Search This Blog

12.4.12

தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அறிவிலிகளா?பேராசை பிடித்த அயோக்கியர்களா?


ஜாதி அல்லது வகுப்புரிமை! பெரியார்


நம் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அறிவிலிகளா? அல்லது பேராசை பிடித்த அயோக்கியர்களா? என்பது நம் மக்களுக்கு விளங்கவில்லை.
இன்றைய நம் நாட்டு அரசியல் - இந்தப் பார்ப்பனர்களின் தொல்லையாலும், நேர்மைக் கேடான கலவரத்தாலும் - வகுப்புக் கலவரத்தையும், வகுப்பு ஆதிக்கத்தையுமே அடிப்படையாகக் கொண்டதாக ஆகிவிட்டதுடன், இந்த நிலை வெகு சீக்கிரத்தில் பலாத்காரத்தைக் கிளப்பிவிட்டு அராஜகத்திற்கு வழிகோலுவதற்கு ஏதுவாக இருந்தும் வளர்ந்தும் வருகிறது. இதற்கு ஏற்பவே இந்நாட்டின் சங்கராச்சாரியார்கள், வெறும் ஆச்சாரியர்கள், அய்யர்கள், அய்யங்கார்கள், அய்யர்களின், அய்யங்கார்களின் பத்திரிகைகள் - ஆகியவர்கள் கட்டுப்பாடாக இதே தொண்டைத் தங்கள் வேத தர்மமாகக் கொண்டு செய்து வருகின்றனர்.

வகுப்பு உரிமை கேட்பதையும், வகுப்பு நியாயம் வழங்குவதையும், பஞ்சமாப் பாதகமாகக் கருதி, வெறிக் கூச்சல் போட்டுத் தமிழ் மக்களுக்கு ஆத்திரத்தையும், உயிருக்குத் துணியும்படியான அளவுமான உணர்ச்சியையும் ஊட்டி வருகிறார்கள்.

எலெக்ஷன் நெருங்க நெருங்கப் பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் பேயாட்டம் ஆடத் துணிந்து விட்டனர். இருக்கும் நிலைமையில் தேர்தலுக்குள் இரு தரப்பிலும் பல என்றில்லாவிட்டாலும், சில கொலைகளாவது விழுந்து தீரும் என்றே பயப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு வெறியாட்டம் ஆடினாலும், இன்று இந்தத் தமிழ்நாட்டில் என் ஒருவனைத் தவிர கேள்வி கேட்பாட்டிற்கே இடமில்லாமல் இருப்பதால், அவர்கள் கண்களுக்கு நான் ஒருவனே எதிரியாய்க் காணப்படுகிறேன். ஆனால், மற்றவர்கள் வாயைத் திறந்தாலே பார்ப்பனர்கள் இடி முழக்கக் கூச்சல் போட்டு அவர்களை (மற்றவர்களை) அடக்கப் பாடுபட்டு அடக்கி விடுகிறார்கள்.
பார்ப்பனர்கள் "மனு" கொள்கைப்படித் தங்கள் சுக வாழ்வுக்கும், ஆதிக்கத்திற்கும் ஒரு சிறு கேடும் இல்லாமல் என்ன காரியம் செய்தாவது பாதுகாத்துக் கொள்ளவும், மற்றவர்களான தமிழர்களைத் தலை எடுக்க முடியாமல் அழுத்தவும், அவர்கள் (பார்ப்பனர்கள்) பயன்படுத்தும் ஆயுதம் (வஜ்ஜிராயுதம்) "வகுப்புவாதம்" - என்று கூறி நம் மீது எய்யும் ஆயுதமே - ஆகும். இதை யார் மீதும், நமது எந்தப் பிரச்சினை மீதும் எய்து விடுகிறார்கள். இந்த ஆயுதத்திற்கு என்னைத் தவிர இந்த நாட்டிலுள்ள எல்லோருமே பயப்படுகிறார்கள். இந்த ஆயுதம் என்னைத் தவிர வேறு எவன் மீது பட்டாலும் அவனைக் கொன்றுவிடுகிறது; அல்லது மூர்ச்சை (சரணாகதி) அடையச் செய்து விடுகிறது. "வகுப்புவாதி"களை ஒழிப்பதும், "வகுப்புவாதியாய்" இல்லாதவனை ஆதரிப்பதும், தூக்கி விடுவதும் பார்ப்பான் தனது தர்மமாகக் கொண்டிருப்பதால், வாழ வேண்டிய தமிழன் எல்லோரும் (அதாவது தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எல்லாத் தமிழர்களுமே) அந்த ஆயுதத்திற்கு நடுங்குகிறார்கள்.

இதனாலேயே பார்ப்பான் இன்று இவ்வளவு உச்சநிலைக்கு ஏறிவிட்டான். இந்த நாட்டையும் பார்ப்பானையும் எடுத்துக் கொண்டால், இந்த நாட்டைப் பற்றி ஒரு முஸ்லிமுக்கு உள்ள உரிமையைவிட, ஒரு கிறிஸ்தவனுக்கு உள்ள உரிமையைவிட ஒரு கடுகு அளவு உரிமையாவது அவனுக்கு (பார்ப்பானுக்கு) அதிகமுண்டு என்று யாராவது சொல்ல முடியுமா? என்ற பந்தயம் கட்டிக் கேட்கின்றேன்.

முஸ்லிம் 100-க்கு 5-பேர் இருப்பான். கிறிஸ்தவன் 100-க்கு 3-பேர் இருப்பான். இதில் முஸ்லிமும், கிறிஸ்தவர்களும் பரம்பரைத் தலைமுறைத் தத்துவத்தில் இந்த நாட்டு மக்கள். பார்ப்பான் அந்நிய நாட்டுப் பரம்பரை மகன் என்பதை வலியுறுத்திக் கூறுவேன். முஸ்லிமும், கிறிஸ்தவர்களும் இந்த நாட்டுத் தமிழ் மகனை - அறிவிலும், ஆற்றலிலும், தகுதியிலும், திறமையிலும் தங்களுக்குச் சரி சமமாகக் கருதிச் சம மரியாதையாய் நடத்துகிறவர்கள் ஆவார்கள்.
ஆனால் இந்த 100-க்கு இரண்டே முக்கால் வீதம் உள்ள பார்ப்பனன், மற்றத் தொண்ணூற்று ஏரே கால் விகிதம் அதிகம் உள்ள மக்களாகிய நம்மை, எப்படி நடத்துகிறான் என்பதைப் பற்றி இந்த நாட்டுத் தமிழன் (திராவிடன்) மான உணர்ச்சிக் கண் கொண்டு பார்க்காத ஒரே ஈனத் தன்மையால், ஈனப் பிறவியாகவே கருதி - தகுதி, திறமையில், பிறவியில் தன்னைவிடக் கீழான இழி மகன் என்றே கருதுகிறான். கருதுவதோடு அல்லாமல் தனக்கு இப்படிக் கருதும், நடத்தும் இந்த நிலை - உரிமை என்றே கருதி அந்த இழிவை நம் தலையில் துணிவோடு சுமத்தித் தன் நிலையை உயர்த்திக் கொண்டு இருக்கிறான். அதற்கேற்ற கடவுள், மதம், சமுதாய அமைப்பு, அரசியல் ஆகியவற்றில் ஆதிக்கம் ஆகியவற்றில் ஆதிக்கம் ஆகியவைகளையும் உண்டு பண்ணிக் கொண்டு தைரியமாய் இந்நாட்டில் இந்த 1961-லும் உலவுகிறான் (தமிழ்நாட்டில்)
இதற்குத் தமிழன் இடம் கொடுத்ததுதான் காரணமே! எதற்கெடுத்தாலும் தமிழனைப் பார்ப்பான் "வகுப்புவாதி", "பிற்போக்காளன்" என்கிறான். அரசியலில் தமிழன் (நாம்) எந்தப் பதவிக்கு ஆசைப்பட்டாலும் "அதற்கு ஏற்ற தகுதி, திறமை உனக்கு இல்லை" என்கிறான்.

நாம் வகுப்பு உரிமை கேட்கிறோமா? வகுப்புவாதம் செய்கிறோமா? நமக்கு உள்ள உரிமையைத்தானே கேட்கிறோம்? இதற்கு ஆகப் பார்ப்பான் நம்மை வகுப்புவாதி என்கிறான் என்றால், இப்படி நம்மை இவன் சொல்லுவதாலேயே இவன் (பார்ப்பான்) வேறு வகுப்பு - நாம் வேறு வகுப்பு என்பதை அவனே ஒப்புக் கொண்டவன் ஆகிறானா இல்லையா? இந்த நிலையில், வகுப்பு உரிமை கேட்பதை, "வகுப்புவாதம்" என்றே சொல்வதானாலும், அது எப்படித் தவறாகும்?
"வகுப்புவாதம்" பேசுவதாகக் கருதப்படுகிறவன் தனது ஜாதியைச் சொல்லிச் ஜாதி எண்ணிக்கைக்கு ஏற்ப 100-க்கு 97-வீதம்தான் பதவி - உத்தியோகம் ஆகியவற்றில் ஜாதி உரிமை, ஜாதி நீதி கேட்கிறான் என்பதோடு சிறுபான்மையோன் ஆன பார்ப்பானுக்கும் 100-க்கு 3-க்கு குறையாமல் எடுத்துக் கொள்ளவும் சம்மதிக்கிறானே ஒழிய, இதற்கு விரோதமாகப் பேசுகிறானா; நடக்கிறானா? என்று கேட்கிறேன். அப்படிப் பேசினால் நடந்தால் - அதுதானே வகுப்புவாதமாகும்? உரிமையை - நேர்மையை - நீதியை விரும்புவது வகுப்புவாதமானால், அதை வகுப்புவாதம் என்று ஒரு பார்ப்பான் சொன்னால், அதைத் தமிழன் - மனுதர்மத்தில் சொல்லப்படுவதுபோல் - ஆயுதம் கொண்டு போர் நடத்தியாவது அவனை ஒழித்துக் கட்டி - உரிமையை, நேர்மையை நிலை நிறுத்த வேண்டியதுதானே சுயமரியாதைத் தர்மம் (கடமை) ஆகும்? கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் விகிதாசாரம் கொடு என்று கேட்பது வகுப்புவாதம் ஆனால் விகிதத்துக்கு மேல் அனுபவிப்பது என்ன வாதம் ஆகும்? அது வகுப்புத் திருட்டு, வகுப்புக் குற்றம், வகுப்பு அயோக்கியத்தனம் தானே ஆகும்?

இந்தத் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழ் மகனின் இந்நாட்டு ஆட்சியை - பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்டு வந்த தமிழ் மகனை - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்நாட்டில் தன் உடலுழைப்பால் இந்நாட்டையே இந்நிலைக்கு அமைத்து, இந்நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலியவற்றை உற்பத்தி செய்து மக்களுக்கு அளித்த தமிழ் மகனை - 'இந்நாட்டு ஆட்சி அமைப்பில் தன் விகித உரிமை தனக்கு வேண்டும்' என்று அவன் கேட்பது வகுப்பு வாதம் என்றால், இந்நாட்டில் அந்நியனின் வகுப்பு ஆதிக்கம் எவ்வளவு உச்சநிலைக்குப் போய்விட்டது? இந்நாட்டு மக்களின் நிலை எவ்வளவு கீழ்நிலைக்குப் போய்விட்டது என்பதைக் காட்டும் அறிகுறிதானே அது?
நான் இன்று பார்ப்பானை நேரிடையாகவே ஒரு கேள்வி கேட்கிறேன்.
ஓ பார்ப்பானே! தமிழ்நாட்டில் உனக்கு ஏது பங்கு? இந்நாட்டில் உனக்கு உரிமை ஏது? உனக்கு இந்நாட்டில் பிச்சை எடுக்கும் உரிமைதானே உண்டு? நீ பிச்சைக்காரன்தானே! அதிலும் உழைப்பு இல்லாமல் வாழும் சோம்பேறி பிச்சைக்காரன்தானே! இதுதானே உனது ஜாதி தர்மம்?

ஒரு வயலில் தானியம் விளைவித்து அறுப்பு அறுத்துக் களத்தில் போட்டு அடித்துத் தூற்றிக் குவித்தால் அந்தப் பண்டம் யார் யாருக்கு உரிமை?
நிலத்தைக் காடுவெட்டிப் பக்குவப்படுத்திய அல்லது அதைப் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொடுத்து வாங்கிய நிலச் சொந்தக்காரனுக்கு உரிமை - உழுது தண்ணீர்ப் பாய்ச்சிய உடல் உழைப்பாளிக்கு உரிமை - அவ்வளவுதானே! பயிரின் கதிரை அடிக்கும் போது பக்கத்தில் வந்து நிற்கும் பாடுபடாத சோம்பேறிப் பிச்சைக்காரனுக்கு அதிக உரிமை உண்டோ? அப்படிப்பட்டவனுக்குப் "பிச்சைக்கு உரிமை உண்டு" என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப் பிச்சைகூடப் பொருளை உடையவனது இஷ்டத்தைப் பொறுத்தது. அவனாகப் பார்த்து ஏதோ பிச்சை போடலாம். அதிலும் பொருள் உடையவன் புத்திசாலியாய் இருந்தால் "பிச்சை கொடுப்பது நாட்டில் சோம்பேறிப் பசங்களுக்கு உழைக்காமல் வயிறு வளர்க்க ஊக்கம் ஊட்டுவதாகும். ஆதலால் இவனைக் கழுத்தைப் பிடித்து வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டு வா என்று சொல்ல வேண்டியதுதான் தர்மமாகும். அதுபோலத் தானே இந்தப் பார்ப்பான்?

நாட்டு அமைப்புக்கு, நாட்டு வளத்திற்கு, இந்தப் பார்ப்பான் செய்த காரிமென்ன? "பிறவியில் உயர்ந்தவன்" என்கின்ற ஓர் அயோக்கியத்தனமானதும் பித்தலாட்டமானதுமான உரிமை கொண்டாடி மக்களை ஏய்த்து நேர்மை கெட்ட தன்மையில் ஆதிக்கம் பெற்று மக்களை ஏய்த்துப் பிழைக்கிறான் என்பதைத் தவிர இந்தப் பார்ப்பானுக்கு இந்தத் தமிழ்நாட்டில் என்ன உரிமை உண்டு? யாராவது சொல்லட்டுமே - ஆதாரம் காட்டட்டுமே பார்க்கிறேன்!

இந்தப் பார்ப்பான் தன் வாயாலேயே தன்னை அந்நியன் என்பதாக அதாவது தான் வேறு ஜாதி - வேறு பிறவி என்று சொல்லிக் கொள்ளுகிறான். தனது நாடும் வேறு நாடு என்கிறான். இந்த நம் நாட்டைப் பற்றி, இந்த நம் ஜாதி - பிறப்பைப் பற்றி, நாட்டு உரிமை, ஜாதி உரிமை பற்றித் தனக்கு எந்தவிதமான கவலையும் இல்லாமல், இதை அடிமை நாடாகவும், இந்த நம் ஜாதி மக்களை அடிமை மக்களாகவும் நடத்துவதுதான் தன் ஜாதி - பிறவியின் கடமை என்கிறான்! அதற்குச் சட்டம் - சாஸ்திரம் காட்டுகிறான். இந்த நம் நாட்டு ஆட்சி உரிமையைப் பற்றித் தனக்குச் சிறிதுகூடக் கவலை இல்லை என்பதைத் தைரியமாகக் காட்டிக் கொள்வதற்கு வெட்கப்படாமல் இந்த நாட்டு நீதி, நிருவாகப் பதவிகள், இந்நாட்டு மக்களுக்குச் சிறிய உத்தியோகம் கொடுக்கும் அதிகாரம் (பப்ளிக் சர்வீஸ் கமிஷன்), ஆதிக்கம் ஆகிய உரிமைகள் எவையும் இந்நாட்டு (மாநில) ஆட்நி உரிமையாக இருக்கக் கூடாது என்கிறான். தன் ஜாதியைத் தவிர மற்ற இந்த நாட்டான் எவனுக்கும் படிப்பே கூடாது; பதவி கூடாது; மனிதத்தன்மை, மரியாதை கூடாது என்று வெளிப்படையாகவே முயற்சி செய்வதோடு பச்சை அயோக்கியத்தனமாக நமக்கு, வகுப்புரிமைக்கு - வகுப்பு நீதிக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை என்கிறான். இவற்றைக் கேட்பதையே வகுப்புவாதம் - மாபாதகம் என்கிறான். எந்த நிலையில் இந்தப்படி சொல்லுகிறான் என்பதைப் பொதுமக்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
இந்த நாட்டில் நம் திராவிட இன ஜாதியைச் சேர்ந்தவர்கள், இந்தப் பார்ப்பனர்களால், "நம் ஜாதியைவிடக் கீழான 5-ஆவது ஜாதி" என்று கூறப்படும் "பார்க்கக் கூடாதவர்கள்; தொடப்படக் கூடாதவர்கள்" 100-க்கு 5- பேர்கள்கூட படித்தவர்களாக - ஆக்கப்படக் கூடாதவர்களாகவும் நடத்தப்பட்டு வந்தவர்கள், கடை மிருகங்களின் உரிமை கூட அளிக்கப்படாமல் காட்டுமிராண்டிகளாக - இருத்தப்பட்டு வந்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இன்று - இன்றல்ல - 15-ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்நாட்டு அரசியலில் வகுப்பு உரிமை வகுப்பு விகித எண்ணிக்கைப்படி அடையும்படியான தன்மையை வலுவில் அளித்திருக்கும் நிலைமையிலும் இந்தப் பார்ப்பனர் நாம் கேட்கும் விகிதாச்சாரத்திற்கும் உள்பட்ட உரிமையை, "வகுப்புவாதம் இது - எல்லாப் பாதகங்களையும்விடக் கொடுமையான மாபாதகம். இதை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். நாம் வகுப்புரிமை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் - நமக்குப் பதவி எப்போதோ - எந்தக் கீழான நிலைமையிலோ கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மண்டை அடி அடித்துச் சித்திரவதைச் செய்வதைப் போல், 'நமக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை' என்று சொல்லி இழிவு படுத்துகின்ற கொடுமையும், தொல்லையும் விளைவிக்கின்றனர் என்றால், இவர்களை நம் தமிழ்நாட்டில் நாம் வைத்துக் கொண்டிருப்பது, வாழ விட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு நமது கோழைத்தையும், இழிவுத் தன்மையையும் காட்டுகிறது என்பதைச் சுதந்திரா கட்சி முதல் மற்ற எல்லாக் கட்சியில் இருக்கும் தமிழ் மக்களையும் வணக்கமாகக் கேட்கிறேன்.

உத்தியோகம், பதவி என்பது இந்நாட்டு மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் ஆயுதங்கள் ஆகும். நல்ல சம்பளம் பெறுவதுடன் ஆதிக்கம் செலுத்துவதோடு, ஒரு தாழ்ந்த உத்தியோகத்தில் இருப்பவனும், இந்நாட்டு சராசரி மக்கள் வாழ்வைவிட இரண்டு பங்கு, மூன்று பங்கு, சில நூறு பங்கு, இரு நூறு பங்கு உயர்ந்த வாழ்வும், அந்தஸ்தும் உடைய தன்மை உடையதாகும். அதிலும் இவை பெரிதும் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாக ஆகிவிட்டதால் 100-க்கு 90-மக்களுக்கு எஜமான் ஸ்தாபனமாகவே ஆகிவிட்டன. இந்தப் பார்ப்பனர்களின் - இப்படிப்பட்ட பதவிகள் - அயோக்கியத்தனமான முயற்சியால் நமக்குக் கிடைக்காதபடி, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., எல்லாரும் வெள்ளையன் காலத்தில் சீமைக்குப் போனதுபோல் இன்று ஆரிய ஸ்தாபனமான டெல்லிக்குப் போய்விட்டன. தலைமை சுப்ரீம் கோர்ட் நாம் நெருங்க முடியாதபடி டெல்லிக்குப் போய்விட்டது. சட்டசபை மெம்பர் (உறுப்பினர்) மந்திரி நியமனம் டெல்லி தயவில் இருக்கின்றன. பொதுக் கல்வி தொழில் துறைக் கல்வி டெல்லி ஆதிக்கத்துக்குப் போக வேண்டும் என்கிறான் (பார்ப்பான்) பப்ளிக் சர்வீஸ் (அரசு அலுவலர் தேர்வாணைக் குழு) கமிஷன் நியமனம் - இரயில்வே, தபால், கங்கம் முதலிய இலாகாக்களின் பப்ளீக் சர்வீஸ் கமிஷன் - டெல்லி ஆதிக்கத்தில் இருப்பதாலேயே இந்த இலகாக்கள் பெரிய பார்ப்பன அக்கிரகாரமாகவே இருந்து கொண்டு, பியூன்கள் கீழ்த்தர வேலை ஆகியவை மட்டும் 100-க்கு 100-தமிழனுக்கு ஆகவே இருந்து இழிவுபடுத்தி வருகிறது.

உடலால் உழைத்துச் சாப்பாட்டுக்கும் போதாமல் திண்டாடும் வேலைகள் யாவும் நமக்கு; உழைப்பில்லாமல் கொள்ளை அடித்துச் சுகபோக வாழ்வு வாழும் பதவி அத்தனையும் அந்நியனான - தனக்கு - பார்ப்பானுக்குத்தான் இருக்க வேண்டுமானால், நாம் ஜனநாயகத்திலோ, சுயராஜ்ஜியத்திலோ இருக்கிறோம் என்று - பார்ப்பான் வைப்பாட்டி மகனாய் இல்லாமல் சுயமரியாதைத் தமிழ் மகனாக இருக்கும் யார் தான் சொல்ல முடியும்?

நம் தமிழ் நாட்டின் இழிநிலைமையானது (நம் தமிழ் இனத்தின் மானங்கெட்ட தன்மையானது, தமிழ்நாட்டில் - தமிழ்நாட்டு ஆட்சியில் உள்ள அரசியல் சம்பந்தப்பட்ட, அரசியல் ஆதிக்கத்திற்கு உள்பட்ட எல்லா ஸ்தாபனங்களிலும் வகுப்புரிமை, வகுப்பு விகிதப்படி இருக்க வேண்டும் என்கின்றதில் மானம் - இலட்சியம் திராவிடர் கழகத்தைவிட வேறு எந்த அரசியல் - சமுதாய - கட்சிக்கும் ஸ்தாபனத்திற்கும் இல்லாமல் இருப்பதற்கு அறிகுறியாகும்.
ஆகவே, நாம் பார்ப்பனர்களால் கூறப்பட்டு நம்மை இழிவு படுத்தப்படும் 'வகுப்பு வாதம்' என்னும் ஜாதி உரிமை வாதமானது, எல்லா சுத்தத் தமிழனுக்கும், பிறப்புரிமை என்று சொல்லுவதோடு அது இல்லாதவன் சரியான பிறப்புக்காரனாக இருக்க முடியாது என்றே சொல்லுவேன்.

குறிப்பு: அரசியல் மைனாரெட்டி வகுப்பு பாதுகாப்பு என்பது அரசியல் சம்பந்தப்பட்ட அதாவது படிப்பிலும் - உத்தியோகம், பதவி ஆகியவற்றிலும் யார் குறைந்த விகித எண்ணிக்கை உடைய மக்களாக - வகுப்பாக - ஜாதியாக இருக்கிறார்களோ அவர்களைத்தான் மைனாரெட்டி வகுப்பு என்று கூறவேண்டும் என்பதுடன், இந்த மைனாரெட்டிக்குத் தான் பாதுகாப்பும், சலுகையும் அளிக்க வேண்டும் என்றும் சொல்வேன்.
வகுப்புரிமைவாதி,
ஈ.வெ.ராமசாமி

-----------------------------13.01.1961- 'விடுதலை' நாளிதழில் பெரியார் ஈ.வெ.ரா தலையங்கம். ”விடுதலை” 13.01.1961

3 comments:

தமிழ் ஓவியா said...

சொற்பொழிவாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் தந்தை பெரியார் பணிமுடிப்போம்!


1938 முதல் 2012 வரை கழகத்தின் பிரச்சாரப் பயணங்கள்

தமிழகம் தழுவிய அளவில் பெரும் விழிப்புணர்வு!

சொற்பொழிவாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
தந்தை பெரியார் பணிமுடிப்போம்!

கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

5 முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட பிரச்சாரப் பெரும் பயணம் குறித்தும், இவற்றில் ஈடுபட்டுச் சிறப் பாகக் கடமையாற்றிய தோழர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைக் காப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் - திராவிடர் கழகத்தின் சார்பில் மார்ச் 23இல் தொடங்கி ஏப்ரல் 11இல் முடிக்கப் பெற் றுள்ளது.

அனேகமாக தமிழ்நாட்டின் முக்கிப் பகுதிகளில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டு பெரும் அளவுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலக்குகள் அய்ந்து

1. ஈழத் தமிழர்கள் - தமிழக மீனவர்கள் பாதிப்பு

2. காவிரி நீர்ப்பிரச்சினை

3. முல்லைப் பெரியாறு பிரச்சினை

4. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்

5. தமிழிலும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் எழுதும் உரிமை

இவற்றை முன்னிறுத்தி இந்தத் தொடர் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இந்த அய்ந்து பிரச்சினைகளும் தமிழ் நாட்டின் மிக முக்கியமான உரிமைப் பிரச்சினைகள் என்பதை எவரும் ஒத்துக் கொள்வர்

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு கால கட்டத்திலும்...

இதில் அரசியலுக்கு இடமில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் தமிழர்களின் உயிர் நாடிப் பிரச்சினைகளை முன்னெடுத் துச் சென்றுள்ளது - வழக்கம் போலவே!

ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ்நாடு, தமிழினம் ஒடுக்கப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்ட நிலை, ஈழத் தமிழர் வாழ்வுரிமை, சமூகநீதி, மதவாத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு போன்றவற்றை முன்னிறுத்தி தொடர் பிரச்சாரம் என்கிற பெருமை மிக்க கடமையினை ஆற்றி வருவது திராவிடர் கழகமே!

அந்த அடிப்படையில்தான் இந்தப் பிரச்சாரப் பயணங்களும் மேற்கொள்ளப்பட்டன.

அணித் தலைவர்கள்

மானமிகு தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன், தலைமைக் கழகப் பேச் சாளர்கள் டாக்டர் அதிரடி க. அன்பழகன், தஞ்சை இரா. பெரியார்செல்வன், இராம. அன்பழகன் ஆகியோர் தலைமையில் இந்தப் பிரச்சாரப் பயணம் பயனுள்ள வகை யில் அமைந்தது கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அணித் தலைவர்களுடன் இணைந்து உரையாற்றிய கழகச் சொற்பொழிவாளர்கள், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்கள், ஒருங் கிணைப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பான முறையில் நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்தமைக்காக அவர்களையும் மிகவும் பாராட்டுகிறோம்.

மாவட்ட மாநாடுகளோ!

மதுரை, கரூர், திருச்சி, கடலூர், தாம்பரம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு அணியின் பிரச்சாரம் நிறைவு அடைந்த பொதுக் கூட்டங்களில் பங்கு ஏற்கும் வாய்ப் பினை நான் பெற்றேன்.
மாநாடுகள் போல் அவை அமைந்திருந்தன. மாவட்ட மாநாடாக அறிவித்திருக்கலாமோ என்றுகூட நான் எண்ணியதுண்டு.

உயிர்ப்புடன் கழகம்

நமது கழகத் தோழர்களின் களப்பணிகள் எந்த அளவு சிறப்பாக இருக்கின்றன என்பதற்கும், நமது கழகச் சொற்பொழிவாளர்கள் எந்த அளவுக்குத் தகவல்களைத் திரட்டித் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கும், கழகம் எந்த எந்த அளவுக்கு வீரியத்துடன் இருக்கிறது என்பதற்கும், பொது மக்களின் எதிர்பார்ப்பும், மதிப்பீடும் எந்த அளவு கழகத்தின்பால் இருக்கின்றன என்பதற்கும் இந்தத் தொடர் சுற்றுப் பயணம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டும், நிரூபணமும் ஆகும்.

1938 முதல் 2012 வரை

1938இல் இந்தி எதிர்ப்பையொட்டி அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களை அணித் தலைவராகவும் (தலைவர் அய்.குமாரசாமி பிள்ளை, யுத்த மந்திரி திருமலைசாமி) கொண்டு தமிழர் பயணம் ஒன்றினை தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் தொடங்கி வைத்தார்.

குலக்கல்வித் திட்ட ஒழிப்பை முன்னிறுத்தியும் நாகப்பட்டினத்திலிருந்து 1954இல் பிரச்சாரப் படை ஒன்று கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டதுண்டு. ஆச்சாரியார் ஆட்சியை விட்டு விலகி ஓடியதற்கு அந்தப் பெரும் பயணம் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.

1938 தொடங்கி 2012 வரை நமது கழகம் நடத்தும் பிரச்சாரப் பயணம் என்பது வரலாற்றுக்குத் திருப்பம் தரும் (நுயீளைடினநள) நிகழ்வுகளாகும்.
தேவைப்படும் பொழுதெல்லாம் இனியும் இது தொடரும். மீண்டும் அனைவருக்கும் பாராட்டுகள்! தந்தை பெரியார் பணி முடிப்போம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!! 12-4-2012

தமிழ் ஓவியா said...

பி.பி. மண்டல்


இது பெரியார் மண், இந்த மண்ணிலிருந்து ஏராளம் நான் தெரிந்து கொண்டு இருக்கிறேன். பெரியார் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக் காக அயராது பாடுபட் டார். வடக்கே பிற்படுத் தப்பட்ட மக்களுக்காக லோகியா குரல் கொடுத் தார் - பிற்படுத்தப்பட்ட மக்களை ஓ சூத்திரர் களே! என்று தான் விளிப்பார்.

உயர் ஜாதிக்காரர் களின் கைகளில் இருக் கும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகள் நம் மக்களுக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு தானிருக்கும்.

மார்க்ஸிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத் திலும், ஜனசங்கம் ஆளும் ராஜஸ்தானிலும் பிற்படுத் தப்பட்ட மக்கள் பற்றிய சிந்தனையே கிடையாது.
காகா கலேல்கர் தலைமையில் பிற்படுத்தப் பட் டோருக்கான முதல் ஆணையம் அமைக்கப் பட்டது. அந்த அறிக்கை யின் பரிந் துரைகள் செயல்படுத்தப்பட வில்லை.

நாங்கள் எங்கள் பரிந் துரைகளை அறிக்கை யாகக் கொடுக்கத்தான் முடியும். அதனை செயல் படுத்த வைப்பது உங்கள் கைகளில் குறிப்பாக பெரி யார் பிறந்த இந்த மண்ணில் தான் இருக் கிறது.

ஜாதியால் பிரிந்து கிடக்கக் கூடாது. இந்து மதம்தான் ஜாதியை உண்டாக்கியது. ஜாதியை மறந்து இந்தியா முழுமை யும் உள்ள பிற்படுத்தப் பட்ட மக்கள் ஒன்று சேர வேண்டும்

இப்படி குரல் கொடுத் தவர் யார் தெரியுமா? இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத் தின் தலைவரான பிந்தேஸ் வரி பிரசாத் மண்டல் (பி.பி. மண்டல்) ஆவார்.

அந்தப் பதவியில் இருந்தபோதே அரிமா குரல் கொடுத்தார். எங்கே? சென்னை பெரியார் திடலில். எப்பொழுது? 30.6.1979 அன்று. பெரியார் திடலில் கொடுக்கப்பட்ட வரவேற்பின்போதுதான் இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக் கையைச் செயல்படுத்தா மல் விட மாட்டோம் என்று மண்டல் முன்னிலையில் சூளுரைத்தார்.

ஆம், இதற்காக 42 மாநாடுகளையும் 16 போராட் டங்களையும் அகில இந்திய அளவில் நடத்தி வெற்றியும் கண்டது - திராவிடர் கழகம் ஆனால் வெற்றியை நேரில் காணும் வாய்ப்பு மண்டல் அவர்களுக்கு கிட்ட வில்லை! இன்று அவரின் நினைவு நாள் (1982). - மயிலாடன் 13-4-2012