறுவதையும் நம்பவேண்டும்?
(அவர் மட்டும் என்று இல்லை....யார் கூறுவதையும்)
கடவுளை நான் பார்த்தேன்! நான் பார்த்தேன்! என்று கூறுபவர் அனைவரையும் நம்பவேண்டும். (இதை சொல்றதா பெரிய விஷயம்?)
ஆனால், நடப்பில், அப்படி நம்புவதில்லை...அதற்குரிய காஸ்டியூம் (காவி, கமண்டல்ம், தண்டம், என அடையாளம்) போட்டு கொண்டு செல்பவர், சொல்பவர் எல்லோரையும் இம்மாதிரி பத்திரிகைகாரர்கள் தெரிந்தே விளம்பரப்படுத்துகின்றனர்...எதற்காக?
மதத்தை வளர்ப்பதற்காக?
அதை வைத்து அவர்கள் சார்ந்த (பார்ப்பன) சமூகம் பிழைப்பதற்காக?
இதை யார் வேண்டுமானாலும் கூறலாம்.
கடவுள் வந்து "அவர் கூறுவது பொய்" "உண்மையில் கடவுளை நான் தான் பார்த்தேன்" என்று இன்னொருவர் "கடவுள் எனக்கு மட்டும் தான் கூறினார் " என்று கூறினாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.
ஆக இது யாரை வைத்து பரப்பப்படுகிறது.
நம்பிக்கையுடையவர், நம்பிக்கையுடையவராக மக்களிடப் காட்டிக்கொள்பவர், அதற்குரிய அடையாளங்களை இட்டுக்கொள்பவர் என்ற வரிசையில் சொன்னால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மற்றபடி தினமணி நிருபருக்கோ, இந்த கருத்தை வலியுறுத்தபவருக்கோ இது உண்மையா? பொய்யா? என்று ஆராயக் கூடியவராக உள்ள ஒரு சிலருக்கோ இது ஒரு பொருட்டே அல்ல!
இது பொய்! இந்த செய்தியைப் போடக்கூடாது என்பது எல்லாம் தெரியும்?
மதத்தையும் மூடநம்பிக்கையும் வளர்க்க நினைப்பவர்கள்! பார்ப்பனர்கள்,! இது ஒன்றை விட்டால் இந்த மக்களை நாம் சமூகத்திற்கு (பார்ப்பன சமூகத்திற்கு) ஆதரவாக பார்ப்பனரல்லாதோரை அடிமைப்படுத்த, நம் கட்டுக்குள் கொண்டு வர வேறு வழியேயில்லை என்று நினைப்பவர்கள் எல்லாம்,. செயல்படுத்துவது.
இப்படி எல்லாவற்றையும் ஆராய்கின்ற மக்கள் பெருமளவில் இல்லாதவரை இந்த மாதிரி "பித்தலாட்ட வார்த்தைகள்" இந்த மாதிரி மூடநம்பிக்கைகளை வளர்க்க பயன்படும் என்ற ஒரே காரணத்திற்காக இம்மாதிரி செய்திகளை தெரிந்தும் பார்ப்பன பத்திரிகையாளர்கள் வெளியிடுவார்கள்.
உண்மையில் அவர்களுக்கும் காணாத கடவுள் மேல் எந்த பற்றும் இல்லை. இது எல்லோருக்கும் தெரியும்....
பத்திரிக்கை காரணுக்கு தெரியாதா? அதுவும் பார்ப்பன பத்திரிகை காரணுக்கு இதுபற்றியெல்லாம் தெரியாதா?
Post a Comment