Search This Blog

3.9.11

இரண்டாம் உலகப் போரில் பெரியார் இங்கிலாந்தை ஆதரித்தது - ஏன்?

ஜெர்மனியில் போர் துவக்கி நடத்தி வெகுவேகமாக முன்னேறிய ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ஃப் இட்லர், தான் ஜெர்மானியன் என்பதைவிட ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதோடு, ஆரிய இனத்தின் மேன்மைக்குப் பாடுபட்ட அவர்களை உலகின் முதல் நம்பர் குடிமக்களாக்குவதே தமது நாடு பிடிக்கும் நோக்கம் என்று ஆணவத்துடன் பிரகடனப்படுத்தினார். ஜெர்மனியில் சமஸ்கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித்தார் இட்லர். நாசிசத்தின் உயிர்நிலையே அதில்தான் உள்ளதாகப் பிரகடனம் செய்தார் இட்லர்! ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, வேறு இனக் கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்ற அவைகளுக்குத் தடை விதித்தார். (அவரது சுவஸ்திக் சின்னம்தான் இன்றைய இனவெறி ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சின்னம் ஆரிய வர்த்தம், சமஸ்கிருத கலாச்சாரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி இவைகளுடைய லட்சியமும்கூட)

பிரிட்டிஷ் அரசு கல்வி மற்றும் ஜாதி ஒழிந்த பல சீர்த்திருத்தங்கள், சதி என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் போன்றவைகளைச் செய்து ஆரிய (மனு) தத்துவங்களுக்கு விரோதமான வகையில் செயல்பட்டதால், பார்ப்பனர்கள் தேச பக்தி என்ற பெயரால் மனுபக்தி, பார்ப்பன மேலாண்மையை பாதுகாக்கச் செய்தனர்!

ஜப்பான்காரன் பர்மாவைப் பிடித்து கல்கத்தா வரையில் வந்தபோது, சென்னை மயிலாப்பூர், மாம்பலத்தில் உள்ள பார்ப்பனர்கள் அந்த இரண்டு மொழிகளையும் படிக்கவே ஆரம்பித்தனர் என்பது யாருக்குத்தான் தெரியாது? விடுதலை ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்களே அரசு ஏடாக அது தொடர்ந்தபோதும் ஆசிரியராகத் தொடர்ந்தார். நமது பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தளபதி அண்ணன் அழகிரி அவர்கள் எல்லாம் போர்ப் பிரச்சாரகர்களாக (War Propagandists) நியமனம் பெற்றே பணி புரிந்தார்கள்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய இட்லர் வெற்றி பெற்று இருந்திருப்பாரே யானால், இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை நடுநிலை வரலாற்று ஆசிரியர்களேகூட இப்போதும் ஒப்புக் கொள்கிறார்கள்.

தனது கொள்கையான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து திராவிட சமுதாயத்தை நாட்டைக் காப்பாற்ற இது சிறந்த வழி என்பதை, எதையும் முன்னோடியாக சிந்திக்கும் தந்தை பெரியார் அவர்கள் இப்படிச் சிந்தித்துச் செயல்பட்டார்கள்.

பாமர மக்கள் வழியிலே சென்று சிந்திப்பதைவிட அவர்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று அறிவுறுத்தும் வகையிலேயே அவரது அணுகுமுறைகள் எப்போதும் அமையும் என்பதற்கு இரண்டாம் உலகப் போரில் அவர் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைத்ததே சிறந்த எடுத்துக்காட்டாகும். அதுதான் உண்மையான நாட்டு நலத்தில், மக்கள் நலத்தில் அக்கறையுள்ள ஒரு செயல்! விடுதலை ஏன் அரசு ஏடாக ஒரு கால கட்டத்தில் வெளிவந்தது என்பதற்கான மூலகாரணம் இப்போது விளங்குகிறதா?

--------- -------திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய விடுதலை போர்ப் பிரச்சார ஏடு ஆனது ஏன்? "விடுதலை பவள விழா மலர்" பக்கம் 84-86

3 comments:

நம்பி said...

//ஜெர்மனியில் போர் துவக்கி நடத்தி வெகுவேகமாக முன்னேறிய ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ஃப் இட்லர், தான் ஜெர்மானியன் என்பதைவிட ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதோடு, ஆரிய இனத்தின் மேன்மைக்குப் பாடுபட்ட அவர்களை உலகின் முதல் நம்பர் குடிமக்களாக்குவதே தமது நாடு பிடிக்கும் நோக்கம் என்று ஆணவத்துடன் பிரகடனப்படுத்தினார். ஜெர்மனியில் சமஸ்கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித்தார் //

இது புதிய செய்தி தான்....இது பற்றித் தெரியவில்லை...ஏனென்றால் இட்லர் இந்தியர்களையும், நாய்களையும் உள்ளே விடாதீர்கள் என்று கூறியவர் எப்படி? சமஸ்கிருதத்தை ஆதரித்தார் என்று தெரியவில்லை...

ஆரியர்கள் பூர்வீகம் இந்தியா இல்லை தான் என்றாலும், இங்குள்ள ஆரிய பார்ப்பனர்கள் மொழியை அவர் பின்பற்றியிருக்க வேண்டிய அவசியமென்ன?

இங்கு பல ஆயிரக்கணக்கான ஜாதிப்பிரிவுகள் பற்றி தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. வர்ணாசிரமம் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

தலித் வாழ்க்கை முறை, பிற்படுத்தப்பட்டவர்கள் வாழ்க்கைமுறை... மனிதனே இழிவுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவைகளுக்கெல்லாம் சோம்பேறிகளான பார்ப்பனர்கள் தான் காரணம் என்பதை பற்றியும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மாறாக 35 கோடி மக்களையும் அவர் ஆரியராக எண்ணிக்கொண்டார். அதனால் தான் இந்த வாசகத்தை வெளிப்படுத்தினார். கேவலம் 1 லடசம் யூதர்களிடன் 35 கோடி ஆரிய இனம் அடிமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகையால் "இந்தியர்களையும், நாய்களையும்" ஜெர்மனியின் உள்ளே! விடாதீர்கள்!" என்று அறிவித்ததாக ஒரு கருத்து உண்டு.


ஆகையால் இந்தத் தகவல் சற்று முரண்பாடாக தெரிகிறது. (தனிப்பட்ட கருத்து)

அவரை (இட்லர்) பொறுத்தவரை யூதர்கள் தான் பிறந்து வாழ்ந்த ஆஸ்திரிய நாட்டில் அவரை அவமானப்படுத்தியதினாலும், இன்னும் இதர ஜெர்மானியர்களின் வளர்ச்சிக்கு தடையாக யூதர்கள் இருந்ததினாலும் தான் அவர் யூதர்கள் மேலும், கம்யூனிசவாதிகள் மேலும் வஞ்சம் பூண்டார் என்று வரலாற்றியலாளர்கள் கூறுகிறார்கள்.

(இதுபற்றி கலைஞர் தொலைக்காட்சியில் இன்றுவரை தொடர்ந்து வரும் "வெற்றிச்சரித்திரம்" என்ற உலகப்போர்கள் பற்றிய வரலாற்றுத் தொடரிலும் அவரின் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது)

(ஆஸ்திரியாவில் சிறுபான்மையினராக ஜெர்மானியர்கள் வாழ்ந்திருந்தனர்)

யூதர்கள் இன்றளவில் பாலஸ்தீனியர்களுக்கு எப்படி விரோதிகளாக இருக்கின்றனரோ? அதேபோல் அன்றைய நிலையில் ஜெர்மானியர்களுக்கும் யூதர்கள் எதரிகளாக விளங்கினார்கள். யூதர்களும் அன்று ஜெர்மானியர்களை அப்படித்தான் நடத்தினார்கள்.

ஜெர்மனி முதல் உலகப்போருக்குப்பின் பெரும் பின்னடைவை சந்தித்தது.

வல்லரசு நாடுகளான பிரிட்டன், அமரிக்கா, பிரான்ஸ் நாடுகள் ஜெர்மனிக்கு எதிராக ஏற்படுத்திய வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தினால் இன்னும் பெரும் பாதிப்பை ஜெர்மனி சந்தித்தது.

ஜெர்மனியின் கரன்சியான (ரூபாய்) மார்க், அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பாக 4 மார்க்காக முதல் உலகப்போருக்குமுன் இருந்தது.

ஆனால் முதல் உலகப்போருக்குப் பிறகு அந்த கரன்சி அமெரிக்க கரன்சியான 1 டாலருக்கு 3000 மார்க்குகளுக்கு மேலும் உயர்ந்து பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்தது.

அச்சமயத்தில் ஜெர்மனி மக்கள் வறுமையால் வாடியிருந்தினர். அன்றைய நிலையில் யூதர்களும், கம்யூனிசவாதிகளும் தான் சற்று முன்னேறிய நிலையில், செல்வந்தர்களாகவும் அன்றைய நிலையில் ஜெர்மனியில் இருந்தனர்.

அவர்கள் எவருமே? ஜெர்மனியர்களின் வறுமையை ஒழிக்கப் பாடுபடவும் இல்லை, அவர்கள் பட்டினிப் போராட்டத்தினைப்பற்றி கவலைப்படவும் இல்லை.

இதெல்லாம் தான் இட்லர் தனது யூத எதிர்ப்பு வெறியை வெளிக்காட்டிக்கொள்வதற்கான காரணமாக அமைந்தவை. வரலாற்றியலாளர்கள், கூறுபவைகளும் இவைகள் தான்.


தொடரும்...1

நம்பி said...

தொடர்ச்சி.....1

இங்கே இடலர் குறிப்பிடும் ஒருலடசம் யூதர்கள் என்பது ஆங்கிலேயர்களை குறிப்பது. அதே போன்று காந்தியும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இறங்கத்தான் ஆசைப்பட்டார். இதை காந்தி என்ற ஆங்கிலேயர் எடுத்த திரைப்படத்திலும் இது குறித்த காட்சிகள் காட்டப்பட்டிருக்கும்,


இரண்டாம் உலகப்போரில் காந்தி ஆங்கிலேயருடன் சேர்ந்து போர் புரியவே விரும்பினார். ஆனால் அதற்கு பதிலீடாக நாட்டின் சுதந்திரத்தை கேட்டார்.


அதற்கு ஆங்கிலேயர் கூறிய பதில் "உங்களுக்கு என்ன குறை! நாங்கள் பேருக்குத்தான் ஆளுகிறோம்! எல்லா மட்டங்களிலும் நீங்கள்தான் இருக்கப்போகிறீர்கள்! இங்குள்ள பல பிரிவினரை எப்படி ஒன்று சேர்ப்பீர்கள்!" என்ற கருத்தை ஆங்கிலேயர்கள் முன் வைத்தனர்.....அப்போது காந்தி கூறியது!..................

........அதே இட்லரை போன்றே கருத்தை முன்வைத்தார்...

"கேவலம் ஒரு லட்சம் எண்ணிக்கை கொண்ட அந்நியரின் நிழலில் 35 கோடி சொந்த மண்ணின் மக்கள் அடிமையாக வாழ்வதா? எங்கள் பிரச்சினையை நங்கள் பார்த்துக்கொள்கிறோம்...."

என்று பிடிவாதமாக இருந்தார்.

ஆனாலும், ஆங்கிலேயரை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்துதான் அவரிடம் மேலோங்கி இருந்தது. இதை அன்றைய காங்கிரஸ் குல்லாக்களும் அறிந்திருந்தனர். (நேரு உட்பட).


இந்தக் குல்லாக்களின் வலியுறுத்தலால் தான் அவர் இடலர் பக்கம் சாய்ந்தார் என்ற வரலாறும் உண்டு. இதை அந்த காந்தி திரைப்படத்திலும் கோடிட்டு காட்டியிருப்பார்கள்.

நம்பி said...

//இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை நடுநிலை வரலாற்று ஆசிரியர்களேகூட இப்போதும் ஒப்புக் கொள்கிறார்கள்.//

இட்லர் என்ற ஆற்றல் மிக்க சர்வாதிகாரி இல்லையென்றால் இங்கிலாலாந்து, பிரான்சு என்ற வல்லரசுகளின் பிடியில் இருந்த காலனி நாடுகள் எதுவும் விடுதலை பெற்றிருக்காது என்ற கருத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள். இன்னும் பல ஆண்டுகள் துன்பப்பட நேர்ந்திருக்கும். அதில் இந்தியாவும் சேர்ந்திருக்கும்.

எப்படி? என்றால் இட்லரை தலைவராகக் கொண்ட "ஜெர்மனி" என்ற சிறிய நாடு என்று ஒன்று இல்லையென்றால் இந்தளவுக்கு, வேறுயாரும் துணிவுடன் வல்லரசு நாடுகளை எதிர்த்து போர் புரியத் துணிந்து இருக்கமாட்டார்கள். ஏன்? ரஷ்யா என்ற வல்லரசும் தோன்றியிருக்காது.

உண்மையில் இட்லருடன் சமாதான ஓப்பந்தத்தை கடைப்பிடித்தவர் தான், ரஷ்ய அதிபரான "ஜோசப் ஸ்டாலின்",

அந்த ஓப்பந்தத்தை இட்லர் தான் கம்யூனிசத்தின் பால் கொண்ட வெறுப்பால் மீறினார். வீண் சண்டைக்கும் போனார்.

ஏறக்குறைய 5 ஆண்டுகள் தொடர்ந்தார் போல் நடந்த சண்டையில் வல்லரசு நாடுகளிடம் இருந்த அனைத்து துருப்புகளும் துடைத்து எறியப்பட்டன. இனி போர் போரிவதற்கு ஆட்களே இல்லை என்ற நிலையில் தான் காலனி நாடுகளில் உள்ள வீரர்களை பயன்படுத்தியது. இது "வெற்றிசரித்திரத்தில்" குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அவர்கள் அதிக ஈடுபாட்டுடன் போர் புரியவில்லை. அடிமையாக இருந்து கொண்டு எவன்? தீரத்துடன் போர் புரிவான்.

இந்தியாவைப் பொருத்தவரை, இந்தியாவின் சார்பில் பங்கு பெற்ற இந்திய நாட்டு குடிமக்களுக்கு, இட்லரால் மறைமுகமான இலாபம் தான்.

இன்னும் சொல்லப்போனால் இட்லரால் ஒரு தமிழர் ஆங்கிலேயப்படையில் இருந்து உயிர் தப்பி வந்திருக்கார். இப்போது இருக்கிறாரா? என்று தெரியாது?

அவரைப்பற்றிய குறிப்பு பிபிசி தமிழோசையில் இருக்கிறது. அவர் குரல் பதிவுடன்.

அன்றைய நிலையில்.......

அந்த தமிழர் பிரிட்டன் ராணுவத்தில் தொழில்நுட்பளாராக பணியில் சென்று இடலரின் நாஜிப்படையிடம் சிக்கிகொண்டார். இவருடன் சேர்ந்து பல இந்தியர்களும், தமிழர்களும் சிக்கிகொண்டனர்.

அதே போன்று பிரிட்டன் நாட்டு சொந்த துருப்புகளும் இட்லரின் படையினரிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் யூதர்கள். ஆகையால் அவர்களை மட்டும் இட்லரின் துருப்புகள் கைது செய்தது. நாஜிக் கேம்புக்கும் (கைதிகள் முகாம்) அனுப்பியது. தமிழர்களான் இவர்களை திரும்பிப் பார்க்காம ஒடுங்கடா! என்று விடுதலை செய்து விரட்டியடித்தனர் நாஜிப்படையினர்.

இட்லர் "யூதபகைமை" என்பதை கொண்டிராமல் இருந்திருந்தால் இட்லரைப் போன்ற சிறந்த ராஜதந்திரி, மிகச்சிறந்த அரசியல்வாதியை உலகெங்கிலும் காணமுடியாது.

இவ்வளவு பெரிய சர்வாதிகாரி நாட்டின் ஒட்டு மொத்த வாக்குகள் கிட்டத்தட்ட 96 சதவீத வாக்குகளை பெற்ற நபர். இளமையில் ஏழ்மையிலேயே உழன்றவர், வறுமையில் வாடியவர், பலரால் உதாசீனப்படுத்தப்பட்டவர், யூதர்களாலும் உதாசீனப்படுத்தப்பட்டவர் என்று பல முகங்கள் இருந்தாலும்.

இட்லர் தனக்காக ஒரு பைசா கூட சேர்த்துக்கொள்ளவில்லை. எடுத்தாலும் யாரும் கேட்கப்போவதில்லை. என்று அரசியல் வட்டாரத்தில் அவர் புகழ் பாடப்படாமல் இல்லை.

பெண்கள் விஷயத்தில் கண்ணியத்துடன் நடந்து கொண்டார். அவர் ஆருயீர் நண்பர் முசோலினியுடன் ஒப்பிடுகையில் இட்லர் பெண்கள் விஷயத்தில் பணபாளராகத்தான் நடந்து கொண்டார்.

இட்லரின் ஆட்சி காலத்தில் பெண்கள் அதிக அளவில் முன்னேற்றமடைந்து இருந்தனர். அதில் ஜெர்மனி பெண்களை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு முன்னேற்றியது இனவெறியை வன்மையாக குறிக்கிறது.

அங்கு இருந்த ஆரியன் ரேஸ் வேற! இங்கு பார்ப்பனன்கள் ஆரியன் வேற என்பது போல் தான் படுகிறது.

இது உண்மையில் இங்குள்ள பார்ப்பனர்களை பற்றியும், அவர்களின் அட்டூழியங்கள், வர்ணாசிரமம் பற்றியும் முழுமையாக இட்லருக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக காரி முழிந்திருப்பார்.

அப்போதே சுபாஷ் சந்திரபோசை ஒடவிட்டிருந்தாலும் ஒடவிட்டிருப்பார். ஜெர்மானியார்கள் தங்கள் உழைப்பை இட்லரின் பொருட்டு அபரிமிதமாக ஜெர்மனிக்கு வழங்கினர். யூதர்கள் அவர்களுக்கு அடிமையாக நிறுத்தப்பட்டனர் என்பது தான் கொடுமை.


அதாவது அங்கு நடந்தது பழிக்குப் பழி என்ற படலம் தான். நீ என்னை பழிவாங்கினாய் பதிலுக்கு நான் உன்னை பழிவாங்கினேன்.

இன்று யூதர்கள் இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுடன் அட்டூழியம் புரியவில்லையா?