Search This Blog

11.10.11

பார்ப்பனர்கள் பார்வையில் தீபாவளிப் பரிசும், போனசும் ...மாதம் தவறினாலும் பண்டிகை தவறாது. அப்படி வந்தால்தானே தமிழர்களின் அறிவையும், உழைப்பையும், பொருளாதாரத்தையும் மொட்டை அடிக்க முடியும்!

ஆர்.எஸ்.எஸ்.காரர் களின் வார ஏடான விஜயபாரதம் (14.10.2011) இவ்வாறு எழுதுகிறது:

தீபாவளிக்காக புத்தாடைகள் எடுக்க ஜவுளிக் கடைக்குப் போகும்போது, முதலில் நமது பித்ருக்களுக்காக (காலமான தாத்தா, அப்பா நினைவாக) வேட் டியும், துண்டும் (பாட்டி, அம்மா நினைவாக) சேலை, ரவிக்கைத் துணியும் எடுக்க வேண் டும். அதன் பிறகே நமது குடும்பத்தினர்களுக்காக புத்தாடைகள் எடுக்க வேண்டும். நம்மை வளர்த்த அந்தத் தெய்வீகப் புருஷர்களுக் கும், தாய்க்கும் நாம் வஸ்திரம் (துணி) எடுக்கும் போதே அவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். அவர்களது இந்த ஆசி தான் நமக்குக் கிடைக்கும் உண்மையான தீபாவளிப் பரிசும், போனசும் -

என்று வரிந்து கட்டி எழுதுகிறது ஆர்.எஸ்.எஸ். வார ஏடு.

எதை எடுத்தாலும் அதில் மூடநம்பிக்கையைத் திணிக்க வேண்டும் என்ப திலே பார்ப்பனர்கள் குறியாக இருப்பார்கள். அதி லும் குறிப்பாக சொர்க்கம், நரகம், பிதுர்லோகம் என்ற கர்மாந்திர சமாச்சாரங்களை நிலை நிறுத்துவதிலேயே குறியாக இருப் பார்கள்.

இந்த கர்மா, விதியை நம்பவைத்தால்தான் பார்ப்பனர்களின் ஆதிக்க புரியைக் கட்டிக் காக்க முடியும். வருடத்துக்கு ஒருமுறை திதி என்று சொல்லி பார்ப்பனப் புரோகிதன் நம் வீடு களுக்கு வந்து சுரண்டும் தத்துவம் இதுதான். நடிகவேள் எம்.ஆர். ராதாதான் கூறுவார், ரத்தக் கண்ணீர், நாடகத்தில். பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ? என்று கேட் பார்.

கபிலர் கூட நாக்கைப் பிடுங்குமாறு கேட்டாரே!


பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்! சிறந்தவராய் உமை இவ்விடை நிறுத்திப் பாவனை மந்திரம் பலபட உரைத்தே உமக்கவர் புத்திரர் ஊட்டின போது அடுபசியால் குலைந்தாங்கு அவர் மீண்டு கையேந்தி நிற்பது கண்டதார்? புகல்வீர் அருந்திய உண்டியால் ஆர் பசி கழிந்தது?
அட பார்ப்பனர்களே, உங்களுக்குக் கொடுக்கும் தானங்கள், உணவுகள், பிதுர்க்களுக்குப் போய்ச் சேரும் என்று கூறுகிறீர் களே, அந்த உணவுகள் உங்கள் பசியை ஆற்றுமா? பிதுர்க்களின் பசியை ஆற் றுமா? என்று கேட்டாரே கபிலர் - இதற்கு என்ன பதில்? கபிலர் என்ன பெரியார் சீடரா?

நேற்றைய தினமணி ஏடு மானமிகு கலைஞர் அவர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது.

ஆயுத பூஜைக்குக் கலைஞர் வாழ்த்துகள் தெரி விக்கவில்லையாம். வாழ்த்துத் தெரிவித்தால் - இது தான் பெரியார் கொள்கையா என்று கேட்கவும் தயாராக இருப்பார்கள். வாழ்த்து தெரிவிக்காவிட்டால், பார், பார் கலைஞர் ஆயுதப் பூஜைக்கு வாழ்த் துத் தெரிவிக்கவில்லை. ஆரியர் -திராவிடர் என்று வசனம் பேசாவிட்டால் அவருக்குத் தூக்கம் வராது என்றும், கோணல் புத்தியோடு கிறுக்குவார்கள். அதைத்தான் தினமணி வேண்டுமென்றே கலைஞர் அவர்களைச் சீண்டி தன் அற்பத்தனத்தைக் காட்டிக் கொண்டுள்ளது.

பதிற்றுப் பத்தில் ஆயுத பூசை பற்றி வரிகள் வருகின்றனவாம். அப்படி இருக்கும்பொழுது கருணாநிதி எப்படி ஆயுதப் பூஜையை மறுக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப் புகிறது தினமணி (நாளை அது பற்றி வரும்).

சரி... தீபாவளி பற்றி வரிந்து எழுதுகிறார்களே! அந்தத் தீபாவளி பற்றி இலக்கியங்களில் ஆதாரம் உண்டா என்று கேட்டால் அதற்கு என்ன பதிலாம்?

தீபாவளி எப்பொழுது வந்து குதித்தது?

தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களா லும் தமிழ்நாட்டில் புகுத்தப் பட்டதால். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண் டாடப்பட்டு வரும் பெரு நாள். இது பழந்தமிழ் இலக் கியங்களில் குறிப்பிடப்பட வில்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

-இப்படி சொல்லுகிறவர் திராவிடர் கழகத்தவர் அல்லவே - மானமிகு கலைஞர் அவர்களின் உடன் பிறப்பும் அல்லவே -பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் எழுதியுள்ளாரே! --- (மதுரை நாயக்கர் வரலாறு-பக்கம் 433-434) இதற்கு என்ன பதில்?
பக்தி என்றால் பார்ப்பான் விரித்த வலையில் இந்தப் பரிதாபத்துக்குரிய தமிழன் பல்லிளித்து விழுந்து விடுவான். அவன் தலையில் நல்லா மிளகாய் அரைக் கலாம் என்ற தலை கொழுத்த நினைப்புத் தானா?

தீபாவளி கொண்டாடி இன்னும் இளித்த வாயனாக இருக்கப் போகிறாயா? இழிவை சுமக்கப்போகிறாயா? மானமுள்ள தமிழா, சிந்திப்பாய்!

------------------------"விடுதலை” 11-10-2011

0 comments: