Search This Blog

5.9.11

இந்து என்றால் திருடனா?


இந்து என்றால் திருடன் என்று கலைஞர் சொல்லி விட்டார் என்று சிலர் தாண்டிக் குதித்தனர். அது கலைஞர் தன் கற்பனையில் கூறிய சரக்கு அல்ல; கமலபதி திரிபாதி என்ற உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எழுதிய நூலிலிருந்தே ஆதாரம் காட்டினார்.

பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள ஞானசூரியன் எனும் நூலான பெட்டகத்தில் சுவாமி சிவானந்த சரஸ்வதி கூறியுள்ளார். பாரசீக மொழியில் இந்து என்றால் திருடன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத் துக்காட்டியுள்ளார்.

அவ்வளவு தூரம் போவானேன்? திரு மங்கை ஆழ்வார் வைணவ ஆழ்வார்களுள் ஒருவன்; அவன் என்ன செய்தான் தெரியுமா?

நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. அதனை ஆலிநாடர் (திருமங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச் சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர்

ஒருவரும் இலர் - இப்படிக் கூறுவது திராவிடர் கழக வெளி யீடல்ல - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் கூற்றும் அல்ல.

சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவை (பக்கம் 7 - வரிகள் 26-30) பறைசாற்றுகிறது. குரு பரம்பரப்பிரபாவம் என்ற வைணவ நூலும் இதனை வழிமொழிகிறது.

நாகப்பட்டினத்தில் இருந்த பசும்பொன்னாலான புத்தர் சிலையைத் திருமங்கை ஆழ்வார் என்ற ஆழ்வார் திருடினான் என்று கூறிவிட்டு, அவன் திருடிய நேரத்தில் கடவுள் தன்மை உடையவனாக இருந்தான் என்பதால் அவனைக் குற்றம் கூற முடியாது என்று அடித்துக் கூறப்படுகிறது.

ஒன்று மட்டும் திட்ட மிட்ட முறையில் தெளிவாகிறது. கடவுள் தன்மை உடையவன் ஒருவன் திருட்டு வேலை செய் திருக்கிறான் என்பதை தஞ்சைவாணன் கோவையே கூறித் திருட்டை நியாயப்படுத் தியுள்ளது.

திருட்டு என்பது திருட்டுதான். அவன் கடவுள் தன்மை உடையவனாக இருந்தால் என்ன? இல்லாமல் இருந்தால் என்ன?

கடவுள் தன்மை உடையவன் திருடினான் என்றால், திருட்டுக்குத் தெய்வீக அங்கீகாரம் கிடைத்து விட்டதாகப் பொருளாகவில்லையா? இந்து என்றால் திருடன் என்று சொன்னால் சீறிஎழும் சிரோன் மணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

---------------- மயிலாடன் அவர்கள் 4-9-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

கடவுள்களிடம் கற்ற காலித்தனம்


வழக்கம் போல இந்து முன்னணி தலைவர் பூணூலை வாலாக்கிச் சுழற்றியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் ஊர்வலத்துக்கு காவல் துறையிடம் அனுமதி வாங்குவது - அவர்கள் கூறும் பாதைகள் வழியாகத்தான் செல்லுவோம் என்று உறுதி அளிப்பது - ஆனால் திடீரென்று முஸ்லிம்கள் இருக்கும் பகுதி வழியாகத்தான் செல் லுவோம் என்று அடம் பிடித்து - வன்முறையை முறுக்கிக் காட்டுவது - காவல் துறை தடிகளைத் தூக்க ஆரம்பித் தால் கீழே உட்கார்ந்து ஒட்டாரம் பிடிப்பது. பிறகு கைது செய்யப்படுவது - மாலையில் விடுவிக்கப் படுவது என்பது இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் தமாஷான நாடகக் காட்சி.

இந்த ஆண்டும் இதனையே அரங்கேற்றி உள்ளனர். இவ்வாறு செய்யப்போகிறார்கள் என்று விடு தலையும் முன் கூட்டியே தெரிவித்தும் உள்ளது.

இவர்களின் ஒழுக்கம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பது இதன் மூலம் அறியலாம்.

ஆனால், பேசுவது மட்டும், அடேயப்பா! முதுகு பக்கமும் ஒரு வாயைக் கடன் வாங்கி வைத்துக் கொண்டு ஒலிபெருக்கி வைத்துப் பேசுவார்கள்.

ஒழுங்கு, கட்டுப்பாடு, தார்மீகப் பண்பு என்பவை எல்லாம் எங்கள் முடியில் கூட இருக்கிறது என்று முடிபிளந்து பேசுவார்கள். அவர்களின் யோக் கியதைதான் சென்னை திருவல்லிக்கேணியில் சிரிப் பாய் சிரித்ததே - நேற்று!

அவாள் மீது குற்றம் இல்லை. அவர்களின் கடவுள்களே சண்டை போடுகின்றன, கொலைகள் செய்திருக்கின்றன, கற்பழித்து இருக்கின்றன; விபச்சாரம் செய்திருக் கின்றன. அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்தால் தான் அசல் கற்புக்கரசி என்று காவியமே எழுதி இருக்கின்றன.

ஏன், இவர்கள் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்களே. யாருக்கு? விநாயகருக்குத் தானே? அந்த விநாயகன் என்ன செய்தான்?

தன் தம்பி சுப்பிரமணியம் - அசுரர்களுடன் (திரா விடர்களுடன்தான்) பத்மா சுரனுடன் சண்டையிட்ட போது, தம்பியால் போரில் தாக்குப் பிடிக்க முடியாது நிலைக் குலைந்த போது, இந்த விநாயகக் கடவுள் என்ன செய்தானாம்?

அழிக்க, அழிக்க அசுரர்கள் புற்றீசல்களாக வந்து கொண்டே இருந் தார்களாம். எங்கிருந்து வந்து கொண்டிருந்தனராம்?

வல்லபை என்ற அசுர குலப் பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வந்து கொண்டிருந்தனராம். (கற் பனையிலும் ஆபாசம் தானா?)

விநாயகன் என்ன செய்தானாம்? தன் தும்பிக்கையால் பெண்ணின் குறியில் வைத்து அடைத்தானா. இப்படி கடவுள்களே கீழே இறங்கி வந்து கீழ்த் தரமாக சண்டை போட்டுக் கொண்டிக்கும்போது, அந்தப் பிள்ளையாரின் பக்தர்கள், சுப்பிரமணியனின் சோதாக்கள் முச்சந்திகளில் முண்டா தூக்க மாட்டார்களா? சண்டியர்த்தனத்தைக் காட்ட மாட்டார்களா? அதைத் தான் வழக்கம் போல திருவாளர் ராம. கோபா லன் தலைமையில் செய்து காட்டியுள்ளனர்.

காவல் துறையினர் கொஞ்சம் லத்தியைத் தூக்கி யிருந்தால் அப்பொழுது தெரியும் சேதி? இந்தச் சூராதி சூரர்கள் வேட்டியைக் காணோம், துண்டைக் காணோம் என்று ஜகா வாங்கியிருப்பார்களே!
----------”விடுதலை” 6-9-2011