உச்சநீதிமன்றம் என்ன செய்யப்போகிறது?
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான பிரச்சினை ஒரு முக்கிய புள்ளிக்கு நகர்ந்திருக்கிறது. அறிவியலுக்கு மாறான ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்து போட்டு அத்திட்டத்தை முடக்கப் பார்த்தனர்.
17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமனால் கட்டப்பட்ட பாலத்தை இடித்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூறக் கூடிய மதவாத சக்திகள் இந்தியாவில் இருக்கின்றன.
இந்தியா முன்னேற்றம் பெறாமல் இருப்பதற்கு இந்த மதவாத புத்திதான் முக்கிய காரணம் என்று பல வரலாற்றாளர்களாலும் கூறப்பட்டுள்ளது - நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை இந்த அடாத செயல் மேலும் நிரூபிக்கிறது.
மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51 ஹ- () கூறுகிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் இதனை அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே - ஒரு மத்திய அரசு தொடக்கத்திலேயே ராமன் பாலம் என்ற கருத்தோட்டம் கிளம்பியபோது, முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா?
மெத்தப் படித்த மேதாவிகள் நிறைந்த உச்ச நீதி மன்றம், ராமன் பாலம் என்ற கருத்துருவை முன் வைத்த அந்தக் கணத்திலேயே அதனைத் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற மனு தாக்கல் செய்யப்பட்ட அந்தத் தருணத்திலேயே அனுமதிக்கத் தகுந்ததல்ல, உகந்ததல்ல என்று தள்ளியிருக்க வேண்டாமா?
பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா (ராம் சரஸ் சர்மா) என்ன கூறுகிறார்?
இராமாயண காலத்தில் பாலம் கட்டியதற்கு அகழ்வாராய்ச்சிச் சான்றோ, இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போல தோன்றும் மணல் திட்டுகளின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் பழையது என்று வைத்துக் கொண்டாலும், அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை. கிடைத்துள்ள சான்றுகளின் படி இராமாயணம் எழுதப்பட்டது கி.மு. 400 ஆகும் என்று எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று ஆசிரியர்கள், கடல்சார் பொறியாளர்கள் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதுதானே முறைமை?
வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் விதண்டாவாதம் பேசும் வெறியர்களின் கூற்றுக்கு உச்சநீதிமன்றம் செவி சாய்த்ததேகூட தேவையற்றதே!
தொல்பொருள் ஆய்வுத் துறையினர், ராமன் என்பதே கற்பனைப் பாத்திரம் - அப்படி இருக்கும் போது ராமன் பாலம் எங்கிருந்து வந்தது? என்று அறிக்கை கொடுத்த நேரத்தில், மத்திய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த கொடுமையை என்னவென்று சொல்ல!
உனக்கு ரத்தக் கொதிப்பு இருக்கிறது என்று பரிசோதித்துச் சொன்ன மருத்துவர் மீது கோபப்பட்ட நோயாளிகளின் நிலைக்கு மத்திய அரசு ஆளாகலமா?
பாதி பி.ஜே.பி. மனப்பான்மையோடு மத விடயத்தில் காங்கிரஸ் தள்ளாடுவதால்தான் இந்த நேரக் கேடும், பொருள் கேடும், மக்கள் நலக்கேடும் ஆகும்.
நாக்பூரில் உள்ள நீரி என்ற தேசிய சுற்றுச் சார்பு பொறியியல் ஆய்வு நிலையம் தேர்வு செய்த பாதைதானே கடல் நீர்த்தடம் 6 ஆவது பாதை.
இந்தப் பாதையை ஏற்றுக் கொண்டதும் பி.ஜே.பி. ஆட்சிதானே? இப்பொழுது எங்கிருந்து வந்து குதித்தான் இந்தத் தசரதராமன்?
இதில் உச்சநீதிமன்றம் தெளிவாக இருந்து மதச் சார்பற்ற கண்ணோட்டத்தோடு, விஞ்ஞான மனப் பான்மையோடு செயல்படும் என்று இந்தியா மட்டுமல்ல - உலகமே எதிர்பார்க்கிறது. இந்தியா இன்னும் மதவாதக் குட்டையில் கிடக்கிறதா? அல்லது விஞ்ஞான மனப்பான்மையோடு செயல்படுகிறதா? என்பது இதன் மூலம்தான் உறுதி செய்யப்படும்.
--------------------"விடுதலை” தலையங்கம் 20-4-2012
2 comments:
சிரிக்கிறது திருவந்திபுரம் கோவில்!
குடுமி அர்ச்சகர் பார்ப்பனர்களுக்குள் அடிதடி! காவல்நிலையத்தில் கைகட்டி நிற்கும் கேவலம்
கடலூர், ஏப் 20- குடமுழுக்கு நடக்கவி ருக்கும் கடலூர் மாவட் டம் திருவந்திபுரத்தில் கோவில் அர்ச்சகர் பார்ப்பனர்களுக்குள் அடிதடி நடந்தது. விளைவு காவல்நிலையத் தில் கைகட்டி நிற்கின் றனர்.
திருப்பதிக்கு நிகராக அருளும் பொருளும் உடையதாக கடலூர் மாவட்டம் திருவந்தி புரம் லோகநாத சுவாமி கோவில் சிறப்பான தென்று பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. வரும்25ஆம் தேதி திரு விழா நடக்க உள்ளது. இந்நிலையில் திரு விழாவை முன்னின்று நடத்தவேண்டிய நீண்ட காலமாக பணியில் இருந்த நீலமேக பட் டாச்சார்யாவுக்கு 83 வயது முடிந்து விட்ட தால் இந்து சமய அறநிலையத்துறையால் விதிப்படி அவருக்கு பணி ஓய்வு தரப்பட்டு அவரது மகன் நரசிம்மா பட்டாச்சார்யாவுக்கு அவசரமாக புதன் கிழமை அன்று (18.4.2012) பணி ஆணை தரப் பட்டது. ஆனால் மறு நாளே அவர் மீது பல குற்றச்சாற்று உள்ள தாகக்கூறி உடனடியாக அவர் பணிநீக்கம் செய் யப்பட்டார்.
வழி மறித்து தாக்கிய அர்ச்சகர் பார்ப்பனர்
இன்னும் நான்கு நாட்களில் திருவிழா நடத்த வேண்டி இருப் பதால், உப்பிலியப்பன் கோவில் அர்ச்சகர் துவா ரநாத் பட்டாச்சார்யா என்பவர் நியமனம் செய் யப்பட்டார். உடனடி யாக புறப்பட்டு அவரும் அவரோடு இரண்டு பேரும் காரில் திரு வந்திபுரம் லோகநாத சுவாமி கோவிலுக்கு பொறுப்பேற்க வந்து கொண்டிருந்தபோது நீலமேக பட்டார்ச் சார்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள், காரை வழி மறித்து கார் கண் ணாடியை உடைத்து தாக்கி பிரச்சினை செய் துள்ளனர். இதில் மூன்று பேரும் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் மூன்று பேரும் புகார் கொடுத்துள்ளனர்.
புதிய அர்ச்சகர் நிய மனத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் உள் ளதாக சொல்லப்படு கிறது. பழைய அர்ச்ச கரை விடுத்து புதிய அர்ச்சகர் யாரையும் திருவிழா நடத்த விட மாட்டோம் எனவும், வன்முறை பதற்றம் நில வுவதாகவும் நிலவரம் தெரிய வருகிறது. கும் பாபிஷேகத்துக்கான கோடிக்கணக்கான ரூபாய் வசூல்செய்யப் பட்டு அறநிலையத் துறையும் பெரும் செலவு செய்துள்ள நிலையில், இம்மாதிரி குழப்பங்கள் நேர்ந்திருப்பதால் பக்தர்கள் கலக்க மடைந்துள்ளார்களாம். அர்ச்சகர் பிரச்சினையே தீர்த்து வைக்கமுடியாத கடவுள்தான் பக்தர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கப்போகிறதா?
ராகுல்
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஏன் தோற்றது என்பதுபற்றி இம்மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஆய்வு நடைபெற்றுள்ளது. அப்பொழுது காங்கிரஸ்காரர் ஒருவர் கேள்வி ஒன்றை ராகுல் காந்தியிடம் எழுப் பினார்.
நீங்கள் தலித் களின் வீடுகளில் தங் கினீர்களே, பிராமணர் களின் வீடுகளில் தங் கினீர்களா? என்பது தான் அந்தக் கேள்வி; நிறைய பேர்களின் வீட்டில் தங்கினேன்; ஆனால் ஊடகங்கள் அவற்றை மறைத்து விட்டன என்று கூறி ஒரு பட்டியலையே ராகுல் காந்தி சொன்னாராம்.
இந்தத் தகவலை வெளியிட்ட இந்தியா டுடே (25.4.2012) அப் படிப் போடுங்க ராகுல்! பழிபோட இருக்கவே இருக்கிறது மீடியா என்று கிண்டலடித் துள்ளது.
ராகுல் காந்தி பட்டி யல் போட்டுச் சொல் லியிருக்கிறார்.
அறிவு நாணயம் இருந்தால் அதனை மறுக்க வேண்டும் அல் லது ஏற்க வேண்டும்; அதை விட்டு விட்டு மீடியாமீது ராகுல் பழி போடுவதாகக் கேலி செய்வானேன்?
உண்மையைச் சொன்னால் உடல் எல்லாம் எரிகிறதா? தலித் வீடுகளில் தங்கு கிறார் என்பதைமட்டும் பெரிதுபடுத்திக் காட்டி பார்ப்பனர்கள் ஓரளவு கணிசமாக இருக்கும் உ.பி.யில் எதிர்மறை வாக்குகள் பி.ஜே.பி.க் குப் போகட்டுமே என்ற பரந்த நல்ல எண்ணம் காரணமாக இருக்க லாம்.
அதுவும் அல்லாமல் பத்திரிகைக் குழுவின் தலைவர் (Press Counsil Chairman) மார்க்கண்டேய கட்ஜூ சொல்வதுபோல ஊடகங்களுக்கு எவ் வளவோ செய்திகள், வேலைகள் இருக் கின்றன.
டெண்டுல்கர் நூறா வது சதம் போட்டது - அவருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுவது அய்ஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறந்தது - இத்தியாதி வரலாற்றுத் திருப்பம் (?) வாய்ந்த சேதிகளை விடவா இவையெல்லாம் முக்கி யத்துவம் வாய்ந்தவை என்று நீதிபதி கட்ஜூ சொன்னது எவ்வளவுப் பெரிய உண்மை! - மயிலாடன் 20-4-2012
Post a Comment