Search This Blog

15.10.11

கிறித்துவ,முஸ்லிம் மதத்தில் ஆயுத பூஜை உண்டா?

மூடப் பழக்கம்தான் கலாச்சாரமா?

ஆயுத பூஜையை அரசு அலுவலகங்களில் கொண்டாடுவது தவறா? அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாமா? மதச் சார்பற்ற அரசு என்கிற காரணத்தால் நாட்டிற்கென்று ஒரு பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை இருக்கக் கூடாதா என்ற வினாவைத் தொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். சின் ஏடான விஜயபாரதம் (21-10-2011)

மதசார்பற்ற அரசு என்றால், எந்தவித மதப் பண்டிகையையும் கொண்டாடக் கூடாதுதான்.

ஆயுத பூஜை குறிப்பிட்ட இந்து மதத்தின் பூஜை இல்லையா? கிறித்துவ மதத்தில் ஆயுத பூஜை உண்டா? முஸ்லிம் மதத்தில் ஆயுத பூஜை உண்டா? நவராத்திரி என்று சொல்லப்படும் ஒன்பது இரவுகளில் நடத்தப்படும் இந்த விழா இந்து மதப் பண்டிகைதானே? உங்கள் வீட்டுக்குள் கொண்டாடுவதையா தடுக்கிறோம்?

வீட்டில், பூஜை அறைக்குள் நடத்திக் கொள்ள வேண்டிய ஒரு சமாச்சாரத்தை எல்லா மதத்திற்கும் பொதுவான, மதச் சார்பற்ற கொள்கையுடையவர்களுக்கும் பொதுவான அரசு அலுவலகங்களுக்குள் குறிப்பிட்ட மதப்பண்டிகை விழாவைக் கொண்டாடக் கூடாது என்பது எப்படித் தவறாகும்?

அரசு அலுவலக நேரத்தில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அலுவலர் ஆறு வேளை தொழுதால் இந்த இந்துத்துவாவாதிகள் ஏற்றுக் கொள்வார்களா?

பண்பாடு பற்றிப் பேசுகிறார்களே - அந்தப் பண்பாடு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறதா? ஒருவருக்கு உருவ வணக்கம் உண்டு; இன்னொரு வருக்கு உருவ வணக்கத்தில் நம்பிக்கை கிடையாது.

ஒருவர் நெற்றியில் குறியீடுகள் (னுசயறபே) உண்டு; மற்றொரு மதக்காரருக்கு எவ்விதக் குறியீடுகளும் கிடையாது.

ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் கூட குறியீடுகளில் வேறுபாடுகள் உண்டு. சண்டைகள் உண்டு. யானைக்கு நாமம் போடுவதில்கூட வழக்குகள் உண்டு.

உண்மை இவ்வாறு இருக்கும்போது ஒரே பண்பாடு, பழக்க வழக்கம் என்று சொல்லுவதெல்லாம் பொய் தானே!

விநாயகர் சதுர்த்தியின்போது நீர்நிலைகளில் விநாயகரைக் கரைப்பது சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் என்று கூச்சல் போடுகிறார்கள் என்றும் குமுறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஏடு.

யார் கூச்சல் போடுகிறார்களாம்? கறுப்புச் சட்டைக்காரர்களா? சுற்றுச் சூழல் பற்றிக் கற்றுத் தேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கருத்தைச் சொல்லுகிறார்கள். அவர்களையும் நாத்திகர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாமா?

சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது இங்கு மட்டும் தானா? உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள காலகட்டம் இது. சுற்றுச் சூழல் பாதிப்பதால் மனிதர் கள் முதல் விலங்குகள்வரை பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்று கூறுவது விஞ்ஞானிகள்தான். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்கு - பார்வதி தேவியாரின் உடல் அழுக்கில் பிறந்த பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பதுதான் முக்கியம் என்று கூறுவார்களே யானால், அவர்களை மனித நலனுக்கு விரோதிகள் என்று கூறக் கூடிய பட்டியலில்தான் அடைக்க வேண்டும்.

இவையெல்லாம் தொடருமேயானால் அரசு விழாக்களில் விளக்கேற்றித் துவக்கி வைப்பது, கடவுள் வாழ்த்துப் பாடுவது, நாதஸ்வரம் இசைப்பது கூடாது என்றும் சொல்வார்களே என்று மூக்கால் அழுகிறது விஜயபாரதம்.

உண்மைதானே? எதற்காகக் கடவுள் வாழ்த்துப் பாடல்? கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நிலைமை என்ன? இப்பொழுது கூட தமிழ்நாட்டில் கடவுள் வாழ்த்து தி.மு.க.ஆட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டதே - மொழி வாழ்த்துத்தானே நடைமுறையில் உள்ளது.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது சரஸ்வதி வந்தனா என்ற ஒன்றைத் திணிக்க முயன்று, மூக்கறுபட்டதுதான் மிச்சம்.

கோயில் கருவறைக்குள் சூடம் கொளுத்தப்படக் கூடாது என்று ஏற்கெனவே உத்தரவு அமலில்தான் உள்ளது. அதனால் புற்று நோய் ஏற்படுகிறது என்கிற மருத்துவ ஆய்வின் அடிப்படையில் தடுக்கப்பட்டு விட்டதே!

மக்கள் நலன்தான் முக்கியமே தவிர மூட நம்பிக்கையாளர்களின் பழக்க வழக்கங்களோ, அவர்கள் மொழியில் அந்தக் கலாச்சாரங்களோ முக்கியமானவை யல்ல - அல்லவே அல்ல!

----------------"விடுதலை” தலையங்கம் 15-10-2011

6 comments:

manuneedhi said...

pls come to the high court and you can see a separate mosque for the muslims and even muslim judges are permitted to get down by 12.30 for the namaz..pls discuss about what is halal and bakreeth and then turn towards AYUTHA POOJAI...

Nasar said...

ஹிந்து சகோதரர்களின் பலவகைப்பட்ட கடவுள் படங்கள் வரிசையாக மட்டப்பட்டுள்ளதே பல சர்க்கார் ஆபிஸ்களில் மற்றும் பிள்ளையார் கோயில்களும் , ஹனுமான் கோயில்களும் இருக்கிறதே இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ??? இதுதான் மத சார்பு அற்ற நாட்டின் லட்சணமா ??? கேட்பதுக்கு யாரும் இல்லை என்கிற தலைகனமா ??? கொஞ்சமாவுது நியாயமாக சிந்தியுங்கள் , செயல்படுங்கள்....... சகோதரரே மனுநீதி உங்களைத்தான் கேட்கின்றேன் ............

நம்பி said...

//manuneedhi said...

pls come to the high court and you can see a separate mosque for the muslims and even muslim judges are permitted to get down by 12.30 for the namaz..pls discuss about what is halal and bakreeth and then turn towards AYUTHA POOJAI...
October 15, 2011 9:45 PM
Nasar said...

ஹிந்து சகோதரர்களின் பலவகைப்பட்ட கடவுள் படங்கள் வரிசையாக மட்டப்பட்டுள்ளதே பல சர்க்கார் ஆபிஸ்களில் மற்றும் பிள்ளையார் கோயில்களும் , ஹனுமான் கோயில்களும் இருக்கிறதே இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ??? இதுதான் மத சார்பு அற்ற நாட்டின் லட்சணமா ??? கேட்பதுக்கு யாரும் இல்லை என்கிற தலைகனமா ??? கொஞ்சமாவுது நியாயமாக சிந்தியுங்கள் , செயல்படுங்கள்....... சகோதரரே மனுநீதி உங்களைத்தான் கேட்கின்றேன் ............
October 16, 2011 10:58 PM //

இதற்காகத்தான் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது...

அரசு சார்ந்த இடங்கள், அலுவலகங்கள் எல்லாம் மதசார்பற்றவைகள், ஏன் நாடே மதசார்பற்றவை...இது இந்திய அரசியலமைப்பு முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

ஏற்கனவே இந்த ஆயுத பூஜைகள் எல்லாம் அரசு அலுவலகங்களில் நடத்தக்கூடாது. (எல்லா மத பூஜைகளும்) என்று 1968 லேயே சட்டம் போடப்பட்டு அது 1993 இல் சுற்றறிக்கை விட்டு நடைமுறைக்கு வந்தது...ஆனால் இன்று வரை அதை சரியாக எந்த அரசு அலுவலகங்களிலும் பின்பற்றப்படவில்லை. அது தான் இப்போதைய வழக்கு.

(தமிழகத்தில் உள்ள) ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பெண் ஊழியர் இந்த ஆயுத பூஜையை கொண்டாடவில்லை...அதற்குரிய காரணம் கேட்டதற்கு, ஒரளவுக்கு நம்பிக்கையுள்ள பெண் சொன்னது "இது என் சொந்தக்கடையா? இது அராசாங்கத்தின் கடை, இங்கு பலதரப்பட்டவரும் வருவார்கள், போவார்கள், பல சமயத்தவரும் பணிபுரிவார்கள் அதில் என் கடவுளை வைத்து சாமிக் கும்பிட எனக்கு எப்படி மனசு வரும்? அப்படி என்ன இந்த சாமியை வைத்து பிரிவினை செய்ய வேண்டும்? (என்னை யாரும் செய்யவேண்டாம் என்று தடுக்கவில்லை, என்றும் கூறியது..) அதுமட்டுமில்லாமல் ஏதாவது பிரச்சினை என்றாலும் இத்த சாமியை வைத்து தான் நியாயம் தேடுவார்கள்..குத்தமும் சொல்வார்கள்.....

....உண்மையில் அராசாங்க கடையில் குடியரசுத்தலைவர் படம், அல்லது அரசின் சின்னம்......... இதைவைத்து தான் வணங்கவேண்டும் அதை இங்குள்ளவர்கள் அனுமதிக்கமாட்டார்கள், (கட்சி சாயம் பூசுவார்கள்) ஆகையால், இந்த பூஜையே நடத்தாமல் இருந்தால் என்ன ஆகிவிடப்போகிறது. இலாபம் குறைந்து விடப்போகிறதா? அதுதான் இலவசமாக கொடுக்கிறார்களே! என்று பிடிவாதமாக பூஜை நடத்தமாட்டேன் என்று மறுத்துவிட்டது. கடைசிவரை அந்த கடையில் எந்த சாமிப்படமும் மாட்டவில்லை. பூஜையும் நடத்தப்படவில்லை.

(இப்போதைக்கு இந்த முற்போக்கே பெரிய விஷயமாகப்படுகிறது....இங்குள்ள மதச்சண்டையை ஒப்பிடுகையில்)

இது....... நல்லிணக்கமா? இல்லை அவர் இந்த............. படம் மாட்டி, இந்த மதத்துக்காக பூஜை போட்டார், நான் இந்த மதத்திற்காக............. Hardware பூஜை பண்ணேன் என்று கூறுவது நல்லிணக்கமா?

இந்த பூஜை பண்ணவில்லை என்றால் கடவுள் தூக்கில் போட்டுவிடுவரா? இல்லை சூளாயுதத்தை விட்டு அழித்துவிடுவாரா?......... அப்படி விட்டால் சாவு? கடவுள் கையால் சாவதை விட வேறு என்ன வேண்டும்? நம்பிக்கையுடையவனுக்கு?

அந்த (கடவுள்) நபர் (பெண், ஆண்) கொடுத்த உயிர் தானே!

சரி இப்படி பலதரப்பட்டவரையும் விரோதித்து பூஜை பண்ணுவதால், பூஜை பண்ணும் நபருடைய ஆயுள் கூடப்போகிறதா?

இன்றைய நிலையில் ஆயுள் என்பது 50, 60 வயதில் முடியப்போகிற சமாச்சாரமாகிவிட்டது. என்ன பூஜை போட்டாலும் அவ்வளவு தான். (இந்த ஆயுள் வயது...என்பது... இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் ஆய்வுப்படி) (அதற்குள்ள ஆடற ஆட்டம் இருக்குதே.....!)

ஒரு பெண்ணுக்கு இருக்கிற சமத்துவ உணர்வு கூட இந்த ஆண் வர்க்கத்துக்கு இல்லையே!

Nasar said...

தோழர் மனுநீதி அவர்களே ,
100 % கிறிஸ்துவ ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களில் மதச்சார்பற்ற கொள்கை கடைப்பிடிக்கப் படா விட்டால், அது குறித்து முறைப்பாடுகள் வந்து குவியும். ஆம்ஸ்டர்டாம் நகரில் பேரூந்து வண்டியோட்டும் (எகிப்தை சேர்ந்த) கிறிஸ்தவ சாரதி சிலுவை மாலை அணிந்து வேலைக்கு வருவதை நிர்வாகம் கண்டித்தது. அவர் அதற்கெதிராக நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் தீர்ப்பு சொன்ன நீதிபதியோ, "பொதுப் போக்குவரத்து துறையை சேர்ந்த ஊழியர் மதச் சின்னம் அணிவது கூடாது" என்று தடை விதித்தார். இத்தாலி பாடசாலைகளில் சிலுவைகளும், இயேசு படங்களும் வைத்திருப்பதற்கு எதிராக சில பெற்றோர் முறைப்பாடு செய்தனர். நீதிமன்றம் அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கினார். இது இப்படியிருக்க மதச்சார்பற்ற நாடென்று கூறிக் கொள்ளும் இந்தியாவில் பேரூந்து வண்டிகளில், அலுவலகங்களில், கல்வி நிலையங்களில்,மருத்துவ மனைகளில் சாமிப்படங்கள் வைத்திருக்கிறார்கள்.
இதுதான் மத சார்பற்ற ஒரு ஜனநாயக நாட்டின் லட்சணமா ??? மத நல்லிணக்கமா ????