தீபாவளி கொண்டாடுவது - நாம் நமது இழிவை ஒப்புக் கொள்வது! பூதேவர்கள் என்பவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களுக்காகக் கிருஷ்ண பரமாத்மா அவதாரம் எடுத்து வந்தாராம்.
அசுரர்கள் என்பவர்கள் நாம்தான் - அதாவது திராவிடர்களாகிய நமக்கும் அவர்களுக்கும் (அதாவது பூதேவர்களான பார்ப்பனர்களுக்கும் அசுரர்களாகிய திராவிடர்களுக்கும்) நடந்த சண்டையில் பூதேவர்கள் சூழ்ச்சியால் ஜெயித்தனர்.
நமது திராவிட வீரன் நரகாசுரன் கொல்லப்பட்டான். அந்தநாள்தான் தீபாவளி.
எதிரியின் வெற்றியை விழாவாக நாம் கொண்டாடலாமா என்று கேட்பது நியாயமான கேள்விதான்.
ஏன் இதை இப்படி எடுத்துக் கொள்ளக் கூடாதா? நம் வீட்டில் ஒருவர் இறந்தால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில்லையா?
அதேபோல் தீபாவளியன்று குளிக்கிறோம்.
நரகாசுரனைக் கொன்ற லட்சுமியை அவமானப்படுத்துவதற்காக லட்சுமி படம் சுற்றிய லட்சுமி வெடியைக் கொளுத்தித் தூள் தூளாக்குகிறோம்.
நரகாசுரனைக் கொலை செய்ய விஷ்ணு பயன்படுத்திய சங்கு சங்கரத்தை, வெடியாக்கிக் கொளுத்தித் தீர்க்கிறோம்.
இதன் மூலம் இந்துக் கடவுள்களை நாம் கொளுத்தவில்லையா? அவ மானப்படுத்தவில்லையா? என்று கூடச் சொல்லலாமே!
கேட்பதற்கு நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் இந்த அர்த்தத்திலா நம் மக்கள் செய்கிறார்கள்?
கடவுள் பக்தியோடு அல்லவா இவற்றைச் செய்கிறார்கள் - குளித்து மூழ்குகிறார்கள் - சாமிக்குப் படைக்கிறார்கள்.
இதையே வேறு மாதிரி செய்தால் பொருத்தமாக இருக்குமே!
நரகாசுரனைக் கொன்ற கிருஷ்ணனை இதோ கொளுத்துகிறோம் என்று அறிவிப்பு செய்து கொளுத்தினால் கொஞ்சம் பிரயோசனப்படுமே.
நமது அன்னை மணியம்மையார் அவர்கள் இராவண லீலா நடத்தினார்களே - அதுபோல கிருஷ்ணன் பொம்மையைப் பெரிதாகச் செய்து வைத்து நல்ல வகையில் விளம்பரமும் செய்து, இந்தக் காரணத்துக்காகக் கொளுத்து கிறோம் என்று சொன்னால் - அது சரியாக இருக்க முடியும்!
இடையில் போதிய நாட்கள் இல்லாததால் அடுத்த ஆண்டாவது திட்ட மிட்டுச் செய்வதுபற்றி யோசிக்கலாம் அல்லவா!
------------------- “விடுதலை” 20-10-2011
2 comments:
அருமையான பதிவு. திராவிடர்கள் ஆகிய நம் மக்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு. நன்றாக எழுதியுள்ளீர். பகிர்வுக்கு நன்றி.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment