Search This Blog

14.4.12

பாய்ந்துவரும் பார்ப்பனபகை நெருப்பு! -2

பாய்ந்து வரும் பகை நெருப்பு! - (2)

தமிழ், தமிழன், கழகம், பகுத்தறிவு என்ற சொற்களைக் கேட்ட மாத்திரமே விழுந்து கடிக்கிற ஒரு கூட்டம் இந் நாட்டில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இப்பொழுது அவற்றின் பைத்தியம் முற்றி உச்சநிலைக்குச் சென்று இருப்ப தாகத் தெரிகிறது.

தமிழ்த் தேசியவாதிகள் எனப் பெயர் கொண்டவர்கள் தங்கள் தொடைகளில் உட்கார்ந்து கொண்டு திராவிடர் இயக் கத்தையும், தந்தை பெரியார் அவர்களையும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற தைரியத்தில் இது நடக்கிறதா? சென்ற வாரத் தொடர்ச்சி...

எத்தனை எத்தனை ஆண்டுகள் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை கோணிப்பைக்குள் முடங்கிக் கிடந்தது.

கலைஞர் அவர்கள் முதல் அமைச்சரான நிலையில் அதற்கொரு விடிவு வந்தது. தமிழனாக இருக்கக் கூடிய ஒவ்வொருவனும் வரவேற்றான். ஆனால் அக்கிரகாரத்தின் அடி வயிறு எரிகிறதே! - பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறந்ததைப் பற்றி என்ன எழுதுகிறது தினமலர்? நையாண்டி மேளம் அடித்தல்லவா அவிழ்த்துப் போட்டு ஆடுகிறது!

கேள்வி: பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல்லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதும்!(துக்ளக் 19.-8.-2009)

கேள்வி: இலங்கைத் தமிழர் என்பதை விட, இலங்கை இந்தியர்கள் என்ற சொல் கூடுதல் பலம் பெறுகிறது அல்லவா?

பதில்: அஸ்குபுஸ்கு! அப்புறம் கழகக் கண்மணிகளோட அரசியல் எதிர்காலம் பலவீனமாகி விடுமே. (துக்ளக் 22.-2.-2009)

தமிழகப் பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம் தமிழகத்திற்குக் கர்நாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கருநாடக அரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாததால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7ஆம் தேதிதான் திறந்துவிட் டோம்.

டவுட் தனபாலு: அதனால என்னங்க. பெங்களுரூவுல திருவள்ளுவர் சிலை திறந்துவிட்டோமோ இல்லையா? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன? (தினமலர் 18.-8.-2009)

எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறார்கள் பார்த்தீர்களா? இந்தப் பார்ப்பனர்கள் உள்ளத்தில் திருவள்ளுவர்மீது எந்த அளவு ஆழமான எரிச்சல்.
இந்தத் தினமலர் இவ்வளவுக்கும் தமிழில் நடத்தித்தானே நத்திப் பிழைக்கிறது? தமிழர்களுக்கு சொரணை இருந்தால் எச்சில் கையைத் துடைப்பதற்குக்கூட இந்த ஏட்டைத் தீண்டு வானா?

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்பது தை முதல் நாள் என்ற கோரிக்கை மிகப் பெரிய தமிழ் அறிஞர்களின் கோரிக்கை. கலைஞர் அரசு சட்டமும் இயற்றியது. ஆனால், பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

கேள்வி: தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாக சொல்கிறாரே முதல் அமைச்சர்?
பதில்: எல்லாம் கெடக்க கிழவியை மணையில் அமர்த்திய கதைதான்.
(கல்கி 21.-1.-2008)

இது பற்றி துக்ளக் சோ ராமசாமி என்ன சொல்கிறார்? தமிழ்ப் புத்தாண்டு இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோதமானது.(துக்ளக் 22-.1-.2010)

யார் நம்பிக்கைக்கு விரோதமானது? யார் வழக்கத்திற்கு விரோதமானது ?

தமிழர் நம்பிக்கையும், வழக்கமும் தான் முக்கியமே ஒழிய, இதில் பார்ப் பனர்களின் நம்பிக்கையும் வழக்கமும் எங்கிருந்து குதித்தன?

நாரதன் என்கிற ஆண் கடவு ளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த 60 பிள்ளைகள் தான் தமிழ் வருடங்கள் என்கிற ஆபாசம் பார்ப்பனர்களுக்குச் சந்தனக் குழம்பாக மணக்கலாம். ஆபாசமும் அக்கிரஹாரமும் இரட்டைக் கிளவிகள். ஆனால் தமிழன் தலையில் கட்ட இவர்கள் யார்?

திராவிடர் இயக்கத்தின் இடைச் செருகலாகப் புகுந்த ஒரு பார்ப்பன அம்மையார் முதல் அமைச்சராக வந்துள்ளதைப் பயன்படுத்தி கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நிறைவேற்றிய சட்டத்தை நீக்கி மறுபடியும் ஆபாச ஆண்டுகள் பிறப்புக்கு முடிசூட்டிவிட்டார்களே.

பெரியார் பிறந்த மண்ணிலே மீண்டும் ஆரியத்துக்கு மகுடமா?

எந்தத் தமிழ்த் தேசிய வியாதி இது பற்றிக் குரல் கொடுத்தது? வெட்கம்! மகா வெட்கம்!! அல்லவா?

கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணையில் வை என்று ஏகடியம் செய்கிறது கல்கி.

எண்ணிப்பார்க்க வேண் டாமா தமிழர்கள்? தமிழ் என்றால் இழித்துப் பேசுவது. திருவள்ளுவர் என்றால் எரிச்சலைக் காட்டுவது. தை முதல் நாள் தமிழ்ப் புத் தாண்டுப் பிறப்பு என்றால் பழக்க வழக்கத்துக்கு மாறானது என்று எரிந்து விழுவது.

கழகம் என்றால் சூதாடும் இடம் என்று சூதாக எழுதுவது; - சூதாட்டத்தையே மய்யப் பொரு ளாகக் கொண்டு புனையப்பட்ட மகாபாரதம் பற்றி தொடர் எழுதி புத்தகம் போட்டுக் காசாக்கிய திருவாளர் சோதான் கழகம் என்றால் சூதாடும் இடம் என்று அகராதி சொல்லுகிறது என்று ஆனந்தப் பள்ளு பாடுகிறார்.

சோ கண்களின் கதகதப்பில் வைத்துச் சீராட்டும் அதிமுகவில் கழகம் என்ற சொல் இல்லையா?

அவாளின் சிவபெருமான் - கண்ணுதல் பெருங் கடவுள் கழகமோடு அமர்ந்து என்று வரி வருகிறதே அதுவும் சூதாடும் இடம்தானா?

மதுரைத் தமிழ்ப் பேரகராதி கழகம் என்ற சொல்லுக்கு ஆயுதம் பயிலிடம், கல்வி முதலிய பயிலிடம், சூதாடு மிடம், போர்க்களம் என்று பொருள் கூறுகிறது. இதில் சோவுக்குப் பிடித்த இடம் சூதாடும் இடம்தான்.

காரணம் அவர்தான் மகாபாரதப் பித்தர் ஆயிற்றே! வராக அவ தாரத்துக்கு முன் ஆயிரம் அரிய உணவுப் பொருள்களை வைத்தாலும், அதற்கு வேண்டியதைத்தானே வாசனை பிடித்துத் தேடிச் செல்லும்?

தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் பகுத்தறிவை முன்னிறுத்தியதால், பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம் என்று எழுதுகிறார் திருவாளர் சோ.

கேள்வி: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: ஏன் நிறுத்திவிட்டீர்கள்? பித்தலாட்டம் என்றால் ஏன் உங்களுக்கு கசக்கிறது? மோசடி ஏமாற்று வேலை, போலி வேடம் என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? என்று கேட்க வேண்டியதுதானே? அப்போதுதான் உங்கள் கேள்வி முழுமை அடையும்.
(துக்ளக் 4-.3-.2008)

பகுத்தறிவு என்றால் அவர் அறிவுக்குத் தோன்றுவது மோசடி, ஏமாற்று, போலி, பித்தலாட்டம்.

புத்தி சுவாதீனம் உள்ள எவரும் இப்படி பதில் எழுதிட மாட்டார்கள். மனிதன் என்றால் அவனுக்கு ஆறாவது அறிவு - பகுத்தறிவு இருக்க வேண்டும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதையே பித்தலாட்டம் என்று சொல்லுகிற ஒரு ஆசாமி ஏடு நடத்து கிறார் என்றால் அதன் யோக்கியதையை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

இன்னொருவர் இருக்கிறார். சோவின் கொடுக்கு! - பெயர் - வைத்தியநாதய்யர். இப்பொழுது தினமணியின் ஆசிரியர். அன்றாடம் தம் நச்சு முட்டைகளைப் பொரித்துக் கொண்டே இருக்கிறார். அரசியல்திகள் பிச்சை வாங்கவேண்டும். ஏதாவது கூட்டம், கீட்டம், இலக்கியம், கிலக்கியம் என்று மேடைகளைத் தேடி ஓடி தன் படத்தையும் போட்டுக் கொண்டு, தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளும் பிரகஸ்பதி அவர்.

தமிழன் என்ற பெயரைக் கேட் டாலே மார்பு வலிக்கும் அவருக்கு.

இம்மாதம் 3 ஆம் தேதி தினமணி 8 ஆம் பக்கத்தில் ஒரு செய்தி. தமிழர்களைக் கலக்கும் ரத்தக் காட்டேரி என்பது தலைப்பு.

எப்படி செய்தி போடுகிறார்? ஆயிரம்தான் சொல்லுங்கள். தமிழன் என்ற இனத்துக்கு தனிக் குணமும், பண்புகளும் இருக்கத்தான் செய் கின்றன. செய்தித்தாள்களைத் திறந்து நூறு செய்திகளைப் படித்தாலும் அதில் ஒன்றிரண்டாவது தமிழ் இனத்தின் பெருமையைப் பறை சாற்றுவதாக அமைந்து விடுவதே இந்த இனத்தின் சிறப்பு. கடந்த சில நாள்களாகவே செய்தித் தாள்களைப் படிக்கும்போது கண்களில் படும் ஒரு செய்தி ரத்தக் காட்டேரி பீதி என்பது. காதல், வீரம், கொடை ஆகிய மூன்றிலும் பேர் போனவன் தமிழன்.

(ரத்தக்காட்டேரியைப் பற்றி எழுதி விட்டு ஒரு இடத்துக்கு வருகிறார்.)

மந்திரவாதியை அழைத்து ஆடு, கோழி அறுத்து, காட்டேரிக்கு பலி கொடுக்கின்றனர். முத்தாய்ப்பாக இன்று போய் நாளை வா என்று தமிழில் எழுதி திரிசூலம் படமும் வரைந்து வைக்கின்றனர்.

இந்த இடத்தில்தான் தமிழனின் பகுத்தறிவு, பண்பாடு அனைத்தும் பட்டொளி வீசிப் பறக்கிறது என்று எழுதுகிறார் திருவாளர் வைத்திய நாதய்யர்.

ரத்தக் காட்டேரி என்ற மூட நம்பிக்கை கட்டிவிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை வெளியிடலாம். ஆனால் இதில் தமிழன் எங்கே வந்தான்? அவன் பண்பாடு எங்கே வந்தது? அவன் பெருமை எங்கே வந்தது? பகுத்தறிவு எங்கே குதித்தது?

ஒரு மூடநம்பிக்கையோடு இணைத்து ஒட்டு மொத்தமான தமிழினத்தையே கொச்சைப் படுத்தி, இழிவுபடுத்தும் பார்ப்பனக் குசும்பும், போக்கிரித்தனமும் தானே இது?

மூடநம்பிக்கை உலகம் பூராவும் இருக்கிறது. உடனே அந்த இனத்தை இழுத்து இழிவுபடுத்துவதுண்டா?

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கூட்டம் எதற்கெடுத்தாலும் தமிழனை இழிவு படுத்துவதற்கு எது கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்துகிறதே!

உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் பார்ப்பன ஏடுகள்தான் மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் வைரஸ் கிருமிகளாகப் பரப்பி வரு கின்றன. அதில் தினமணி ஒன்றும் விதி விலக்கல்ல.

ராசி பலனை வெளியிட வில்லையா? இதை விட மூத்த முடைநாற்றம் எடுக்கும் மூடத்தனம் வேறு என்ன?

ரத்தக் காட்டேரி செய்தி வந்த அதே தேதி தினமணியில் தேரோட் டம் பற்றி இரு செய்திகளைப் படத்துடன் வெளியிட்டு மகிழ்கிறது.

ஒரு பக்கத்தில் மூடநம்பிக்கைக் கொசுக்களை வளர்க்கும் சாக் கடைகளை உற்பத்தி செய்து கொண்டே இன்னொரு பக்கத்தில் மூடநம்பிக்கைக்கு எதிரி போல பாவனை பண்ணி, தமிழினத்தை இழிவுபடுத்தும் கோதாவில் குதிக்கிறது என்றால் இதற்குப் பெயர்தான் தினவெடுத்த பார்ப்பனீயம் என்பது.

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட் டான் என்று அந்த டாக்டர் டி.எம். நாயர் இன்று இருந்தால் அவர் வாயில் ஒரு கிலோ சர்க்கரையைப் போடலாம்.

திராவிடரைச் சீண்டும் ஆரியம்!

தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்ற வாக்குறுதிக்கு இங்கே அமோகமாக ஒட்டுகள் குவிகின்றன. வீடே இல்லா விட் டாலும் சரி.. பொதுக் கழிப்பிடம் கட்டித் தருகிறோம் என்று சொல்லி சுகாதாரத்தை மேம்படுத்தத்தான் யாரும் இல்லை.

இருள் பிரியும் நேரத்தில் ஒதுக்குப்புறப் புதர்களையும் தண்டவாள ஓரத்தையும் நோக்கி பெரும்பான்மைத் தமிழர்களைக் கூனிக் குறுகி ஒதுங்க வைத்ததுதான் திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகளில் ஆற்றிய சாதனையா? தன்மானம், சுயமரியாதை என்று சொல்லியே மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழனின் சுயமரியாதைமேல் கொண்டு இருக்கும் மரியாதை இவ்வளவுதானா என்று தலையங்கத்தில் எழுதுகின்றது ஆனந்தவிகடன் (10.4.2012).

பார்ப்பன ஏடுகளின் ஒரே இலக்கு என்ன தெரியுமா? எந்தப் பல்லவியைத் தொடங்கினாலும் சரணம் என்பதுமட்டும் கண்டிப்பாக திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த வேண் டும் என்பதுதான்; இதில் ஆனந்தவிகடனும் விதி விலக்கு இல்லை என்பதற்கு மேலே கண்ட எடுத்துக் காட்டுப் போதுமானது. ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) முதல் நிதி அமைச்சர் ஆனபோது செக்குப்படம் போட்டு அவர் ஜாதியைச் சுட்டிக்காட்டிய ஏடாயிற்றே - இன்றுவரை அது தொடர்கிறது.

தமிழ்நாட்டில்தான் போதுமான கழிவறைகள் இல்லை; பா.ஜ.க., ஆளும் கருநாடகத்திலோ, மத்திய பிரதேசத்திலோ எல்லோருக்கும் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டனவா?

அங்கே கழிப்பறைகள் இல்லாததற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் தாக்கம் என்று சொல்லுவார்களோ!

திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதிலே பார்ப்பனர்களோடு தமிழ்த் தேசியவாதிகளும் கை கோர்க்கத் தயாராகி விட்டதால், பார்ப்பனர்களுக்கு மேலும் தைரியம் பொத்துக் கொண்டு கிளம்பி விட்டது போலும்!

இந்தத் திராவிடர் என்ற சொல்லைக் கேட்டாலே பார்ப்பனர் களுக்கு அதிர்ச்சியும் ஒவ்வாமையும் தானே!

திராவிடர் என்றாலே ஆரியர் என்பது எதிரே பஞ்சக் கச்சம் கட்டி நிற்கிறதே! இந்த எதிர்ப்புணர்வு தானே தமிழ் நாட்டில் ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்க வேர்களைச் சாய்த்தது? வருணாசிரமத் திமிரை நொறுக்கியது. எங்களுக்கும் இடஒதுக்கீடு தாருங்கள் என்று பிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஒருநிலையை ஏற்படுத்தியது. மாநிலத்தில் மட்டும் இந்த பிற்படுத் தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அகில இந்திய அளவி லும் கொண்டு வந்ததற்குக் காரணம் இந்த் திராவிடர் இயக்கம் தானே?

கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை தூக்கி எறிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டத்தைக் கொண்டு வந்ததும் இந்தத் திராவிடர் இயக்கம்தானே!

பார்ப்பனர் புரோகிதர்களை அழைத்துத்தான் தங்கள் வீட்டுக் கல்யாணங்களை நடத்தியாக வேண்டும் என்கிற நிலையை மாற்றி சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப் படுத்தி, அதற்குச் சட்ட வடிவம் கொண்டு வந்ததும் இந்தத் திராவிடர் இயக்கம்தானே!

அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டு வந்து அக்கிரகாரத்தின் தனி உடைமையாக இருந்த கோவில்களிலிருந்து பார்ப்பனர்களை வெளியே தூக்கி எறிந்ததும் இந்தத் திராவிடர் இயக்க ஆட்சிதானே?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்ற முழக்கத்தைக் கொடுத்ததும் தன்மான இயக்கமான திராவிடர் இயக்கம் தானே?

அதனால் திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும் போது அந்தத் தன்மானம் என்ற சொல்லையும் சேர்த்துக் குதறுகிறது - ஆரியம்
திராவிடர்களைச் சீண்டுகிறது ஆரியம் - திராவிடரே எச்சரிக்கை! எச்சரிக்கை!!

----------------- மின்சாரம் அவர்கள் 14-4-2012 “விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில்...


அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1891) இந்நாளில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும், கூட்டங்கள் நடத்தப்படும் - இவை நடந்தப்பட வேண்டியவைதான் - மக்கள் தலைவர் இந்த மாமேதை என்ற எண்ணம் இளைஞர்களும் பரவலாகத் தெரிந்து கொள்ள இவை ஒரு வகையில் தேவைப்படுபவையே!

அதே நேரத்தில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இருபெரும் தலைவர்கள் இந்தக் காலகட்டத்தில் எப்படியெல்லாம் தேவைப்படுகிறார்கள்? ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் சவால்களைச் சந்திக்க இவர்களின் வழிகாட்டுதல்கள் எப்படி எல்லாம் தேவைப்படுகின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்கவும். இவற்றின் அடிப்படையில் செயல்படவுமான உணர்வுகள் தேவைப்படும் தருணம் இது.

மண்ணுக்குச் சுதந்திரம் கிடைத்தால் போதுமா? மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்க வேண்டாமா என்று கேட்டவர் தந்தை பெரியார். பிறவியின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஜாதியை பாதுகாக்கும் ஓர் அரசமைப்புச் சட்டத்தை வைத்துக் கொண்டு, சுதந்திரம் பேசுவது சிறுபிள்ளைத்தனம் அல்லவா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் - சமத்துவம் இருக்குமா? சமத்துவம், சுதந்திரம் நிலவ வேண்டுமானால் ஜாதி இருக்கலாமா? ஜாதியை ஒழிக்காத அரசியல் சட்டம் நமக்கு எதற்கு? ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தி பல்லாயிரக்கணக் கான தொண் டர்கள் சிறை போகும் ஒரு நிலையை உருவாக்கியவர் தந்தை பெரியார். அரசமைப்புச் சட்டத்தை நான் தான் உருவாக்கினேன் என்றாலும் அதனைக் கொளுத்துவதில் நானே முதல் ஆளாக இருப்பவன் என்று நாடாளு மன்றத்திலேயே பகிரங்கரமாக அறிவித்தவர் அண்ணல் அம்பேத்கர்.

பெரியாரியல்வாதிகளும், அம்பேத்கரியல்வாதிகளும் இந்தத் திசையிலே இணைந்து போராட கடமைப் பட்டுள்ளனர்.

ஒரு பக்கத்தில் அரசியல் முகமூடி அணிந்து கொண்டு இந்துத்துவா ஆட்சியைக் கொண்டுவர உயர்ஜாதி பார்ப்பனர் கூட்டம் திட்டமிட்டு வேலை செய்கிறது.

பி.ஜே.பி.யையோ அதன் பரிவாரங்களையோ எதிர்ப்பது முறியடிப்பது என்பது அரசியல் நோக்கத்தால் அல்ல.

அவர்கள் கட்டிக் காக்க விரும்பும் இந்துமதம் என்பது சமத்துவத்துக்கு எதிரானது; பிறவியின் அடிப்படையி லான பேதங்களை நிலை நிறுத்துவது; பார்ப்பன ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதுதான்.

புத்த நெறியை, அம்பேத்கர் தழுவினாலும் அதனை இந்துமதப் பட்டியலின் கீழ்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் வைத்துள்ளது.

தந்தை பெரியார் நாத்திகம் பேசினாலும் அவரையும் இந்து மதத்தின் பட்டியலில்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் வைத்துள்ளது என்றால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கண்ணி வெடிகளைத் தெரிந்து கொள்ளலாம்.

ராமன் பாலம் என்று சொல்லி புராதனச் சின்னத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற போர்வையில் ராமன் வருணாசிரமத் தன்மையை அமைப்பை இன்னொரு வகையில் நிலை நிறுத்தப் பார்க்கிறது ஒரு கூட்டம். இதில் சரியான பார்வை நம் மக்களுக்குத் தேவை.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களில் உள்ஒதுக்கீடு தேவை என்றால் அதனை எதிர்க்கிறது ஒரு கூட்டம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் சமூக நிலையும், பிரச்சினையும் உயர்தட்டுப் பெண்களின் வாழ்க்கை நிலையும், பிரச்சினையும் ஒன்றுதானா?

தனித் தொகுதி முறை வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னதற்கான காரணம் இந்தப் பிரச்சினையிலும் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகத்துக்கு இருந்து வரும்பார்வையும், பொறுப்பும்; ஒடுக்கப்பட்ட சமூக அமைப்பைச் சார்ந்தவர்களுக்கேகூட இல்லாதது வருந்தத்தக்கது.

இடஒதுக்கீடு என்பதுசட்ட ரீதியாக உண்டு என்றா லும் அதில்கூட நம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்று கிறார்கள்?

இந்தியாவில் 8120 கல்லூரிகளும் 1239 பல்கலைக் கழகங்களும் உள்ளன. மூன்று லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றும் இந்நிறுவனங்களில் சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கிடைத்திருக்க வேண்டிய இடங்கள் (22.5ரூ) 67,500; ஆனால் கிடைத் திருப்பதோ வெறும் 17 ஆயிரம் இடங்கள். மீதி 50 ஆயிரம் இடங்கள் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் விழிப்புணர்வு ஓகோ என்று உயர்ந்து நிற்கிறது என்று பேசிக் கொள்கிறோம்.

ஆனால், நமக்குள்ள உரிமைகளை நாம் பெற்றுக் கொள்ளக்கூட முடியாத நிலையில்தான் இருக்கிறோம் என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்று சேரும்போதுதான் நமது உரிமையை மீட்கும் பலம் நமக்குக் கிடைக்க முடியும். இதுதான் பெரியார் அம்பேத்கர் நமக்கு காட்டிச் சென்ற வழிகூட!

அண்ணல் பிறந்த நாளில் சிந்திப்போமாக, செயல் படுவோமாக! 15-4-2012

சிவக்குமார் said...

எனக்கொரு ஐயம் !! இரண்டு முறை எழுதி விட்டீர்கள். அதனால்தான் இதைக் கேட்க வேண்டியதாகி விட்டது.

//இலங்கையில் நம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களே அய்யகோ, நம் இந்திய மக்கள் அல்லவா படுகொலை செய்யப் பட்டார்கள் - இது அநியாயம், அக்கிரமம் என்று எந்த இந்தியன் எழுந்து குரல் கொடுத்தான்?

தமிழன் என்றால்தான் கசக்கிறது - இந்த சோ ராமசாமி அய்யர் கூட்டம் இந்தியன் என்ற பார்வையிலும் போர்வையிலுமாவது குரல் கொடுத்ததுண்டா?

அப்பொழுது மட்டும் ஈழத்தில் அடிபடுவது, உதைபடுவது தமிழன் தான்; நன்றாக உதைப்படட்டும் என்ற எண்ணம்தானே இந்தப் பார்ப் பனர்களுக்கு ஏற்படுகிறது?

தமிழன் என்று சொல்லக்கூடாது, இந்தியன் என்று சொல்ல வேண்டும் எனும் பார்ப்பனர்கள் அந்த இந்தியன் படுகொலை செய்யப்படும் பொழுது, அந்த இடத்தில் இந்தியன் என்ற நினைவு வராது - தமிழன் என்ற எண் ணமே தலை தூக்கும்//

இது சென்ற பதிவில் எழுதியிருந்தது.

//கேள்வி: இலங்கைத் தமிழர் என்பதை விட, இலங்கை இந்தியர்கள் என்ற சொல் கூடுதல் பலம் பெறுகிறது அல்லவா?//

இது இந்தப்பதிவில் வெளியிட்டது. இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது ஈழத்தமிழர்கள் இநதியர்கள் என்பதையா என்று தெளிவு படுத்தவும். அவர்கள் இந்தியர்கள் என்றால் இந்தியாவிலிருந்து சென்று தனி நாடு கேட்டவர்கள் என்று பிறமொழியினர் பினாத்தி வருகின்றனரே அது உண்மையாகி விடாதா ? விளக்கம் வேண்டும்.