Search This Blog

12.10.11

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயுத பூஜை!-இதற்கு என்ன பதில் தினமணியாரே?

அண்ணா பல்கலைக்கழகத்தில் பூஜை

அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனவுடன் அரசு அலுவலகங்கள் மதச் சார்பின்மை என்னும் தத்துவத்தின் அணிகலன்களாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில் அரசு அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான வழிபாட்டுப் படங்கள், கடவுள்கள் இடம் பெறக்கூடாது என்று ஆணையிட்டார் (தமிழ்நாடு அரசு பொது (ஜெனரல்-எம்) இலாகா நினைவுக் குறிப்பு எண் 7553/66-2 நாள்: 29 ஏப்ரல் 1968).

இதனைத் தொடர்ந்து இந்தத் திசையில் மத்திய அரசின் சுற்றறிக்கைகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் வரிசையாக வந்ததுண்டு.

ஆனால், நிலைமை என்ன? அரசு அலுவலகங்களே (தலைமைச் செயலகம் உள்பட) அரசின் ஆணையை மீறி வருகின்றன; அரசு ஆணையை அரசு அலுவ லர்களே குப்பைத் தொட்டியில் வீசி எறிகின்றனர்.

இத்தகு மனப்பான்மை குடிமக்களை அரசு ஆணை - சட்டங்கள் இவற்றை மீறுவதற்கான ஆர்வத்தையும், துணிவையும் ஏற்படுத்தவில்லையா?

அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர். இந்தப் பல்கலைக் கழகத்தில் படித் தவர்களுக்கு உலகெங்கும் மதிப்புண்டு.

அண்ணா பெயரில் உள்ள இந்தப் பல்கலைக் கழகம் அண்ணாவின் ஆணையைத் துச்சசமாக மதிக்கிறதே, என்னே கொடுமை!

அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தில் ஆயுத பூஜை அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான சட்டமீறல் அல்லவா! அண்ணா அவர்களை அவமதிக்கும் செயல் அல்லவா!

அண்ணாவின் பெயரால் திராவிடத்தின் பெயரால் கட்சியை வைத்துள்ளவர்கள் - ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டிலேயே ராசிபலன் வெளியிடுகிறார்கள். இது ஒரு பக்கம் அண்ணா அவர்களை அவமதிக்கும் செயல்தான்.

இன்னொரு பக்கத்தில் பல்கலைக் கழகங்கள்,அரசு அலுவலகங்களில் சட்ட மீறல்கள்.

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர்மீதோ, அதுபோல அரசு அலுவல கங்களில் படையல் போட்டு தடபுடலாக ஆயுத பூஜை நடத்தும் அதிகாரிகள் மீதோ வழக்குத் தொடுத்தால் அவர்கள் குற்றக் கூண்டில் நிற்கவேண்டிய அவசியம் ஏற்படாதா?

காவல் நிலையங்களில் கேட்கவே வேண்டாம்! வாழை மரம் கட்டி ஒலி பெருக்கி வைத்துப் பூஜை போடும் கூத்தும் நடப் பதுண்டு.

காவல் நிலையங்களில் இது தொடர்பாக ஏலங்கள் நடப்பதும் உண்டு; கொள்ளை வசூலுக்கும் குறைச்சல் இல்லை.

மதச் சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்டத் துக்கு விரோதமாக நடந்து கொள்வதன்மூலம் கடுமையான தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

------------மயிலாடன் அவர்கள் 12-10-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

***************************************************

ஆயுத பூஜைக்கு கலைஞர் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்பதை முதன்மைப்படுத்தி, தினமணி பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.

பித்தலாட்டம்,

வக்கிரபுத்தி

என்கிற சொற்களைக் கையாண்டுள்ளது. இந்தத் தைரியம் - திமிர் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

விமர்சனங்கள் வரட்டும் - வேண்டாம் என்று சொல்லவில்லை - 88 ஆண்டுகள் காணும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை - அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரை இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சீண்டுவது - திராவிட இனவுணர்வைத் தூண்டுவதாகத்தான் பொருள்.

எது பித்தலாட்டம்? ஆரியர் - திராவிடர் என்று சொல்லுவது பித்தலாட்டமா? அப்படி என்றால் திருஞான சம்பந்தனை திராவிட சிசு என்று சொன்ன ஆதிசங்கரரை அந்தப் பித்தலாட்டத்தின் பட்டியலில் சேர்க்கவேண்டுமே, சேர்ப்பார்களா?

நாம் ஆரியர்கள், அதாவது அறிவுத்திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம்; நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்று எழுதிய ஆர்.எஸ்.எஸ்ஸின் குருநாதர் கோல்வாக்கரும் பித்தலாட்டக்காரர் ஆகமாட்டாரா?

ஆரியர் - திராவிடர் என்று உண்டாக்கியது திராவிடர் இயக்கமா? சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமா? ஆரியர் நாகரிகமா? என்ற சர்ச்சையைக் கிளப்பியது யார்?

எருதை, குதிரையாகக் கணினிமூலம் மாற்றி அங்கு இருந்தது ஆரியர் நாகரிகம் என்று - தினமணி தூக்கிக் கொஞ்சும் பி.ஜே.பி. ஆட்சியில் நடைபெற்றதே அது இரண்டு மடங்கு பித்தலாட்டம்தானே?

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரைத் தலையில் வைத்து, தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களை இந்தப் பிரச்சினையில் சாடும் தினமணியைக் கேட்கிறோம்:

அந்தக் கட்சியின் பெயரிலே அண்ணா இருக்கிறாரே - அவரின் கொள்கை இந்தப் பிரச்சினையில் என்ன? ஏன் அதைப்பற்றி எழுதத் தயங்குகிறது?

ஆரிய மாயை எழுதிய தலைவராயிற்றே அறிஞர் அண்ணா!

அவ்வளவுதூரம் கூடப் போகவேண்டாம் - அ.தி.மு.க.வின் பெயரிலேயே திராவிட இருக்கிறதே - அதற்கு என்ன பதில்? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் திராவிடத்துக்கு வேறு பொருள் என்று சமாளிக்கப் போகிறார்களா?

அண்ணா தி.மு.க.வைத் தனிமைப்படுத்தி, கலைஞரைத் தாக்கும் பார்ப்பனீயத்தின் பிரித்தாளும் புத்தியை இந்த இடத்தில் கவனிக்கத் தவறக்கூடாது!

அரசியலில் அத்தனைப் பார்ப்பனர்களும் கலைஞரைக் குறி வைக்கும் நோக்கம் என்ன?

திருச்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் மானமிகு கலைஞர் அவர்கள் அதற்கான பதிலைக் கூறிவிட்டார்.

உம் இனத்தவர் யார்? இனம் அல்லாதவர் யார்? என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று சுவையான கருத்தாழச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

நண்பன் யார்? எதிரி யார்? என்று தெரியாவிட்டால் அதன் நிலை என்னவாகும்?

தொல்காப்பியத்திலும், பதிற்றுப்பத்திலும் ஆயுத பூஜைபற்றி வருவதாகவே விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம்; அதற்காக அந்த மூட நம்பிக்கையை ஏற்றதல்ல திராவிட இயக்கம்.

பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதிச் சாத்தனார் இருந்தார் என்பதற்காக யாகங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா?

சிலப்பதிகாரத்தில் தமிழன் வீட்டுத் திருமணத்தில் மாமுது பார்ப்பான் வந்தான் என்பதற்காக சுயமரியாதைத் திருமணம் ஏன் என்றுகூட கேட்பார்களோ!

அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்கவேண்டுமா?

மூட நம்பிக்கை என்ற பெயரில் குதிரை சவாரி செய்தாலும், அதனை எதிர்ப்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை. அதனைப் பின்பற்றுவதுதான் இரட்டைக் குழல் துப்பாக்கியான தி.மு.க.வின் நிலைப்பாடாகவும் இருக்க முடியும்.

தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் கலைஞரிடமிருந்து பிரித்து கலைஞர் அவர்களைத் தனிமைப்படுத்தித் தாக்க முயலும் பார்ப்பனப் புத்தியைப் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லர் நாம்.

தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னனான செங்கமலதாசன் வேதியர் வெங்கண்ணாவின் சூழ்ச்சியால் எப்படி வீழ்ந்தான்?

ஆயுத பூஜை சமயத்தில், பீஜப்பூர் சுல்தானைப் படை எடுக்கச் சொல்லவில்லையா? பீஜப்பூர் சுல்தான் படையோடு வந்தபோது, ஆயுத பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்த போர் ஆயுதங்களை எடுக்கக் கூடாது என்று சொல்லப்பட்டதால், தஞ்சை வீழ்ந்ததே - ஆயுத பூஜையின் யோக்கியதை இதுதானே? இதற்கு என்ன பதில் தினமணியாரே?

செங்கமலதாசனைக் காட்டிக் கொடுத்து அந்நிய அரசனிடம் சன்மானம் பெற்ற வெங்கண்ணா பரம்பரைதானே தினமணி? அதன் கொடுக்கு புத்தி இப்படித்தான் இருக்கும்?

திராவிட இயக்கத் தலைவர்களைக் கேவலமான முறையில் விமர்சனம் செய்ய நினைத்தால்...

பதிலடி பத்து மடங்கு கிடைக்கும் எச்சரிக்கை!

----------------------- “விடுதலை” 12-10-2011

6 comments:

Veluran said...

Dinamani Article highlighted effective competition with another channels on Public holiday in disguised manner by Kalaignar TV. Why don`t they call other programmes in the same way.All the past references in Viduthalai RECALLS the AWARD given to Jayalalitha when she was in power. At that time is there any curtain shadowed that she is a Pappatthi?

Jai said...

உங்களுக்கு தெரியாதா,

பல திராவிட முன்னேற்ற கழக தோழர்கள், தங்கள் மத அறிகுறிகளை கழுத்து,விரல்,நெற்றி களில் தங்கள் அணிந்துள்ளனர்.

கருணாநிதி அவர்களுக்கும், இவர்களை ஆதரிக்கும் வீரமணி அவர்களுக்கும், வீரமணியின் சால்ரா ஓவியா அவர்களுக்கும் தெரியாத இப்படி பட்ட செயல் திராவிட கொள்கைக்கு எதிரானது என்று. இதை ஏன் வீரமணியோ, கருணாநிதியோ தட்டிகேட்கவில்லை? பதில் கூறமுடியுமா ஓவியா அவர்களே

வீரமணி உள்ள வரை திராவிட கழகம் பணம் சம்பாதிக்கும், கூடவே பெரியாரின் கொள்கையையும் அழிக்கும்.

தமிழ் ஓவியா said...

அண்ணா தி.மு.க.வுக்குச் சொல்லுங்கள்!

ஆயுத பூஜையைக் கலைஞர் ஏற்கவில்லை; ஆரியர் - திராவிடர் என்றெல்லாம் பேசுகிறார் என்று திமிரடியான வார்த்தைகளைப் பயன் படுத்தும் தினமணியே! தினமணியே!

கலைஞர், பெரியார், அண்ணா கொள்கை களைத்தான் சொல்லு கிறார். நியாயமாக பெரியார் அண்ணா கொள்கைகளைப் பின்பற் றாமல் அதற்கு எதிராக பார்ப்பனீயத்துக்கு வக் காலத்து வாங்கும் வகை யில் ஆயுத பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரைத் தான் விமர்சித்திருக்க வேண்டும், தினமணி! ஆயுத பூஜைபற்றி அண்ணாவின் அபிப் பிராயம் என்ன? இதோ! எண்ணிப்பார் கோபியாமல்! எலக்ட்ரிக் இரயில்வே,

மோட்டார் கப்பல், நீர் மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இவை களுக்காக மருந்து ஆப்ரே ஷன், ஆயுதங்கள், தூரதிருஷ் டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப்மெஷின் அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத் துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்,

இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனி தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் ஊழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற் றைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டு பிடிக்கும் வேலையிலே ஈடு பட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம்.

ஆயுதபூசை, சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்! அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர்; நவராத்திரி கொண்டாடி னவர்களல்லர்! நூற்றுக்கு நுறுபேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே

சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண் வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை

கர்ப்பூரம் கூட நீ செய்த தில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாத வன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இது வரை, என்ன, புதிய , அதி சயப் பொருளைக் கண்டு பிடித்தோம்? உலகுக் குத் தந்தோம் என்று யோசித் துப் பாரப்பா! கோபப் படாதே! உண்மை அப்படித் தான் நெஞ்சைக் கொஞ்சம் உறுத்தும். மிர ளாமல் யோசி. உன்னையும் அறி யாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல் களை எல்லாம் கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கி லேயன் வருவதற்கு இடையே இருந்த காலத் திலே அச்சு இயந்திர மாவது கண்டுபிடித்திருக் கக்கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டு பிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங் கத்தை அச்சடித்துப் படித்து அகமகிழ்கிறாயே! அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே! அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாடவைத்து மகிழ்கிறாயே! எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோ கப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

------தொடரும்

தமிழ் ஓவியா said...

சரசுவதி பூசை - விமரி சையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அசோசி யேடட் அல்லது இராயட்ர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில் லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை! சிபி, சினிமா பார்த்த தில்லை! தருமராசன், தந் திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளையெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கி றோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள் களைத் தந்த அறிவாளர் களை மறந்துவிடுகிறோம், அவர்கள்

சரசுவதி பூசை; ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவில் ராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கி றோம். இது முறைதானா?

பரம்பரைப் பரம்பரை யாக நாம் செய்து வந்த சரசுவதி பூசை; ஆயுத பூசை நமக்குப் பலன் தரவில் லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம் ஆச்சரியப்படும்படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதாரப் புருடர்கள் காலத்திலே கூட இல் லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டு பிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக் கும். அதையும் தாண் டினால் விவேகம் பிறக் கும். யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக் குள்ளாவது! - (திராவிட நாடு- 26.10.1947)

இதுதான் அண் ணாவின் கொள்கை! அந்த அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் கலைஞரைச் சாடுவதும், அந்த அண் ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத் தைக் கொடியிலும் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளரைச் சாடாமல் விடுவதும் எதற்காக?

மனுவாதி ஒரு குலத் துக்கொரு நீதி என்பார்களே - அது இது தானோ!
-------------"விடுதலை” 13-10-2011

நம்பி said...

//Jai said...

உங்களுக்கு தெரியாதா,

பல திராவிட முன்னேற்ற கழக தோழர்கள், தங்கள் மத அறிகுறிகளை கழுத்து,விரல்,நெற்றி களில் தங்கள் அணிந்துள்ளனர். //

அவங்க செய்யறது முட்டாள்தனம்னு தெரிந்த பிறகு ஏன்? அதை நாமும் செய்வானேன்! அவங்களுக்கு தபார்டா முண்டம்! நான் திராவ முன்னேற்றக் கழகமில்லை, "ஆரிய முன்னேற்றக் கழகம்" ஆனாலும் "எதையுமே" அதாவது " எதையுமே" அணியறதில்லேன்னு நல்லாத் தூக்கி, தூக்கி காட்டலாமே!

அதைவிட்டுட்டு அவங்களே அணியறாங்க! நானும் அணியறேன்னு சொல்றது எதுக்கு?

நாம அணியாம நம்ம குடும்பத்திலே இருக்கறவங்களையும், அணியாம மாத்திடலாமே...?

கொஞ்ச கொஞ்சமாத்தான் மாத்தணும்...முட்டாள் தனம் ஒரு இடத்துக்கு சொந்தமா? என்ன? அது எல்லா இடத்துக்கும் சொந்தம்? என்ன நான்ஞ் சொலறது....?

நம்பி said...

//Blogger Jai said...வீரமணி உள்ள வரை திராவிட கழகம் பணம் சம்பாதிக்கும்//

அது...ய்....மணியாக இருந்தாலும் பணம் சம்பாதிக்கும்!

பணம் சம்பாதிப்பது குற்றம் என்று எந்த சட்டத்திலாவது குற்றம் செல்லியிருக்குதா?
இல்லை

"சங்கரமடம்"

பணம் சேர்க்காமா விட்டுடுச்சா?

5000 கோடி, 6000 கோடின்னு அந்த மடத்துக்கு வருமானம் வரலை!

அதை வைச்சு "சங்கரராமனை" கொலை பண்ணி புண்ணிய காரியம் பண்ணலை....

அதிலிருந்து தப்பிக்க நம்மவா ஜட்ஜூக்கு பேரம் பேசலை...அந்த டேப்பு வெளியே வரலை....எல்லாம் பணம் இருந்தா தானேய்யா கடவுளுக்கே பூஜூஐ பண்ண முடியும்...?

கோயில் வாசல்லே, மரத்துக்கு மரம் பணத்துக்காக உண்டியலை கட்டிட்டு பணத்தை பார்த்து "வ்வா வ்வா...ன்னு" வாந்தி எடுக்கிற மாதிரி நடிச்சா போதுமா?

பணம் சம்பாதிச்சாதான்யா "ஜெய்"க்கமுடியும்...என்னமோ பணத்தை சீண்டாத ஆளுமாதிரி ஒவ்வொருத்தரும் சடிச்சா எப்படி?

இதை இணையத்தல தெரிவிக்கறதுக்கு கூட பணம் வேணும்.

"துட்டு" இருந்தா தான் "புட்டு".

என்னமோ அவனவன், தான் சம்பாதிச்ச சொத்தை அப்படியே அனாதை ஆசிரமத்துக்கு எழுதிட்டு போற மாதிரி.....

அப்படியே எழுதினாலும் அப்பனுக்கு கொள்ளிக்கூட போடமாட்டான்....கொள்ளி போடாப்புனா போறான்னு பகுத்தறிவுடன் அனாதை ஆசிரமத்துக்கு எ.ழுதற அப்பன் கூட்டமா இங்க இருக்குது!

அப்பன், ஆத்தா லஞ்சம் வாங்கின காசுல படிச்ச புள்ளைங்க என்ன டிகிரியை தூக்கி கீழே கிழிச்சி போட்டுடுதா?

அதுங்க அந்த லஞ்ச பணத்துல படிச்சுட்டு வந்து தான் இங்க இணையத்துல ஊழலை பத்தி பிக்காரித்தனமா எழுதுதுங்க!

பைசா பாக்கியில்லாம வரி கட்டுறதா இங்க எழுதுது!

அவனவன் வாய்நாத்தம் அடுத்தவனுக்குத்தானே தெரியும்!

அதுல வேற சாப்பிட்டாவுதடனே! வாய் கொப்பளிக்கறதும் கிடையாது. அதுல போன வருஷத்து "சாத்துமஞ்" சாதம் பல்லுல ஒட்டிண்டு இருக்கும்! கேட்டா ஜீவன் காருண்யம்பேள்!

பல்லு விளக்கினா பாக்டிரியா செத்தும் போவும்ளே! அப்புறம் எப்படி ஜீவகாருண்யம் பார்க்கிறது?

எப்பவும் ஊத்தை! இப்பவும் ஊத்தை! அவ்வளவு தான்!