Search This Blog

11.4.12

சங்கராச்சாரியார் வழக்கு அச்சுறுத்தியவர்கள் யார்? அதன் பின்னணி என்ன?


குங்குமம் இதழுக்கு காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரசுவதி பேட்டி ஒன்றை அளித்தார்.

கேள்வி: சமீபகாலமாக மக்களை ஏமாற்றும் போலிச் சாமியார்கள் நிறைய பிடிபடுகிறார்கள் - யார்மீது தவறு?

ஜெயேந்திரர்: மனுஷனுக்குப் பேராசை இருக்கிற வரைக்கும் - இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஏன்னா குறுக்கு வழியில் சம்பாதிக்கனும்னு ஆசைப்படுகிற நிறைய பேர் போலிச் சாமியாராக எழுந்தருளி இருக்காங்க. ஜனங்களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால் ஜனங்க, சாமியார்கள் இரு பேர்களுக்குமே ஆபத்து வருது. ஆனா ஜனங்க தப்பிச்சி வேறொரு சாமியார்கிட்ட போயிடுறாங்க. இவர்களை நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால இந்த விஷயத்தில் சாமி யார்கள்தான் பொதுஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கி இருக்கவேண்டும். (குங்குமம், 27.3.1998).

ஜெயேந்திரர் சொன்னது அவருக்கே பலித்ததுதான் வேடிக்கை. இன்னொருபடியும் தாண்டி, கொலை வழக்கில் சிக்கிக் கொண்டுவிட்டார். இந்தியக் குற்றவியல் சட்டம் 302, 120பி, 201 (கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப் பித்தல், கொலை) என்னும் பிரிவுகளில் ஜெயேந் திரர் மட்டுமல்ல, அவரின் சீடரான இன்னொரு சங்கராச்சாரியாரான விஜயேந்திர சரஸ்வதியும் இந்த வழக்கில் சிக்கி, இரு ஜெகத்குருக்களும் சிறைக்குச் செல்லும் கேவலமான நிலைக்கு ஆளானார்கள்.

இரவோடு இரவாக தலைமறைவான உத்தம(?) புத்திரரும் இவர்தான் (23.8.1987). ஏன் தலைமறைவானார்? பெரியவருக்கும், இவருக்கும் என்ன லடாய்? கிண்டினால் இவர்களின் வண்டவாளங்கள் எல்லாம் பொலபொலவென்று கொட்ட ஆரம்பிக்கும்.

காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரர் (12.11.2004).

ஏழு ஆண்டுகள் 5 மாதங்கள் ஓடிவிட்டன. வழக்குக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் தீர்ப்பு இதுவரை அளிக்கப்படாத நிலை!

முதற்கட்டமாக விசாரணை தமிழ்நாட்டுக்குள் நடக்கக்கூடாது என்றனர். அதற்காக உச்ச நீதிமன்றம்வரை சென்றனர். புதுச்சேரியில் நடத்திட அனுமதிக்கப்பட்டது.

நீதிபதியிடம் பேரம் பேசினார் என்ற சிக்கலில் அடுத்து மாட்டினார்.

இதற்கிடையே சாட்சியங்கள் எல்லாம் பெரும்பாலும் பிறழ் சாட்சியங்களாக மாறியதால், வழக்கின் போக்கு என்ன ஆகுமோ என்று பொது நிலையில் உள்ளவர்களுக்குச் சந்தேகங் கள் எழுந்தன.

கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவியே பிறழ் சாட்சியான அவலமும் ஏற்பட்டது.

அந்த அம்மையாரே இப்பொழுது புதிய மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தான் அச்சுறுத்தப்பட்டதால் தவறான சாட்சி சொல்ல நேர்ந்துவிட்டது; மறுபடியும் தன்னை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

தன்னை அச்சுறுத்தியதாக சங்கரராமன் மனைவி கூறியுள்ளாரே - அது குறித்து விசாரிப்பது அவசியமான ஒன்றாகும்.

அச்சுறுத்தியவர்கள் யார்? அதன் பின்னணி என்ன? என்பது விசாரிக்கப்படவேண்டிய ஒன்றே.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதற்கேற்ப இந்த வழக்கினை விரைந்து முடிக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் இதற்கு முன்பு ஒருமுறை ஆர்ப்பாட்டம் நடத் தியதுண்டு என்பதை நினைவூட்டி, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நல்லதோர் தீர்ப்பினைப் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

------------------"விடுதலை” தலையங்கம் 11-4-2012

5 comments:

தமிழ் ஓவியா said...

மூக்கு உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட....


பிஜேபி மிகவும் வித்தி யாசமான கட்சியாம். தார் மீகப் பண்புக்கு இலக் கணம் இக்கட்சி என்று பார்ப்பனர்களும் அவர் களின் ஏடுகளும் வாய்க் கூசாமல் சொல்லுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

ஆனால் உண்மை என்பது வேறுவிதமாகவே இருக்கிறது. பதவிக்காக அவர்கள் அடித்துக் கொள்வது சாதாரண மானதும் அல்ல. சொந் தக் கட்சிக்காரர்களின் தலைகளை சீவக் கூடச் சிறிதும் அஞ்ச மாட்டார் கள். இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்த ஆர்.எஸ்.எஸ். முக்கியப் புள்ளி சுனில் ஜோஷி என்ப வரைச் சுட்டுக் கொன்றது சங்பரிவாரமே. சம்ஜோதா குண்டு வெடிப்புத் தொடர் பாகக் கைது செய்யப்பட்ட சாமியார் அஸி மானந்தா இந்தக் கொலை குறித்து வாக்குமூலமே கொடுத்து விட்டாரே!

சுனில் ஜோஷி உயி ரோடு இருந்தால் சங்பரிவார்களின் பல சதித் திட்டங்கள் வெளிவர வாய்ப் புண்டு என்பதாலேயே இந்தக் கொலை நடை பெற்றிருக்கிறது.

சொந்த அமைப்பைச் சேர்ந்தவர்களையே துப் பாக்கிக் குண்டுகள் மூலம் சொர்க்கத்துக்கு அனுப்பு வதுதான் அவாள் அமைப் பின் தனித் தன்மையாகும்.

இந்தியாவின் தலை நகரமான டில்லியில் விரை வில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. பிஜேபி சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக பிஜேபியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், பிஜேபியின் முன்னாள் இந்தியத் தலைவருமான வெங்கையாநாயுடு இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப் பாளராகக் கலந்து கொண் டார்.

பிஜேபியில் வேட்பாளர் களாக நிற்பதற்குக் கோஷ்டி கோஷ்டியாக சச்சரவுகளைச் செய்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அடிதடிகள் அமர்க்களமாயின ஒருவர் மூக்கை இன்னொருவர் பதம் பார்த்தார். குத்து விடும் சினிமா காட்சி களுக்கும் பஞ்சம் இல்லை. ரத்தம் ஓடையாக ஓட ஆரம்பித்தது; டில்லியில் விஜய்சாலி தலைமையில் ஒரு கோஷ்டியும், ரமேஷ் புதூரி தலைமையில் இன் னொரு கோஷ்டியும் அடிக் கடி மோதிக் கொள்வ துண்டு.

வெங்கய்யநாயுடு தலை மையில் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில் நடந் தது - உச்சக் கட்டம் (ஊடஅயஒ) என்று வேண்டுமா னால் சொல்லலாம் (நிலை மையைப் புரிந்து கொண்ட வெங்கய்ய நாயுடு காரு நைசாக நழுவி விட்டார்)

இப்பொழுது சொல் லுங்கள் பிஜேபி சங்பரி வார்க் கும்பல் என்ப தெல்லாம் வித்தியாச மான கட்சிகள்தானே?

தேர்தலுக்கு முன்பே இந்தக் கூத்து என்றால், தேர்தலின்போது என் னென்ன வெட்டுக் குத்து நடக்குமோ - யார் கண் டது? ஆனாலும் அது ஒரு வித்தியாசமான கட்சி தான்! 10-4-2012

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை, கதறுகிறார் போப்


வாடிகன் சிட்டி, ஏப்.10- கடவுள் நம்பிக்கை மற்றும் ஒழுக்க நெறிகள் இல்லாத தொழில்நுட்பம் உலகத்துக்கு ஆபத்தானது என்று ஈஸ்டர் உரையில் போப் பதினாறாம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.

இயேசு உயிர்த்தெழுந்து வந்த ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வாடிகன் செயின்ட் பீட்டர் பசிலிகா வில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் போப் பெனடிக்ட் சிறப்பு திருப்பலி நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

எது நல்லது எது தீயது என்று தெரியாமல் இருக்கிறோம். இருட்டுக்கும் ஒளிக்கும் உள்ள வித்தியா சம், கடவுளுக்கும் சாத்தானுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும்.

இன்றைய உலகில் கடவுள் பற்றிய விழிப்புணர்வு, உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய விழிப் புணர்வு குறைந்து வருகிறது. இந்த விழிப்புணர்வு இல்லாத தொழில்நுட்பம் உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார் அவர். 10-4-2012

தமிழ் ஓவியா said...

மதச் சடங்கின் குரூரம்:


கோவிலின் உச்சியிலிருந்து குழந்தை தூக்கி எறியப்பட்ட கொடுமை!

பெங்களூரு, ஏப்.10- நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்க, ஒரு குழந்தை 30 அடி கோயிலின் உச்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டது. இச்சம்பவம் மதச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு, கருநாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்துள்ளது. உள்ளூர்வாசிகள் இவ்வாறு செய்தால் புதிதாக பிறந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என நம்புகின்றனர்.

இவ்வாறு காற்றில் தூக்கி வீசப்படும் குழந்தைகள் 2 வயதுக்கும் கீழே இருப்பவையே. அவ்வாறு தூக்கி வீசப்பட்டு காற்றில் தடுமாறும் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் துண்டினைப் போட்டு பிடித்துக் கொள்கின்றனர்.

நாக்ரலா கிராமத்தில் நிகழ்ந்த திகம்பேசுவர கோயில் திருவிழா காணொளிக் காட்சியில் கோவிலின் மேற்புரத்தில் ஒரு நபர் அமர்ந்து கொண்டு குழந்தைகளை மேற்கண்டவாறு தூக்கி வீசுகின்றார். அக்குழந்தைகளை கீழே காத்திருக்கும் கூட்டம் பிடித்துக் கொள்கிறது. ஒன்றன்பின் மற்றொருவராக குழந்தைகளை கோவிலின் மேலிருக்கும் அந்த நபரிடம் தர அவர் அக்குழந்தைகளை கீழே வீசுகிறார். அவ்வாறு கீழே விழப் பயப்படும் குழந்தை அந்நபரின் ஆடையைப் பற்றினால், அதனுடைய இறுக்கத்தை தன்னுடைய வாயினால் விடுவித்து கீழ்நோக்கி எறிகிறார். காமிராவில் பார்க்கும்போது பல குழந்தைகள் பயத்தினால் அழுவதை பார்க்க முடிகிறது.

பக்தர்கள் இவ்விதமான முயற்சிகளையும், அதி லுள்ள ஆபத்தினையும் அறிந்தே இருக்கின்றனர். மாவட்ட நிருவாக அலுவலர்களும் இத்தகைய நிகழ்வுகளை தடுத்து நிறுத்தவே முயல்கின்றனர். ஆனால், எங்களுடைய ஆன்மிக நம்பிக்கைதான் ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழாவினை நடத்த எங் களை உந்துகிறது என கூறுகிறார் சங்கர் என்பவர்.

உள்ளூர் அதிகாரிகள் இத்தகைய நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவே முயற்சி செய்கின்றனர். மேலும் மதச் சடங்குகளுக்கு சட்டத்தை உடைக்கும் அதிகாரம் இல்லை என்கிறார்கள். இருப்பினும் காவல்துறையினர் இதில் தலையிட முடியாது என்றும் கூறுகின் றனராம். இவர்களுடைய மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. 10-4-2012

Seeni said...

koduma daa!

Mahadeva Sharma said...

சொந்த அமைப்பைச் சேர்ந்தவர்களையே துப் பாக்கிக் குண்டுகள் மூலம் சொர்க்கத்துக்கு அனுப்பு வதுதான் அவாள் அமைப் பின் தனித் தன்மையாகும்......


do you mean prabhakaran of ltte