Search This Blog

26.1.15

கலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டும்

கலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டும்



பார்ப்பனர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் சாஸ்திரம், அதுதான் சட்டம் - அதனை ஏற்க மறுத்தால் அவர்கள் ஏதாவது உள்நோக்கம் கற்பிப்பது, முத்திரை குத்துவது என்பதைத் தங்கள் பிழைப்பாகக் கொண்டு திரிகிறார்கள்.


தமிழ்நாட்டில் இருந்துகொண்டே, தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழர்களை இழிவுபடுத்துவதில் மூர்க்கக் குணம் கொண்டு திமிராக எழுத ஆரம்பித்துள்ளனர்.


தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று இந்த ஆண்டும் திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தி எழுதி விட்டாராம். துர்வாசர் என்ற பெயரில் துக்ளக்கில் உண்டு இல்லை என்று கலைஞர் அவர்களை எழுதித் தீர்க்கின்றனர் (துக்ளக் 28.1.2015 பக்.28).


யுகாந்திரமாக சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்தால் கலைஞருக்கு என்ன வந்தது? இவர் யார் இப்படி சொல்லுவதற்கு? இவரது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மறைமலை அடிகளே சொல்லி விட்டார், சோமசுந்தர பாரதியாரே சொல்லி விட்டார் என்று அறிக்கை வெளியிடுகிறார். மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியாரும் தமிழர்களின் மகா சன்னி தானங்களா?  மடாதிபதிகளா? மகாசன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகிற நம்பிக்கைகளை எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இந்த லட்சணத்தில் திராவிட மகா சன்னிதானம் என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் இந்தக் கருணாநிதி சொல்வதையா போயும் போயும் கேட்பார்கள்? என்று பொரிந்து தள்ளுகிறது துக்ளக்.


முதலில் கருணாநிதி என்ன சன்னிதானமா என்ற கேள்வியை எழுப்புகிறார் - சரி, கலைஞர் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் அறிஞர்களான, கற்றுத் துறைபோகிய பெரு மக்களாகிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சொல்லுகிறார்கள்  என்றால் அவர்கள் என்ன மடாதிபதிகளா? சன்னிதானங்களா? என்று கேள்வி கேட்கிறார்.


தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிப் பேச தமிழறிஞர்களை விடத் தகுதியானவர்கள் இந்த அம்மாஞ்சிப் பார்ப் பனர்களா? தமிழர் பிரச்சினையில் கருத்துச் சொல்லு வதற்கு இந்தப் பார்ப்பனர்கள் யார் என்று திருப்பி நம்மால் கேட்கமுடியாதா?


மகா சந்நிதானங்களும்,  மடாதிபதிகளும் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னால் ஏற்க வேண்டியதுதானே? ஏற்பார்களா? அடுத்து ஒரு முரண்பாட்டைக் கவனிக்கவும். 


இவர்கள் எல்லாம் மடாதிபதிகளா? சந்நிதானங்களா? என்று கேள்வி கேட்டு விட்டு, அடுத்த வினாடியே மகா சன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எழுதுகிறார். முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையிலேயே முரண்பாடு வழிந்து ஓடுகிறது. இந்த லட்சணத்தில் துக்ளக் பார்ப்பனர் துடை தட்டுகிறார்.

தமிழ் ஆண்டுகள் என்று சொல்லுகிறார்களே - அதில் ஒரே ஓர் ஆண்டுக்காவது தமிழில் பெயரில்லையே - ஏன்? இதற்கு என்ன பதில்? அறுபது ஆண்டுகள் சமஸ்கிருதத் தில் இருக்கின்றன என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம் அதையே பிடித்துக் கொண்டு தொங்குகின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.


உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் மலேசியாவின் தலைநகரமான கோலாலம் பூரில் கூடி தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்துவிட்ட பிறகு, பூஜை வேளையில் பெரியவாள் சங்கராச்சாரியார் நீஷப்பாஷையான தமிழில் பேச மாட்டார் என்று சொல்லுகிற கூட்டம் தமிழ்ப் புத்தாண் டைப்பற்றியா பேசுவது?


யுகாந்திரமாக வந்ததை எல்லாம் மாற்றலாமா என்று அதி புத்திசாலிபோல துக்ளக் கேள்வி கேட்கிறதே - யுகாந்திரம் என்றால் எந்த ஆண்டு அதற்கான தொடக்கம் என்று சொல்ல முடியுமா? சரி, அவர்கள் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்கிற முறையில் ஒரு வினாவைக் எழுப்புகிறோம். அப்படி வந்த எதையும் மாற்றிக் கொள்ளவேயில்லையா?


நிர்வாணமாக அலைந்து திரிந்த மனிதன் பின் இலைகளால் உடையணிந்த மனிதன் படிப்படியாக மாறுதலுக்கு உட்படவில்லையா? மாறுதலின் அடையாளம் தானே புத்தி வளர்ச்சி என்பது - புத்தியைப் பயன்படுத் தினால் இதன் உண்மை விளங்கும், மாறுதலே கூடாது என்று ஒருவர் பேசுகிறார், எழுதுகிறார் என்றால் அவர் புத்தி இன்னும் வளரவேயில்லை; அந்த காட்டுவிலங்காண்டி காலத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார் என்று தானே பொருள்படும்?


தீண்டாமை க்ஷேமகரமானது என்று அவாளின் சீனியர் சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொல்லி இருக்கிறார்- அவர் சொன்னார் என்பதற்காக அதனை ஆதரித்து இதே துக்ளக்கில் எழுதட்டுமே பார்க்கலாம் - ஜாமினில் வெளியே வர முடியாத அளவுக்கு சிறைக்கும் போக வேண்டியிருக்குமே!


இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம், ராம ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்று நரேந்திர மோடியும், பிரவீன் தொகாடியாவும், அசோக் சிங்காலும் உளறிக் கொட்டுகிறார்களே - இவர்கள் யார்? குருக்களா சன்னிதானங்களா? மடாதிபதிகளா? இவற்றையெல்லாம் சொல்லுவதற்கு என்று திருப்பிக் கேட்க முடியாதா?


புராணத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்பதற்காக இரண்யாட்சதன் பூமியைப் பாயாக சுருட்டிக் கடலில் விழுந்தான் என்பதை நம்ப வேண்டும் என்றுகூடச் சொல்லுவார்களோ!


பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் அல்லர் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

தொண்ணூறையும் தாண்டிய திராவிட இயக்கத் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களை பார்ப்பனர் மனம் போனவாறு தரம் தாழ்ந்து எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இவர்களின் ஜெகத் குருக்களின் வண்டவாளங்களை தெருமுனைக் கூட்டங்கள் மூலம் நார்நாராய்க் கிழிக்கத் தயங்க மாட்டோம் - எச்சரிக்கை!

                       -----------------------"விடுதலை” தலையங்கம் 26-01-2015

38 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

எது உண்மையான இராமாயணம்?

இராமாயணம் என் றால் ஒன்றிரண்டு அல்ல; எண்ண முடியாத அள வுக்கு இராமாயணம் பல மொழிகளில் உண்டாம்.

உண்மை என்றால் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். இத்தனை இராமாயணங்களில் எது உண்மை என்று ஏற்றுக் கொள்வது? வங்காள இராமாயணத்தில் இரா வணனின் மகள் சீதை! எப்படி இருக்கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/94980.html#ixzz3Pvh8Ub73

தமிழ் ஓவியா said...

விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?


ஜனவரி 26 - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3) எம்.ஆர். சீனுவாசன்
4) பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;
தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?

புரிகிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/94984.html#ixzz3PvhFequ3

தமிழ் ஓவியா said...

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சீல் வைப்பு

உ.பி. அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை

லக்னோ, ஜன.26 உத்தரப்பிரதேசம் மாநி லம், மீரட் நகரில் இந்து மதவெறியன் கோட் சேவுக்கு கோயில் கட்டுவ தாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப் பட்டவர் காந்தியார். அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30.1.1948 அன்று இந்து மதவெறி யன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். காந்தியாரை கொன்ற வனையே 18 ஆண்டு களுக்குபின் விடுதலை செய்தனர்.

அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோ கம் செய்தார். இஸ்லாமி யர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் காந்தியாரை சுட்டுக் கொன்றேன் என்றான். அப்படிப்பட்ட இந்து மதவெறி பிடித்த நாதுராம் கோட்சேவுக்கு மீரட் மாவட்டம் பிரம்ம புரி பகுதியில் வரும் ஜன வரி மாதம் சிலை வைக்கப் படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப் படும் என மதவெறியை தூண்டும் வகையில் அகில இந்திய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச் சார்யா மதன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித் திருந்தார்.

இந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, விசா ரித்து நடவடிக்கை எடுக் கும்படி மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் மற்றவரை அவமதிப்பு செய்வது, வதந்திகளை பரப்புவது போன்ற குற்றவியல் சட்டங்களின்கீழ் ஆச் சார்யா மதன் மீது கிரி மினல் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.

இந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையின் விளை வாக கோட்சேவுக்கு சிலை அமைக்க விரும்பிய சர்ச்சைக்குரிய இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைய முயற் சிப்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என மீரட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94969.html#ixzz3PvhSGEMk

தமிழ் ஓவியா said...

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

Read more: http://viduthalai.in/e-paper/94967.html#ixzz3PvhdbOru

தமிழ் ஓவியா said...

மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப் போர் தியாகிகளை நினைவுப்படுத்தும் வகையில் மாநாட்டில் பங்கேற்ற பொதுமக்களும், பல்வேறு கட்சிகளைத் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களும், தமிழர் தலைவரும் எழுந்து நின்று மொழிப்போர்த் தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்து சில மணித்துளிகள் அமைதி காத்தனர்.

தமிழர் தலைவர் தமது சிறப்புரையில் குறிப் பிட்டதாவது:

கழகத்தின்சார்பில் சேலத்திலே எடுத்த முடிவுக்கு ஏற்ப திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் மாநிலம் தழுவிய அளவிலே ஒவ்வொரு வட்டாரத்திலும் அடுத்த 6 மாதம் அல்லது ஓராண்டுக்குள்ளாக 2000 பிரச்சார நிகழ்ச்சிகளை, மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்தக்கூடிய வகையிலே கடந்த 24ஆம் தேதி அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாளில் (24.12.2014) தொடங்கி பல்வேறு பகுதிகளிலே மாநாடுகள் நடைபெறுகின்றன.

நம்முடைய கருத்தைப் பரப்புங்கள்

எப்போதும் கட்டுப்பாட்டை மதிக்கும் இயக்கம் நம்முடைய இயக்கம். அறிவு ஆசான் தந்தைபெரியார் காலத்திலிருந்தே நாங்கள் கொள்கை விளக்கங்களை சிறுசிறு புத்தகங்களாக இங்கே கொண்டுவந்திருக் கின்றோம்.லாபத்தைக்கருதியோ, வியாபார நோக்கத் தோடோ அல்ல.

மாறாக உண்மைகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்கு உண்மைகள் போய்ச் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் மக்களிடம் தெளிவும், விழிப்பும் உண்டாகும் என்பதற்காகத்தான் இந்தப் புத்தகங்களை நாங்கள் அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறோம். இவைகளை நீங்கள் வாங்க வேண்டும்.

படிக்கவேண்டும். கருத்துகளை ஏற்கவேண்டும் என்று கூட நாங்கள் சொல்லமாட்டோம். நீங்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள். இதைப்படித்தாலே, இந்த மருந்து வேலைசெய்யும். அதிலே ஒன்றும் சந்தேகமே இல்லை. இந்த புத்தகங்களை வாங்குங்கள், படியுங்கள், பிறருக்கும் கொடுங்கள். இந்தக் கருத்தைப்பரப்புங்கள். ஏனென்றால், இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் என்பவை பெரும்பாலும் உண்மைகளைப் பரப்புவதில்லை.

நீங்கள் நன்றாக சிந்தித்துப்பார்த்தால் இன்றைய சூழ்நிலை எப்படி இருக்கிறது? இந்த மாநாட்டுக்கு என்ன தலைப்பு? நம்முடைய மார்க்சிஸ்ட் நண்பர்களும், இடதுசாரி தோழர்களும், விடுதலைசிறுத்தைகளும், ஏனைய தோழர் களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அவர்களும் சமுதாயத்திலே இன்றைய சூழ் நிலை எப்படி இருக்கிறது? என்று எடுத்துச் சொன் னார்கள். அதைத்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உடற்கொடை

நம்முடைய தோழர்கள் எல்லாம், அசோகன் மற்றவர்கள் எல்லாம் பெரியார் உடற்கொடைக் கழகம் சார்பிலே இவர்கள் தங்களுடைய உடலை மருத்துவ மனைக்கு மறைந்தபிற்பாடு கொடுக்கப்போகிறோம் என்று எழுதியே கொடுத்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கொடை அளித்து எழுதி, பதிவு செய்திருக்கிறார்கள். இது ஒரு எடுத்துக்காட்டான செய்தி.

மதத்தினுடைய அடிவேரிலேயே வெந்நீர் ஊற்றுகின்ற சங்கதி இருக்கிறதென்றால் அது இதுதான். இது வெறும்கொடையைப்பொருத்தது மட்டுமல்ல. அதைவிட மதத்தினுடைய ஆணிவேர் வெட்டப்படுகிறது. எங்க ளுடைய தோழர்களுக்கு வாழ்நாள்முழுவதும் நாங்கள் பயனுள்ள வாழ்க்கையை வாழவேண்டும், இறந்த பிற் பாடும்கூட எங்களுடைய உடல் பயன்படவேண்டும் என்ப தற்கு பகுத்தறிவாளர்கள் எவ்வளவு மனிதநேயத் தோடு இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மதவெறியை மாய்ப்போம் மனித நேயத்தை காப்போம்

தமிழ் ஓவியா said...


இந்த நகரத்தைப் பொருத்தவரையிலே இது புதிதல்ல. சீரிய பகுத்தறிவாளராக இருந்தவர், அன்றைக்கு நகர் மன்றத் தலைவராக இருந்த கே.டி.எஸ்.மணி நம்முடைய சகோதரர்ஆவார். அவருடைய உடல் மருத்துவமனைக்கு தரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்சிலிருந்துதான் அவர் திராவிட இயக்கத்துக்கு வந்தவர். வியப்பாக இருக்கும். ஏனென்றால் அவர் சிந்தித்தார்.

சிந்தித்தபிறகு நம்முடைய இனத்துக்கு, சமுதாயத்துக்கு துரோகம் செய்கிறோமே என்று நினைத்தார்கள். தீவிர பகுத்தறிவாளராக அவர் இருந்தார். அவர் ஏற்படுத்திய சரித்திரம் அவரோடு முடிந்து விடவில்லை. அது இன்னமும் தொடர்கிறது.

இளைய தலைமுறைகூட அந்த முடிவிலே இருக்கிறார்கள் என்று சொன்னால், இதுவே மதவெறி மாய்ப்போம், மனித நேயத்தைக் காப்போம் என்று சொல்வதற்கு அற்புதமான நடைமுறை எடுத்துக்காட்டாகும். நாங்கள் பேசிவிட்டு போகக்கூடியவர்கள் அல்ல. எதைப்பேசுகிறோமோ? அதைச் செய்யக்கூடியவர்கள்.

எதைச் செய்கிறோமோ அதைமட்டும்தான் பேசக்கூடியவர்கள். அவர்களுக்குப் பெயர்தான் பெரியார் தொண்டர்கள், சுயமரியாதைக் காரர்கள் என்று அதற்குப் பொருள். அந்த அளவிலே தான் திராவிடர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

தமிழ் ஓவியா said...


வீட்டுக்காரர்கள் நன்றாக குறட்டைவிட்டுத் தூங்கி னால்கூட, காவலாளி தூங்கமுடியுமா? கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.ஆக, எங்களுடைய வேலை பதவிக்குப் போவதில்லை. பெருமைகளைத் தேடுவது அல்ல. நீங்கள் இன்றைக்குப் பாராட்டுகிறீர்கள்.

இந்த பாராட்டைப்போலவே நீங்கள் கல்லை எடுத்து போட்டாலும் இந்தக் கருத்தைச் சொல்லிக்கொண்டுதான் இருப்போம். எங்களுடைய உயிருக்கு ஆபத்து என்று மற்றவர்கள் மிரட்டினாலும் கூட, அதைப்பற்றி கவலைப்படாமல் இந்தக் கொள்கையைச் சொல்லிக்கொண்டிருப்பதில்தான் எங்களுடைய வாழ்வு முடியவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் நாங்கள்.


நம்நாட்டில் சட்டம் ஒழுங்கு!

அப்படிப்பட்ட விழிப்புணர்வு நமக்கு இன்றைக்கு ஏன் தேவை? விழிப்புணர்வு எப்போது தேவை? தூங்கு பவர்களுக்கு ஆபத்து வந்தால் அந்த நேரத்தில் தூங்கக் கூடாது, விழிப்பாக இருக்க வேண்டும். வீட்டில் தீப் பிடித்துக் கொண்டு எரியும்போது தூங்கிக்கொண்டிருக்க முடியுமா?

நம் நாட்டிலேதான் சட்டம் ஒழுங்கு பிரமாதமாக இருக்கிறது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே, அண்மையிலேகூட கிருஷ்ணகிரியிலே ஒன்றும் அதிகமில்லை, 10கோடி அளவில் வங்கியிலேயே உள்ளதையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இப்போது சைரன் வைத்திருக்கிறார்கள். கைவைத்தாலே சத்தம் வரும்.

சிலபேர் வீட்டுக்குள் காலை வைத்தாலே சத்தம் வரும். அந்த சைரனுக்கு என்ன வேலை என்றால், அய்யா! ஆபத்து, எழுந்திருங்கள், விழிப்பாக இருங்கள் என்று சொல்வதுதான் அதனுடைய வேலை.

இப்போது எழுப்புவதற்கு தனியே கடிகாரம் தேவையில்லை.இப்போது எல்லோர் கையிலும் கைத்தொலைபேசி (செல்போன்) இருக்கிறது. இதனால் பல பொருட்களை தேவை இல்லை என்று ஆக்கி விட்டார்கள். செல்போன் கேமரா, ஒலிஅமைப்பு, கடிகாரம், காலண்டர் என அனைத்தையும் அதிலேயே அடக்கி உள்ளார்கள்.

தந்தை பெரியார் இனி வரும் உலகம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 10 காசுக்கு விற்ற புத்தகம். அதில், ஒவ்வொ ருவர் கையிலும், சட்டைப்பையிலும் வானொலியும், தொலைபேசியும் இருக்கும். ஒருவருக் கொருவர் ஆள்காட்டி, உருவம் காட்டிப் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்று தந்தைபெரியார் எழுதினார்.

சங்கராச்சாரியார் கண்டுபிடித்த விஷயமா? அவருக்கும் சேர்த்து மற்றவன்தான் கண்டுபிடித்திருக் கிறான். சத்ய சாய்பாபா கையைத் தூக்கிய உடனே பொத்தென்று விழுந்த விஷயமா? முப்பத்துமுக்கோடி தேவர்கள், நாற்பத்தைந்தாயிரம் ரிஷிகள், கிண்ணரர், கிம்புருடர், அஷ்டதிக்கு பாலகர்களில் ஒரு பயலுக்காவது செல்போன் என்றால் என்ன என்று தெரியுமா?

இவ்வளவும் அறிவு, சிந்தனை, வளர்ச்சி. ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்டு கேட்டு அறிவியல் வளர்ந்த துடைய விளைவாகஇவ்வளவு வளர்ந்திருக்கிறது.

-இவ்வாறு தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம்பேச்சில் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/94978.html#ixzz3PviQGMGL

தமிழ் ஓவியா said...

பிஞ்சுகளையும் வதைக்கும் தூக்கமின்மை!

வாழ்க்கை பற்றி எதுவுமே தெரியாத, 8 வயதுக் குழந்தை தற்கொலை செய்து கொள்வது என்பது தாங்க முடியாத அதிர்ச்சி. குழந் தைகளின் எதிர்காலம் பற்றிய பெற்றோரின் பதற்றம், மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பவை என்ற மாயை, நம் கல்வியமைப்பு, குடும்ப பிரச்சினைகள் என ஏதோ ஒன்று இந்த மன அழுத்தத்தை அந்த சிறுமிக்கு உண்டாக்கியிருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


தனது மரணத் துக்கு யாரும் காரணமில்லை என அந்தக் குழந்தை வாக்கு மூலம் அளித்திருந்தாலும், அந்தப் பிஞ்சின் உயிரைப் பறித்ததில் தொலைந்து போன அவளின் தூக்கத்துக்கும் முக்கிய இடம் உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். ஒருவேளை நன்றாகத் தூங்கி எழுகிற குழந்தையாக இருந்தால், இந்தத் தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம், மன அழுத்தத்தை உருவாக்குகிற தூக்க மின்மையால்தான் அதிகமாக சுரக்கிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இப்போது, தூங்கு தம்பி தூங்கு என பழக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இன்றைய குழந்தைகள். தூக்கம் இழப்பதால் குழந்தைகள் சந்திக்கிற உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளைப் பற்றிய அறிமுகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் தூக்கக் குறைபாடுகளின் சிறப்பு மருத்துவரான ராமகிருஷ்ணன்.

தூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் தூக்கத்தில் தான் உடல் தனக்குத் தேவையான பலவித மாற்றங்களை செய்து கொண்டு,தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. அதிலும், வளர்கிற குழந்தைகள் நன்றாக தூங்கினால்தான், கல்வித்திறன், உடல் வளர்ச்சி, நினை வாற்றல் உள்பட பலவிதத்திலும் அவர்களது செயல் பாடுகள் சிறப்பாக இருக்கும்.

தூக்கம் கெட்டால் எல்லாமே கெடும். தூக்கத் தில் முதல்நிலை தூக்கம், இரண்டாம் நிலை தூக்கம், ஆழ்ந்த நிலை தூக்கம் என 3 நிலைகள் இருக் கின்றன. இதில் ஆழ்ந்த நிலை தூக்கம் குழந்தைகளுக்குக் கிடைக்காவிட்டால், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி இரண்டும் பாதிக்கும்.

பெண் குழந்தைகளுக்கு ஹார்மோன் குளறுபடியால் எதிர்காலத்தில் மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படலாம். பள்ளி, டியூஷன், சிறப்பு வகுப்பு, டான்ஸ் என்று மாணவர்கள் இன்று ஓடிக்கொண்டே இருப்பதால், 6 மணி நேரம் தூங்கினாலே பெரிய விஷயம் என்று மாறி விட்டது.

படிப்பு ஏற்படுத்துகிற பதற்றங்களால் தூக்கத்தின் இடையிடையே எழுந்து படிப்பதும் ஒரு பழக்கமாகி விட்டது. இதனால், கல்வியில் கவனம் குறைவது, மற்ற மாணவர்களுடன் சுமுகமான உறவு இல்லாமல் போவது. ஹைப்பர் ஆக்டிவிட்டி என்று சொல்லக் கூடிய தேவையற்ற பரபரப்பு போன்றவை உருவாகின்றன. லெப்டின் என்ற ஹார்மோனால் பருமன் ஏற்படுவது, தைராய்டு குறைபாடுகள் போன்ற பிரச்சினை களும் தூக்கமின்மையால் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

பெரியவர்களுக்கு முதல்நாள் தூக்கம் கெட்டுப் போனாலே, அடுத்த நாள் கண்கள் எரிச்சலாக இருக்கும், வேலைகளில் கவனம் செலுத்த முடியாது, கோபம் அதிகமாக வரும். குழந்தைகளுக்கோ, இதுபோன்ற தூக்கமின்மை தொடர்கதையானால், பெரியவர்களைவிட அதிக பாதிப்புகள் ஏற்படும்.

40 வயதுக்கு மேல் ஏற்படும் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் போன்ற குறைபாடுகள் இளவயதிலேயே வரும் சாத்தியங்களும் உள்ளன. குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெற்றோர் ஏதேனும் ஒருவிதத்தில் அவர்களை ஓட வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஆனால், தூக்கமின்மையால் கல்வி உள்பட பல விஷயங் களிலும் அவர்களது எதிர்காலமே பாதிப்புக்குள்ளாகலாம் என்பதை மறக்கக் கூடாது என்கிற ராமகிருஷ்ணன், தூக்கம் வருவதற்கு சில வழிமுறைகளைச் சொல்கிறார்...

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுவதை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். தவிர்க்க இயலாத நாட்களில் கொஞ்சம் மாற்றம் இருந்தால் தவறில்லை. ஆனால், இஷ்டத்துக்குத் தூங்கி, விருப்பத்திற்கு எழுகிற பழக்கத்தால் நாமே தூக்கமின்மையை உருவாக்கு கிறோம்.

தூங்குவது 5 மணி நேரம் என்றாலும் தொடர்ச்சியான தூக்கமாக இருக்க வேண்டும். இடையிடையே விழித்து, தூங்குவது ஆரோக்கியமான தூக்கம் இல்லை. காலையில் எழுந்த பிறகு, நம் உடலில் வெளிச்சம் படுகிற மாதிரி குழந்தைகளை சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யப் பழக்க வேண்டும். அது அன்றைய இரவு தூக்கத்துக்கு நல்லது.

டீ, காபி போன்ற தூக்கத்தைக் கெடுக்கும் பானங்களை மாலை 6 மணிக்கு மேல் தவிர்த்து விடுங்கள். வெறும் மூளை சார்ந்த உழைப்பாக மட்டுமே இன்றைய வாழ்க்கைமுறை பலருக்கும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றைப் பின்பற்றினால் உடல் தானாகவே சோர்ந்து, தூக்கம் வேண்டும் என்று கெஞ்ச ஆரம்பிக்கும்.

மாலையில் குளிப்பது, இரவு உணவை 8 மணிக்குள் சாப்பிடுவது, தூங்கப் போவதற்கு முன் பால், வாழைப்பழம், தேன் போன்றவற்றை எடுத்துக் கொள்வது தூக்கத்துக்கு உதவி செய்யும். தூங்கச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு செல்பேசி, தொலைக்காட்சி, கணினி போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களின் வெளிச்சங்கள் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வெளிச்சங்களாலும் தூக்கம் தொலையும்.

Read more: http://viduthalai.in/page-7/94994.html#ixzz3PviwcSzv

தமிழ் ஓவியா said...

ஆஸ்துமாவுக்கு தற்காலிக சிகிச்சைகள்


ஆஸ்துமா தொற்றுநோய் கிடையாது. யாருடன் நெருங்கி பழகினாலும் வராது. இது மூச்சுக் குழாயில் சுருக்கம் தந்து, மூச்சு விட சிரமம் தர்ற நோய். இத்தகைய பாதிப்புக்கு ஆளான வர் மூச்சு விட முடியாது. நெஞ்சு இறுக்கி பிடிச்ச மாதிரி இருக்கும். ஆஸ்துமா ஒரு வகை அலர்ஜி. உடம்பில் சுரக்கும் சில ஹார்மோன் பிரச்சினைகளினால் அட்ரினல் என்கிற ஹார்மோன் குறைவாக சுரந்தால் அது மூச்சுக்குழாயை சுருக்கும். இது கவலைப்படக்கூடிய நோய் அல்ல. இதை சரி செய்ய எளிய சிகிச்சை முறைகள் உள்ளது.

ஆஸ்துமாவை உண்டு பண்ணுகிற அலர்ஜி ஒவ்வொருத்தருக்கும் வேற மாதிரி இருக்கும். பொதுவான அலர்ஜியாக தூசு, புகை, கரப்பான்பூச்சியோட கழிவு, சில பூஞ்சைகள், பூக்களோட மகரந்தம், பனி, வீட்டு பிராணி களின் உடலில் இருந்து உதிரும் முடி, ரொம்ப நாள் துவைக் காம வைத்திருக்கிற தலையணை. வாசனை திரவியம், பெயின்ட், அய்ஸ்க்ரீம், நண்டு, கடலை உள்ளிட்ட சில உணவுப் பொருள்கள் என்று ஒவ்வொருவருக்கும் அவர் களது உடல் நிலையை பொறுத்து அலர்ஜி வேறுபடும்.

ஆஸ்துமாவுக்கென தற்காலிக சிகிச்சைகளாக சிறப்பு மருந்துகள் இருக்கு. நேரே நுரையீரலுக்கு போய் உடனே சரியாகிற இன்ஹேலர் மருந்துகள் உள்ளது. சாதாரணமாக ஊசி போட்டு மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிய தில்லை. மருந்து எங்கே போகணுமோ அங்கேயே மருந்து இந்த இன்ஹேலர் மூலமா போவதால் பக்கவிளைவுகள் இல்லை. ஆஸ்துமாவுக்கு 2 வகை மருந்து உள்ளது.

ஒன்று ரிலீவர், மற்றொன்று ப்ரிவென்டர். ரிலீவர்ங்றது மூச்சுக்குழாய் சுருக்கத்தை மட்டும் சரி பண்றது. எப்பெல்லாம் நமக்கு ரொம்ப அதிகமாக மூச்சுவிட முடியாம போகுதோ அப் பொழுது எடுத்து கொள்வது ரிலீவர். இதை அடிக்கடி எடுக்க கூடாது, எப்ப முடியாம போகுதோ அப்ப தான் எடுக்க வேண்டும்.

ப்ரிவென்டர்ங்றது ஆஸ்த்மா பாதிப்பு பின்னாடி வராம கட்டுப்படுத்த எடுத்துக்குறது. இதை தினசரி எடுக்கணும். இது மூச்சுக்குழாயோட தடிப்பு வீக்கம், சுருக்கம் எல்லாத் தையும் சரி பண்ணும். இதை நாம கண்டிப்பா தினசரி எடுத்தே ஆகணும். இதுல அதிக நேரம் மூச்சுக்குழாயை விரிய வைக்கிற மருந்துகள் மற்றும் மூச்சுக்குழாய் காயம், தடிப்பை சரி பண்ணுகிற ஸ்டிராய்டு மருந்துகள் எல்லாம் கலந்து இருக்கும்.

இன்ஹேலர் வழியா மருந்து எடுத்துக்குறதால ரொம்ப கம்மியான மருந்து தேவையான அளவு தான் உள்ளே போகும். இன்ஹேலர் மருந்து ரத்தத்தில் உடல் பூரா சுற்றாமல் நுரையீரலுக்கே போவதால் பக்கவிளைவுகள் இல்லை. ரிலீவர் மற்றும் பிரிவென்டர் சிகிச்சை முறைகள் ஆஸ்துமாவுக்கு தற்காலிக சிகிச்சை முறைகள் தான். நிரந்தர தீர்வுக்கு மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சிகிச்சை பெற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/94995.html#ixzz3Pvj560eV

தமிழ் ஓவியா said...

சுளுக்கு, மூட்டுவலிக்கு உடனடித் தீர்வு


புளியம் இலையை நன்கு அவித்து சூட்டோடு துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்த பின்னர் சுளுக்கு உள்ள இடத்தில் புளிய இலையுடன் கூடிய துணியை அப்படியே கட்டி வைத்தால் உடனடி குணமாகும். சிலருக்கு மூட்டுகளில் வீக்கம் வந்து வலியும் இருக்கும்.

இதற்கு புளியம் இலைகளை நன்கு நசுக்கி நீரில் போட்டு கொதித்த பின்னர் அந்த பேஸ்ட்டை வீக்கங் களின் மீது பற்றிட்டு வர நீர் குறைந்து வலியும் போகும்.

நன்கு உலர்த்தி பொடி செய்யப்பட்ட பிரண்டை வேர் பொடியுடன் நெய் விட்டு லேகியம் போல் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த கலவையை 1 1/4 கிராம் வீதம் காலை மாலை இருவேளை உட்கொண்டு வர நாளடைவில் ஒடிந்து போன எலும்புகள் கூட இணைந்து விடும்.

முருங்கை கீரை தினசரி உட்கொள்ளும்போது கழுத்துவலி காணாமல் போகும். பிரண்டையின் உட்பக்க சதை பகுதியை காயவைத்து பொடித்து, அத்துடன் ஜாதிக்காய் சூரணத்தையும் 10:20 என்ற விகிதத்தில் கலந்து வைத்து கொண்டு மூன்று நாட்கள் காலை, மாலை என 6 வேளை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணம் பெற வாய்ப்பு உண்டு.

காலில் முள் குத்தி அவதிப்படுபவர்கள் முள்ளை அகற்றிய பின்னர், நல்லெண்ணெய் தடவி வெற்றிலையை அனலில் வாட்டி சூட்டோடு ஒத்தடம் கொடுத்தால் விஷம் முறிந்து, வலியும் பறந்து போய் விடும்.

Read more: http://viduthalai.in/page-7/94993.html#ixzz3PvjB4ZOS

தமிழ் ஓவியா said...

அதிக நன்மைகள் தரும் முள்ளங்கி

முள்ளங்கியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் கொண்ட காய். இதிலுள்ள ஃபோலேட், நார்ச் சத்து, தாதுச் சத்து, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகிய அனைத்தும் முதுமைத் தோற்றத்துக்குக் காரணமான விஷயங்களில் இருந்து நம்மைக் காக்கக்கூடியவை.

புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடிய குணம் முள்ளங்கியில் உள்ளது. முள்ளங்கியை பச்சை யாகவோ, சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப் பிடலாம். மாவுச்சத்து இல்லாத காய் இது என்பது குறிப் பிடத்தக்கது.

சாலட்டுகளில் சேர்க்கும் போது, ஒருவித காரத் தன்மையுடன், நறுக்கென்ற ருசியையும் கொடுக்கக்கூடியது. நீரிழிவு உள்ளவர்களும் அல்லது எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு வரலாம் என்கிற நிலையில் இருப்போரும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உச்சத்துக்குப் போகாமலிருக்க மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். முள்ளங்கிக்கு அதில் முதலிடம்.

Read more: http://viduthalai.in/page-7/94993.html#ixzz3PvjFMjin

தமிழ் ஓவியா said...

குறைகளை பேஸ்புக்கில் தெரிவிப்பது குற்றமில்லை: உச்சநீதிமன்றம்

பெங்களூரு, ஜன.26_ கருநாடகம் மாநிலத்தைச் சேர்ந்த இணையர், தங் களிடம் காவல்துறையினர் தவறாக நடந்து கொண் டது தொடர்பான தக வலை பெங்களூரு போக் குவரத்துக் காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டு இருந்த பேஸ்புக் பக்கத் தில் பதிவு செய்தனர். இதுதொடர்பாக அவர் கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கிரிமினல் நடவடிக்கை மற்றும் காவல்துறை அதிகாரியை கடமையை செய்யவிடா மல் தடுப்பது ஆகிய குற்றங்கள் அடிப்படை யில் இணையர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.

இதனை எதிர்த்து இணையர் கருநாடக மாநிலம் உயர்நீதிமன் றத்தை நாடினார். ஆனால், உயர்நீதிமன்றம் அவர் களுடைய மனுவை நிரா கரித்துவிட்டது. இது முன்கூட்டி தாக்கல் செய் யப்பட்டது, விசாரணை முடிவடைவதற்கு முன்ன தாகவே தாக்கல் செய்யப் பட்டுள்ளது என்று கூறி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத்தில் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடி னர். உச்சநீதிமன்றம் அவர் கள் மீதான முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விசாரணையின் போது, இதுவரையில் பேஸ் புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத் துகள் கவலைக்குரியது, பேஸ்புக் பொதுமன்றத் தில் உள்ள உதவிபொருள் போன்று தோன்றுகிறது. பேஸ்புக்கில் முறையிடுப வர்கள்மீது நடவடிக்கை எடுப்பது, இந்திய தண்ட னைச் சட்டம் 503- ஆவது பிரிவின்படி குற்றவியல் மிரட்டல் தொடர்பான மூலகருத்தை ஈர்க்கமா லிருக்க செய்யலாம்.

குறிப் பிட்ட பேஸ்புக் பக்கம், பொதுமக்கள் தங்களது குற்றங்களை தெரிவிப்ப தற்காக தொடங்கப்பட் டது. எங்களது பார்வை யில், கோரிக்கை விடுத்த வர்கள் மாறுபட்ட வித மான நம்பிக்கையில், தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருக்கலாம். அது குறிப்பிட்ட எல் லைக்குள் இருக்கிறது என்று நீதிபதிகள் வி. கோபாலா கோவ்தா மற் றும் ஆர். பானுமதி அடங் கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.

மாலிக் தானேஜா மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி ஜாவா கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி சாலை விபத்தை சந்திக்க நேரிட்டது. இச்சம்பவத் தில் ஆட்டோவில் பய ணம் செய்த ஒருவர் காய மடைந்தார். காயமடைந்த அவர் உடனடியாக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் அவர்களுக் குள்ளேயே பேசி தீர்க்கப் பட்டது.

இதற்கிடையே சம்பவம் நடந்தபோது அங்கிருந்த காவலர் ஒரு வர், மூத்த அதிகாரியை சந்திக்குமாறு இணைய ருக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக அவர்களும் மூத்த அதிகாரியை சென்று சந்தித்துள்ளனர். அவர் கள் அதிகாரியை சந்தித்த போது, அவர் இவர்களி டம் தவறாக நடந்து கொண்டுள்ளார். உயரதி காரி, இணையரை மிரட் டியுள்ளார்.

இதனையடுத்து தவ றான நடத்தை தொடர் பாக பாதிக்கப்பட்ட இணையர் சம்பவம் தொடர் பான தகவல்களை பெங் களூரு போக்குவரத்து காவல்துறை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த னர். இ-_மெயிலும் புகார் தெரிவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-8/94999.html#ixzz3PvjQhbTN

தமிழ் ஓவியா said...

மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தோழர்கள் உடற்கொடை


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள், தனது பிரச் சார பயணங்களில் செல்லுமிடமெல்லாம் வலியுறுத்துவது மனிதா பிமான அடிப்படையில் உதவவேண்டும். குருதிக் கொடை, உட லுறுப்பு கொடை, கண் கொடை மற்றும் உடற் கொடை வழங்கவேண் டும்.

அது பொதுமக் களுக்கு பயன்படும். உடற்கொடை அளிப்ப தால், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குப் பயன்படும். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன், மாவட்ட செயலாளர் இரா.சக்திவேல், நகர செயலாளர் ச.வேலாயுதம், அவருடைய தாயார் லட்சுமி அம்மாள் சண்முகம், மண்டல மாணவரணி செயலாளர் அ.அர்ஜூனன், மாவட்ட ப.க. தலைவர் என்.சிதம்பரநாதன்,

பெரியார் பெருந்தொண்டர் டி.ஏ.ஜோதி மற்றும் தோழர்கள் தனது உடலை மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை வழங்குவதாக பதிவு செய்து, அதற்கான சான்றிதழ்களையும், பத்திரங்களின் நகலை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர் (காஞ்சிபுரம், 24.1.2015)

Read more: http://viduthalai.in/page-8/95003.html#ixzz3Pvjd5jfE

தமிழ் ஓவியா said...

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்ததே: அய்ராவதம் மகாதேவன்



தஞ்சாவூர், ஜன.29_ சிந்துவெளி நாகரிகம் திரா விட மொழியைச் சார்ந் தது என்று கல்வெட்டு ஆய்வாளரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் கூறினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் கடல் சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை சார் பில் புதன்கிழமை நடை பெற்ற முனைவர்கள் எ. சுப்பராயலு, செ.ராசு அறக் கட்டளைச் சொற் பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்சதா ரோவில் கிடைத்த முது கைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இவற்றில் விலங்கு வடி வம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங் குதல், எடுத்துக் கொள் வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடி வம் அன், நகரத் தலை வன், பாண்டி, பாண்டி யன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணை யான வார்த்தைகள் பழந் தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழு திபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்த தால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழி யில் காணப்படுகின்றன என்பது என் கருத்து.

பாண்டியர்களின் மூதா தையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடுபட்டிருக் கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.
வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியிருக்கலாம். இந்திய ஆரியப் பண்பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்து வெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கட வுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது.

எனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண் பாட்டைவிட காலத்தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடு களுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிக மாக இருப்பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது என் பது எனது முடிவு என் றார் அய்ராவதம் மகாதேவன்.

துணைவேந்தர் ம. திருமலை தலைமை வகித் தார். பதிவாளர் சே. கணேஷ்ராம், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத் தின் இந்தியவியல் துறைத் தலைவர் எ. சுப்பராயலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுவடிப்புலத் தலைவர் சு. ராசவேலு வரவேற்றார். முனைவர் ந. அதியமான் நன்றி கூறி னார்

Read more: http://viduthalai.in/e-paper/95143.html#ixzz3QD9bWUhy

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மையை நீக்கியது சரியானதுதானாம்!
மத்திய அமைச்சரே வக்காலத்து

புதுடில்லி, ஜன.29- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 42ஆவது திருத்தம் செய்யப்பட்டு 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் சோசலிஸ்ட், செக்குலர் என்ற சொற்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையைக் கொண்டுள்ள படம் குடியரசு நாள் விழாவையொட்டி அரசின் சார்பில் வெளியிடப் பட்ட விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிஸ்ட் மற்றும் செக்யூலர் என்கிற பதங்களை நீக்கி விட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, நம் நாடு மதசார்பற்ற நாடாக இருப்பதால், இந்த சொற்பதங்கள் தேவை இல்லை. அச்சொற்பதங்கள் இல்லாமலேயே நாம் மதசார்பற்ற நாட்டினராக இருக்கிறோம் என்றார்.

அவர் மேலும் கூறும்போது, நெருக்கடிக் காலத்தில் 1976 ஆம் ஆண்டில் இந்த இரு சொற்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த இரு சொற்கள் குறித்த விவாதம் நடத்தப்படுவதில் என்ன தவறாகிவிடப்போகிறது? நாடு என்ன விரும்புகிறது என்பதைப் பார்ப்போமே என்றார். திருத்தத்துக்கு முந்தைய அரசமைப்பு சட்டத்தின் முகவுரை யைத் தொடர்ந்து அரசு அலுவலகரீதியாக பயன்படுத்திவருமா? என்று கேட்டதற்கு, ஆம். அதுதான் திட்டம் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் திருத்தத்துக்கு முந்தைய முகவுரை இரண்டு அச்சு விளம்பரங்களில் இடம் பெற்றதற்கு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பொறுப்பானவர் ஆவார்.

Read more: http://viduthalai.in/e-paper/95144.html#ixzz3QD9mUo3T

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஏனோ?

பிரம்மாவின் ஆண வத்தை அடக்குவதற்காக சிவனின் முகத்திலிருந்து ஜோதியாக வெளிப்பட்ட வர் பைரவர். இவரின் வாகனம் நாய். காலையில் கோவில் திறந்தவுடனும், அர்த்த ஜாம பூஜை முடி யும்போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடை பெறுமாம்.

சரி, பைரவரின் வாகன மான நாய்க்கும் சேர்த்து தானே அந்தப் பூஜை? பைரவரின் வாகனமான நாய் வீதியெல்லாம் சுற்றிப் பொறுக்கிக் கொண்டு வயிற்றை வளர்க்கிறதே - இந்தப் பைரவர் இதற் கொரு வழி செய்யாதது ஏனோ?

Read more: http://viduthalai.in/e-paper/95145.html#ixzz3QD9v4252

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

மிஸ்டு கால்!

செய்தி: ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர்.
- தமிழிசை சவுந்தரராசன் (பி.ஜே.பி. தமிழகத் தலைவர்)

சிந்தனை: எல்லாம் மிஸ்டு காலில்தானா?

குறிப்பு: சொந்தக்காலில் நிற்க முடியாதவர்கள், மிஸ்டு காலில் நிற்க முயற்சிக் கிறார்கள்.

-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/95147.html#ixzz3QDA82eOe

தமிழ் ஓவியா said...

அரசமைப்பு சட்டத்தில் இருந்து மதசார்பற்ற என்ற வார்த்தையை நிரந்தரமாக நீக்க வேண்டுமாம்: சொல்லுகிறது சிவசேனா

மும்பை, ஜன.29-_இந்திய அரசமைப்பு சட்டத்தில் இருந்து மதசார்பற்ற என்ற வார்த்தையை நிரந் தரமாக நீக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கூறியதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவை யொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச் சகம் சார்பில் வெளியி டப்பட்ட ஒரு விளம்பரத் தில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் 42- ஆவது திருத்தசட்டம் அமல்படுத் தப்படுவதற்கு முன்பு, இருந்த முகவுரை இடம் பெற்றிருந்தது. அதில், மதசார்பற்ற, சமதர்மம் என்ற வார்த்தைகள் இடம் பெறாமல் இருந்தன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரி வித்தது.

இந்நிலையில், மத சார்பற்ற, சமத்துவம் என்ற வார்த்தைகள் இடம்பெறாமல் முகவுரை வெளியிடப்பட்டதற்கு சிவசேனா ஆதரவு தெரி வித்துள்ளது. இது தொடர்பாக நேற்று சிவ சேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத் எம்.பி. மும் பையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

குடியரசு தின விழா விளம்பரத்தில் அந்த வார்த்தைகள் (மதசார் பற்ற, சமதர்மம்) நீக்கப் பட்டதை நாங்கள் வர வேற்கிறோம். இது கவ னக்குறைவாக நடந்திருக்க லாம், ஆனாலும் இந்திய மக்களின் உணர்வுகளை கவுரவிப்பதாக இது அமைந்துவிட்டது.

தவறுதலாக இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு இருந்தாலும் கூட அவை இந்திய அரசமைப்பு சட் டத்தில் இருந்து நிரந்தர மாக நீக்கப்பட வேண்டும். அந்த வார்த்தைகளை அரசமைப்பு சட்டத்தில் இணைத்ததில் இருந்து, நாடு மதசார்பற்ற தன் மையில் நீடிக்காது என்று கூறப்பட்டு வருகிறது.

இந்தியா மதம் என்ற போர்வையில் பிளவுபட்டு கிடப்பதாக பால்தாக்க ரேவும், அவருக்கு முன் பாக வீர சவார்க்கரும் கூறி னார்கள். சிறுபான்மை சமூகத்தினர் அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரு கிறார்கள். அதேவேளை யில், இந்துக்கள் தொடர்ச்சி யாக அவமதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசு சார் பில் நடந்த இந்த தவறு, தொடர்ந்து நிகழ வேண் டும் என்று விதி விரும் புகிறது. மோடி இந்திய பிரதமர். இந்துத்வா மீதான அவரது சிந்தனை மிகவும் வலுவானது. இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/e-paper/95146.html#ixzz3QDAFHyxa

தமிழ் ஓவியா said...

மதம் பயன்படாது


மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. - (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/95137.html#ixzz3QDASJACb

தமிழ் ஓவியா said...

மருந்து வேண்டாம் - எப்போது?


இன்று இளைய சமுதாயத்தினரான நமது இளை ஞர்கள் பலரும் நன்கு படிக்கின்றனர்.

உலகைத் தங்களின் விரல் நுனியில் வைத் துள்ளதில் பெருமிதம் கொள்ளுகிறார்கள்!

சூரியனின் கீழ் உள்ள அத்துணை செய்திகளையும் தமது இணையத்தின் மூலம், கைத்தொலைபேசி என்ற தகவல் களஞ்சியத்தின் குதிர்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அள்ளி நொடிப்பொழுதில் தரு கின்ற ஆற்றல் உடைய திருவினராக உள்ளனர்!

வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம் இருந் தாலும், மறுபுறம் வேலைக்குச் சென்றவர்கள் கைநிறைய சம்பாதித்து, ஆடம்பர வாழ்வும் வாழுகின்றனர்!

இவ்வளவு சிறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இளைஞர்கள் தங்களது உடல் நலத்தில் மிகுந்த கவலையும், அக்கறையும் செலுத்தாமல் வயிறு முட்ட - கண்ட தீனிகளையும், விரைவு உணவுகள் என்ற பெயரால் வெளிநாட்டு உணவுக் கடைகளில் உள்ள வைகளையும், உள்நாட்டுப் பரோட்டா போன்றவை களையும், குளிர்பானங்களாகிய பல கேட்டினை அழைத்து உடலுக்குள் தங்க வைக்கும் சுவை நீர் களையும் அருந்தி, நோயுற்ற (நோயற்ற வாழ்வுக்கு விடை கொடுத்து) வாழ்வினை வர வழைத்து, கொழுப்பினால் அவதியுறு கிறார்கள்!

பலர் வாய்க் கொழுப்பினால் கெட்டுப் போவ தைப்போலவே, உடற்கொழுப்புப் பெருக்கத்தால் இளம் வயதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பலவித நோய்களால் தாக்குண்டு தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொள் ளும் கொடுமை நாளும் அதிகரித்தே வருகிறது!

வேதனைப்பட வேண்டிய செய்தி இது!

மருத்துவம் பார்க்கச் சென்றாலே கொள்ளைச் செலவு.

பக்க விளைவுகளையும் சேர்த்து ஏற்படுத்தும் பல மருந்துகளை வாங்கி உட்கொள்ளவேண்டிய கட்டா யத்திற்கு ஆளாக்கப்படும் கொடுமை மறுபுறம்!

சிற்சில நேரங்களில் மருந்துகளே கூட நோய்க் கொல்லியாக இராமல், ஆட்கொல்லியாக மாறிடும் வேதனையும் நிகழவே செய்கிறது!

இதற்கு மாற்று வழி என்னவென்பது இப்போது சமூக ஆர்வலர்கள், தொண்டறப் பணிபுரிவோர் ஆராய்ந்து பல கருத்துகளைக் கூறுகின்றனர்!

அத்தகையோர் ஆய்வதற்கு வள்ளுவர் தரும் மருந்து என்னவென்பதைப் படித்தால், திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள அரிய, எளிய, எவரும் பின்பற்ற இலகுவான கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம் தமிழ் அறிஞர் பெருந்தகை இவ்வளவு தெளிவான சிந்தனையை உலகுக்கு அறவுரையாக - அறிவுரை யாக அளித்துள்ளார் என்பது எத்தகைய சிறப்பும், பெருமையும் தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ளது!

முதல் விதி:

1. மருந்தே உங்களுக்குத் தேவையில்லை - எப்போது?

நீங்கள் உண்ட உணவு, சரியானபடி செரிமானம் ஆயிற்றா என்று அறிந்து, பின் மறுபடி உணவை உட்கொள்ளும் பழக்கம் நமக்கு ஏற்பட்டால், நோய் வராது - மருந்து தேவைப்படாதே!

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுணின் (குறள் 942)

தான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துப் போய்விட்ட தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, ஒருவன் தக்க அளவு உணவு உட்கொள்வானேயானால், அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.

அதுபோலவே, அடுத்து ஒரு குறள்:
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு (குறள் 943)
இதன் கருத்து

ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை ஒருவன் அறிந்து கொண்டு உண்ணவேண்டும். நல்ல உடம்பினைப் பெற்றுள்ள ஒருவன், நீண்ட காலம் அவ்வுடம்பினைக் காப்பாற்றி வாழக்கூடிய வழியும் அதுவேயாகும்.

எனவே, பசித்து உண்ணுங்கள் - ருசிக்காக உண்ணாதீர்கள். எனவே, நாகாக்க என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தடையல்ல நண்பர்களே, உணவுக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் சேர்த்தே என்றும் புரிந்து கொள்ளுங்கள்.



- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/95139.html#ixzz3QDAmNJ73

தமிழ் ஓவியா said...

காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?

நாம் 2014 ஆம் ஆண்டைக் கடந்து 2015 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். பூமியானது தனது பாதையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடித்தால் அதை ஓர் ஆண்டு என்று கணக்கு வைத்திருக்கிறோம். இது சாதாரண ஆண்டுகளில் 365 நாட்கள்.

லீப் ஆண்டு என்றால் 366 நாட்கள். என்றும் வைத்துக் கொண்டுள்ளோம். உண்மையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365. 242199 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

சூரியன் ஏதோ நிலையாக ஒரே இடத்தில் இருப்பதாகவும் பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாகவும் சிலர் நினைக்கலாம். அது அப்படி அல்ல. சூரியன் எல்லா கிரகங் களையும் அந்த கிரகங்களை சுற்றுகின்ற துணைக் கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் () மையத்தைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் எதுவுமே நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது.

ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தில் தான் சூரியன் அடங்கியுள்ளது. இந்த அண்டத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள் ளனர். (சூரியனும் ஒரு நட்சத்திரமே). நமது அண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்களுக்கு இடையில் வாயு, அண்டவெளித் தூசு ஆகியவையும் அடங்கியுள்ளன.

மாட்டு வண்டிச் சக்கரம் ஒன்றைத் தரையில் படுக்க வைத்து மேலிருந்த படி பார்த்தால் எப்படி இருக்கும்? நமது அண்டம் கிட்டத்தட்ட அந்த மாதிரியில் இருக்கிறது. நமது சூரியன் கிட்டத்தட்ட நமது அண்டத்தின் விளிம்பில் உள்ளது. அண்டத்துக்கு மய்யப் பகுதி உள்ளது. இந்த மய்யப் பகுதியை சூரியன் தனது பரிவாரங் களுடன் அதி வேகத்தில் சுற்றி வருகிறது.

சூரியனின் வேகம் குறித்து வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. எனினும் சூரியன் மணிக்கு சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்ப தாகக் கூறலாம். சூரியன் நமது அண்டத்தை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 24 கோடி ஆண்டுகள் ஆவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. சூரியன் இவ்விதம் ஒரு முறை சுற்றி முடிப்பதைத் தான் காஸ்மிக் ஆண்டு என்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/95189.html#ixzz3QDBGmhV4

தமிழ் ஓவியா said...

ஆறா வடுவை ஏற்படுத்தினர்!


என் நண்பனுக்குத் திரு மணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை சோகத்துடன் இருந்த நண் பனும், அவனுடைய மனைவி யும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விம ரிசையாக கொண்டாடினார்கள். அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த சில நாள்களிலேயே நண்பனின் மனைவிக்கு பக்க வாத நோய் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நண்பர் எவ்வளவோ பணம் செலவு செய்தும் நோய் குணமாக வில்லை.

அவருடைய மனைவியை பார்த்து நலம் விசாரிக்க வந்த உறவினர்கள் நோயை குழந் தையுடன் சம்பந்தப்படுத்தி பேசினார்கள். பிறந்த குழந் தைதான் தாயை நோயில் படுக்க வைத்துவிட்டது என்று ஒவ்வொருவரும் ஒவ் வொரு விதமாகப் பேசினார்கள். அதைக் கேட்ட நண்பர் வருத் தப்பட்டார். இப்படி எல்லோ ரும் நினைத்துவிட்டால், குழந்தை ஆசையே வராது என்று விரக்தியுடன் கூறினார். நோயாளியைப் பார்க்கச் செல் பவர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறாவிட்டாலும், அவர்கள் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பது நல்லது.

- க.ஆறுமுகம், கழுகுமலை
தினத்தந்தி குடும்பமலர், 25.1.2015

21 ஆம் நூற்றாண்டில் நாடு நடைபோடும் காலகட்டத்தில் சந்திராயன் வெற்றி முழக்கம் கேட்கும் ஒரு தருணத்தில், செவ்வாய்க் கிரக ஆய்வில் அடுத்த கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதில் இப்படியும் செய்திகள் உலா வரு வதை நினைத்தால் வெட்கித் தலை குனியத்தான் வேண்டும். மதம் மக்களின் மூளையில் புகுந்து நச்சுக் கிருமிகளை உரு வாக்கி விட்டதே - என் செய்ய!

குழந்தை பிறந்ததற்கும், தாய்க்கு வந்த நோய்க்கும் முடிச்சு போடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? மொட் டைத் தலைக்கும், முழங்கா லுக்கும் முடிச்சுப் போடுவதாகக் கேலியாகச் சொல்வார்களே - அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.

இந்த அர்த்தமுள்ள(?) இந்து மதத்தில்தான் இந்தக் குட்டிச் சுவர் க(ழு)தைகள் எல்லாம்!

ஏற்கெனவே நோய்வாய்ப் பட்டுள்ள ஒருவரிடம் இப்படி சொல்லுகிறோமே, அவர்கள் மனநலமும் பாதிக்காதா என்ற எண்ணம் இல்லாததோடு, இப்படிச் சொல்லுபவர்களின் எண்ணத்தில் மனிதநேயத்தின் மயிரிழைக் கசிவுகூட இல்லை என்பதை நினைக்கவேண்டும்.

அந்தக் குழந்தை வளர்ந்த நேரத்தில், நீ பிறந்துதான் உன் தாயைக் காவு கொடுத்தாய்! என்கிற அளவுக்கு இன்று போடப்படுகின்ற மூட விதை, வளர்ந்து மரமும் ஆகும் என்பதில் அய்யமில்லை.

இது ஒன்றா? இந்தத் திசையில் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. பெண் ணுக்குச் செவ்வாய்த் தோஷம் எனச் சொல்லி, தக்க வயது வந்தும், திருமணம் ஆகாம லேயே தடைபடும் தகவல்கள் நிறைய உண்டு. செவ்வாய்த் தோஷமுள்ள மாப்பிள்ளை யைத் தேடுவார்கள். இது மாமனுக்கு ஆகாது என்றும் கதை கட்டுவார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்க் காதீர்கள்; குருதிப் பொருத்தம் பாருங்கள் - மணமக்களுக்கு உடற்சோதனை செய்யுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறிவரும் தேவை யான, அவசியமான கருத்தை இப்பொழுதாவது சீர்தூக்கிப் பாருங்கள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/95064.html#ixzz3QDCYTLi1

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆசை கொள்ளாதே!

ஆசை அறுமின்காள் ஆசை அறுமின்காள்
ஈசனோடுஆயினும்
ஆசை அறுமின்காள்!

- திருமூலர்

ஈசனாக இருந்தாலும் அவனிடமும் ஆசை கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளாரே!
பக்தர்களே இதற்கு என்ன பதில்?

Read more: http://viduthalai.in/page1/95066.html#ixzz3QDCkhWE3

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

தெரிந்திருக்குமோ....!

செய்தி: இந்தியப் பயணத் தின்போது திருப்பதி கோவி லுக்கு இலங்கை அதிபர் சிறீசேன வருகிறார்.

சிந்தனை: ராஜபக்சே கூடத்தான் வந்து போனார் - என்ன பலன் கிடைத் தது என்பதை அறியாத வரா புதிய அதிபர்...? புத்தர் சிலைதான் ஏழு மலையானாக மாற்றப் பட்டது என்ற உண்மை ஒருக்கால் அவருக்குத் தெரிந்திருக்குமோ!

Read more: http://viduthalai.in/page1/95067.html#ixzz3QDCrcIrj

தமிழ் ஓவியா said...

சோறு போட்டு உதை வாங்கிய கதை!


நீதிக் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார் தந்தை பெரியார். 1944 இல் சேலத்தில் நடை பெற்ற (ஆகஸ்டு 27) 16 ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில்தான் இந்தத் தீர்மானம் அண்ணாதுரை தீர்மானம் என்ற பெயரில் முன்மொழி யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில் பதவி பட்டங்களைத் துறக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. தேர்தலில் ஈடுபடு வதில்லை என்றும் தீர்மானம் கறாராகக் கூறியது.

பட்டம், பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த பெரிய மனிதர்களுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.

இந்த நிலையில், பி.டி.ராஜன் தலைமையில் அத்தகைய வர்கள் தாங்கள்தான் உண்மையான நீதிக்கட்சி என்று சொல்லிக்கொண்டார்கள்.

அப்பொழுது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சென்னை வந்ததைப் பயன்படுத்தி, அந்த நீதிக்கட்சித் தலைவர்கள் சென்னை கன்னிமாரா ஓட்டலில் வரவேற்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள் (24.9.1944).

அந்த வரவேற்பில் கலந்துகொண்ட அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூட்டம் கூட்டியவர்களின் நோக்கத் தைப் புரிந்துகொண்டு, பெரியார் தலைமையை ஏற்று நடந்துகொள்ளுமாறு அறிவுரை கூறினார். மறுநாளே தந்தை பெரியார் அவர்களை அண்ணல் அம்பேத்கர் சந்தித்து உரையாடினார்.

அண்ணல் அம்பேத்கரை அழைத்து மூக்கு உடைக்கப் பட்ட நீதிக்கட்சியினர் குறித்து சோறு போட்டு உதை வாங்கிய கதை என்று குடிஅரசு இதழ் கேலி செய்ததுண்டு.

70 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியை இப்பொழுது குறிப்பிடுவதற்குப் பொருத்தமான காரணம் உண்டு.

இந்தியாவின் 66 ஆவது குடியரசு நாளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பராக்! பராக்! என்று கட்டியம் கூறியது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பிடிக்க இந்தியப் பிரதமர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

வண்ண வண்ண ஆடைகளில் நாடகத்தில் வேடம் கட்டி ஆடுபவர்கள் போல ஜொலிக்கிறார்! மூன்று நாள்கள் அமெரிக்க அதிபருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பன்னாட்டுத் தலைவர்களைக் கவர்ந்து இழுத்தார்.

கடைசியில் என்னாயிற்று தெரியுமா? நேற்று இறுதி நாளில் (27.1.2015) பகல் 12 மணிக்கு டில்லி சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலே உரை யாற்றினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

அப்பொழுது மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துக் கொண்டிருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்து - இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான அருமருந்தென தேவைப்படும் அரிய கருத்துச் செறிவாகும் என்றாலும், இந்தியா இந்துக்களின் நாடென்றும், இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக் குவோம் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டி ருக்கும் மத்தியில் ஆளும் கட்சியான பி.ஜே.பி.யும், அதன் சங் பரிவார்களும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அமெரிக்க அதிபர் சிந்தனை வளத்துடன் வெளிப்படுத்திய கருத்து. இந்த இந்துத்துவவாதிகளுக்கு மரண அடியாகி விட்டது. அப்படி ஒரு கருத்தை அமெரிக்க அதிபரிடமிருந்து யாரும் எதிர்ப்பார்த்திருக்கவும் மாட்டார்கள்.

அப்படி என்ன சொல்லி விட்டார் என்று ஆர்வம் பீறிடுகிறதா? இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையானது என்று போட்டாரே ஒரு போடு!

மதவாதம் என்பது மக்களைப் பிரிவினைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது. மதவாதப் பாதையிலிருந்து விலகி, சமூக நலனிற்குப் பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகின்றன. இந்தியா போன்ற நாடுகள் மதத்தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டுவிட்டு, வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால், இந்தியா வளர்ச்சி அடையும்! என்று மாணவர்கள் மத்தியிலே ஆணித்தரமாக அழுத்தமாக கம்பீரமாக முழங்கினார் அமெரிக்க அதிபர்.

இந்துத்துவா பேசும் - இந்தியா என்பது இந்து நாடு என்று வெறி பிடித்து கூச்சல் போடும் பிரதமர் மோடி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் உள்பட அனைத்து இந்துத்துவவாதிகளுக்கும் இதைவிட மரண இடி வேறு ஒன்று இருக்க முடியுமா?

உலகின் மிகவும் பெரிய நாட்டின் அதிபர் உள்பட இந்தியாவின் இன்றைய அரசியல் - ஆட்சிப் போக்கை எந்த அளவுக்குத் துல்லியமாக உணர்ந்து வைத்துள்ளனர் என்பதற்கு அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்து ஒன்றே ஒன்று போதுமே!

மூன்று நாட்கள் விருந்து கொடுத்து, உபசரித்து அமெரிக்க அதிபரை தங்கத் தட்டில் வைத்து சீராட்டிப் பாராட்டிய நிலையில் கடைசி கடைசியாக இந்து மதவாதக் கூட்டத்தினரின் மூக்கை வெட்டும் கருத்தினை பராக் ஒபாமா எடுத்துச் சொன்னதை நினைக்கும்பொழுது - அன்று அம்பேத்கருக்கு விருந்தளித்து உபசரித்த நீதிக் கட்சித் தலைவர்கள் மூக்கறுபட்டபோது குடிஅரசு இதழ் எழுதியதே சோறு போட்டு உதை வாங்கிய கதை என்று - அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக் கிறது! என்ன செய்வது!!

Read more: http://viduthalai.in/page1/95073.html#ixzz3QDD8GRWq

தமிழ் ஓவியா said...

முற்போக்கு வெற்றி பெற...


முற்போக்குக்கான மார்க்கத்துக்கு அது வெற்றி பெறத் தகுந்த வழிக்கு நமது அறிவையும், செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது.
- (குடிஅரசு, 30.6.1929)

Read more: http://viduthalai.in/page1/95072.html#ixzz3QDDHcpdC

தமிழ் ஓவியா said...

கருநாடகாவில் ஆடம்பரத் திருமணங்களுக்கு தடை புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவு


பெங்களூரு, ஜன. 28_ ஆடம்பர திருமணங்க ளுக்கு கடிவாளம் போட, கருநாடக அரசு, புதிய சட்டத்தை வடிவமைக்க தீர்மானித்து உள்ளது. இச்சட்டம், வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொட ரின் போது தாக்கல் செய் யப்பட உள்ளது.

காங்கிரஸ், அரசு ஆட் சிக்கு வந்தவுடன், மூட நம்பிக்கைகள் தடை மற் றும் ஆடம்பரத் திருமணங் களை தடை செய்யும் மசோதாக்களை அமல் படுத்த முன்வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி, விவாதத்துக்கு உள்ளானது. எனவே, இவ் விரு மசோதாக்களையும் பரிசீலிக்கும்படி, சட்ட ஆணையத்திடம், அரசு கேட்டு கொண்டது.

சட்ட ஆணையம், முத லில் ஆடம்பர திருமண மசோதாவை பரிசீலித்து, இப்படிப்பட்ட மசோ தாக்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் உள் ளது. இந்த திருத்த மசோ தாவை செயல்படுத்தலாம் என்று, பரிந்துரை செய் துள்ளதாக தெரியவந்து உள்ளது. சட்டக் ஆணை யத்திடமிருந்து வந்த பரிந்துரையை, சட்டத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு அனுப்பி உள்ளது.

இத்து டன், மசோதாவை வடிவ மைக்கும்படியும் தெரி வித்து உள்ளது. மசோதா தயாரானவுடன், அமைச் சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்று, வரும் சட்டப் பேரவை கூட்டத்தொட ரிலோ அல்லது பட்ஜெட் கூட்டத் தொடரிலோ தாக்கல் செய்ய, அரசு தீர் மானித்து உள்ளது. சமீப நாட்களாக, ஆடம்பர திரு மணங்கள் அதிகரித்துள் ளன.

இதனால், பொருளா தார ஏற்றதாழ்வுகள் ஏற் படுகின்றன. லட்சக்கணக் கான ரூபாய் செலவிட்டு நடைபெறும் திருமண விருந்துகளில், உணவுகள் வீணாக்கப்பட்டு, தெரு வில் கொட்டுகின்றனர். பெங்களூரு போன்ற மாந கரங்களில், பிரபலமான திருமண மண்டபங்களில் வாடகை, லட்சக் கணக் கான ரூபாயாக உள்ளது. இரண்டு நாள் திருமண நிகழ்ச்சிக்காக, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படுகிறது.

இது போன்ற ஆடம் பரத் திருமணங்களுக்கு, கடிவாளம் போடுவது பற்றி, சட்டசபை, மேலவை கூட்டத்தொடரில் பல முறை விவாதிக்கப்பட்டும், மசோதா வடிவமைக்க வில்லை. தற்போது செயல் பாட்டில் உள்ள, ஆடம் பர திருமணத் தடை சட் டத்துக்கு திருத்தம் கொண்டு வருவதன் மூலம், புதிய மசோதாவை, அரசு தயாரித்து வருகிறது.

தற் போது அமலிலுள்ள சட் டத்தில், 50 ஆயிரம் ரூபாய்க் கும் அதிகமாக செலவு செய்து செய்யப்படும் திருமணங்கள், ஆடம்பர திருமணங்களாக கருதப் படும். தற்போது இத்தொகை, அய்ந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஆடம்பர திருமணங்க ளுக்கு, இரண்டு சதவீதம் வரி விதிக்க வேண்டும் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆலோசிக் கின்றனர்.

இத்திட்டத் திற்கு, திருமண மண்டப உரிமையாளர்களின் ஒத்துழைப்பும், அவர் களிடமிருந்து, திருமண செலவு விவரங்கள் பெறப் படும். அனைத்து திருமண மண்டபங்களிலும், 'சிசி டிவி' கேமரா பொருத்து வது கட்டாயமாக்கப்படு கிறது என, அரசு வட் டாரம் தெரிவித்துள்ளது.

கூட்டுத் திருமணம் மற் றும் எளிமையான திரு மணங்களை ஊக்கப் படுத்த வேண்டும் என்பது, அரசின் விருப்பம். எனவே, எத்தனை தடைகள் வந் தாலும், இம்மசோதாவை தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்று, அரசு முடிவெடுத்துள்ளது.

எளிமையான திரும ணங்களை ஊக்கப்படுத்தி, ஆடம்பர திருமணங்க ளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது, அர சின் விருப்பம்; இதற்காக சட்டம் வடிவமைக்கப் படுகிறது. சட்டத் துறை யிடமிருந்து வந்துள்ள கோரிக்கையில், எங்கள் துறை, சில அம்சங்களை சேர்க்கிறது. மசோதாவை, எப்போது தாக்கல் செய் வது என்பதை முதல்வரே தீர்மானிப்பார் என்றார்.

Read more: http://viduthalai.in/page1/95102.html#ixzz3QDDmsKIN

தமிழ் ஓவியா said...

இந்துத்துவவாதிகளுக்கு மரண அடி

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை மதவாதமே!

அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி!


புதுடில்லி, ஜன.27_ இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையாகவே இருக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

மாணவர்களிடையே அவர் தெரிவித்த கருத்து இந்துத்துவாவாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. டில்லியில் இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான இன்று (27.1.2015) பகல் 12 மணியளவில் சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடையே பேசும் போது அவர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பதில் அளிக்கையில் மத வாதப் பாதையில் செல்லும் எந்த நாடும் முன் னேற்றம் காணாது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மக்களைப் பிளக்கும் கருவியாக மதவாதம் இருக்கும் என்று பதிலளித்தார்.

மதவாதம் என்பது மக்களைப் பிரிவி னைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது, மதவாதப் பாதை யில் இருந்து விலகி, சமூகநலனிற்கு பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் மதத் தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டு விட்டு வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால் இந்தியா வளர்ச்சியடையும்.

அமெரிக்காவில் 30 லட்சத்திற்கு மேல் இந்தியர்கள் வசிக்கின்றார்கள். அங்கு இந்தி யர்கள் மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களுடைய வளர்ச்சியுடன் அமெரிக்காவின் வளர்ச்சி குறித்தும் அக்கறைகொண்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்க மக்களிடையே பல இந்தியர்கள் நற்பெயர்களைப் பெற்றுள் ளனர்.

நமக்குள் ஏற்படும் விவாதங்களை அது எந்த தலைப்பில் இருந்தாலும் அமைதியான பேச்சுவார்த்தையின் துணையோடு தான் தீர்வு காண முடியும். ஆனால், உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் எந்த முடிவும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

இந்தியா எப்பொழுது வெற்றிப் பாதையில் செல்லும்?

இந்தியாவின் வளர்ச்சி எப்போது வெற்றிகரமான பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு, மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத் தாமல் இருக்கும் பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும்; அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

மதமாற்ற விவகாரம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்த ஒபாமா ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்றுவதும், அதை விட்டு விலகுவதும் அவரவர் விருப்பமாகும், அது தனிப்பட்ட மனிதருக்கான அதிகாரமாகும், ஆனால் மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிரிவினைக்கு ஆட்படுத்தும் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது எப்பொழுது? நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களது பெற்றோருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது, காரணம் நிறபேதம் அமெரிக் காவை ஆட்டிப்படைத்தது, தற்போது அப்பிரி வினைவாதம் நீங்கியதால் தான் அமெரிக்கா வின் வளர்ச்சி சாத்தியமானது. இந்தியாவின் உறுதியை மதப் பிணக்குகள் குலைத்து விடும். இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 25 இந்துத்துவா வலதுசாரி அமைப்புகளின் கர் வாப்சி என்கிற மதமாற்றங்களுக்கு எதி ராக ஒபாமா பேச்சு அமைந்திருந்தது.

ஒபாமா இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25இன்படி மத சுதந்திரம் குறித்து கூறப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, உங்கள் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடு கிறது. அனைவருக்கும் தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாகப் பேசுவதற்கும், பின்பற்றுவதற் கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நம்முடைய இரண்டு நாடுகளிலும் அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்தைக்காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக் கும் உள்ளது.

உலகம் முழுவதும் மத சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளதைக் காண்கிறோம். வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றால் ஒரே நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளது. மதரீதியான பிரிவினைக்கு எதிராக காப்பாளராக நாம் இருக்க வேண்டும். என்று கருத்துரை வழங்கினார் அமெரிக்க அதிபர்.

Read more: http://viduthalai.in/page1/95039.html#ixzz3QDE7Olt6

தமிழ் ஓவியா said...

ஜாதிப் பெயரா?

சமீபத்தில் என் அலு வலக நண்பரின் வீட்டிற்கு போயிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆறாவது படிக்கும் நண்பனின் மகன் அழுத படி வந்தான். ஏன் அழு கிறாய்? என்று கேட்டதற்கு, அவன் கூறிய பதிலைக் கேட்டு கோபம் வந்தது.

அவன் ஆசிரியர், அவனை கறுப்பா என்று அழைப்பாராம். அதைக் கேட்டு சக மாணவர்கள் கேலி செய்து சிரிப்பார் களாம். இதைக் கூறி மேலும் அழுதான் பையன்.

அவனுடைய சக வகுப்பு நண்பனிடம் கேட்டதற்கு, எங்கள் ஆசிரியர் அப்படித்தான்...

மாணவர்களின் இனத்தை வைத்து கவுண்டா, அய் யரே, பாய் என்றும், முடி காணிக்கை செலுத்தியவர் களை மொட்டையா என்றும் கூப்பிடுவதாகக் கூறினான்.

ஒழுங்கையும், மரியா தையையும் சொல்லித் தரும் ஆசிரியர்களே இப்படி கிண்டலடித்தால், மாணவர் சமுதாயம் எப்படி முன் னேறும்?
- ஜானகிராமன், வாலாஜா
(தினமலர் வார மலர் 25.1.2015 பக்.10)

இது ஒன்றும் புதிதல்ல - சில ஆண்டுகள் முன் வரை பள்ளிகளில் பெரும் பாலும் ஆசிரியர்கள் பார்ப் பனர்களாகவே இருப் பார்கள். தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் படிக்க வந்த நிலையில் அந்த உயர் ஜாதி ஆணவம் அவர் களை ஆத்திரத்தின் உச் சிக்கே துரத்தியது.

முதல் தலைமுறை யாகப் படிக்க வந்த மாண வர்களைப், பல தலை முறைகளாகப் படித்த பரம்பரையைச் சேர்ந்த பார்ப்பனர்களோடு ஒப்பிட் டுப் பேசுவதே தவறு. அப் படியெல்லாம் அவர்களால் சிந்திக்க முடியாதே!

நீ எல்லாம் ஏன் படிக்க வந்தே? மாடு மேய்க்கப் போக வேண்டியதுதானே? உன் வாயில் இதெல்லாம் எப்படி நுழையும் - உன் நாக்கில் வசம்பை வைத் துத்தான் தேய்க்கனும் என்று வாய்க்கு வந்த வசுவுகளையெல்லாம் கொட்டித் தீர்ப்பார்கள்.

தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் பல நிகழ்ச்சி களில் பேசும் போது இவற்றையெல்லாம் குறிப் பிடுவதுண்டு.

நான் மயிலாடுதுறை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண் டிருந்தபோது பெரும்பா லும் பார்ப்பன ஆசிரியர் களே இருந்தனர்.

நம் மாணவர்களைப் பார்த்து இப்படியெல்லாம் சொல்லு வார்கள் என்று பேரா சிரியர் அவர்கள் குறிப் பிட்டதுதான் நினைவிற்கு வருகிறது.

தந்தை பெரியார் அவர்களின் பேருழைப்பால், கல்வி வள்ளல் காமராசரால், திராவிட இயக்கத்தின் தொடர் ஆட்சியால் பார்ப் பனர் அல்லாத இரு பால் மாணவர்கள் பார்ப்பனர் களைப் புறந் தள்ளும் பெரு நிலைக்கு வந்து விட்டனர்.

இந்த நிலையிலும் பழைய காலத்து விட்ட குறை, தொட்ட குறையாக ஜாதிப் பெயரை சொல்லி மாணவர்களை அழைக் கிறார்கள் கறுப்பா என்று கிண்டல் செய்கிறார்கள் ஆசிரியர்கள் என்றால் அந்தஆணவம் இன்னும் குற்றுயிராகத் துடித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/95034.html#ixzz3QDEGJUwi

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நீதிமன்றம் ஏன்?

திருவாஞ்சியம் - மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய தலம் இதுவாம்.

அப்படியானால் குடும்ப நல நீதிமன்றத் தைக் குறைந்தபட்சம் அந்த மாவட்டத்திலாவது மூடி விடலாமா? மனநல மருத்துவர்களின் (Coun siling)
அலுவலகத்தை யும் வேண்டாம் என்று சொல்லி விடலாமா?

Read more: http://viduthalai.in/page1/95042.html#ixzz3QDERSLhA

தமிழ் ஓவியா said...

சமூக நீதிக்குத் தடை - ஜாதி கர்நாடக முதலமைச்சர்


பெங்களூரு, ஜன.27_ சமூக நீதி மற்றும் சமதர்ம சமுதாயம் என்ற இலக் குகளை எட்டுவதற்கு, ஜாதிய அமைப்பு முறை யும், மதப் பாகுபாடுகளும் தடையாக இருக்கின்றன என கர்நாடக முதல்வர் சித்தராமையா வருத்தம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் குந்தர்கி தாலுகாவில் உள்ள சிறீ அத்விசித்தேஸ் வர் மடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமரேஷ்வர் தேவர் நிரஞ்சனாச்சாரியாரின் பட்டமேற்பு விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

சமத்துவ சமுதாயத்தை நிலை நாட்ட ஜாதி முறைகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும். பச வேஸ்வரா மற்றும் ரிஷி கள், புலவர்கள் எழுதிய தாச சாஹித்யத்தில், ஜாதிய முறைகளுக்கு எதி ராகக் கூறப்பட்டுள்ளது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் ஜாதி முறை களும் சுதந்திர இந்தி யாவை இன்னும் பீடித் திருக்கின்றன. சமத்துவம், நீதி, சகோதரத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தாச சாஹித்யம் மற்றும் பிற இலக்கியங்கள் குறிப்பிடத் தக்க பங்களிப்பைச் செய் திருக்கின்றன என்றார் கருநாடக முதலமைச்சர்.

Read more: http://viduthalai.in/page1/95044.html#ixzz3QDEazLZy

தமிழ் ஓவியா said...

விலங்குகளை பலியிட நீதிமன்றத் தடை உள்ளதால் மாண்டி சிவராத்திரி விழாவுக்கு சாமியே வராதாம்


சிம்லா, ஜன.27-_ பன்னாட்டளவில் சிவ ராத்திரி விழாவில் விலங் குகளை உயிர்ப்பலியிடு வதை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கவில்லை என்றால், சிவராத்திரி விழாவுக்கு காம்ரு நாக் கோயில் சாமியே வராமல் புறக் கணித்துவிடும் என அச் சுறுத்தல் உள்ளதாக கோயில் வட்டாரத்திலி ருந்து கூறப்பட்டுள்ளது..

இமாச்சலப்பிரதேசத்தில், காம்ரு நாக் கோயிலில் 400 ஆண்டு கால பழை மையான பழக்கமாகிய சிவராத்திரி விழா அன்று விலங்குகளை உயிர்ப்பலி யிடுவது இந்த ஆண்டில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவால் நடைபெறாது.

காம்ரு நாக் கோயிலின் தெய்வங்கள், மாண்டி சிவராத்திரி விழாவுக்கு வரவேண்டுமானால், விலங்குகள் உயிர்ப்பலி செய்தாக வேண்டுமாம். காம்ரு நாக் கோயிலின் சாமியின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் விலங்கு களை உயிர்ப்பலி செய் யாமல் இருப்பதன்மூலம் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனராம். இதனால், காம்ரு நாக் சாமி, சிவராத்திரிக்கு வருமா என்பதே அய்யத் துக்கிடமாக உள்ளதாம்.

குல்லு தசராவின் இறுதிநாளில் முன்னதாக குல்ல அரச பரம்பரையின ரால் தொடங்கப்பட்ட உயிர்ப்பலியிடும் பழக்கம் உயர்நீதிமன்றத்தால் கெடுபடியான நிலை எடுக்கப்பட்டுள்ளதால், அதற்று கடவுளர்களே கட்டுப்படவேண்டிய நிலை இப்போது ஏற்பட் டுள்ளது.

மாண்டி மாவட்டத் தில் கடந்த வாரத்தில் சர்வ் தேவ்தா கர்தார் சமிதியின் சார்பில் 150பேர் கூடிய கூட்டத்தில் பல கடவுளர்களின் சார்பில் அவைகளின் பிரதிநிதி களாக உள்ளவர்கள் கூறும்போது விலங்கு களை உயிர்ப்பலி கொடுக்கவில்லையானால், கடவுளர்கள் விழாவைப் புறக்கணித்துவிடுவார்கள் என்று கூறுகின்றனர்.

சர்வ் தேவ்தா கர்தார் சமிதி அமைப்பின் தலை வர் சிவ்பால் சர்மா கூறும் போது, நூறு ஆண்டு களாக கடைப்பிடிக்கப் பட்டுவரும் பழக்கமான உயிர்ப்பலியிடுதலுக்கு தடை விதித்திருப்பதால், கடவுளர்களின் பிரதிநிதி கள் அதிருப்தியுடனும், கோபத்துடனும் உள்ள னர் என்று கூறினார்.

சமிதி சார்பில் விழா வில் முக்கியமான கட வுளர்கள் பங்கெடுப்பதை உறுதி செய்யக் கோரி யுள்ளது. காம்ரு நாக் மற்றும் விஷ்ணு மத் லோரா ஆகிய கடவுளர் களை பாமைகருதி விழா வில் பங்கேற்கச் செய்ய வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் வீர்பத்ரசிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மறு ஆய்வு மனு செய்ய வேண்டும் என்று சமிதி சார்பில் கோரப்பட்டுள்ளது.

400 ஆண்டு பழை மையான மாண்டியில் கங்கரா அரசன் சன்சார் சந்த் 1792ஆம் ஆண்டில் மாண்டிக்கு வந்தார். மாண்டிப்பகுதியை ஆண்ட ஈஷ்வரி சென் என்பவரைப் பிடித்து 12ஆண்டுகள் சிறையில் அடைத்தார். கூர்காக்கள் மாண்டிக்குள் வந்து காங்கராக்கள்மீது தாக்கு தலை நடத்தியபிறகு சென் விடுவிக்கப்பட்டார்.

கூர்காக்கள், மாண்டிப் பகுதியை மீண்டும் ஈஷ்வரி சென்னிடம் ஒப்படைத் தார்கள். அரசன் மீண்டும் மாண்டிக்கு அரசப் பொறுப்பை ஏற்றதை யொட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மலையில் உள்ள கட வுளர் சிலைகளைக் கொண்டு வந்து பெரும் விழாவை சிவராத்திரி விழாவாக ஏற்பாடு செய் தாராம். அதனைத் தொடர்ந்தே, மாண்டியில் சிவராத்திரி விழாவின்போது விலங்கு களை உயிர்ப்பலியிடும் பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.

தற்போது உயர்நீதிமன் றம் விலங்குகளை உயிர்ப் பலியிடுவதற்கு விதித் துள்ள தடை உத்தரவால் சிவராத்திரி விழாவுக்கு கடவுளர்கள் வருகை இல்லாமல் புறக்கணிக்கப் போகிறார்களாம்.

Read more: http://viduthalai.in/page1/95043.html#ixzz3QDEjwzs6

தமிழ் ஓவியா said...

நாடு

நாடு என்று எதைச் சொல்ல வேண்டும் என்றால், அது பொரு ளாதாரச் சுதந்திரமுடைய நாடாக இருத்தல் வேண்டும்; அது இல்லாத நாடு அடிமை நாடு என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, சுதந்திர நாடு என்று சொல்ல முடியாது.
(விடுதலை, 2.12.1958)

Read more: http://viduthalai.in/page1/95025.html#ixzz3QDF58jCY

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

எது உண்மையான இராமாயணம்?

இராமாயணம் என் றால் ஒன்றிரண்டு அல்ல; எண்ண முடியாத அள வுக்கு இராமாயணம் பல மொழிகளில் உண்டாம்.

உண்மை என்றால் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். இத்தனை இராமாயணங்களில் எது உண்மை என்று ஏற்றுக் கொள்வது? வங்காள இராமாயணத்தில் இரா வணனின் மகள் சீதை! எப்படி இருக்கிறது?

Read more: http://viduthalai.in/page1/94980.html#ixzz3QDGZhAnL

தமிழ் ஓவியா said...

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சீல் வைப்பு

உ.பி. அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை

லக்னோ, ஜன.26 உத்தரப்பிரதேசம் மாநி லம், மீரட் நகரில் இந்து மதவெறியன் கோட் சேவுக்கு கோயில் கட்டுவ தாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப் பட்டவர் காந்தியார். அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30.1.1948 அன்று இந்து மதவெறி யன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். காந்தியாரை கொன்ற வனையே 18 ஆண்டு களுக்குபின் விடுதலை செய்தனர்.

அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோ கம் செய்தார். இஸ்லாமி யர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் காந்தியாரை சுட்டுக் கொன்றேன் என்றான். அப்படிப்பட்ட இந்து மதவெறி பிடித்த நாதுராம் கோட்சேவுக்கு மீரட் மாவட்டம் பிரம்ம புரி பகுதியில் வரும் ஜன வரி மாதம் சிலை வைக்கப் படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப் படும் என மதவெறியை தூண்டும் வகையில் அகில இந்திய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச் சார்யா மதன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித் திருந்தார்.

இந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, விசா ரித்து நடவடிக்கை எடுக் கும்படி மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் மற்றவரை அவமதிப்பு செய்வது, வதந்திகளை பரப்புவது போன்ற குற்றவியல் சட்டங்களின்கீழ் ஆச் சார்யா மதன் மீது கிரி மினல் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.

இந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையின் விளை வாக கோட்சேவுக்கு சிலை அமைக்க விரும்பிய சர்ச்சைக்குரிய இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைய முயற் சிப்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என மீரட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/94969.html#ixzz3QDGhyJ7E

தமிழ் ஓவியா said...

விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?


ஜனவரி 26 - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3) எம்.ஆர். சீனுவாசன்
4) பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;
தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?

புரிகிறதா?

Read more: http://viduthalai.in/page1/94984.html#ixzz3QDGoZ3oG

தமிழ் ஓவியா said...

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்


உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

Read more: http://viduthalai.in/page1/94967.html#ixzz3QDH5Gjco