Search This Blog

30.10.11

கந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?


பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வதேன்?

சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும் விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.


ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.


விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்து விட்டார்களே என்று ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாக போகக்கடவது என்று பார்வதி தேவியார் சாபமிட்டாளாம். மற்றும் தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீது பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.


ஆதாரம்: வால்மீகி இராமாயணம்
(கடைசி வரி..... எவ்வளவு காட்டுமிராண்டிச் சிந்தனை! இராமாயணத்தை படித்தால் இந்தப் புத்திதான் வரும்)

நாட்டை மன்னர்கள் மாறி மாறி ஆள்கிறார்களே, ஏன் தெரியுமா? இதுவரை தெரிந்து கொள்ளாத ஒரு சங்கதியை இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

அதுவும் கந்தசஷ்டி கொண்டாடப்படும் நாளில் (அய்ப்பசி 14 - அக்டோபர் 31) தெரிந்து கொள்ள வேண்டாமா?

நவராத்திரி முடிந்தது, தீபாவளியும் கழிந்தது அடுத்து சுரண் டலுக்கு வழி தேட வேண்டாமா?

வந்துவிட்டது - ஆம், வந்து விட்டது கந்தசஷ்டி! கந்தன், சுப்பிரமணியன், முருகன், ஆறுமுகன் எல்லாம் ஒரு பொருள் பன்மொழிகள்!

ராமநவமி, கிருஷ்ணன் அஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என்பது போல கந்தன் சஷ்டி - அற்றவன் கடவுள் பிறப்பு, இறப்பு என்று சொல்லிக் கொள்வார்கள்; ஆனால் கடவுள்களின் பெரிய ஜாபிதா அதற்குப் பிறந்த நாள்கள் - இதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் மகாமகா கூத்து.

வழக்கம்போல ஓர் அரக்கன் வர வேண்டாமா? அவன்தான் சூரபத்மன். அரக்கனைக் கொல்ல கடவுளைப் பிரார்த்திக்க வேண்டாமா?

சிவனை வேண்டினர் - கடவுளாக இருந்தாலும் உடல் சேர்க்கை வேண் டாமா? சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர் - ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் நடந்ததாம்.

இதற்கு மேலும் பிண்டம் தரித்தால் நாடு தாங்காது என்று தேவர்கள் முறை யிட்டு நிறுத்தும்படிக் கெஞ்சினார்களாம்.

அதன் விளைவு வீரியம் ஆறாகப் பெருக்கெடுத்ததாம். தேவர்கள் கைகளில் ஏந்தி குடித்ததால் கர்ப்பம் அடைந்தார்களாம். காஞ்சீபுரத்தில் உள்ள கரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கிக் கர்ப்பம் கலைந்தனராம்.

மீதி வீரியத்தை கங்கையில் கொண்டு போய் விட்டனராம். அது ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடி ஆறு குழந்தைகள் ஆயிற்றாம்.

ஆறு பெண்கள் பால் கொடுக்க வந்தார்களாம். ஆறு பெண்கள் பால் கொடுப்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறு பேர்களையும் ஒன் றாக அணைத்துப் பால் கொடுக்கையில் முகம் ஆறாகவும் (தலைகள்) கைகள் பன்னிரெண்டாகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம்.

இதில் வடமொழியில் ஸ்கந்தன் என்றால் இந்திரியம் என்று பொருள் - சிவனின் இந்திரியத்திலிருந்து பிறந்ததால் ஸ்கந்தன் - கந்தன் என்று பெய ராம்.

இப்படிப் பிறந்த ஆபாச பேர் வழிக்குத்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அதுவும் ஆறு நாள் விரதம் இருந்து கொண்டாட வேண்டும்.

முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர் சோலை ஆகிய இடங்களில் கந்தசஷ்டி என்ற பெயரால் பகல் கொள்ளை பக்தர்களிடமிருந்து!

அர்த்தமுள்ள இந்து மதம் இதுதான் - தனக்குரிய வீரியத்தைப் பூமி தேவி தாங்கியதால் பார்வதிக்கு மகா மகா கோபம் பீறிட்டுக் கிளம்பி சாபம் விட்டாளாம்.

உன்னை மாறி மாறி அரசர்கள் ஆளக் கடவது என்பதுதான் அந்தச் சாபமாம்!

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகளே. இந்தக் கந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?

--------------------”விடுதலை” 29-10-2011


3 comments:

Shanmugam Rajamanickam said...

//கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி//

Pandian R said...

இதற்கு நாங்கள் ஒன்றும் சொல்லப்போறதில்லை. இப்படி நாத்திகம் பேசி உள்ளே ஆத்திகம் பழகி ஊரை அடித்து உலையில் போடும் திராவிட இனத்தவர்களால்தான் இப்போது தொல்லையே. யாரும் படிக்காத வால்மீகி ராமாயணத்தைப் படிக்க வைக்கிறதே நீர்தானே அய்யா. கண்மூடித்தனமாக ஆத்திகமோ நாத்திகமோ பழகினால் சிந்தனை வராது. வெறுப்புதான் வரும். அதனைத்தான் நீர் வர வைக்கிறீர். ஓவர்டோஸ். பலமுறை வந்து படித்து வீணாகப் பின்னுாட்டமிட்டு உங்கள் மனதை நோக வைக்க வேண்டாம் என்று நினைத்தேன். இந்த முறை போட்டாச்சு.

(நான் ஆரியன் இல்லை. திராவிடனே. அதும் அர்த்தம் அல்லாமல் ஆத்திகத்தையோ நாத்திகத்தையோ பேசாத திராவிடன்)

நம்பி said...

//Blogger fundoo said...

இப்படி நாத்திகம் பேசி உள்ளே ஆத்திகம் பழகி ஊரை அடித்து உலையில் போடும் திராவிட இனத்தவர்களால்தான் இப்போது தொல்லையே.//

அதான் இப்படி பன்றாங்களா?......(எதிரா பண்ணனும்னு) ஆத்திகம்...ப்ப்பப்பழகி.ப் பழகி.....மறைமுகமாக உண்மையான நாத்திகத்தை பரப்பலாம்.....அதாவது கோயில்லை பூஜை செய்யறது.....அப்பறம் கொலை செய்யறது....காஞ்சிபுரம் கோயில்ல காமக்களியாட்டம் பன்றது....கடவுளை கும்பிட்டுகிட்டே கற்பழிப்பு, கொலை, பொய், களவு, வரி ஏய்ப்பு, அடுத்து கெடுக்கறது,,,,,என்று! இப்படி பண்ண ஆரம்பிச்சுட்டாங்களோ...?)

இதை அறிவிக்கும் கூட்டம் யார்?......................

Blogger fundoo said...
//(நான் ஆரியன் இல்லை. திராவிடனே. அதும் அர்த்தம் அல்லாமல் ஆத்திகத்தையோ நாத்திகத்தையோ பேசாத திராவிடன்)//

இதுவா....? இது என்ன கூட்டம்?

சரி,,,,,,,,,,,,,,, இதுக்கு அர்த்தம்,,,,,,,,,,,,,,?



Blogger fundoo said...
//கண்மூடித்தனமாக ஆத்திகமோ நாத்திகமோ பழகினால் சிந்தனை வராது. வெறுப்புதான் வரும். //

அப்படியா....?

கண்மூடித்தன ஆத்திகம்..?....எவ்வளவு லிமிட்.?...அதை எதுக்கு பழகணும்?

கண்மூடித்தன நாத்திகம்.?...எவ்வளவு லிமிட்..?.....இதை எப்படி பழுகுவது...?

இதையெல்லாம் எதுக்கு பழகணும்?

ஓஓஓஓஓஓ.......அர்த்தம் இல்லாமல் ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் பேசுவதில்லை என்பதற்கான அர்த்தம் இது தானா?

இப்ப............. விருப்புல இருக்குதா? ..............வெறுப்புல இருக்குதா?

எந்த லெவல்ல ஒன்னொன்னும் இருக்குது.......?