Search This Blog

17.4.12

அம்பேத்கர்-பெரியார்பற்றி சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி எம்.ஓய். இக்பால்.

மாபெரும் தலைவரான பெரியார் உழைப்பாலேயே ஜாதி வேறுபாடுகள் ஒழிந்தன - இடஒதுக்கீடும் கிடைத்தது

அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் புகழாரம்

பெரியார் உழைப்பால் தான் தமிழ் நாட்டில் ஜாதி வேறுபாடுகள் ஒழிந்தன. இட ஒதுக் கீடும் கிடைத்து முன் னேற முடிந்தது என்றார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஓய். இக்பால்.

சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் உரையாற்றுகையில் தலைமை நீதிபதி கூறியதாவது:

இந்த உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவை ஒட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ள, நமது அரச மைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 122-ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசியல் தொடர்பு வேண்டாம்!

முதலாவதாக, எந்த ஒரு அரசியல் கட்சியு டனும் எந்த ஒரு குறிப் பிட்ட தொடர்பினை யும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும், தமிழ் நாட்டின் சார்நிலை நீதிமன்ற வளாகங்களி லும் உள்ள வழக்கறிஞர் களின் சங்கத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் கட்சிகளின் அடிப்படையில் உங் களுக்குள் பல்வேறு பட்ட குழுக்களாகப் பிரிந்து இந்த வளாகத் தில் நீங்கள் செயல் படுவது உங்களில் எவர் ஒருவருக்கும், நீங்கள் பணியாற்றும் நிறுவனத் திற்கும் நன்மை விளை விக்கக் கூடியதல்ல. இந்த நீதிமன்றம் அல்லது எந்த ஒரு நீதி மன்ற வளாகத்திற்கும் வெளியில் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் நீங்கள் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் நீங்கள் இந்த நீதிமன்ற வளாகத் திற்குள் இருக்கும் வரை, உங்கள் வாடிக்கையா ளர்களுக்காக வாதாட உள்ள வழக்கறிஞர்கள் என்றே உங்களை நீங்கள் என்றே கருதிக் கொள்ள வேண்டும். எனவே, வாழ்வில் முன்னேற்றம் பெற இந்த விழா நாயகரான டாக் டர் பி.ஆர்.அம்பேத்கர் எதிர் கொள்ள வேண்டி யிருந்த போராட்டங் களைப் பற்றியெல்லாம் பலர் விரிவாகப் பேசினர்.

இதைப் பற்றியே மறுபடியும் நான் விரிவாகப் பேசப் போவதில்லை. அது ஒரு வரலாறு என்பதால், எவரா லும் அந்த வரலாற்றின் ஆழத்தில் தோண்டிச் செல்ல முடியாது. ஆனால் அவரைப் பற்றிய ஒரு சில நிகழ்ச் சிகளை மட்டுமே நான் கூற உள்ளேன்.

பள்ளியில் பட்ட அவமானம்

மும்பையில் உள்ள பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்தார். பள்ளி வகுப்பறைகளில் தண்ணீர் அருந்தக் கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. அந்த அளவுக்கு, ஜாதி வேற்றுமை கள் அந்நாட்களில் மிக ஆழமாகப் பதிந்திருந்தன. பள்ளி நாட்களில் குழந்தைப் பருவத்திலேயே இத்த கைய நடைமுறைகள் அம்பேத்கரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பரோடா மன்னரின் ஆதரவில் கொழும்பு பல்கலைக் கழகத்தில் பொருளாதார படிப்பையும், லண்டன் மாநகரில் சட்டப் படிப்பையும் அம்பேத்கர் படித்து முடித்தார்.

இந்தியாவிற்குத் திரும்பியவுடன், பொருளாதார அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் சட்டப்படியான உரிமைகள் மறுக்கப்பட்ட தற்கு எதிராகவும் போராட ஒடுக்கப்பட்ட மக்களை யெல்லாம் ஒன்று திரட்டத் தொடங்கினார் அம்பேத்கர். தலித்துகள் சவ்டார் ஏரியில் இறங்கிவிட்டனர் என்பதற் காக அதனைப் புனிதப்படுத்த யாகங்களை நடத்த சில பூசாரிகள் முயன்றபோது, ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, மனிதநீதிக்கு எதிரானது என்று தான் கருதிய மனுநீதியை எரிக்கச் செய்தார். இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுப் பணியில் பங்கெடுத்துக் கொண்ட பிறகு, சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சரானார் அம்பேத்கர். தனக்கு இழைக்கப் பட்ட இழிவுகள் காரணமாக அப்பதவியை அவர் துறந்தார். பிரெஞ்சுப் புரட்சியும், புத்தரின் போதனை களும் அவரை முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதராக மாற்றின.

இந்துவாக இறக்க விரும்பாதவர் தாழ்த்தப்பட்ட பெண்களின் கருவில் இருந்த குழந் தைகளும், இவ்வுலகில் பிறந்த பின்னர் எதிர்காலத்தில் அவர்களின் முன்னோர்கள் செய்த இழிவான வேலை களைச் செய்ய வேண்டும் என்ற நிலை அந்நாட்களில் நிலவியது. தான் ஒரு இந்துவாகப் பிறந்த போதிலும், ஒரு இந்துவாக உயிர் துறப்பதை அவர் விரும்பவில்லை. எனவே, லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து அவர் புத்த மதத்தைத் தழுவினார்.

டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை நான் ஏன் சுருக்கமாகக் கூறுகிறேன் என்றால், ஒவ்வொரு வரும் அந்த வரலாற்றைப் படிக்க வேண்டும் என்பதால் தான். ஆனால் இந்திய மக்களுக்கென சிறப்பான அம் சம்களாக விளங்கும் சிலவற்றைச் சுட்டிக் காட்ட நான் விரும்புகிறேன். குறிப்பாக தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி கூற விரும்புகிறேன்.

எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஜாதி வேறுபாடுகளும், ஒடுக்குமுறைகளும் கடந்த காலத்தில் நிலவின என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்திய வரலாற்றில் அவை இருண்ட காலமாகும். இந்தியாவில் மட்டுமல்ல, அய்ரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிலும், வெள்ளைக்காரர்களால் கருப்பு நிற நீக்ரோ மக்கள் மிகவும் இழிவான முறையில் நடத்தப்பட்டனர் என்ற வரலாற்றை நீங்கள் படித்திருப்பீர்கள். அதற்கும் முன்னர் மனிதர்களை மனிதர்கள் அடிமைகளாக வைத்திருக்கும் அடிமை நடைமுறையும் இருந்துள்ளது என்பதையும் வரலாறு காட்டுகிறது. ஆனால் அந்தக் காட்சி இன்று முற்றிலுமாக மாறிப் போய்விட்டது. இந்த சமூகங்களைச் சேர்ந்த மக்களின் நிலை அன்று மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது; முன்னேற்றம் அடைந்தும் வருகிறது. என்றாலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் சில கிராமங்களில், அடக்கு முறை அல்லது இரட்டைக் குவளை முறை தொடர்ந்து நிலவுகிறது; அனைத்து வழிகளிலும் இக்கொடிய மறை ஒழிக்கப்பட வேண்டும்.

வாஷிங்டன் செல்ல விவேகானந்தருக்கு ராமநாத புரம் மகாராஜா உதவியது போல, கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஒரு முதுகலைப் படிப்பு படிப்பதற்காக அம்பேத்கருக்கு மாதம் 11.50 பவுண்டு மதிப்புள்ள படிப்புதவியை பரோடா மகாராஜா வழங்கினார். அந்த பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு அவர் பரோடா சமஸ்தானத்தில் ராணுவ செயலாளராக நியமிக்கப்பட்டார். 1918 இல் மும்பையில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராக அவர் நியமிக்கப்பட் டார். கோலாப்பூர் மன்னரான சத்ரபதி சாகு மஹராஜ் -1 என்பவரின் உதவியுடன் அம்பேத்கர் முன்னையில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். அம்பேத்கரை எதிர்கால தேசியத் தலைவர் என்று சாகு மன்னர் தனது பேச்சு ஒன்றில் குறிப்பிட்டதுடன், அவருடன் சேர்ந்து உணவருந்தினார். கோலாப்பூர் மன்னரின் கடன் உதவியுடன் சட்டம் படிக்க அம்பேத்கர் மறுபடியும் லண்டன் சென்றார். பின்னர் மும்பை மாகாணக் குழுவில், சைமன் குழுவில் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். எதிர்கால அரசமைப்புச் சட்ட பரிந்துரைகள் பற்றிய ஒரு புதிய அறிக்கையை அவர் எழுதினார். 1935 இல் மும்பை சட்டக் கல்லூரியின் முதல்வராக அவர் நியமிக்கப்பட் டார். நாடு விடுதலை பெற்ற பின், காங்கிரஸ் தலைமை யில் அமைந்த புதிய அரசு முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றுமாறு அம்பேத்கரை அழைத்தது. அத் துடன் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவ ராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இறுதியில்அவர் டாக்டர் சாரதா கபீர் என்ற பார்ப்பனப் பெண்ணை 1948 இல் மணந்தார்.

அம்பேத்கரின் நூலகம் எப்போதெல்லாம், எங்கெல்லாம் வாய்ப்புகள் இருந்தனவோ அங்கெல்லாம், அப்பொழுதெல்லாம் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் என்ற ஒரு உயர்ந்த நிலையை மெல்ல மெல்ல எட்டுவதற்கு அம்பேத்கருக்கு உதவி உள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டத்தான் நான் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஏன் கூறுகிறேன். சமூகத்தின் வலுவற்ற பிரிவுகளைச் சேர்ந்த மக்களில் பெரும்பா லோரின் வரலாறும் இத்தகையதே. கடுமையாக உழைத்து, தங்களை உயர்த்திக் கொள்ளும் ஆர்வம் காட்டினால் போதும், அதன் பிறகுதான் அவர்களுக்கு உதவி செய்வதற்கு எந்த ஒரு கையும் நீளும். உயர்நிரு வாகத்திலும், பாதுகாப்புத் துறையிலும், நீதித் துறை யிலும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் பலர் உள்ளனர். தங்களின் திறமையை அவர்கள் காட்டும்போது, சமூகம் நிச்சயமாக அதனை அங்கீகரிக்கவே செய்யும். மும்பை யில் அம்பேத்கர் வீடு ஒன்றைக் கட்டியபோது, 50,000 நூல்களைக் கொண்ட தனது சொந்த நூலகம் ஒன்றை ஏற்படுத்தினார் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத் தமாக இருக்கும் என கருதுகிறேன். மேலும் மேலும் அறிவு பெற வேண்டும் என்ற அவரது தணியாத தாகத்தை அது காட்டுவதாக உள்ளது. ஆழ்ந்து நூல் களைப் படிக்கும் பழக்கமே தனது துணிவை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கை என்னும் ஏணியில் படிப்படியாக ஏறிச் செல்ல அவருக்கு உதவியது. கடுமையான உழைப்பு, நேர்மை, நாணயம் ஆகிய வற்றின் வாழ்க்கை என்னும் ஏணியில், குறிப்பாக நமது வழக்கறிஞர் மற்றும் நீதித் துறையில் நீங்கள் அனை வரும் படிப்படியாக ஏறி மிக உயர்ந்த நிலையை அடையவேண்டும். என்று விரும்பி வாழ்த்துகிறேன்.

இந்த மறக்கமுடியாத நேரத்தில் எனது எண்ணங் களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித் தமைக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக உதய பானுவுக்கும் மற்ற கமிட்டி உறுப்பினர்களுக்கும் நன்றி.

தந்தை பெரியார்பற்றி

தமிழ்நாட்டில் மாபெரும் தலைவரான பெரியார் அவர்கள் சோர்விலா முயற்சி காரணமாக, ஜாதி வேறுபாடுகள், சில குக்கிராமங்களைத் தவிர மற்ற இடங்களில் ஏறக்குறைய முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. பெரியார் அவர்களின் வெண்கலக் குரல் அழைப்பின் காரணமாகவே, மாநில அரசில் இட ஒதுக்கீட்டு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் அத்தகைய சமூகங்களைச் சேர்ந்த படித்த பலரும் பல்வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த பணிகளைப் பெறுவதற்கான வழியை ஏற்படுத்தியது. நீங்கள் (வழக்குரைஞர்கள்) கடினமாக உழைக்க வேண்டும், உங்களது முயற்சிகளில் நேர்மையானவராக இருக்க வேண்டும், உங்கள் செயல்பாடுகளில் உண்மையானவராக இருக்க வேண்டும் என்பது ஒன்று மட்டும்தான் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுவதாகும். நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மற்றவர்கள் மூலம் அது நிறைவேறும் என்பதே பலராலும் பரவலாகக் கூறப்படும் உண்மையாகும். சமூகத்தில் தீண்டாமை என்னும் நாட்டின் பெருங்கேடு, இழிவு நீடிக்கும் வரை, டாக்டர் அம்பேத்கார் போன்றவர்களின் சேவைகள் தொடரவே செய்யும். மற்ற உயிரினங்களில் ஜாதி வேறுபாடுகள் இல்லை. ஒரு குழந்தை பிறக்கும்போது, எந்த ஜாதியில் தான் பிறந்துள்ளேன் என்பதை அது அறிவதில்லை. ஜாதி, இனம், மதம் என்பவையெல்லாம் நாமாக உண்டாக்கிக் கொண்டவையே. இயற்கையின் முன் அனைத்து மக்களும் சமமானவர்களே. நமது செயல்களால் மட்டுமே நமக்கு பெருமைகள் கிடைக்குமே அன்றி, நாம் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் எந்தப் பெருமையும் கிடைக்காது.

--------------------------"விடுதலை” 17-4-2012

1 comments:

Kiruba said...

//கொழும்பு பல்கலைக் கழகத்தில் பொருளாதார// Not colombu....it is columbia...