தசரா பண்டிகையின் நிறைவு நாளான நேற்று விஜயதசமி என்ற பெயரில் வடக்கில் பல மாநிலங்களில் வழக்கம் போல இராவணன், கும்ப கர்ணன், இந்திரஜித்தின் உருவங்கள் எரிக்கப்பட்டு ராம் லீலா கொண்டாடப்பட்டுள்ளது.
டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதலியோர் கலந்து கொண்டு குதூகலித்துள்ளனர்.
பீகாரில் முதல் அமைச்சர் நிதீஷ்குமார், ஆளுநர் தேவானந்த் கொன்வார் உள்படப் பங்கு கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
65 அடி உயரத்தில் இராவணன் உருவமாம் தீயிட்டும் கொளுத்தப் பட்டதாம். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு கள் வெடிக்கப்பட்டனவாம். (இன்னும் சொல்லப் போனால் வடக்கில்கூட இராவணனை குல தெய்வமாக வழிபடும் மக்கள் இருக்கிறார்கள்)
இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்றும், இராமாயணத்தில் சொல்லப்படும் அரக்கர்கள், குரங்குகள் என்பவை எல்லாம் திராவிடர்களைத் தான் என்றும் பண்டித ஜவகர்லால் நேரு உட்பட (விவேகானந்தரையும் சேர்த்துக் கொள்ளலாம்) பி.டி. சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரி யர்களும் அய்யந்திரிபறக் கூறியுள்ளனர்.
இவையெல்லாம் நேரு குடும்பத்தினருக்குத் தெரியாதா? விஜயதசமி வெற்றி விழா கொண்டாடும் வட நாட்டுக்காரர்களுக்குப் புரியாதா?
1974 டிசம்பர் 25ஆம் தேதி தந்தை பெரியார் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி சென்னையில் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் இராவண லீலா! நடத்தினாரே நினைவிருக்கிறதா? இராமன், சீதை, லட்சுமணன் உருவங்கள் தீக்கு இரையாக்கப்பட்ட னவே - மறுபடியும் அரங்கேற்றப்பட வேண்டுமா?
அதுகுறித்த வழக்கில் திராவிடர் கழகம் வெற்றி பெற்று தான் இருக்கிறது என்பதையும் மறந்து விட வேண்டாம்.
இந்திய சுதந்திரம் பார்ப்பன - பனியா (வடவர்)வுக்குக் கிடைத்த அதிகார மாற்றம் (Made Over) என்று தந்தை பெரியார் கல்வெட் டாகக் கூறிச் சென்று இருக்கிறாரே - அந்தக் கருத்துகளை மேலும் கூர் தீட்ட வேண்டுமா? அதனைத் தான் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்களா?
அண்ணாவின் திரா விட நாடு இதழில் ஒரு தகவல்:
கடந்த சில தினங் களுக்குமுன் டில்லி மாநகரில் ராம லீலா கொண்டாடினராம் - வைதீகர்கள்; இராவணனையும் அவன் சந்ததிகளையும் அழித்த ராமனின் திருநாளாம் அது.
அந்த சரித்திர எழுத்தாளர் நேரு பேரனுடன் சென்று இராவணனையும், கும்பகர்ணனையும், இந்திரஜித்தையும் கொடும்பாவியாக்கி எரிக்கும் காட்சி - அல்ல, அல்ல; விழா காணச் சென்றிருக்கிறார்.
இந்திய சர்க்காரின் செய்தி இலாகா அந்தக் கோலாகலத்தை திரைப்படமாக்கி சினிமா கொட்டகையில் திரையிட்டனர். திரையிலே காட்சி பக்கத்திலேயிருந்த நண்பர் கருணாநிதி கேட்டார். நாம் ராமன் உருவம் செய்து கொளுத்தினால் என்ன?
நான் பதில் தர வில்லை. நண்பர் கேட் டதுபோல் செய்தால் யார்தான் என்ன செய்ய முடியும்?
- அறிஞர் அண்ணா
(திராவிட நாடு 28.10.1951)
பிரதமராக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியானாலும் சரி, அந்த அண்ணா உருவாக்கிய திமுக மத்திய அரசின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
ஆட்சியில் இருப்பவர்களே மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், இனவுணர்வைத் தூண்டும் வகையிலும், வடக்கு - தெற்கு வாதத்தைக் கிளறும் வகையிலும் நடந்து கொள்ளலாமா?
-----------------------------"விடுதலை” 7-10-2011
3 comments:
கொண்டாடும் அவர்களுக்கே இது பற்றி நீங்கள் கூறும் பார்வை இருக்குமா? ஆரிய திராவிட யுத்தம் என்றெல்லாம் நினைக்கமாட்டார்கள்.. ஒரு விழா, ஒரு சடங்கு அவ்வளவுதான். தீமையை அழிக்க சபதமேர்க்கும் ஒரு நாள் என்பது தான் அவர்கள் கருத்தாக இருக்கும்.
மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் ஓணம் விழா கேரளாவில் கொண்டாடப்படுகிறதே.? அது போல் தான்..... இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை.அவரவர் நம்பிக்கை அவர்களுக்கு.....நாம் அது பற்றி கவலைப்பட தேவை இல்லை. அவர்களென்ன தமிழர்களை கொளுத்தும் லீலா வா நடத்துகிறார்கள்?
நம்ம ஆளுகள் டெல்லி யில் கோலோச்சிய போதாவது இதை நிறுத்த முயற்சி எடுத்தார்களா?
அண்ணா குறிப்பிட்ட அந்த தோழரும் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தார். எதெதற்கோ டெல்லி சென்று முரண்டுபிடித்தார். இதற்காக என்ன செய்தார்?
அதிகாரத்தில் பங்கெடுத்து இவர்கள் (ரெண்டு பேரும் தான்) செய்த அராஜகம் கொஞ்சமா,நஞ்சமா?
கொண்டாடும் அவர்களுக்கே இது பற்றி நீங்கள் கூறும் பார்வை இருக்குமா? ஆரிய திராவிட யுத்தம் என்றெல்லாம் நினைக்கமாட்டார்கள்.. ஒரு விழா, ஒரு சடங்கு அவ்வளவுதான். தீமையை அழிக்க சபதமேர்க்கும் ஒரு நாள் என்பது தான் அவர்கள் கருத்தாக இருக்கும்.
மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் ஓணம் விழா கேரளாவில் கொண்டாடப்படுகிறதே.? அது போல் தான்..... இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை.அவரவர் நம்பிக்கை அவர்களுக்கு.....நாம் அது பற்றி கவலைப்பட தேவை இல்லை.
நம்ம ஆளுகள் டெல்லி யில் கோலோச்சிய போதாவது இதை நிறுத்த முயற்சி எடுத்தார்களா?
அண்ணா குறிப்பிட்ட அந்த தோழரும் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தார். எதெதற்கோ டெல்லி சென்று முரண்டுபிடித்தார். இதற்காக என்ன செய்தார்?
அதிகாரத்தில் பங்கெடுத்து இவர்கள் (ரெண்டு பேரும் தான்) செய்த அராஜகம் கொஞ்சமா,நஞ்சமா?
Blogger vivek kayamozhi
//ஓணம் விழா கேரளாவில் கொண்டாடப்படுகிறதே.? அது போல் தான்..... இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை.அவரவர் நம்பிக்கை அவர்களுக்கு.....நாம் அது பற்றி கவலைப்பட தேவை இல்லை.//
இப்படி விலகவும் செய்வார்கள்,
******************
பிறகு....
Blogger vivek kayamozhi
//நம்ம ஆளுகள் டெல்லி யில் கோலோச்சிய போதாவது இதை நிறுத்த முயற்சி எடுத்தார்களா?//
.....இப்படி வீம்பு பண்ணவும் சொல்வார்கள், என நினைத்து முயற்சி எடுக்காமல் விட்டுவிட்டார்களோ என்னவோ?
*****************
அவர்கள் என்ன (தமிழர்கள்)....திராவிடர்களா...?
//அவர்களென்ன தமிழர்களை கொளுத்தும் லீலா வா நடத்துகிறார்கள்?//
தமிழர்களை திராவிடத்திலிருந்து பிரிக்கும் நிகழ்வுதான் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மிக மும்முரமாக ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதை தமிழர்களோடு ஒட்டிக்கொண்ட ஆரியன்கள் மிக மும்முரமாக செய்து கொண்டிருக்கின்றனர். அதைக் கண்டு ஏமாறாமால் இருப்பது திராவிடனின் கடமை. இதற்குத்தான் பெரியார் கவலைப்பட்டார்.
திராவிடன் எனப்படும்போது கிட்டே நெருங்கமுடியாது. தமிழன் என்றால், கூட உறவாடி உதவுவது போல், போலியான தோற்றத்தை உருவாக்கி, திராவிடன் தலை மேலே ஏறி மிதிக்ககூட முடியும். அதுதான் நடைபெறுகிறது.
*****************
Blogger vivek kayamozhi
//அண்ணா குறிப்பிட்ட அந்த தோழரும் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தார். எதெதற்கோ டெல்லி சென்று முரண்டுபிடித்தார். இதற்காக என்ன செய்தார்?//
மேலேதான் இது பரவாயில்லை...."....இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை...." என்ற கருத்து வைக்கப்பட்டு விட்டதே....அப்புறம் ஏன் வீணாக கவலைப்படுவானேன்!
*********************
Blogger vivek kayamozhi
//அதிகாரத்தில் பங்கெடுத்து இவர்கள் (ரெண்டு பேரும் தான்) செய்த அராஜகம் கொஞ்சமா,நஞ்சமா?//
யார் இரண்டுபேரும்? அண்ணாவும், அண்ணாவின் நண்பருமா?
அண்ணா இருந்ததே இரண்டு வருடங்கள் தான்...அதற்குள்ளாகவாகவா? அராஜகம் பண்ணிட்டாரு! அதிலும் கால் ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியும் இப்படியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்தார்....ஆக முழுதாக ஒன்றரை வருடம் கூட ஆட்சியில் இருந்திருப்பார் என கூறிவிடமுடியாது. அதற்குள்ளாகவா அராஜகத்தில் ஈடுபட்டுவிட்டார். அப்படி என்ன அராஜகம் பண்ணினார்?
அப்படி அராஜகம் பண்ணியவருக்காக கின்னஸ் ரெக்கார்டு அளவுக்கு மரியாதை செலுத்த மக்கள் கூடினர்.
அப்புறம் அடுத்த வந்த தேர்தலில் அவர் கட்சிக்கு வாக்களித்தனர்.
எந்த? அராஜகம் செய்யாத உத்தம புத்திர அரசியல் வாதிகளுக்கு இவ்வளவு ஜனம் கூடினார்கள். உலகளவில்....கூட இல்லையே!
சில பல வருடங்களுக்கு முன் ஜப்பான் மன்னருக்குத்தான் அந்தளவுக்கும், அதைவிட மேலாகவும் மக்கள் கூடினர்.
ஒருவேளை அவரும் அதிக அராஜகம் செய்திருப்பாரோ?
(அதுவரை அண்ணாவின் இறுதியஞ்சலி தான் கின்னஸ் ரெக்கார்டு...)
அப்படியென்றால் இவர்களுக்கு முன் மக்கள் ஒற்றுமையுடன், ஜாதி மாறுபாடு இல்லாமல் வாழ்ந்தார்களா? ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம்..போன்றோர் ஆட்சி காலத்தில் எல்லாம் அனைவரும் சமம் என்ற நிலையில் அராஜகமேயில்லாமல் இருந்திட்டனரோ?
அப்பறம் ஏன்? காமாராஜர் குலக்கல்விக்குத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்?
.எல்லாம் சரி அப்புறம் ஏன்? கக்கன் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினார். அராஜகம் இல்லாத நாட்டிலா ஆலய நுழைவு போராட்டம் நடத்தினார்.
Post a Comment