Search This Blog

27.10.11

துக்ளக் சோ வின் சொத்தை வாதம்



கேள்வி: அரசு அலுவலகங்களில் செய்யப்படும் ஆயுத பூஜை போன்ற வழி பாடுகளை சிலர் எதிர்க்கிறார்களே?

பதில்: அரசு அலுவலகங்கள் பொது இடங்கள் என்பதால், அவற்றில் ஒரு மதத்தினருக்கு மட்டும் நம்பிக்கையுள்ள வழிபாடுகள் நடத்தப்படக்கூடாது. ஏனென்றால், நம் அரசு மதச்சார்பின்மைக் கொள்கையாகக் கொண்ட அரசு - என்ற அடிப்படையில் அரசு காரியாலயங்களில் ஆயுத பூஜை போன்றவை கூடாது என்கிறார்கள்.

சரி. தெருக்கள்கூட பொதுச் சொத்துதான். அது ஒரு மதத்தினருடைய சொத்து அல்ல; அரசுக்குச் சொந்தமானது. அதில் ஆயுத பூஜை போன்றவை நடத்தப் படுகின்றனவே, அது பரவாயில்லையா? ஸ்வாமி ஊர்வலங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவே? அப்போது தெருக்களின் பொதுத் தன்மை கெட்டுச் சீரழிந்து விடாதா? அது பரவாயில்லையா?

மதச் சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட அரசை நடத்துகிற அமைச் சர்கள், மந்திரிகளில் பலர் கோவிலுக்குச் செல்கிறார்கள்; சிலர் மசூதிக்குச் செல்கிறார்கள்; சிலர் சர்ச்சுக்கு செல்கிறார்கள். அதெல்லாம் பரவாயில்லையா? அவர்கள் எல்லாம் தனிப்பட்ட முறையில்தான் போகிறார்கள். அமைச்சர்களாகப் போகவில்லை என்றால், அந்த அமைச்சர் என்ற பதவியைக் கழற்றி வைத்துவிட்டா அங்கே செல்கிறார்கள்?

சரி, அதற்கு ஆட்சேபம் இல்லை என்றால், அரசு காரியாலயங்களில் ஆயுத பூஜை செய்பவர்கள், அரசின் சார்பாகவா அதைச் செய்கிறார்கள்? இல்லையே? தமிழக அரசு ஆயுத பூஜை செய்கிறது என்றா அறிவிக்கப்படுகிறது? அப்படியா நடத்தப் படுகிறது? இல்லையே? அங்குள்ள ஒரு சிலர் தங்களுடைய நம்பிக்கையின் படி செயல்படுகிறார்கள். அது பொது இடம், அங்கே அவையெல்லாம் கூடாது என்றால், தெருக்களிலும் அவையெல்லாம் கூடாது.
------------------------- துக்ளக் 26.10.2011

திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளின் வாத(?)த்திறன் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதுமே!

தெருக்களில் நடப்பதெல்லாம் அரசு அலுவலகங்களுக்குள் நடக்கலாம் என்று கூறுகிறார். தெருக்களில் நாய்கள் போகும், பன்றிகள் போகும், நிர்வாண சாமியார்கள் போவார்கள், பைத்தியக்காரர்கள் போவார்கள். அதே போல அரசு அலுவலகங்களுக்குள்ளும் யாரும் போகலாம் என்று கூறுவாரோ!

தெருக்களில்கூட இஷ்டத்துக்கு யாரும் எந்தக் கோயிலையும் எழுப்பக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளதே - அதன்படி பார்த்தாலும்கூட அரசு அலுவலகங்களுக்குள் கடவுள் படங்களை மாட்டு வது பூஜை போடுவது என்பதெல்லாம் குற்றச் செயல்கள்தானே.

நடைபாதைக் கோயில் கள் அகற்றப்பட்டிருப்பது குறித்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகித் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதி பதிகள் கறாராக உத்தர விட்டார்களே!

அனுமதியில்லாமல் சாலைகளில், நடைபாதை களில் தமிழ்நாட்டில் கட் டப்பட்டுள்ள கோவில்களின் எண்ணிக்கை 77,450 என்றும் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக் கப்பட்டதே! இவற்றை யெல்லாம் வசதியாக மறந்து விடுவாரா திரு வாளர் சோ

நல்ல வேளை பொது வீதிகளில் மனிதன் சிறு நீர் கழிக்கிறான்; அது போல அரசு அலுவலகங்களிலும் கழிக்கலாம் என்று சொல்லாமல் விட் டாரே - அதுவரை க்ஷேமம் மகாக்ஷேமம் தான்!

------------------- ”விடுதலை” 26-10-2011

4 comments:

SURYAJEEVA said...

சாலைகளை பயன் படுத்திக் கொள்ள மக்கள் வரி கட்டுகிறார்கள், அரசு அலுவலகங்களுக்கு வாடகையாக நாம் வரி கட்டுகிரோமா? என்று தெரியவில்லை... சோ மாதிரி ஆட்கள் வாய் கிழிய பேசுவார்கள், அதெல்லாம் போய் ஒரு பதிவா போட்டுகிட்டு... நமக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கு தோழர்..

Vairavan said...

அரசு அலுவலகங்களில் நடக்கும் அராஜகத்தை எழுதுங்கள். கடவுளை மறுப்பது என்றால் எல்லா கடவுளையும் எல்லா மதத்தையும் மறுப்பதுதான். வெறும் இந்து மதத்தை இழிவு படுத்துவது இல்லை. தைரியம் இருந்தால் கிறிஸ்தவ,இஸ்லாமிய கடவுளை கிண்டலடித்து பாருங்கள்.


தயவு செய்து அடுத்தவரின் நம்பிக்கையை கிண்டலடிகாதீர்கள்.

நம்பி said...

Blogger Vairavan said...
//இந்து மதத்தை இழிவு படுத்துவது இல்லை. //

இந்து மதமே மக்களை இழிவுபடுத்துவது தான்!

Blogger Vairavan said...
//தைரியம் இருந்தால் கிறிஸ்தவ,இஸ்லாமிய கடவுளை கிண்டலடித்து பாருங்கள். //

......ரொம்ப பயந்து பவ்யமா வருது!

.....மசூதியை இடிக்கின்றளவுக்குள்ள தைரியம் எந்த மதத்திற்குத்தான் உண்டு....?

பாதிரியாரை கொளுத்துகின்ற தைரியம் எந்த மதத்திற்குத்தான் உண்டு?

கோயில்லே துணியை தூக்கி குறியை, லிங்கத்திற்கு முன் காட்டுகின்ற தைரியம் எந்த மதத்திறகு உண்டு...?

அதையும் படம் பிடித்து வைத்துக் கொண்டு ரசிக்கும் கூட்டம், எந்த மதத்தில் இருக்கிறது?

கேயிலில் கொலை செய்துவிட்டு, கூட்டமாக மறைந்திருக்க எந்த மதத்தில் வழி இருக்கிறது?

பெண்களை பாலியல் வன்கொடுமைகள் எந்த மதம் புரிகிறது?

கொலை செய்து விட்டு மதப்போர்வையில், கோயிலுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு, நீதிபதியிடமே பேரம் பேசும் கூட்டம் எந்த மதத்திலே இருக்கிறது? (ஆதாரத்துடன்)

பெண்ணை கடவுளின் முன்னாடி வைத்து புணர்ந்து இழிவு படுத்தும் தைரியம் எந்த மதத்திற்கு உண்டு? (ஆதாரத்துடன்)

பெண்களையும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் தைரியம் எந்த மதத்திற்கு உண்டு..?

தைரியத்தின் மொத்த குத்தகையை மூடநம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து கொள்முதல் செய்து, தனதாக்கி வைத்திருக்கும் கூட்டம் எந்த மதத்தில் இருக்கிறது?

ஒருவர் எதை பற்றி யோசிக்கவேண்டும்? எதை பேசவேண்டும்? எதை எழுதவேண்டும்? என்று எவரொருவரும் தீர்மானிக்கமுடியாது, அந்த உரிமையை தடுத்தால் நீதிமன்றமே தன்னிச்சையாக தலையிடும் என்று அரசியல் சட்டம் வகுத்திருப்பதைக் கூட அறியாமல் கூறும் தைரியம்! எந்த இத்துப் போன மதத்திற்கு உண்டு?

இதெல்லாம் எந்தெந்த மதத்தில் இருக்கிறதோ? அதை தடுக்கின்ற தைரியம் மட்டுமே இந்த பக்கம் உண்டு!

(இப்போது தெரிந்திருக்குமே இதெல்லாம் எந்தெந்த மதத்தில் இருக்கிறது என்று?)

Sathiyanarayanan said...

/* அரசு அலுவலகங்களில் நடக்கும் அராஜகத்தை எழுதுங்கள். கடவுளை மறுப்பது என்றால் எல்லா கடவுளையும் எல்லா மதத்தையும் மறுப்பதுதான். வெறும் இந்து மதத்தை இழிவு படுத்துவது இல்லை. தைரியம் இருந்தால் கிறிஸ்தவ,இஸ்லாமிய கடவுளை கிண்டலடித்து பாருங்கள்.
தயவு செய்து அடுத்தவரின் நம்பிக்கையை கிண்டலடிகாதீர்கள். */

என்னோட அப்பன் பாட்டன் எல்லாம் உன்னோட மதத்தை தானே பின்பற்றினார்கள்.

உன்னோட மதம் தானே வர்ணத்தை பற்றி சொல்லுது, உன்னோட மதம் தானே தமிழனை சூத்திரன் சொல்லுது, உன்னோட மதம் தானே என்னை இந்துனு சொல்லுது, உன்னோட மதம் தானே என்னை கருவறைக்குள் வராதேன்னு சொல்லுது.

உன்னை என்னனு சொல்லுது நீ தூக்கி புடிக்கிற இந்து மதம்?

கிருத்துவ, இசுலாமிய மதங்கள் வர்ணத்தை பற்றி சொல்லவில்லையே, தமிழனை சூத்திரன்னு சொல்லவில்லையே, கருவறைக்குள் வராதேன்னு சொல்லவில்லையே. இந்த மதங்களை சார்ந்தவர்கள் எங்களை கிருத்துவர்கள் என்றும் , இசுலாமியர்கள் என்றும் சொல்லவில்லையே.

எங்கள் தமிழர்களை உன் மதம் ஏன் இழிவுப்படுத்துகிறது?