Search This Blog

17.10.11

பார்ப்பனர்கள் - எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

எங்களப்பன் குதிருக்குள் இல்லை!

தனியார்த் தொலைக் காட்சி ஒன்றில், ஜனங்களே இல்லாத ஜனதா கட்சியின் தலைவரான சு.சாமியின் பேட்டி நேற்றிரவு நடைபெற்றது. அதனைக் கேட்டுத் தொலைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நறுக்கென்று ஒரு கேள்வி சுனையாகக் கேட்கப் பட்டது.

அய்க்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறுகிறீர்களே - நீதிமன்றம் சென்றுள்ளீர்களே - ஊழல் ஒழிப்புதான் உங்கள் முக்கிய நோக்கமென்றால் பி.ஜே.பி. ஆட்சியில் ஊழலை எதிர்த்து நீங்கள் கிளம்பவில்லையே என்பது கேள்வி.
நியாயமான கேள்வி - நாணயமான முறையில் பதில் சொல்ல வேண்டாமா?

அது என் வேலையில்லை. எல்லாவற்றையும் நானேதான் செய்ய வேண்டுமா? ஏன் நீங்கள் செய்யக் கூடாதா? இன்று மத்தியில் உள்ள ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என்று ஆத்திரத்துடன், அதே நேரத்தில் கேள்வியின் கூர்மையைச் சமாளிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி பதில் சொல்ல முயற்சித்தார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? பி.ஜே.பி. யின் மீது ஊழல் புகார் தெரிவிக்க மாட்டேன். காங்கிரஸ் மீதுதான் ஊழல் பற்றிப் பேசுவேன் - வழக்குத் தொடுப்பேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாரா, இல்லையா? ஊழலுக்கு ஜாதி ஏது என்று வித்தாரம் பேசும் மேதாவிகள் இந்த இடத்தை மட்டும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இன்னொன்றையும் சம்பந்தமில்லாமல் உளறித் தொலைத்துவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் தொண்டர்களைப் போல நல்லவர்களை, உண்மையான தொண்டர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது என்றும் தம் மனதில் உள்ளதைப் பூசி மெழுகாமலும் கூறிவிட்டார்.

செத்துப் போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப்பட்டவர்களைப் படுகொலை செய்ய வேண்டும்.

மருத்துவமனையில் புகுந்து, அங்குப் பணியாற்றும் கிறித்துவ நர்சுகளை அடித்து உதைத்துப் பாலியல் வன்முறையில் ஈடுபடவேண்டும். பட்டப்பகலில் பகிரங்கமாக இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்து நொறுக்கவேண்டும்.

தொழுநோயாளி களுக்குத் தொண்டுகள் செய்து வந்த பாதிரியாரையும், அவர்தம் இரு மழலைச் செல்வங்களையும் கொடூரமான முறையில் எரித்துக் கொல்ல வேண்டும்.

முசுலீம் கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டுக் கொள்ள வேண்டும். அந்தக் கருவை இழுத்து நெருப்பில் போட்டு குரங்கு போல கூத்தாடவேண்டும். தேசப்பிதா என்று மக்களால் நம்பப்பட்ட தலைவரைப் படுகொலை செய்யவேண்டும்.

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் பச்சைத் தமிழர் காமராசரைப் பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரான டில்லியில் படுகொலை செய்ய துள்ளி எழ வேண்டும்.

இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும், விசுவ ஹிந்து பரிஷத்காரர்களுக்கும் தான், இந்த சு.சாமி அடேயப்பா எப்படிப்பட்ட சர்டிபிகேட்டை தங்க முலாம் பூசி கொடுக்கிறார்.

அடுத்த கேள்வி. ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சு.சாமி: கருணாநிதி ஆட்சியை விட நல்ல ஆட்சி.

அடுத்து கருணாநிதி வரக்கூடாது என்பதால் ஜெயலலிதா ஆட்சியை ஆதரிக்கிறேன்.

பார்ப்பனர்கள் - எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

இந்தப் பாழாய்ப்போன தமிழர்களுக்கு இவையெல்லாம் தெரிவதில்லையே!

கொலைக் குற்ற வழக்கில் ஜாமீனில் திரியும் ஆசாமிகளையே லோகக்குரு, ஜெகத்குரு என்று சொல்லுவதில் கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லையே! தயக்கம் காட்டுவதில்லையே! தன் புத்திக்குப் படாவிட்டாலும் எதிரிகளைப் பார்த்தாவது பாடம் படித்துக் கொள்ள வேண்டாமா நம் தமிழர்கள்?

--------------------"விடுதலை”17-10-2011

3 comments:

Astro வெங்கடேஷ் said...

சரி சு.சாமி BJP யோட ஊழல பத்தி பேசமாட்டார்.இருக்கட்டுமே,

காங்கிரஸுக்கு(sorry திராவிடர்{முன்னேற்றக்}கழகத்துக்கு)ஒரு சு.சாமி ன்னா? bjpயோட ஊழல நீ(ங்க) வெளிக்கொண்டுவாங்களேன்.யார் வேண்டாம்னா
இந்த மாதிரி சமூக சேவை யார் வேனா செய்யலாமே,அத விட்டுட்டு பொழப்பத்த வெட்டி வேலைய ஏன் செய்யரிங்க?

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யும் ஊழல் கட்சிதான் என்று ஒப்புக் கொண்டார் எல்.கே. அத்வானி.

பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத் வானி ஊழலை ஒழிப்ப தாகவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண் டும் என்றும் கூறி ரத யாத்திரை நடத்தி வருகிறார்.

அவர் இம்மாதம் 11ஆம் தேதியன்று பீகா ரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த ஊரான சிதாப்தியாரா வில் இந்த யாத் திரையைத் தொடங்கி னார். பீகார் முதல் அமைச்சரும், அய்க்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கொடிய சைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.

பா.ஜ.க., பொதுச் செய லாளர் அனந்தகுமார், செய்தித் தொடர் பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த யாத்திரை அடுத்த மாதம் 20ஆம் தேதி யன்று டில்லியில் நிறை வடைகிறது. டில்லியில் பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் தேசிய ஜன நாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி களைச் சேர்ந்த தலை வர்கள் உரையாற்று கிறார்களாம்.

நாகபுரியில் நேற்று ரத யாத்திரை நடந்தது. ரூ.500 லஞ்சம்

பொதுக் கூட்டத் தில் எல்.கே. அத்வானி பேசினார். செய்தி யாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். மத்தியப் பிரதேசத்தில் அத்வானியின் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்களுக்கு கவரில் வைத்து ரூ.500 கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை யில் உள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா விவ காரம் குறித்து செய்தி யாளர்கள் சரமாரியாக கேள்விக்கணை தொடுத்தனர். அதற்கு அத்வானி பதில் அளித் தார்.

அவர் கூறியதாவது:

பி.ஜே.பி.யின் ஊழல்

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, நாங்கள் விடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவர் அதைப் புறக் கணித்தார். அதனால் தான் அவருக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடத் தப்படுகிறது என்பது தொடர்பாக லோக் ஆயுக்தா அறிக்கை வெளிவந்தவுடன் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று எடியூரப்பா விடம் நாங்கள் கண் டிப்புடன் கூறினோம்.

ஆனால் அவர் அதன் படி நடக்கத் தவறி விட்டார். இதனால் தான் இந்த இக்கட் டான நிலை ஏற்பட் டுள்ளது. ஊழல் பிடி யிலிருந்து பி.ஜே.பி.யும் தப்பவில்லை இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழ இடம் கொடுக்கக் கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அத்வானி கூறினார்.
---”விடுதலை” 20-10-2011

நம்பி said...

Blogger ஆகமக்கடல் said...

//காங்கிரஸுக்கு(sorry திராவிடர்{முன்னேற்றக்}கழகத்துக்கு)ஒரு சு.சாமி ன்னா? bjpயோட ஊழல நீ(ங்க) வெளிக்கொண்டுவாங்களேன்.யார் வேண்டாம்னா//

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி.ஜெயலலிதாவின் ஊழலையும் வெளிக்கொணர்ந்தவர் சு.சாமி தான். அப்படி வெளிக்கொணர்ந்தவர்தான் திருப்பி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்....

அப்படி கூட்டணி வைத்துக்கொண்டு "ஜெயலலிதாவிற்கு, ஊழல் வழக்குகளிலிருந்து எப்படி? வெளியே வருவது? என்று மிக நன்றாகத் தெரியும்" என்று கூறிக் கூட்டணி வைத்து கொண்டு அறிக்கை விட்டவர் இதே சு.சாமிதான்.......

ஜெயலலிதா....மீது எனக்கு கோபமில்லை...மன்னார்குடி கும்பல் (சசிகலா குரூப்) மீது தான் எனக்கு கோபம் என்றும் அறிக்கை விட்டவர்....எதற்காக...? இப்படி ஒரு அறிக்கை விட்டார்...?

இத்தனைக்கும் அ.தி.மு.க அள்ளக்கைகள், தங்களுடைய தலைவியை மாட்டிவிட்ட சு.சாமியை விளக்கமாத்தால (துடைப்பத்தால்) அடிப்போம், கொலை செய்வோம் என்று விமான நிலையத்தில், துணியை தூக்கி காட்டி வரவேற்பு கொடுத்தும், அ.தி.மு.க வுடனே கூட்டணி வைத்தார் என்றால்..... என்ன? "சாக்கடை ரத்தம்" சு.சாமியின் உடம்பில் ஓடுது.....!

சு.சாமிக்கு எப்போதுமே "ஆகம" விதிதான்....அந்த ரத்தம் தான் ஓடுது....

அவர் ஆரம்பித்து வைத்த ஊழல் வழக்குகளில் ஒன்று..........ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து கொண்டு... 1 ரூபாய் சம்பளம் பெற்று, அளவுக்கதிகமாக சொத்துக்குவித்த வழக்கு...இப்பொழுது பூதாகரமாக அவதாரம் எடுத்து, கர்நாடக கோர்ட்டில்,,,,தலைக்கு மேல்........... தொங்கி கொண்டிருப்பதும் சு.சாமி ஆரம்பித்து வைத்த கணக்குதான்.....

ஜெயலலிதா அதிகம் பயந்தது இந்த வழக்குக்காக மட்டும் தான்.