Search This Blog

30.4.12

பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி அறவேயில்லை!


ஆமாம், நம்புங்கள் - பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி அறவேயில்லை!
நம்புங்கள் - பார்ப்பனர்களுக்குப் பாப்பான் என்ற இன உணர்ச்சியே கிடையாது - வெறும் மானுடப் பற்று தான். வேண்டுமானால், இந்த வார துக்ளக்கைப் (18.-4.-2012) புரட்டி பாருங்கள்.

கேள்வி: ராமர் பாலம் கற்பனையானது. கற்பனையான வழி பாட்டு அமைப்பை காப்பாற்றுவதற்காக நாட்டின் வளர்ச்சியை காவு கொடுக்கக் கூடாது. சேதுக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்தவேண்டும் என்கிறாரே ராமதாஸ்?

பதில்: ராமர் பாலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புகைப்படத்திலேயே காணப் பட்டது. இன்றும் பலர் அங்கு போய் இந்தப் பாலத்தைப் பார்த்து வருகிறார்கள். அது பற்றிய குறிப்புகள், தமிழக அரசு நூல்களிலேயே இருக்கின்றன. அதன் புனிதத் தன்மை பற்றி, ராமர் சீதைக்கு விளக்கிச் சொல்வது, வால்மீகி ராமாயணத்தில் இடம பெறுகிறது. சேது கால்வாய்த் திட்டமோ - பொருளாதார ரீதியாகப் பயனளிக்காது என்று நிபுணர்கள் பலர் விவரித்துக் கூறி யிருக்கிறார்கள். இவையெல்லாம், ஏற்கெனவே துக்ளக் கில் விரிவாக அலசப்பட்ட விஷயங்கள். ராமதாஸ் பேசுவது உண்மையல்ல என்கிறார் சோ. அண்டப் புளுகு பேசுவதில் அக்கிரகார ஆசாமிகளை அடித்துக் கொள்ள அன்டார்டிகாவில் தேடினா லும் கிடைக்கமாட்டார்கள்.

இன்டோ-லிங்க்காம் - வைஷ்ணவா நெட்வொர்க் என்ற பார்ப்பன நிறுவனம் ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன் னதாக ஒரு கதையைக் கட்டிவிட்டது.

இந்தக் கட்டுக் கதையைக் கேள் விப்பட்ட மாத்திரத்தில் சேது சமுத் திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டார். நீங்கள் வெளி யிட்டுள்ள படத்தால் இங்குப் பிரச்னை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப் பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? என்று கேட்டார். அன்று மாலையே நாசாவிடமிருந்து தகவல் வந்துவிட்டது. இந்தியா இலங்கைக்கிடையே உள்ள பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று முகத்தில் அறைந் தாற்போல் பதில் கூறிவிட்டதே!

இந்தத் தகவலை சேது சமுத் திரத்திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி செய்தியாளர்களிடம் தெரி வித்துவிட்டாரே. (தினமலர் 26--.7.-2007- பக்கம் 5)

அவாளின் தினமலரில் வெளிவந்த சேதிதான் இது!

உண்மை இவ்வாறு இருக்க சோ ராமசாமி துக்ளக்கிலும் திருவாளர் இல.கணேசன்வாள் சன் தொலைக் காட்சியிலும் புளுகுகிறார்களே! புளுகுதல் என்பது அவாளுக்கு புளியோதரையோ!

இராமநாதபுரத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேல் இருக்கும் மணல் திட்டை ராமன் தம்பி லட்சுமணன் கட்டினானோ!

இந்தக் கேள்விக்கு இந்த அறிவு ஜீவிகள் இது வரை பதில் சொல்லாதது ஏன்?

இன்னொரு கேள்வி பதில், இதே தேதி துக்ளக்கில்.

கேள்வி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திடீ ரென்று தமிழக முதல்வர் கடிதம் ஏழுதுவதன் நோக்கம் என்ன?

பதில்: திடீரென்று கடிதம் எழுதவில்லை. ராமர் பாலம் பற்றி தனது முடிவான கருத்தைக் கூறி மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. ஆகையால் மத்திய அரசு இந்த விவகாரத்தில், இனியும் மழுப்பாமல் ஒரு முடிவான கருத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒட்டித்தான் தமிழக முதல்வர் ராமர் பாலம் தேசியச் சின்னமாக அறிவிக் கப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறார் என்று மிக சாமர்த்தியமாக பதில் எழுதிட முயற்சிக்கிறார்.

இதே ஜெயலலிதா 2001 சட்டப் வேரவை மற்றும் 2004 மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் ராமன் பாலம் என்று குறிப்பிட்டு இருந்தாரா? இல்லையே! அதை மறைப்பதேன் இந்த மனுதர்ம வியாதி.?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக கிழக்கு நோக்கிக் கப்பல் செல்லவேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள்,; பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப் பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதே. அன்றைய மணல் மேடுகள், பாறைகள் அடங்கிய ஆடம்ஸ் பிரிட்ஜ் - திடீரென்று ராமன் பாலம் என்று செல்வி ஜெயலலிதாவுக்கு ஏதாவது அசரீரி வந்து கூறிற்றா?

இன்னும் ஒரு கட்டம் மேலே தாண்டி சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்கிற அளவுக்கு ஜெயலலிதா சென்றுவிட்டாரே. தமிழர்கள் இதனை அனுமதிப்பார்களா?

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு ஏன் ரத்தம் கொதிக்கிறது? இதயம் சில நிமிடங்கள் நின்று விடுகிறது? தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

கேள்வி: மன்மோகன்சிங், வி.பி.சிங் ஒப்பிடுங்கள்.

பதில்: மன்மோகன்சிங் பதவியில் இருப்பதால் பல கெடுதல்கள் விளைந்தன. பல கெடுதல்களைச் செய்வதற்காகவே பதவியில் இருந்தார் வி.பி.சிங்.

புரிகிறதா? வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதில் 27 விழுக்காடு வேலை வாய்ப்பில் கொடுக்கச் செய்தார் அல்லவா? அந்த ஆத்திரம் அவாளை இன்றுவரை பாடாய்ப் படுத்துகிறது - படுபாவி என்று மண்ணை வாரித் தூற்றுகின்றனர்.

நூற்றுக்கு நூறு இடங்களையும் முழுவதுமாக சுளைசுளையாக முழுங்கி ஏப்பமிட்ட கூட்டம் அல்லவா! - அதில் மண் விழுந்து விட்டதே என்கிற ஆத்திரம்! பாவம் இவர்களுக்கு பார்ப்பன உணர்ச்சியே இல்லை. நம்பித் தொலையுங்கள்.

கேள்வி: கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு தி.மு.க.விற்கு சாதகமா? பாதகமா?

பதில்: காங்கிரசிற்கு இப்போது உப்பு சத்தியா கிரகம் எவ்வளவு தூரம் சாதகமாக இருக்குமோ, அவ் வளவு தூரம் தி.மு.க.விற்கு பார்ப்பன எதிர்ப்பு சாதகமாக இருக்கும். - இப்படி ஒரு துக்ளக் பதில்.

கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்றால் எதற்காக துக்ளக்கில் பக்கம் பக்கமாக பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான திராவிடர் இயக்கம் பற்றியும், அதன் தலைவர்கள் குறித்தும் பார்ப்பனர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும்? அந்த உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி இப்பொழுது எதற்கு எதிர்த்து எழுதிக்கொண்டு இருக்கவேண்டும்?

பரவாயில்லை அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர் எதிர்ப்பு சரியே என்று காலந் தாழ்ந்தாவது சோ அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளாரே!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து இப்பொழுதும் உச்சநீதி மன்றம் செல்பவர்கள் யார்?

தமிழ் செம்மொழியானால் வீட் டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழுதுபவர்கள் யார்?

இப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தான் - கலைஞர் ஏதோ பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதாக பம்மாத்து அடிக்கின்றனர்.

இன்னொரு கேள்வியையும் கேளுங்கள்.

கேள்வி: இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் திராவிடம், ஆரியம், திரா விடப் பாரம்பரியம் என்று கலைஞர் பேசிக் கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது?

பதில்: தி.மு.க.வை அவர் வளர விடமாட்டார் என்பது: தெரிகிறது - இப்படி ஒரு பதில்.

கம்ப்யூட்டர் காலத்தில் இவர்கள் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் ராமன் பாலம் கட்டி னான் என்று எழுதலாம்.

கம்ப்யூட்டர் காலத்திலும் பூணூலைத் தரிப்பதற்காகவே, புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண் டாடலாம்!
அதன் மூலம் தாங்கள் பிரா மணர்கள் - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், - இருபிறப்பாளர்கள் என்று கூறி நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்கள் என்று கூறலாமாம்.

அதனை நாம் எதிர்த்துக் கேட்டால் - கம்ப்யூட்டர் கலத்தில் இப்படிக் கேட்கலாமா என்று கேள்வி கேட்கின்றனர்.
ஆக 2012_லும், நாங்கள் பிராமணர்கள்தான் என்று மார்பு நிமிர்த்திக் காட்டும் இறுமாப்பைத் திமிர் தண்டத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆமாம். அன்று கலைஞர் வீட்டுக்கு ஓடோடிச் சென்று தேர்தல் கூட்டணிக்காகப் பேரம் பேசியபோது கலைஞர் ஆரியம்-திராவிடம் பேசக்கூடியவர் என்பது திருவாளர் சோ ராமசாமிக்குத் தெரியவில்லையோ!

----------------- மின்சாரம் அவர்கள் 21-4-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

5 comments:

Seeni said...

sari thaan!

தமிழ் ஓவியா said...

மிக முக்கிய கூட்டம் உலகத் தமிழர்களை ஈர்க்கக் கூடியது

தனித் தமிழ் ஈழம் அமைந்திட தமிழர்கள் பகுதியில் அய்.நா. மன்றம் பொது வாக்கெடுப்பு!

கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவு

கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன், சுப. வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் (சென்னை அண்ணா அறிவாலயம் - 30.4.2012).

சென்னை, ஏப்.30- தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட அய்.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப் பினை விரைவிலே நடத்திட வேண்டும் என்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் இன்று காலை சென்னையில் கலைஞர் தலைமையில் கூடிய டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவாக எடுக்கப் பட்டது. அதன் விவரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், 30-4-2012 இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

டெசோ உருவாக்கம்

இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைப்பு ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. முன்பு போலவே இந்த அமைப்புக்கு, தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும்; Tamil Eelam Supporters Organisation (TESO)என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டது. இந்த அமைப்புக்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன், திரு. கி. வீரமணி, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அமைப்பின் குறிக்கோள்

பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம்; மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கு ஆளாக்கப் பட்டு, அணிஅணியான அல்லல் களால் அனுதினமும் அலைக்கழிக்கப் பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திரு நாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
தீர்மானம்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக அய்க்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப் பட்ட இந்தோனேசிய அரசின் தலை மை வழக்குரைஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு, இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்கு தலை உறுதி செய்திருக்கிறது. வாழ் வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங் கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25ஆம் தேதியன்று நியூயார்க் கில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு; போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும்; வீராங்கனைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக் கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி அய்.நா. குழு பரிந்துரைத்துள்ள வாறு சர்வதேச விசாரணை ஆணை யத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப் பட்டு வருவதாகவும்; தமிழ் ஊர்ப் பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும்; இந்துக் கோவில் கள், கிறித்துவத் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

பொது வாக்கெடுப்பு

இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக் கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பது தான் இலங்கைத் தமிழர்கள்பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. அய்க்கிய நாடுகள் மன்றத் தின் தலையீட்டினையடுத்து இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப் பட்டு; கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீ காரத்தை ஏற்கெனவே பெற்றிருக் கின்றன. அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் இலங்கைத் தமி ழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கையில் தமி ழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற் றப்பட்ட சிங்களவர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது; நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப் படையில் தனி ஈழம் அமைவதற்கு அய்க்கிய நாடுகள் மன்றம் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு நமது இந்திய அரசு தேவை யான ஒத்துழைப்பினையும் ஆதர வினையும் நல்குவதோடு; அய்.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தர வேண்டும்.

தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை அய்.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக் கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக் கெடுப்பு ஒன்று புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது.

தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட, அய்.நா. மன்றம், தமிழர் கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை (Referendum) விரைவிலே நடத்திட வேண்டு மென்றும்; அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டுமென் றும்; இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. நிறைவாக செய்தியாளர்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி அளித்தார்.30-4-2012

தமிழ் ஓவியா said...

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? - போராளிகள் எப்பொழுதும் சாவதில்லை! கலைஞர் பதில்
சென்னை, ஏப்.30- பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு போராளிகள் எப்போதும் சாவதில்லை என்று பளிச் சென்று பதிலளித்தார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியதாவது:

கேள்வி: 2009இல் இறுதிப்போர் நடந்தபோது நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள்? மத்திய அமைச்சரவை யிலும் தி.மு.க. இடம் பெற்றிருந்ததே! அப்பொழுதெல்லாம் நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று உங்களை விமர்சிக்கிறார்களே!

பதில்: என்னைப் பற்றி விமர்சிப்பது பற்றி எனக்குக் கவலையில்லை.

ஒரு மாநில ஆட்சி என்ற முறையில் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யத் தயங்கவில்லை.

மத்திய அரசை வலியுறுத்தினோம். அறவழிப் போராட்டமாக உண்ணாவிரதம் இருந்தேன். அதன் விளைவாக கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி கூறியது. மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் - அய்க் கிய முற்போக்குக் கூட்டணியின் தலை வர் திருமதி சோனியா காந்தியும் கூறி னார். அவற்றையெல்லாம் நம்பி நான் மேற்கொண்ட உண்ணா விரதத்தைக் கைவிட்டேன். ஆனால் கொடுத்த வாக் குறுதியின்படி ராஜபக்சே நடக்கவில்லை.

போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள் என்பது போன்று நாங்கள் சொன்னது கிடையாது.

சிங்களவர்களின் செயல்பாட்டுக்கு எந்தக் கால கட்டத்திலும் துளியளவுக் குக்கூட நாங்கள் ஆதரவு தெரிவித்த தில்லை.
கேள்வி: டெசோவால் எந்த அளவு பயன் ஏற்படும்?

பதில்: ஈழத் தந்தை செல்வா ஜனநாயக வழிமுறையில் அறவழிப் போராட்டம் தான் நடத்தி வந்தார்.

ஆனால், சிங்களவர்களும் அந்த ஆட்சியர்களும் தமிழர்களை அந்நாட்டின் குடிகள் என்று கருதவில்லை. பகைவர் களாகத்தான் கருதினார்கள். தமிழி னத்தையே அழித்து முடித்து விடுவது என்று செயல்பட்டனர்.

மூர்க்கத்தனமாக சர்வாதிகாரமாக நடந்து கொண்டார்கள்; வேறு வழியின்றித் தமிழர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஏதோ ஒரு சூழ்நிலையில் வெற்றி கிடைக்கவில்லை, வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது என்றாலும் - எஞ்சியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். தனியீழம் தான் ஒரே தீர்வு என்ற நிலையில் அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று ஆதரவு திரட்ட வேண்டும்.

ஈழத் தமிழர்கள் மத்தியிலே வாக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற பொதுக் கருத்தை உருவாக்க முயற்சி களை மேற்கொள்வோம். மத்திய அரசை யும் இதற்கு வலியுறுத்துவோம். இதற்குப் போராதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இன்றைய கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேள்வி: இலங்கையில் தமிழ் மக்கள் தனியீழம் கேட்கவில்லை என்று டி.கே. ரெங்க ராஜன் எம்.பி. கூறியிருக்கிறாரே!

பதில்: அவர்கள் யாரைச் சந்திந் தார்கள் என்று தெரியவில்லை; ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலகத் தமிழர்கள் அனைவரின் விருப்பமும் தனியீழமே!
கேள்வி: பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?
பதில்: போராளிகளுக்கு எப்போதும் சாவில்லை.
கேள்வி: காலக் கெடு எதையும் நிர்ணயித்துள்ளீர்களா?
பதில்: இப்பொழுதுதான் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.கேள்வி: ஆட்சியில் இல்லாதபோதுதான் ஈழத் தமிழர்களுக்காக போராடுவீர்களா?

பதில்: ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து வாதாடி வந்திருக்கிறோம்; போராடியும் வந்திருக்கிறோம்.

இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்று அங்குள்ள நம் மக்களுக்கு இடையூறுகளைச் செய்த நிலையில் அமைதிப்படை திரும்பி வந்தபோது அதை வரவேற்கச் செல்லாத ஒரே ஒரு முதல் அமைச்சர் நான் தானே!

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக ஆட்சியை இழந்தவர்களும் நாங்கள்தான்.30-4-2012

தமிழ் ஓவியா said...

எல்லாம் அவன் செயல் கோவில் அர்ச்சகருக்குப் பன்றிக் காய்ச்சல்திருவொற்றியூர், ஏப். 30- திருவொற்றியூர் காலடிப்பேட்டை வடக்கு பிரகார தெரு வில் வசித்து வருபவர் ரங்கநாதன் (வயது 40). ஜோதிடரான இவர் மணலி சின்ன சேக்காடு பகுதியில் உள்ள ராமர் கோவிலில் அர்ச்சக ராகவும் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவ ருக்கு காய்ச்சல் ஏற்பட் டது. இதையடுத்து திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட ரங்க நாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாக வில்லை. இதனால் தண் டையார் பேட்டையில் உள்ள காலரா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட அர்ச்சகர் ரங்க நாதனுக்கு ரத்தம் எடுக் கப்பட்டு கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடி யூட்டிற்கு பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் ரங்கநாதனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. கிண்டி இன்ஸ்டிடியூட் டில் இருந்து நேற்று இரவு இந்த தகவலை ரங்கநாதனிடம் தொலை பேசியில் தெரிவித்தனர். இதனால் பயந்து போன அவர் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக தண்டையார் பேட்டை காலரா மருத்துவமனை யில் விரைந்து சென்றார். ஆனால் மருத்துவமனை ஊழி யர்கள், காலரா மருத்துவமனையில் இடம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி யுள்ளனர். சின்னம்மை நோயினால் பாதிக்கப் பட்ட பலர் இங்கு அனு மதிக்கப்பட்டுள்ளனர். போதிய இட வசதி இல்லை. எனவே ஸ்டான்லி மருத்துவ மனை, அல்லது அரசு மருத்துவமனையில் போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றத் துடன் வீடு திரும்பிய ரங்கநாதன் இன்று மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார். ரங்கநாதனுடன் சேர்த்து சென்னையில் இதுவரை 52 பேர் பன்றிக்காய்ச் சலுக்கு பாதிக்கப்பட் டுள்ளனர். தமிழகம் முழுவதும் 108 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். வேக மாக பரவும் பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் தீவிர நோய் தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர் கள், செவிலியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப் பூசி போடப்பட்டது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் முகாம்கள் அமைக்கப் பட்டு காய்ச்சல் அறிகுறி யுடன் வருபவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப் பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சலை தடுக்க அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு டாமி ப்ளு மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.