திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர்.
ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தையும், உடலையும் பார்த்து பலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணையுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர்.
ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர்களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப் பட்டுள்ளது.
ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்கட்டை முறி, தோலைக் கிழி, முழங்கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளையடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.
அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்களுக்கு உதவிய துரோகிகளை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.
அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.
ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.
- விடுதலை, 27.10.2005
9 comments:
அருமையான தகவல்
ஆனால் பெரியாரை கொண்டாடும் அவர் வழி நடகுறோம் என கூறிகொள்ளும் தலைவர்கள் கூட தீபாவளி வாழ்த்து சொல்கிறார்கள் ஏன்?
சிலை வழிபாடு கூடாது ஆனால் பெரியார்க்கு சிலை .. ஏன்
கடவுளை மறுப்பவர்களை நாங்கள் எதுவும் சொல்லுவத்ல்லை , ஆனால் நீங்கள் பைத்தியகாரன் என கிண்டல் செய்கின்றிர்கள் ஏன்?
இன்றைய நிலைக்கு என்ன செய்ய வேண்டும் என சிந்திக்காமல் என்னும் ஆரிய , திராவிட கதைகள் ஏன்?
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
சிலை வழிபாடு கூடாது ஆனால் பெரியார்க்கு சிலை .. ஏன்
October 25, 2011 1:36 PM //
பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம்
ஒரு வேளை இவர்களுக்காக இருக்குமோ....?
//Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said...
கடவுளை மறுப்பவர்களை நாங்கள் எதுவும் சொல்லுவத்ல்லை , ஆனால் நீங்கள் பைத்தியகாரன் என கிண்டல் செய்கின்றிர்கள் ஏன்?
October 25, 2011 1:37 PM//
நாங்கள் என்றால் யார்?
ஐரோப்பியர்களா? ஆப்பிரிக்க இனத்தவரா? ஆசியாவைச் சேர்ந்தவரா?..................
இல்லை லெமுரியா கண்டத்தை சார்ந்தர்களா?
இந்தியாவா? பாக்கிஸ்தானா? ஆப்கானிஸ்தானா? ஜிகாத்தா?.....................
பழங்குடி இனத்தவரா?
தலித் சமூகத்தவரா? பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரா?..................
இல்லை ஒட்டுமொத்த திராவிட இனத்தவரா?..............................
இல்லை ஆரிய சமூகத்தவரா? இல்லை கிருத்துவ சமூகத்தவரா? புத்த மார்க்கத்தை சார்ந்தவரா? ஜைன சமூகமா? சீக்கியமா?
இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்தவரா? ஷன்னியா, ஷியாவா?
கிருத்துவமா? ஆர்த்தடக்சா?, ரோமன் கத்தோலிக்கரா?, கத்தோலிக்கரா?, பெந்தகொஸ்தேவா? செவன்த் டேவா? புரோட்டஸ்தாந்தா?
இல்லை வடகலையா? தென்கலையா? தென்மேற்கு கலையா? வடமேற்கு கலையா? கிழக்கு கலையா? பொட்டா? புண்ணாக்கா? போடுகாலித்தனமா?.......................................................................................யார்? இந்த "நாங்கள்"?
//Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்றைய நிலைக்கு என்ன செய்ய வேண்டும் என சிந்திக்காமல் என்னும் ஆரிய , திராவிட கதைகள் ஏன்?
October 25, 2011 1:38 PM//
இன்றைய நிலை என்ன?..................................
சிந்தனையுடன்...........
//Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said...
ஆனால் பெரியாரை கொண்டாடும் அவர் வழி நடகுறோம் என கூறிகொள்ளும் தலைவர்கள் கூட தீபாவளி வாழ்த்து சொல்கிறார்கள் ஏன்?
October 25, 2011 1:35 PM//
****************
என்ன செய்வது? இப்படி கவலைப்படும் நபர்களே!...................................
*******************************
"//Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said...
கடவுளை மறுப்பவர்களை நாங்கள் எதுவும் சொல்லுவத்ல்லை , ஆனால் நீங்கள் பைத்தியகாரன் என கிண்டல் செய்கின்றிர்கள் ஏன்?
*************************
October 25, 2011 1:37 PM//"
..................................இப்படியும் கவலைப்படுகிறார்களே! இதில் எது உண்மை!?
******************************
Post a Comment