தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான்.
வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமய மாகும். படை வீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுதபூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்த வனாய் பார்ப்பன மந்திரிகளையும் பார்ப்பனக் குருமார் களையும் அழைத்து ஆலோசனை கேட்டான்.
அதற்கு அந்தப் பார்ப் பனர்கள், மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுதபூஜையில் அடுக்கி வைக்கப் பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின் மீது படை எடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜி யாவான். அவனோ ஓர் இந்து, மேலும் பரம வைணவன்.
ஆகவே, திரு மாலுக்கு மிகவும் உகந்த திருத் துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல் லையில் தூவிவிட் டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட் டான் என்று சொன்னார்கள்.
மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.
வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும் அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக்கொண்டு நகருக்குள் புகுந்தன. இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழா யினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்.
வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சை யினைக் கைப்பற்றின. இதனால்தானே பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கத் துரைத்தனம் கெட்டது என்ற பழமொழி ஏற்பட்டது போலும்.
ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண் மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா?
------------------------------ “விடுதலை” 1-10-2011