Search This Blog

29.4.12

தோழர் இரவிக்குமாருக்கு..... பதிலடி

தோழர் இரவிக்குமாருக்கு.....


திராவிட இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசிட பார்ப்பனர்கள் மடி கட்டி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டே பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தலைவர்கள் மீதும், ஆத்திர நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றனர்.

அதில் ஒன்றுதான் உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும், அந்நிய தலையீடும் என்ற அதற்குப் பதிலடி கொடுத்து உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற அரிய வரலாற்றுக் கருவூலத்தைக் கொடுத் துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்தப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு, கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒரு கூட்டம் கிளம்பி இருக் கிறது. அதுதான் தமிழ்த் தேசி யவாதிகள் எனப்படுவோர். பார்ப்பனர்களின் தொடையில் உட்கார்ந்து கொண்டு எரியீட்டி பாய்ச்சிக் கொண்டு திரிகிறார்கள்! பார்ப்பன ஊடகங்கள் நன்கு காற்றடைத்து வானில் பறக்க விடுகின்றன - அத்தகையவர்களை.

தைமுதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ரத்து செய்து - ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் அடிப்படையில் - கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த அறுபது பிள்ளைகள்தான் தமிழ் வருடங்கள் (ஒரு ஆண்டுக்குக் கூட தமிழ்ப் பெயர் கிடையாது.) என்ற அடிப்படையில் சித்திரை முதல் தேதிதான் தமிழ் வருஷப் பிறப்பு என்று பார்ப்பன அம்மையார் முதல்-அமைச்சராக இருந்து சட்டம் இயற்றிய இந்தக் கால கட்டத்தில், அய்ம்பொறிகளையும் அடக்கி ஆமையாக ஒடுங்கிய போதே இந்தத் தமிழ்த் தேசியவாதிகளின் ஆரிய முகவரி அவிழ்ந்து தொங்கி விட்டதே!

இப்பொழுது இன்னொரு பக்கத்தி லிருந்தும் இட்டுக்கட்டும் வேலை.

கொஞ்ச நாளில் சொந்தக் காரணங்களுக்காகவும் அரசியல் போக்கிற்காகவும் பதுங்கி இருந்தது போல காட்டிக் கொண்ட தோழர் ரவிக்குமார் மறுபடியும் தன் முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்.

சண்டே இந்தியன் (20.-4.-2012) இதழில் திராவிட இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தோற்றுநர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் மீதும் அபாண்டமான அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். இது அவருக்குத் தேவையிலலாத வீண் வேலை.

பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து தியாகராயர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, பிராமணரல்லாதார் என்பதில் தாழ்த்தப்பட்டோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர் என நம்புவதற்கு ஒரு ஆதாரமும் அந்தப் பிரகடனத்தில் இல்லை என்று அடித்துக் கூறி, திராவிடர் இயக்கத்திற்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் எந்த விதப் பாத்தியமும் இல்லை. அந்த இயக்கத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்று மங்களம் பாடி முடித்துவிட்டார்.

தியாகராயரின் அந்த அறிக்கையைப் பற்றி இந்து ஏடு என்ன தலையங்கம் தீட்டியிருக்கிறது தெரியுமா? தேசிய நலனுக்கு ஆபத்து (Perilous to the National Cause) என்று எழுதியது! பார்ப்பானுக்கு ஆபத்து என்றால் - அது தேசிய நலனுக்கு ஆபத்துதானே! - பார்ப்பனருக்குத் தெரிந்தது நம் மக்களுக்குத் தெரிய வில்லையே. என்ன செய்வது!

ஜாதி ஒழிப்பு சிந்தனை திராவிட இயக்கத்தவரிடம் இல்லை என்றெல்லாம் மனம் போனபோக்கில் எழுதித் தள்ளியுள்ளார்.

வரலாற்றில் எல்லா வகையான ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தி - இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழித்துத் தள்ளி, உரிமைகளற்ற வெறும் கூடாக ஆக்கிய ஆரியத்தை எதிர்த்து போர்கள் பல இதற்கு முன் நடந் திருந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தோற்றுவிக் கப்பட்ட திராவிடர் இயக்கம் மிகப் பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும் மலர்வித்தது என்பதை மனச்சாட்சி உள்ளவர்களும் வரலாற்றைக் கோணலாகப் பார்க்காமல் நேர்மையாகப் பார்ப்பவர்களும் அறிவார்கள்.

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனர் அல்லாதாரை ஒன்று திரட்டும் நோக்குடைய ஓர் அறிக்கையில் அனைத்தும் தாம் நினைப்பதெல்லாம் இடம் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதுதானா?

அந்த இயக்கத்தின் பிற்காலச் செயல்பாடுகளில் செறிந்திருந்த நடவடிக்கைகளை நாணயமான கண் கொண்டு பார்த்து எடை போட வேண்டாமா?
1917 இல் சென்னையில் நடைபெற்ற மாகாண முதல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டு உரையில் வெள்ளுடை வேந்தர் என்ன பேசினார்?

பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே! அவ்வருணாசிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய புத்தர் முயன்றார். முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர்; தோற்றனர். இராமானுஜரும் புரோகிதர் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழி முயன்றார். தோல்வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு- _ இப்படிப் பேசியவர்தான் வெள் ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்.

ஜாதி பற்றிய சிந்தனை அவருக்கில்லை என்று எழுதுவது அசாத்திய கற்பிதமே!

எத்தனையோ எடுத்துக் காட்டுகளைச் சொல்ல முடியும்.

கோயில்களில் எல்லாச் சாதியினரும் குருக்களாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிகளைப் பிராமணர் அல்லாதார் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆகமப் புரோகித பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு, திராவிட பாஷையிலேயே புத்தகங் களும் எழுதிப் பயிற்றுவிக்கப் படவேண்டும் என்று தம் கருத்தைத் திராவிடனில் எழுதி மக்களிடையே சமுதாயச் சமநிலை உணர்வைத் தூண்டினார்.

வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 86)

பிராமணர்கள் கடவுளின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். மற்ற இனத்தார் பிற உறுப்புகளில் இருந்து தோன்றியவர்கள் என்று கூறப்படும் மனுநூலைக் கண்டித்துத் திராவிடர் பண்பாடு இதற்கு மாறுபட்டது என்பதை விளக்கினார். திருவள்ளுவர், அவ்வையார் போன்றோரின் கருத்துக்களை எடுத்துக் கூறி மக்கள் அனை வரும் சமம் என்ற கருத்தை வலியு றுத்தினார்.

(வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 85)

இதற்கு மேலும் தியாகராயரின் சமூகச் சிந்தனைக்கும், ஜாதி பற்றிய அவரின் கோட்பாட்டுக்கும் எடுத்துக் காட்டுகள் தேவைப்படாது.

ஒரு வேடிக்கை. ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்களை ஜாதிச் சிறையில்அடைத்து அவர்களைச் சிறுமைப்படுத்துவதனால், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட நம் சமுதாய மக்கள் எந்தப் பலனைத் தட்டிப் பறிக்கப் போகிறார்களாம்? வேறு எதைத்தான் சாதிக்கப்போகிறார்கள்? எந்தப் பார்ப்பனராவது தன் சொந்த இனத்தின் தலைவர்களைக் காட்டிக் கொடுக்கிறார்களா? கொலைகாரரையே ஜெகத்குரு என்றுதானே தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள்?

நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பதை அடையாளம் காண்பதில் கூட நம் தோழர்களுக்குத் தடுமாற்றம் இருக்கலாமா?
இன்னும் எத்தனை பெரியாரும் அம்பேத்கரும் தோன்ற வேண்டுமோ தெரியவில்லையே!

ஓர் அபாண்டம்

நீதிக்கட்சிக்குத் தலைமை வகித்த பி.தியாகராஜ செட்டி மேலும் ஒரு துரோகத்தையும் செய்தார். 1821 செப்டம்பரில் கடிதமொன்றை பிரிட் டிஷ் ஆட்சியாளருக்கு எழுதினார்! ஆதி திராவிடத் தொழிலாளர்களை நகரை விட்டு அப்புறப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷ் அரசுக்கு அந்தக் கடிதத்தில் தியாகராஜ செட்டி ஆலோசனை தெரிவித்திருந்தார் என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் முண்டமாக எழுதியுள்ளார். எம்.சி. ராஜாவை சாட்சி போட்டு எழுதியுள்ளார்.

எப்பேர்ப்பட்ட மனிதர் இவருக்குச் சாட்சியாகக் கிடைத்துள்ளார்? அண்ணல் அம்பேத்கரின் முதுகில் குத்திய புண்ணியவான்தான் இவருக் குக் கிடைத்த அக்மார்க் சாட்சியோ!

இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சிதான் முதன் முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர்பதவியை அளித்து மகிழ்ந்தது. அந்த வாய்ப்பினைப் பெற்றவர்தான் இந்த மயிலை சின்னத்தம்பி ராஜா (எம்.சி.ராஜா).

இவரும், ஜான் ரத்தினமும் சேர்ந்து ஏற்பாடு செய்த கூட்டம்தான் பிரசித்தி பெற்ற சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலை பொதுக்கூட்டம் (7-.10.-1917). பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அது. நாயரின் புகழ் பெற்ற உரையாக அது என்றும் பேசப்படும்.

டாக்டர் நாயர் தொடங்கும் போதே எப்படிப் பேசினார்? என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி யார் வள்ளலார் அவர்களே! என் ஆதி திராவிடர் தோழர்களே!, தோழி யர்களே! உங்கள் அனைவருக்கும், உங்கள் மாலை மரியாதைகளுக்கும், உங்கள் உற்சாக ஆரவாரங்களுக்கும் என் தாழ்மையான நன்றி கலந்த வணக்கம்.

உங்களை ஆதி திராவிடர்களென பெருமையோடு விளித்தேன். காரணம் இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர் களான நம் திராவிடர் இனம். மற்றொன்று நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம் என்றெல்லாம் பேசினார்.

நான்காம் ஜாதியான சூத்திரர்களும், அவர்ணஸ்தர்களான பஞ்சமர்களும் தான் இந்நாட்டின் கறுப்பர்களான திராவிடர்கள் என்றார்.

1917 இல் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய சென்னை ஸ்பர்டாங் சாலையில் கூடியிருந்த பஞ்சமர்களைப் (ஆதி திராவிடர்களை) பஞ்சைகள் என்றும், இழிசினர் என்றும், வீணர்கள் என்றும் இந்து ஏடு எழுதியுள்ளதைக் கண்டித்து நான்பிராமின் ஏடு எழுதியது (14-.10.-1917).

மாநகராட்சியின் ஆளுகைக் குட்பட்ட முறையில் பல பள்ளிகள் தொடங்கப்பெற வேண்டுமென்றும், அவற்றில் இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்றும் தியாகராயர் பலமுறை எடுத்துக் கூறி வந்தார். அதன் விளைவாக மாதிரிப் பள்ளிகள் பல ஏற்படுத்தப்பட்டன. 1915_-16 ஆம் ஆண்டுகளில் பல பள்ளிகள் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட (பஞ்சமர்) மக்களுக்காக நடத்தப்பட்டன. அவற்றில் அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. மாதிரிப் பள்ளிகளில் பாடத்திட்டம் வகுத்தல், பள்ளிகளைச் சீர்படுத்துதல் ஆகிய வற்றைக் கவனிக்க அமைக்கப் பட்ட குழுவில் தியாகராயர் உறுப்பினராக இருந்து அரும் தொண்டாற்றினார்.

முதன் முதலாக பள்ளிகளில் இலவச உணவை அறிமுகப் படுத்தியது நீதிக்கட்சித் தலைவரான தியாகராயர் மாநகராட்சித் தலைவராக இருந்தபோதுதானே!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அறிமுகப் படுத்தப்பட்டு, பிறகு வேறு சில இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த உணவுத் திட்டத்தால் பலன் பெற்றவர்கள் பெரும்பாலும் யாராக இருக்க முடியும்? இந்தத் திட்டத்தால் மாணவர்கள் வருகை 3075 லிருந்து 3705 ஆக உயர்ந்ததே!

பஞ்சமர் என்று அந்தக் காலக் கட்டத்தில் அழைக்கப்பட்ட ஆதி திராவிடர்களின் பிள்ளைகளை சென்னை மாநகராட்சி தன் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முனைந்தது. இதைக் கண்டித்தும், தாழ்த்தப் பட்டவர் குழந்தைகளுக்குத் தனிப் பள்ளிக் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்து நேசன் என்ற தேசிய ஏடு எழுதியது (18-.1.-1918)

உண்மைகள் இவ்வாறு இருக்க வாய் புளித்ததோ, மாங்காய் புளித் ததோ என்று சகட்டு மேனிக்கு எழுத லாமா? நிதானம் தேவையில்லையா?

------------------------- -சந்திப்போம் மீண்டும். கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 28-4-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

17 comments:

தமிழ் ஓவியா said...

புரட்சிப் பெண்ணாக உருவாகுங்கள்!


பெண்கள்மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதுபற்றி வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவையாக உள்ளன.

பாலியல் வன்கொடுமை, மானபங்கம், கடத்தல், வரதட்சணை மரணம் என்று பெண் களுக்கு எதிரான அநீதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பெண்களுக்குக் கொடுமைகளை இழைப் போர் மீதான வழக்குகள் விரைந்து விசாரிக்கப் பட்டு உரிய தண்டனை அளிக்கப்படுவதில்லை. காலம் கண்மூடித்தனமாக இழுத்தடிக்கப்படுகிறது.

2009 இல் வழக்குகள் 12,374, 2010 ஆம் ஆண்டுக்கான வழக்குகள் 12,653, 2011 இல் 13,928 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றன.

இப்படி தாமதிக்கப்படுவதால், பெண்கள் மீதான கொடுமைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன; வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, உரிய தண் டனை விதிக்கப்பட்டால், இத்தகைய வன்கொடு மைகள் குறைந்திட அதிக வாய்ப்புண்டு.

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்ற அரிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. உண்மையிலேயே இது உயரிய நோக்கத்தைக் கொண்டது; ஆனால், எந்த அளவுக்குச் செயல்பாட்டில் உள்ளது - சட்டத் தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே!

இந்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக் கள் மத்தியில் உண்டாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

பாதிக்கப்படும் ஒரு பெண் புகாரை எங்கே கொண்டு போய்க் கொடுப்பது? புகார் மனு எப்படி எழுதப்படவேண்டும்? என்பது போன்ற அடிப்படைத் தகவல்களை மகளிர் மன்றம்மூலம் கிராமப்புற பெண்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கவேண்டாமா?

குடும்ப நீதிமன்றங்களில் திருமண விடுதலை தொடர்பான வழக்குகள் விரைந்து விசாரிக்கப் படும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு முன் குறிப்பிட்ட காலம் பிரிந்து இருந் திருக்கவேண்டும் என்றிருந்த கால அளவுகூட இப்பொழுது குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.

குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்கள் திரைப்பட நட்சத்திரங்களாக இருந்தால் தொடர் கதைபோல நாவல் போல தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுப் பது என்பது பொழுதுபோக்கு அம்சமாகி விட்டது.

திருமண விலக்கு பெறும்போது குழந்தை யாரிடம் இருப்பது என்பது தொடர்பான சிக்கல் கள் வேறு!

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண் கள் என்றால் பலகீனமானவர்கள் என்கிற மனப் பான்மை சமூகத்திலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி எறியப்படவேண்டும்.

கோலம் போடுதல், கோலாட்டம் அடித்தல் போன்ற விளையாட்டுகளை விளையாட்டாகக் கூடச் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்கள் உடல் வன்மை பெறும் வண்ணம் வீர விளை யாட்டுகளை, உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்து!

நமது கல்வித் திட்டத்தில் பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் கல்வி முறை அமையவேண்டும்.

பெண்ணென்றால் மெல்லியவள், இடை ஒன்று இருப்பதே தெரியாமல் இருக்கவேண்டியவள் என்பது போன்ற கவித்துவக் கற்பனைகளைத் தூக்கி எறிந்து, கல்பனா சாவ்லா, வசந்தா கந்தசாமி போன்ற பெண்களை முன்னுதாரணம் காட்டி வளர்த்தெடுக்கவேண்டும்.

இடர் செய்யும் ஆண்கள் நான்கு இடத்தில் பெண்களிடம் உதைபட்டார்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தால் போதுமே - ஆண்களின் வால் அடங்கிப் போய்விடுமே!

பெண்களே, பெரியாரின் புரட்சிப் பெண் களாக ஆக விரும்புங்கள்! 26-4-2012

தமிழ் ஓவியா said...

தேர்தலில் வென்றிருந்தால் ராமதாஸ் இந்த கருத்தைப் பேசுவாரா?


தமிழர்களின் நலன்களை திராவிட அரசியல் புறக் கணித்துவிட்டதாக தற்போது ஒரு கருத்தை சில அரசியல் கட்சிகள் சொல்கின்றனவே?

இப்போது திராவிடம் என்ற கருத் தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்கு வங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளச் சொல்லாடல் ஆகும். அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென்மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமைக்கூறுகள் நிலவுகின்றன. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். தாய் மாமனுக் கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர்களுக்கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய் தெய்வ வழிபாடு. மூன்றாவது இறந்த உடலுக் கான மரியாதை. இது நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது.

இன்றைக்கும் பிராமணர்கள், சடலத் துக்கு மரியாதை கொடுப்பதில்லை. பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாத வர்களுக்கும் இன்னும் நீடித்திருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவ தில்லை. ஏனெனில் கீழ்சாதியினராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ்கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவ தில்லை. ஆம்லெட் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டுகிற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது? கோடையில் தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம் பரில் சங்கீத கச்சேரிகளை வைத்தார்கள். அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடு முறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு? இது இன்றும் தொடர்கிறது. அவர்களின் சாமிக்குக்கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் சுடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டி ருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் சொன்னதை தமிழ்த் தேசியர்கள் இன்றும் சுட்டிக்காட்டு கிறார்களே?

தமிழ் ஓவியா said...

பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடு களை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார்தானே செய்தார். வேறு எந்த தமிழறிஞரும் செய்ய முன்வரவில்லையே. அவர் காலத்து தமிழறிஞர்களான மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவையங்காரோ செய்யவில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா. உரைநடை என்பது மணிக்கொடியால்தான் வளர்ந்தது என்று வேதவசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925 இல் பெரியாரின் தலையங் கங்களைப் பார்க்கவேண்டும். பெரியாரின் உரை நடை அத்தனை அற்புதமாக இருக் கிறது. இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள் தான்.

கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் தமிழகத்தில் ஆட்சி செய்யமுடிகிறது என்றும், ஆனால் தமிழர்கள் அவர்கள் மாநிலத்தில் போய் முதலமைச்சராக முடியுமா என்று ஒரு தர்க்கம் முன்வைக்கப்படுகிறதே...

தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வாக்களித்தது இங்குள்ள தமிழன் தானே. அவன் ஒரு குறுகிய எண்ணத் துக்குள் அடைபட்டவன் அல்ல என்பதைத்தானே காட்டுகிறது. இந்தியாவிலேயே அரசியல் தலைவர்கள் சாதிப்பட்டம் போடாமல் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தானே. கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோரின் சாதி, டெல்லியில் யாருக்காவது தெரி யுமா? ஆனால் வட இந்தியாவில் பார்த் தீர்கள் எனில் குப்தாக்கள், சர்மாக்கள் என எல்லாரும் சாதிப்பெயர் கொண்டவர் கள்தானே. கேரளாவில் கூட நம்பூதிரி, மேனன் எல்லாம் இருக்கிறார்களே. அந்த வகையில் சாதிப்பட்டத்தைத் துறந்தவன் தமிழன்தானே. இது பெரியாரின் வெற்றி அல்லவா. யாவரும் கேளிர் என்ற அடிப் படையில் தெலுங்கனும், மலையாளியும், கேளிர்தான் என்று வாழ்பவன் தமிழன். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் தமிழ னுக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்றுதான் பார்க்கவேண்டும் என்று பெரியார் தெளிவாகச் சொல்கிறார். காவிரி விஷயத்தில் ஜெயலலிதா தமி ழகத்தை விட்டுக்கொடுக்கமாட்டார் அல்லவா? அப்புறம் என்ன? தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துப் போவதில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வைகோ தெலுங்கர்தானே. அவரை தமிழர் இல்லையென்று சொன்னால் தமிழன் ஒத்துக்கொள்வானா?

திராவிடர் கழகம் மற்றும் திமுகவை தமிழர் கழகம் என்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் என்றும் வைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருப்பது பற்றி...

அதை அவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது புறக்கணிக்க வேண் டும். அது வாக்குவங்கி அரசியலோடு சம்பந்தப்பட்டது. ராமதாஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் இப்படிப் பேசியி ருப்பாரா? இது அரசியல். அறிவியல் சார்ந்த பிரச்சினை அல்ல.

தமிழ் ஓவியா said...

திராவிடம் என்கிற கருத்தாக்கம் இன்னும் வலுவானது என்று நினைக் கிறீர்களா?

வலுவாக இருக்கிறது என்று கருத வில்லை. அர்த்தமுடையதாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

திராவிடமொழிக் குடும்பம் என்று கால்டுவெல் கூறினார். அவர்தான் இந்த திராவிடக் கருத்தாக்கத்துக்கு ஆணிவேர் என்று அவரையும்கூட தமிழ்த் தேசியர்கள் கூட்டங்களில் விமர்சிக்கிறார்கள்?

அவர் இன்னொன்றையும் சொன்னார். அது தமிழ்த்தேசியர்களுக்கு உவக்காத விஷயம். பறையர்களை தனது முதல் பதிப்பில் தூயதமிழ் சாதி என்று எழுதியி ருந்தார். அதற்கடுத்த பதிப்பில் அந்தப் பகுதி அகற்றப்பட்டு விட்டது. அந்தப் பகுதியோடு சேர்ந்து தற்போது ஒரு பதிப்பு கவிதாசரண் மூலம் வெளியிடப்பட் டுள்ளது. அத்துடன் கால்டுவெல் இன வரைவியலாளர்தானே தவிர அரசியல் வாதி அல்ல. அவர் வரலாற்றாய்வாளரும் கூட. அவருடைய கருத்துகளை எடுத்துக் கொள்வதும், மறுப்பதும் இவர்களது நேர்மை சார்ந்தது.

ராமதாஸ் சொல்லும் அதே கருத் துகளின் போக்கிலேயே விரக்தியான மனநிலையில் தலித்து களும் சொல் கிறார்கள். திராவிட அரசியல் ஏமாற்றி விட்டது என்ற விமர்சனத்தை வைக் கிறார்கள். ஆனால் அம்பேத்கரின் எழுத்துகளை முதலில் மொழிபெயர்த்து இங்கே 1935-லேயே அவரை அறிமுகப் படுத்தியவர் பெரியார். திராவிட இயக்கத் தலைமைகள் பின்பு, இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பை நம்பி நாசமாகப் போயின. அப்படி நடந்ததற்கு தொண்டர் கள் அல்ல காரணம்.

தமிழ்த் தேசிய இயக்கத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

எந்த இடத்துக்கும் இந்த இயக்கம் நகரமுடியாது. உலகிலேயே வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுதான் மிகவும் எளிமையானது. ஆனால் அதற்கு நீடித்த மதிப்போ, பலனோ கிடைக்காது.

பார்ப்பனர்கள் மேல் உள்ள வெறுப்பை முன்வைத்து தானே பெரி யாரும் அரசியல் செய்தார் என்கி றார்கள்?

பார்ப்பனர்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார் அரசியலை முன் வைத்து உண்மையான சமூக அதிகாரத் தையும் அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியலைச் செய்தவர் பெரியார். அதை வெறுப்பரசியல் என்று குறுக்கக் கூடாது. இன்று மாறியிருக்கும் தமிழ்ச் சமூகநிலையை வைத்து, அவர் செய்த அரசியல், வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

- (நன்றி: த சன்டே இந்தியன் 29 ஏப்ரல் 2012

தமிழ் ஓவியா said...

துறையூரை நோக்கி!


துறையூர் இப்பொழுது லால்குடி கழக மாவட்டத்திற்குள் வருகிறது. இந்த மாவட்டம் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்துமே நினைவில் நிலைத்து நிற்கக் கூடியவை. சிறீரங்கத்தில் ஸ்ரீமான் ரெங்கநாதன் கோவில் வாசலில் கம்பீரமாக அமர்ந்து பகுத்தறிவுப் பாடம் போதிக்கிறாரே - பகலவன் பெரியார் - அது என்ன சாதாரணமானதுதானா?

எத்தனை எத்தனை எதிர்ப்புகள் - அவற்றை எல்லாம் ஓடுகிற ஓட்டத்தில் எத்தி எறிந்து விட்டு, ஈரோட்டு இறைவனின் (தலைவரின்) வெண்கலச் சிலையை நிறுவி, வரலாற்றில் இடம் பிடிக்கவில்லையா?

காஞ்சி சங்கர மடம் முன் அய்யா அவர்கள் சிலை, கடவுள் இல்லை வாசகம் தமிழிலும், ஆங்கிலத்திலும்; பக்தர்கள் திரண்டு வருகின்ற இடங்கள் அல்லவா இவை!

கோவிலுக்குள் உள்ள கடவுள் சிலைகளையும் பார்த்து விட்டு, வெளியில் வந்து கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பீடத்தின் மீது செம்மாந்து நிற்கிறாரே - அந்தச் சிலைக்கு உரியவர் யார் என்று தெரிந்து கொள்வதில் எவ்வளவு ஆர்வம் காட்டு கின்றனர் வெளிநாட்டவர்கள், அயல் மாநிலத்தவர்கள்!

தந்தை பெரியார் மறைந்த இந்தக் காலகட்டத்தில் இந்த அரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

வரலாற்றுக் கல்வெட்டுகளாக இவை நின்று விடு கின்றன! நம் சந்ததியினரின் சிந்தனைக்கு விருந்தாக இருக்கப் போகின்றன! அதே சீரங்கத்திலே எடைக்கு எடை என்று எத்தனை எத்தனை விதமான பொருள் களைப் பரிசு மழையாகப் பொழிந்தனர் - தமிழர் தலைவர் அவர்களே திகைத்துத் திக்கு முக்காடவில்லையா? ஒரு காலத்திலே ஒரே திருச்சி மாவட்டம் என்கின்ற கழக அமைப்பு இன்று திருச்சி, லால்குடி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களாகப் பிரித்து இயக்கப் பணிகள் எழுச்சியூட்டும் வகையில் விரிவாக நடைபெறுவதற்கு வழி செய்தார் நமது கழகத் தலைவர். போட்டிபோட்டுக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாளை நாகர்கோவிலில் மண்டல மாநாடு என்றால், நாளை மறுநாள் துறையூரில் மண்டல மாநாடு.

தஞ்சையில் மண்டல மாநாடு எனும் பெயரால் ஒரு மாநில மாநாடே நடைபெற்றது. மே மாதம் 29இல் புத்துலகப் பெண்கள் மாநில மாநாடு அன்னையார் பிறந்த வேலூர் மாநகரில்.

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக வேண்டும் என்ற கால கட்டம் இது. என்ன தைரியம் இருந்தால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதைத் தூக்கி எறிந்து, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை தமிழர்கள் மீது திணித்து ஆரிய ஆபாச ஆண்டுகளை தமிழ் ஆண்டுகள் என்று அறிவிக்கும் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சாதிப்பார்கள்? தந்தை பெரியார் ஊட்டிய தமிழின உணர்வு செத்துவிட்டது என்று நினைப்பா? ஆரிய மாயை எழுதிய அண்ணா மண்ணுக்குள் போய்விட்டார் என்ற மனப்பான்மையா? நீறு பூத்த நெருப்பைத் தூண்டிவிட ஆசைப்படுகிறார்கள். நெருப்பா வெறும் சாம்பலா என்பதைக் காட்டுவோம் வாருங்கள் தோழர்களே துறையூரை நோக்கி. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்ற புரட்சிக் கவிஞரின் காவிய வரிகளுக்குக் கருஞ்சட்டைப் பட்டாளம் கட்டியம் கூறட்டும்!
ஒரு சேதி தெரியுமா தோழர்களே?

டெசோ என்ற அமைப்பை மீண்டும் புதுப்பிப்போம் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தார் தமிழர் தலைவர் (24.3.2012). முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களும் சென்னையில் நேற்று நடைபெற்ற - பல்லாயி ரக்கணக்கான தமிழர்கள் திரண்டிருந்த மக்கள் கடல் முன் சங்கநாதம் செய்யும்போது பிரகடனப்படுத்திவிட்டாரே! டெசோவை மீண்டும் புதுப்பிப்போம் தி.மு.க.வும் - தி.க.வும் முன்னெடுத்துச் செல்லும் என்று முழங்கிவிட்டாரே! என் வாழ்நாளின் எஞ்சிய பகுதி இதற்காகவே இருக்கும் என்று எழுச்சிப்பறை கொட்டி விட்டாரே 90 வயதில்!

இந்த முக்கியமான காலகட்டத்தில் துறையூர் மாநாடு, புத்தெழுச்சி கொண்டு பூரித்து எழ இருக்கிறது. விடுமுறைக் காலம்தானே - வீட்டோர் அனைவரையும் அழைத்து வாருங்கள் - உற்றார் உறவினர்களையும் அழைத்து வாருங்கள். கோவில் விழாக்களுக்கு குடும்பம் குடும்பமாகப் போகும் மூடத்தனம் மலையேறிவிட்டது. புரட்சி மாநாடுகள் தான் நாங்கள் பயணிக்கும் புத்துலகு என்று புறப்படுங்கள், புறப்படுங்கள் தோழர்களே - புறப்பாட்டுப்பாடி!


- மின்சாரம் 26-4-2012

தமிழ் ஓவியா said...

சர்வதேச ஆதரவைத் திரட்டி தனியீழம் காண்பதே - ஒரே தீர்வு! தமிழர் தலைவரின் அறிக்கை


இனி தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு - அதற்காக சர்வதேச ஆதரவினைத் திரட்டுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட இலங்கையில் ஈழத் தமிழர்கள் சுமார் 30 விழுக்காட்டினர் உள்ளனர். 70 விழுக்காடு சிங்களவர்கள் என்பதாலும், பெரும்பான்மைப் பலத்தையே மூலாதாரமாகக் கொண்டு, அந்த மண்ணின் மைந்தர்களாகவும், அந்த நாட்டின் வளத்திற்காகவும் தங்கள் ரத்தம், வியர்வை இவற்றை தம் உழைப்பின் மூலம் தந்த ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, சிங்கள அரசுகள்மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டது.

கல்வி வாய்ப்புகள் ஈழத் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டது; மொழி உரிமை நசுக்கப்பட்டது. அரசுப் பணிகளில் உத்தியோக வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தப் பட்டது. வடக்கு, கிழக்கு முதலிய முக்கிய பகுதிகளில் வாழ் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளைத் திட்டமிட்டே பறித்தது சிங்கள அரசுகள்.

தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும்!

ஒரு கட்டத்தில் தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று தலைநகர் கொழும்பிலேயே விளம்பரப் பலகை வைக்கப்படும் அளவுக்கு சிங்கள இனவாதமும் அதன் விளைவான இனப் படுகொலை (Genocide)யும் நடந்தேறின. இதனால் உருவான உரிமைக் குரல் ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் முழக்கமாகக் கிளம்பியது.

ஜனநாயக ரீதியில் வாக்கெடுப்பு மூலம் நாடாளு மன்றத்திற்குள் நுழைந்த ஈழத் தமிழரின் பிரதிநிதிகளுக் குள்ள உரிமைக் குரல்வளை நெரிக்கப்பட்டது.

அதனால்தான் - வோட்டு முறையைப் பயனற்றதாக்கிய சிங்களப் பேரினவாதம் - ஈழத் தமிழர் இளைஞர்களில் பிரபாகரன்களை உருவாக்கக் காரணமாகியது.

பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி, ஈழத் தமிழரின் தாகத்தை அடக்கிவிட, இராணுவ பலத்தின் மூலம் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது!

பிரதமர் இந்திரா காந்தியின் சரியான அணுகுமுறை!

தமிழ் ஓவியா said...

இந்த நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட அந்நாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு - கலாச்சாரத் தொடர்புடையது என்பதாலும், ராஜதந்திர நோக்கில் வல்லரசுகளின் வல்லாண்மைக்கு நீர்ப் பாய்ச்சிட, இலங்கை திரிகோணமலை போன்ற பகுதிகளை மற்ற நாடுகளுக்குத் தளங்களாகப் பயன்படுத்தும் பேராபத்து உருவாகி, இந்தியாவின் இறையாண்மைக்கேகூட அச்சுறுத்தலாக அது அமைந்து விடக் கூடும் என்று கருதியதால் - மிகுந்த தொலைநோக்குணர்வுடன், இலங்கையில் ஜெயவர்த்தனே ஆட்சி நடைபெற்ற நிலையில், அங்குள்ள இளைஞர்கள் இந்திய மண்ணிற்கு வந்து ஆயுதப் பயிற்சி உட்பட பெறுவதற்கு அனுமதிக்கப் பட்டனர்.

தம்பி பிரபாகரன் தலைமை உருவானது எப்படி?

இது காலத்தின் கட்டாயமாகிறது. பல குழுக்களும் பயன் பெற்றன என்றாலும் தெளிவான சிந்தனை உறுதி, ஆற்றல் திறமை - தம்பி பிரபாகரன் தலைமையில் அமைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கே உண்டு என்பதை இறுதியில் உறுதி செய்து, ஈழத் தமிழர்கள் பெரும்பா லோரால் இயல்பாகவே இவர் மூலம் தான் தமிழ் ஈழம் தங்கள் தாகம் - தீர்வு என்பது உருவானது.

இதற்கிடையில் இலங்கையில் அரசு மாற்றங்கள் நிகழ்ந்தன. இராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அதிபர் ஜெயவர்த்தனே - ராஜீவ்காந்தி ஒப்பந்தம் (இந்திய - இலங்கை ஒப்பந்தம்) போடப்பட்டது. அப்போதே நம்மைப் போன்றவர்கள் இந்த ஒப்பந்தத்தினால் காதொடிந்த ஊசியளவும் பயன் ஏற்படப் போவதில்லை என்பதை விளக்கி, ஒப்பந்தத்தினை எரித்துப் போராட்டம் நடத்தினோம்.

விடுதலைப்புலிகளை அடக்க வேண்டியும், ஈழத் தமிழர்களின் உரிமைகளை நசுக்கவும் இலங்கை அரசியல் சட்டம் பலமுறை திருத்தப்பட்டு, பிரிவினை கேட்க முடியாது என்று சட்டம் செய்தனர். அதே பிரச்சினையில் தேர்தலுக்கு நின்ற கூருடுகு TULF என்ற தமிழர் அய்க்கிய முன்னணி 16இல் 15 இடங்களை வென்றும்கூட குரல் கொடுக்க முடியாத நிலை!

பிரதமர் ராஜீவுக்குத் தவறான வழிகாட்டுதல்கள்

பிரதமர் இராஜீவ்காந்திக்கு வழி காட்டியவர்கள் அந்நாள் பிரதமர் இந்திராகாந்தி அணுகுமுறைக்கு நேர் எதிரானதாகவே ஒரு நிலைப்பாட்டை எடுக்க வைத்தனர்.

ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க இயலாத வண்ணம் இந்திய அமைதிப்படை வடகிழக்கு மாகாணப் பகுதிகளுக்கு இந்திய அரசால் அனுப்பப்பட்ட தானது - ஒரு அதீதமானது. இதனைச் சரியாக பின்னர் உணர்ந்தே பிரதமராக இருந்த வி.பி. சிங் அவர்கள் அந்தப் படையை திரும்ப அழைத்த துணிவான முடிவை எடுத்தார்!

(எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மற்ற வெளிநாடுகள் தலையிடுவதா என்று கொக்கரிக்கும் சிங்கள அரசின் வீராதிவீரர்கள், இந்திய இராணுவத்தை அழைத்து, தமிழர் உரிமைப் போராட்டத்தை நசுக்கிட ஆயுதப் பறிப்பு முதல் பல்வேறு நிகழ்வுகளை அவை நடத்திட அனுமதித்ததை எவ்வாறு நியாயப்படுத்திட முடியும்?)

ராஜீவும் உணர்ந்தார் ஒரு கட்டத்தில்

தமிழ் ஓவியா said...

ராஜீவ் காந்தி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, ஈழத்தில் நடைபெற்று வருவது இனப் படுகொலை தான் என்பதை அங்கே நாப்பாம் நெருப்புக் (Napalm) குண்டுகளை தமிழர் பகுதிகளில் வீசிய செய்திகளைக் கேட்டு, அதை தடுக்கும் மனநிலைக்கு வந்தார்; உண்மை நிலை அறியும் கால கட்டத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டது - மிகப் பெரிய கொடுமை மட்டுமல்ல; வரலாற்றுப் பிழையும், அதன் மூலம் தமிழர் வாழ்வுரிமைப் போரின் பின்னடைவும் ஏற்பட்டது. பிறகு இடையில் எத்தனையோ சங்கடங்களை எதிர்கொண்டாலும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வில் ஒருவகையான தேக்க நிலையும் உண்டானது என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

வெண்ணெய் திரண்ட நேரத்தில்...

இதுவரை உலகில் எந்த ஒரு இராணுவத் தளபதியும் பெறாத ஆற்றலை மாவீரன் பிரபாகரன் பெற்று, கட்டுப்பாட்டாக தனது விடுதலைப்புலி இயக்கத்தின்மூலம் ஈழ உரிமைப் போரினை நடத்தினார். ஆனால் உலக அளவில், சர்வதேசிய மட்டத்தில் தேவையான ஆதரவைப் பெற வேண்டிய நேரத்தில், வெண்ணெய் திரண்டு வந்த நேரத்தில் தாழி உடைந்தது போன்ற ஒரு விரும்பத்தகாத நிலையில், பல்வேறு தடைகள், பின்னடைவுகள், தவறான பிரச்சார மூட்டங்கள் சிங்களப் பேரின விதிகளைப் பலப்படுத்திடும் சூழல்கள் உருவாகின. இந்திய அரசு உட்பட பற்பல நாடுகள் - பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம், ஒழிக்க முயலுகிறோம் என்ற சாக்கில், ராஜபக்சே அரசு பல சர்வதேச உதவிகளைப் பெற்று, தமிழின ஒழிப்பை, ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பறிப்பை, தீவிரவாத ஒழிப்பு முகமூடியைப் போட்டுக் கொண்டு, மிகவும் லாவகமாக நடத்தி, இன்று பல லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசு. இராணுவக் கொடுமை உச்ச கட்டத்திற்குச் சென்று முள் வேலிக்குள்ளும், சிறைகளுக் குள்ளும் சிக்கியுள்ளவர்களுக்கு விரைவில் அரசியல் தீர்வு தருவோம் என்று பல நாடுகளின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, இந்திய மத்திய, அரசும் ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, சிங்கள அரசை வற்புறுத்தாது, மயிலே மயிலே இறகு போடு என்று கூறி இருதலைக் கொள்ளி எறும்பானது; தமிழின விரோத உணர்வாளர் களே இப்பிரச்சினையால் மத்திய அரசின் ஆலோசனைக் குழுவாக ஆனார்கள்.

தமிழ் ஓவியா said...

இந்தப் பின்னணிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் நிகழ்கால, வருங்கால ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு இனி நாம் எத்தகைய ஆதரவு - வியூகம் வகுக்க வேண்டும் என்பதே முக்கியமாகும்!

ஜெனிவா தீர்மானம்

இனி அங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; இனப் படுகொலை - மனித உரிமைகள் பறிப்பு - இவை இன்றைய உலக சூழ்நிலையில் எங்கே நடந்தாலும், சர்வதேச சமூகம் தன் கண்களை மூடிக் கொண்டு வாய்களைப் பொத்திக் கொண்டு, கைகளைக் கட்டிக் கொண்டிருக்கும் நிலை கிடையாது என்பது நடைமுறை உண்மை.

அதன் வெளிப்பாடு அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி.மூன் மூலம் மனித உரிமை மீறலுக்காக இலங்கை அரசுமீது மேற்கொள்ளப்பட்ட ஜெனிவா தீர்மானம் போன்றதாகும். இது ஒரு துவக்கம்; சர்வதேசப் பார்வையும், பரிவும் ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையின் மீது பட்டுள்ளன என்பதும் ஒரு திருப்பமே!

இதற்குப் பிறகும் இராஜபக்சேவின் மனப் போக்கும், அணுகுமுறையும் துளிகூட மாறவில்லை என்பது அவரது ஆணவம் கொப்பளிக்கும் அறிவிப்புகள் மூலம் தெளிவாக உலகத்தார்க்கும் இந்திய அரசுக்கும் புரிந்தாக வேண்டும்.

இனி கடைசித் தீர்வு என்ன?

ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் தரவில்லை இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் என்று கூறி விட்டாரே!

இலங்கைத் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்திய அரசால் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றப்பட்ட (இலங்கை) அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி மாகாணக் கவுன்சில்களுக்கு (தமிழர் களுக்கு) முழு அதிகாரம் வழங்குவதாக இராஜபக்சே உறுதியளித்தார். இந்தத் திருத்தம்பற்றி இலங்கை அதிபரே என்னிடம் கூறினார் என்று இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இப்போது அறவே அதை மறுத்து விட்டார் ராஜபக்சே! இந்தக் குழுவால் எந்த ஒரு நல்ல விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை.

எனவே, இனி கடைசித் தீர்வு - தமிழ்யீழம் அமைக்கப்பட வெளியில் உள்ளவர்கள் சர்வதேச ஆதரவைத் திரட்டும் வகையில் செயல்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

மூன்றில் ஒரு பகுதியினர் தமிழர்கள்; அம்மக்களின் உரிமைகள் மதிக்கப்படவில்லை; சிங்களக் குடியேற்றம் ஒரு பக்கம்; தமிழர்கள் முள்வேலிகள் அகற்றப்படாமல் தொடர்ந்து வாடுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

வெறும் மருந்துகளால் முடியாத சிகிச்சையை சற்று மாற்றி, அறுவை சிகிச்சையாக நடத்தியாவது நோயாளியைக் காப்பாற்றிட வேண்டியது எப்படி மருத்துவர்களின் மனிதாபிமானக் கடமையோ, அதுபோல நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்புக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான் என்று முழங்கிட, முன் எடுத்துச் செல்ல தயங்கிடவே கூடாது.

இதை நாம் 25.3.2012 அன்றே ஒரு அறிக்கை வேண்டுகோளாக வைத்தோம்.

சர்வதேச சமூகத்தின் பார்வை இப்பிரச்சினைமீது (அய்.நா. தீர்மானம் மூலம்) விழுந்துள்ளதை ஒரு நல்வாய்ப்பாக எடுத்து, முதற்கட்டமாக ஒரு அறவழிப் பிரச்சாரத்தை அடைமழையாகச் செய்ய வேண்டும்.

மூத்த தலைவர் கலைஞரின் கருத்து முக்கியமானது

நேற்று முதல் நாள் (25.4.2012) தி.மு.க.வின் தலைவரும் இந்தியாவில் உள்ள மூத்த தலைவர் களில் ஒருவருமான நமது கலைஞர் அவர்கள், தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு உருவாக வேண்டியது பற்றிக் குறிப்பிட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம்.

நமது குறி - ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு நிரந்தரப் பரிகாரம் தேடுவதில்தான் இருக்க வேண்டும். தேவையற்ற விமர்சனங்களுக்கு இடம் தரக்கூடாது. இன எதிரிகளுக்குத் தான் அது தீனியாகி பிரச்சினை திசை திருப்பப்படும் ஆபத்து ஏற்பட்டு விடக் கூடும்.

எனவே விரைவில் துவக்கும் நல்ல முயற்சிக்கு தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள். நம்மிடை தேவையற்ற வாத - பிரதிவாதங்கள் தேவையில்லை; நாம் எடுத்துக் கூறும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதத்தை விரைவுபடுத்து வதாக இருக்கட்டும்!

தமிழ் ஈழமே தமிழர் தாகம்!



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் 27-4-2012

தமிழ் ஓவியா said...

வெள்ளுடைவேந்தர்


சர் தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை பூண்டு, அவர்களின் தன்னு ணர்வுக்கு வழிகோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப்பாடுபட்டு, சமுதாயத் துறை, பொருளாதாரத்துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற்றிட உழைத்தார். நமது பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்தது. அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டதன் பலனை இன்று காண்கிறோம்.

தியாகராயர் பெரும் செல்வந்தர், பணம் படைத்தவர். தியாகராயர் விரும்பினால் வியாபாரத் தின் மூலம் பல லட்சம் ஈட்டி இருக்கலாம்.

அவர் விரும்பியிருந்தால் சென்னையிலே பெரும் பாலான இடங்களைச் சொந்தமாக வாங்கியிருக்க இயலும்.

அவர் இவைகளையெல்லாம் பெரிதாக மதிக்க வில்லை. தம்முடைய சமூகத் தொண்டைத்தான் ஒரு பொருட்டாக மதித்தார். திராவிட சமூகத்தில் ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். அரசிய லிலே நம்மவர்கள் முதலிடம் பெற வேண்டுமென்று அவர் விரும்பினார். தியாகராயர் போக பாக்கியத்தை விட்டுத் தாமாகவே கல்லும் முள்ளும் காட்டாறும், கருங்குழியும் நிரம்பிய பாதை வழியே செல்லத் தொடங்கினார்.

அவர் களத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் பறக்க விட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்றுதான் இன்று பணியாற்றி வருகிறோம் என்றார் அறிஞர் அண்ணா. அந்தப் பெருமகனார் வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் 161ஆவது ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1852).

காங்கிரஸ்காரர் ஆக இருந்த ஆன்மீகவாதி, மாநகர தந்தை - சட்டப் பேரவை உறுப்பினர், பல்வேறு பொது நிறுவனங்களின் தலைவர் என்ற பன்முகப் பெருமை கொண்ட சீலர் இவர்.

இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் சமூக நிலை, கல்வி வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் என்று பல தளங்களிலும் செம்மாந்து நிற்கின்றனர். தமிழ்நாட்டைப் பாரீர்! என்று பல மாநிலத்தவர்களும் பெருமையுடன் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் தன்மான இயக்கமே!

அதற்கு ஒருவர் கடைக்கால் போட்டார் என்றால் அது என்ன சாதாரணமா! இன்றளவுக்கும்கூட பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத் தலைவர்களை நினைக்கும் தொறும், நினைக்கும் தொறும் நரநர வென்று பற்களைக் கடிக்கின்றனர் - ஆத்திரத்தின் உச்சியில் குடியேறி அனல் கக்குகின்றனர் என்றால் அதற்குக் காரணம் என்ன? பார்ப்பனர்களின் ஏக போகத்தில் இருந்த ஆதிக்கம் அனைத்தையும் பறிமுதல் செய்து, சகல மக்களுக்கும் விநியோகம் செய்த சமதர்ம நோக் குடைய சீலர் இவர்!

அனுபவித்தவர்கள் அல்லவா? ஆத்திரப்படத்தான் செய்வார்கள். அதே நேரத்தில் அவர்களின் உழைப்பால் நலன் பல பெற்று வளமுடன் வாழ்வை நடத்தும் நம் மக்களின் நிலை என்ன? மனப்பான்மை என்ன?

அந்த மாபெரும் தலைவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோமா? எந்தக் கொள்கை நம்மை மேலே உயர்த்தியதோ, அந்தக் கொள்கையை நினைத்துப் பார்க்கிறோமா? அந்தக் கொள்கைகளைப் பெரும் பாலான தமிழர்கள் கடைப்பிடிக்கின்றனரா? தங்கள் வாரிசுகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனரா?

அதே நேரத்தில் நம் இன எதிரிகளின் சிந்தனைகள் எப்படி இருக்கின்றன? அவர்கள் எதை நோக்கிக் கவண் வீசுகிறார்கள் என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

நண்பன் யார்? பகைவன் யார்? என்பதைக்கூட அடையாளம் கண்டு, விழிப்போடு இல்லாவிட்டால் மீண்டும் ஆதிக்கவாதிகள் குதிரை சவாரி செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!

இன்னும் ஜாதி ஒழிந்துவிடவில்லை; இன்னும் நமக்குள் விகிதாசார உரிமைகள் வந்து சேரவில்லை. இன்னும் மொழி இனப் பண்பாட்டு அடையாளங்கள் மீது எதிர் பண்பாடு சவாரி செய்து கொண்டு தானிருக்கிறது.

இவற்றை எல்லாம் நம்மை வாழ வைத்த தலைவர்களின் பிறந்த நாளில் - நினைவு நாளில் ஒருமுறை அசைப் போட்டுப் பார்க்க வேண்டாமா? சூளுரைகளை மேற்கொள்ள வேண்டாமா?

பார்ப்பனர்களைப் பார்த்தாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?

வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளில் இனவுணர்வைக் கூர் தீட்டிக் கொள்வோம். பெற வேண்டிய உரிமைகளை மீட்டெடுக்க உறுதி கொள்வோம். வாழ்க தியாகராயர்!

வாழ்க தந்தை பெரியார்!! 27-4-2012

தமிழ் ஓவியா said...

மோட்சம் வேண்டுமா?

இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?

இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.

அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள், அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா? அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே. ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்துகிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?

பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே. அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே: கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத்திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா? - வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

தமிழ் ஓவியா said...

கேள்வி - பதில்


கேள்வி: வேங்கடாசலபதி எழுதியதாகக் கடிதம் எழுதி 10 பேர், 20 பேருக்கு அனுப்பச் சொல்கிறார் களே! அப்படி எழுதினால் பலன் உண்டா?

பதில்: வேங்கடாசலபதிக்கு இப்படிக் கடிதம் எழுதிப் பக்தர்களைத் தேடிக் கொள்ள வேண்டியது அவசியமில்லை. இப்படி நாம் கடிதங்கள் எழுதுவது, ஏழு மலையானுக்கு ஏற்படுத்தும் இழுக்கு. கடிதங்கள் எழுதாவிட்டால் ஆபத்து வரும் என்று எழுதிவிட்டு கீழே வேங்கடாசலபதி என்று டைப் பண்ணு கிறார்கள். துயரங்களையும், தொல்லைகளையும் தீர்ப்பவரா இம்மாதிரி பயமுறுத்தி எழுதுவார்?

நன்றி: கல்கி 18.10.1981

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!


டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம். இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம். - இரவீந்திரநாத் தாகூர்

தமிழ் ஓவியா said...

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கவனத்துக்கு...!


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தருமபுரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தனியீழம் குறித்துப் பேச தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குத் தகுதியில்லை என்று பேசியுள்ளார். - (தினமணி, 26.4.2012)

இது உண்மையானால், பெரிதும் வருந்தத்தக்கதே! தனியீழம் பற்றிப் பேசுவதற்கு யாரும் தனி உரிமை - காப்புரிமை கொண்டாட முடியாது.

பிரச்சினையின்மீது அக்கறையும், கவலையும் உடையவர்கள் - தனியீழத்துக்காகக் குரல் கொடுக்க யார் முன்வந்தாலும் - அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரவேற்க முன்வரவேண்டும்!

அதை விட்டுவிட்டு, நேற்று என்ன சொன்னாய்? அதற்கு முதல் நாள் என்ன சொன்னாய்? என்றெல்லாம் பேச ஆரம்பிப்பது - எடுத்துக்கொண்ட பிரச்சினையைப் பலகீனப்படுத்தத்தான் அது உதவும்- எதிரிகளுக்குக் கொண்டாட்டமாகவும் முடியும். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் என்ன என்னவெல்லாம் பேசினார்கள் என்று பட்டியல் போட ஆரம்பித்தால் பலரின் முகவரிகள் காணாமலே போய் விடும். அது இப்பொழுது தேவையா?

தனியீழம்பற்றி இன்றைய முதலமைச்சர் என்ன சொன்னார்? பிரபாகரன்பற்றி அவர் கூறியது என்ன?

யுத்தம் ஒன்று நடந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அன்று என்ன சொன்னார்? என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், முதலமைச்சராக இருக்கும் நிலையில் சொல்லும் தற்போதையை கருத்தின் வலிமையைச் சிதைப்பது ஆகாதா? அதையும் எவரும் செய்யக் கூடாது - வந்தவரை லாபம் - பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே கருதவேண்டும் - பொது இலட்சிய நோக்கோடு!

கலைஞர் அவர்கள் தனியீழம் குறித்து இப்பொழுதுதான் முதன்முதலாகப் பேசுகிறாரா? எழுதுகிறாரா?

டெசோவை மீண்டும் தொடங்குவோம் என்று கூறுகிறார் கலைஞர் அவர்கள்; அப்படித் தொடங்கு வதற்கு வைகோ அவர்களைக் கேட்டு அனுமதி பெற வேண்டுமா, என்ன?

எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனைப் பொருட் படுத்தாமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்த ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகம் தொடர்ந்து கூறிவரும் ஆழமான கருத்தாகும்.

பிரச்சினைமீது கவலை உள்ள எவரும் இப்படித்தான் சிந்திப்பார்கள் - முடிவெடுப்பார்கள்.

விவாதத்துக்காக என்று வைத்துக்கொண்டாலும் கூட நேற்று மாறுபட்டவர்கள், இன்று ஏற்றுக் கொள்வார்களேயானால், அதனை வரவேற்பதுதான் புத்திசாலித்தனமும், பொறுப்புணர்வும், பிரச்சினைமீது கவலையும், அக்கறையும் உள்ள செயலாகக் கருதப்பட முடியும்.

தமிழர்கள் ஒன்று சேர்ந்து அடிப்படைப் பிரச்சினை யில் குரல் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனைக்கு ஊறுவிளைவிக்க வேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!

உலகத் தமிழர்கள் மதிமுக பொதுச் செயலாளரின் இந்தக் கருத்தை - நிலைப்பாட்டை ஏற்க மாட்டார்கள் என்பதில் அய்யமில்லை.

என்ன சொன்னாலும் தனியீழம்பற்றி கலைஞர் பேசத் தகுதியில்லை என்பதில் வைகோ அவர்கள் உறுதியாக இருப்பாரேயானால் கீழ்க்கண்ட முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கும்.

ஈழத் தமிழர்கள் பற்றியும், விடுதலைப்புலிகள் பற்றிப் பேசியதற்காகவும், அந்த மேடையில் இருந்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டபொழுது வைகோ போன்ற வர்களை வெளியில் கொண்டு வருவதற்காகத் தள்ளாத வயதிலும் நீதிமன்ற வாயிலிலும், சிறை வாசலிலும் கடும் வெயிலில் நின்றாரே - வெளியில் கொண்டு வர பல வகைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டாரே - விடுதலை ஆன நிலையிலும் போடப்பட்ட வாய்ப்பூட்டு களை ஆட்சிக்கு வந்த நிலையில் உடைத்தாரே இவையெல்லாம் தகுதி குறைவுதான் கலைஞர் அவர்களுக்கு என திரு வைகோ அவர்கள் நினைத்தால் நாம் என்னதான் செய்ய முடியும்? இந்தக் கருத்தைச் சொன்னதற்காக பிற்காலத்தில் வைகோ அவர்கள் வருந்துவார் என்பதில் அய்யமில்லை.

கலி. பூங்குன்றன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

சென்னை 27.4.2012

Unknown said...

கி வீரமணி தமிழர் தலைவர் இல்லை. திராவிட தலைவர் திரும்ப திரும்ப கி வீரம் இல்லாத மணியை தமிழர் தலைவர் என்று அழைக்க வேண்டாம்

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் உண்மை முகம்!


பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவராக பங்காரு லட்சுமணன் 2001 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இருந்தார்.

அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுத நிறுவனம் ஒன்றின் பெயரால் இராணுவத் துக்கு எதிராகப் போலி ஆயுதப் பேர ஒத்திகை ஒன்றினை தெகல்கா இணையதளம் நடத்தியது.

தெர்மல் பைனாக்குலர் என்ற பொருளை இந்திய இராணுவத்துக்கு வாங்கிட சம்பந்தப்பட்ட பிஜேபி தலைவர் பங்காரு லட்சுமணன் பரிந்துரை செய்ய வேண்டும் - அதற்காக இலஞ்சமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கையில் வாங்கி மேசையின் அறையில் வைக்கப்பட்டது இரகசியமாகப் படம் பிடிக்கப்பட்டது (5.1.2001).

பிறகு தெகல்கா அதனை ஒளியும் பரப்பியது. மற்ற மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் அதனை சாங்கோ பாங்கமாக வெளியிட்டு, பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதன் காரணமாக பங்காரு லட்சுமணன் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும்படி நேர்ந்தது. இலஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவு 9இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது பதினொரு ஆண்டு காலமாக இந்த வழக்கு சி.பி.அய். நீதிமன்றத்தில் நடைபெற்றது.

பி.ஜே.பி. தலைவர் பங்காரு லட்சுமணன் செய்த குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்பட்டது என்று கூறி நீதிபதி கன்வல் ஜீத் அரோரா பங்காரு லட்சுமண னுக்கு 4 ஆண்டு சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். இப்பொழுது திகார் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளார்.

இதன் மூலம் பி.ஜே.பி. என்பது நேர்மையான அரசியல் கட்சி; தார்மீகப் பண்பாடுகளைக் கொண்டது என்று பறைசாற்றப்பட்டதெல்லாம் அக்மார்க் பொய் என்பது அம்பலமாகி விட்டது.

இந்தத் தீர்ப்புக் குறித்து பிஜேபியின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டு இருப்பது மிகப் பெரிய நகைச்சுவையே. அது தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று; பி.ஜே.பி.க்கும் அந்த இலஞ்சத்துக்கும் சம்பந்தமில்லை என்று மிக சாமர்த்தியமாகச் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் ஒன்றை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். 11 ஆண்டுகளுக்கு முன் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் என்ன கூறினார்? கட்சிக்காக நன்கொடையாக அந்தப் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது என்று கூற வில்லையா?

ஆக கட்சிக்காக ஆயுத பேர ஊழல் நடந்தது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடவில்லையா?

உண்மை இவ்வாறு இருக்க பங்காரு லட்சுமணன் இலஞ்சம் பெற்றதை கட்சியைச் சம்பந்தப்படுத்திப் பார்க்கக் கூடாது என்பது - பங்காரு லட்சுமணன் பெற்ற இலஞ்சத்தைவிட மிக மோசமான ஒழுக்கமற்ற கருத்தாகும். இதன் மூலம் பி.ஜே.பி. என்பது, அவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்தைப் போல ஒழுக்கமற்றது ஆபாசமானது என்பது விளங்கவில்லையா?

நமக்குள்ள வருத்தம் என்ன என்றால், பிஜேபியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந் தவர் பலி கொடுக்கப்பட்டுள்ளாரே என்பதுதான்; வெறும் ஒரு லட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றதற் காக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் 4 ஆண்டுத் தண்டனை பெற்றுள்ளார்.

இதைவிட பிஜேபியில் பெருங் கொள்ளை அடித்தவர்கள், பெருங்குற்றங்கள் செய்தவர்கள் எல்லாம் எந்தவிதத் தண்டனைக்கும் ஆட்படாமல் சுதந்திரமாக ராஜ நடைபோட்டுத் திரிந்து கொண்டுள்ளார்களே - என்பதுதான் நமது வேதனை.
குற்றங்களை யார் செய்தாலும் அது தவறுதான் - தண்டனை அளிக்கப்பட வேண்டும்தான். அதே நேரத்தில் பெரிய பெரிய குற்றங்களைச் செய்த வர்கள் தப்பித்துக் கொள்கிறார்களே. அது ஏன் என்பதுதான் நமது நியாயமான கேள்வியாகும். 30-4-2012

தமிழ் ஓவியா said...

எல்லாம் அவன் செயல் கோவில் அர்ச்சகருக்குப் பன்றிக் காய்ச்சல்



திருவொற்றியூர், ஏப். 30- திருவொற்றியூர் காலடிப்பேட்டை வடக்கு பிரகார தெரு வில் வசித்து வருபவர் ரங்கநாதன் (வயது 40). ஜோதிடரான இவர் மணலி சின்ன சேக்காடு பகுதியில் உள்ள ராமர் கோவிலில் அர்ச்சக ராகவும் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவ ருக்கு காய்ச்சல் ஏற்பட் டது. இதையடுத்து திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட ரங்க நாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாக வில்லை. இதனால் தண் டையார் பேட்டையில் உள்ள காலரா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட அர்ச்சகர் ரங்க நாதனுக்கு ரத்தம் எடுக் கப்பட்டு கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடி யூட்டிற்கு பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் ரங்கநாதனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. கிண்டி இன்ஸ்டிடியூட் டில் இருந்து நேற்று இரவு இந்த தகவலை ரங்கநாதனிடம் தொலை பேசியில் தெரிவித்தனர். இதனால் பயந்து போன அவர் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக தண்டையார் பேட்டை காலரா மருத்துவமனை யில் விரைந்து சென்றார். ஆனால் மருத்துவமனை ஊழி யர்கள், காலரா மருத்துவமனையில் இடம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி யுள்ளனர். சின்னம்மை நோயினால் பாதிக்கப் பட்ட பலர் இங்கு அனு மதிக்கப்பட்டுள்ளனர். போதிய இட வசதி இல்லை. எனவே ஸ்டான்லி மருத்துவ மனை, அல்லது அரசு மருத்துவமனையில் போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றத் துடன் வீடு திரும்பிய ரங்கநாதன் இன்று மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார். ரங்கநாதனுடன் சேர்த்து சென்னையில் இதுவரை 52 பேர் பன்றிக்காய்ச் சலுக்கு பாதிக்கப்பட் டுள்ளனர். தமிழகம் முழுவதும் 108 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். வேக மாக பரவும் பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் தீவிர நோய் தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர் கள், செவிலியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப் பூசி போடப்பட்டது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் முகாம்கள் அமைக்கப் பட்டு காய்ச்சல் அறிகுறி யுடன் வருபவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப் பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சலை தடுக்க அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு டாமி ப்ளு மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.