அறிஞர் அண்ணா 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனைகள் நம் நாடு ஏழை நாடா?
நம் நாட்டை ஏழை நாடு என்று கூறுகிறார்கள். ஏழை நாடு என்பது பொய். இரண்டாவதாகப் பற்றற்று வாழ்கின் றார்கள். இதுவும் பொய். இந்தப் பொய் யுரைகளை நிலைக்க வைக்கவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள்.
ஏழை நாடு என்றால், ஏழை நாட்டிலே வைர நாமங்கள் படைத்த ஸ்ரீரங்கநாதனோ, வைரக்கிரீடம் தரித்த வெங்கடாசலபதியோ, எந்த மார்வாரியாலும் அளவிட்டு மதிப்பிட முடியாத மதிப்புப் பெறும் மூக்குத்தியுடைய மதுரை மீனாட்சியோ இருக்க முடியாது.
நம் நாட்டில் 100-க்கு 88 பேருக்குப் படிப்பில்லை. வாழ்விலே சுகமில்லை; வசதியும் இல்லை. தொழிலாளர் நிலைமையோ சொல்லொணாத் துயரம். நகரத்திலே வேலை செய்யும் தொழிலாளி - அவனுடைய வேலை நிறுத்தம் - அவனுடைய புரட்சிக்குரல்கள் - அவனுடைய வீடு - வீட்டிற்குள் நுழைய வேண்டுமென்றால், அவன் குனிந்துதான் செல்ல வேண்டும் - வீட்டினுள் நுழைந் தாலோ சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் அவன் மனைவி காட்சியளிப்பாள்.
இன்னும் இதைவிட மோசமான நிலைமையில் இருக்கிறான் நாட்டுப் புறத் தொழிலாளி. வரப்பு ஓரம்தான் அவனுக்கு டின்னர் டேபிள். நண்டு வளை வயல்கள் தான் அவன் குழந்தைகள் விளையாட்டு மைதானம். எருமைகள்தான் அவனுக்கு ஓடும் குதிரைகள். இருசு ஒடிந்த இரட்டை மாட்டு வண்டிதான் அவனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார். காளி கோயில் விளக்குத் தான் அவனுக்கு இரவிலே வெளிச்சம். நல்லதங்காள் கதைதான் அவனுக்குச் சிறந்த இலக்கியம். அவனை முன்னேற வொட்டாமல் தடுப்பதெல்லாம், தத்துவ மும் முத்மார்த்தமும்தான்! அவன் செய்யும் போரிடையே அதுதான் தடையாக நிற்கின்றது.
வைரத்திலே வெள்ளை நாமம் என்றால், கெம்புக் கல்லினால் ஆக்கப் பட்டது சிவப்பு நாமம். மூலஸ்தான் முதற் கொண்டு மடைப்பள்ளி வரை கையாளப் படும் சாமான்கள் அத்தனையும் வெள்ளி. வெள்ளி அண்டாக்கள், வெள்ளியிலான குத்துவிளக்குகள் எண்ணில. ஆத் மார்த்தத் துறையிலே ஈடுபடும் அன்பர்கள் இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பொருள் அழியக்கூடியது; பொருள் மீதுள்ள பற்றை அகற்றுங்கள்; பொருள் தேவையில்லை; பற்றற்றிருப்பதே ஆண்ட வனை அடியும் வழி என்று பேசிவிட்டு, அதே ஆண்டவனிருக்கும் கோயில்களில், இவ்வளவு பொருள்களா? சாதாரணப் பொருள்களல்ல! இலட்சக் கணக்கில் மதிப்பிடக்கூடிய பொருள்கள்! திருவாவடு துறை ஆதீனத்திற்கு 2000 வேலி நிலங்கள் ஏன்? திருப்பதி வெங்கடேசு வரனுக்குப் பல இலட்சங்கள் பெறுமான முள்ள கிரீடங்கள் எதற்காக? தீராத வல்வினைத் தீர்த்தருளும் வைத்தீசு வரனுக்கு எதற்காக அத்தனை சொத் துக்கள்? எந்த ஆண்டவனும் மக்களுக்காக அத்தனை பொருள்களையும் திருப்பிக் கொடுத்ததாக, இதுவரையிலும் இல்லை. இந்தக் காட்சிகளெல்லாம் ஒரு புறம் என்றால், வயிறொட்டி, கண் குழிந்து, வாயுலர்ந்து, வரண்ட தலையனாய், வாடிய நெஞ்சனாய்க் காணப்படும் ஏழை மற்றொரு புறம்!
அன்று உத்தமர்கள் இருந்திருக்கலாம். இன்றுள்ளவர்கள் உலுத்தர்கள் என்று உதாசீனம் செய்யப்படலாம். ஆனால், உத்தமர்கள் காலத்திலேயும், அவதார புருஷன் ராமன் காலத்திலேயும், நளன் காலத்திலேயும், அரிச்சந்திரன் காலத் திலேயும், தண்டவாளம் இல்லை - இரயில் ஓடியதாகக் காணோம் - ஆனால், உலுத் தர்கள் என்று கூறப்படுகின்ற நம்முடைய நாசகாரக் காலத்திலே, இரயில் ஓடு கின்றது. இந்த உத்தமர்கள் - அவதார புருடர்கள் காலத்திலே, சீதை காணாமல் போனவுடன் இராமன், ஏ மரமே, கொடியே, மலரே, வண்டே, பறவையே, புள்ளினமே, முகிலே, முகிலூரும் வானே, நிலவே, என் சீதையைக் கண்டீரா? என்று கேட்டானே தவிர, டெலிபோனை எடுத்து அயோத்தியை அழைத்து, சீதை அவ்விடம் வந்தாளா? என்று கேட்டு, இல்லை என்றறிந்ததும்; சனகருக்குத் தந்தியடித் துக் கேட்டு, இல்லையென அறிந்ததும்; டிரங்காலில் என்சீதையைக் கண்டீரா? என்று இராவணனைக் கேட்டாரா? வேண்டுமானால் இராமன் அவதார புருடனாக இருக்கலாம்; ஆனால், அவன் காலத்தில் வயர்லஸ் கிடையாது. இராமனுக்குத் தெரிந்ததெல்லாம், அயோத்தி, கிஷ்கிந்தா தாண்ட காரண்யம், இராமேசுவரம், சேது, இலங்கை - இவ்வளவுதான்.
ஆனால், நமக்கோ, நம்முடைய காலத்திலே, உலகத்தையே ரேடியோ மூலம் அறைக்குள் அழைக்கின்றோம். இலண் டன் வைத்தால் லண்டன்; வியன்னா வைத்தால் வியன்னா; பாரிஸ் வைத்தால் பாரிஸ். உலகத்தில் எந்தப் பாகத்தில் வைத்தாலும் சரி உலகமே நம்முடைய அறைக்குள் வருகிறது. தேவலோகத் திலே நாரதருக்குத்தான் முழுவேலை. ஈரேழு பதினாலு லோகமும் சுற்றிக் கொண்டே இருப்பார். ஆனால், நம் முடைய காலத்தில், ரேடியோவைத் திருப்பி விட்டால், உலகம் முழுவதும் நம் கண்முன் வருகிறது. வியாசர் கூப்பிட்ட போது வரவில்லை - நாம் கூப்பிட்ட போது உலகம் நம்முன் இருக்கிறது. நம் நாட்டில் எத்தனை பேருக்கு விஞ் ஞானியாகிய சர்.சி.வி. இராமனைத் தெரியும்? ஒரு போலிப் பகல் வேடச் சாமி யாரைப் பற்றித் தெரிந்த அளவிற்குக் கூட, சர்.சி.வி.இராமனைப் பற்றித் தெரியாதே!
யாரோ ஒரு சாது வந்தார். பூமிக்கு உள்ளே போனார். நான்கு அடிப் பள்ளத்தில் 12 மணி நேரம் இருந்தார்; வெளியே வந்தார். இதை நம் மாகாண முதல் மந்திரியார் முன் நடத்திக் காண்பித்தாராம். இதை ஓர் அதிசயம் என்று, அற்புதம் என்று, மாகாணப் பிரதமர் வர போய்ப் பாத்திருக்கின்றனர்.
தெருக்கோடியில், ஜால வித்தைக் காரன் இதைவிட அதிசயமான அற் புதங்களைக் காண்பிக்கவில்லையா? பெட்டிக்குள் பல மணி நேரம் படுத்தி ருந்து வெளியே வருகிறாளே ஜால வித்தைக்காரி! சாமியார் செய்து காட் டியது என்ன அதிசயம்? இது மாத்திரம் என்ன? முத்தை எடுப்பதற்குப் பல மணி நேரம் மூச்சையடக்கி நீருக்குள் மனிதன் மூழ்கவில்லையா? கடலின் அடி ஆழத்தில் சப்மரைன்கள் செல்கின் றனவே? கேவலம் ஒரு சாமியார் செய் ததைப் பார்த்து அற்புதம் என்று கூறு கின்றார்கள்.
0 comments:
Post a Comment