Search This Blog

1.4.12

தமிழ்நாட்டில் ஏப்ரல் முட்டாள் தினம் இப்பொழுது யாருக்குச் சொந்தம்?


ஏப்ரல் முதல் தேதி முட்டாள்தினம் - உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படுகிறது. ஏதோ இந்த ஒரு நாளில்தான் முட்டாள்தனம் முடி சூட்டி நிற்கிறதா?

மத நம்பிக்கையாளர்கள் கடவுள் காலைக் கட்டிப் பிடித்து உருளுபவர்கள், சாத்திரங்களின் பாதார விந்தங்களில் தங்கள் அறிவைப் புதைத்துக் கொள் பவர்கள் ஒவ்வொரு நாளில் மட்டுமல்ல; ஒவ்வொரு நொடியிலும் முட்டாள்தனத்தின் முழுப் பங்கையும் சுளையாக விழுங்கக் கூடியவர்கள் தானே!

உலகில் ஏப்ரல் முதல் தேதி முட்டாள்தனமாக வந்தது எப்படி?

ஏப்ரல் முதல் நாள்தான் ரோமானியர்களுக்குப் புத்தாண்டு பிறந்த நாள். அய்ரோப்பிய நாடுகளிலும் இது நடைமுறையாகவும் இருந்தது.

இது சனவரி முதல் தேதிக்கு எப்படி மாற்றப் பட்டது? 1562இல் உலகக் கத்தோலிக்கர்களின் தலைவ ரான போப் கிரகோரி, ஜார்ஜியன் எனும் புதிய நாள்காட்டி (காலண்டர்)யை அறிவித்தார். அதன்படிதான் சனவரி ஒன்று ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து போன்ற நாடுகள் அதனை ஏற்கவில்லை; ஏப்ரல் முதல் தேதியைத்தான் புத்தாண்டுப் பிறப்பாகக் கடைப்பிடித்தனர்.

வேறு சில நாடுகளுக்குப் புதிய மாற்றம் பற்றிய தகவலே இல்லாததால் ஏப்ரல் முதல் தேதியையே கட்டிக் கொண்டு அழுதனர்.

சனவரி முதல் தேதியை கடைப்பிடித்தவர்கள் ஏப்ரல் முதல் தேதியைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கடைப்பிடித்த வர்களை ஏப்ரல் முட் டாள்கள் என்று கேலி செய்தனர். நாளடைவில் இந்த ஏப்ரல் முதல் தேதி என்பதை முட்டாள்தனம் (April Fool) என்று ஒரு நாளையே நிலை நிறுத்தினர். இந்நாளில் விதம் விதமான யூகங்களைப் புனைந்து ஏப்ரல்ஃபூல் என்று மற்றவர்களை ஏமாறச் செய்வதில் தனி ஆனந்தம்!


சரி, நம் தமிழ்நாட்டுக்கு வருவோம்.

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகள் தமிழாண்டுகள் என்று கூறப்பட்டன. என்னடா விளக்கம் என்றால் நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் இந்த 60 ஆண்டுகள் என்று கூறினர். அப்படிக் கூறப்பட்ட பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடியும் அத்தனைப் பேர்களில் ஒன்றுகூட தமிழ்ப் பெயர் கிடையாது. இதற்குப் பெயர்தான் தமிழ் ஆண்டுகளாம். (நன்றாகச் சிரித்துத் தொலையுங்கள்).

இந்த நிலையில் தமிழ் அறிஞர்களின் கருத்துக்களை ஏற்றும், திராவிடர் கழகத்தின் தொடர் வற் புறுத்தலை மதித்தும், தமக்கே உரிய தமிழ் உணர்வோடும் கலைஞர் அவர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து சட்டமும் செய்தார். ஆனால் செல்வி ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க. அரசு அந்தச் சட்டத்தை மாற்றி சித்திரை ஒன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று (ஆபாச பிறப்பை அடிப்படையாகக் கொண்டது) புதிய சட்டம் பிறப்பித்து விட்டது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் முட்டாள் தினம் இப்பொழுது யாருக்குச் சொந்தம்?

----------------- மயிலாடன் அவர்கள் 1-4-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

தமிழ் ஓவியா said...

அறுபத்து மூவர் விழாவாம் - மயிலையில்!


ஒரு சமயம் கயிலை யங்கிரியில் சிவபெரு மானிடம் பார்வதி திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளை விளக் குமாறு கேட்டார். சிவன் சொல்லத் தொடங்கிய போது, பார்வதியின் பார்வை அங்கு வந்து தோகை விரித்தாடிய மயிலின்மீது திரும்பிற்று. அதைக் கண்ணுற்ற சிவன் நீ எந்த மயிலின் ஆட்டத்தில் மயங்கி னாயோ, அந்த மயிலா கவே மாறுவாயாக! என்று சாபம் கொடுத் தான்.

தன் தவறுக்கு வருந்தி கருணை காட் டுமாறு மன்றாடினார் மனைவி பார்வதி.

தொண்டை மண்ட லம் சென்று அங்கு ஒரு புன்னை மரத்தடியில் மயில் வடிவோடு என்னை வழிபட்டு வருவாய்; நாம் அங்கு வந்து ஆட் கொள்வோம் என்று அருளினார். அது போலவே பார்வதி இத் தலத்திற்கு வந்து இத னையே கயிலையாகக் கருதி, ஒரு புன்னை மரத் தடியில் எழுந்தருளிய சிவலிங்கத்தை மயிலுருவில் பூஜித்து அவரோடு சேர்ந் தார். அது முதல் இப் பகுதிக்கு திருமயிலை எனப் பெயர் ஏற்பட்டது.

பிரம்மதேவனின் ஒரு சிரத்தைக் கொய்த சிவ னின் கையில் ஒட்டிக் கொண்டிருந்த பிரம்மனின் கபாலத்தோடு உருவகப் படுத்தி ஆதிகாலத்தில் காபாலிகர்கள் சிவபெரு மானை இத்தலத்தில் வழி பட்டனர். ஆகவே இங்கு அருள்பாலிக்கும் ஈசனுக் குக் கபாலி என்று பெயர் வந்ததாகவும் ஒரு கதை.

இவ்வளவையும் கூறு வது சென்னை மயிலாப் பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலின் தலபுராணம்!

கடவுள் ரூபமற்றவர், கண்ணுக்குத் தெரியாதவர் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, இப்படி மனிதர்களில் உள்ளது போல புருஷன் பெண்டாட் டிச் சமாச்சாரங்களைக் கடவுள்மீது ஏற்றியிருப்பதி லிருந்தே இவையெல்லாம் மனிதனின் கற்பனைகள் என்பது வெளிப்படை.

சாதாரணமாக சராசரி வீடுகளில் குடும்பங்களில் நடக்கும் தகராறுபோல கடவுள் குடும்பங்களிலும் நடந்தால் அது எப்படி உயர்ந்த நிலையாகும்?

சிவனிடம் பஞ்சாட்சரம் பற்றி கேட்டாராம். சிவன் பதில் சொன்ன நேரத்தில் பார்வதி பராக்குப்பார்த்தா ளாம்! கோபம் கொண்ட சிவன் சாபம் விட்டாராம்.

என்ன கதையடா இது!

பார்வதிதான் சிவனிடம் பஞ்சாட்சரம்பற்றி கேட்க வேண்டுமா? ஏன் சிவன் பார்வதியிடம் கேட்கக் கூடாது?

தமிழ் ஓவியா said...

கடவுள் குடும்பத்திலும் ஆண்தான் எஜமானன் அப்படிதானே! புராணம் எழுதியவர்கள் எல்லாம் ஆண்கள்தானே!

சரி; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பற்றி தலபுராணம் சொல்லும் போது ஏதாவது ஒன்று தானே இருக்க வேண்டும். பிறகு என்ன இது அல்லது அது என்பதெல்லாம் எப்படி சரியாகும்?

ஏதோ அவரவர்க்குத் தோன்றியபடி உளறிக் கொட்டிய கைச்சரக்கு என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

இந்த மயிலைப்பதிக்கு சில அற்புதங்களைக் கட்டி வைத்துள்ளனர். சிவனேசர் என்ற வணிகப் பெருமகன் இங்கு வாழ்ந்து வந்தாராம். இவரின் மகள் நந்தவனத் தில் பூக்கொய்தபோது பாம்பு கடித்து மரணம் அடைந்தாளாம்.

மகளின்மீது கொண்ட மட்டற்ற பக்தியினால் அவள் அஸ்தியை ஒரு மண் குடத்தில் வைத்துக் காத்து வந்தாராம்.

தலயாத்திரை பொருட்டு இப்பகுதிக்குத் திருஞான சம்பந்தர் வந்தாராம். சிவனேசர் தன் துயரத்தை வெளிப்படுத்திய நிலையில், மனம் இரங்கிய திருஞான சம்பந்தன் ஒரு பாடலைப் பாடினாராம்.

மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை கட்டிட்டங்
கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் ஒட்டிப்
பண்பின் உருத்திரப் பல்
கணத்தாருக்கு அட்டிட்டல்
காணாதே போதியோ பூம்பாவாய்
என்று தொடங்கும் பதிகங்களைப் பாடி இறை வனைத் துதித்தாராம்! என்னே ஆச்சரியம்! (ஜெகத்மோகினி ஜால கதைபோல)
மண் குடத்தில் அஸ்தி யாக இருந்த பூம்பாவை என்ற அந்தப் பெண் உயிர் பெற்று எழுந்தாளாம்.

பசியாத வரம் தாரேன் தாயே, ஒருபிடி பழைய சோறு இருந்தால் போடு! என்றானாம் ஒரு பிச்சைக் காரன்.

அதுபோல இவ்வளவு பெரிய சக்தி படைத்ததாகக் கூறப்படும் திருஞானசம்பந் தன் 18 வயதில் அற்பா யுளில் ஏன் செத்தானாம்?

திருஞானசம்பந்தன் கடவுள்மீது கொண்ட பக்தியினால் பெற்ற அபார சக்தியினால் அஸ்தியை உயிர்ப்பித்தான் என்றால், இப்பொழுது திருஞானசம் பந்தன் போன்ற பக்தி உள் ளவர் ஒருவரும் இல்லையா?

ஜெகத் குரு சங்கராச் சாரியார்கள் இருக்கிறார் களே. காஞ்சிபுரத்து சங்க ராச்சாரியாரை விட்டுத் தள்ளுங்கள் (காம - கோடி அவர்!)
சிருங்கேரி சங்கராச் சாரியில்லையா? பூரி சங்கராச்சாரியார்கள் இல் லையா? கோவர்த்தன பீடாதிபதி என்ன ஆனார்?

திருஞான சம்பந்தன் செய்ததாகச் சொல்லுவது போல இறந்த ஒருவரைப் பிழைக்க வைக்கச் சொல் லுங்கள் பார்க்கலாம்.

பக்தி உபந்நியாசம் பண்ணிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு பாகவதரைக் கூப் பிட்டு, செத்தவரைப் பிழைக்க வைக்கச் சொல் லுங்கள் பார்க்கலாம்; வேண்டுமானால் தோழர் சுகிசிவத்தையும் முயற்சி செய்து பாருங்களேன்.

மயிலாப்பூர் 10 நாள் விழாவில் அஸ்திக்கு உயிர் கொடுத்த நிகழ்ச்சி - எட்டாம் நாளில் விமரிசை யாகக் கொண்டாடப்படு கிறது. அன்று 63 நாயன் மார்களும் வீதி உலா வருவார்களாம்.

பத்து நாட்களும் பாட்டு என்ன? கச்சேரி என்ன? உபந்நியாசங் கள் என்ன? ஒரே தட புடல்தான்.

தமிழ்ச் செம்மொழி யானால் விலைவாசி குறையுமா? என்று கேட் கும் பார்ப்பனர்களைப் பார்த்து நாமும் நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேட்போம்.

இந்த அறுபத்து மூவர் விழாவை நடத் தினால் விலைவாசி குறையுமா? மின்வெட்டு நீங்குமா?

தினமலரே, பதில் சொல்!

துக்ளக்கே பதில் சொல்! கடைசியாக ஒரு கேள்வி. 63 பேர்களோடு நாயன்மார்கள் பட்டியல் நின்றுவிட்டதே -அதற் குப்பின் ஏன் எண் ணிக்கை வளரவில்லை? அதற்குப் பிறகு யோக்கியமான சிவன் பக்தன் தோன்றவே யில்லையா? பதில் கூறுக! 1-4-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பற்றி சட்டசபையில் பேசக் கூடாதா? சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் கேள்வி


சென்னை, ஏப்.1- திராவிடத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி சட்டப் பேரவையில் பேசக் கூடாதா என்ற வினாவை எழுப்பினார் குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன்.

சட்டமன்றத்தின் நடவடிக்கை வருமாறு:- 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இந்த அவையிலே நான் பேசுவதற்கு காரணமாக இருந்த-நான் மட்டுமல்ல, உங்களை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், கமூகத்தில் தலை நிமிர்ந்து நடப்பதற்கும், கல்வி கற்பதற்கும், இந்த அவைக்கு வருவதற்கும் காரணமாக இருந்த-அடிப்படையாக இருந்த தந்தை பெரியார் அவர்களை நினைவு கூர்வது காலத்தின் கட்டாயம். காரணம் இன்றைக்கு ...(அமைச்சர்கள் குறுக்கீடு) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

எதை, எதைப் பேசவேண்டும், எதை எதை பேசக் கூடாது என்று நீங்கள் முன்னாலேயே முன்னுதாரணத் தைக் கொடுத்துவிட்டால், (குறுக்கீடுகள் ) திராவிடத் தால் பயன்பெற்று வாழ்வுபெற்று முகவரி பெற்றவர்கள் இன்றைக்கு திராவிடத்தை மறந்தாலும், அந்தத் திராவிடத்தின் தந்தை இனப் பகலவன் பெரியாரை நினைவு கூறுவது எங்கள் கடமை.

அவர்தம் வழித் தோன்றலாய் போராடும்.... (தொடர்ந்து குறுக்கீடுகள்) பெரியாரைப் பற்றி பேசுகிறேன். நான் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசக் கூடாதா ? புறநானூற்று வரிகளாம் " என்றும் உள்ள இந்நகர் கலியுகத்தில்

இலங்குவேற் கரிகாற் பெருவளத்தோன்
வன்திறற் புலி இமயமால் வரை மேல்
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை

என்ற வரிகளுக்கேற்ப விளங்குகின்ற எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை வணங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) ஒல்காப் புகழ் வள்ளுவர் வாக்கிற்கேற்ப வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண் ஊறு எய்தி உள்ளப்படும்

என்ற குறளுக்கேற்ப ' செயல்திறனால் பெருமை பெற்று, உயர்ந்த வினைத் திட்பத்தால் நாட்டரசால் மதிக்கப்படுவான் என்கின்ற வாக்கியத்திற்கேற்ப தம் செயல் திறத்தால், திறமையால், தியாகத்தால் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு எங்கள் தளபதி வந்தாலும், தொடர்ந்து பணியாற்றுகின்ற அவருடைய பணியை இறைக்கு அமெரிக்க நாட்டு, கெண்டகி மாநில அரசு மதித்திருக்கிறது. கெண்டகி கர்னல் விருது வழங்கியிருக்கிறது. அவரை வணங்குகிறேன். கலைஞர் வழங்கிய திட்டங்கள் எங்களது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஒரு காலத்தில் வறண்ட மாவட்டங்கள். அவற்றை முன்னேற்றப் பாதையில் அடிபோட வைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். அரியலூருக்கென்று தனி மாவட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், குன்னத்திலே அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூரிலே அரசு பொறியியல் கல்லூரி, பெரம்பலூரில் அரசு கலைக் கல்லூரி, பெரம்பலூரிலே பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ.கள் இரண்டு என்ற கல்விக்கான நிறுவனங்களையெல்லாம் வழங்கி, அதே போல மதனத்தூர்- நீலத்தநல்லூர் பாலத்தை எங்களுக்கு வழங்கி, பருத்திக்கு ஒரு ஆராய்ச்சி நிலையம். இப்படி வறண்ட மாவட்டத்தை உயர்த்துவதற்கு தலைவர் கலைஞர் அவர்கள், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் வழங்கிய திட்டங்களுக்கு இந்த நேரத்திலே நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

(உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கரை பேசவிடாமல் அமைச்சர்கள் குறுக்கீடுகள்). நன்றியை மறக்கிறவர்கள் நாங்கள் கிடையாது. வரலாற்றை மறைக்கிறவர்கள் நாங்கள் கிடையாது. இந்தத் திட்டங்களையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு தருவதற்கு உற்ற உறுதுணையாக இருந்து எங்கள் மாவட்டம் முன்னேறுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அண்ணன் ஆ.இராசா அவர் களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையிலே இரண்டாம் முறையாக பணியாற்ற வாக்களித்து. வெற்றி பெற செய்த குன்னம் தொகுதி எம் மக்களுக்கு எனது பணிவான நன்றியை இந்த நேரத்திலே சமர்ப்பிக்கிறேன்.

கலைஞர் ஆட்சியில் நிதி நிலை அறிக்கை

ஒரு நிதிநிலை அறிக்கை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம், 2006ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள். அந்த அறிக்கைகளிலே புதிய அறிவிப்புகள் இருக்கும் (அமைச்சர்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்தனர்)

* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறந்த திட்டங்கள் இருக்கும்.

* எதிர்கால தலைமுறைக்கான தொலை நோக்குத் திட்டங்கள் இருக்கும்.

* அந்தந்த ஆண்டுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகள் இருக்கும்.

* புதிய கல்லூரி பற்றிய அறிவிப்புகள் இருக்கும்.

* பழைய திட்டங்களை விரிவு படுத்துகின்ற அறிவிப்புகள் இருக்கும்.

அப்படி அறிவிக்கின்ற திட்டங்களையெல்லாம் செயல்படுத்துகின்ற திறன் இருக்கும். அப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் தமிழகத்திலே இருந்த குடிசை வீடுகளையெல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்றுகின்ற கலைஞர் வீடு வழங்கும் திட்டம். (மேசையை தட்டும் ஒலி) அந்தத் திட்டத்திலே ஆறு இலட்சம் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன... (குறுக்கீடுகள்) எங்களது தளபதி அவர்கள் உள் ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு, தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை ஊராட்சிகளுக்கும் நிதி வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

இதே போன்றுதான் உயர் கல்வித் துறையாக இருந்தாலும், விவசாயத்துறையாக இருந்தாலும், மக்கள் நல்வாழ்வுத் துறையாக இருந்தாலும், பல்வேறு திட்டங்கள் அந்த நிதிநிலை அறிக்கையிலே வழங்கப் பட்டது. அந்த நிதிநிலை அறிக்கைகளை இன்றைய நிதி அமைச்சர் அவர்கள் மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. ( குறுக்கீடு ) அது நாங்கள் கொண்டு வந்த திட்டம், எங்களுடைய அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுடைய தொகுதிக்கு வழங் கப்பட்ட நிதி அது...(குறுக்கீடு). குன்னத்திலே கொடுக் கப்பட்ட மருத்துவக் கல்லூரியை நீக்கி, 100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டதை நிறுத்தியிருக்கின் றீர்கள்....(குறுக்கீடுகள்). குற்றம் சொன்னால் மட்டும்... (அமைச்சர்கள் குறுக்கீடு). மார்க்சும், ஏங்கெல்சும் இங்கிலாந்தில் கூடி கம்யூனிஸ்ட் கட்சிக்கான அறிக் கையை தயாரித்தார்கள். அதுதான். ஆனால் அந்த அறிக் கை உயிர் பெற்றது 70 ஆண்டு களுக்குப் பிறகு, ரஷ்யாவிலே கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்த பிறகுதான்.

ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் 2006-லே கொடுத்த தேர்தல் அறிக்கைதான் மற்ற கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதை ஒட்டிய அறிவிப்புகள் வழங்கப்பட்டன. அதே போன்றுதான், தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்திற்குக் கொடுத்த திட்டங்களை விரிவுபடுத்துவதும்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு தாய் என்று பெயர் மாற்றுவதுமாக. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள்தான் இந்த திட்டத்திற்கெல்லாம் தாயாக இருக்கிறார். எனவே அவரை மறந்து விடக்கூடாது. இந்த நிதிநிலை அறிக்கையிலே..... - ( குறுக்கீடு )
சரி உங்களுக்குப் பிடித்த மாதிரி பேசுகிறேன். பணிவின் உருவாய், கனிவின் உருவாய், அன்பின் இருப்பாய், பண்பின் உறுப்பாய், விசுவாசத்தின் வடிவாய் விளங்கும், தலைவர் கலைஞர் அவர்களால் பச்சைத் தமிழர் என்று அழைக்கப்பட்ட அன்பிற்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்-பிடித்திருக் கிறதா? (சிரிப்பு)

தனது தலைமையிடம் காட்டும் விசுவாசத்தை.... (குறுக்கீடு).... (சிரிப்பு).

(ஓ.பி.எஸ் விளக்கம்) இல்லை நான் தவறாக சொல்லவில்லை. பணியின் உருவாய், கனிவின் மறுவாய், அன்பின் இருப்பாய் - அப்படித்தான் சொன்னேன். அதுபோல காட்டுகின்ற விசுவாசத்தை மக்களுக்கும் காட்ட வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

அதன்படி அவர் போட்டிருக்கின்ற அந்த நிதிநிலை அறிக்கை வெற்றிக்களிப்பிலே ஒரு வெண் குதிரையாக வரும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.

நாங்கள்கூட எதிர்பார்த்தோம், கடந்த முறை போட்டதைப் போன்று வெள்ளை நிறத்தைப் பூசிய ஒரு குதிரையாகவாவது வரும் என்று பார்த்தோம். அப்படியும் இல்லை. இப்படியும் இல்லை.
தறிகெட்ட வரிக் குதிரையாக இந்த நிதி நிலை அறிக்கை இன்று ஓடிக் கொண்டிருக்கிறது.
நாட்டு மக்கள் இந்த நிதிநிலை அறிக்கையைப் பார்த்து வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். எனவே அந்த நிதிநிலை அறிக்கையிலே இருக்கின்ற குற்றத்தைச் சொன்னால் உடனே தவறு என்று சொல்கிறீர்கள். இந்த நிதிநிலை அறிக்கையிலே மட்டுமல்ல.... (குறுக்கீடு).
உங்கள் முதலமைச்சர் சொன்ன கருத்துக்கு எங்கள் உறுப்பினர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொன்னதற்கு, பேசுகின்ற உறுப்பினர் சொல்லட்டும் என்று சொன்னீர்கள். அந்த விளக்கத்தினைச் சொல்ல வாவது எங்களை விடுங்கள். இவ்வாறு உறுப்பினர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது அதிமுக அமைச்சர்கள் எழுந்து பேசவிடாமல் குறிக்கீடு செய்து கொண்டு இருந்தனர். பேரவைத் தலைவரும் உறுப் பினர் சிவசங்கருக்கு பேச அனுமதி மறுத்ததால் தமது பேச்சினை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. ( நன்றி - முரசொலி )
20 நிமிடங்கள் எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம். 8 நிமிடம் தான் நான் பேச அனுமதிக்கப்பட்டேன். கூடுதலாக 16 நிமிடங்களை குறுக்கிடவும், எனக்கு பதில் அளிக்கவும் அமைச்சர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
1-4-2012